வீட்டை கேட்டு கடிதம் வந்தால் ஒப்படைப்பேன் மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள்

வீட்டை கேட்டு கடிதம் வந்தால் ஒப்படைப்பேன் மைத்திரிபால சிறிசேன

வீட்டை கேட்டு கடிதம் வந்தால் ஒப்படைப்பேன் மைத்திரிபால சிறிசேன

வீட்டை கேட்டு கடிதம் வந்தால் ஒப்படைப்பேன் மைத்திரிபால சிறிசேன ,தனது வீட்டை ஒப்படைக்குமாறு கோரி இதுவரை தனக்கு கடிதம் வரவில்லை என்றும், கிடைத்தால் அதை ஒப்படைப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதற்கிடையில், அமெரிக்க சிஐஏ வெளியிட்ட அறிக்கை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் ஐஎஸ்ஐஎஸ் தான் மூளையாக செயல்பட்டது

என்பதை தெளிவாகக் காட்டுகிறது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு அவர் வழங்கிய ரகசியத் தகவல்களை வெளியிடுவதா? இல்லையா? என்பதை அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஈஸ்டர் சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க இன்று ஒரே ஒரு நபர் மட்டுமே தேவை என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி, இந்த நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் வர தனக்கு விருப்பமில்லை என்றும் கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் தான் வருத்தமடைந்ததாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில்

பல்வேறு குற்றங்களைச் செய்ததாக பிள்ளையான் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், அத்தகைய நபருக்கு அமைச்சர் பதவி வழங்கியது தவறு என்றும் அவர் கூறினார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

மைத்திரிபாலவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு

மைத்திரிபாலவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு

மைத்திரிபாலவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதானகே புதன்கிழமை (24) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது .

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் கலாசார அமைப்பாளருமான முண்டிகு சரச்சந்திரன் மற்றும் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் நான்கு உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பரிசீலித்ததன் பின்னர் இந்த இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது .

வழக்கு விசாரணை நிறைவுக்கு வரும் வரையிலும் இந்த இடைக்காலத்தடையுத்தரவு அமுலில் இருக்கும்

மைத்திரிபால ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டவிரோதமானது

2022 ஆம் ஆண்டு இந்த வழக்கை சர்ச்சந்திர தாக்கல் செய்துள்ளார், மேலும் மைத்திரிபால சிறிசேன 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டவிரோதமானது என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாந்த ஜயவர்தன நீதிமன்றில் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் படி, முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கட்சியின் தலைவர் பதவியை வகிக்க சாத்தியமில்லை எனவும் அவர்கள் ஆதரவாளர்களாக செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாத, பிரதிவாதங்களை அவதானித்த நீதவான், இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததுடன், ஆட்சேபனைகளை ஜூன் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் சட்டத்தரணி ஜயமுதித ஜயசூரிய மற்றும் சட்டத்தரணி சம்பத் பெரேரா ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்

Featured

Loading...
நான் மோசடி ஏதும் செய்யவில்லை மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள்

நான் மோசடி ஏதும் செய்யவில்லை மைத்திரிபால சிறிசேன

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக பதவியேற்ற நாளிலிருந்து எவ்வித மோசடியில் ஈடுபடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .

இலங்கை அரசியலில் தேர்தல் சூடுபிடிக்கவுள்ள நிலையில்,காட்சிகள் மாற்றமடைந்து வருகின்றன .

அவ்வாறன நிலையில் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார் .

இலங்கையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக அங்கம் வகிக்கும் பொழுதே நாட்டில் தொடர் குண்டுகள் வெடித்தன .

கொழும்பு தேவாலயங்கள் முதல் குண்டுகள் வெடித்தன .

அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று மைத்திரிபால சிறிசேன பதவி விலகவில்லை .

மாறாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் பங்கேற்று பேசும் பொழுதே மைத்திரிபால சிறிசேன நான் மோசடியில் ஈடுபடவில்லை என தெரிவித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் .

Featured

Loading...