Author: நலன் விரும்பி
அந்த விளம்பரத்தில் நடித்த நிதி அகர்வால்
அந்த விளம்பரத்தில் நடித்த நிதி அகர்வால்
ஈஸ்வரன், பூமி படத்தில் நடித்து பிரபலமான நடிகை நிதி அகர்வால், தற்போது விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
விளம்பரத்தில் நடித்த நிதி அகர்வால்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
நிதி அகர்வால்
ஈஸ்வரன், பூமி படத்தில் நடித்து பிரபலமான நடிகை நிதி அகர்வால், தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தில்
ஹீரோயினாக நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் ‘ஹரிஹர வீர மல்லு’ படத்திலும் ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்கிறார்.
முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவுக்கு சினிமாவில் வளர்ந்துள்ள நடிகை நிதி
அகர்வால், ஆணுறை விளம்பரமொன்றில் தோன்றி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நிதி அகர்வால்
விளம்பரம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வரும் சூழலில் இதைப்பார்த்த ரசிகர்கள்
பணத்துக்காக இப்படியா செய்யுறது என்று அவருக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ஆபாச கேள்வி… பதிலடி கொடுத்த பிரியா பவானி
ஆபாச கேள்வி… பதிலடி கொடுத்த பிரியா பவானி
பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர், நெட்டிசன் ஒருவர் கேட்ட ஆபாச கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
ஆபாச கேள்வி… பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர்
. இவர் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கிறார்.
வழக்கமா இதுமாதிரியான சூழல்களில் நடிகைகளை கடுப்பேற்றும் படியான கேள்விகளை சிலர் கேட்பதுண்டு.
அந்த வகையில் நெட்டிசன் ஒருவன், உங்களது உள்ளாடை சைஸ் என்ன என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.
பிரியா பவானி சங்கர்
இதற்கு பதிலளித்த பிரியா, “மார்பகங்களை நான் வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கு அது உள்ளது” எனக்கூறி
தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
பிரியா பவானி சங்கரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருது.
உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் ராணுவ உதவி- அமெரிக்கா அறிவிப்பு
உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் ராணுவ உதவி- அமெரிக்கா அறிவிப்பு
ரஷிய போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா ஏற்கனவே வழங்கியுள்ளது.
உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி – அதிபர் ஜோ பைடன் ஒப்புதல்
ரஷியா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுறம் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்மூலம் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள், வெடிபொருட்கள்,
ராக்கெட்டுகள், மருந்துப் பொருட்கள் உள்பட பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்கா வழங்குகிறது
மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷியா
மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷியா
உக்ரைன் மீது ரஷியா 50-வது நாளாக போர் தொடுத்துவருகிறது. ரஷிய தாக்குதலுக்கு
உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
உக்ரைனில் ரஷிய படைகளின் தாக்குதலில் மரியுபோல் நகரம் பெறும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்குள்ள 95 சதவீத கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மரியுபோல்
நகரை கடந்த 6 வாரங்களாக முற்றுகையிட்டு கடுமையான தாக்குதலை நடத்திய ரஷிய படைகள் அந்நகருக்குள் பெருமளவில் முன்னேறியுள்ளது.
இதனால் மரியுபோல் நகரை விரைவில் ரஷியா கைப்பற்றும் நிலை உள்ளது. உக்ரைன் படையினர் எதிர்த்து போராட முடியாத நிலையில் உள்ளனர்.
மரியுபோலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் சரண் அடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
திருமண ஆசை காட்டி காதலியை கற்பழித்த காதலன்
திருமண ஆசை காட்டி காதலியை கற்பழித்த காதலன்
மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவனை கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
திருமண ஆசை காட்டி மாணவியை பலாத்காரம் செய்த மாணவர்- தாயையும் உல்லாசத்துக்கு அழைத்த வக்கிரம்
வேலூர் விருஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மார்க்கபந்து, அரசு பஸ் டிரைவர். இவரது மகன் கோகுல் (வயது 20). இவன் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் இறுதியாண்டு படித்து வந்தார்.
இவருக்கும் திருச்சி நவல்பட்டை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் இடையே கடந்த 2019-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு மலர்ந்தது. பின்னர் அது காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 5-ந்தேதி கோகுல் அந்த மாணவியிடம், தனது பெற்றோர் தனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கின்றனர். ஆகவே
உன்னை பார்ப்பதற்காக திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் அறையில் எடுத்து தங்கி இருப்பதாக தெரிவித்தார். இதனை நம்பிய மாணவியும் பெற்றோருக்கு தெரியாமல் கோகுல் தங்கி இருந்த தனியார் ஓட்டலுக்கு சென்றார்.
பின்னர் மாணவியை பார்த்த மறுகணம் ஏற்கனவே தயாராக வைத்திருந்த தாலியை எடுத்து கோகுல் அவரது கழுத்தில் கட்டினார்.
அதை தொடர்ந்து மாணவியை அவர் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் மாணவிக்கு தெரியாமல் செல்போன் மூலம் ஆபாச வீடியோ எடுத்துள்ளார். அதன்
பின்னர் இருவரும் தங்களின் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். காதலன் தாலி கட்டிய விவகாரத்தை பெற்றோரிடம் மறைத்து மாணவி வழக்கம்போல் பள்ளி சென்று வந்தார்.
இதையடுத்து அடிக்கடி கோகுல் திருச்சி வந்து ஓட்டலுக்கு வரவழைத்து அந்த மாணவியிடம் உல்லாசமாக இருந்துள்ளார். அதனையும் அவருக்கு தெரியாமல் வீடியோ
மற்றும் போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் மாணவியின் தாயாருக்கு அரசல் புரசலாக தெரிந்துள்ளது. ஒருகட்டத்தில் மாணவியின் தாயாரிடமும் கோகுல் பேசி வந்தார்.
இந்த நிலையில் கோகுல் தனது அவசர தேவைக்கு ரூ.10 ஆயிரம் பணம் தேவைப்படுகிறது. உடனே அனுப்பி வையுங்கள் என மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்தார்.
உடனே உனது மகள் என்னுடன் தனிமையில் இருந்த வீடியோ, புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. அதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். மேலும் எல்லை மீறிய கோகுல் புகைப்படத்தை வெளியிடாமல் இருக்க மாணவியின்
தாயாரையும் உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அவர் நேராக நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பின்னர் வழக்கு திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவன் கோகுலை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
செல்போன் பயன்பாட்டால் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடும் மாணவர்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வாழ்வை தொலைக்கும் சம்பவங்கள்
ஆங்காங்கே அரங்கேறி வருவது பெற்றோர்களை கவலை அடைய செய்துள்ளது.
பீஸ்ட் படம் பார்க்க வந்த ரசிகர்கள் மீது தாக்குதல்
பீஸ்ட் படம் பார்க்க வந்த ரசிகர்கள் மீது தாக்குதல்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையரங்கில் மோதல் ஏற்பட்டு ரசிகர்கள் காயம் அடைந்துள்ளனர்.
பீஸ்ட் படம் பார்க்க வந்த ரசிகர்கள் மீது தாக்குதல்
பீஸ்ட்
நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில்
விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனைவராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் இன்று காலை
திரையரங்குகளில் வெளியானது. காலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் கட்அவுட் வைத்து மாலை அணிவித்து பாலபிஷேகம் செய்து மேளம் அடித்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வடுகநாதன் திரையரங்கில் 3 மணி காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் திரைப்படம் பார்க்க வந்திருந்தனர். அப்போது மயிலாடுதுறை, நெய்வெலியில் இருந்து வந்த
நண்பர்களான 8 பேர் விஜய் ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு சிதம்பரம் வந்துள்ளனர். அப்போது அவர்கள் மதுபோதையில் திரையரங்கிற்கு வந்ததாக கூறப்படுகிறது
. அவர்களை தடுத்த திரையரங்கு ஊழியர்கள் மதுபோதையில் வந்த நபர்களிடம் வாக்கு வாத்தத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் காவல்துறையினர் கண்முன்னே ரசிகர்கள் மற்றும்
திரையரங்க ஊழியகர்களுக்கிடையே கடுமையான மோதல் உருவானது. இதில் ரசிகர்களுக்கு மூக்கு மற்றும் வாய் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. காவல்
துறையினர்
கண் முன்னே நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சந்திரிகாவுடன் ,சஜித் முக்கிய பேச்சு – புதிய ஆடு களம் திறப்பு
சந்திரிகாவுடன் ,சஜித் முக்கிய பேச்சு – புதிய ஆடு களம் திறப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் மாமா ஆகியுள்ள மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மாமா ஆனார் விஷால்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்
விஷால்
வீரமே வாகை சூடும் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் தற்போது நடித்து வரும் படம் லத்தி. அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கும் இப்படத்தை ரமணா மற்றும்
நந்தா இணைந்து தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஷால் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அவரின் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி 2019 அன்று விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கிருஷ்ணா – கிருடிஷ் திருமணம்
நடைப்பெற்றது. இவர்களுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை விஷால் அவரின் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது,
இதை விட என்ன கேட்டுவிட முடியும், நான் மாமா ஆகியிருக்கிறேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி. என்னுடைய இளவரசி தங்கை ஐசுவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
புதிய இளவரசியை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இன்ஷா அல்லாஹ் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் உதவி வழங்கும் இந்தியா
இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் உதவி வழங்கும் இந்தியா
இலங்கைக்கு இரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது
இதற்கு அமைவாக இந்த நிதி உதவி வழங்க படவுள்ளது
கடனை வழங்கியே இலங்கையின் பொருளாதாரம் இந்த நிலைக்கு மாறிட காரணமாக விளங்கியது
தற்போதையை நெருக்கடியை நிவர்த்தி செய்திட இலங்கை முன்னெடுக்கும் மீளவும் கடன் பெறும்
நிலை இவ்வாறு நீண்ட கால பொருளாதார நெருக்கடியை தணிக்கும் என கேள்வி எழுப்ப பட்டுள்ளது
கோட்டா ,மகிந்தா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -காலி முகத்திடலில் மக்கள் முழக்கம்
கோட்டா ,மகிந்தா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -காலி முகத்திடலில் மக்கள் முழக்கம்
இலங்கை அளவும் ஜனாதிபதி மகிந்த மற்றும் பிரதமர் மகிந்த சுள்ளிட்டா ராஜபக்ஸ
குடும்பம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகும் வரை தமது போராட்டம் தொடரும் என
அங்குகூடியுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்
மக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து பதவி விலக மறுத்து வரும் கோட்டாவுக்கு
எதிராக நாளுக்கு நாள் மக்கள்
போராட்டம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கை பெண் வெளி நாட்டில் திடீர் மரணம்
இலங்கை பெண் வெளி நாட்டில் திடீர் மரணம்
இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் ஓமான் நாட்டில்
பலியாகியுள்ளார்
அங்கு இவருக்கு ஏற்பட்ட மர்ம நோயினால் பீடிக்க பட்ட நிலையில்
மரணமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
சர்வதேச நான்நய நித்தியதுடன் இலக்கை பேச்சு
சர்வதேச நான்நய நித்தியதுடன் இலக்கை பேச்சு
இலங்கை பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில்
சர்வதேச நாணய நித்தியதுடன் இலங்கை பேச்சில் ஈடுபடுகிறது
நான்கு பில்லியன் டொலர் தேவைப்பாடு உள்ள நிலையில் இந்த பேச்சு இடம்பெற
உள்ளதாக புதிய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்
சந்திரிகாவுடன் ,சஜித் முக்கிய பேச்சு – புதிய ஆடு களம் திறப்பு
சந்திரிகாவுடன் ,சஜித் முக்கிய பேச்சு – புதிய ஆடு களம் திறப்பு
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்போது ஆளும்
அரசுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்
செயல் இழந்த பொருளாதரத்தை மீள கட்டி எழுப்பி அதற்கு தீர்வு காணும் நோக்கில் பேச்சுவராத்தையில் ஈடுபடடார் ,
இதில் சஜித்,சுமந்திரன்,பதியுதீன் உள்ளிட்ட தமிழ் முஸ்லீம் காட்சிகள் பிரதானிகளும் கலந்து கொண்டனர்
கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடு – மக்கள் கொந்தளிப்பு
கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடு – மக்கள் கொந்தளிப்பு
இலங்கையில் ஆளும் கோட்டா அரசு அவர்கள் கொள்ளையடித்த மில்லியன் டொலர்
பணத்தை மீள திருப்பி வழங்க வேண்டும் என சிங்கள தமிழ் முசுலீம் மக்கள்
கோசங்களை எழுப்பியவாறு காலிமுக திடலில் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்
சித்திரை புத்தாண்டு தினத்திலும் மக்கள் அதனை வீடுகளில் நிகழ்த்தாது அதே ஆர்ப்பாட்ட நிகழ்வு இடத்தில்
திரண்டு கொண்டாடி வருகின்றனர் ,கோட்டா வீடு போ என்ற கோசம் வானை பிளந்து மக்கள் போராட்டம் தொடர்கிறது
கோட்டாவை கெட்ட வார்த்தையால் திட்டும் மக்கள் – பதாகை -வீடியோ
கோட்டாவை கெட்ட வார்த்தையால் திட்டும் மக்கள் – பதாகை -வீடியோ
மகிந்த கோட்டாவுக்கு எதிராக தொடரும் போராட்டம் , மகிந்த குடும்பம்

தமிழர் அழிவில் பால் சோறு உண்டவர்கள்; – பட்டினியால் தவிக்கும் அவலம் – மனோ கணேசன்
தமிழர் அழிவில் பால் சோறு உண்டவர்கள்; – பட்டினியால் தவிக்கும் அவலம் – மனோ கணேசன்
கொழும்பு தமிழ் சங்கத்தில் பூங்கோதையின் “நிறமில்லா மனிதர்கள்” நூல் வெளியீட்டில் எனது உரை
கோதாவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் தமிழர்கள் அதிகமாக இல்லையே, ஏன்?.., என இங்கிலாந்தில் இருந்து என் சிங்கள நண்பர் கேட்டார்.
“யோசித்து பார்த்தால் இது, ஒரு நாடு, இரு தேசம்தான்.”
“உணவு, மருந்து… இல்லை என நீங்க போராடுறீங்க… நாங்க உயிர் வாழும் உரிமைக்காக போராடியவங்க.”
“இந்த உணவு, மருந்து… இல்லாம நம்ம தமிழர், யுத்த காலத்தில் வடக்கில், பொருளாதார தடைல வாழ்ந்தாங்க.”
“மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர், யுத்தம் இல்லாமலேயே அப்படி வாழ்றாங்க.”
“ஆனாலும் கொள்கை அடிப்படையில் நாம் கோதாவுக்கு எதிராகத்தான் நிற்கிறோம். வேறு எவரையும் விட அதிகமாக நிற்கிறோம்.”
“நாளைக்கு உணவு, கேஸ், கிடைத்தால் நீங்க போராட்டத்தை கைவிட்டு போயிடுவீங்கன்னு நமக்கு சந்தேகம் இருக்கு.”
“நம்ம மக்கள் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டாங்க. பத்து இலட்சம் பேர் புலம் பெயர்ந்தாங்க.”
“போராளிகள் செத்தார்கள். அது பிரச்சினை இல்லை. அவர்களின் சாவு, வீரச்சாவு.”
“ஆனால் எமது அப்பாவி மக்கள் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டதை மறந்து நீங்கள், பாற்சோறு சாப்பிட்டு கொண்டாடினீர்கள். இது உண்மை.”
“ஆகவே, எங்கள் காயம் பெரிது. அதற்கு நாம் மருந்து போடுகிறோம். காயம் ஆறட்டும்.”
“நாங்கள் உங்கள் போராட்டத்தில் மெதுவாகத்தான் நாம் இணைவோம்.”
“அதுவரைக்கும் நாம் “நிறமில்லா மனிதர்” களாகவே இருப்போம்.”
“இது தலைநகர மாவட்ட எம்பியான எனது நிலைப்பாடு.”
நீர்வீழ்ச்சியில் காணாமல் போன பெண்கள் சடலமாக மீட்பு
நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போன வவுனியாவை சேர்ந்தவர்களின் பெயர் விபரம் வெளியானது – ஒருவரின் சடலம் மாத்திரம் மீட்பு
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்
போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது.
ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு, மலையகத்தில் நுவரெலியாவுக்கு நேற்று (12) சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு சுற்றுலா செல்லும் வழியில், நுவரெலியா இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை
சூழவுள்ள இயற்கை பகுதிகளையும் பார்வையிடுவதற்கு குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.
இதில் ஆறு யுவதிகளும், ஒரு இளைஞனுமாக 7 பேர் கொண்ட குழுவினர் இறம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றபோது நீரில்
அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி
(வயது- 21) ஆகிய இரு யுவதிகளும், வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது – 21) ஆகிய மூவருமே காணாமல் போயுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட யுவதி வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின்
சடலம் கற்பாறை
ஒன்றுக்குள் சிக்கியிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்ட காரர்களுடன் பேச தயார் – மகிந்தா அழைப்பு
ஆர்ப்பாட்ட காரர்களுடன் பேச தயார் – மகிந்தா அழைப்பு
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக காலி முகத்திடலில்
தற்போது ஒன்று கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரதமர் என்ற ரீதியில்
கலந்துரையாடுவதற்கு தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அறிவித்துள்ளார்.
அதற்கமைய, நாடு எதிர்நோக்கியிருக்கும் தற்போதைய சவாலை வெற்றி கொள்வதற்கு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கும் பெறுமதியான கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கலந்துரையாடலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாராக இருந்தால் அவர்களின் பிரதிநிதிகளை கலந்துகொள்ளுமாறு
அழைப்பு விடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கோட்டாவுக்கு ஆப்பு ஆரம்பம் -ஆரம்பித்து வைத்த சஜித்
கோட்டாவுக்கு ஆப்பு ஆரம்பம் -ஆரம்பித்து வைத்த சஜித்
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சஜித் பிரேமதாச மற்றும் அவரது
தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (12) குறித்த பிரேரணைகளில் கைச்சாத்திட்டுள்ளனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணைக்கு மேலதிகமாக, 20 ஆவது திருத்தம் மாற்றப்பட்டு 19
ஆவது திருத்தம் மீண்டும் செயற்படுத்தப்படல் மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகள் மூலம் ஜனநாயகத்தின் அனைத்து வெற்றிகளையும்
அடைவதற்கான போராட்டம் உறுதியான முறையில் மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது தெரிவித்தார்.
புஸ்ஸல்லாவ சரஸ்வதி தேசிய கல்லூரின் 90 வருட ஆண்டு விழா
புஸ்ஸல்லாவ சரஸ்வதி தேசிய கல்லூரின் 90 வருட ஆண்டு விழாவை (1932-2022)
மையமாக கொண்டு கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யபட்ட SPL கிரிகெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 15.04.2022 கம்பளை சாஹிரா மைதானத்தில் நடைபெற உள்ளது.
கல்லூரியில் கல்வி பயின்று பாடசாலையை விட்டு வெளியேரிய சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு இடையில் நடைபெரும் இந்த SPL கிரிகெட் போட்டியில் 15 பேரைக் கொண்ட 29 அணிகள் போட்டிகளில் பங்கு கொள்ள உள்ளன.
இந்த போட்டிக்கான முன் ஏற்பாடுகளில் வெற்றிக் கின்னம் மற்றும் அணிகளுக்கான உத்தியோக பூர்வ சீருடைகள் அறிமுகம் செய்யறும் நிகழ்வு நேற்று (12) கல்லூரின் மண்டபத்தில் அதிபர் தலைமையில் நடைபெற்றுது.
நிகழ்வில் 15.04.2022 காலை கல்லூரியின் ஆலயத்தில் விஷேட பூஜைகள் நடைபெற்று. பாடசாலை மைதானத்தில் ஒன்று கூடலுடன் தொடர்ந்து கம்பளை சாஹிரா மைதானத்தில் போட்டிகள் நடைபெரும்.
போட்டியில் வெற்றிபெரும் அணி இந்த வருடத்திற்கான “SARASWATHIYANS PREMIER LEAGUE “ சாம்பியன் அணியாக தெரிவு செயய்யப்படுவர். தொடர்ந்து இந்த அணி அடுத்த
வருடத்திற்கான SPL கிரிகெட் போட்டியை முன்னின்று நடாத்தி வெற்றி பெரும் அணியிடம் ஒப்படைக்கும். இந்த நிகழ்வு வருடம்தோரும் பாடசாலை வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் நடைபெரும்
மகிந்தவுக்கு சுமந்திரன் ஆலோசனையாம் – நம்பிட்டம் போங்க
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க அரசாங்கமே முன்வர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (12) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு கொந்தளிப்பான அரசியல் நிலமை காணப்படுகின்றது. இந்த நிலை தொடர்பில் ஆராய்வதற்காக எமது கட்சியின் அரசியல் உயர் மட்ட குழு கூடியது. இந்த அரசியல் கொந்தளிப்புக்கு அடிப்படைக் காரணம் பொருளாதார வீழ்ச்சி. எப்படியாக
இலங்கையினுடைய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதற்கான காரணிகள் என்ன? இனி என்ன மாதிரியாக இந்த நிலமை மாறப் போகிறது என்பன குறித்து நீண்ட நேரமாக கருத்து பரிமாற்றம் செய்தோம்.
சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார வீழ்ச்சி ஒன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதனால் பாரிய பக்க விளைவுகளை எமது மக்கள் எதிர் நோக்க வேண்டிய நிலையும் வந்திருக்கிறது. இந்த நிலையில் வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ்
மக்களுடைய பிரதான அரசியல் கட்சியாக நாங்கள் எனன விதமான தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும். மக்களுக்கு என்ன மாதிரியான
ஆலோசனைகளை கொடுக்க வேண்டும். பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலையில் என்ன மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி மிகவும் ஆழமாக பேசியிருந்தோம்.
இந்த பொருளாதார நிலை காரணமாக இன்னும் மோசமான நிலைக்கு நாடு தள்ளப்படுவதற்கான நிலமை தான் காணப்படுகின்றது. அது எமது மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதிக்கப் போகிறது. அவர்களது பொருளாதார நிலமையும்
பாதிக்கப் போகிறது. அதற்கு மாற்று வழிகளாக பல யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. வீட்டுத் தோட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டியுள்ளது. இது எங்களது மக்களுக்கு புதிதான விடயமல்ல. இருப்பினும் மக்கள் தயாராக இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் என்ற வகையில் அவர்களுக்கான
வழிகாட்டுதல்களை நாங்கள் கொடுப்போம். எங்கள் பொருளாதார நிபுணர்கள் ஊடாக அது தொடர்பில் கலந்துரையாடுவதுடன், எமது அடுத்த மட்ட பிரதிநிதிகள்,
செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்துவது எனவும் தீர்மானித்துள்ளோம்.
இம்முறை மே தினம் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் கொண்டாடப்படும். அது தமிழ் தேசிய மே தினமாக நடத்தப்படும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் அதில் கலந்து கொள்வார்கள் என நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.
இன்று அரசாங்கம் ஒன்று இல்லாத நிலமை காணப்படுகின்றது. அமைச்சரவை என நான்கு பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதில் ஒருவர் உடனடியாக இராஜினாமா செய்தார். நிதி அமைச்சர் இல்லாத நாடு என நாங்கள் நினைத்துக்
கொண்டிருந்த போது அவர் பாராளுமன்றத்தில் பேச எழுந்தார். அப்போது நீங்கள் தானா தற்போது நிதி அமைச்சர் என அவரிடம் நான் கேள்வி கேட்டேன். ராஜினாமா செய்து விட்டு, தான் நிதி அமைச்சர் என அவர் சொன்னார். அவ்வாறு அவர் சொன்ன போது அவருடன் கூட இருந்தவர்கள் எல்லாம் வியப்பாக அவரை திரும்பி பார்த்தார்கள். ஏனெனில் இப்பொழுது அவர் தான் நிதி அமைச்சர் என்பது அவர்களுக்கே தெரியாது. இப்படியாக நாடு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக சென்று பேச வேண்டும். கடன் கொடுத்த நாடுகள், அமைப்புக்களுடன் பேச வேண்டும். அமைச்சரா, இல்லையா என்று புரியாத நிலையில் உள்ளவர் தான் போய் பேச போகிறார். சர்வதேச நாணய நிதியமும்,
மற்றைய நாடுகள், அமைப்புக்களும் உதவிக்கு முன் வருவதாக இருந்தால் கூட நாட்டில் ஒரு அரசியல் ஸ்திர தன்மை இல்லாமல் அவர்கள் அந்த செயற்பாட்டுக்குள் வர மாட்டடார்கள். ஆகவே அரசியல் ஸ்திரதன்மையை உருவாக்குவது அத்தியாவசியமான செயற்பாடு. அதற்கு உகந்த வகையில் ஜனாதிபதியோ, பிரதமரோ செயற்படுவதாக தெரியவில்லை.
கடந்த சில நாட்களாக நான் கொழும்பில் இருந்த காரணத்தினால் பல்வேறு தலைவர்களுடன் பல கலந்துரையாடல்களில் பங்குபற்றியிருக்கிறேன். எதிர்வரும் நாட்களில் பிரதான எதிர்கட்சி சில முன்னெடுப்புக்களை செய்ய உள்ளார்கள்.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதிபக்கு எதிரான குற்றப் பத்திரிகை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான சட்டப் பிரேரணை உட்பட பல விடயங்களை முன்னெடுக்கவுள்ளார்கள். இது தொடர்பில் ஆராய்ந்தோம்.
நாட்டில் இளைஞர்களாக சேர்ந்து தன்னெழுச்சியாக நடத்தப்படும் போராட்டங்களில் அரசியல்வாதிகள் இல்லாமலேயே நடத்தப்படுகின்றது. எமது பகுதிகளிலும் சில போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
இந்த மூன்று பிரேரணைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டி வரும். அந்த தீர்மானம் பங்காளிக் கட்சிகளுடன் சேர்ந்து கலந்துரையாடி உத்தியோக பூர்வமான தீர்மானமாக எடுப்போம். எமது மக்கள் மத்தியிலும் இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது. இன்று எமது கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களை எமது கட்சி தலைவர் பங்காளிக் கட்சி தலைவர்களுக்கு தெரியப்படுத்துவார்.
தேசிய அரசாங்கம் வந்தால் நாங்கள் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. அவ்வாறான ஒரு தேவையை இப்போது நாங்கள் கருதவில்லை. இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு மாறி மாறி வந்த அரசாங்கங்களே காரணம். மிகவும் முக்கிய காரணம் 30 வருடத்திற்கு மேலாக ஒரு போரை நடத்தியது. அதற்காக
கண்மூடித்தனமாக எல்லா நாடுகளிடமும் கடன் வாங்கினார்கள். அதற்கு மாறி மாறி வந்த அரசாங்கங்கள் பொறுப்பு. இறுதியாக தவறு ஏற்பட்டது இந்த ஜனாதிபதியின் காலத்தில் தான். இதனை சீர் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களிடத்தில் உள்ளது.
இதில் நாம் பொறுப்பில்லாதவர்களாக செய்யற்பட முடியாது. இதனுடைய தாக்கம் எங்களது மக்களுக்கும் மோசமாக அமையப் போகிறது. அவ்வாறு எமது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நாம் செயற்பட வேண்டும். அதற்கு தேவையான
ஆதரவை இடைக்கால அரசாங்கதற்கு கொடுக்க வேண்டுமாக இருந்தால் அப்போது அதற்கான முடிவை எடுப்போம். ஆனால், அமைச்சரவையில் நாங்கள் சேர்ந்து இயங்க வேண்டிய தேவை ஏற்பட வில்லை.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பாக நான் சந்திக்கவில்லை. அவர் என்னை சந்திக்க கேட்டிருந்தார். அதனடிப்படையில் இரவு அவரை தனியாக சந்தித்து பேசியிருந்தேன். அரசியலமைப்பு தொடர்பாக பல
பிரச்சனைகள் எழுந்துள்ளன. ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு என பல விடயங்கள் பேசப்படுகின்றன. பல கட்சித் தலைவர்கள் என்னுடன் பேசுகிறார்கள். இலவசமாக சட்ட ஆலோசனை பெறுகிறார்கள்
என நான் யோசிகின்றேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் என்னுடன் பேசினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் தொலைபேசியில் காலையில பேசியிருந்தார். வேறு தலைவர்கள் பலர்
பேசுகிறார்கள். சட்ட நிலைப்பாடு தொடர்பாகவும் அறிகிறார்கள். அரசியல் நிலையை ஸத்திரதன்மைக்கு கொண்டு வருதல் தொடர்பாக நடைபெறும் பேச்சுக்களிலும் நான்
கலந்து கொண்டு வருகின்றேன். பிரதமர் மஹிந்த அவர்களுக்கு நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான யோசனையை அரசாங்கமே கொண்டு
வந்தால் சில விடயங்களில்
முன்னேற முடியும் என ஆலோசனை வழங்கியுள்ளேன் எனத் தெரிவித்தார்.








