Posted in சினிமா

விஜய்யுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணித்த அந்த பிரபலங்கள்

நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் சிலரை அழைத்து சென்று சுற்றிக் காட்டியுள்ளார். அதில் பயணித்தவர்கள் குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

விஜய்யுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணித்தது யார் தெரியுமா?


நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வருகின்ற 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்தின் டீசர் மற்றும் டிரைலர்

வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெறும் 3 பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது.

இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசையில்,

சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக் குத்து’ பாடல் யூ-டியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.

விஜய்யுடன் காரில் பயணித்தவர்கள்
விஜய்யுடன் காரில் பயணித்தவர்கள்

இந்த நிலையில் பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் ‘பீஸ்ட்’ படக்குழுவினரை அழைத்துச் சென்றுள்ளார். இயக்குனர் நெல்சன், மனோஜ்,

அபர்ணா தாஸ், பூஜா ஹெக்டே, சதீஷ் ஆகியோர் விஜய்யின் காரில் ஜாலியாக பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது

    Posted in சினிமா

    இயக்குனரால் கர்ப்பம்.. கருவை கலைத்த பிரபல நடிகை.

    முன்னணி இயக்குனருடன் கொண்ட உறவால், கர்ப்பம் ஏற்பட்டு பின் கருக்கலைப்பு செய்தேன் என பிரபல நடிகை தெரிவித்து உள்ளார்.

    முன்னணி இயக்குனரால் கர்ப்பம்.. கருவை கலைத்த பிரபல நடிகை
    மந்தனா கரீமி


    இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகை மந்தனா கரீமி. பாக் ஜானி, ராய் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்து உள்ளார். ஈரான் நாட்டை சேர்ந்தவரான

    மந்தனா, இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில், 2வது இடமும் பிடித்து உள்ளார்.

    மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கவுரவ் குப்தா என்பவரை 2016ம் ஆண்டு ஜூலையில் சந்தித்து உள்ளார். பின்னர் இருவரும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். எனினும், இந்த திருமணம் ஒரு சில

    மாதங்களே நீடித்தன. அதன்பின் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில், நடிகை கங்கனா ரணாவத் நடத்தும் லாக்-அப் என்ற நிகழ்ச்சியில் கரீமி பங்கேற்று உள்ளார்.

    அதில், சமீபத்திய எபிசோட் ஒன்றில் கரீமியிடம் உங்களிடமுள்ள ஒரு ரகசியம் பற்றி கூறுங்கள் என கேட்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், வெளியேற்றுதல் சுற்றில் இருந்து தப்பிப்பதற்காக தனது வாழ்க்கையின் மிக பெரிய ரகசியம் ஒன்றை மந்தனா

    வெளியிட்டு உள்ளார். அதற்கு அவர், முன்னணி இயக்குனர் ஒருவருடன் தனக்கு ஏற்பட்ட ரகசிய உறவு பற்றி வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறும்போது, எங்கள் இருவருக்கும்

    இடையேயான உறவு ஒரு சில மாதங்களிலேயே வலுப்பெற்றது. இதனால், என்னுடனேயே வாழ அவர் (இயக்குனர்) திட்டமிட்டார். ஆனால், இதனை வெளியில் யாருக்கும் கூறாமல் ரகசியம் காப்பது என இருவரும் முடிவு செய்தோம்.

    இயக்குனரால் கர்ப்பம்.. கருவை கலைத்த பிரபல நடிகை.

    ஏனெனில், எனது முன்னாள் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக பொறுத்திருந்தேன் என கூறியுள்ளார். இதன்பின் கரீமி கர்ப்பமடைந்து உள்ளார்.

    இதனை தனது காதலரான அந்த இயக்குனரிடம் கூறியுள்ளார். அதனை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த பொறுப்புகளை ஏற்று கொள்ளும் அளவுக்கு

    மனதளவிலும், உணர்வுரீதியிலும் இன்னும் தயாராகவில்லை என மந்தனாவிடம் அவர் கூறியுள்ளார்.

    அவர் தொடர்ந்து உறுதியாக இருந்துள்ளார். இதனால், வேறு வழியின்றி மந்தனா கருக்கலைப்பு செய்யும் முடிவுக்கு சென்றுள்ளார். இதனை கூறும்போது, மந்தனா, சக

    போட்டியாளர்கள் மட்டுமின்றி நடிகை கங்கனா ரணாவத்தும் கண்கலங்கினார். அந்த இயக்குனர் பெண் உரிமைகள் பற்றி பேசுபவர். பலருக்கு கடவுளாக இருப்பவர் என்றும் மந்தனா பேசும்போது கூறியுள்ளார்

      Posted in இலங்கை செய்திகள்

      யாழில் தாயுடன் சென்ற மகன் – லொறி சக்கரத்தில் நசிந்து மரணம்

      யாழில் தாயுடன் சென்ற மகன் – லொறி சக்கரத்தில் நசிந்து மரணம்

      யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் தாயுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த

      ஏழுவயது சிறுவன் ஒருவன் வேகமாக வந்த லொறி மோதியதில் அதன் சக்கரத்தில்

      நசிந்து பலியாகியுள்ள சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது

      இலங்கையில் வீதி விதிமுறைகளை பின்பற்றாது வாகன ஓட்டிகள் செல்வதால்

      இவ்விதமான விபத்து சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது

        Posted in உலக செய்திகள்

        இரவு விடுதியில் துப்பாக்கி சூடு -இருவர் மரணம் – 10 பேர் காயம்

        இரவு விடுதியில் துப்பாக்கி சூடு -இருவர் மரணம் – 10 பேர் காயம்

        அமெரிக்கா Taboo Nightclub and Lounge, Cedar Rapids பகுதியில் உலா இரவு விடுதியில்

        நடத்தி பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி இருவர் பலியாகினர் ,மேலும் பது பேர்

        படுகாயமடைந்துள்ளனர்


        இந்த சூட்டு சம்பவத்திற்கான கரணம் தெரியவிலை விசாரணைகள் தொடர்ந்து

        இடம்பெற்ற வண்ணம் உள்ளன

          Posted in இலங்கை செய்திகள்

          கட்சியை விட்டு தப்பி ஓடியவர்களுடன் கோட்டா பேச்சு தோல்வி

          கட்சியை விட்டு தப்பி ஓடியவர்களுடன் பேச்சு தோல்வி

          கோட்டா கட்சியில் இருந்து விலகி தனித்து செயல் படும் உறுப்பினர்களுடன்

          இடம்பெற்ற பேச்சுக்களில் இணைக்க பாடு ஏதும் இன்றி முடிவடைந்துள்ளது


          இணைந்து ஆட்சியை முன்னெடுத்து செல்வது தொடர்பாக இடம்பெற்ற பேச்சுக்களில்

          முன்னேற்றம் காணப்படாத நிலையில் கோட்டா நெருக்கடியில் மேலும் சிக்கியுள்ளார்.

            Posted in இலங்கை செய்திகள்

            ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்க எம்பீகளை மனசாட்சிபடி வாக்களிக்க கோர வேண்டும்-மனோ

            ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்க எம்பீகளை மனசாட்சிபடி வாக்களிக்க கோர வேண்டும்

            • மனோ கணேசன் யோசனை

            ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20ம் திருத்தத்தை அகற்றி, பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை மீளப்பெறும் 19ம் திருத்தத்தை உள்வாங்கி,

            ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ம் திருத்தத்தை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவோம். இதற்கான வாக்கெடுப்பில் கட்சி பேதங்களுக்கு அப்பால்

            சென்று நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்களிக்க கோருவோம். 225 எம்பீகளில் மனசாட்சிபடி வாக்களிக்கும் எம்பீகள் யார், மனசாட்சியை மறந்துவிட்டு

            வாக்களிப்பவர்கள் யார் என்பதை அவர்களுக்கு வாக்களித்த மக்களும், வெளியே போராடும் மக்களும் அறிந்துகொள்ளலாம்.

            முதலில் இவரது அதிகாரங்களை பிடுங்க வேண்டும். அதைவிடுத்து இவருக்கு கீழே “காபந்து” அரசு அமைத்தால், அது “கால்பந்து” அரசாகவே அமையும் என தமிழ்

            முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது டுவீட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

            இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

            நம்பிக்கை இல்லா பிரேரணையை விட இதுதான் ஜனாதிபதியை நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப கோரும் கோஷத்தின் அடிப்படை

            இதுதான். எமது கட்சி உட்பட, இந்நாட்டில் எதிரணி அரசியல் கட்சிகள் கோருவது இதைதான். சமூக சிவில் அமைப்புகள் கோருவது இதைதான். வெளியே தெருக்களில் போராடும் மக்கள் கோருவதும் இதைதான்.

            நம்பிக்கை இல்லா பிரேரணையையிலும் கையெழுத்திடுவோம். அதையும் கொண்டு வருவோம். ஆனால், அதைவிட 21ம் திருத்தத்தை கொண்டு பிரதானமாக கொண்டு வருவோம்.

            நம்பிக்கை இல்லா பிரேரணை என்பது ஜனாதிபதியின் அரசாங்கத்துக்கு எதிரானது. அது வெற்றி பெற்றால், புதிய அமைச்சரவை இந்த ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவின் கீழேயே அமைய வேண்டும். அதை செய்ய முடியாது. அது நடைமுறை சாத்தியமற்றது.

            ஏனெனில், ஜனாதிபதியின் சொந்த பொதுஜன முன்னணி கட்சி அமைச்சரவையே இவருக்கு கீழே செயற்பட முடியாவிட்டால், எதிரணியும் பங்கு பற்றும் காபந்து

            அரசாங்கம் எப்படி இவருக்கு கீழே செயற்பட முடியும்? அப்படியானால், அது “காபந்து” அரசாங்கமாக இருக்காது, “கால்பந்து” அரசாங்கமாகவே இருக்கும்.

            ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ம் திருத்தத்தை, ஆதரிக்காமல், தமது மனசாட்சியை மறந்துவிட்டு பாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களிக்கும் எம்பீகளை

            அவர்களுக்கு வாக்களித்த மக்கள் அடையாளம் கண்டு கொள்ளலாம். வெளியே போராடும் மக்களும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

            இந்த ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச பதவி விலகி வீட்டுக்கு போக வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த இலங்கை மக்களின் கோரிக்கை. ஆகவே அவர் வீட்டுக்கு

            போகும் போது, 21ம் திருத்தத்தை, தமது மனசாட்சியை மறந்துவிட்டு எதிர்த்து வாக்களிக்கும் எம்பீகளையும் அவருடன் துணைக்கு அனுப்பி வைக்கலாம்.

            Posted in இலங்கை செய்திகள்

            மகிந்த மக்களுக்கு விசேட உரை ஒன்று ஆற்றவுள்ளாராம்

            மகிந்த மக்களுக்கு விசேட உரை ஒன்று ஆற்றவுள்ளாராம்

            இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும் நெருக்கடியில் சிக்கி


            தவித்துள்ள நிலையில் சில நாட்களில் மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்ற உள்ளார்

            என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

            இவரது இந்த உரையி பின்னர் மக்கள் மேலும் கொதித்து எழுவார்கள் என எதிர் பார்க்க படுகிறது

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் எகிறிய டாலரின் பெறுமதி 330 ரூபாவாக அதிகரிப்பு

              இலங்கையில் எகிறிய டாலரின் பெறுமதி 330 ரூபாவாக அதிகரிப்பு

              இலங்கையில் ஏற்பட்டுள்ள நிகழ்கால பொருளாதார நெருக்கடியில் சிக்கி நாடு பெரும் சீரழிவை சந்தித்துள்ளது

              இவ்வேளை ஒரு அமெரிக்கா டாலரின் விற்பனை விகிதம் 330 ரூபாவாக அதிகரித்துள்ளது


              இதுவே 500 ரூபாவை எட்டும் என் ஏதிர்பார்க்க படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                டீசலுக்கு வரிசையில் காத்திருந்தவர் மரணம்

                டீசலுக்கு வரிசையில் காத்திருந்தவர் மரணம்

                இலங்கையில் எரிபொருள் நிலையம் ஒன்றில் நீண்ட வரிசையில் ஒரு மணிநேரமாக காத்திருந்த
                நபர் ஒருவர் மரணமாகியுள்ளார்

                இவருடன் இதுவரை நான்கு பேர் இவ்விதம் மரணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  ராஜபக்ஸ குடும்பத்திற்கு தயாராகும் சிறை – அரங்கேறும் தலைக்கீழ் சம்பவங்கள்

                  ராஜபக்ஸ குடும்பத்திற்கு தயாராகும் சிறை – அரங்கேறும் தலைக்கீழ் சம்பவங்கள்

                  இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி ராஜபக்ஸ குடும்பம் தனி சிங்கள மக்கள் வாக்குகளை பெற்று அரியணையில் எறியது ,அந்த திமிரோடு தனது மிதவாத போக்கில் செயல் பட்டது ,


                  எதிர்வரும் ஐம்பது ஆண்டுகள் தாமே இலங்கையில் ஆட்சியில் அமர்வோம் என்ற மாயையில் செயல் பட்டனர்

                  அதற்க்கு சீனா ஆள குழிவெட்டி அதற்குள் தள்ளி விட்டது ,பவுத்த பீடம் ,பவுத்த மதம்

                  என்ற தோரணையில் மொட்டை தலைகளின் முடியில் தொங்கியபடி , கூடி மகிழ்ந்த மகிந்தா ஆளும் அரசுகளுக்கு இன்று பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது

                  உலகை தனது குடையின் கீழ் கொண்டுவந்து ,தனது சர்வாதிகாரத்தை காண்பித்து

                  தானே உலகின் முதல் வல்லரசாக திகழ சீனா திட்டம் போட்டு காட்சிதமாக காய்களை நகர்த்தி வருகிறது

                  2050 ஆண்டு சீனாவே உலகின் வல்லரசாக திகழும் என தெரிவிக்க படும் நிலையில் அதற்கான முழு வீச்சில் சீனா செயல் பட்டு வருகிறது .


                  இப்போது நாடுகளின் ஆட்சி கவிழ்ப்பிற்கு பணத்தை வீசி கவிழ்த்து வருகிறது

                  இவ்விதம் ,பாகிஸ்தான் ,நையீரியா,இலங்கை என இதன் செயல் பாடுகள் விரிந்து செல்கிறது
                  இப்போது கம்போடியா,வியட்நாமும் இதில் சிக்கியுள்ளன

                  விரைவில் அங்கும் இந்த ஆட்சி கவிழ்ப்புக்கள் அரங்கேற போகிறது ,மேலும் இவர்கள் அடித்த மெகா கொள்ளை சம்பவங்கள் தொடராக அவிழ்த்து விட படவுள்ளன

                  அவ்விதம் இவர்கள் கொள்ளைகள் தொடராக வெளிவரும் பொழுது மேலும் இலங்கை

                  மக்கள் கொதித்து எழுந்து இவர்களுக்கு எதிராக விளக்குமாறுடன் , இவர்களை துரத்தும் நாள் விரைவில் எழும் என்பது உள்ளக கசிவுகளாக உள்ளன

                  அவ்விதம் நோக்கின் நாட்டை விட்டு வெளியேற முடியாத படி நீதிம்னற கட்டளை பிறப்பிக்க பட்டு ,இவர்கள் லஞ்ச ஊழல் மோசடிகள் விசாரணைக்கு உள்ளாக்க பட்டு,

                  மகிந்தா குடும்ப ஆட்சி மீள் இலங்கையில்
                  காலூன்றா வண்ணம் அமர போகும் ஆட்சிகள் ஏற்படுத்தும் என அடித்து கூறலாம்

                  இப்பொது புலிகளும் இல்லை,அவர்களை அழித்த மகிந்த குடும்பமும் இல்லை என்கின்ற வரலாற்று சரிதம் மீள எழுத பட போகிறது

                  இது வரும் ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடமாகவும் ,தமிழர்களை எப்பொழுதும் பகைத்து

                  கொள்ள முடியா நிலையில் முதிர்ச்சியான அரசியல் நிலையோடு செல்ல வேண்டிய வரலாற்று கற்றலை புகட்டியுள்ளது ,

                  வரும் காலம் இலங்கையில் தலைகீழ் மாற்றங்கள் அரங்கேற போகிறது ,காத்திருந்து பார்ப்போம் அந்த காட்சிகளின் அகோரத்தை.

                  • வன்னி மைந்தன்-
                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் புகுந்து விளையாடும் இந்தியா சீனா

                    இலங்கையில் புகுந்து விளையாடும் இந்தியா சீனா

                    இலங்கைக்கு பாரிய கடனை வழங்கி அந்த ஆட்சியினை கவிழ்த்துள்ள சீனா அரசானது

                    தற்போது ஏற்படடுள்ள நெருக்கடி நிலையினை அடுத்து மைத்திரி ,சஜித்

                    உள்ளிட்டவர்களை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளனர்

                    இதில் இவ்ரகளுக்குரிய தேர்தல் செலவு மற்றும் முக்கிய ஆட்சி அமைப்பு தொடர்பான விடயங்கள் பேச பட்டுள்ளன

                    சீனாவின் இந்தஅவசர சந்திப்பும் கலந்துரையாடலும் இந்தியாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                    அதற்கு பதிலாக இந்தியா தமக்கு சார்பான ஒருவர் அரியணையில் ஏறுவதை அது விரும்புகிறது ,அதற்கு ஏற்றது போல


                    இந்தியா டில்லி மையம் காய்களை நகர்த்தி செல்கிறது ,
                    இவர்களது ஆதரவு சஜித் பக்கமே சாய்ந்துள்ளது

                    கடந்த கால மைத்திரி ,ரணில் இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் நகர்வில் ஈடுபட்டனர் ஆதலால் சஜித் வருவதை அவர்கள் விரும்புகின்றனர்

                    இதற்கான பச்சை சமிக்கை இந்தியாவால் வழங்க பட்டுள்ளது ,அதற்கு எதிராக சீன செயல் படுகிறது


                    இந்த பிராந்திய அரசியல் சதுரங்க விளையாட்டில் வெல்ல போவது இந்தியாவா சீனாவா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்

                    • வன்னி மைந்தன் –
                      Posted in உலக செய்திகள்

                      லண்டனில் – ஆடையில் தீப்பிடித்து எரிந்த வீடு

                      லண்டனில் – ஆடையில் தீப்பிடித்து எரிந்த வீடு

                      கடந்த ,தினம் லண்டன் Landon Road, Herne Bay பகுதியில் ஆடம்பர வீடு ஒன்று தீயில்

                      எரிந்து சாம்பலானது ,இந்த தீ பற்றால் அங்கிருந்த ஆடையில் தீ பற்றிய நிலையில்

                      அவை வீடு முழுவதும் பரவி எரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                      இந்த புகை மணடலத்தில் சிக்கி நிறைமாத கர்ப்பிணி மூச்சு திணறலுக்குள் உள்ளாகியுள்ளார் ,


                      குழந்தை பிரசவிக்க எட்டு வாரங்கள் உள்ள நிலையில் அணைத்து உடமைகளும் தீயில் எரிந்து அழிந்துள்ளது

                      இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,தொடர்ந்து விசாரணைகள்

                      இடம்பெற்ற வண்ணம் உள்ளன
                      தமிழர்களே எச்சரிக்கை

                        Posted in Uncategorized

                        வரும் வராம் கோட்டா ஆட்சி கவிழ்க்க படும்

                        வரும் வராம் கோட்டா ஆட்சி கவிழ்க்க படும்

                        பாகிஸ்தான் நாட்டில் இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்க பட்டது ,அதே போன்று


                        எதிர்வரு வாரம் கோட்டாபய ஆட்சியும் கவிழ்க்க படும் என எதிர் பார்க்க படுகிறது

                        நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில்,பாரளுமன்றில்

                        நம்பிக்கையில்லா பிரேரணை நடத்த பட உள்ளநிலையிலும் பெரும்பான்மை பலத்தை

                        நிரூபிக்க முடியாது கோட்டா சிக்கி தவித்து வருகிறார்

                        இங்கு தோற்கடிக்க பட்டு அவர் ஆட்சி கவிழ்க்க படும் என எதிர்பார்க்க படுகிறது

                          Posted in உலக செய்திகள்

                          சாப்பாட்டு கடைக்குள் புகுந்த கார் – 11 பேர் காயம்

                          சாப்பாட்டு கடைக்குள் புகுந்த கார் – 11 பேர் காயம்

                          அமெரிக்கா Texas பகுதியில் உள்ள நாடமாடும் food truck in Austin, ஒன்றுக்குள் வேகமாக

                          பாயனித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அந்த லொறி கடைக்குள் மோதி சிதறியது


                          இதன் பொழுது அங்கு நின்ற பதினொரு மக்கள் படுகாயமடைந்தனர்

                          காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் ,கார்

                          பலத்த சேதமடைந்துள்ளது குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                          அமெரிக்காவில் இவ்வாறான சம்பவங்கள் சாதாரண நிகழ்வுகளில் ஒன்றாக மாற்றம்

                          பெற்று வருகின்றமை கவனிக்க தக்கது

                            Posted in Uncategorized

                            விலை பேச படும் தலைகள் – கைமாறும் பணப் பெட்டிகள்

                            விலை பேச படும் தலைகள் – கைமாறும் பணப் பெட்டிகள்

                            இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்கு எதிரேகா மக்கள் போராடி வரும் நிலையில் அந்த கட்சி கவிழும் நிலையில் உள்ளது

                            அந்த அரசில் அங்கம் வகித்த அமைசர்கள் ,எம்பிக்கள் என பலர் தப்பி ஓடிய வண்ணம்

                            உள்ளனர் ,இவர்களை தூக்கி வீசியது போன்று தம்மையும் மக்கள் எறிந்துவிடுவார்கள்

                            என்ற அச்சம் அவர்கள் மத்தியில் ,ஆதலால் புதிய அரசுடன் இணைந்து செயல் பட இவர்கள் திட்டம் போட்டுள்ளனர்

                            அதனால் தமது கட்சிகளில் ஈர்த்திட கோட்டா எம்பிக்கள்,அமைச்சர்களுக்கு தற்போது விலை பேச பட்டு வருகிறது


                            இந்த டீல் ஒன்று தற்போது கொழும்பில் தடல் புடலாக நடந்து வருகிற்து ,ஆஆள்பிடித்து

                            கொடுப்பவர்களுக்கு கமிஷன் யாஸ்தியாக வழங்க படுகிறதாம்

                            பார்றா எப்படி எல்லாம் உழைக்கிறாங்க ,அரசியல் வியபாரம் எப்பொழுதுமே சூப்பர் தாங்க

                              Posted in Uncategorized

                              யாழில் வீடு புகுந்து மக்களை விரட்டிய நாக பாம்பு – வீடியோ

                              யாழில் வீடு புகுந்து மக்களை விரட்டிய நாக பாம்பு – வீடியோ

                              இலங்கை யாழ் ,உசன் பகுதியில் தமிழர் வீடு ஒன்றுக்குள் நாக பாம்பு ஒன்று


                              யாரும் வரவேற்க்கமால் நுழைந்தது

                              இந்த அழையா விருந்தாளியை கண்ணுற்று வீட்டுக்காரர் அலறி ஓடினர் ,வாசலில்

                              இருந்து நாய் குரல் உயர்த்த அங்கு பெரும் கலவரமே இடம்பெற்றது

                              எனினும் வீடு வந்த விருந்தினர் யாவரையும் நலம் விசாரித்து வந்த வழி நோக்கி சென்று விட்டாராம் ,


                              மீள இரவு வருவாரா என்ற பீதியில் அவர்கள்

                              ஆனால் குசும்பர்கள் சிலரோ கோட்டா வீடு செல்ல வேண்டிய நாகம் வீடு மாறி வந்து விட்டதாக


                              வெடி கொளுத்தி போட்டனர்
                              பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது உண்மை தான் போல

                              ஆமா எதுக்கு வந்தாரு ..? சொல்லவே இல்லை,

                                Posted in இலங்கை செய்திகள்

                                பதவி விலக இருந்தார் மகிந்தாவாம் – அடித்து விடும் ஆளும் அடிமைகள்

                                பதவி விலக இருந்தார் மகிந்தாவாம் – அடித்து விடும் ஆளும் அடிமைகள்

                                இலங்கையில் ஆளும் அமைச்சர்கள் ஒரே நாளில் பதவிவிலகினர் ,அவ்வேளை பிரதமர்

                                மகிந்தாவும் விலகிட தயராக இருந்தாராம்

                                ஆனால் அவரது அந்த பதவி விலகலை இரு அமைச்சர்கள் தடுத்து விட்டதாக அவரது

                                ஆளும் விசுவாச அடிமைகள்
                                புது கதை ஒன்றை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்

                                மக்களின் கோரிக்கைக்கு மதிப்புளிக்காது பதவி விலக மறுத்து, ஜனாதிபதியாக

                                விளங்கிய ஒருவர் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்து சுகபோக வாழ்கை அனுபவித்து வரும்

                                நிலையில் ,கடும் பாடு பட்டு உட்க்கார்ந்த ஆசனத்தை விட்டு போகவா போகிறார்

                                என்பதை கூட புரியாது அவரது விசுவாச அடிமைகளும் ,அதன் சார்பு ஊடகங்களும் செய்திகளை கக்கிய வண்ணம் உள்ளன

                                ஏதோ ஒண்ணு நடக்குது நடக்கட்டும் என சீமான் பாணியில் சொல்லிட்டு போகவேண்டியது ,தான் போங்க

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  உல்லாச பயணிகள் இலங்கை வர அச்சம் – முதுகுடைந்த பொருளாதாரம்

                                  உல்லாச பயணிகள் இலங்கை வர அச்சம் – முதுகுடைந்த பொருளாதாரம்

                                  இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக அங்கு எதுவும்

                                  இடம்பெறலாம் என்ற நிலையில் உலக நாடுகளில் இருந்து படை எடுக்கும் உல்லாச பயணிகள் இலங்கை வந்திட
                                  தயங்கி வருகின்றனர்

                                  விமான பயணங்கள் இரத்து செய்ய பட்டு விமன நிலையங்கள் மூடப் படலாம் என்ற

                                  செய்திகள் கசிகின்ற காரணத்தினாலும் இந்த உல்லாச பயணம் முடக்க பட்டுள்ளது ,

                                  இந்த மக்கள் வருகை தவிர்ப்பால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ந்து முறிந்துள்ளது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    முடிந்தால் உங்களை பலத்தை பாராளுமன்றில் காட்டுங்கள் – கோட்டா சாவால்

                                    முடிந்தால் உங்களை பலத்தை பாராளுமன்றில் காட்டுங்கள் – கோட்டா சாவால்

                                    இலங்கை பாரளுமன்றம் நாளை கூடுகிறது ,இதன் போது ஆட்சி அமைக்க 113 பேர்

                                    ஆதரவை காண்பித்து பாருங்கள் என கோட்டா சவால் விட்டுளளார்

                                    இதுவே பெரும் பின்னடைவை எதிர்க்கட்சிகளுக்கு தருவிக்கும் என்பது அவர் வாதம் ,கணிப்பு

                                    ஆனால் இதனை முறியடித்து கோட்டாவை வீட்டுக்கு அனுப்பும் மந்திராலோசனைகள் இடம் பெற்ற வண்ண உள்ளன

                                    நாளை வாழ்வா சாவா என்ற போராட்டம் கோத்த பாயாவுக்கு நடக்க போகிறது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      தமிழகத்திற்கு படகு மூலம் தப்பி சென்ற 39 தமிழர்கள்

                                      தமிழகத்திற்கு படகு மூலம் தப்பி சென்ற 39 தமிழர்கள்

                                      இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடி காரணமாக மன்னார் ஊடாக

                                      ஐந்து குடும்பங்களை சேர்ந்த பத்தொன்பது பேர் தமிழகம் சென்றுள்ளனர்

                                      இவ்வாறு சென்றவர்கள் கியூ பிராஞ்சினால் விசாரணைக்கு உட்படுத்த பட்டு முகாமிற்கு

                                      அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

                                      மேலும் வரும் நாட்களில் அதிகளவான தமிழர்கள் தமிழகம் செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது