Tag: ஷவேந்திர சில்வா
இந்தியா பறந்த இலங்கை இராணுவ தளபதி
இந்தியா பறந்த இலங்கை இராணுவ தளபதி
இந்தியாவின் இராணுவ தளபதி விபத்தில்பலியானதை அடுத்து தற்பொழுது அவரது உடலுக்கு
அஞ்சலி செலுத்திட இலங்கை இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா டில்லிக்கு பயணமானார்
இந்த விபத்து சதி என பேச படுகிறது
இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு
இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு
கொவிட்- 19 ஜனாதிபதி செயலணியின் பிரதானியும் இராணுவ தளபதியுமான இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா முக்கிய அறிப்பொன்றை விடுத்துள்ளார்.
மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
அதனால் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை இன்னும் தளர்த்த எதிர்பாத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும்- தகரும் தடை
கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும்- தகரும் தடை
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அடுத்தவாரம் நாடு திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ள கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி
செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இதுதொடர்பில் நாளை (17) இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், கொவிட்-19 ஜனாதிபதி செயலணி நாளை கூடவிருக்கிறது. அக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும்.
செயலணியின் கடந்த கூட்டத்தின் போது, நாட்டைத் திறப்பதற்கான பரிந்துரைகளை ஜனாதிபதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் அவர் நினைவூட்டினார்.
தடுப்பூசி போட்டார் ஷவேந்திர சில்வா
தடுப்பூசி போட்டார் ஷவேந்திர சில்வா
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான
ஜெனரல் ஷவேந்திர சில்வா, இன்று காலை 6 ஆம் திகதி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டார்
இங்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்ட இராணுவ தளபதியு அவருடைய கனிவான
நடைமுறைகள் மற்றும் இத்திட்டத்திற்கான அவருடை ஒத்துழைப்பு என்பன இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
கொவிட் – 19 தொற்றுநோயை எதிர்த்து போராடும் முப்படை பணியாளர்களுக்கு ஏற்றுவதற்காக பிரத்தியேகமாக மற்றுமொரு
தொகை தடுப்பூசி தொகையை பெற்றுத்தருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துடன், இந்த விவகாரத்தில் அவர்
அளித்து வரும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புளைகளுக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா மீண்டும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
தனிமைப்படுத்தல் நடைமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது – இராணுவத் தளபதி
தனிமைப்படுத்தல் நடைமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது – இராணுவத் தளபதி
இன்று தொடக்கம் தனிமைப்படுத்தல் நடைமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான
தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பதிய நடைமுறை குறித்து இராணுவத் தளபதி விளக்கமளிக்கையில .
கொரோனா தொற்று உறுதியான நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில்
இருந்தவர்களை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள்
தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார்கள் என்றும் கூறினார்.
இதற்கு முன்னதாக, கொவிட்-19 தொற்றாளர் இனங்காணப்பட்டதும் அவருடன் தொடர்பைப் பேணியவர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இனிமேல்
அந்த நடைமுறை அமுலில் இருக்காது. மாறாக தொற்றாளருடன் முதலாவது தொடர்பை பேணியவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார். இவ்வாறு வீடுகளில்
தனிமைப்படுத்தப்படுபவர்கள் உரிய விதிமுறைகளை அனுசரித்து வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்ரினன் ஜென்ரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொரோனா தொற்று உறுதியானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த காலகட்டத்தில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டார்.
அவர்களுக்கு தொற்று உள்ளதா என கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனை முடிவு கிடைக்கும் வரை அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுவார்கள் முதியவர்கள்
மற்றும் அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் காரணமாக பலர் வீடுகளை விட்டு வெளியேறுவதில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்றும் இதனை கருத்திற்கொண்டு
நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களை வீட்டில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.






