Tag: ரஷியாவை தனிமைப்படுத்த முடியாது
Posted in Uncategorized
உலகில் யாராலும் ரஷியாவை தனிமைப்படுத்த முடியாது-புதின்
Author: நலன் விரும்பி Published Date: 12/04/2022 Leave a Comment on உலகில் யாராலும் ரஷியாவை தனிமைப்படுத்த முடியாது-புதின்
உலகில் யாராலும் ரஷியாவை தனிமைப்படுத்த முடியாது: அதிபர் புதின்
உக்ரைன் மீது ரஷியா 49-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது போர்
தொடுத்த ரஷியாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை உலக நாடுகள் பலவும் விதித்துள்ளன.
ரஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வேஸ்டாக்னி விண்வெளி ஏவுதள மையத்திற்கு சென்ற அதிபர் புதின் நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ரஷியாவை உலகின் எந்த சக்தியாலும் தனிமைப்படுத்த முடியாது. இன்றைய சூழலில், யாரையும் எந்த ஒரு நாடும் தனிமைப்படுத்துவது என்பது
நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்று.
எங்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட விரும்பும் நட்பு நாடுகளுடன் நாங்கள் பணியாற்றுவோம் என தெரிவித்தார்.
- ஐ.நா.வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் லானா நுசைபேவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா வாக்களித்தன
- அமெரிக்காவுடன் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் தயாராக உள்ளது
- அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது
- குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி
- பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறது












