Posted in சினிமா

இளையராஜாவை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இளையராஜாவை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இளையராஜாவை நேரில் சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இளையராஜாவை சந்தித்த ஐஸ்வர்யா வைரலாகும் புகைப்படங்கள்


ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து

இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை.

ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன்பின் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி

வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றார். ஐஸ்வர்யா ரஜினி விரைவில் ’ ஓ சாதிசால்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தி திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இளையராஜாவை நேரில் சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார். அந்த

புகைப்படத்துடன் சில விஷயங்களை குறிப்பிட்டு இளையராஜாவை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.


இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    Posted in சினிமா

    பாலிவுட்டில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

    .பாலிவுட்டில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

    3, வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக பாலிவுட்டில் களம் இறங்கியுள்ளார்.

    பாலிவுட்டில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்


    ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து

    இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை.

    ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன்பின் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் ஒரு

    திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யா அவருடைய அடுத்த படம் குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    ஐஸ்வர்யா ஹிந்தியில் புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகிவுள்ளார். இவர் இயக்கவிருக்கும் முதல் ஹிந்தி திரைப்படம் இது. இந்த படத்திற்கு ’ ஓ சாதிசால்’ என்று

    பெயரிடப்பட்டுள்ளது, இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு, இதன் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்

    Posted in சினிமா

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிம்பு

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிம்பு

    தனுஷின் பிரிவிற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிம்பு?
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்


    சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும்

    அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற

    திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.

    ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி

    ஐஸ்வர்யா தனது முசாபிர் மியூஸிக் ஆல்பம் வீடியோ வேளைகளை ஆரம்பித்து அது குறித்த அறிவிப்புகளை தொடர்ச்சியாக அறிவித்து வந்தார்.

    இந்நிலையில் ஐஸ்வர்யா அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி வருவதாகவும், அதில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. சினிமா

    துறையில் தனுஷுக்கு நேர்எதிர் போட்டியாளராக கருதப்படும் சிம்புவை வைத்து ஐஸ்வர்யா படம் இயக்கப்போவதாக வரும் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

      Posted in சினிமா

      திரும்பினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

      திரும்பினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

      காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதியில் காதல் ஆல்பத்தை வெளியிட இருந்த நிலையில், கடந்த வாரம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

      நலமுடன் திரும்பினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
      ஐஸ்வர்யா ரஜினிகாந்த்


      ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி காதல் ஆல்பம் ஒன்றை டைரக்ட் செய்து வந்தார்.

      காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதியில் அந்த ஆல்பத்தை வெளியிட இருந்த

      நிலையில், கடந்த வாரம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

      அங்கு அவரை மருத்துவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் படப்பிடிப்பு ஸ்தம்பித்தது.

      14-ந்தேதி ஆல்பம் வெளியாவது சந்தேகமானது. தற்போது அவர் பூரண குணமடைந்து ஐதராபாத்தில் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு திரும்பினார்.

      நாளை அவர் மீண்டும் காதல் ஆல்பம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்பை

      தொடங்க இருக்கிறார். இதனால் 14-ந் தேதி ஐஸ்வர்யா இயக்கும் காதல் ஆல்பம் வெளியாவது உறுதியாகி உள்ளது.