வாலிபனை தாக்கிய இராணுவம் – தொடரும் இராணுவ வன்முறைகள்

Spread the love

இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று (07) இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞரே இவ்வாறு சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் தன்னை வழிமறித்துத் தாக்கியதாக இளைஞர் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். .

Home » வாலிபனை தாக்கிய இராணுவம் – தொடரும் இராணுவ வன்முறைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *