கெஹலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல்
Posted in இலங்கை செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல்

கெஹலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய பட்டுள்ளது .

சுகாதார அமைச்சராக பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல்ல அக்காலத்தில் அந்த அமைச்சில் இலஞ்ச ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டார் என குற்றம் சுமத்த பட்டுள்ளது .

நீதிமன்றில் தொடரப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தற்போது கெஹலிய ரம்புக்வெல்ல நீதி விசாரணை சிறை கொட்டகையில் வசித்து வருகிறார் .

இலங்கை நீதிமன்றில் குற்றவாளியாக குற்றம் சுமத்த பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல ,அமைச்சு பதவி முற்றாக பறிக்க படவில்லை என குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது .

அதனால் கெஹலிய ரம்புக்வெல்ல அங்கம் வகிக்கும் தற்கால அமைச்சு பதவிகள் முழுவதும் பறிக்க பட்டு ,அவர் புரிந்த குற்றத்திற்கு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என, பொதுநல அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளது .

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் என டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு விடுத்துள்ளார் ,யாழில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் டக்ளஸ் தேவானந்தா இப்படி முழங்கியுள்ளார் .

தமிழ் மக்கள் விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய போராட்ட குழுக்களில் டக்ளஸ் தேவானந்தா ஒருவராவார் .

ஆனால் அந்த இலட்சிய பாதையில் தெளிவுற நேர்மையுடன் பயணிக்க முடியாத அவர் எதிரியுடன் கூட்டு வைத்து தமிழர்களுக்கு எதிரான சாதிகளில்; ஈடுபட்டார் .

ஈழ தமிழர் வரலாற்றில் யார் இந்த டக்ளஸ் தேவானந்தா என்றால் அவருக்கு என ஒரு திறந்தவெளி கறுப்பு பக்கம் உள்ளது .

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் இலங்கை அரசியல் வரலாற்றில் மிக பெரும் சாதனையை இவர் தமிழர்களுக்கு நாட்டுவார் என எதிர் பார்க்க பட்டது.

ஆனால் அது வெற்றிடமாகவே காண படுகிறது .

ஒன்று பட்டு ஒருமித்து பயணித்த தமிழ் போராளிகள் குழுக்களுக்கு இடையில் சதிகளை தூவி பிரித்தாண்டு ,இன்று ஒட்டு மொத்த தமிழர் நெஞ்சங்களில் இடம்பிடிக்க முடியாத நிலையில் ஒருவராக டக்ளஸ் தேவானந்தா மாற்றம் பெற்றார் .

இது தவிர்க்க பட முடியாத ஒரு பக்கத்தின் பாதை என்பது அவரது உளதெளிவு .

ஆனால் அதனை ஈழ தேசிய இனமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ,புலிகள் இல்லா காட்டுக்குள் எலிகளுக்கு வேட்டை என்பதை போலவே இப்பொழுது இலங்கையில் பல பெருச்சாளிகள் உலவி திரிகின்றனர் .

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்

வரலாற்றில் கிடைத்த மிக பெரும் வாய்ப்புக்களை டக்ளஸ் தேவானந்தாவும் தவறவிட்டு விட்டார் ,என்பதே அவரை எதிரியாக கருகியவர்கள் நெஞ்சங்களில் ஓரத்தில் இப்படி செய்து கொள்ள மாட்டாரா என்ற ஏக்கம் ,அற்று போயுள்ளதை காண முடிகிறது .

வயது மூப்பாகி விட்ட நிலையில் ,ஐந்து ஆண்டுகளுடன் எனது ஆயூள் முடிந்து விடும் என டக்ளஸ் தேவானந்தா நினைத்திருப்பார் போல் உள்ளது .

இது அவரது அரசியல் கட்சியின் சிந்தாந்தம் எனவே அதனை யார் தான் மாற்ற முடியும் ..?,ஐந்து என்ன பத்து வருடங்கள் கூட அரசியலில் பயணியுங்கள் டக்ளஸ் தேவானந்தா அவர்களே .

கல்லான மனிதர் என்றாலும் ஒரு மூலையில் ஈரம் உள்ளது என்பதை தொலை காட்சி விவாதத்தில் பஞ்சாயத்து பண்ணிய உங்கள் நிலை கண்டு வியந்தேன் .

ஆதலால் உங்கள் செய்திகளை தவிர்த்து வந்த நான் ஒரு சிறு இடம் ஒதுக்கி பதிவிடுகிறேன் .

உங்களுக்கு நாங்கள் எதிரிகள் ஆனால் தமிழர்கள் இன்று யாரையும் எதிரியாக பார்க்கவில்லை .

ஏன் என்றால் அவர்களுக்கு எதிர்க்கும் பலம் இன்று இல்லை டக்ளஸ் தேவானந்தா அவர்களே புரிந்து கொண்டால் மகிழ்ச்சி .

யாழ்ப்பாணத்தில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம்

யாழ்ப்பாணத்தில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அராலி பகுதியில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம் ,யாழ்ப்பாணத்தில் நடந்த கத்தி வெட்டு சம்பவைத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைவு .

தமிழர்களின் கலாச்சார பட்டினமாக விளங்கி வரும் யாழ்ப்பாணத்தில் ,தனக்கு வாழ்வு கொடுத்த மனைவியை கத்தியால் கோரமாக வெட்டிய கணவன் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கணவன் மனைவியை சமையலறை கத்தியை கொண்டு வெட்டியுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன .

மனைவி இரத்த வெள்ளத்தில் மிதக்க கணவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் ,அயலவர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ,மனைவி அனுமதிக்க பட்டுள்ளார் .

மனைவியிடம் நடந்த கத்தி வெட்டு தாக்குதல் சம்பவத்தை விசாரித்த போலீசார் ,மனைவியை தாக்கிய கணவனை கைது செய்திடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

சற்றும் எதிர்பாரத விதமாக நடந்த மனைவி மீதான கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கொலை குற்றச்சாட்டில் கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என தெரிய வருகிறது .

பொலனறுவையில் கவிழ்ந்த பேரூந்து தப்பிய இசைக்குழு
Posted in இலங்கை செய்திகள்

பொலனறுவையில் கவிழ்ந்த பேரூந்து தப்பிய இசைக்குழு

பொலனறுவையில் கவிழ்ந்த பேரூந்து தப்பிய இசைக்குழு

பொலனறுவை ஓங்கம பகுதியில் இசை குழு பயணித்த பேரூந்து ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த ,இசை குழுவை சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளனர் .

பொலனறுவை பகுதியில் இசை நிகழ்ச்சியை நடத்தி விட்டு, வீடு திரும்பிய அதே இசைக்குழுவை சேர்ந்த சாரதி ஒருவரே பேரூந்தை செலுத்தி வந்துள்ளார் .

அதன் பொழுதே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேரூந்து விபத்தில் சிக்கி கவிழ்ந்துள்ளது .

பேரூந்து தலைகீழாக கவிழ்ந்த பொழுதும் அதில் பயணித்த இசை குழு உறுப்பினர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பித்துள்ளனர் .

மக்களை மகிழ்விக்க இசை நிகழ்ச்சி நடத்திய இசை குழு, பேரூந்து விபத்தில் சிக்கிய சம்பவம் ,அந்த இசை குழு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தெஹிவளை மிருகக்காட்சி சாலை புத்தாண்டில் அள்ளிய பெரும் பணம்
Posted in இலங்கை செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சி சாலை புத்தாண்டில் அள்ளிய பெரும் பணம்

தெஹிவளை மிருகக்காட்சி சாலை புத்தாண்டில் அள்ளிய பெரும் பணம்

தெஹிவளை மிருகக்காட்சி சாலை தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டில் 4.8 மில்லியன் ரூபா பணத்தை அள்ளியுள்ளதாக தெஹிவளை மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது .

இலங்கை வரும் வெளிநாட்டு உல்லாச பயணிகளை தெஹிவளை மிருகக்காட்சி சாலை கவர்ந்து இழுக்கும் ஒன்றாக காண படுகிறது .

இந்த தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் யானைகள் ,புலிகள் ,கரடி ,சிங்கம் ,புலி ,ஒட்டகம் என்பன பிரதான விலங்குகளாக இங்கே காண படுகின்றன .

இந்த காட்டு விலங்குகளை கண்டு இரசிக்க வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிகம் இங்கே தேடி வருகின்றனர் .

அவர்கள் ஊடாகவே தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தில் அதிக வருமானத்தை தெஹிவளை மிருகக்காட்சி சாலை பெற்று ,இந்த ஆண்டின் முதல் பகுதியில் சாதனை படைத்துள்ளது .

நான் மோசடி ஏதும் செய்யவில்லை மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள்

நான் மோசடி ஏதும் செய்யவில்லை மைத்திரிபால சிறிசேன

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக பதவியேற்ற நாளிலிருந்து எவ்வித மோசடியில் ஈடுபடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .

இலங்கை அரசியலில் தேர்தல் சூடுபிடிக்கவுள்ள நிலையில்,காட்சிகள் மாற்றமடைந்து வருகின்றன .

அவ்வாறன நிலையில் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார் .

இலங்கையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக அங்கம் வகிக்கும் பொழுதே நாட்டில் தொடர் குண்டுகள் வெடித்தன .

கொழும்பு தேவாலயங்கள் முதல் குண்டுகள் வெடித்தன .

அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று மைத்திரிபால சிறிசேன பதவி விலகவில்லை .

மாறாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் பங்கேற்று பேசும் பொழுதே மைத்திரிபால சிறிசேன நான் மோசடியில் ஈடுபடவில்லை என தெரிவித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் .

மியன்மாரில் சிக்கிய 15 இலங்கை மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

மியன்மாரில் சிக்கிய 15 இலங்கை மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

மியன்மாரில் சிக்கிய 15 இலங்கை மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

மியன்மாரில் சிக்கிய 15 இலங்கை மீனவர்கள் மியன்மார் சிறையில் அடைக்க பட்டனர் ,அவ்வாறு சிறை அடைக்க பட்ட இலங்கை மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பட்டுள்ளனர் என இலங்கை தெரிவித்துள்ளது .

தமிழ் சிங்கள புத்தாண்டு தினம் மியான்மாரிலும் கொண்டாட பட்டுள்ளது .

அதன் பொழுதே சித்திரை புத்தான்டு தினத்தை ஒட்டி கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க பட்டு இருந்தது .

அதன் பின்னர் இலங்கையை சேர்ந்த 15மீனவர்களும்மியன்மார் அரசினால் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .

மனைவியை வெட்டி கொன்ற கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை வெட்டி கொன்ற கணவன்

மனைவியை வெட்டி கொன்ற கணவன்

மனைவியை கணவன் வெட்டி கொன்ற சம்பவம் கந்தேநுவர, ஹுனுகல பகுதியில் இடம்பெற்றுள்ளது,மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார் .

பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்

கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டத்தை அடுத்து ஆத்திரம் கொண்ட கணவன் மனைவியை கத்தியால் பலமுறை குத்தியும் வெட்டி கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

கொலைக்குற்ற சாட்டில் மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

இலங்கையில் இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து செல்கின்றமை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த கொலை வழக்கு தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்

பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்

பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்வெளிநாட்டில் இருந்து வருகைதந்துள்ள டிக்டாக் ராசனுடன் சேர்ந்து புளியங்குளம் பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொத்துரொட்டி 1900 விற்க முயன்றவர் கைது

குறித்த சம்பவம் நேற்றய தினம் மாலை இடம்பெற்றது. வவுனியா சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு டிக்டாக் ராசனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போது,

நேற்றயதினம் ஒரு விசாரணை ஒன்று இருப்பதாக புளியங்குளம் பொலிஸார் என்னை அழைத்தனர்.

நான் அங்கு சென்றநிலையில் எனது தொலைபேசி கைப்பை என்பன பறிக்கப்பட்டு இரு கைகளிலும் விலங்கு போடப்பட்டது.

இலங்கையில் புதிய விசா நடைமுறை அறிமுகம்

பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய பொலிஸாரும் என்னை பிடித்துவைத்திருக்க, வெளிநாட்டில் இருந்து வருகைதந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து என்னை தாக்கியிருந்தார்.

பின்னர் நாய்போல என்னை இழுத்துச்சென்ற அவர்கள் அந்த நபரின் வாகனத்தில் ஏற்ற முற்பபட்டனர். இதன்போது நான் போதுமக்களின் உதவியினை நாடி பிரதான வீதியை மறித்திருந்தேன்.

பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்

பின்னர் மீண்டும் என்னை பொலிஸ் நிலையத்திற்குள் இழுத்துச்சென்றனர். அங்கு பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி அவரது சப்பாத்து கால்களால் எனது நெஞ்சில் தாக்கினார்.

பின்னர் அங்கு வந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் வாக்குமூலம் பெற்றுவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து என்னையும் எனது மனைவி பிள்ளைகளையும் வீட்டிற்கு அனுப்பியிருந்தார்.

பொலிஸார் தாக்கியதால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன் என்றார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக தாக்கப்பட்டவரின் மனைவி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன் வைத்தியசாலை பொலிஸாரிடமும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

மக்களிடம் உதவி செய்திடபணத்தை பெற்று அது தானே தனது பணத்தினை வழங்குவது போன்ற நிலையில் ,தனனை ஒரு நீதிபதி போல இவர் செயல் படுவதாக தற்போது பலர் மக்கள்குற்றம் சுமத்தியுள்ளனர் .

இவரை ஆதரித்து பேசிய மக்கள் பலர் இவரது இவ்வாறான இவ்விதமான தொடர் இழிவான செயலினால் மக்கள் இவரை வெறுத்து இவருக்கு எதிராக திரும்பியுள்ளனர் .

இவ்வாறான உதவி செய்யும் யுடுப்பர் மற்றும் டிக்டாக் வாதிகளுக்கு வெளிநாட்டு மக்கள்பணம் வழங்கிட கூடாது என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .

இவர் மீது பல குற்ற சாட்டுக்கள்முன் வைக்க பட்டுள்ளன அவை தொடராக வெளி வரும் என எதிர் பார்க்க படுகிறது .

இலங்கையில் புதிய விசா நடைமுறை அறிமுகம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் புதிய விசா நடைமுறை அறிமுகம்

இலங்கையில் புதிய விசா நடைமுறை அறிமுகம்

இலங்கையில் புதிய விசா நடைமுறை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இலங்கை வருவதற்கு விசா பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கொத்துரொட்டி 1900 விற்க முயன்றவர் கைது

இணையத்தின் ஊடாக புதிய வழிமுறையில் விசா விண்ணப்பம் செய்வதற்கு ஏற்ப புதிய விசா நடைமுறை கையாள பட்டு வருகிறது .

அதன் அடைப்படியில் உல்லாசப்பயணிகள் மற்றும் இலங்கை வாழ் மக்கள் விசா பெறுவதற்கு சிறந்த வழியை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் அறிமுகம் செய்ய பட்டுள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது .

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் பொலிசாரால் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் பொலிசாரால் கைது

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் பொலிசாரால் கைது

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர் ,சவகச்சேரி நீதிமன்றுக்கு அழைத்து செல்ல பட்ட பொழுதே சிறை கைதிகள் தப்பி ஓடியுள்ள்ளனர் .

திருட்டு குற்ற சாட்டுக்கள் அடைப்படையில் பொலிஸாரால் கைது செய்ய பட்டு ,யாழ்ப்பாண சிறைச்சாலையில் அடைத்து வைக்க பட்டவர்களே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் .

இவ்வாறு சிறையில் இருந்து தப்பித்தவர்களை தேடிய போலீசார் ,மீள அவர்களை கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலை படுத்தினர் .

அவ்வாறு தப்பித்த கைதிகளுக்கு மேலதிக சிறை தண்டனையும் ,குற்ற பணமும் அறவிட பட்டுள்ளதாக தெரிய வருகிறது .

கொத்துரொட்டி 1900 விற்க முயன்றவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கொத்துரொட்டி 1900 விற்க முயன்றவர் கைது

கொத்துரொட்டி 1900 விற்க முயன்றவர் கொழும்பு வாழைத்தோட்டம் புதுக்கடை உணவாக உரிமையாளர் கொத்துரொட்டி விலையால் கைது செய்யப்பட்டார் .

இலங்கையில் உணவாக விலை பட்டியலுக்கு அமைவாக கொத்துரொட்டி விற்பனை செய்யாது ,வெளிநாட்டவருக்கு 1900 ரூபாவுக்கு கொத்துரொட்டி விற்கமுனைந்த பொழுது தகராறு ஏற்பட்டுள்ளது

வெளிநாட்டவர் கொத்துரொட்டி விலையை கேட்டு விட்டு அவரிடம் கொத்துரொட்டி வாங்கிட மறுத்தாமையால் கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார் .

மேற்படி வெளிநாட்டவர் குறித்த கொத்துரொட்டி சர்ச்சை சம்பவத்தை காணொளி பிடித்து வெளியிட்ட நிலையில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்தனர் .

இலங்கை உல்லாச பயணம் வரும் வெளிநாட்டவர்களை இலங்கையில் உள்ளசிலர் இவ்விதம் ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் ,அவர்களிடம் இவவிதம் காணொளி பிடித்து வெளியிடுவதால் இலங்கை மக்கள்தொடர்பாக அவ நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது .

இதனால் இலங்கை உல்லாச பயணம் வீழ்ச்சியடையும் நிலைக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது .

போலீசார் கொத்துரொட்டி சர்ச்சை தொடர்பாக விசாரணை மேற் கொண்டு கொத்துரொட்டி விற்பனை செய்ய முயன்றவரை கைது செய்துள்ளது பாராட்டுக்கு உரிய செயலை பார்க்க படுகிறது .

வேலையை ஆரம்பிக்க நல்ல நேரத்திற்கு காத்திருக்கும் இலங்கையர்கள்
Posted in இலங்கை செய்திகள்

வேலையை ஆரம்பிக்க நல்ல நேரத்திற்கு காத்திருக்கும் இலங்கையர்கள்

வேலையை ஆரம்பிக்க நல்ல நேரத்திற்கு காத்திருக்கும் இலங்கையர்கள்

வேலையை ஆரம்பிக்க நல்ல நேரத்திற்கு காத்திருக்கும் இலங்கையர்கள் ,தமிழ் சிங்கள புத்தாண்டு நிறைவடைந்ததை அடுத்து சுப நேரத்தில் வேலையை மீள ஆரம்பிக்க இலங்கையர்கள் காத்துள்ளனராம் .

மூடா நம்பிக்கையின் உச்சத்திலுறைந்த்திருக்கும் மக்கள் சமூகத்தில் இலங்கை மக்களுக்கும் உள்ளாகியுள்ளனர் என்பதை இந்த வேலையை ஆரம்பிக்க சுப நேரத்திற்கு காத்திருப்பதன் மூலம் காண முடிகிறது .

இணை அபைவிருத்தி நோக்கி முன்னேறி வருகின்ற இந்த காலத்தில் விழிப்புணவு அற்ற சமூகமாக இலங்கை மக்கள் வாழ்வதை பலவிடடயங்கள் கோடி கட்டுவதை இலங்கை வரும் உல்லாச பயணிகள் வெளியிடும் காணொளிகள் மூலம் காண கிடக்கின்றன .

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் வருமானம்
Posted in இலங்கை செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் வருமானம்

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் வருமானம் 

இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் ரூபா வருமானம் பெற்றுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது .

இலங்கையில் இடம்பெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மக்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை அதிகம் பயன் படுத்தினர் .

வாகன ஓட்டிகள் யாவரும் இந்த அதிவேக சாலைகளை பயன்படுத்தும் பொழுது பணத்தை செலுத்தியே பயணிக்க முடியும் .

அவ்வாறான நிலையிலே இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை இந்த பெரும் தொகையில் பணத்தை அள்ளியுள்ளது .
வாகன விபத்தில் 23 பேர் பலி இலங்கையில் அதிகரித்த வாகன விபத்துக்கள்
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் 23 பேர் பலி இலங்கையில் அதிகரித்த வாகன விபத்துக்கள்

வாகன விபத்தில் 23 பேர் பலி இலங்கையில் அதிகரித்த வாகன விபத்துக்கள்

வாகன விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர் , இலங்கையில் அதிகரித்த வாகன விபத்துக்கள்மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 23 பேர் பலியியுள்ளனர் .

164 விபத்துக்கள் சம்பவித்துள்ளன , அதில் 136 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த்துள்ளனர் .

சாரதிகள் அலட்சியே போக்கே இந்த வாகன விபத்துக்கள் இலங்கையில் அதிகரித்து செல்ல காரணமாகிறது என தெரிவிக்க பட்டுள்ளது

உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு
Posted in இலங்கை செய்திகள்

உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு

உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு

உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவத்தினர் இணைந்துள்ளனர் ,இலங்கை இராணுவம் இணைவு தொடர்பாக ரஷ்யாவிடம் இலங்கை தகவல் கோரியுள்ளது .

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இரண்டு ஆண்டுகள் கழிந்து கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ..

இவ்வாறான காலப் பகுதியில் ரஷ்யா படையில் இனைந்து உக்ரைன் அரச படைகளிற்கு எதிராக போரிட இலங்கை இராணுவம் இணைந்துள்ளது சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .

சமீப சில வாரங்களுக்கு முன்னதாக உக்ரைன் இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைந்துள்ள காணொளிகள் வெளியான நிலையில் ,தற்போது ரஷ்ய இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு என்ற செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் எரிந்தது
Posted in இலங்கை செய்திகள்

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் எரிந்தது

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் எரிந்தது

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது எனினும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உயிர் சேதம் இன்றி தப்பித்துள்ளார் .

மஹியங்கனையிலிருந்து எல்ல நோக்கி இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த போது பண்டாரவளை ஹல்பே பிரதேசத்தில் வாகனம் ஹீ பற்றி கொண்டது .

இந்த வாகனம் எவ்வாறு தீ பிடித்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

சமீப காலங்களாக இவ்வாறு பல இலங்கை அரசியல்வாதிகள் வாகனங்கள் தீப்பிடிப்பதும் ,விபத்தில் சிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

இலங்கையில் 11 ரயில் பயணங்கள் இரத்து பயணிகள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 11 ரயில் பயணங்கள் இரத்து பயணிகள் அவதி

இலங்கையில் 11 ரயில் பயணங்கள் இரத்து பயணிகள் அவதி

இலங்கையில் 11 தொலை தூர ரயில் பயணங்கள் திடீரென இரத்து செய்ய பட்டுள்ளது ,இதனால் ரயில் பயணிகள் அவதியுற்றுள்ளனர் .

தொடரூந்து பாதையில் ஏற்பட்ட விரிசல்கள் காரணமாக திருத்த பணிகள் இடம்பெறுவதால் கொழும்பு கோட்டை முதல் Moratuwa, Panadura, Wadduwa, Negombo, Ambepussa, Padukka and Ragama ஆகிய ரயில் பயண சேவைகள் பாதிக்க பட்டுள்ளன .

வேலைகள் நிறைவடைந்ததும் வளமை போன்று ரயில் பயணங்கள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது .

இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கிய இந்தியா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கிய இந்தியா

இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கி உள்ளதாக இந்தியா அரசாங்கதின் கொழும்பு உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அதிக அளவான வெங்காயம் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு இறக்குமதி செய்ய பட்டு வருகிறது .

இந்தியா வெங்காயம் இலங்கைக்கு இறக்குமதி செய்திட விதிக்க பட்ட தடையால் இலங்கையில் வெங்காயத்துக்கு அதிக தட்டு படு காணப்பட்டது .

இந்தியா அரசின் வெங்காய தடையினால் இலங்கையில் வெங்காயத்தின் விலை திடிரென கடுகதி வேகத்தில் உயர்ந்தது .

வெங்காய தடை நீக்க பட்டதை அடுத்து வெங்காயத்தின் விலையில் அதிக வீழ்ச்சி காணப்படும் எனவும் ,மக்கள் மலிவு விலையில் வெங்காயத்தை வாங்கி பயன் படுத்தி கொள்வார்கள் என தெரிவிக்க படுகிறது .

கோழி இறைச்சி 1500 ரூபா கோழி விலையை குறைக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கோழி இறைச்சி 1500 ரூபா கோழி விலையை குறைக்க நடவடிக்கை

கோழி இறைச்சி 1500 ரூபா கோழி விலையை குறைக்க நடவடிக்கை

கோழி இறைச்சி 1500 ரூபாவாக அதிகரிக்க பட்டதை அடுத்து தற்போது கோழி இறைச்சி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது .

இதன் அடிப்படையில் கோழி இறைச்சி விலை எதிர் வரும் நாட்களில் விலை வீழ்ச்சியடைந்து காணப்படும் என அறிவிக்க பட்டுள்ளது .

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மக்கள் அதிகம் கோழி இறைச்சியை வாங்கி உண்டிட இந்த விலை குறைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது .

சிக்கன் பிரியாணி ,சிக்கன் கொத்து ,சிக்கன் குழம்பு ,சிக்கன் பொரியல் ,என்பனவற்றுக்கு கோழி இறைச்சி அதிக பயன் படுத்த பட்டு வருகிறது .

கோழி இறைச்சி 1500 ரூபா கோழி விலையை குறைக்க நடவடிக்கை

இதனாலேயே சிக்கன் இறைச்சி அதிக விலைக்கு எகிறியதாக தெரிவிக்க பட்டுள்ளது .

திடீரென கோழி இறைச்சி விலை குறைவடைந்துள்ளதால் ,கோழி இறைச்சி பிரியர்கள் குஷியில் உறைந்துள்ளனர் .

இதனால் சிக்கன் பிரியாணி ,சிக்கன் கொத்து ,சிக்கன் குழம்பு ,போன்ற உணவு பண்டங்கள் விலைகளும் குறைவடையலாம் என எதிர் பார்க்க படுகிறது .