Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
லண்டனில் அம்பிகா உணாவிரதம் – கண்டுகொள்ளதா அரசு -கதறும் தமிழர்கள்
லண்டனில் ஈழ விடுதலை போருக்கு ஆதரவாக செயல் பட்டு வந்த குடும்பத்தில் இருந்து உதயமானவரும் ,தொன்று தொட்டு புலிகளின் ஆதரவாளராகவும் ,பணியாளர்களாகவும் பணியாற்றி வந்த
ஆதரவாளர்கள் ஒருவராக விளங்கும் அம்பிகா அவர்கள் நீர் மட்டும் அருந்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்
இவரால் முன் வைக்க பட்ட கோரிக்கைகள் நிராகரிக்க பட்ட நிலையில், பிரிட்டன் அரசு பயணிக்கிறது ,
இவரது உயிரை காப்பற்ற வேண்டும் என தமிழர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்
ஊடகங்கள் தம்மை கண்டு கொள்வதில்லை என்ற வாதங்களும் முன் வைக்க படுகிறது ,

ஆனால் ஊடகங்களுக்கு இவர்களினாலே எவ்வித செய்திகளும் வழங்க படுவதில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது
அவர்களது மின் அஞ்சல்களுக்கு செய்திகள் அனுப்பி வைக்க படுவதில்லை என்ற வாதம் வலுப்பெறுகிறது ,
பரப்புரை அல்லது கவனத்தை தம் பக்கம் ஈர்த்துக்கொள்ள முயல்பவர்கள் ஊடக தொடர்புகள் சீரற்ற சம நிலையில் இல்லாது உள்ளமை குறிப்பிட தக்கது
மோடி சீமானுக்கு விட்ட தூது – தெறிக்கவிட்ட சீமான் -வீடியோ
மோடி சீமானுக்கு விட்ட தூது – தெறிக்கவிட்ட சீமான் -வீடியோ
ஆளும் இந்திய பிரதமர் மோடியிடம் இருந்து சீமானுக்கு விடப்பட்ட தூது ,அதில் என்ன நடந்தது உடைக்கிறார் அந்த மர்மங்களை
சிரியா அதிபர் ,மனைவிக்கு கொரனோ
சிரியா அதிபர் ,மனைவிக்கு கொரனோ
சிரியாவின் ஆளும் அசாத் மற்றும் அவரது மனைவி கஸ்மா ஆகியோருக்கு
நடத்த பட்ட கொரனோ சோதனையில் இருவருக்கும் கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனை அடுத்து இருவரும் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
போராளி குழுக்களை வேட்டையாடும் துருக்கி
போராளி குழுக்களை வேட்டையாடும் துருக்கி
துருக்கிய ஆளும் அதிபர் இலங்கையின் மகிந்தா ,கோட்டாவை போன்ற சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார் ,இவரது அடச்சியில் போராளி குழுக்கள் அடக்க பட்டு நசுக்க பட்டு வருகிறது .
அவர்களது தார்மீக கொள்கைகள் ஏற்க மறுத்து முற்றாக அந்த அமைப்புக்கள் இல்லாது அழிக்கும் நகர்வில் துருக்கி ஈடுபட்டுள்ளது
இவ்விதம் தற்போது Fetullah Terrorist Organization (FETO)சி 2 முக்கியய நபர்களை கண்ட இடத்தில் கைது செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது
தங்கம் அள்ளி சென்ற மக்கள்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் லுகிகி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு மலையில் உள்ள மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது
இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தி காட்டுத் தீ போல கிராமம் முழுவதும் பரவியதையடுத்து மக்கள் அனைவரும் மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மலை பகுதிக்கு விரைந்தனர்.
அங்கு அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மண்ணை தோண்டினர். பின்னர் அதனை பைகளில் போட்டு வீட்டுக்கு
எடுத்துச்சென்று தண்ணீரில் அலசி தங்கத் தாதுக்களை எடுத்தனர். இது தொடர்பான வீடியோவை அகமது அல்கோபரி என்ற
பத்திரிகையாளர் டுவிட்டரில் பகிர்ந்ததை தொடர்ந்து, அது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனிடையே இந்த தகவல் அரசுக்கு தெரிந்தவுடன் மலையில் மண்ணை தோண்டுவதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.
இந்த மலை முழுவதிலும் தங்கத் தாது இருக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே மலையை சுற்றிலும் பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை டிபெண்டர் வாகனத்தில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா
பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர் ஹிருணிகா, நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழக்கு விசாரணைகள் ஜுன் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன..
மீன் சந்தைக்குள் கொரனோ – அடித்து பூட்டு
மீன் சந்தைக்குள் கொரனோ – அடித்து பூட்டு
அண்மையில், ரயிலில மோதுண்டு உயிரிழந்த மீன் சந்தையில் பணிபுரியும் நபருக்கு கொரோனா தொற்று
உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மன்னார் நககரில் அமைந்துள்ள மீன் சந்தை தற்காலிகமாக மூட்ப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் அனைத்து வியாபாரிகளுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, மன்னார் சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி
அலுவலகம் இணைந்து இன்று (9) பல்வேறு பகுதிகளில் பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுத்ததுடன், கொரோனா பரவல் உள்ள
இடங்களில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்
கடலில் மிதந்த சடலம்
கடலில் மிதந்த சடலம்
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல், முகத்துவாரம் பகுதியில் கடல் அலையில் சிக்குண்டு மீனவரொருவர், இன்று (09) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர், கட்டைபறிச்சான்-சாலையூர் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான குழந்தை வடிவேல் ரவீந்திரன் (53 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கரைவலையை இழுத்துக் கொண்டிருந்தபோது இவர் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சேருவில திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச்.குணரத்ன, சம்பவ இடத்துக்கு வருகைதந்து சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன்,
இம்மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என உறவினர்களால் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரியப்படுத்தியதையடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
திமுக கூட்டணி – தொகுதிகளில் போட்டி- இன்று அறிவிப்பு
திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டி- இன்று அறிவிப்பு
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன்
முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளனர்.
இக்கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:-
தி.மு.க.- 174
காங்கிரஸ்- 25
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி- 6
இந்திய கம்யூனிஸ்டு கட்சி- 6
ம.தி.மு.க.- 6
விடுதலை சிறுத்தைகள் கட்சி- 6
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 3
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 3
மனிதநேய மக்கள் கட்சி- 2
தமிழக வாழ்வுரிமை கட்சி- 1
மக்கள் விடுதலை கட்சி- 1
ஆதித் தமிழர் பேரவை- 1
இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று மதியம் 12 மணிக்கு தி.மு.க அறிவிக்கிறது.
யாழில் கர்ப்பிணிகளுக்கு உணவு வழங்கும் இராணுவம்
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர்களால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதியுதவியுடன், சிங்கள, தமிழ்
மற்றும் முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த ஏழை கர்ப்பிணிகள் மற்றும் விதவை பெண்களுக்கு 1000 உலர் பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு (06) யாழ்ப்பாணம் – சுன்னாகம் தெற்கு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இது பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் படி யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த
பெரேராவினால் ஹேமாஸ் நுகர்வோர் பிரைவேட் லிமிடெட், நெஸ்லே லங்கா பிரைவேட் லிமிடெட், மாலிபன் பிஸ்கட் பிரைவேட் லிமிடெட், ´மனுசாத் தெரன சமூக உதவித் திட்டம் மற்றும் கொழும்பு
தரனா அறக்கட்டளை. ஆகியவற்றிடம் விடுத்த வேண்டுக்கோளுக்கு அமைய சிவில் – இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கு அமைய வடிவமைக்கப்பட்ட நிவாரண பகிர்ந்தளிப்பு ஆகும்.
யாழ் பாதுகாப்புப் படை தலைமைதயக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்தா பெரேரா தலைமையிலான விநியோக விழா, விநியோகம் நடைபெறுவதற்கு மத தலைவர்களினால் ஆசீர்வதிக்கப்பட்டது..
ஒவ்வொரு நிவாரணப் பொதியிலும் அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் மா, தேயி தேயிலை , கோதுமை மாவு, டின் மீன், மசாலா, தானியங்கள் மற்றும் அதிக சத்துணவுகள் உள்ளடக்கியிருந்ததுடன்
அதே சந்தர்ப்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு கொசு வலைகள், பாம்பர்கள், பால் பாட்டில்கள், சுகாதார பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட குழந்தைகளின் தேவைகளும் வழங்கப்பட்டன.
ஒரு சுருக்கமான உரையை நிகழ்த்திய யாழ்ப்பாணத் தளபதி, நன்கொடையளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, பொது மக்களை பாதுகாக்க படையினர் எந்நேரமும் தயாராக இருப்பதாகக்
கூறினார். நிகழ்ச்சியின் முடிவில், யாழ்ப்பாண மகளிர் முன்னணித் தலைவி திருமதி டி தயானி, இந்த தொண்டு நிகழ்ச்சிக்கு படையினரின் பங்களிப்பைப் பாராட்டியதோடு தளபதி
அவர்களுக்கு இராணுவத் தளபதியின் ஆசீர்வாதங்களுடன் இந்த வகையான நிவாரணப் பணிகளை மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்தார்.
அனைத்து மதங்களின் மதத் தலைவர்கள், 51 வது படைப்பிரிவின் தளபதி வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி, யாழ்
பாதுகாப்பு படைத் தலைமையக சிரேஸ்ட அதிகாரிகள், பிரிகேட் தளபதிகள், நெஸ்லே, மாலிபன் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சில அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக் கொண்டனர்.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
கொழும்பு, டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக DNA அறிக்கை வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில் குறித்த DNA அறிக்கை குருவிட்ட, தெப்பனாவ பகுதியை சேர்ந்த பெண்ணுடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 1 ஆம் திகதி குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருந்ததுடன் தலை இல்லாத காரணத்தினால் இவ்வாறு DNA பரிசோதனை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டிருந்தது.
குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரனின் DNA மாதிரிகளின் ஊடாக குறித்த சடலம் 30 வயதுடைய தெப்பனாவ பகுதியை சேர்ந்த பெண்ணுடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தப்பி சென்ற மைத்திரி
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, நீண்ட நாட்களுக்குப் பின்னர், ஊடகங்களிடம் சிக்கிக்கொண்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் பங்கேற்றிருந்தார்.
நிகழ்வு நிறைவடைந்ததன் பின்னர், ஊடகவியலாளர்கள் அவரை சுற்றிக்கொண்டனர்.
கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.
“குற்றச்சாட்டுகள் எவ்வளவு முன்வைக்கப்பட்டாலும் அதனை நான், கவனத்தில் எடுக்கமாட்டேன்” என்றார்.
கேள்வி: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு, அரசாங்கத்தில் இருக்கும் சிலர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்களே?
பதில்: “யாருக்குத்தான் குற்றச்சாட்டுகள் இல்லை, நான், அதனை கணக்கில் எடுக்கமாட்டேன், எவ்வளவுதான் பிரச்சினைகள் இருந்தாலும் கணக்கெடுக்கமாட்டேன்” என்றார்.
கேள்வி: உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் உங்களுக்கு எதிராக பல்வேறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவே?
அக்கேள்விக்கு எவ்விதமான பதிலையும் அளிக்காது, கையை அசைத்தவாறு அங்கிருந்து நழுவிச் சென்றுவிட்டார்
மகிந்தா மனைவிக்கு ஏன் இந்த வேலை ..?
மகிந்தா மனைவிக்கு ஏன் இந்த வேலை ..?
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு
செய்திருந்த வலைப்பந்தாட்ட ஆரம்ப நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு நேற்று காலை
கொழும்பு – 07 இல் உள்ள டொறின்டன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
காதலியை கொன்று வீசிய காதலன்
காதலியை கொன்று வீசிய காதலன்
தெற்கு அவுஸ்ரேலியா பகுதியில் 21 வயது இளம் காதலி ஒருவர் கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,
இவரது வீட்டின் அருகே கார் தரித்து நின்றுள்ளது ,அதில் இருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் இவரது சடலம் மீட்க பட்டுள்ளது
முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு – மரணத்தில் சந்தேகம்
காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு – மரணத்தில் சந்தேகம்
அவுஸ்ரேலியா குயின்லாந் பகுதியில் நேற்று காணாமல் போன இரண்டு வயது சிறுமி ஒருத்தி சடலமாக மீட்க பட்டுள்ளார்
போலீசார் மக்கள்,மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய தேடுதலின் பின்னர் மோப்ப நாய்களின் உதவியுடன் குறித்த சிறுமி சடலாமாக கண்டு பிடிக்க பட்டுள்ளார்
இவரது மரணத்தில் சந்தேகம் நீடிப்பதாக தெரிவிக்கும் போலீசார் அது தொடர்பான தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்
திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய பிரபல நடிகர்
திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய பிரபல நடிகர்
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிகர் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினர். கடந்த 2011-ம் ஆண்டு இவருக்கும், ஆந்திராவின் பிரபல தொழிலதிபரின் மகள்
ஸ்நேகா ரெட்டி என்பவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் மற்றும்
பெண் குழந்தைகள் உள்ளனர். தெலுங்கு சினிமாவின் ‘ஸ்டார் கப்பிள்’ என்று சொல்லும் அளவுக்கு நட்சத்திர ஜோடிகளாக இருவரும் உள்ளனர்.
மனைவியுடன் அல்லு அர்ஜுன்
இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்நேகா ரெட்டி இருவரும் தங்களுடைய 10-ம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில்
கொண்டாடி இருக்கிறார்கள். இதுதொடர்பான புகைப்படங்களை அல்லு அர்ஜுன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.
26 வயது பெண்ணை 5-வது திருமணம் செய்துக்கொண்டார் 57 வயது நடிகர்
26 வயது பெண்ணை 5-வது திருமணம் செய்துக்கொண்டார் 57 வயது நடிகர்
பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ‘பேஸ் ஆப், கோஸ்ட் ரைடர், ஹான் இன் 60 செகண்ட்ஸ், ரைசிங் அரிசோனா,
தி ராக்’ உள்பட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நிக்கோலஸ் கேஜ் நடித்து இருக்கிறார். ‘லீவிங் லாஸ் வேகாஸ்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற்றார்.
நிக்கோலஸ் கேஜுக்கு 57 வயது ஆகிறது. இவருக்கு 4 தடவை திருமணம் நடந்து விவாகரத்தில் முடிந்தது. முதலாவதாக 1995-ல் நடிகை பாட்ரிசியாவையும், இரண்டாவது 2002-ல் லிசா மேரி
பிரெஸ்லியையும், 3-வதாக 2004-ல் ஆலீஸ் கிம்முவையும், 4-வதாக மேக்கப் கலைஞர் எரிகா கோய்கேவையும் திருமணம் செய்து
விவாகரத்து பெற்றார். எரிகா கோய்கேவை திருமணமான 4-வது நாளிலேயே விவாகரத்து செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
நிக்கோலஸ் கேஜ், ரிக்கோ ஷிபாடா
இந்த நிலையில் தற்போது 57 வயதாகும் நிக்கோலஸ் தனது 26 வயது காதலி ரிக்கோ ஷிபாடாவை 5-வது திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ரகசியமாக நடந்த இவர்கள் திருமணம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா video
பல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா
மகளிர் தினத்தை முன்னிட்டு சாய் தன்ஷிகா நடித்து வரும் யோகி டா படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
பல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா… வைரலாகும் வீடியோ
சாய் தன்ஷிகா
நடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’.
இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறார். சாய் தன்ஷிகாவுடன் இந்த படத்தில் கபீர் சிங், சாயாஜி ஷிண்டே,
மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் தன்ஷிகாவுக்கு சில ஆக்ஷன் காட்சிகளும் உள்ளன.
தற்போது இப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தன்ஷிகா பல்டி அடிப்பது போன்ற ஒரு ஆக்ஷன் காட்சியை
சிறப்பாக செய்துள்ளார். பெண்களால் எதையும் சாதிக்க இயலும் என்பதை வலுயுறுத்தவே பெண்கள் தினமான இன்று இக்காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
#SaiDhanshika, Gets Trained For Her Upcoming Venture #Yogida, Which Is In The Final Leg Of Shooting Process!!
— Sathishwaran PRO (@SathishwaranPRO) March 8, 2021
More Details To Be Revealed Soon! @SaiDhanshika @PRO_Priya @spp_media pic.twitter.com/gS4SCZq0Wa
அமேசான் நிறுவனத்தின் முன்னாள் மனைவி மெக்கின்சிக்கு 2-வது திருமணம்
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கின்சிக்கு 2-வது திருமணம்
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் அமேசானை தொடங்குவதற்கு முன்பே, நாவலாசிரியரான மெக்கின்சி ஸ்காட்டை காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கின்சிக்கு 2-வது திருமணம்
டான்-மெக்கின்சி
வாஷிங்டன்:
உலகின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ். அமேசானை தொடங்குவதற்கு முன்பே, நாவலாசிரியரான மெக்கின்சி ஸ்காட்டை காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவரின் திருமணம் 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. 1994-ம் ஜூலை மாதம் ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த தம்பதிக்கு 3 மகன்களும் சீனாவிலிருந்து தத்தெடுக்கப்பட்ட ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் 26 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு ஜெப் பெசோஸ்-மெக்கின்சி ஸ்காட் தம்பதி கடந்த 2019-ம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதனை தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளை தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக ஜெப் பெசோஸ் வழங்கினார்.
இதன் மூலமும் பிற சொத்துகள் மூலமும் மெக்கின்சி ஸ்காட், உலகின் பணக்கார பெண்களில் ஒருவராக மாறினார்.
இந்த நிலையில் தனது மகன் படிக்கும் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் டான் ஜூவெட் என்பவரை மெக்கின்சி ஸ்காட் மறுமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து மெக்கின்சி கூறுகையில் ‘‘டான் ஒரு சிறந்த நபர். இப்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன். இருவரும் உற்சாகமாக உணர்கிறோம்” என்றார்.
டான் கூறும்போது, ‘‘நான் அறிந்தவரை மிகவும் பெருந்தன்மை கொண்ட மற்றும் அன்பான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளேன். பிறருக்கு உதவும் பணியில் மெக்கின்சியுடன் நானும் இணைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்
ஆயுதப்படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் : ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி !
ஆயுதப்படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் : ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி !
TGTE I UN Human Rights l Ministry of Human Rights Mass Atrocities and Prevention of Genocide – TGTE
Statement for the 46th Session of the UN Human Rights Council (HRC) on Interactive dialogue with the Special Rapporteur on torture and other cruel, inhuman …
youtu.be
சிறிலங்காவின் சித்திரவதைகளுக்கான பொறுப்புக்கூறல் என்பது சர்வதேச வழக்கு மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதோடு, இதற்கு காரணமானவர்களை சர்வதேச நியாயாதிக்கத்தை
பயன்படுத்தி, தண்டிப்பதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளை வேண்டுகிறோம் என ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
சிறிலங்காவின் ஆயுதப்படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலையில், உள்நாட்டு சட்டங்களில் உள்ள இறைமையின் அடிப்படையிலான விதிவிக்கு சட்டங்களில்
திருத்தங்களைக் கொண்டு வந்து வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரது Nils Melzer ( torture and other cruel, inhuman or degrading treatment or punishment தொடர்பிலான அமர்வின் போது, ACCP அனுசரணையுடன் நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தின் மனித உரிமைகளும், தொகையான கொடுரங்கள், இனஅழிப்புக்கு எதிரான செயற்பாடுகளுக்கான அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் அவர்கள் காணொளிப்பதிவின் ஊடாக உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சித்திரவதைகளைப் பயன்படுத்துவது இன்றும் நடைமுறையில் உள்ளதோடு, 2016ம் ஆண்டின் பிற்பகுதியில் கைது செய்யப்பட்டவர்களின் 80 வீதமான தமிழர்கள் கைதான பின்னர் சித்திரவதை மற்றும் உடல் ரீதியான கொடுமைகள்
இழைக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார்கள் என 2017ம் ஆண்டில் இலங்கைக்கு பயணம் செய்த ஐ.நா.வின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான முன்னாள் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து தன்னிச்சையான கைதுகள், நீதிக்கு புறம்பான படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்குதல், காவலில் வைக்கப்பட்டோரை பாலியல் வல்லுறவுக்க
உட்படுத்தல்,விசாரணையின்றி சித்திரவதை மற்றும் நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைத்தல் உள்ளன என்பதோடு இவை அனைத்தும் தமிழர்களை விகிதாசாரமாக பாதிக்கிறது என்று தனது 2017ம் ஆண்டு The Freedom House அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சித்திரவதை என்பது சிறீலங்காவில் இரத்தத்தில் ஊறி உள்ளது. சிறீலங்காவில் சித்திரவதை செய்பவர்களை தண்டிப்பது ஒரு கடுமையான பிரச்சினையாகவே இருந்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கைகளில் பலமுறை கூறியுள்ளது. இதனால் சித்திரவதைக்கு பொறுப்புக்கூறல் சர்வதேச வழக்கு மூலம் மட்டுமே அடைய முடியும். சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தி, சிறீலங்காவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களைத் தண்டிப்பதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளை வேண்டுகிறோம்.
சிறிலங்காவிலும் மற்றும் பல நாடுகளிலும் சித்திரவதை அரசுகளினால் தான் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்படுகின்றது. ஆகவே, தங்கள் ஆயுதப்படைகளால் செய்யப்பட்ட
சித்திரவதைகளுக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். ஆகவே உள்நாட்டு சட்டங்களில் உள்ள இறைமையின் அடிப்படையிலான விதிவிக்கு சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதன்
ஊடாக, பாதிக்கப்பட்டவர்கள் வழக்குகளைத் தொடுத்து தமக்கான பரிகாரநீதியினை பெறுவதற்கு வழிகோல ஜனநாயக நாடுகளை வேண்டுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் தனதுரையில் தெரிவித்திருந்தார்.






