Posted in இலங்கை செய்திகள்

காதலிக்கு சண்டை போட்ட நண்பர்கள் கத்தி வெட்டு தாக்குதல்

காதலிக்கு சண்டை போட்ட நண்பர்கள் கத்தி வெட்டு தாக்குதல்

உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரப்பாணக் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ரப்பாணக் தோட்டத்தை சேர்ந்த ஐவர் கொண்ட இளைஞர் குழு ஒன்றுக்கிடையில் (29) இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இளைஞர்

ஒருவரை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த படுகொலை சம்பவத்தில் வி.தனோஷன் (வயது 19) என்ற இளைஞர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அதேநேரத்தில் இக்குழு சண்டையில் (21) வயதுடைய இளைஞர் ஒருவரும் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட

வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் உடப்புஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் கத்தி வெட்டை நடத்திய இளைஞர் தானாகவே பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஆஜராகியுள்ளதுடன் சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலிக்கு சண்டை போட்ட நண்பர்கள் கத்தி வெட்டு தாக்குதல்

அத்துடன் குறித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மேலும் இரு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் மரண

விசாரணையை வலப்பனை நீதிமன்ற நீதிவான் மேற்கொண்ட பின் சடலத்தை பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.

இந்த கத்தி வெட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் நண்பர்கள் இவர்கள் அனைவரும் (29) மாலை மது அருந்திய பின் காதல் பிரச்சினை ஒன்றுக்காக ஏற்பட்ட வாய்தர்க்கத்தினால் மோதலில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது கத்தி வெட்டை நிகழ்த்திய இளைஞரை ஏனைய இளைஞர்கள் சரமாறியாக தாக்கியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்

உடப்புஸ்ஸலாவை நகரில் உள்ள ஹாட்வெயார் ஒன்றில் வெட்டு கத்தி ஒன்றை பணம் கொடுத்து வாங்கி சென்று தன்னை தாக்கிய இளைஞர்களை வெட்டியுள்ளார்.

இதில் ஒரு இளைஞரின் உயிர் பரிபோகியுள்ளது, மேலும் ஒரு இளைஞர் வெட்டு காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில்


அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

    21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

    இலங்கை,கொழும்பு ; ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதான பொருளாதார நிலையங்களின் நுழைவாயிலை மறைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக்

    கூறப்படும் 21 போராட்டக்காரர்களின் வெளிநாட்டுப் பயணத்தை உடனடியாகத் தடை செய்யுமாறு நேற்று (28) பிற்பகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் குறித்த சந்தேகநபர்கள் வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த

    தகவலின்படி, கோட்டை பொலிஸ் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    இவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உடனடியாக கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களுக்கு அறிவிக்குமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

    21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

    சங்கைக்குரிய வீகொடவத்த காஸ்யப தேரர், திசர நுவந்த அனுராத, ருமேஸ் இந்திக்க, எல்.என்.டி பெரேரா, ஆர்.ஏ. ராஜபக்ச, சிறில் மனதுங்க, இசுரு வர்ணகுல, ரொஷான் அலி டானிஷ் அலி, சண்டிமால் கமகே, டி.ஆர்.டி. பெந்தர

    ஆரச்சி, எம். காசிம், என். எம். தௌபிக், நிலந்த சமித் பெர்னாண்டோ, பந்துல பிரபாத், சமீர மதுசங்க சிறிவர்தன, எச். எம். டி. ஜி. மெனிகா, எம்.ஆர். சாரக

    கிம்ஹான், சதுரிகா சரோஜினி, ஜே. நிலந்த, எம். நிஷாந்தி மற்றும் சுதத் லக்ஷ்மன் ஆகிய 21 பேருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    கடந்த 13ம் திகதி, தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை மிரட்டி, நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஈடுபட்ட ரொஷான் அலி டானிஷ்

    அலி மற்றும் சமிந்த கலும்பிரிய அமரசிங்க ஆகியோரின் வெளிநாட்டு பயணத்தை இடைநிறுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.

    கறுவாத்தோட்ட பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட டானிஷ் அலியை எதிர்வரும் 1ஆம் திகதி

    நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடப்பட்டது.சந்தேக நபரின் அடையாளப் பிடியாணையையும் பிரதம நீதவான் இரத்துச் செய்தார்.

    அத்துடன், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் டெம்பிடியே சுகதானந்த

    தேரரையும் கைது செய்வதற்காக கோட்டை நீதவான் திலின கமகே பிடியாணை பிறப்பித்துள்ளார்.

    கல்வி அமைச்சுக்கு முன்னால் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட

    ருஹுணு பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் என்னடி வேரங்க புஷ்பக டி சில்வாவை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

    இதேவேளை, பாராளுமன்றம் செல்லும் பொல்துவ சந்திக்கு அருகில் (13ஆம் திகதி) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலவரச் சூழலுக்கு தூண்டியதாக

    கூறப்படும் போராட்டத்தின் தீவிர உறுப்பினரான பெத்தும் கர்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (28ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமரை வெளியேறுமாறு வலியுறுத்தி பொல்துவ சந்திக்கு அருகில் போராட்டம் நடைபெற்றுக்

    கொண்டிருந்த வேளையில் பெரும் கும்பலை அந்த இடத்திற்கு வரவழைத்து பாராளுமன்றத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு குறிப்பிடுகின்றது.

    அன்றைய தினம், ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலாவது பாதுகாப்பு அரணை உடைத்து, இரண்டாவது பாதுகாப்பு வேலியில் கடமையாற்றிய இராணுவத்தின் பாதுகாப்புப் படையினருடன் மோதலுக்குச் செல்ல முற்பட்டுள்ளனர்.

    அங்கு நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க நடவடிக்கை

    எடுத்ததுடன், அங்கு 24 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தாக்கப்பட்டனர். மேலும், போராட்டக்காரர்கள் இரு இராணுவ வீரர்களை தாக்கி அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகளையும் திருடிச் சென்றதாக தெரிவிக்பட்டது

    இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக திரு.பெத்தும் கெர்னர் கடந்த 18ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த

    போதிலும், அவர் அன்றைய தினம் அங்கு ஆஜராகாத போதிலும், நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவிடம் சரணடைந்தார்.

    அதன்படி அவர் கைது செய்யப்பட்டதாக அந்த பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இராணுவ மருத்துவப் பிரிவில் லெப்டினன்டாக இருந்து வெளியேறி இங்கிலாந்து சென்றுள்ள இவர், அங்கிருந்து இலங்கையில் இளம் சமூகத்தை

    இணையத்தில் போராட்டத்துக்கு தூண்டிவிட்டு வருவது தெரியவந்துள்ளது. காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பமானதும், இந்நாட்டிற்கு வந்த பெத்தும் கெர்னரை


    போராட்ட களத்தில் இருந்து விரட்டியடிக்க அங்கிருந்த ஒரு குழுவினர் செயற்பட்டுள்ளனர்.

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்

      லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்

      ,

      லண்டன் லூசியம் பகுதியில் வீட்டு வாத்துரூம் கூரை இடிந்து வீழ்ந்தவருக்கு எட்டு ஆயிரம் தண்டம் அறவிட பட்டுள்ளது ..

      குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு பலமுறை முறைப்பாடு செய்தும் அவர் வாத்துருமை அதனை திருத்தி கொடுக்கவில்லை .

      சம்பவ நாள் ஒன்று அந்த கூரை இடிந்து வீழ்ந்துள்ளது .வீட்டில் வசித்தவர்கள் கவுன்சிலுக்கு அறிய தந்த நிலையில் நீதிமன்றில் இது குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது .

      லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்

      தற்போது வீட்டினை வாடகைக்கு வழங்கியவர் உரியமுறையில் உயிர் பாதுகாப்பு பேணப்படாது ஆபாயகரமான நிலையில் வீட்டை வழங்கியதால் எட்டு ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது.

      லண்டன் லூசியம் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க

      லண்டனில் சில தமிழர்களும் இவ்வாறு வீடுகளை வாடகைக்கு வழங்குவதும் வீட்டில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் அதனை திருத்தி கொடுக்காது காலம் தாழ்த்துவது .

      வீட்டில் உள்ளவர்களை கேவலமாக பேசி வந்த நிலையில் அவர்களும்
      இவ்விதமான சிக்கலுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே கவனிக்க தக்கது.

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        துருக்கியில் பிள்ளை பெற்ற பிரிட்டன் பெண்ணுக்கு 50 ஆயிரம் பவுண்டு கட்டணம்

        துருக்கியில் பிள்ளை பெற்ற பிரிட்டன் பெண்ணுக்கு 50 ஆயிரம் பவுண்டு கட்டணம்

        ,

        துருக்கி ,பிரிட்டனில் இருந்து துருக்கி நாட்டுக்கு உல்லாச பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பெண் அங்கு குழந்தை பெற்றார் .


        இவரது மருத்துவ அனுமதி கட்டணம் 4500 பெறப்பட்டுள்ளது .

        அதன் பின்னர் பிள்ளை பேறு மற்றும் தாயார் பராமரிப்பு மற்றும் மருத்துவ செலவுகள் உள்ளடங்களாக ஐம்பதாயிரம் பவுண்டுகள் கட்டணம் குவிந்துள்ளது.

        இதனால் குறித்த தம்பதிகள் என்ன செய்வது என தெரியாதது திண்டாடி வருகின்றனர் .

        உல்லாச பயணம் சென்ற கர்ப்பிணி அங்கு குழந்தை பெற்றவுள்ளதால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது .

        மேலு இவருக்கு மருத்துவக்காப்புறுதி வழங்கிட காப்புறுதி நிறுவனம் மறுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

        குறித்த தம்பதிகள் மருத்துவ கட்டணம் செலுத்திட மக்களிடம் பணம் சேகரிக்கும் திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

          Posted in உலக செய்திகள்

          வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்கா 16 பேர் பலி

          வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்கா 16 பேர் பலி

          அமெரிக்கா Kentucky பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 மக்கள் பலியாகியுள்ளனர் .

          மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டுள்ளது .

          .இந்த வெள்ளத்தில் சிக்கி இருபத்தி மூவாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்த வண்ணம் உள்ளனர்.


          மீட்பு படையினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.

          Kentucky ஆளுநர் பாதிக்க பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகள் வழங்க பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.


          வீடுகள் வெள்ளத்தில் மூக்கியுள்ளதால் பல மில்லியன் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது .

          வெள்ளநீர் தொடர்ந்து நீடித்து செல்வதால் மக்கள் பெரும் இடர்களுக்கு உள்ளாகியுள்ளனர் .


          வாகனங்கள் என்பன வெள்ள நீரில் அடித்து செல்ல படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

          இந்த அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு அதிகரிக்க படலாம் என எதிரி பார்க்க படுகிறது .

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் புதிய சட்டம் ஜனாதிபதி பல்லு பிடுங்க படுமா

            இலங்கையில் புதிய சட்டம் ஜனாதிபதி பல்லு பிடுங்க படுமா

            நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் 22ஆம் திருத்தத்தை மீண்டும் திருத்தி, 19 ஆம் திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட விடயங்களையும்,

            அதில் இருந்த பலவீனமான சரத்துக்களை நீக்கி 19ஐ விஞ்சிய புதிய திருத்தும் ஒன்றினை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

            கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

            22ஆம் திருத்த சட்டம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு, வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அப்போதைய ஜனாதிபதி

            கோட்டாபய ராஜபக்‌ஷ 22 ஆம் திருத்தத்திற்கு உப இணைப்புகள் சிலவற்றை உள்ளடக்கினார். அது மீண்டும் நிறைவேற்று அதிகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

            இலங்கையில் புதிய சட்டம் ஜனாதிபதி பல்லு பிடுங்க படுமா

            எனினும், இப்போது அரசாங்கம் முழுமையாக மாறியுள்ள காரணத்தினால் மீண்டும் அமைச்சரவையில் யோசனை ஒன்றினை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி முன்வைத்த இணைப்புகளை நீக்கி மீண்டும் 19 ஆம் திருத்தத்தில்

            கொண்டுவரப்பட்ட விடயங்களையும், அதில் இருந்த பலவீனமான சரத்துக்களை நீக்கி 19 ஆம் திருத்தத்தை விஞ்சிய புதிய திருத்தும் ஒன்றினை கொண்டுவர அறிவுறுத்தியுள்ளேன்.

            குறித்த சட்டமூலம் அமைச்சரவை காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த திங்கட்கிழமை அமைச்சரவையில் அனுமதியை பெற்ற பின்னர்

            வர்த்தமானி அறிவித்தலுக்கு விடவும், அடுத்த ஏழு நாட்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

            இது குறித்து சகல தரப்புடனும் கலந்துரையாடி சகலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் அரசியல் அமைப்பு திருத்தத்தை

            கொண்டுவரவும், அதேபோல் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைத்து நாட்டிற்கு பொருத்தமான புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை உருவாக்கவும் அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

            பாதுகாப்பபு அமைச்சு ஜனாதிபதியிடம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றம் இல்லை, இந்த அரசியல் அமைப்பின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சு

            மாற்றப்பட வேண்டும் என்றால் சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும்.
            அதற்கு இப்போது வாய்ப்பில்லை என்றார்.

              Posted in இலங்கை செய்திகள்

              அமெரிக்கா இலங்கை திடீர் சந்திப்பு

              அமெரிக்கா இலங்கை திடீர் சந்திப்பு

              பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

              பிரதமர் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

              நாட்டின் பொருளாதார சவால்களை சமாளிக்க அமெரிக்கா எந்த வழிகளில் ஆதரவை வழங்க முடியும் என்பது குறித்து இதன்போது கவனம்

              செலுத்தப்பட்டதாக அமெரிக்க தூதர் ஜூலி சங் தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

              சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான உரிய நடைமுறைகள் குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது.

              நீதிக்கான அணுகல் மற்றும் சட்டத்தின் ஆட்சி குறித்தும் விரிவாக
              கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

                Posted in இலங்கை செய்திகள்

                ரயில் விபத்தில் இரண்டு பெண்கள் காயம்

                ரயில் விபத்தில் இரண்டு பெண்கள் காயம்

                வெள்ளவத்தை பகுதியில் இரண்டு யுவதிகள் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

                விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளம்பெண்களும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                ரயில் விபத்தில் இரண்டு பெண்கள் காயம்

                20 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

                இவர் கிரேசியன் பிரிவு, உடபுஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

                வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் பொலிஸ் உயிர்காப்பு பிரிவுக்கு அருகில் இந்த ரயில் விபத்து இடம்பெற்றுள்ளது.

                கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் நேற்று பிற்பகல் வேளையில் யுவதிகள் இருவரும் மோதுண்டுள்ளனர்.

                உயிரிழந்த யுவதியும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யுவதியும்
                ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கைக்கு நிதி வழங்க மாட்டோம் சர்வதேச நாணய நிதியம்

                  இலங்கைக்கு நிதி வழங்க மாட்டோம் சர்வதேச நாநாணய நிதியம்

                  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு நாம நிதி வழங்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது

                  இலங்கை ஜனாதிபதி ஜனாதிபதியாக பதவி ஏற்ற மறுதினம் மக்கள் மீது இராணுவத்தை ஏவி தாக்கல் நடத்திய பின்னர் உலக நாடுகள் கண்டனத்திற்கு

                  உள்ளாக்கியதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

                    Posted in உலக செய்திகள்

                    தாய்வான் விவகாரம் அமெரிக்கா சீன அதிபர்கள் போனில் பேச்சு

                    தாய்வான் விவகாரம் அமெரிக்கா சீன அதிபர்கள் போனில் பேச்சு

                    தாய்வான் விவகாரம் தொடர்பில் சீனா அதிபர் மற்றும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் தொலைபேசி மூலம் பேச்சில் ஈடுபட்டனர்.

                    இந்த பேச்சின் மூலமாக தாய்வானை ஆக்கிரமிக்க முனையும் சீனா விட்டு கொடுப்புகளுடன் பதட்டத்தை தணிக்குமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .

                    விசேட தாக்குதல் மூலம் தாய்வானை ஆக்கிரமிக்கும் நகர்வில் சீனா ஈடுபட கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

                    அதனால் அமெரிக்கா சீனாவுடன் அவசரமாக தொலைபேசி மூலம் பேச்சுக்களில் ஈடுபட்டதாக தெரிவிக்க படுகிறது.

                    இந்த சீனா அமெரிக்காவுக்கு இடையிலான பேச்சு சுமுகமாக முடிந்துள்ளதா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.

                      Posted in உலக செய்திகள்

                      குருதீஸ் பகுதிகளை இலக்கு வைத்து தாக்கும் துருக்கி இராணுவம்

                      குருதீஸ் பகுதிகளை இலக்கு வைத்து தாக்கும் துருக்கி இராணுவம்

                      துருக்கி ; ஈராக்கில் உள்ள குருதீஸ் போராளிகள் கட்டுப்பாட்டு பகுதியான Dohuk பிரேதசத்தை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ரொக்கட் தாக்குதலை துருக்கிய இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .

                      துருக்கிய இராணுவம் மேற்கொள்ளும் இந்த தாக்குதல்களினால் குருதீஸ் பகுதிகள் பலமான பாதிப்பிற்கு உள்ளாகிய வண்ணம் உள்ளது .

                      துருக்கிய இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் குருதீஸ் மக்கள் பலநூறு பேர் பலியாகிய வண்ணம் உள்ளனர் .

                      துருக்கி இராணுவ தாக்குதல் அச்சம் காரணமாக மக்கள் இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .

                        Posted in இலங்கை செய்திகள்

                        பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு

                        பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு

                        இலங்கை ,கொழும்பு ; நேற்று (29) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

                        இதற்கமைய எதிர்வரும் 2022 ஓகஸ்ட் 03ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                        அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய வெளியிடப்பட்டுள்ள இந்த

                        வர்த்தமானியில் 9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைவதோடு, 9ஆவது பாராளுமன்றத்தின் 3ஆவது

                        கூட்டத்தொடர்
                        எதிர்வரும் ஓகஸ்ட் 03ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          அவசரகால சட்டம் அவசியம் தேவை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

                          அவசரகால சட்டம் அவசியம் தேவை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த


                          இலங்கை , கொழும்பு ;மக்கள் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் நாட்டின் இளைஞர்கள், அமைதியான போராட்டங்களில் ஈடுபட்ட போதிலும், தற்போது மக்கள் போராட்டத்தின் பின்னணியில்

                          பல்வேறு இருண்ட சக்திகள் செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாராளுமன்ற சபை முதல்வர், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

                          பாராளுமன்றத்தில் நேற்று (28) இடம்பெற்ற அவசரகால நிலை பிரகடனம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பிரேம ஜயந்த 74 பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

                          பொது நிதியில் கட்டப்பட்ட சொத்துக்கள் இவை என சிலர் கூறுகின்றனர். இது உண்மையில் இவை

                          பாராளுமன்ற உறுப்பினர்களின் மூதாதையரால் கட்டப்பட்ட பரம்பரை சொத்தாகும். போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்ட சொத்துக்களை மீள கட்டியெழுப்புவதற்கு சில

                          பாராளுமன்ற உறுப்பினர்களிடம் போதிய பண வசதி இல்லை.எம்.பி கீதா குமாரசிங்க கலைஞராகப் பெற்ற விருதுகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

                          ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது . மாத்திரமன்றி புத்த பெருமானின் சிலைகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்

                          தெரிவித்துள்ளார்.இந்தச் செயல்களின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும்இ விடுதலைப் புலிகள்இ ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்

                          அவசரகால சட்டம் அவசியம் தேவை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

                          அல்லது சர்வதேச சக்திகளுடன் தொடர்புள்ளவர்கள் இதில் ஈடுபட்டுள்ளார்களா என்பது கண்டறியப்பட வேண்டும் என்றும் அமைச்சர் பிரேமஜயந்த சபையில் தெரிவித்தார்.

                          அத்துடன் ஜூலை 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்து அதன் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர்

                          நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

                          ஆகவே இந்தக் காரணங்களால் அவசரகாலச் சட்டம் தேவைப்படுவதாக அமைச்சர் பிரேமஜயந்த வலியுறுத்தினார்..

                          முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர எம்.பி

                          வன்முறைகளில் ஈடுபடுபவர்களே அவசரகால நிலை தொடர்பில் பயப்பட வேண்டும். சாதாரண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அது தொடர்பில் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை .

                          இளைஞர்கள் தமது எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். வழக்கு, நீதிமன்றம் என்று சென்றால் ஆர்ப்பாட்டத்துக்கு தூண்டி விடுபவர்கள் எவரும் இளைஞர்களை பாதுகாக்க வரப்போவதில்லை

                          வன்முறைகளில் ஈடுபடுபவர்களே அவசரகால நிலை தொடர்பில் பயப்பட வேண்டும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அது தொடர்பில் பயப்பட வேண்டிய அவசியம் இல் லை

                          குழப்பகரமான சூழ்நிலையை பொலிசாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அவசரகால நிலையை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.

                          எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

                          மாணவர்களுக்கு பாடசாலைக்கு செல்வதற்கு அவசர தேவைகள் உள்ளன.நோயாளர்களுக்கு மருந்து அவசரமாக தேவைப்படுகிறது. தாய்மாருக்கு பிள்ளைகளுக்கு பால்மா அவசரமாக தேவைப்படுகின்றது.

                          விவசாயிகளுக்கு உரம் தேவைப் படுகிறது இவ்வாறு நாட்டு மக்களுக்கு பல அவசர தேவைகள் காணப்படுகின்றன. ஆனால் அரசாங்கத்தின் தேவை அவசரகால சட்டத்தை நிறைவேற்றுவதாகும்.

                          அலரிமாளிகையில் ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையின் இறுதியாக வீடுகள் எரிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

                          எனினும் 69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பதவி விலகுவார் என்றே நாம் நினைத்தோம். ஆனால் அவர் நாட்டை விட்டு செல்வாரென நினைக்கவில்லை.

                          பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்

                          காணாமலாக்கபட்டோர் விவகாரம், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரச தலைவர்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.

                          “இலங்கை அரசியல் வரலாற்றில் தவறுகளை திருத்திக் கொள்ள அரசியல் தலைவர்களுக்கு பல சந்தர்ப்பம் கிடைத்த போதும் அவர்கள் அவற்றை முறையாக

                          பயன்படுத்திக்கொள்ளவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அதுவும் ஒரு காரணியாக காணப்படுகிறது.

                          தற்போதைய அரச தலைவர்கள் வரலாற்று ரீதியிலான தவறை திருத்திக்கொண்டு பொருளாதார முன்னேற்றம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

                          தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்தால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருமித்த வகையில் தீர்வு காண முடியும்.

                          வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட பொருளாதார வலயங்களை
                          ஸ்தாபித்தால் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை சிறந்த முறையில்


                          எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு அடிப்படை பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு அவசியம்.

                            Posted in உலக செய்திகள்

                            சிரியாவுக்கு நவீன ஏவுகணைகள் விற்கும் ரசியா

                            சிரியாவுக்கு நவீன ஏவுகணைகள் விற்கும் ரசியா

                            சிரியா நாட்டிற்கு ரசியா நவீன் S-300, S-400 to Syria ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்ம் கைச்சாத்திட்டுள்ளது.

                            எதிர் வரும் ஆறுமாதங்களுக்குள் ஏனைய இந்த ஏவுகணைகள் சிரியாவுக்குள் நிறுத்த படும்.

                            வான் மறிப்பு ஏவுகணைகளை சிரியா ரசியாவிடம் இருந்து வாங்கி குவிகிறது.


                            ரசியா வின் இந்த ஏவுகணைகள் சிரியாவின் களத்தில் முறையாக வேலை செய்யவில்லை என்கின்ற குற்ற சட்டு முன் வைக்க
                            பட்ட நிலையில் இந்த வான்மறிப்பு ஏவுகணைகள் விற்பனை இடம்பெறுகின்றமை குறிப்பிட தக்கது.

                              Posted in உலக செய்திகள்

                              உக்கிரேனுக்கு டாங்கிகள் ஆட்டிலொறிகளை அள்ளி வழங்கும் ஜெர்மனி

                              உக்கிரேனுக்கு டாங்கிகள் ஆட்டிலொறிகளை அள்ளி வழங்கும் ஜெர்மனி

                              ஜெர்மன் – உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய மேற்கொண்டு வரும் போரினை அடுத்து அவசர ஆயுத உதவியாக ஜெர்மன் உக்கிரேனுக்கு 1.7 பில்லியனுக்கு ஆயுதங்களை விற்றுள்ளது

                              அவசர உதவி திட்டத்தின் கீழ் ஜெர்மன் தயரிப்பான நூறு டாங்கிகள் மற்றும் அதிநவீன நீண்டதூர அட்டிலொறிகள் என்பன வழங்க பட்டுள்ளன .

                              தற்போது உக்கிரேனுக்கு இந்த ஆயுத தொகுதிகள் விநியோகிக்க பட்டுள்ளன .
                              உலக நாடுகளிடம் உக்கிரேன் தொடர்ந்து ஆயுதங்களை வாங்கி குவித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

                                Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                                கடலில் மிதந்த கஞ்சா பொதிகள்

                                கடலில் மிதந்த கஞ்சா பொதிகள்

                                தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் தீடை கடல் பகுதியில் நேற்று முன்தினம் (26) மாலை இந்திய கடலோர காவல்

                                படையின் ரோந்து கப்பலான ஹோவர் கிராப்ட் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சாக்கு முடை கடலில் மிதந்து வந்துள்ளது.

                                இதையடுத்து கடலோர காவல் படையினர் மிதந்து வந்த சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்துப் பார்த்ததில் அதில் கஞ்சா பொதிகள் இருந்தமை தெரியவந்தது.

                                இதையடுத்து கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள், சுமார் 50 கிலோகிராம் என்றும் இது எப்படி கடலில் மிதந்து வந்தது, யாரேனும் கடத்தல் காரர்கள்

                                ரோந்து கப்பலை கண்டதும் கடலில் போட்டுவிட்டு தப்பிச் சென்றார்களா என்ற கோணத்தில்,


                                இந்திய கடலோர காவல் படையினர் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

                                  கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  எரிபொருள் நிலையத்தில் துப்பாக்கி சூடு

                                  எரிபொருள் நிலையத்தில் துப்பாக்கி சூடு

                                  இலங்கை ,கொழும்பு ; பதுளை- பசறை பகுதியில் உள்ள பிரதான எரிபொருள் நிலையம் ஒன்றில் .

                                  எரிபொருளை பெற்று கொள்ள வந்தவருக்கும் எரிபொருள் நிலைய முகாமையாளருக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.


                                  இதன் பொழுது எரிபொருள் பெற்று கொள்ள வந்த நபர் கைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார் .

                                  இதனால் அவ்விடத்தில் பதட்டம் ஏற்பட்டதுடன் காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையில் விட்டு வெளியேற மகிந்த பசிலுக்கு தடை

                                    இலங்கையில் விட்டு வெளியேற மகிந்த பசிலுக்கு தடை

                                    இலங்கை ,கொழும்பு ; இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாற்று பசில் ராஜபக்ச ஆகியோர்நாட்டை விட்டு வெளியேற மீளவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

                                    லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்ட இவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடி விடுவார்கள் என்ற நிலையில் நீதிமன்றினால் இந்த தடை விதிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    புதிய ஜனாதிபதி மீதான எதிர்ப்பார்ப்பு 12 மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது சஜித்

                                    புதிய ஜனாதிபதி மீதான எதிர்ப்பார்ப்பு 12 மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது சஜித்

                                    பதவிப்பிரமாணம் செய்த நாள் இருந்த எதிர்பார்ப்பு, பன்னிரெண்டு மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது. சந்தர்ப்பவாத அரசியல் எங்களிடம் இல்லை.

                                    ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயல்பட முடியுமான எதிர்பார்ப்பை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால்

                                    நழுவவிடப்பட்டதாகவும், சந்தர்ப்பவாத அரசியல் தம்மிடம் இல்லை எனவும், அரசாங்கத்துடன் இணையாமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு

                                    எதிர்க்கட்சியில் இருந்த வன்னம் கூடிய ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

                                    ஜனநாயக ரீதியாக சுதந்திரமாக போராடிய போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் தற்போது புதிய கதைகளை கூறி வருவதாகவும், உண்மையில்

                                    வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டது மகிந்த ராஜபக்ஸவின் பிரியாவிடை “அலரி மாளிகை நிகழ்வின்” போதே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

                                    வன்முறைக்கும் தீ வைப்புச் சம்பவங்களுக்கும் தான் முற்றாக எதிரானவன் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஒன்பதாம் திகதியான அன்றைய நாள் முழுவதும் நடந்தது பயங்கரவாதமே என்றும் அவர் தெரிவித்தார்.

                                    புதிய ஜனாதிபதி மீதான எதிர்ப்பார்ப்பு 12 மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது சஜித்

                                    சந்தர்ப்பவாத அரசியல் தவளைகளுக்கு நிச்சயம் மக்கள் நீதிமன்றத்தில் நஷ்டஈடு வழங்க வேண்டிவரும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், அதிலிருந்து யாரும் விடுபட முடியாது எனவும் தெரிவித்தார்.

                                    புதிய பயணமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி அழைப்பு விடுத்த போது, அது குறித்து இன்னும் நேர்மறையாகச் சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில், நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் காலிமுகத்திடல்

                                    போராட்டக்காரர்கள் மீது கோழைத்தனமான தாக்குதலைத் தொடுத்த வன்னம் அரசாங்கத்தின் ஆட்சி முறை இயல்பை நாட்டுக்கு வெளிப்படுத்தியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

                                    அது ஒரு மூர்க்கத்தனமான முட்டாள்தனம் எனவும், இதனால் ஏற்பட்ட அழிவை
                                    எந்த நாகரீகமுள்ள ஒருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      கண்ணீர் புகை குண்டுகளுடன் இளைஞர் கைது

                                      கண்ணீர் புகை குண்டுகளுடன் இளைஞர் கைது

                                      இலங்கை ,கொழும்பு ; கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது திருடப்பட்டதாக கூறப்படும் ஐந்து கண்ணீர் புகை

                                      குண்டுகளுடன் ஏத்துல் கோட்டே பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                      26 வயதான இவர் ஏத்துல் கோட்டே அழகேஸ்வர வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                      போராட்டம் இடம்பெற்ற தினத்தன்று பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை முச்சக்கரவண்டியில் கொண்டு வந்திருந்ததாகவும் அச்சந்தர்ப்பத்தில்

                                      ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் குண்டுகளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

                                      குறித்த சந்தேகநபர் இன்று ஹல்ஸ்டோர்ஃப் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன்இச்சம்பவம் குறித்து The Anti-Vice Unit of the Western Province-South
                                      பொலிஸ் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.