Posted in Uncategorized

இம்ரான்கான் மீது வழக்கு பதிவு

இம்ரான்கான் மீது வழக்கு பதிவு

சவுதி அரேபியாவில் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து நடத்திய போராட்டத்தில் இம்ரான்கானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அவர் கைது செய்யப்படுவார் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது வழக்கு பதிவு
இம்ரான்கான்

பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார்.

இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியா சென்றிருந்தபோது, அங்கு இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை

கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஷபாஸ் ஷெரீப்பை ‘திருடர்’, ‘துரோகி’ என கூறி கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீசார் இம்ரான்கான் மற்றும் முன்னாள் மந்திரிகள் பலர் உள்பட 150 பேர் மீது

வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் இம்ரான்கானுக்கு தொடர்பு இருப்பதற்கான


ஆதாரங்கள் கிடைத்ததால் அவர் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தானின் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.

    Posted in Uncategorized

    தரையிறங்கும்போது குலுங்கிய விமானம்- 13 பேர் காயம்

    தரையிறங்கும்போது குலுங்கிய விமானம்- 13 பேர் காயம்

    விமானம் குலுங்கிய போது கேபினில் வைக்கப்பட்டிருந்த பயணிகளின் பொருட்கள் அவர்களின் தலையிலேயே விழுந்தது.

    தரையிறங்கும்போது குலுங்கிய விமானம்- 13 பேர் காயம்
    ஸ்பைஸ் ஜெட் விமானம்

    நேற்று மாலை மும்பையில் இருந்து மேற்குவங்கம் துர்காப்பூர் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்கும் நிலையில் இருந்தபோது திடீரென குலுங்கியது.

    இதனால் ஏற்பட்ட பாதிப்பில் 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து

    துர்காப்பூர் விமான நிலையத்தில் மருத்துவ ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விமானம் நடுவானில் இருந்தபோது மோசமான வானிலை காரணமாக காற்றில் ஏற்பட்ட மாற்றத்தால் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து விமானத்தின் கேபினில் வைக்கப்பட்டிருந்த பயணிகளின் பொருட்கள் அவர்களின் தலையிலேயே விழுந்ததில் காயம் ஏற்பட்டது.

    அதன்பின் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு பயணிகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.

      Posted in சினிமா

      விவேக் பெயரில் சாலை… வைரலாகும் புகைப்படம்

      விவேக் பெயரில் சாலை… வைரலாகும் புகைப்படம்

      நடிகர் விவேக் நினைவாக அவர் வாழ்ந்த சாலைக்கு “சின்னக் கலைவாணர் விவேக் சாலை” என பெயர் மாற்றம் செய்துள்ள பலகை சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

      விவேக் பெயரில் சாலை… வைரலாகும் புகைப்படம்
      விவேக்


      மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது விவேக் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார்.

      அதன்பின், சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம்,’மறைந்த நடிகர்

      விவேக்கின் மனைவி அருள் செல்வியின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் விவேக் வசித்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டி அரசாணை

      வெளியிட்டுள்ளார் என்று கூறினார். வருகிற மே மாதம் மூன்றாம் தேதி விவேக்கின்

      பெயர் கொண்ட தெருவின் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும்’ அவர் தெரிவித்து இருந்தார்.

      விவேக்

      இந்நிலையில் விவேக்கின் பெயர் கொண்ட தெருவின் பெயர் பலகையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

        Posted in சினிமா

        மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்.. அதிர்ச்சியடைந்த ஏ.ஆர்.ரகுமான்

        மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்.. அதிர்ச்சியடைந்த ஏ.ஆர்.ரகுமான்

        நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ‘இரவின் நிழல்’ படத்தின் நிகழ்ச்சியில் பார்த்திபன் கோபத்தில் மைக்கை தூக்கி எறிந்தார்.

        மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்.. அதிர்ச்சியடைந்த ஏ.ஆர்.ரகுமான்
        பார்த்திபன் – ஏ.ஆர்.ரகுமான்


        1989-இல் வெளியான புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். இவர் உள்ளே வெளியே, ஹவுஸ்புல், கதை திரைக்கதை

        வசனம் போன்ற பல படங்களை இயக்கியிருந்தார். இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்து தேசிய விருதையும் இப்படம் தட்டிச் சென்றது.

        வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் பார்த்திபன் சில மாதங்களுக்கு முன்பு ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க உள்ளதாகவும், அப்படத்திற்கு

        ‘இரவின் நிழல்’ என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார். கதையை தயார் செய்துவிட்டு நடிகர்களை அழைத்தபோது பலரும் பின் வாங்கினார்கள். சிலர்

        பார்த்திபன் சொன்ன யோசனைக்கு ஒத்துக்கொண்டு நடித்தார்கள். பார்த்திபன் தற்போது அந்த படத்தையே எடுத்து முடித்து விட்டார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

        பார்த்திபன் – ஏ.ஆர்.ரகுமான்

        இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. பலர் கலந்துக்கொண்ட இவ்விழாவில் பார்த்திபனும் ஏ.ஆர்.ரகுமானும் உரையாடல் நிகழ்வு நடந்தது. அப்போது பார்த்திபன் கையில் இருந்த மைக் திடீரென

        வேலை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த பார்த்திபன் கையில் இருந்த மைக்கை தூக்கி எறிந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மேடையில் இருந்த ஏ.ஆர்.ரகுமான், பார்த்திபன் செயலை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

        அதன்பின் நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய பார்த்திபன் அங்கு நடந்த அந்த நிகழ்வுக்கு அவர் வருத்தம் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தான் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் தனது அநாகரீகமான செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

        ஏ.ஆர்.ரகுமான் முன் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

          Posted in இலங்கை செய்திகள்

          விபத்து ஏற் படுத்திய வண்டியை எரித்த மக்கள்

          விபத்து ஏற் படுத்திய வண்டியை எரித்த மக்கள்

          குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்துடன் தொடர்புடைய

          டிபெண்டர் ஜீப் வண்டியை ஓட்டிச் சென்றவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

          அவர்களில், 14 வயதான சிறுவனும் அடங்குகின்றார். இந்த விபத்து சம்பவத்தை

          அடுத்து, டிபெண்டர் ஜீப் வண்டி இனந்தெரியாத நபர்களினால் தீ வைத்து

          கொளுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,


          சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

            Posted in Uncategorized

            வவுனியா, ஓமந்தைப் பகுதியில் 16 ரவுடிகள் இராணுவத்தால் கைது

            வவுனியா, ஓமந்தைப் பகுதியில் 16 ரவுடிகள் இராணுவத்தால் கைது

            வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் சுற்றி வளைப்பில்

            காட்டுப் பகுதியில் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட

            16 பேர் கைது செய்யப்பட்டு ஓமந்தைப் பொலிஸாரிடம் நேற்று (01) மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

            வவுனியா, ஓமந்தை, கோதாண்டர் நொச்சிக்குளம் காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு

            கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதியில் விசேட அதிரடிப் படையினர் விசேட சோதனையை முன்னெடுத்திருந்தனர்.

            இதன்போது அங்கு கத்தி, வாள் உ ள்ளிட்ட ஆயுதங்களுடன் பலர் ஒன்று கூடி அவ் ஆயுதங்களால்

            கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இருந்த நிலையில் 16 பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

            அவர்களிடம் இருந்து கத்தி, வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஓமந்தைப் பொலிஸாரிடம்

            அவர்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

            குறித்த நபர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

              Posted in Uncategorized

              யார் பிரதமராக வந்தாலும் – தமிழருக்கு பயனில்லை – சுமந்திரன் கூவல்

              யார் பிரதமராக வந்தாலும் – தமிழருக்கு பயனில்லை – சுமந்திரன் கூவல்

              இலங்கையில் யார் பிரதமராக வந்தாலும் ,அவர்களினால் தமிழர்களுக்கு தீர்வு ஏதும் கிட்டட்டது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்


              ஊடக போராளிகளை சந்தித்து பேசியபோது இதனை அவர் தெரிவித்துள்ளார்

              இவர் அரசியல் வியாபாரியாக செயல் பட்டு வருவதும் ,கோட்டா,மகிந்தாவுக்கு ஐடியா

              கொடுக்கும் ஆசாமியாக உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                மோடி தமிழக கட்சி தலைவர் நல்லூரில் வழிபாடு

                மோடி தமிழக கட்சி தலைவர் நல்லூரில் வழிபாடு

                இந்தியாவின் ஆளும் நரேந்திர மோடியில் அங்கம் வகிக்கும் பாரதிஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை


                இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்

                இவ்விதம் பயணம் மேற்கொண்ட அவர் பல கட்சிகளுடன் பேச்சில் ஈடுபடுவார் என தெரிவிக்க படுவதுடன்


                ,இவரது இந்த பயணம் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளதாக கருத படுகிறது

                  Posted in இலங்கை செய்திகள்

                  ஆறு இலங்கை மீனவர்கள் இந்தியா இராணுவத்தால் கைது

                  ஆறு இலங்கை மீனவர்கள் இந்தியா இராணுவத்தால் கைது

                  இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் ,இந்திய கடலோரா படையினால் ஆறு இலங்கை மீனவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்.

                  கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பரப்படுத்து சிறையில் அடைக்க பட்டுள்ளனர் .

                  இரு நாடுகளின் இராணுவத்தால் அப்பாவி மீனவர்கள் சிறை பிடிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு

                    இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில்

                    அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை மேற்கொள்ளுமாறும் கோரி இந்திய வெளியுறவுத் துறை

                    அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
                    இலங்கையில் தற்போது நிலவும் மோசமான பொருளாதார நிலைமையைக் கருத்தில்

                    கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தருமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.​


                    இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப்

                    பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் என்றும் கூறி உள்ளார்.


                    தமிழக அரசு விரும்பினால் இலங்கையில் பொருட்களை விநியோகம் செய்யும் பணிகளை ஒருங்கிணைக்க


                    தலைமைச் செயலாளரை அனுப்பி வைக்கலாம் என்றும் ஜெய்சங்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

                      Posted in உலக செய்திகள்

                      ஜெர்மனியில் மோடி – குவிந்த இந்தியர்கள்

                      இந்தியா, ஜெர்மன் நாடுகள் தூதரக உறவை தொடங்கி 70 ஆண்டுகள் ஆகும் நிலையில், பிரதமர் ஓலப் ஸ்கால்சுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார்.

                      பாட்டு பாடிய சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி – பெர்லினில் ருசிகரம்
                      சிறுவனை பாராட்டிய பிரதமர் மோடி

                      பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று அதிகாலை சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் கட்டமாக,

                      ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சின் அழைப்பின் பேரில் இன்று ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.

                      இதற்கிடையே, 6-வது இந்தியா, ஜெர்மன் அரசுகளுக்கு இடையிலான ஆலோசனைக்கு இரு நாட்டு பிரதமரும் தலைமை வகிக்கிறார்கள். தொடர்ந்து, இந்திய மந்திரிகள்

                      பலரும் ஜெர்மனி வந்து தங்கள் இலாகா மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                      இந்நிலையில், ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பெர்லினில் இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்தார்.

                      அப்போது பிரதமர் மோடி ஒரு சிறுமி வரைந்திருந்த படத்தில் கையெழுத்திட்டார். ஏராளாமானோர் பிரதமர் மோடியுடன்


                      செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் ஒரு சிறுவன் பாடிய பாடலை தாளம் போட்டபடி கேட்டு ரசித்தார் பிரதமர் மோடி.

                        Posted in இலங்கை செய்திகள்

                        மீனவர் படகு மீது மோதிய கடற்படை கப்பல்

                        மீனவர் படகு மீது மோதிய கடற்படை கப்பல்

                        வடமராட்சி – கடற்தொழிலாளியின் படகு மீது கடற்படையின் கப்பலொன்று மோதி

                        விபத்தை ஏற்படுத்திய சம்பவம் நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது.

                        வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு

                        மீது கடற்படைப் படையினரின் படகு மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

                        சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கை வந்துள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

                          இலங்கை வந்துள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

                          கொழும்பு நகரை அண்மித்து முன்னெடுக்கப்படும் மேதின கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் தொடர்பில், இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு,

                          இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

                          நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் பேரணிகள் ஏற்பாடு

                          செய்யப்பட்டுள்ளதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

                          இதனால் போக்குவரத்துகளில் சிக்கல் ஏற்படலாம் என்றும் பல இடங்களில் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

                          எனவே ,இந்த நிலைமைகளை கவனத்தில் கொண்டு பேரணி மற்றும் கூட்டங்கள் நடைபெறும் பிரதேசங்களுக்கான


                          சுற்றுலாப் பயணங்களை இன்றைய தினம் தவிர்க்குமாறும் அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            பஸ் ஆட்டோ மோதல் – மூவர் மரணம்

                            பஸ் ஆட்டோ மோதல் – மூவர் மரணம்

                            மன்னம் பிட்டிய பகுதியில் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ மோதி விபத்தில் சிக்கியதில்


                            மூவர் சம்பவ இடத்தில பலியாகினர்

                            பலியானவர்களில் இரு பெண்கள் என தெரிவிக்க படுகிறது


                            இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருகிறது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 120 பேர் கையொப்பம்

                              நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 120 பேர் கையொப்பம்

                              இலங்கையில் ஆளும் கோட்டாவுக்கு எதிராக அவ நம்பிக்கையில்லா பிரேரணையை

                              கொண்டு வருவதற்கு இதுவரை 120 பேர் கையொப்பம் இட்டுள்ளனர் என திஸ்ஸ அத்த நாயக்கா தெரிவித்துள்ளார்

                              இந்த விடயம் பெரும் நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                நாடெங்கும் மேதின போராட்டம்

                                நாடெங்கும் மேதின போராட்டம்

                                இலங்கையில் மே தினத்தை முன்னிட்டு நாடனெங்கும் பல தொழில் சங்கங்கள்

                                இணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்

                                தொடர்ந்து வெடிக்கும் மக்கள் போராட்டத்தினால் கோட்டா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்

                                  Posted in Uncategorized

                                  லண்டனில் கோட்டாவுக்கு எதிராக முளைத்த வீடு

                                  லண்டனில் கோட்டாவுக்கு எதிராக முளைத்த வீடு

                                  பிரிட்டன் பாராளுமன்றம் முன்பாக உள்ள பகுதியில் கொட்ட கோ காமா என்ற பெயரை தாங்கிய படி சிங்களவர்களினால்


                                  ஆளும் கொள்ளையர்கள் வீடு செல்ல வேண்டும் என கோரி போராட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது

                                  இந்த போராட்டம் அங்கு தொடர்ச்சியாக இடம்,பெற்ற வண்ணம் உள்ளது

                                  உலக நாடுகளின் முக்கிய நாடுகளில் இருந்து ஆரம்பிக்க பட்டுள்ள இந்த போராட்டம்

                                  மகிந்த குடும்பத்திற்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது ,

                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                    பிரிட்டன் பாராளுமன்றில் நீல படம் பார்த்த எம்பி பதவி விலகினார்

                                    பிரிட்டன் பாராளுமன்றில் நீல படம் பார்த்த எம்பி பதவி விலகினார்

                                    பிரிட்டன் பாராளும்னற பகுதிக்குள் நீல பட காட்சிகளை இரு தடவை பார்த்தார் என்ற குற்ற சாட்டு ஆளும்


                                    கட்சி உறுப்பினர் Conservative Party, Neil Parish மீது சுமத்த பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்

                                    மேற்படி சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ,இப்படியும் நடக்கிறது சம்பவங்கள் பார்த்துக்குங்கோ

                                    Neil Parish, the Tory MP who has said he will resign after
                                    admitting watching pornography in the House of Commons, has a strong interest in farming, the countryside and animal welfare issues.

                                      Posted in Uncategorized

                                      ரசியாவுக்குள் நுழைந்து உக்கிரேன் விமானங்கள் தாக்குதல்

                                      ரசியாவுக்குள் நுழைந்து உக்கிரேன் விமானங்கள் தாக்குதல்

                                      ரசியாவின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த உக்கிரேன் விமானங்கள் அங்கு தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளன ,


                                      இந்த தாக்குதலின் பொழுது ரசியாவின் Bryansk பகுதியில் பலத்த சேதமடைந்துள்ளது

                                      ரசியா உக்கிரேன் பல பகுதிகளை ஆக்கிரமித்து தற்போது தலைநகர் கீவ் வீழ்ச்சியுற உள்ள நிலையில் இந்த


                                      அதிரடி தாக்குதலில் உக்கிரேன் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

                                        Posted in Uncategorized

                                        அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

                                        அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

                                        ஈராக் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் முக்கியத்துவம் வாய்ந்த US Ain al-Assad இராணுவ தளம் மீது ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது.

                                        இந்த தாக்குதலின் பொழுது அந்த முகாமில் இருந்து பலத்த வெடி சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்க படுகிறது.

                                        இதே இராணுவ தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் மூளை கலங்கிய நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது.