Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் கொரனோவால் 1,610 பேர் இன்று மட்டும் மரணம்

பிரிட்டனில் கொரனோவால் 1,610 பேர் இன்று மட்டும் மரணம்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி இன்று மட்டும் சுமார் 1,610 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும்

இதே நாளில் 33,355 பேர் பாதிக்க ப்பட்டுள்ளனர்

தொடர்ந்து நோயின் தாக்குதல் அதிகரித்து வருவதால் மருத்துவ

மனைகள் நிரம்பி வழிகின்றன

மேலும் விசேட அவசர மக்கள் மருத்துவ காப்பு நிலையங்களை

உருவாக்கும் படியும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் சிறந்த தமிழ் விளையாட்டு வீரர் கொரானாவுக்கு பலி

லண்டனில் சிறந்த தமிழ் விளையாட்டு வீரர் கொரானாவுக்கு பலி

யாழ் இந்துக் கல்லூரியின் 2007ம் உயர்தரப்பிரிவு மாணவனும்,


இந்துக்கல்லூரி 2004ம்,2005ம் ஆண்டுகளின் துடுப்பாட்ட அணியின் தலைவரும்,


மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளரும், துடுப்பாட்ட வீரனுமாகிய மயூரப்பிரியன் (வயது 32)


அவர்கள் லண்டனில் Corona தாக்கத்தினால் இன்று காலமாகிவிட்டார் என்பதை மிகவும் வேதனையுடன்

அறியத்தருகின்றோம் இவ்வாறு முகநூலில் சொந்தங்கள் அஞ்சலி கண்ணீரால் நனைகிறது

இவரது திறன் வாய்ந்த விளையாடடு சாதனைகள் ,இவர் மறைந்தாலும் மறையாது என்பது அந்த பாடசாலை மாணவர்கள் கருத்தாக உள்ளது .

இவருடன் இதுவரை முப்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள்

பலியாகியுள்ளதுடன் நூறுக்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இந்த

நோயினால் பாதிக்க பட்டுள்ளதும் ,சிலர் குணமடைந்து தேறியுள்ளதும் குறிப்பிட தக்கது

மிச்சம் ,லூசியம் ,ஈஸ்டம் பகுதியிலேயே அதிக தமிழர்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது

தமிழ் விளையாட்டு வீரர் கொரானாவுக்கு பலி
தமிழ் விளையாட்டு வீரர் கொரானாவுக்கு பலி
Posted in உலக செய்திகள்

பார்க்கில் சென்றவரை விரட்டி கடித்த நாய்

பார்க்கில் சென்றவரை விரட்டி கடித்த நாய்

லண்டன் Richmond Park.பகுதியில் உரிமையாளாரை அத்துமீறி பறந்து

சென்ற நாய் ஒன்று அங்கு நின்ற மான் ஒன்றை கடித்து குத்தறியதுடன்

,அங்கு நின்ற மனிதர்களையும் கடித்துள்ளது
காயமடைந்தவர்கள் உரியமுறை சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டனர்

மேற்படி நாயின் உரிமையாளர் முறையான பாதுகாப்பபு விதிகளுக்கு

உட்படுத்த படாது அழைத்து சென்ற குற்ற சாட்டில் அறுநூறு பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது

விரட்டி கடித்த நாய்
விரட்டி கடித்த நாய்
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

15 வயது சிறுவனை 40 தடவை பிளான் பண்ணி கொலை செய்த ரவுடி கும்பல்

15 வயது சிறுவனை 40 தடவை பிளான் பண்ணி கொலை செய்த ரவுடி கும்பல்

பிரிட்டனில் பதின் ஐந்து வயது கறுப்பின வாலிபர் ஒருவரி அதே கறுப்பின

ரவுடி கும்பல் ஒன்று நாற்பது தடவை பிளான் பண்ணி கொலைசெய்துள்ளது

இது தொடர்பான நீதி விசாரணைகளின் பொழுதே மேற்படி அதிர்ச்சி

தகவல் வெளியாகியுள்ளது ,
குறித்த சிறுவனை கொலை செய்த நான்கு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

கொலை செய்த ரவுடி கும்பல்
கொலை செய்த ரவுடி கும்பல்
Posted in உலக செய்திகள்

இராணுவம் கிளர்ச்சி படைகள் மோதல் 16 இராணுவம் பலி

இராணுவம் கிளர்ச்சி படைகள் மோதல் 16 இராணுவம் பலி

ஆப் கானிஸ்தான் வடக்கு Kunduz மாகாணத்தில் அரச இராணுவம் மற்றும்

போராளிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி பதினாறு

இராணுவத்தினர் பலியாகியுள்ளார் .
மேலும் இந்தமோதலில் சிக்கி இரண்டு சிவிலியன்களும் பலியாகியுள்ளனர்

அரசு மற்றும் கிளர்ச்சி படைகளுக்கு இடையில் தொடர் மோதல்கள்

வெடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

லெபனானுக்கு 100 கவச வண்டிகளை அன்பளிப்பாக வழங்கிய பிரிட்டன்

லெபனானுக்கு 100 கவச வண்டிகளை அன்பளிப்பாக வழங்கிய பிரிட்டன்

பிரிட்டனராசு லெபனான் இராணுவத்தினருக்கு நூறு கவச

வண்டிகளை அன்பளிப்பு செய்துள்ளனர்

சிரியா எல்லையில் காவல் கண்காணிப்பில் ஈடுபடுவதற்கே

மேற்படி அன்பளிப்பை செய்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது

இவ்வாறு நூறு வண்டிகளை இலவசமாக பிரிட்டன் அவசரமாக

வழங்க கரணம் என்ன என்பதே எழுந்துள்ள முக்கிய கேள்வியாகும்

கவச வண்டிகளை
கவச வண்டிகளை
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போகும் மோட்டார் சைக்கிள்கள் – திருடர்கள் கைவரிசை

காணாமல் போகும் மோட்டார் சைக்கிள்கள் – திருடர்கள் கைவரிசை

மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று (18) மாத்திரம் மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள்

தொடர்பில் 06 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

திட்டமிடப்பட்டகுழுவினால் இந்த திருட்டுச் சம்பவங்கள்

முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தமது மோட்டார் சைக்கிளை

பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

அடி காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

அடி காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

வவுனியா, தரணிக்குளம் பகுதியில், தலையில் காயங்களுடன், மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில், இன்று (19) அதிகாலை

சடலமொன்று கிடப்பதாக, அவ்வழியே சென்றவர்கள், பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த ஆ.யேசுதாசன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்றும் பிரேத பரிசோதனைகளுக்காக,

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கபபட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

இராணுவ தலைமையக ஊடக பணிப்பகத்திற்கு புதிய பணிப்பாளர் பதவியேற்பு

இராணுவ தலைமையக ஊடக பணிப்பகத்திற்கு புதிய பணிப்பாளர் பதவியேற்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையக ஊடக பணியகத்தின் புதிய பணிப்பாளராக இராணுவ பீரங்கி படையணியின்

பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இன்று 19 ஆம் திகதி காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த பணியகத்தின் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்கவுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். மகா

சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் தனது பதவியேற்பிக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 ஆவது படைப்பிரிவின் 551 ஆவது பிரிகேட்டின் தளபதியாக

சேவையாற்றிய பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தற்போது இராணுவ ஊடக பணியகத்தின் பணிப்பாளராக கடமை ஏற்றுள்ளார்.

கண்டியில் பிறந்த பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன 1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டதோடு 1992 இல் தியதலவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில்

பயிற்சியினை நிறைவு செய்ததன் பின்னர் இரண்டாம் லெப்டின்னாக நியமிக்கப்பட்டார். பின்னர் அமெரிக்கா கலிபோர்னியா, கடற்படை முதுகலைமானி கல்லூரியில் பாதுகாப்பு

ஆய்வுகளை பட்டத்தை பெற்றதுடன், இராணுவ கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பயின்ற போது இலங்கை களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளில் முதுகலை பட்டமும்

பெற்றார். மேலும் அவர் இந்தியாவில் இளம் அதிகாரிகளுக்கான பாடநெறியையும் பாகிஸ்தானில் பீரங்கியாளர் உயர் கற்கை நெறியையும் நிறைவுசெய்துள்ளார்.

இவரின் முன்னைய நியமனங்களில் 6 ஆவது இலங்கை கள பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரியாகவும், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிற்றுவிப்பதிகாரியாகவும், 211 ஆவது

பிரிகேட்டின் பிரிகேட் மேஜராகவும், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் கற்கை நிலைய பதவி நிலை அதிகாரி, 16 ஆவது இலங்கை பீரங்கி படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி

இலங்கை இராணுவத் தலைமையகத்தில் பொது நிர்வாக அதிகாரி 1, இராணுவத் தளபதி சேவைகள் உதவி அதிகாரி (2011-2013),

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியின் செயலாளர் (2013-2014), 16 ஆவது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி ,

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பயிலிளவல் அதிகாரிகள் பிரிவின் பிரதம பயிற்சி அதிகாரி போன்ற முக்கிய பதவிகளை

வகித்துள்ளார். மேலும், மேற்கு சகாரா ஐக்கிய நாடுகள் சபை (2008 -2009) இராணுவ அவதானிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அவரது இராணுவ வாழ்க்கையில் ரண சூர பதக்கம் மற்றும் உத்தம சேவை பதக்கம் ஆகியவை பெற்றதுடன் ; ‘The Impact of Changing

External Conditions on Counter Insurgency: The Sri Lankan Experience’ என்ற நூலின் நூல் ஆசிரியரும் ஆவார்

Posted in உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடி

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடி

உலகம் முழுவதும் தற்போது 2 ஆவது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இதனைத்தொடர்ந்து உலக நாடுகள் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக இடைவெளியை

மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 95,976,177 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 68,593,307 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2,048,328 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 25,334,542 பேர் சிகிச்சை பெற்று

வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 111,848 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகிய மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகை

வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகிய மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகை

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிப்புக்குள்ளாகிய வீட்டுமட்ட, வர்த்தக மற்றும் கைத்தொழில் மின்சாரப் பாவனையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள

நிறுவனங்களுக்கு மின்சார மற்றும் நீர்க் கட்டணப் பட்டியலை செலுத்துவதற்கு சலுகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாகவே அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

இது தொடர்பாக 2021.01.18 அன்று மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் பின்வருமாறு:

  1. கொவிட் 19 தொற்றுப் பரவலால் பாதிப்புக்குள்ளாகிய மின்சாரப் பாவனையாளர்களுக்கான சலுகை வழங்கல்

கொவிட் 19 தொற்றுப் பரவலால் பாதிப்புக்குள்ளாகிய மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனை மற்றும் தொற்றுப்

பரவலால் பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணப் பட்டியல் மற்றும் நீர்க் கட்டணப் பட்டியல் செலுத்துவதற்கு சலுகை வழங்குவதற்கு

ஏற்புடையதாக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணுமாறு

நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வீட்டுமட்ட, வர்த்தக மற்றும் கைத்தொழில் மின்சாரப் பாவனையாளர்களுக்கு குறித்த

காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணப் பட்டியலைச் செலுத்துவதற்காக பட்டியல் திகதியிலிருந்து 06 மாதங்களுக்கு

இலகு தவணைக் காலத்தை வழங்கலும் அதுவரை மின் துண்டிப்பு மேற்கொள்ளாதிருத்தல்.

• தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட சினிமா திரையரங்குகளில் 2020 மார்ச் மாதம் தொடக்கம் திசம்பர் மாதம் வரையான மின் கட்டணப் பட்டியல், அதன் பட்டியல்

திகதியிலிருந்து 12 சமமான மாதாந்த தவணைகளில் செலுத்துவதற்கு வாய்ப்பு வழங்கலும் அதுவரை மின் துண்டிப்பு மேற்கொள்ளாதிருத்தல்

• இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள தங்குமிடங்களுக்காக 2020 மார்ச் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 2021 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை

சேர்ந்துள்ள மின் கட்டணப் பட்டியல் 12 சமமான மாதாந்த தவணைகளில் செலுத்துவதற்கு வாய்ப்பு வழங்கலும் அதுவரை மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருத்தல்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் சம்பளம் 25% அதிகரிக்கும் என அறிவிப்பு

இலங்கையில் சம்பளம் 25% அதிகரிக்கும் என அறிவிப்பு

ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தில்

திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க சம்பளக் கொடுப்பனவு

சட்டத்திலேயே இவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக்

கொடுப்பனவை 25 சதவீதத்தால் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 53 ஆயிரத்தை கடந்த கொரனோ நோயாளிகள்

இன்றைய தினத்தில் நாட்டில் 749 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா

தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்துள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

ஆதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 53,062 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 45,171 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 264 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

7,627 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

மகிந்த,கோட்டாவை தூக்கில் போடுக ஐநாவிடம் சம்பந்தர்,கூட்டணி வேண்டுதல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, நான்கு அம்சங்களை உள்ளடக்கி, தமிழ் மக்கள் சார்பாக கோரிக்கைக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நேற்று (17) திகதியிடப்பட்ட அந்தக்

கடிதத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ சி.வி. விக்னேஸ்வரன்

ஆகியோரும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அடங்கலாக 11 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில், தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு கோரல்’ எனத் தலைப்பிட்டுள்ள அக்கடிதத்தின் பிரதிகள் ஐக்கிய நாடுகள்

மனித உரிமைப் பேரவையின் 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் நிலைமை குறித்து ஆராயப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடருக்கு

ஆயத்தமாகும் இவ்வேளையில், இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள், தமிழ்த் தேசிய கட்சிகளின்

தலைவர்கள், பாதிக்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள், தமிழ் சிவில் அமைப்புகள் ஆகிய நாம் இக்கடிதத்தை எழுதுகின்றோம்.

ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானங்களில் இலங்கை அரசாங்கம் உறுதிமொழி கொடுத்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்வதற்காகக் கூடுகையில், இவ்வாறான முடிவெடுத்து இறுதித்

தீர்மானமொன்றை நிறைவேற்ற வேண்டும். இத்தீர்மானமானது, இனப்பிரச்சினையால் ஏற்பட்ட ஆயுதப் போராட்டத்தின் போது,

இழைக்கப்பட்ட இனப் படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்கும்.


பொறுப்பிலிருந்து இலங்கை தவறிவிட்டதென்றும், இதை ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ, கலப்புப் பொறிமுறை

மூலமாகவோ இலங்கை செய்யும் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்.

ஆகையால்,
1) இலங்கையை இனப்படுகொலை,மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும் வேறு

பொருத்தமானதும் செயற்படுத்தக் கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான

நடவடிக்கைகளை ஐ.நா பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்புச் சபை போன்றவை எடுக்க வேண்டுமென்று, இப்புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

2) ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தலைவர், இவ்விடயத்தை மேலே கூறப்பட்டபடி நடவடிக்கைக்காக மீளவும் செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


3) ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகம், இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகிற மீறுதல்களைக்

கண்காணிக்கவும் இலங்கையில் அவ்வலுவலகம் ஒன்றை ஸ்தாபித்தல் வேண்டும்.

4) மேலே ‘1’ இல் கூறியதற்குப் பங்கமில்லாமல் ஐ.நா பொதுச் சபையின் உப பிரிவாக, சிரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளைச் சேகரிக்கிற பொறிமுறை போன்றதொன்றை

(ஐஐஐஆ) கடுமையான 12 மாத அவகாச நிபந்தனையோடு ஏற்படுத்துதல் வேண்டும்.


‘பொறுப்புக்கூறல் சம்பந்தமாக பலமான நடவடிக்கை எடுப்பதற்காக உயரிய தளங்களுக்கு இவ்விடயம் கொண்டு

செல்லப்படல் வேண்டும் என்பதை நாம் மீளவும் வலியுறுத்துகிறோம்.

ஆகையால்,இதுவரைக்கும் நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தீர்க்கமாகவும் காலம் கடத்தாமலும் நடவடிக்கை எடுக்குமாறு நாம் உறுப்பு நாடுகளுக்கு

வலியுறுத்துகிறோம்’ என்று அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இந்தியா கட்டி கொடுத்த மருத்துவமனை

இந்தியாவின் இலங்கைக்கான கண்டி புதிதாக பொறுப்பேற்றுள்ள இலங்கைகான இந்திய உதவி தூதுவர் ராக்கேஸ் நடராஜ் இந்திய நிதி உதவியில் அமைக்கப்பட்ட டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் குறைநிறைகளை ஆராய்வதற்காக நேற்று (17) திகதி டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

சுமார் 152 வரலாற்றினை கொண்ட குறித்த வைத்தியசாலைக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 2011 ஆண்டு 150 கட்டில்களைக்கொண்ட மூன்று மாடி புதியக்கட்டடம் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட ஆரம்பிக்கப்பட்டு 2013 ஆண்டு நிறைவு செய்தது.

குறித்த வைத்தியசாலையில் ஆறு சத்திரசிகச்சைகள் ஒரு அவசரசிகிச்சைப்பிரிவு அதிநவீன சமையலறை கழிவறை உட்பட வைத்தியர் விடுதிகள் ஆகியன கொண்டு அமைக்கப்பட்ட குறித்த வைத்தியசாலையினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 2017 ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

இவ்வாறு இந்திய அரசாங்கத்தினால் நிர்மானிக்கப்பட்ட இந்த புதிய வைத்தியசாலையில் கடந்த காலங்களில் ஒரு சில குறைபாடுகள் காணப்பட்டன.

நவீன முறையில் அமைக்கப்பட்ட கழிவறை சுத்திகரிப்பு பிரிவு பழுதடைந்தமையினால் அதில் வெளியேறும் கழிவு நீர் பிரதேசம் முழவதும் துர்நாற்ம் வீசியது.,

இதனால் சிகச்சைக்கு வருபவர்களும் வைத்தியர்கள் ஊழியர்கள் பிரதேச வாசிகள் என பலரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

இதனை புனரமைப்பதற்கு சுகாதர பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் அது கைக்கூடவில்லை இது போன்று இன்னம் சில குறைபாடுகளும் காணப்பட்டன.

இது குறித்து இந்திய உதவி தூதரகத்திற்கும் அறிவிக்கப்;பட்டிருந்தமையினாலும் அவர் இது குறித்த ஆராய்ந்து பார்ப்பதற்காகவே நேற்று (17) வருகை தந்திருந்தார்.

இதன் போது குறைபாடுகள் குறித்தும் வைத்தியசாலையில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் குறித்தும் உடனடியாக விளக்கமான அறிக்கை ஒன்றினை தனக்கு சமர்ப்பிக்குமாறும் அது குறித்து இந்திய அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கத்திடமும் பேசி இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவர் இதன் போது தெரிவித்தார்.

வைத்தியசாலையின் கடமை வைத்திய பணிப்பாளர் அருள்குமார் உட்பட வைத்தியசாலையின் வைத்தியர்கள் இந்த கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதுடன் பதவியேற்று எட்டு தினங்களிலேயே இந்த வைத்தியசாலையின் குறை நிறைகளை ஆராய இவர் விஜயம் செய்திருப்பதனால் மிக விரைவில் பிரிச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என நம்புவதாக இதன் போது வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்தன.

Posted in உலக செய்திகள்

வாலிபர் மீது கத்தி குத்து – சாலை அடித்து பூட்டு

வாலிபர் மீது கத்தி குத்து – சாலை அடித்து பூட்டு

லண்டன் major road through Neasden, near the North Circular பகுதியில் நேற்று

இரவு ஒன்பது முப்பது மணியளவில் வாலிபர் ஒருவர் மீது சரமாரி கத்தி குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது

இதில் பலத்த காயமடைந்த அவர் இரத்த வெள்ளத்தில் மீட்க பட்டு

தீவிர சிகிச்சை பிரில் அனுமதிக்க பட்டுளளார்

இந்த கொலைவெறி தாக்குதலுக்கு உரிய காரணம்

தெரியவரவில்லை ,தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

இதனால் அவ்வழி சாலை அடித்து பூட்ட பட்டுள்ளது

வாலிபர் மீது கத்தி குத்து
வாலிபர் மீது கத்தி குத்து
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் ஒன்று கூடிய 14 வாலிபர்களுக்கு தலா 200 விகிதம் தண்டம்

லண்டனில் ஒன்று கூடிய 14 வாலிபர்களுக்கு தலா 200 விகிதம் தண்டம்

கடந்த தினத்திற்கு முன் தினம் business park in Park Royal. பகுதியில் ஆடம்பர்கர்களுடன்

ஒன்று கூடிய 14 வாலிபர்களுக்கு தலா 200 பவுண்டுகள் விகிதம் தண்டம் அறவிட பட்டுள்ளது

இவர்கள் இதனை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் ,அது தவறின்

100 முதல் 6400 வரை தண்டம் உயரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

கொரனோ விதிகளை மீறி செயல்பட்ட நிலையில் இந்த விடயம்

இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ தாண்டவம் – அமெரிக்காவில் 3,472 மற்றும் பிரிட்டனில்1,295 பேர் பலி

கொரனோ தாண்டவம் – அமெரிக்காவில் 3,472 மற்றும் பிரிட்டனில்1,295 பேர் பலி

பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்

மட்டும் அமெரிக்காவில் 3,472 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 204,214 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதேபோல பிரிட்டனில் 1,295 பேர் பலியாகியும் மேலும் 41,346 பேர் பாதிக்க

பட்டுள்ளனர் ,தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் இதன் தாக்கம்

அதிகரிக்கும் என எச்சரிக்கை பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் Heathrow விமான நிலையத்தில் வெடிகுண்டுடன் நபர் கைது

லண்டன் Heathrow விமான நிலையத்தில் வெடிகுண்டுடன் நபர் கைது

கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஐந்து முப்பது மணியளவில் லண்டன்

கீத்திரோ சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைந்த பயணி ஒருவரது

சூட்கேசில் கைக்குண்டு ஒன்று இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

சுங்க பணிகள் சோதனை மையத்தில் வெடிகுண்டு இருப்பது கண்டு

பிடிக்க பட்ட நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

விமானத்தை குண்டு வைத்து தகர்க்கும் நடவடிக்கையில் இவர்

ஈடுபடவே இந்த குண்டை எடுத்து சென்றதாக சந்தேகிக்க படுகிறது

லண்டன் Heathrow விமான நிலையத்தில்
லண்டன் Heathrow விமான நிலையத்தில்
Posted in உலக செய்திகள்

லண்டனில் -வாள்கள் ,போத்தல்களுடன் தெருவில் சண்டை போட்ட 40 ரவுடிகள்

லண்டனில் -வாள்கள் ,போத்தல்களுடன் தெருவில் சண்டை போட்ட 40 ரவுடிகள்

லண்டன் சவுத்தோல் பகுதியில் நாற்பது ரௌடிகள் வாழ்ககள் ,மற்றும்

போத்தல்களுடன் சண்டை போட்டனர் .மேற்படி விடயத்தை அறிந்து விரைந்து

வந்த போலீசார் திடீர் சுற்றிவளைப்பை நடத்தினர் .இதில் இருவர் கைது செய்ய பட்டனர்
ஏனையோர் தப்பி ஓடியுள்ளனர்

கைதானவர்களை வைத்தும் ,அங்குள்ள வீடியோ ஆதாரங்களை

வைத்தும் ஏனையவர்கள் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இவ்வாறான

மோசமான சமூக விரோத ரவுடி கும்பலை துடைத்தழிக்கும் பணியில்

விசேட குற்ற தடுப்பு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்

லண்டனில் தமிழ் ரவுடி குழுக்கள் முடக்க பட்ட செயலின் பின் ,மீள் இப்பொழுது

மீள் ரவுடிகளை அடக்கும் பணியில் போலீசார் இறங்கியிருப்பது கவனிக்க தக்கது

லண்டனில் -வாள்கள் ,போத்தல்களுடன்
லண்டனில் -வாள்கள் ,போத்தல்களுடன்