Posted in Uncategorized

கடன் வேணுமா வாங்க தருகிறோம் அழைக்கும் சீனா – தப்பி ஓடும் இலங்கை

கடன் வேணுமா வாங்க தருகிறோம் அழைக்கும் சீனா – தப்பி ஓடும் இலங்கை

சீனாவிடம் அதிக வட்டிக்கு கடனை பெற்றே இலங்கை அதனை மீள் செலுத்த முடியா

நிலையில் சிக்கி தவித்து வருகிறது .அழகான பாலங்கள் ,வீதிகள் என இலங்கையின் யுத்த பூமி எங்கும் காட்சி அளிக்கிறது

அந்த அபிவிருத்திக்கு பெற்ற கடனை மீள வழங்க முடியா நிலையில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது

இவ்வேளை இலங்கையின் நிலையினை புரிந்து மேலும் கடன்களை அள்ளி வழங்க

காத்திருக்கிறோம் ஓடிவாங்க என சீனா அழைக்கிறது ,ஆனால் இலங்கையோ வாங்கிட தயக்கம் காட்டுகிறது

இப்போது கழுத்தளவு மூழ்கியுள்ளது ,மேலும் வாங்கினால் அப்டியே மூழ்கிவிடுவார்கள் ,அந்த சாவு மணி அடிக்கவே சீனா அழைக்கிறது

    Posted in Uncategorized

    வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் பலரை காணவில்லை

    வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் பலரை காணவில்லை

    தெற்கு ஆப்பிரிக்காவின் Durban and Umlazi பகுதிகளில் இடம்பெற்ற கடும் வெள்ள

    பெருக்கில் சிக்கி இதுவரை இருபது பேர் பலியாகியுள்ளனர்

    மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் ,வீடுகள்,வாகனங்கள் என்பன நீரில் அடித்து

    செல்ல பட்டுள்ளன
    தொடர்ந்து மீட்பு பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது

      Posted in Uncategorized

      மக்களுக்குள் வெடித்து சிதறிய குண்டு – பலர் மரணம்

      மக்களுக்குள் வெடித்து சிதறிய குண்டு – பலர் மரணம்

      தெற்கு சிரியாவின் அலெப்போ பகுதியில் மக்களால் நெரிசல் மிகுந்த பகுதியில்

      இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில்


      சிக்கி பலர் மாரணமாகியும் ,காயமடைந்துள்ளனர்

      இந்த குண்டு தாக்குதலை நடத்திவர்கள் யார் என்பது தெரிவிக்க படவில்லை

        Posted in Uncategorized

        இந்தியாவுடன் சிறந்த உறவை பாகிஸ்தான் விரும்புகிறது- புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப்

        இந்தியாவுடன் சிறந்த உறவை பாகிஸ்தான் விரும்புகிறது- புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப்

        பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஷபாஸ் ஷெரீப் இரு நாடுகள் இடையே உள்ள பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது இன்றியமையாதது என தெரிவித்துள்ளார்.

        இந்தியாவுடன் சிறந்த உறவை பாகிஸ்தான் விரும்புகிறது- புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தகவல்

        பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதால், இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதை அடுத்து, புதிய பிரதமராக

        தேர்வு செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவரான ஷபாஷ் செரீப் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

        அவருக்கு பிரதமர் மோடி தமது டுவிட்டர் பதிவின் மூலம் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதம் இல்லாத அமைதி மற்றும்

        ஸ்திரத்தன்மையை இந்தியா விரும்புகிறது. இதன்மூலம் நமது வளர்ச்சி மற்றும் சவால்களில் கவனம் செலுத்தி, நமது மக்களின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

        பிரதமர் மோடியின் வாழத்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஷபாஷ் செரீப், இந்தியாவுடன் சிறந்த உறவை பாகிஸ்தான் விரும்புகிறது என்று தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

        இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளை பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது இன்றியமையாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

        பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் பாகிஸ்தானின் தியாகங்கள் நன்கு அறியப்பட்டவை. அமைதியைப் பாதுகாப்போம் மற்றும் நமது மக்களின் சமூக-

        பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவோம்,
        என்று பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷபாஸ் செரீப் கூறியுள்ளார்.

          Posted in Uncategorized

          உலகில் யாராலும் ரஷியாவை தனிமைப்படுத்த முடியாது-புதின்

          உலகில் யாராலும் ரஷியாவை தனிமைப்படுத்த முடியாது: அதிபர் புதின்

          உக்ரைன் மீது ரஷியா 49-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது போர்

          தொடுத்த ரஷியாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை உலக நாடுகள் பலவும் விதித்துள்ளன.

          ரஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வேஸ்டாக்னி விண்வெளி ஏவுதள மையத்திற்கு சென்ற அதிபர் புதின் நிருபர்களைச் சந்தித்தார்.

          அப்போது அவர் கூறுகையில், ரஷியாவை உலகின் எந்த சக்தியாலும் தனிமைப்படுத்த முடியாது. இன்றைய சூழலில், யாரையும் எந்த ஒரு நாடும் தனிமைப்படுத்துவது என்பது

          நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்று.
          எங்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட விரும்பும் நட்பு நாடுகளுடன் நாங்கள் பணியாற்றுவோம் என தெரிவித்தார்.

          Posted in சினிமா

          உடையில் கவர்ச்சி.. இணையத்தை கலக்கும் ராய் லட்சுமி

          உடையில் கவர்ச்சி.. இணையத்தை கலக்கும் ராய் லட்சுமி

          நடிகை ராய் லட்சுமி கருப்பு உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

          கருப்பு உடையில் கவர்ச்சி.. இணையத்தை கலக்கும் ராய் லட்சுமி
          ராய் லட்சுமி


          தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

          அதன்பிறகு ‘கற்க கசடற’, ‘குண்டக்க மண்டக்க’, ‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’, ‘மங்காத்த’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.

          படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர்

          நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது. அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராய்

          லட்சுமி. தற்போது கருப்பு உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார்.
          இந்த புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு இணையத்தை கலக்கி வருகிறது.

            Posted in சினிமா

            இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா

            இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா

            தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா, ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.

            இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. அதிர்ச்சியில் திரையுலகம்
            நயன்தாரா


            நயன்தாரா தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் பல வருடங்களாக கொடி கட்டி பறக்கிறார். அவரது இடத்தை வேறு எந்த நடிகையாலும்

            இதுவரை நெருங்க முடியவில்லை. நயன்தாரா தனித்தும், பிற கதாநாயகர்களுடன் இணைந்தும் நடித்துள்ள படங்கள் வசூலிலும் சக்கை போடு போடுகின்றன. இதனால்,

            நயன்தாராவின் மார்க்கெட் படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு வரை அவரது சம்பளம் அதிகபட்சம் ரூ.3 கோடி என்று இருந்தது. பின்னர் அது ரூ.5 கோடியாக உயர்ந்தது.

            இந்நிலையில், தற்போது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்திவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி சக நடிகைகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அகமது

            இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்குத்தான் அவர் ரூ.10 கோடி கேட்டதாக கூறப்படுகிறது.

            படத்தில் நடிக்க நயன்தாரா 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், அதற்கே இவ்வளவு சம்பளம் என்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

            ஆனாலும், படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே, தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியும்,
            நயன்தாராவும் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

              Posted in Uncategorized உலக செய்திகள்

              உலக பணக்காரர்கள் வரிசையில் கவுதம் அதானி 6-வது இடம்

              உலக பணக்காரர்கள் வரிசையில் கவுதம் அதானி 6-வது இடம்

              கவுதம் அதானியின் சொத்து தற்போது கூகுள் நிறுவனத்தை சேர்ந்த லேரி பேஜ் மற்றும் செர்ஜிபிரின் ஆகியோரை விட அதிகமாக உள்ளது.

              உலக பணக்காரர்கள் வரிசையில் கவுதம் அதானி 6-வது இடம்
              கவுதம் அதானி

              உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி இருக்கிறார். கடந்த ஆண்டில் அதிகமாக சொத்து சேர்த்த வகையில் அவர் மிகப்பெரிய லாபம் அடைந்தார்.

              கவுதம் அதானி கடந்த ஆண்டே ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். அவர் ரிலையன்ஸ் குழும நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவருமான முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளினார்.

              இந்த நிலையில் உலக பணக்காரர்கள் வரிசையில் பட்டியலில் கவுதம் அதானி 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். போர்ப்ஸ் வெளியிட்ட தகவல்படி அவர் அமெரிக்காவின் சாப்ட்வேர் சக்கரவர்த்தி லேரி எலிசனை முந்தினார்.

              கவுதம் அதானியின் சொத்து நேற்று (ஏப்ரல் 11) ஒரே நாளில் ரூ.68 ஆயிரம் கோடி உயர்ந்து உள்ளது. அதன் காரணமாக அவர் உலக பணக்காரர்களின் வரிசையில் 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

              கவுதம் அதானியின் சொத்து தற்போது கூகுள் நிறுவனத்தை சேர்ந்த லேரி பேஜ் மற்றும் செர்ஜிபிரின் ஆகியோரை விட அதிகமாக உள்ளது.

              நேற்றைய வர்த்தகம் முடிவில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.9.27 லட்சம் கோடியாகும். இது முகேஷ்அம்பானியின் சொத்தைவிட ரூ.1.67 லட்சம் கோடி

              அதிகமாகும். 2 வாரத்தில் இருவருக்கும் இடையே உள்ள சொத்து மதிப்பு வித்தியாசம் அதிகமாகி உள்ளது. கவுதம் அதானியின் 7 நிறுவனத்தின் பங்குகளின் விலையால் அவரது சொத்து மதிப்பும் அதிகரித்து உள்ளது.

              அதானி குழுமத்தின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜியின் பங்குகள் விலை 20 சதவீதம் அதிகரித்து உள்ளது.
              இதனால் தான் ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

              Posted in உலக செய்திகள்

              வங்கி கடன் மோசடி- நிரவ் மோடி கூட்டாளி எகிப்து நாட்டில் கைது

              வங்கி கடன் மோசடி- நிரவ் மோடி கூட்டாளி எகிப்து நாட்டில் கைது

              நிரவ் மோடியின் பெரும்பாலான பண பரிவர்த்தனைகளை சுபாஷ்சங்கர்தான் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை மும்பை அழைத்து வந்துள்ளனர்.

              வங்கி கடன் மோசடி- நிரவ் மோடி கூட்டாளி எகிப்து நாட்டில் கைது
              சுபாஷ் சங்கர்

              இந்தியாவில் பிரபல வைர வியாபாரியாக இருந்தவர் நிரவ்மோடி. இவருக்கு நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க, வைர நகை கடைகள் இருந்தன.

              இவர் தனது தொழிலை மேம்படுத்துவதற்காக பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி இருந்தார். பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று இருந்தார்.

              சுமார் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி இருந்த அவர் பாதி பணத்தை வங்கிகளுக்கு திருப்பி செலுத்தவில்லை. 13 ஆயிரத்து 578 கோடி ரூபாய் அவர் கடன் மோசடி செய்ததாக வங்கிகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

              இதை அறிந்ததும் நிரவ் மோடியும் அவரது குடும்பத்தினரும் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். நிரவ் மோடி லண்டனில்

              தஞ்சம் அடைந்தார். அவரை அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது.

              நிரவ் மோடியின் சொத்துக்களை ஏலம் விட்டு அந்த பணம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. முழுமையாக பணத்தை மீட்பதற்காக அவரது கூட்டாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டனர்.

              இந்த நிலையில் நிரவ் மோடியின் மிக முக்கிய நெருங்கிய கூட்டாளி சுபாஷ்சங்கர் எகிப்து நாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது

              நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று அவரை எகிப்து தலைநகர் கெய்ரோவில் கைது செய்தனர்.

              நிரவ் மோடியின் பெரும்பாலான பண பரிவர்த்தனைகளை சுபாஷ்சங்கர்தான் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ.

              அதிகாரிகள் அவரை மும்பை அழைத்து வந்துள்ளனர். நிரவ் மோடி வழக்கில் சுபாஷ்சங்கர் கைதானது மிக பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

              மும்பை அழைத்து வரப்பட்டுள்ள சுபாஷ்சங்கர் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அதன் பிறகு அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து

              விசாரணை நடத்துவார்கள். இதன் மூலம் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

              நிரவ் மோடி நடத்தி வந்த நிறுவனங்களில் பயர்ஸ்டார் டைமண்ட் நிறுவனத்தின் துணை பொது மேலாளராக சுபாஷ்சங்கர் இருந்து வந்தார். வைர நகைகளை

              கோடிக்கணக்கில் கைமாற்றியதில் இவருக்குதான்
              முக்கிய பங்கு இருப்பதாக கருதப்படுகிறது

                Posted in சினிமா

                மதுப்பழக்கத்தில் பிரபல நடிகை

                மதுப்பழக்கத்தில் பிரபல நடிகை

                ஆரோக்கியம் உள்ளிட்ட சில விஷயங்களை மனதில் வைத்து, மதுப்பழக்கத்தை நிறுத்திவிட்டதாக பிரபல மலையாள நடிகை காயத்ரி சுரேஷ் கூறியுள்ளார்.

                மதுப்பழக்கத்தில் இருந்த பிரபல நடிகை.. வருத்தத்தில் ரசிகர்கள்
                காயத்ரி சுரேஷ்


                பிரபல மலையாள நடிகை காயத்ரி சுரேஷ். இவர் தமிழில் ஜி.வி.பிரகாசுடன் 4-ஜி படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் சகாவு, நாம் சில்ரன்ஸ், ஒரே முகம், ஒரு

                மெக்சிகன் அபரதா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

                இந்நிலையில், தனக்கு மதுப்பழக்கம் இருந்தது என்று வெளிப்படையாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து காயத்ரி சுரேஷ் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு ஒரு காலத்தில் மதுக்குடிக்கும் பழக்கம் இருந்தது. மதுபோதையில் செய்த தவறுகளை மட்டும்

                கேட்காதீர்கள். அதை இப்போது சொல்வதும் சரியல்ல. சுய நினைவுடன் அவற்றை

                செய்யவில்லை. பின்னர் வாழ்க்கை, தொழில், உடல் தோற்றம், ஆரோக்கியம் உள்ளிட்ட சில விஷயங்களை மனதில் வைத்து, மதுப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.

                காயத்ரி சுரேஷ்
                காயத்ரி சுரேஷ்

                என்னுடன் மஹே படத்தில் இணைந்து நடித்த அனீஷ் மேனன் மீது இளம் பெண் பாலியல்

                புகார் தெரிவித்திருப்பது பற்றி கேள்விப்பட்டேன். கேள்விப்படும் விஷயங்கள் அனைத்தும் உண்மை என்று சொல்லிவிட முடியாது’’
                என்றார்.

                  Posted in சினிமா

                  இளையராஜாவை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

                  இளையராஜாவை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

                  இளையராஜாவை நேரில் சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

                  இளையராஜாவை சந்தித்த ஐஸ்வர்யா வைரலாகும் புகைப்படங்கள்


                  ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து

                  இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை.

                  ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன்பின் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி

                  வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றார். ஐஸ்வர்யா ரஜினி விரைவில் ’ ஓ சாதிசால்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தி திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

                  இந்நிலையில் இளையராஜாவை நேரில் சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார். அந்த

                  புகைப்படத்துடன் சில விஷயங்களை குறிப்பிட்டு இளையராஜாவை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.


                  இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                    Posted in Uncategorized

                    கோட்டாவை கடுப்பேற்றிய மைத்திரி – இதுக்கு பேர் தான் ஆப்பு

                    கோட்டாவை கடுப்பேற்றிய மைத்திரி – இதுக்கு பேர் தான் ஆப்பு

                    இலங்கையில் ஆளும் அரசு மக்களின் எதிர்ப்பை சந்தித்து அரியணையை இழக்க

                    வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளனர்

                    இவ்வேளை தனித்து செயல்பட்டு வரும் கட்சிகளில் ஒன்றான மைத்திரியின் சுதந்திர

                    கட்சியினர் ஏற்படுத்த படும் இடைக்கால அரசாங்கத்தில் மகிந்தா குடும்ப

                    உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பங்கேற்கும் பட்ஷத்தில் தாம் அதற்கு ஆதரவு என தெரிவித்துள்ளார்

                    இதனை நிர்க்கரித்துள்ள கோட்டா செம கடுப்பில் உள்ளாராம் ,

                      Posted in Uncategorized

                      காதலி தற்கொலை – மனமுடைந்த காதலனும் தற்கொலை

                      காதலி தற்கொலை – மனமுடைந்த காதலனும் தற்கொலை

                      இலங்கை ஊர் காவல்துறை பகுதியில் சிலநாட்களுக்கு முன்னர் காதலி தற்கொலை

                      செய்துள்ள நிலையில் அதனால் மனமுடைந்த 22 வயது காதலன் தற்கொலை செய்துள்ளார்

                      அதிக மன உளைச்சலில் இருந்த இவர் இந்த தவறான முடிவினை மேற்கொண்டு காதலி

                      சென்ற இடத்திற்கு பயணித்துள்ளார்


                      மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

                        Posted in Uncategorized

                        மைத்திரி கட்சியில் விலைபோனவர் அமைச்சரானார்

                        மைத்திரி கட்சியில் விலைபோனவர் அமைச்சரானார்

                        மைத்திரி கட்சியில் அங்கம் வகித்த சாந்த பண்டார கோட்டாவின் கட்சியில் இணைந்து

                        விவசாய அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்

                        இவருக்கு பேச ப்பட்ட டீலில் அதிக தொகையை பெற்றுக்கொண்டு கட்சி

                        தாவியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                        சீற்றம் கொண்ட மைத்திரி அவரை தமது கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்

                          Posted in Uncategorized

                          கணவன்,மனைவியை வீடுபுகுந்து வெட்டி கொன்ற கும்பல்

                          கணவன்,மனைவியை வீடுபுகுந்து வெட்டி கொன்ற கும்பல்

                          இலங்கை இரத்தினபுரி பகுதியில் நள்ளிரவு வீடு புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த 82

                          வயது கணவன் மற்றும் 75 வயதுடைய மனைவி ஆகியோரை வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றுள்ளது

                          இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்கள் மீட்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்க

                          பட்டுள்ளன ,இந்த கொலைக்கான காரணம் தெரியவரவில்லை ,


                          சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நிகழ்த்த பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

                            Posted in Uncategorized

                            யாழில் வீடு புகுந்து ஆட்டோவை எரித்த ரவுடி கும்பல்

                            யாழில் வீடு புகுந்து ஆட்டோவை எரித்த ரவுடி கும்பல்

                            யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் ரவுடிகள் கும்பல் வீடு புகுந்த்து தரித்து நின்ற ஆட்டோ ஒன்றினை எரித்து
                            சென்றுள்ளனர்

                            இந்த தாக்குதலை நடத்திய ஆறுபேர் கொண்ட வன்முறை ரவுடி கும்பல் அங்கிருந்து

                            தப்பி சென்றுள்ளது
                            மானிப்பாய் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

                            கொதித்துள்ள மக்கள் இவ்வாறான ரவுடிகளை மடக்கி பிடித்து கட்டி வைத்து அடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

                              செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                              Posted in இலங்கை செய்திகள்

                              கோட்டா எதிர்ப்பு பேரணியில் பாட்டு பாடியவர் மரணம்

                              கோட்டா எதிர்ப்பு பேரணியில் பாட்டு பாடியவர் மரணம்

                              கோட்டாவின் ஆட்சிக்கு எதிராக கலந்து கொண்டு பேரணியில் பாட்டு பாடி வந்த


                              ஷிராஸ் யூனுஸ் என்ற பாடகர் திடீர் மாரடைப்பால பலியாகியுள்ளார்

                              இந்த சம்பவம் அங்கு கூடிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                Posted in Uncategorized

                                முக்கிய தாலிபான் இராணுவ தளபதி சுட்டு கொலை

                                முக்கிய தாலிபான் இராணுவ தளபதி சுட்டு கொலை

                                ஆப்கான் நாட்டில் ஆட்சியில் அமர்ந்துள்ள தலிபான்கள் படையினரின் முக்கிய

                                தாக்குதல் கட்டளை தளபதி ஒருவர் மர்ம ஆயுத குழுவினரால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்

                                நேர்த்தியான உளவு தகவலின் ஊடாக நடத்த பட்ட தாக்குதலில் இவர் படுகொலை

                                செய்ய பட்டுள்ளதுடன் ,இவரது மெய்ப்பாதுகாவலர் பலரும் படுகாயமடைந்துள்ளனர்

                                இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை உரிமை கோரவில்லை

                                  Posted in உலக செய்திகள்

                                  இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

                                  .
                                  இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

                                  சிரியா நாட்டின் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் நான்கு


                                  ஏவுகணை தாக்குதலை நடத்தின, எனினும் இவர்களினால் ஏவப்பட்ட ஏவுகணைகளை

                                  தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது

                                  சிரியா நாட்டுக்குள் நுழைந்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி

                                  வருகின்றமை குறிப்பிட தக்கது

                                    Posted in உலக செய்திகள்

                                    லண்டன் – முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டை முற்றுகையிட்ட இம்ரான்கான் கட்சி

                                    லண்டன் – முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டை முற்றுகையிட்ட இம்ரான்கான் கட்சி

                                    பாகிஸ்தானில் சுதந்திர போராட்டம் மீண்டும் தொடங்குகிறது என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

                                    லண்டன் – முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டை முற்றுகையிட்ட இம்ரான்கான் கட்சியினர்
                                    நவாஸ் ஷெரீப் வீட்டை முற்றுகையிட்ட இம்ரான்கான் கட்சியினர்

                                    பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக 174 உறுப்பினர்கள்

                                    வாக்களித்தனர். இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கம் செய்யப்பட்டார்.

                                    இதற்கிடையே, அந்நாட்டு புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ‌ஷாபாஸ் ஷெரீப்பை தேர்வு செய்ய எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

                                    இந்நிலையில், இங்கிலாந்தின் லண்டன் நகரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர்

                                    நவாஸ் ஷெரீப்பின் வீட்டை பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் கட்சி தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.

                                    முற்றுகை போராட்டத்தைட் தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது