கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தம்பதிகள்

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தம்பதிகள்

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கு 22 வயது எனவும் காணாமல்போன ஆணுக்கு 28 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திஹாரிய பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பெண்ணின் கிராமத்திற்கு சென்ற போது கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு இவர்கள் நீராட சென்றுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், காணாமல்போன நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேலில் வெடித்த குண்டு திருச்சியில் இராணுவம்
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகனை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டுபாயிலிருந்து இலங்கையர்கள் குழுவுடன் டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிறுமி காயம்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிறுமி காயம்

மின்னேரியா, கிரித்தலேயில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி படுகாயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மின்னேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை மற்றும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்கள்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்கள்

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்கள்

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் பட்டா வாகனம் என்பன இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது.

குறித்த வன்முறைச் சம்பவம் இன்று (15) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை

கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை

கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா நேற்று (14) யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்து வடக்கு தமிழ் மக்கள் இடையே வேதனை அளிக்கின்றது.

இந்தியாவுடன் எங்களின் உறவுகளை தொடர வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும், பூகோள அரசியல் ரீதியாக இந்திய அரசுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புகின்றது என தெரிவித்தார்.

புத்தாண்டு விபத்துக்கள் 37 பேர் வைத்தியசாலையில்
Posted in இலங்கை செய்திகள்

புத்தாண்டு விபத்துக்கள் 37 பேர் வைத்தியசாலையில்

புத்தாண்டு விபத்துக்கள் 37 பேர் வைத்தியசாலையில்

கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் வீதி விபத்துக்கள் காரணமாக 37 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நேற்று (13) பட்டாசு விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக வைத்தியர் ருக்ஷான் பெல்லன மேலும் தெரிவித்துள்ளார்.

பலாங்கொடையில் இளைஞர் வெட்டிக்கொலை
Posted in இலங்கை செய்திகள்

பலாங்கொடையில் இளைஞர் வெட்டிக்கொலை

பலாங்கொடையில் இளைஞர் வெட்டிக்கொலை

பலாங்கொடை – பெட்டிகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு மரணித்தார்.

மதுபான விருந்து ஒன்றின் போது இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்து இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை தொடர்பாக 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இலங்கையர்கள் பற்றிய அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இலங்கையர்கள் பற்றிய அறிவிப்பு

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இலங்கையர்கள் பற்றிய அறிவிப்பு

நேற்றிரவு இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியான ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது, மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த தொடர் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து அந்நாட்டில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையர்கள் குழுவுடன் டுபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பான தகவல்களை அவர் விளக்கியுள்ளார்.

ஃப்ளை டுபாய்க்கு சொந்தமான FZ-1625 விமானம் நேற்றிரவு 20.10 மணியளவில் டெல் அவிவ் நோக்கி பயணித்த போது இந்த தாக்குதல் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், விமானத்தை திசை திருப்பி டுபாய்க்கு பறக்கவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இலங்கையர்கள் பற்றிய அறிவிப்பு

அதன்படி அந்த விமானத்தில் இஸ்ரேலுக்கு வரவிருந்த இலங்கையர்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நிமல் பண்டார கூறுகிறார்.

இதேவேளை, ஏப்ரல் 13ஆம் திகதி ஜெருசலேம் சன்கர் விளையாட்டரங்கில் சுமார் இரண்டாயிரம் இலங்கையர்களின் பங்குபற்றுதலுடன் வைபவம் இடம்பெற்றதாகவும் அதன் பின்னர் அவர்கள் தமது இல்லங்களுக்குச் சென்றதாகவும் இலங்கைத் தூதுவர் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகம் அவதானம் செலுத்தி வருவதாகவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையில், ஈரான் நேற்றிரவு இஸ்ரேல் மீது 500 க்கும் மேற்பட்ட ஆளில்ல விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்திய நிலையில் இதுவரை ஒரு சிறுமி மட்டுமே காயமடைந்ததாக அவர் கூறினார்.

அந்த அனைத்து வான்வழி தாக்குதல்களையும் அயர்ன் டோம் அமைப்பு மூலம் அழித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதேவேளை, தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு ஜோர்தான், லெபனான், ஈராக், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு பயணிக்கும் விமானங்கள் அந்த வான்வழிகளை தவிர்த்து வேறு வான்வழிகளில் மீண்டும் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு பயணிப்பதால் பயணங்களுக்கான நேரம் மற்றும் டிக்கெட் கட்டணமும் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு விமான டிக்கெட்டுகளை பெற்றுள்ளவர்கள் மீண்டும் அந்த டிக்கெட்டுகள் மீது கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையால், இஸ்ரேலில் இருந்து வரும் மற்றும் புறப்படும் விமானங்கள் தாமதமாகலாம் எனவும் நிமல் பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலை கதற கதற அடித்த ஈரான் இஸ்ரேல் ஏவுகணைகளை காலியாக்கிய ஈரான்
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை கதற கதற அடித்த ஈரான் இஸ்ரேல் ஏவுகணைகளை காலியாக்கிய ஈரான்


இஸ்ரேலை கதற கதற அடித்த ஈரான் இஸ்ரேல் ஏவுகணைகளை காலியாக்கிய ஈரான்

இஸ்ரேல் ஏவுகணைகளை காலியாக்கிய ஈரான் இஸ்ரேலை கதற கதற அடித்த ஈரான் ஒரு பில்லியன் இழப்பாம் .

ஈரான் மெது தாக்குதல் நடத்தினால் திருப்பி அடிப்போம் என ஈரானிய இராணுவம் உறுமல்

வீடியோ

https://www.youtube.com/watch?v=IoceVc-c2as

Error: View 9293b2au4w may not exist
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் உலகம் முன்னேற முடியும். புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய வருடம் பிறத்தல், புதிய நாற்காட்டி, பருவத்திற்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன.

இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான விடயமும் உள்ளது. அதுவே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆகும். தமிழ், சிங்களப்

புத்தாண்டை உறவுகளையும் ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டே புதுப்பித்துக் கொள்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றியே புத்தாண்டுக் கொண்டாட்டங்களை கட்டமைத்துள்ளன.

புத்தாண்டு நமக்கு சொல்லும் பாடத்தை இந்த தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என நம்புகிறேன்.

புதிய ஆண்டில், ஒரு நாடு என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என்பதை நினைவுக்கூறுவதோடு அனைவருக்கும் புத்தாண்டுப் பிறப்பு சிறப்பானதாக அமையட்டும் என பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாஸ புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

சஜித் பிரேமதாஸ புத்தாண்டு வாழ்த்துச் செய்தி


ஒவ்வோர் இருண்ட யுகத்திலும் ஒரு வெள்ளிக் கோட்டைப் பார்ப்பது போல, இந்த இருண்ட யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு வளமான யுகத்தை உருவாக்கவும் அணிதிரள்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் மாபெரும் கலாசார விழாவாக அறியப்படும் இந்நாளில், அனைவரும் ஒரே சுப நேரத்தில் இருந்து ஒரே கடமையில் ஈடுபடும் இந்த சம்பிரதாயத்தின் காரணமாக சிங்கள, தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகக் காணப்படுகிறது.

இந்த நாளில் அனைத்து மக்களும் எதிர்வரும் ஆண்டில் செழிப்பு மற்றும் சௌபாக்கியத்தை எதிர்பார்த்து, தங்களால் இயன்றவரை இந்த சடங்குகளை செய்கின்றனர். ஆனால், கடந்த காலம் இலங்கை வாழ் மக்களுக்கு சிறந்த காலப் பகுதியாக அமையவில்லை என்று நான் நம்புகிறேன்.

வரிச்சுமை அதிகரிப்பு, பொருட்களின் விலையேற்றம், நாட்டில் உள்நாட்டு நெருக்கடி என பல பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டதுடன், தற்போது தேர்தல் ஆண்டாகவும் காணப்படுகிறது.

இந்த வருடம் மக்கள் எதிர்பார்க்கும் அரசாங்கம் நாட்டில் உருவாகும் என்பதும், மீண்டும் எமது தாய்நாட்டுக்கு சுபீட்சம் வரும் என்பதும் எனது நம்பிக்கையாகும்.

மேலும், தற்போது காணப்படுகின்ற வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு, மீண்டும் தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக அமைதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கொண்ட பெருமை மிக்க நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 917 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 917 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நேற்று 917 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த கைதிகள் நேற்று விடுதலை பெற்று சிறைச்சாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர் என சிறைசாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொது மன்னிப்பின் கீழ் 21 கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 12 கைதிகள் நேற்று காலை அங்கிருந்து வௌியேறினர்

ஹட்டன் ‌நுவரெலியா பிரதான வீதியில் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

சுற்றுலா சென்றவர்களின் வான் விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்

சுற்றுலா சென்றவர்களின் வான் விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்

பண்டாரவளை – கஹகல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹப்புத்தளை பகுதியிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

காலி பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற குழுவினர் பயணித்த வானே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 6 பேரும் சிகிச்சைகளுக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

ரயில் சேவைகள் சில இன்று இரத்து

ரயில் சேவைகள் சில இன்று இரத்து

இன்று சில அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

விசேட நேர அட்டவணையின் கீழ் 6 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

வவுனியா சிறைச்சாலையில் புத்தாண்டை முன்னிட்டு 10 சிறைக் கைதிகள் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா சிறைச்சாலையில் புத்தாண்டை முன்னிட்டு 10 சிறைக் கைதிகள் விடுதலை

வவுனியா சிறைச்சாலையில் புத்தாண்டை முன்னிட்டு 10 சிறைக் கைதிகள் விடுதலை

வவுனியா சிறைச்சாலையில் இன்றையதினம் (13) 10 கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையில் 10 சிறைக் கைதிகள் இன்று (13) காலை விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் , சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளை விடுவிக்கும் நிகழ்வில் வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் அபயரத்தன, பிரதான சிறைச்சாலை பிரதானி புத்திக்க உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என்பவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்
Posted in இலங்கை செய்திகள்

காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்

காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்

கலஹா, நீலம்ப, யோகலெச்சாமி தோட்டத்தில் காணி தகராறு காரணமாக நேற்று (12) நபர் ஒருவர் தனது இளைய சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

கிருஷ்ணசாமி கருணாநிதி என்ற 35 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இவருடைய சகோதரர் ஏசுதாசன் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவர் சிறையில் இருந்து விடுதலையாகி அனுராதபுரத்தில் தனியாக வசித்து வருகிறார்.

காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்

இந்நிலையில், கடந்த வியாழன் இரவு தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தை திருமணமாகாத தம்பி விற்றதாக கூறிவிட்டு கருணாநிதியின் வீட்டுக்கு வந்து தகராறு செய்தார்.

பின்னர் அயலவர்கள் தலையிட்டு மோதலை சமரசம் செய்தனர், ஆனால் அது தோல்வியடைந்தது.

இரவு முழுவதும் இடம்பெற்ற தகராறு அதிகாலை 2.00 மணி முதல் அமைதி நிலவியதால் சந்தேகமடைந்த அயலவர்கள், அது தொடர்பில் தேடிய போது கருணாநிதி காயங்களுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததுள்ளார்.

தடியடி, கூரிய ஆயுதங்கள், கற்கள் மற்றும் கண்ணாடி போத்தல்களால் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்ணனை தாக்கிவிட்டு தப்பியோடிய ஏசுதாசனை அயலவர்கள் பிடித்து கலஹா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வீழ்ந்து நொறுங்கிய விமானம் விமானி பலி
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு மும்பை இடையே விமான சேவை

கொழும்பு மும்பை இடையே விமான சேவை

இந்தியாவின் இண்டிகோ எயார்லைன்ஸ் கொழும்பு மற்றும் மும்பை இடையே நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

வாரத்திற்கு மூன்று தடவைகள் இந்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தற்போது சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்திலிருந்து கொழும்பிற்கு இண்டிகோ எயார்லைன்ஸ் மூலம் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

விமானங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், இண்டிகோ எயார்லைன்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக கருதப்படுகிறது

மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது

இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது

ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் 200 கிலோகிராம் போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.

இரண்டு படகுகளிலும் இருந்த 10 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படைப் பேச்சாளர் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

போதைப்பொருடன் கைது செய்யப்பட்டவர்கள் காலித் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும் கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

13ஆல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: சி.வி.விக்னேஸ்வரன்
Posted in இலங்கை செய்திகள்

சந்திரிகாவின் மகுடிக்கு ஆடுகின்றார் விக்னேஸ்வரன்

சந்திரிகாவின் மகுடிக்கு ஆடுகின்றார் விக்னேஸ்வரன்

வடக்கின் முன்னாள் முதல்லர் விக்னேஸ்வரன் சிறீலங்கா சதந்திர கட்சியின் முகவராக செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது என

தெரிவித்துள்ள ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பான அவரது தற்போதைய நிலைப்பாடு அதை உறுதி செய்வதுபோன்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் (12.04.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை ஒரு பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கை முன்னெடுத்த வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தற்போது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற

வேட்பாளர்கள் எழுத்து மூலமாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களுக்கு என்னென்ன விடயங்களை செயல்படுத்துவீர்கள் என்பதை சர்வதேச ராஜதந்திரிகள் முன்னிலையில் குறிப்பாக அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளின் ராஜேந்திரன் முன்னிலை எழுத்து மூலம் தருமாறு கூறிருக்கின்றார்.

முன்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் பொது வேட்பாளர் தேவை இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு அரசாங்க செலவில் அவர்களது தயவில் வாழ்கின்றவர் அப்படித்தான் சொல்வார் என்று சம்பந்தரை கிண்டலும் கேலியும் செய்திருந்தார் இந்த விக்னேஸ்வரன்.

இவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருந்த விக்னேஸ்வரன் அன்று ஜனாதிபதியாக இருந்த சந்திர்க்கா அம்மையார் 2000 ஆம் ஆண்டு கொண்டுவந்த விடயங்கள் நல்ல விடயங்கள் என்றும் அதிலே பல சிறந்த விடயங்கள் இருக்கின்றன என்றும் சொல்லி இருக்கின்றார்.

இதிலிருந்து இவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுடைய குறிப்பாக சந்திரிகா அம்மையாரின் ஒரு முகவராக மாறியிருக்கிறாரா என்ற சந்தேகங்கள் எழுகின்’றது.

இதேவேளை சர்வதேசத்தின் பங்களிப்புடன் புலிகளும் அன்றைய அரச ஆட்சியாளர்களும் இடையே 2002 இல் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அதேபோன்று இந்நாட்டில் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அவை நடைமுறையாகாத வரலாறும் உள்ளன.

இதேவேளை ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் வடக்கின் அரியணையில் ஏறிய விக்னேஸ்வரன் ஆளுமை இன்மையால் தனது ஆட்சியில் இருந்து அமைச்சர்கள் செய்த மோசடிகளால் அவரது தலைமையிலான ஆட்சியை கலைப்பதற்காக அவைத் தலைவராலேயே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட வரலாறும் இருக்கின்றது.

அதுமட்டுமல்லாது ஆளுநர் சரியில்லை என்று கூறி தமக்கேற்ற ஆளுநரையும் கொண்டுவந்திரந்தார்கள. ஆனால் ஊழலையும் சபைக்காக வந்த பெரு நிதியை மீிள அனுப்பியதையும் தவிர வேறொன்றையும் சாதித்திருக்கவில்லை.

பின்னர் கட்சியிலிருந்து வெளியேறி புது கூட்டுக்களை அமைத்து தனது சுயநலங்களை மேற்கொண்டுவருவதும் அனைவரும் அறிந்ததே.

இவ்வாறாக உறுதியான அரசியல் நிலைப்பாடில்லாத ஆளுமையற்ற விக்னேஸ்வரன் இப்போது சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் கதையை கூறியிருப்பது மக்களுக்கு மேலும் அழிவுகளையே கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

சித்தியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞன் குத்திக் கொலை

சித்தியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞன் குத்திக் கொலை

மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்த தன்தெனிய தோட்டம் பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்காதல் உறவு காரணமாக இந்த தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இந்தக் கொலையைச் செய்துள்ள நிலையில், ஹர்ஷன குமார என்ற 27 வயதுடைய இளைஞனே உயிரிழந்தவராவார்.

குறித்த மோதலில் மற்றுமொருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த இளைஞன் தனது சித்தியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

அதனால் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் நாளை (13) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.