Posted in இலங்கை செய்திகள்

சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்

சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்

09 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டுலுகம அல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கும் பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுமி இன்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றிற்கு கோழி இறைச்சி வாங்குவதற்காக சென்றுள்ளார்.

ஆனால் அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது தாயார் கூறுகிறார்.

காணாமல் போன சிறுமி நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி கடையை விட்டு வெளியேறுவது அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதன்படி பொலிசார் தற்போது சிறுமியை தேடி வருகின்றனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    விரைவில் புதிய அரசியல் கூட்டணி

    விரைவில் புதிய அரசியல் கூட்டணி

    புதிய அரசியல் கூட்டணி ஒன்று விரைவில் உருவாக்கப்படும் என தேசிய சுதந்தி

    ர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

    மேலும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் பூரண

    சம்மதத்துடன் சுயாதீன கட்சிக்கு என்று தலைவர்


    ஒருவர் தெரிவு செய்யப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் விபச்சாரத்தில் ஒன்பது லட்சம் பெண்கள்

      இலங்கையில் விபச்சாரத்தில் ஒன்பது லட்சம் பெண்கள்

      பாலியல் தொழிலாளர்களை பொலிஸார் துன்புறுத்தக்கூடாது. அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

      கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாலியல் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ரேஷனில் உணவுப் பொருள்கள், நிதியுதவி வழங்க

      வேண்டும் என்று கோரி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

      இந்த மனுவை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு விசாரித்து வருகிறது.

      இவ்வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் கூறும்போது, “நாடு முழுவதும் 9

      லட்சத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை பொலிஸார் மோசமாக நடத்துகின்றனர். பாலியல் வழக்கில் கைதாகும் பெண்கள், அவர்களது

      விருப்பத்துக்கு மாறாக காப்பகங்களில் சேர்க்கப்படுகின்றனர். இந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரினார்.

      மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜெயந்த் கூறும்போது, “பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர். அவர்களின் பாதுகாப்புக்காகவே காப்பகங்களில் சேர்க்கப்படுகின்றனர்” என்று வாதிட்டார்.

      இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

      விருப்பத்துடன்கூடிய பாலியல் தொழில் சட்டபூர்வமானது. எனினும் பாலியல் விடுதிகள் நடத்துவது சட்டவிரோதம். பெரும்பாலான நேரங்களில் பாலியல் தொழிலாளர்களை

      பொலிஸார் மோசமாக நடத்துகின்றனர். இந்த அணுகுமுறையை கைவிட வேண்டும். அவர்களை உடல் ரீதியாகவோ, வார்த்தைகளாலோ பொலிஸார் துன்புறுத்தக்கூடாது.

      கண்ணியமாக நடத்த வேண்டும். அவர்களை கைது செய்யக்கூடாது. அபராதம் விதிக்கக்கூடாது. பாலியல் தொழிலாளர்கள் முறைப்பாடு செய்தால், அதன்பேரில் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் பாலியல் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். காப்பகங்களில்

      தங்க வைக்கப்பட்டிருக்கும் பாலியல் தொழிலாளர்கள் குறித்து மாநில அரசுகள் ஆய்வு செய்ய வேண்டும்.

      விருப்பத்துக்கு மாறாக அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால்,
      அவர்களை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      பாலியல் தொழிலாளர்களின் அடையாளம்,


      பெயர்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
      வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 27-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

        Posted in இலங்கை செய்திகள்

        வீதியில் கவிழ்ந்த எரிபொருள் பவுசர்- ஓடிய பெட்ரோல்

        வீதியில் கவிழ்ந்த எரிபொருள் பவுசர்

        குருநாகலில் எரிபொருள் பவுசர் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

        கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக் கொண்டு சென்ற பவுசர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

        விபத்து ஏற்படும் போது பவுசரில் 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இதன்போது கசிந்து வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

        குருநாகல் தீயணைப்புப் பிரிவினரின் பெரும் முயற்சியின் பின்னர் பவுசர் மீண்டும் வீதிக்கு கொண்டுவரப்பட்டது.

          Posted in இலங்கை செய்திகள்

          விமல் வீரவன்சா மனைவிக்கு இருவருட ம் சிறை .

          விமல் வீரவன்சா மனைவிக்கு இருவருட ம் சிறை .

          பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு இரண்டு

          வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

          போலியான தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டை

          பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் அவரை குற்றவாளியாக அறிவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            முல்லைத்தீவில் தமிழக உலருணவுப் பொதிகள் வழங்க நடவடிக்கை

            முல்லைத்தீவில் தமிழக உலருணவுப் பொதிகள் வழங்க நடவடிக்கை

            முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலருணவுப் பொதிகளை வழங்குவதறக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

            அதனடிப்படையில் 15,857 குடும்பங்களுக்கு அரிசியும், 3,964 குடும்பங்களுக்கு பால் மாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்

            இதில் மிகவும் வறுமையான குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு 15,857 குடும்பங்களுக்கு அரிசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

            தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

            இன்னும் எங்களுக்கு அது வந்து சேரவில்லை. அதேபோல் பால்மாவை பொறுத்தவரையில் 3,964 குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட

            குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான தெரிவுகள் பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக இடம்பெற்றுக் கொண்டு வருகின்றன. உண்மையில் 35,000க்கும் அதிகமான குடும்பங்கள் தகுதியானவர்களாக

            இருக்கின்றார்கள். ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்டது 15,857. ஆகவே இதற்குள் அவர்களை தெரிவு செய்து வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்

            வழங்கியிருக்கிறோம். அந்த தெரிவு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எங்களுக்கு பொருட்கள் வந்து சேரும் பட்சத்தில் அதனை நாங்கள் அவர்களுக்கு உடனடியாக
            வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

              Posted in இலங்கை செய்திகள்

              யானை கட்சி உறுப்பினருக்கு கொலை மிரட்டல்!

              யானை கட்சி உறுப்பினருக்கு கொலை மிரட்டல்!

              முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி

              உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் அவர்களுக்கு கொலை மிரட்டல்

              விடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

              நேற்று 26 பிரதேச சபை உறுப்பினர் செய்த முறைப்பாட்டின்


              அடிப்படையில் மாங்குளம் பொலிசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

              Posted in சினிமா

              மனைவிக்கு கள்ளத்தொடர்பு- புலம்பும் நடிகர்

              மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. புலம்பும் பிரபல நடிகர்

              தன் மனைவியான நடிகை நிஷா ராவலுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக நடிகர் கரண் மெஹ்ரா குற்றம்சாட்டி உள்ளார்.

              என் மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. புலம்பும் பிரபல நடிகர்
              கரண் மெஹ்ரா – நிஷா ராவல்


              இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வரும் கரண் மெஹ்ராவும், தொலைக்காட்சி நடிகை நிஷா ராவலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அவர்களுக்கு

              இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். நிஷாவும், கரணும் ஆறு ஆண்டுகள் காதலித்து, 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். 2017ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் நிஷா. இந்தி

              சின்னத்திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் கரண் மெஹ்ரா. அவர் பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். கரண் தன்னை தாக்கியதுடன்,

              தன் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடி எடுத்துவிட்டதாக காவல் நிலையத்திற்கு சென்றார் நிஷா.

              இதையடுத்து 31.05.2021 அன்று கோரேகாவ்ன் காவல் நிலையத்தில் கரண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரண் தன்னை தாக்கி காயப்படுத்தியதாகவும்,

              அவருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் நிஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிஷாவை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கரண், பின்னர் ஜாமீனில் வெளியே

              வந்தார். நிஷா தொடர்ந்த வழக்கை அடுத்து கரணும் அவரது குடும்பத்தாரும் முன்ஜாமீன் பெற்றார்கள்.

              கரண் தற்போது ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது, நிஷாவுக்கும், ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அதை அந்த நபரே ஒப்புக் கொண்டார். அதன் பிறகும் அந்த

              நபரை எங்கள் வீட்டிற்குள் அனுமதித்தேன். மீண்டும் வாழ்க்கையை புதிதாக தொடங்க நினைத்தேன். பின்னர் மகன் கவிஷ் பிறந்தான். அந்த கள்ளத்தொடர்பு ஆசாமி இன்னும் எங்கள் வீட்டில் தான் வசித்து வருகிறார்.


              கடந்த 11 மாதங்களாக எங்கள் வீட்டில் தங்கியிருக்கிறார் என கரண் மெஹ்ரா கூறியுள்ளார்.

              இவரது இந்த பேச்சு பெரும் சச்சையை ஏற்படுத்தியுள்ளது

                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                பிரிட்டனில் தீயில் எரிந்த துறைமுகம் – நடந்தது என்ன – வீடியோ

                பிரிட்டனில் தீயில் எரிந்த துறைமுகம் – நடந்தது என்ன – வீடியோ

                பிரிட்டன் Whitstable Harbour. திருமுகம் திடீரென பற்றி எரிந்தது ,இதில் ஏற்பட்ட புகை

                மூட்டம் வானளாவிய உச்சம் பரவியது ,இந்த தீ விபத்துக்குரிய காரணம் உடனடியாக

                தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                குறித்த கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                  Posted in சினிமா

                  காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி

                  ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்த காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                  பிரபல காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி
                  போண்டா மணி


                  தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய

                  போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல

                  படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ்

                  படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.

                  போண்டா மணி

                  இந்நிலையில், இதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.


                  அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    முல்லையில் மீனவர்கள் போராட்டம் – இராணுவம் குவிப்பு

                    மண்ணெண்ணெய் இல்லாமையால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மண்ணெண்ணெய்யை பெற்றுத் தரக் கோரி, முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள், இன்று (26) கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

                    முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து காலை 10.30க்கு பேரணியை ஆரம்பித்து, முல்லைத்தீவு மாவட்டக் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அலுவலகம் உடாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரை அவர்கள் சென்றனர்.

                    அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்துக்க்கு முன்னால் கடற்தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

                    இதன்போது மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், போராட்டக்காரர்களை உள்ளே அழைத்து, அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஏற்றுக்கொண்டார்.

                    “சாலை தொடக்கம் கொக்குளாய் முகத்துவாரம் வரையான எமது மீனவர்கள் மற்றும் தென்னிலைங்கையில் இருந்து வருகை தந்து தொழில் புரியும் மீனவர்களுக்கும்

                    முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, நாயாறு போன்ற எரிபொருள் நிலையங்கள் ஊடாகவே எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருகின்றது.

                    “இருந்த போதிலும் இவ் எரிபொருள் நிலையங்களுக்கு வரும் எரிபொருளானது எமது மாவட்ட மீனவர்களுக்கு போதுமானதாகவில்லை. கடந்த 08.05.2022 தொடக்கம் குறித்த

                    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய் வரவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. “அத்துடன், விலையேற்றம் காரணமாக மக்கள் பட்டிணிச்சாவை எதிர்நோக்கியுள்ளனர்.

                    “எனவே, தயவுசெய்து எமது மீனவ மக்களின் இந்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் தொழில் புரிவதற்கான எரிபொருளை பெற்றுத்தருமாறு, மீனவர்கள்

                    சார்பாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்பு சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றோம்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

                    இதன்போது கடற்தொழிலாளர்களிடம் கருத்துத் தொரிவித்த மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற

                    கூட்டத்தின் போது பொதுவாக எல்லா மாவட்டத்திலும் மண்ணெண்ணெய்த் தட்டுப்பாடு உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. மீனவர்கள் மாத்திரமல்ல விவசாய உற்பத்தி வீதமும் குறைந்துள்ளது.

                    “எரிபொருள் விநியோகத்துக்கு பொறுப்பான பிராந்திய முகாமையாளருடன் கதைத்துள்ளோம். இன்று இரண்டு லோட் மண்ணெண்ணெய் அனுப்புவதாக உறுதிமொழி தந்துள்ளார்கள்.

                    “மாவட்ட மீனவர்களின் கோரிக்கைறை கடற்றொழில் அமைச்சுக்கும் எரி சத்தி அமைச்சுக்கும் நாங்கள் அனுப்பவுள்ளோம்” என்றார்.

                    குறித்த போராட்டத்தை மீனவர்கள் ஆரம்பித்த போது, சம்பவ இடத்துக்கு வருகைதந்த இராணுவத்தினர் மண்ணெண்ணெய் பெற்றுத்தருவதாக மீனவர்களுடன்

                    கலந்துரையாடி போராட்டத்தை நிறுத்த முயற்சித்திருந்தனர். இருப்பினும்,
                    மீனவர்கள் அதற்கு உடன்படாமல் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      பாரபட்சம் காட்டும் வைத்தியசாலை நிருவாகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்!

                      பாரபட்சம் காட்டும் வைத்தியசாலை நிருவாகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்!

                      பைஷல் இஸ்மாயில் –

                      அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவு குறைப்பிற்கு எதிராகவும் அதனை வழங்கக்கோரிய ஒரு மணிநேர கவனயீர்ப்பு அடையாள வேலை நிறுத்தப்

                      போராட்டத்தை நாளை (27) முன்னெடுக்கவுள்ளதாகவும் வைத்தியசாலையின் சுகாதார தொழில் வள்லுனர்கள் ஒன்றியத்தின் தலைவரும், தாதிய உத்தியோகத்தருமான ஏ.ஆர்.விஷாம் தெரிவித்தார்.

                      வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் அனைவரும் ஒன்றினைந்து நாளை காலை 9.30 மணி தொடக்கம் 10.30 மணிவரை வைத்தியசாலைக்கு முன்பாக

                      கவனயீர்ப்பு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

                      இது தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவ ஆய்வுனர்கள், ஒளிப்பதிவு

                      இயக்குனர்கள், மருத்துவ மாதுக்கள், E.C.G தொழில் நுட்பவியலாளர்கள், கண்பார்வை தொழில் நுட்பவியலாளர்கள் ஆகியோர் வைத்தியசாலைக்கு வருகைதந்து தங்களின்

                      கடமைகளில் எவ்வித குறைகளுமின்றி பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்ற இந்நிலைமையில் அவர்களின் முழுமையான மேலதிக நேரக் கொடுப்பனவை வைத்தியசாலை நிருவாகம் வழங்க மறுத்துள்ளது.

                      கடந்த 2022.05.13 ஆம் திகதி அரசினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கமைவாக, வைத்தியசாலையின் நிருவாகத்திடம் கலந்துரையாடியபோது, அவரவர்களின்

                      அடிப்படைச் சம்பளத்திற்கேற்ப எல்லோருக்கும் சமமாக முழுமையான மேலதிக நேரக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று நிருவாகத்தினர் தெரிவித்திருந்தபோதும்,

                      கடந்த ஏப்ரல் மாதக் கொடுப்பனவை முழுமையாக வைத்தியர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு ஏனை சுகாதார ஊழியர்களுக்கு பூரணமாக வழங்க மறுத்துவிட்டனர்.

                      அரசினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு முரனாகவும்,
                      வைத்தியர்களைத் தவிர ஏனைய சுகாதார ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டும் செயற்பாடுகளை


                      வைத்தியசாலை நிருவாகத்தினர் முன்னெடுத்து வருகின்ற விடயங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

                      எங்களுக்கான சரியான தீர்வினை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் வழங்கவேண்டும் இல்லை எனில்


                      தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முன்வைக்கப்பட்டு அதற்கான போராட்டங்களை முன்னேடுக்கவுள்ளோம்
                      என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        நாட்டை விட்டு தப்பி ஓடிய மகிந்த மகனின் மனைவி – நாடு திரும்பினார்

                        நாட்டை விட்டு தப்பி ஓடிய மகிந்த மகனின் மனைவி – நாடு திரும்பினார்

                        இலங்கையில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் உச்சத்தை அடுத்து நாட்டை விட்டு

                        மகிந்த மகனின் மனைவி தப்பி ஓடினர் .அவர் தற்போது மீள நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                        Yoshitha மனைவியே இவ்விதம் நாடு திரும்பியுள்ளார் ,எனினும் நாமல் மனைவி

                        இதுவரை இலங்கை வரவில்லை என்பது குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு

                        ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு

                        இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கியினால் மேலும்


                        ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு பிறப்பித்துள்ளார்

                        இவ்விதமான செயல்பாடு மேலும் நாட்டை பலவீன படுத்தி சிக்கலை ஏற்படுத்தும் என

                        பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

                          கைபேசி பேசியவாறு வண்டி ஓட்டினால்
                          Posted in இலங்கை செய்திகள்

                          ஆண்களிடம் பெண்குரலில் பேசி பணம் கொள்ளையடித்த நபர் – மாப்புள்ளை சிக்கினார்

                          கைபேசியில் பெண் குரலில் பேசி ஆண்களை ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறித்த

                          குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

                          சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

                          சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த அழைப்பில் பெண் ஒருவர் உரையாடியுள்ளார். அதன் பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக உரையாடியுள்ளனர். பின்னர் அந்தரங்கப் படங்களையும் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

                          பின்னர் கைபேசியில் பேசிய குறித்த பெண், அந்த நபரை மிரட்டி ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளார்.

                          தொடர்ந்து மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அதில் சந்தேகமடைந்த அந்த நபர், இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

                          கைபேசியில் பேசிய பெண்ணிடம், வங்கியில் பணம் வைப்புச் செய்ய முடியாது என்றும், நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

                          யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பணத்தைப் பெற்றுக்கொள்ள வந்த 26 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

                          விசாரணையில் அந்த இளைஞரே பெண் குரலில் பேசி ஏமாற்றியமை தெரியவந்துள்ளது. இந்த இளைஞர் ஏற்கனவே நால்வரிடம் இவ்வாறு பேசி நான்கு

                          லட்சம் ரூபாவுக்கும் மேல் பறித்துள்ளமை தெரியவந்துள்ளது என்று பொலிஸார் கூறுகின்றனர்.

                          கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து நான்கு கைபேசிகளும், ஒரு லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.


                          விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்

                            Posted in சினிமா

                            கணவர் மீது நடிகை மோசடி புகார்

                            கணவர் மீது நடிகை மோசடி புகார்

                            கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான சைத்ரா ஹள்ளி கேரியின் போலி கையெழுத்துபோட்டு வங்கியில் நகை கடன் மோசடி.

                            கணவர் மீது மோசடி புகார் கொடுத்த பிரபல நடிகை
                            சைத்ரா ஹள்ளிகேரி


                            கன்னட திரைப்பட நடிகை சைத்ரா ஹள்ளிகேரி. இவர், குரு சிஷ்யா, ஸ்ரீதனம்மா தேவி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், பாலாஜி என்பவருக்கும் 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்,

                            மைசூரு ஜெயலட்சுமிபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை சைத்ரா ஹள்ளிகேரி, தன் கணவர், மாமனார் மீது புகார் அளித்துள்ளார். அதில், தனக்கு தெரியாமலேயே வங்கி கணக்கின் மூலம் தனது கையெழுத்தை போலியாக போட்டு, தங்க நகை கடன்

                            வாங்கியுள்ளனர். இதற்கு வங்கி கிளை மேலாளரும் உடந்தையாக உள்ளார். இது பற்றி கேட்ட போது, கணவரும், மாமனாரும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

                            சைத்ரா ஹள்ளிகேரி

                            இது தொடர்பாக நடிகை சைத்ராவின் கணவர் பாலாஜி, மாமனார் பொத்தராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே தன்னை

                            அடித்ததாகவும், சீரியலில் நடித்து சம்பாதித்த பணத்தை பறித்து கொண்டதாகவும் கணவர் பாலாஜி மீது 2018-ல் சைத்ரா, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

                            அப்போது இரு வீட்டினரும் அவரை சமாதானம் செய்து,
                            புகாரை வாபஸ் பெற வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                              Posted in சினிமா

                              ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட-கமல்

                              விக்ரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் கமல், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

                              கமல் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கமல் இந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


                              இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’.

                              இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை

                              கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.

                              ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட-கமல்

                              கமல் மன்னிப்பு கேட்டு கொண்ட செயல் மக்கள் மத்திதியில் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது

                              இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கமல் பேசும் போது, 4 வருடங்களாக என் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் ஒரு ரூபாய் செலவு செய்தால் ரசிகர்கள் 20

                              ரூபாய் செலவு செய்வார்கள். ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்துக் கொண்டிருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு இப்போது நன்றி சொல்ல மாட்டேன். வேற மாதிரி

                              ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட-கமல்

                              நன்றி சொல்லிக் கொள்கிறேன். நல்ல டீம் எனக்கு அமைந்து இருக்கிறது. நிச்சயம் விக்ரம் வெற்றி படமாக அமையும் என்றார்

                                Posted in இலங்கை செய்திகள்

                                மலையக தமிழரின் அரசியல் அபிலாஷைகளை போராட்டக்காரர்கள் உள்வாங்க உதவிடுங்கள்.

                                மலையக தமிழரின் அரசியல் அபிலாஷைகளை போராட்டக்காரர்கள் உள்வாங்க உதவிடுங்கள்.

                                • முன்னிலை சோஷலிச கட்சியிடம் மனோ கணேசன்
                                  இந்நாட்டில் வாழும் மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும் போராடும் சிங்கள இளைஞர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்மூலமே உண்மையான புதிய இலங்கையை கட்டி எழுப்ப முடியும்.

                                குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் உழைக்கும் மக்கள் சிறு தோட்ட நில உடைமையாளர்களாக மாற வேண்டும். வீடு கட்டி வாழ காணியும், உழைத்து வாழ விளை நிலமும் பெற்று அவர்களை வாழ வைக்க விரும்பும் எமது நோக்கங்களை

                                முன்னிலை சோஷலிச கட்சி ஆதரிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்த முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவினரிடம், கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, பிரதி தலைவர் திகாம்பரம் எம்பி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

                                தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் இல்லத்தில், கூட்டணியினரை முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவின் சார்பில் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் புபுது ஜாகொட, சஞ்சீவ பண்டார ஆகியோர் சந்தித்தனர்.

                                முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவினருக்கு, மலையக அபிலாஷை ஆவணங்களை கையளித்த கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

                                இந்நாட்டு மலையக தமிழரின் ஜனத்தொகை சுமார் பதினைந்து இலட்சம். இதில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் இன்னமும் தோட்ட சிறைகளுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களாக

                                தோட்ட குடியிருப்புகளில் வாழ்கிறார்கள். இந்த தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை அரச பொது நிருவாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து, தேசிய நீரோட்டத்தில் உள்வாங்க வேண்டும்.

                                இதன் மூலம், நாட்டின் ஏனைய கிராமிய பிரதேசங்களில் நடைபெறுவதற்கு சமானமாக, தோட்ட பிரதேசங்களிலும் கிராம சேவகர் வலயங்கள், பிரதேச செயலக வலயங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வேண்டும். தோட்ட நிறுவனங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள

                                தொழிலாளர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, கிராமிய, பிரதேச, மாவட்ட மட்டங்களில் பரவலாக்கப்பட்ட அரச நிறுவனங்களின், நிருவாக மற்றும் நலவுரிமை சேவைகளை

                                பெருகின்ற முழுமையான குடிமக்களாக தோட்டங்களில் உழைக்கும் மக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

                                அதேவேளை இந்த தோட்ட சிறைகளுக்குள் வாழும் மலையக மக்களை உள்ளடக்கிய மலையக தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷகளை புரிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

                                இன்று நாட்டில் காலிமுக திடல் முதல், முழு நாட்டுக்குள்ளும் ஆங்காங்கே சிங்கள மக்கள் போராடுகிறார்கள். இந்த போராட்டக்காரர்கள் மத்தியில், முன்னிலை

                                சோஷலிச கட்சிக்கு ஒரளவு செல்வாக்கு உண்டு என எமக்கு தெரியும். ஆகவே எமது இந்த கருத்துகளை அங்கே கொண்டு செல்லுங்கள்.

                                காலிமுக திடலில் போராடும் வேறு பல அணியினரும், எம்முடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் இன்று சொல்லலும் “கோடா-கோ-ஹோம்” என்ற கோஷத்தை நாம் பத்தாண்டுகளுக்கு முன்னமே எழுப்பியவர்கள். நாம் ஒடுக்கப்பட்ட இனத்தை

                                பிரதிநிதித்துவம் செய்கிறோம். போராடும் சிங்கள குழுக்களிடம் இக்கருத்துகளை நாம் கூறியுள்ளோம். இந்நாட்டில் வாழும் மலையக தமிழர்களின் அரசியல்

                                அபிலாஷைகளையும் போராடும் சிங்கள இளைஞர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்மூலமே உண்மையான புதிய இலங்கையை கட்டி எழுப்ப முடியும்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  உணவகங்களில் சாப்பாடுகள் 10 ரூபாவால் அதிகரிப்பு

                                  உணவகங்களில் சாப்பாடுகள் 10 ரூபாவால் அதிகரிப்பு

                                  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது

                                  உணவகங்களின் விற்பனையாகும் உணவு பொருட்களின் விலை பத்து ரூபாவால் அதிகரிக்க படுகிறது

                                  எரிபொருள் உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக இவையும் அதிகரிக்க படுகிறது ,


                                  பாண் ஒன்றின் விலை 180 ரூபாவாக அதிகரித்துள்ளது
                                  விலை இவ்விதம் அதிகரித்து செல்லும் பொழுது மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கை விமான நிலையங்கள் அடித்து பூட்ட படும் அபாயம்

                                    இலங்கை விமான நிலையங்கள் அடித்து பூட்ட படும் அபாயம் – அதிர்ச்சியில் மக்கள்

                                    இலங்கையில் இயங்கும் சர்வதேச விமான நிறுவனங்கள் முதல் உள்ளூர் விமான

                                    சேவைகள் யாவும் இரத்து செய்ய பட்டு விமான நிலையங்கள் பூட்ட படும் அபாயம் எழுந்துள்ளதாக நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்

                                    பதவியில் மாற்றம் செய்ய பட்டாலும் வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட முடியா நிலைக்கு இலங்கை செல்கிறது

                                    இவ்விதமான சம்பவங்கள் இடம்பெற்றால் நாட்டில் மேலும் மக்கள் கொந்தளிப்பு ஏற்பட்டு ,


                                    அரச அடக்குமுறை செயல்களினால் படுகொலைகள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது