Author: நலன் விரும்பி
இரண்டாயிரம் ரூபா பெருமதியான உணவு பொதி பெருந்தோட்ட மக்களுக்கு மலையகத்தில் வினியோகம் photo
இரண்டாயிரம் ரூபா பெருமதியான உணவு பொதிபெருந்தோட்ட
மக்களுக்கு மலையகத்தில் வினியோகம்
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக அச்சதிற்கு உள்ளாகியிருக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு பெருந்தோட்ட
நிறுவனங்கள் தற்போது 2000.00 ரூபா பெருமதியான உணவு பொருட்கள் அடங்கிய பொதியினை மலையகத்தில் பல்வேறு
தோட்டங்களில் வழங்கி வருகின்றது. அதன் ஒருகட்டமாக கண்டி மாவட்டம் தொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ
டெல்டா தோட்ட மக்களுக்கு இந்த உணவு பொதிகள் (28) வழங்கப்பட்டன.




கொரோனாவை’ சாதகமாக்கும் சிறிலங்கா அரசாங்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
கொரோனாவை’ சாதகமாக்கும் சிறிலங்கா அரசாங்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
உலக மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் நெருக்கடிநிலையினை தனக்கு சதகமாக்கி
சிறிலங்கா அரசாங்கம் நடந்து கொள்வதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்போர்கைதிகளின் உயிர்ப்பாதுகாப்பு தொடர்பிலும்,
சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் தமிழர்களை படுகொலை செய்த போர்குற்றவாளி சுனில் இரத்திநாயக்கா விடுதலை தொடர்பிலும்
இருவேறு ஊடகச் செய்திகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.
சிறைகளில் வைக்கப்பட்டுள்ள தமிழ்போர்கைதிகளின் (அரசியற்கைதிகள்) உயிர்பாதுகாப்பினை
உத்தரவாதப்படுத்துமாறு, சிறிலங்காவின் ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும், இந்தியா, அமெரிக்கா மற்றும் சர்வதேச
செங்சிலுவைச் சங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,
தமிழ்போர்கைதிகள் சிறிலங்கா அரசின் பின்புலத்துடன் சிங்களக் கைதிகளால் படுகொலை செய்யப்பட்டலாம் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
தமிழ்போர்கைதிகளுக்கு நெருக்கமான வட்டாரங்களின் தகவல்களில், கொரோன வைரஸ் தொற்று தொடர்பில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தின் போது, சிங்கள கைதிகள்
தமிழ்போர்கைதிகளை தங்களுடன் இணைந்து வருமாறு அழைத்திருந்ததாகவும், இதற்கு தமிழ்கைதிகள் மறுத்திவிட்ட
நிலையில், தமிழ்கைதிகள் மீது சிங்கள கைதிகளுக்கு வெறுப்பு நிலைகாணப்படுவதாகவும் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ
அரசாங்கம், இந்த வெறுப்புணர்வை பயன்படுத்தி சிங்கள கைதிகள் ஊடாக தமிழ்கைதிகளை படுகொலை செய்யலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
1) 1983ம் ஆண்டு வெலிக்கடை சிறையில் 53 தமிழர்கள் படுகொலை
2) 1997ம் ஆண்டு களுத்துறை சிறையில் 3 தமிழர்கள் படுகொலை
3) 2000ம் ஆண்டு பிந்துனுவேவ சிறையில் 26 தமிழர்கள் படுகொலை
சிறைக்கூடங்களில் சிங்கள கைதிகளை ஏவிவிட்டு தமிழர்களை படுகொலை செய்த சம்பவங்கள் சிறிலங்காவின் கடந்த கால
வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளாக பதிவாகியுள்ளன என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக்காட்டியுள்ளது.
இதேவேளை, சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த
போர்குற்றவாளி சுனில் இரத்திநாயக்கா விடுதலை செய்யப்பட்டுள்ளமையானது, சிறிலங்காவில் நீதிக்கானவெளி
தமிழர்களுக்கு இல்லை என்பதனை வெளிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவை
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, அனைத்துலக நீதிமன்றத்திலோ நிறுத்தவதன் ஊடாகத்தான் தமிழர்களுக்கான
நீதியினைப் பெறமுடியும் எனத் மற்றைய ஊடகச் செய்தியில் தெரிவித்துள்ளது.
இதேவேளை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மனிதஉயிர்களுக்கு அச்சுறுத்தலாக பாரிய நெருக்கடி நிலையினை
ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை தனக்கு சாதகமாக்கிய ஒரே அரசு என்ற இடத்தினை ‘சிறிலங்கா’ பிடித்துள்ளது என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்டத்திற்கு சென்று உணவு பொருட்கள் விற்பனை photo
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்டத்திற்கு சென்று
உணவு பொருட்கள் விற்பனை photo
கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முகமாக அரசாங்கத்தினால்
முன்னெடுக்கபட்டுள்ள ஊரடங்கு சட்ட வேலையில் பிரதேச செயலங்களில் அனுமதிபெற்ற தனியார் கடை உரிமையாளர்கள்
வீடுகளிலேயே தங்கியிருக்கும் தோட்ட மற்றும் கிராமபுற வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோக்கும்
செயற்பாடுகள் மலையத்தில் சில பிரதேசங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் கண்டி மாவட்டம்
தொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ டெல்டா தோட்டத்தில் இந்த செயற்திட்டம் நடைமுறைபடுத்தபட்டது




பிரிட்டனில் மூவர் தீயில் எரிந்து பலி – விசாரணைகள் தீவிரம்
பிரிட்டனில் மூவர் தீயில் எரிந்து பலி – விசாரணைகள் தீவிரம்
நேற்று ஞாயிறு கிழமை Hemel Hempstead பகுதியில் வீடொன்றுக்குள் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் எரிந்த நிலையில்
சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
இவ்வாறு மீட்க பட்டவர்களது சடலங்கள் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
மேற்படி மரணம் தொடர்பிலான விசாரணைகள் தீவிரம் பெற்று வருகின்றன

இந்தியாவில் கொரோனாவுக்கு 1024 பாதிப்பு – 27 பேர் பலி
இந்தியாவில் கொரோனாவுக்கு 1024 பாதிப்பு – 27 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலக்கத்தை எட்டியுள்ள நிலையில், பலியின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. மெதுவாக அதிகரிக்கத்
தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம், மார்ச் மாதத்தில் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில்
மளமளவென அதிகரித்து விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் கொரோனா வைரசால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி ஆயிரத்தை தாண்டி 1024 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் இன்று புதிதாக 23 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா
மாநிலத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் அம்மாநிலத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் 20 பேருக்கு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 50 பேரும், கர்நாடகாவில் 83 பேரும், பீகாரில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லண்டன் டூட்டிங் பகுதியில் டாக்ஸி ஓடிய தமிழர் கொரனோ தாக்கி பலி
லண்டன் டூட்டிங் பகுதியில் டாக்ஸி ஓடிய தமிழர் கொரனோ தாக்கி பலி
லண்டன் ட்டோடிங் பகுதியில் யாழ்ப்பாணம் வல்வெட்டி துறையைச சேர்ந்த தமிழர் ஒருவர் கொரனோ
வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ளார்
இவ்வாறு பலியானவர் டாக்சி சாரதியாக பணியாற்றியுள்ளார்
அவ்வேளை பயணியாக வந்தவர் வழங்கிய நோயின் தாக்குதலுக்கு
காரணமாக இவர் பலியாகியுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது
மேற்படி தமிழருக்கு முக நூல் ,மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆழ்ந்த இரங்கல்களை மக்கள் தெரிவித்த வண்னம் உள்ளனர்
பிரிட்டனில் இதுவரை ஐந்து இலங்கையர்கள் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளதாக சமூக வலைத்தள
பகுதிகளில் அவதானிக்க முடிகிறது

கொரனோவை கட்டுப்படுத்த மலத்தியோன் அடிக்கும் இராணுவம்
கொரனோவை கட்டுப்படுத்த மலத்தியோன் அடிக்கும் இராணுவம்
இலங்கை மல்லாவி பகுதியில் சுகாதார அமைச்சினால் வேகமாக பரவும் வைரஸ் நோயை கட்டு படுத்தும் நோக்குடன் வீடு வீடாக
சென்றும் ,பொது இடங்கள் எங்கும் மலத்தியோன் அடிக்கும் பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது
இதன் ஊடகங் இந்த நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என அது நம்பிக்கை வெளியிட்டுள்ளது
சீனா இது போன்று செய்துள்ளதாக கருதும் இலங்கை இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக நோக்க படுகிறது


பிரிட்டன் மீளவும் வழமைக்கு திரும்ப ஆறுமாதம் பிடிக்கும் – மருத்துவ நிபுணர்
பிரிட்டன் மீளவும் வழமைக்கு திரும்ப ஆறுமாதம் பிடிக்கும் – மருத்துவ நிபுணர்
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலின் பாதிப்பில் இருந்து அந்த நாடு மீளவும் வழமைக்கு திரும்ப சுமார்
ஆறுமாதங்கள் பிடிக்கும் என மருத்துவ நிபுணர் ஒருவர் கருத்துரைத்துள்ளார்
1990 ஆண்டு பிரிட்டனில் பரவிய வைரஸ் தொற்று காலத்தில் அவ்வாறு நடந்தது என்பதும் சுமார் இருபத்தி ஆறாயிரம் மக்கள்
பலியானதாக அவ்வேளை ஆண்ட அரசு உத்தியோக பூர்வ தகவலை வெளியிட்டு இருந்தது
இம்முறையும் அவ்வாறான சம்பவம் ஒன்று நிகழும் என எதிர் பார்க்க படுகிறது ,மக்கள் நடமாட்டம் உயிரிழப்பு அதிகரித்த
நிலையில் வீதிகளில் இன்று குறைந்து காணப்படுவதை அவதானிக்க முடிந்தது

கொரனோவால் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய விழா தடை
கொரனோவால் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய விழா தடை
இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக மிக புகழ் பெற்று விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க
நாகதம்பிரான் ஆலய விழாவை நடத்திட தடை செய்யப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது
எனவே இதனை கருத்த்தில் கொண்டு மக்கள் அந்த ஆலய வழிபாட்டுக்கு தமது நேர்த்திக் கடன்களை செய்திட வரவேண்டாம்
என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
நோயின் தாக்குதலை தடுக்கும் முகமாக முதன் முதலாக இந்த விழாவுக்கு தடை ஏற்பட்டுள்ளது
கீழ் வரும் அந்த அறிவிப்பை முழுமையாக படியுங்கள் ,உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதனை பகிருங்கள்

பிரிட்டனில் ஒரே நாளில் 209 பேர் பலி – 19,522 பேர் பாதிப்பு
பிரிட்டனில் ஒரே நாளில் 209 பேர் பலி – 19,522 பேர் பாதிப்பு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 209 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,மொத்தமாக இதுவரை 1,228 பேர் பலி கியுள்ளனர்
மேலும் 19,522 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதன் உயிர் பலி சேதங்கள் எதிர்வரும் நாட்களில் மூன்று மடங்கு அதிகரிக்குமெனவும் இருபதாயிரத்துக்கு உள்ளான மக்கள்
பலியாகி கூடும் என நிபுணர்களும் தெரிவித்துள்ளனர் ,இவை இன்று காலை ஒன்பது மாணியளவிலான புள்ளி விபரம் அதன் பின்னர் இழப்புக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது என நம்ப படுகிறது
மக்கள் வீடுகளுக்குள் முடங்க மறுத்தால் எதிர் வரும் மூன்று மாதங்களுக்கு முற்றாக மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க படும் என எச்சரிக்க பட்டுள்ளது

பிரிட்டன் தொலைபேசி நிறுவனங்கள் அதிரடி – மக்களுக்கு சலுகைகள் அறிவிப்பு
பிரிட்டன் தொலைபேசி நிறுவனங்கள் அதிரடி – மக்களுக்கு சலுகைகள் அறிவிப்பு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மக்கள் பெரும் சொலென்னா துயரங்களை சந்தித்த
வண்ணம் உள்ளனர் ,பலலாயிரம் பேர் தனிமை படுத்தலுக்கும் உள்ளாக்க பட்டுள்ளனர் .
இவ்வாறான நிலையில் தொலைபேசி நிறுவனங்களை கட்டு படுத்தும் ஒப்கோம் நிறுவனத்தில் CEO மேற்கொண்ட
பேச்சுக்களின் அடிப்படையில் கீழ் வரும் நிறுவனங்கள்
The UK’s major internet service and mobile providers, namely BT/EE, Openreach, Virgin Media, Sky, TalkTalk, O2, Vodafone, Three, Hyperoptic, Gigaclear, and KCOM have all agreed the following commitments, effective immediately:
மக்களுக்கான டாட்டாக்கள் ,மற்றும் பணம் கட்டுதல் என்பனவற்றை பின்போடுவதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளன .
மாதம் தோறும் செலுத்த வேண்டிய பணம் செலுத்த தவறினாலும் அவர்கள் உங்களுக்கு தவணை முறையில் அடுத்து வரும்
மாதங்களில் செலுத்துவதற்கு அந்த தொலைபேசி நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன
All providers have committed to working with customers who find it difficult to pay their bill as a result of Covid-19 to ensure that they are treated fairly and appropriately supported.
All providers will remove all data allowance caps on all current fixed broadband services.
All providers have agreed to offer some new, generous mobile and landline packages to ensure people are connected and the most vulnerable continue
to be supported. For example, some of these packages include data boosts at low prices and free calls from their landline or mobile.
All providers will ensure that vulnerable customers or those self-isolating receive alternative methods of communication wherever possible if priority repairs to fixed broadband and landlines cannot be carried out.

கொரானோ தாக்கி 108 வயது மூதாட்டி பிரிட்டனில் பலி
கொரானோ தாக்கி 108 வயது மூதாட்டி பிரிட்டனில் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி நூற்றி எட்டு வயது மூதாட்டி ஒருவர் பலியாகியுளளார் .
இவர் பிரிட்டனின் அதிக வயதானவர் என தெரிவிக்க பட்டுள்ளது
1918 ஆம் ஆண்டு பிறந்த இவர் பிரிட்டனின் வயதானவர்களின் முதலிடம் பிடித்து சாதனை படைத்த அவ்வாறான ஒருவரை
இப்பொழுது பிரிட்டன் இந்த நோயின் தாக்குதல் மூலம் இழந்து தவிக்கிறது
இவருக்கு சமுக வலைத்தளங்களில் ஆழ்ந்த இரங்கல்கள் பகிரப்பட்டு வருகிறது
இதுவரை பிரிட்டனில் 1.029 பேர் பலியாகியும் 17,000 பேர் பாதிக்க பட்டுள்ளதும் குறிப்பிட தக்கது
அத்துடன் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன

ஸ்பெயிலில் ஒரேநாளில் 838 பேர் பலி ,இத்தாலியில் 50 மருத்துவர்கள் 889 பேர் பலி
ஸ்பெயிலில் ஒரேநாளில் 838 பேர் பலி ,இத்தாலியில் 50 மருத்துவர்கள் 889 பேர் பலி
உலககில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் ஸ்பெயினில் சுமார் 838 பேர் பலியாகியுள்ளனர்
,இதன் மொத்த உயிர்பலி எண்ணிக்கை 6,528 ஆக உயர்வடைந்துள்ளது
அதேபோல ஒரே நாளில் இத்தாலியில் 889 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை பலியானவர்கள் மொத்த எண்னிக்கை 10,023 ஆக உயர்வடைந்துள்ளது
இந்த நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கிய நிபுணத்துவம் கொண்ட ஐம்பது மருத்துவர்களும் பலியாகியுள்ளனர் .
மேலும் ஐந்தாயிரம் மருத்துவர்கள் ,தாதியர்கள் உள்ளிட்டவர்கள் பாதிக்க பட்ட நிலையில் தனிமை படுத்த பட்டுள்ளனர்
மருத்துவர்கள் பெரும் நெருக்கடியில் சிகிச்சை வழங்கி வருகின்றனர் ,உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பிரிட்டனை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு முற்றாக முடக்க வேண்டும் எனவும் அது தவறின் உயிரிழப்பு பல்லாயிரங்களை எட்டும் என எச்சரிக்க பட்டுள்ளது


இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு கொரனோ – அனைவரையும் தனிமை படுத்த நடவடிக்கை
இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு கொரனோ – அனைவரையும் தனிமை படுத்த நடவடிக்கை
இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த மக்களில் நால்வருக்கு கொரனோ நோயானது கண்டு பிடிக்க பட்ட நிலையில் அனைவரும்
தம்மை தாம் சுய தனிமைக்கு உட்படுத்த கொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சினால் அவசர வேண்டுதல் விடுக்க பட்டுளள்து
மேலதிக விபரம் கீழே


இலங்கை கடல் படை தளத்தில் துப்பாக்கி சண்டை ஒருவர் பலி – இருவர் காயம்
இலங்கை கடல் படை தளத்தில் துப்பாக்கி சண்டை ஒருவர் பலி – இருவர் காயம்
இலங்கை கல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள Mohottuwarama கடற்படை முகாமில் இடம்பெற்ற
துப்பாக்கி சூட்டு சண்டையில் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 115 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 115 பேர் பாதிப்பு
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 115 பேர் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் இதுவரை இலங்கையில் ஒருவர் பலியாகியுள்ளார்
மேலும் எதிர்வரும் நாட்களில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் என கருத்துரைக்க பட்டுள்ளது ,
இந்த நோயின் தாக்கம் தமிழர் பகுதிகளில் அதிகமாக காணப்படும் என உள்ளிருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன
தொடர்ந்து மருத்துவர் சத்திய மூர்த்தி இழப்பு விகிதத்தை மறைத்து வருவதான குற்ற சாட்டு முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் இலங்கை மருத்துவர் உள்ளிட்ட இருவர் கொரனோ தாக்குதலில் பலி
பிரிட்டனில் இலங்கை மருத்துவர் உள்ளிட்ட இருவர் கொரனோ தாக்குதலில் பலி
பிரிட்டனில் இலங்கையை சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவரான கென்றி யெவர்த்தன உள்ளிட்ட இரு இலங்கையர்கள்
கொரனோ தாக்குதலில் பலியாகியுள்ளனர் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி இவர்கள் பலியாகியுள்ளனர்
மேலும் இலங்கை தவிர்ந்த நாடுகளில் இலங்கையின் உத்தியோக பூர்வ அறிவிப்பின் பிரகாரம் நான்கு
இலங்கையர்கள் இந்த வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர்
இருபதயிரம் உயிர் பலிக்குள்ளதாக தாம் இந்த வைரஸை கட்டு
பாட்டுக்குள் கொண்டு வருவோம் என பிரிட்டன் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

இலங்கையில் ஒரு நாளில் 856 பேர் கைது
இலங்கையில் ஒரு நாளில் 856 பேர் கைது
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதியில் உலவிய மக்களில் 856 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
காவல்துறையினரின் அனுமதியின்றி வெளியில் நடமாடும் நபர்கள் தொடர்ச்சியாக கைது செய்ய பட்ட வண்ணம் உள்ளனர்
எனினும் இவ்வாறு நடமாடுபவர்கள் ஊடக இந்த நோயின் தாக்குதல் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது

கொரனோ பீதி -நீர்கொழும்பு சிறையில் இருந்து 175 கைதிகள் விடுதலை
கொரனோ பீதி -நீர்கொழும்பு சிறையில் இருந்து 175 கைதிகள் விடுதலை
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலின் பீதி காரணமாக நீர்கொழும்பு சிறையில் தடுத்து
வைக்க பட்டிருந்த சுமார் 175 கைதிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர்
சிறை காலத்தில் அவர்களின் நன் நடத்தைகளை அடிப்படையாக கொண்டு இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது
என தெரிவிக்க பட்டுள்ளது

இன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம் – மக்களே மறந்துடாதீங்க
இன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம் – மக்களே மறந்துடாதீங்க
இன்று ஐரோப்பா எங்கும் கோடைகால நேரமாற்றம்
இடம்பெறுகிறது ,ஒரு மணித்தியாலம் பின்னோக்கி நகர்கிறது
,நித்திரை பிரியர்களுக்கு பெரும் தொல்லையான நாள் இன்று .
காரணம் ஒரு மணித்தியாலம் முன்னுக்கு எழுந்து வேலைக்கு ஓட
வேண்டும் .என்ன பண்ண இது தான் ஐரோப்பாவின் விதியாக உள்ளது .
மறந்துடாதீங்க இன்று நேரமாற்றம்








