ஜெர்மனியில் மோடி – குவிந்த இந்தியர்கள்

Spread the love

இந்தியா, ஜெர்மன் நாடுகள் தூதரக உறவை தொடங்கி 70 ஆண்டுகள் ஆகும் நிலையில், பிரதமர் ஓலப் ஸ்கால்சுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார்.

பாட்டு பாடிய சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி – பெர்லினில் ருசிகரம்
சிறுவனை பாராட்டிய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று அதிகாலை சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் கட்டமாக,

ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சின் அழைப்பின் பேரில் இன்று ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.

இதற்கிடையே, 6-வது இந்தியா, ஜெர்மன் அரசுகளுக்கு இடையிலான ஆலோசனைக்கு இரு நாட்டு பிரதமரும் தலைமை வகிக்கிறார்கள். தொடர்ந்து, இந்திய மந்திரிகள்

பலரும் ஜெர்மனி வந்து தங்கள் இலாகா மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பெர்லினில் இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்தார்.

அப்போது பிரதமர் மோடி ஒரு சிறுமி வரைந்திருந்த படத்தில் கையெழுத்திட்டார். ஏராளாமானோர் பிரதமர் மோடியுடன்


செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் ஒரு சிறுவன் பாடிய பாடலை தாளம் போட்டபடி கேட்டு ரசித்தார் பிரதமர் மோடி.

    Leave a Reply