Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
பெண்களை கேவல படுத்தினால் சட்ட நடவடிக்கை மிரட்டும் – இராணுவ மந்திரி
பல்வேறு சமூக ஊடகங்களை பயன்படுத்தி பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என,
பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள பெண்களுக்கு
விரைவில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க அரசாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் வீரப் பெண்கள் செய்த மகத்தான சேவையை அங்கீகரிப்பதற்காக
நேற்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
போர்வீரர்களின் தாய் மற்றும் மனைவி உள்ளிட்டவர்கள் போரின் போது அனுபவித்த கஷ்டங்களையும் மன அழுத்தத்தையும்
பார்க்கும்போது, அவர்கள் முழு தேசத்தின் மதிப்புக்கு உரியவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சரவதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்துக – தமிழர்கள் போராட்டம்
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் மாணவர்களால் நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு
வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திலேயே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் இணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
சிவாஜிலிங்கம், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின
உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், சர்வதேச மகளிர் தினத்தை
துக்க தினமாக அனுஷ்டித்து முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைதீவில் புனித இராயப்பர் ஆலயத்துக்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, நகரை நோக்கி சென்றமை குறிப்பிடத்தக்கது.
புயலில் சிக்கி உடைந்து வீழ்ந்த வீடுகள் – மக்கள் அவதி
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா பட்டகலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று (07) மாலை வீசிய மின சூறாவளி காரணமாக அந்த தோட்டத்தில் உள்ள 23 தொடர் மற்றும் தனி குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.
கடும் காற்று காற்று காரணமாக இந்த தோட்டத்தில் உள்ள 15 இலக்க தொடர் குடியிருப்பின் கூரை காற்றினால் அல்லுண்டு சென்றுள்ளன.
இதனால் இந்த குடியிருப்பில் 16 வீடுகளுக்கு மழையால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் கூரைத்தகரங்களும் சேதமடைந்துள்ளன.
இதே நேரம் குறித்த பகுதியில் பாரிய கருப்பன் தைலம் மரம் ஒன்று முறிந்து வீடுகளின் மேல் வீழ்ந்ததன் காரணமாக ஒரு வீட்டின் ஒரு
பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஏனைய இரண்டு வீடுகளின் கூரைத்தகடுகள் சேதமடைந்துள்ளன.
இதே பகுதியில் அமைந்துள்ள மற்றுமொரு தொடர்மாடிக் குடியிருப்பில் ஒரு சில வீடுகளின் கூரை சேதமடைந்துள்ளன.
குறித்த பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மரங்கள் மினி சூறாவளி காரணமாக முறிந்து வீழ்ந்துள்ளன.
மரங்கள் மின் கம்பிகள் மீது வீழ்ந்து மின் கம்பிகள் மற்றும் வயர்கள் சேதமடைந்ததனால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி இன்று காலை வந்து பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன்
பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்க ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்து மனித வள
அபிவிருத்தி நிதியத்தின் ஊடக செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
வாலிபனை தாக்கிய இராணுவம் – தொடரும் இராணுவ வன்முறைகள்
இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று (07) இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞரே இவ்வாறு சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் தன்னை வழிமறித்துத் தாக்கியதாக இளைஞர் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். .
பிரான்சின் பணக்கார எம்பி வானூர்தி விபத்தில் மரணம்
பிரான்சின் பணக்கார எம்பி வானூர்தி விபத்தில் மரணம்
பிரான்ஸ் நாட்டில் மிக செல்வாக்கு மிக்க பாரளுமன்ற உறுப்பினராகவும் ,
செல்வந்தர்களில் ஒருவராகவும் விளங்கி வந்த Olivier Dassault ,உலங்குவானூர்தி விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்
இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட உளவு சதியா என்பது தொடர்பில் கார சாரமான விவாதங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
உள்ளக கசிவுகள் அடிப்படையில் இது திட்டமிடப்பட்ட உளவு சதி என்றே
கூற படுகிறது ,விசாரணைகளின் முடிவில் இவை தொடர்பாக தெரியவரும் என எதிர் பார்க்க படுகிறது
மக்கள் மீது கத்தி வெட்டு – பலர்காயம்
மக்கள் மீது கத்தி வெட்டு – பலர்காயம்
ஒஸ்ரேலியாவில் கடந்த தினம் மதியம் இரண்டு மணியளவில் திடீரென கத்தி வெட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது ,இதன் பொழுது பலர் படுகாயமடைந்துள்ளனர் ,
வீதியில் இறங்கிய ஆண் பெண்கள் ,இணைந்து நடத்திய கலகத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கக் படுகிறது
எனினும் இது தொடர்பான முழுமையான விடயங்கள் விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகிறது
சுவிசில் முக்காடு – முகக்கவசம் அணிய தடை – அதிர்ச்சியில் மக்கள்
சுவிசில் முக்காடு – முகக்கவசம் அணிய தடை – அதிர்ச்சியில் மக்கள்
சுவிஸ் நாட்டில் புதிதாக கொண்டுவரப் பட்டுள்ள சட்ட நடவடிக்கையை அடுத்து
முஸ்லீம் மக்கள் தமது மத ,கலாச்சார வழிமுறையை பின்பற்றி நடைமுறை படுத்த படும் முக்காடு அணிய தடை விதிக்க பட்டுள்ளது
மேலும் வீதியால் செல்லும் மக்கள் பாதுகாப்பை கருதி முகக்கவசம் அணியவும் தடை விதிக்க பட்டுள்ளது
நள்ளிரவு முதல் மேற்படி சட்டம் அமுலுக்கு வருகிறது ,இதனை மீறு வோருக்கு தண்டம் அறவிட படுவதுடன் சிறைவாசம் வழங்க படும் எனவும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
அரசின் இந்த முடிவிற்கு முஸ்லீம் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது
பிரிட்டனில் இன்று பாடசாலைகள் திறப்பு – கொதிக்கும் பெற்றோர்கள்
பிரிட்டனில் இன்று பாடசாலைகள் திறப்பு – கொதிக்கும் பெற்றோர்கள்
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலினால் பலநூறு மக்கள் நாள் தோறும் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,
.இவ்வேளை இன்று எட்டாம் திகதி பாடசாலைகள் மீள திறக்க படுகின்றன
அரசின் இந்த அறிவிப்பினால் பெற்றோர்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர் ,
முடங்கி போன பொருளாதர மீள் சீர் தூக்கும் நிலையில் இந்த விடயங்கள் இடம்பெறுவதான குற்றச்சாட்டுக்கள்
சமூக வலைத்தளங்களில் முன் வைக்க பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் கலந்துகொண்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
பதக்கத்துடன் நடிகர் அஜித்
தமிழ்த் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ்
போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.
தற்போது வலிமை படப்பிடிப்பு இடைவெளியில் சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில்
பங்கேற்று முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த அஜித்துக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
பாட்டியை எரித்து கொன்ற பேரன் – இலங்கையில் நடந்த பயங்கரம்
பாட்டியை எரித்து கொன்ற பேரன் – இலங்கையில் நடந்த பயங்கரம்
பாட்டி ஒருவரை பேரன் ஒருவன் துடி துடிக்க எரித்து கொன்றுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
குடிப்பதற்கு பணம் கேட்ட பொழுது அதனை தந்திடாத பாட்டிக்கு இவ்விதம் தீவைத்து எரித்துள்ளான்
அந்த பேரன் ,தற்போது பட்டியம்மா தீயில் பொசுங்கி இறந்துள்ளார் .
குடிகார பேரன் கைது செய்ய பட்டு நீதிவிசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளான் .
குடி ஒரு ,குடியை கெடுக்கும் ,என்பதற்கு இது ஒன்று சான்று
யாழில் ரவுடிகள் வீடு புகுந்து தாக்குதல் – பெற்றோல் குண்டு வீச்சு
யாழில் ரவுடிகள் வீடு புகுந்து தாக்குதல் – பெற்றோல் குண்டு வீச்சு
யாழ்நகரின் மைய பகுதியில் உள்ள வீட்டுக்குள் நள்ளிரவு ,வாள்கள்,கத்தியுடன் புகுந்த ரவுடி கும்பல் ,அந்த வீட்டின்
யன்னல்கள் ,மற்றும் கதவுகளை கொத்தி எறிந்துள்ளன ,அதன் பின்னர் அந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளனர்
மேற்படி தாக்குதல் சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
மக்களை அச்சுறுத்தும் முகமாக தெரு ரவுடிகள்
இவ்விதமான தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
தடுப்பூசி போட்டார் ஷவேந்திர சில்வா
தடுப்பூசி போட்டார் ஷவேந்திர சில்வா
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான
ஜெனரல் ஷவேந்திர சில்வா, இன்று காலை 6 ஆம் திகதி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டார்
இங்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்ட இராணுவ தளபதியு அவருடைய கனிவான
நடைமுறைகள் மற்றும் இத்திட்டத்திற்கான அவருடை ஒத்துழைப்பு என்பன இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
கொவிட் – 19 தொற்றுநோயை எதிர்த்து போராடும் முப்படை பணியாளர்களுக்கு ஏற்றுவதற்காக பிரத்தியேகமாக மற்றுமொரு
தொகை தடுப்பூசி தொகையை பெற்றுத்தருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துடன், இந்த விவகாரத்தில் அவர்
அளித்து வரும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புளைகளுக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா மீண்டும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
ஈரான் எல்லையில் -தீயில் எரிந்த எண்ணெய் டாங்கி
ஈரான் எல்லையில் -தீயில் எரிந்த எண்ணெய் டாங்கி
ஈரான் ஆப்கானிஸ்தான் எல்லையில் எரிபொருள் தாங்கிய படி பயணித்த எண்ணெய் தாங்கி ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது
இதனால் அந்த வண்டி முற்றாக தீக்கிரையாகியுள்ளது
இது விபத்தா அல்லது திட்டமிடப் பட்ட சதியா என்பது தொடர்பில்,
தெரியவரவில்லை ,மேற்படி விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
டிரக் பேரூந்து மோதல் – 18 பேர் மரணம்
டிரக் பேரூந்து மோதல் – 18 பேர் மரணம்
எகிப்து தலைநகரில் மினி பேரூந்து மற்றது டிரக் என்பன நேருக்கு நேர் மோதியதில் பேரூந்தில் பயணித்தவர்களில் 18 பேர் உடல் சிதறி
பலியாகினர் ,மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
லண்டனில் பொலிசார் வேட்டை – ஆயுதங்களுடன் பத்து பேர் கைது
லண்டனில் பொலிசார் வேட்டை – ஆயுதங்களுடன் பத்து பேர் கைது
லண்டன் ,மற்றும் கென்ட் பகுதியில் விசேட காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் பொழுது பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் சட்டவிரோதமாக ஆயுத பாவனையில் ஈடுபட்ட குற்ற
சாட்டுக்களில் கைது செய்யப் பட்டுள்ளதுடன் ,இவர்களிடம் இருந்து ஆயுதங்களும் மீட்க பட்டுள்ளன
கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
தெற்கு லண்டனில்-1,6 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு
தெற்கு லண்டனில்-1,6 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு
தெற்கு லண்டன் Rotherhithe, South East London. அடுக்குமாடி குடியிருப்பில் ,மறைத்து வைக்க பட்ட சுமார் இருபது கிலோ எடையுள்ள போதைவஸ்து மீட்க பட்டுள்ளது
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை அடுத்து
மேற்படி போதைவஸ்து மீட்க பட்டுள்ளது,அதே வீட்டில் இருபத்தி ஐந்தாயிரம் பவுண்டுகளும் ,கைபேசிகள் என்பனவும் மீட்க பட்டுள்ளன
மேற்படி குற்ற செயலுடன் தொடர்புடைய இருவர் கைது செய்ய பட்டுள்ளதுடன் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
சுயிங்கம் சாப்பிட்டால் இது நடக்கும்
சுயிங்கம் சாப்பிட்டால் இது நடக்கும்
இனிப்பு இல்லாத சுயிங்கம் மெல்லுவதால் இந்த பிரச்சனைகள் தீரும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சுயிங்கம் மெல்லுவதால் இந்த பிரச்சனைகள் தீரும்
சுயிங்கம்
இனிப்பு இல்லாத சுயிங்கம் மெல்லுவது பற்களுக்கு பல்வேறு
வகையில் நன்மைகளை உண்டாக்கும். குறிப்பாக பற்களில் அழுக்கு படிவதை தவிர்க்கும், பற்சிதைவு ஏற்படாமல் பற்களை பாதுகாக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டனில் உள்ள கிங்ஸ்
கல்லூரியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘‘சுயிங்கம் மெல்லும்போது பற்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் உமிழ்நீர் சுரப்பது அதிகரிக்கும்.
சுயிங்கம் சாப்பிட்டால் இது நடக்கும்
தொடர்ந்து மென்று கொண்டே இருக்கும்போது பற்களின் ஆரோக்கியம் மேம்படும். பல் சொத்தை ஏற்படாமலும் தடுக்கும். பல் சொத்தைக்கும், சர்க்கரை கலக்காத சுயிங்கத்திற்கும் இடையே
தொடர்பு இருக்கிறது. வாய் பகுதி சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு சுயிங்கத்தின் பயன்பாடு பற்றி தொடர்ந்து
ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்’’ என்கிறார் ஆராய்ச்சி மேற்கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர், அவிஜித் பானர்ஜி.
கடந்த 50 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பகுப்பாய்வு, இனிப்பு இல்லாத சுயிங்கம் சாப்பிட்டவர்களின் வாய் பகுதி சுகாதாரம், அவர்களை தாக்கிய பல் நோய்கள், சுயிங்கம்
மெல்லுவதன் தாக்கம் உள்பட பல விஷயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. இறுதியில் சர்க்கரை இல்லாத சுயிங்கம் பல் சொத்தை ஏற்படுவதற்கான வாய்ப்பை 28 சதவீதம் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஐநாவில் தப்பிய இலங்கை – தமிழர்களுக்கு பெரும் இடி
ஐநாவில் தப்பிய இலங்கை – தமிழர்களுக்கு பெரும் இடி
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான மிக காட்டமான அறிக்கை முன்வைக்க பட்டது ,
ஆனால் தற்போது வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் ,குற்றங்கள் செய்தவர்கள் நாடுகளுக்கு செல்வதற்கான பயணத்தடை அவர்கள்
சொத்துக்கள் மூடப்படுவதற்கான விதிக்க பட்ட தடைகள் அதில் இருந்து அகற்ற பட்டுள்ளன ,மேலும் போர் குற்றங்கள் புரிந்தவர்கள்
தொடர்பிலான சர்வதேச விசாரணை என்ற நிலையும் அதில் இருந்து நீக்க பட்டுள்ளது
குறித்த இரண்டு முக்கிய விடயங்கள் நீக்க பட்டு ,அவை மொட்டை கடதாசியாக அறிக்கை வெளியாகியுள்ளது ,தமிழர் தரப்புக்கு
பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது ,இந்தியாவின் முக்கிய நகர்வின் காரணமாக இந்த விடயம் அதில் இருந்து நீக்க பட்டுள்ளதாக கருத படுகிறது
யாழில் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு கொரனோ – தேடும் போலீசார்
யாழில் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு கொரனோ – தேடும் போலீசார்
யாழ்ப்பாணத்தில் திரை அரங்கு ஒன்றுக்கு கடந்த வாரம் சென்ற நபர்கள் சிலருக்கு கொரனோ தொற்று கண்டுபிடிக்க பட்டுள்ளது ,இதனை அடுத்து அந்த திரையரங்களில் சென்று படம் பார்த்த
அனைவரையும் கொரனோ சோதனைக்கு உட்படுத்தி கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்
நாட்டில் நோயின் தாக்குதல் அதிகரித்து செல்லும் நிலையில் மக்கள்
இவ்வாறான கேளிக்கைகளில் ஈடுபட்டு வருகினறமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது
பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து -35 பேர் காயம்
பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து -35 பேர் காயம்
பதுளையில் பயணிகளை காவிய படி பயனித்த தனியார் பேரூந்து
ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து பள்ளதாக்கில் வீழ்ந்த்து நொறுங்கியது
இதன் பொழுது அதில் பயணித்த முப்பத்தி ஐந்து பேர் படு காயங்களுக்கு
உள்ளான நிலையில அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேற்படி விபத்து தொடர்பான புலன் விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்






