Posted in இலங்கை செய்திகள்

4 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

4 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

தலதா மாளிகை வளாகத்தில் நிருவப்பட்டுள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள்

நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த நிலையத்தில் கடமையாற்றும் 200 பேர் அளவில்

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமைகளுக்ககாக வேறு பொலிஸ் அதிகாரிகள்

180 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Posted in இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் சுமார் 116,000 பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

சுய தனிமையில் இருப்போருக்கு எச்சரிக்கை

நாட்டில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டவர்கள், சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகளை முறையாக

பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக, சிவில் உடையில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த

தீர்மானித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சுமார் 116,000 பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர்,

பெரும்பாலானோர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

சுய தனிமையில் இருப்போர் இரவு நேரங்களில் வீட்டை விட்டு

வெளியேறுவதாக, தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, சட்டத்தை மீறுவோரை கைதுசெய்வதற்காக, தனிமைப்படுத்தலுக்கு

உட்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு அருகில் பொலிஸாரை சிவில்

உடையில் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற பணியாளர் நான்கு பேருக்கு கொரோனா

பாராளுமன்ற பணியாளர் நான்கு பேருக்கு கொரோனா

பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த இரு

தினங்கள் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம்,

நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை உறுதிசெய்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

தூர இடங்களுக்கான ரயில் சேவை நாளை ஆரம்பம்

தூர இடங்களுக்கான ரயில் சேவை நாளை ஆரம்பம்

தூர இடங்களுக்கான சகல ரயில் சேவைகளும் நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து காலை 6.55 ற்கு பதுளை நோக்கி பொடிமெனிகே

கடுகதி ரயில், காலை 5.55ற்கு கல்கிஸ்ஸயிலிருந்து காங்கேசந்துறை நோக்கி

யாழ்தேவி ரயில் மற்றும் பிற்பகல் 3.35 ற்கு கொழும்பு கோட்டையிலிருந்து

கண்டி நோக்கி கடுகதி ரயிலும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளன.

இதே வேளை கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசந்துறை, மட்டக்களப்பு,

மாத்தறை, பெலியத்த ஆகிய இடங்களுக்கும் ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளன.

ஆசன முன்பதிவுகளை இன்று முதல் மேற்கொள்ளலாம் என யாழ்

பிரதான ரயில் நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்

மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்

மேலும் சில பிரதேசங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்

தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு

தனிமைப்படுத்தல்
தனிமைப்படுத்தல்
Posted in உலக செய்திகள்

கொரனோ கொலை வெறிக்கு அமெரிக்காவில் 3,361 மற்றும் பிரிட்டனில் 1,295 பேர் மரணம்

கொரனோ கொலை வெறிக்கு அமெரிக்காவில் 3,361 மற்றும் பிரிட்டனில் 1,295 பேர் மரணம்

இரண்டாம் அலையாக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 3,361

பேர் பலியாகியுள்ளனர் மேலும் 196,163 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இதேபோல பிரிட்டனில் 1,295 பேர் மரணித்தும் 41,346 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர் ,

தொடர்ந்து எதிர்வரும் மூன்று வாரங்களில் நோயின் தொற்றுக்கு

உள்ளாகும் மக்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

எமிரேட்ஸ் விமான நிறுவனம் Sydney and Melbourne விமான சேவைகள் நிறுத்தம்

எமிரேட்ஸ் விமான நிறுவனம் Sydney and Melbourne விமான சேவைகள் நிறுத்தம்

உலகில் தலை சிறந்த விமான நிறுவனமாக இயங்கி வரும் எமிரேட்ஸ்

விமான நிறுவனம் அவுஸ்ரேலியின் Sydney and Melbourne

பகுதிகளுக்கான

தமது விமான பயன்களை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது

பரவி பவரும் கொரனோ நோயின் சூழலை மையமாக வைத்து

இவை இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள்

இராணுவ பகுதிகளை மீட்ட கிளர்ச்சி படைகள் – தொடரும் தாக்குதல்

இராணுவ பகுதிகளை மீட்ட கிளர்ச்சி படைகள் – தொடரும் தாக்குதல்

வட கிழக்கு நையீரியாவின் Borno பகுதியில் இராணுவ படைகள்

கட்டு பாட்டில் இருந்த பகுதிகளை தாம் மீட்டுள்ளதாக கிளர்ச்சி படைகள் அறிவித்துள்ளது

குறித்த கிளர்ச்சி படைகளினால் பாடசாலை மாணவர்கள் முதல் அப்பாவி

பொதுமக்கள் வரை கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டிருந்தனர் என இராணுவம் தெரிவிக்கிறது

இவ்வாறான நிலையில் அகோர தாக்குதலை நடத்தி குறித்த பகுதியை

மீட்டுள்ளதுடன் ,இராணுவ படைகள் வசம் இருந்தத மக்களை விடுவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது

இந்த மோதல்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை விபரம் உடனடியாக தெரியவரவில்லை

Posted in உலக செய்திகள்

சிரியா எல்லை பகுதியில் இஸ்ரேல் இராணுவம் அகோர விமான தாக்குதல்

சிரியா எல்லை பகுதியில் இஸ்ரேல் இராணுவம் அகோர விமான தாக்குதல்

சிரியாவின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை

இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர் விமான

தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

ஈரான் ஆதாராவுடன் இயங்கி வரும் போராளி குழுக்களை இலக்கு வைத்தும் ,

அவர்தம் ஆயுத கூடங்களை இலக்கு வைத்தும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளதுடன்

தமது தாக்குதலில் சேதமான இராணுவ ஆதரவு குழுக்களின் முக்கிய பகுதிகளையும் காண்பித்து வருகிறது

வலிந்து தாக்குதலை திட்டமிட்டு நடத்தி பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்க

இஸ்ரேல் முனைப்பு காட்டிய வண்ணம் உள்ளது ,எனினும் ஈரான் மற்றும்

ஹிஸ்புல்லா இதுவரை அவர்கள் வலையில் சிக்கவில்லை ,ஆனால் ஆத்திரமூட்டும்

தாக்குதல்களை தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

ஏமனில் இராணுவம் தாக்குதல் – 50 போராளிகள் படுகொலை

ஏமனில் இராணுவம் தாக்குதல் – 50 போராளிகள் படுகொலை

ஏமனில் வடக்கு போராளிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்று

வந்த மோதல்களில் கடந்த தினம் ஐம்பது போராளிகள்

பலியாகியுள்ளதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது

தொடர்ந்து இடம் பெற்று வரும் தீவிர தாக்குதல்களை அடுத்து

மேற்படி இராணுவ முற்றுகை இடம் பெற்று வருவதாக சுட்டி காட்ட படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

கடற்கரையில் இருந்து பெண் சடலமாக மீட்பு

மாத்தறை பரை தீவிற்கு அருகில் கடலோர அரிப்புக்கு பயன்படுத்தப்படும்

பாறைகளுக்கு இடையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலத்திற்கு அருகில் இருந்து வங்கியொன்றின் குடை, பயன்படுத்தப்பட்ட

பால் பெக்கெட்டுக்கள் நான்கும் மற்றும் பற்றுச்சீட்டு ஒன்றும்

கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Posted in இலங்கை செய்திகள்

கோட்டா ஆட்சியில் ஆறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்

கோட்டா ஆட்சியில் ஆறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்

காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவிலிருந்து

ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் ஆற்றுப்பகுதியிலேயே

பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக இன்று

காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பழுதடைந்துள்ளமையினால் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை

எனத் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை

மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மனித சடலங்கள்
மனித சடலங்கள்
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ மரண எண்ணிக்கை 255 ஆக அதிகரிப்பு

கொரனோ மரண எண்ணிக்கை 255 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொவிட் – 19 தொற்றினால் மேலும் நால்வர் நேற்றைய தினம்

உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்

நாயகத்தினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று

மரணங்களின் மொத்த எண்ணிக்கை 255 ஆக ஆதிகரித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா தடுப்பூசி அடுத்த மாத நடுப்பகுதியில் ஆரம்பம்

கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்துவதற்கு நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை

வழங்குவதற்காக அடுத்த மாத நடுப்பகுதி தொடக்கம் தேவையான நடவடிக்கைகளை

எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழத்தின் தடுப்பூசி பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பைஸர் மற்றும் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழக

தடுப்பூசிகளை ஏற்றுவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

213 நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

213 நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

மேல்மாகாணத்தில் உள்ள அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் பொலிஸாரால்

நேற்று (16) சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஆயிரத்து 311

நிறுவனங்களில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில், ஆயிரத்து 98 நிறுவனங்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றி வருகிற நிலையில், 213 நிறுவனங்கள்

சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை மீறி செயற்படுவதாகப்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த 213 நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in உலக செய்திகள்

கொரனோ தணடவம் – அமெரிக்காவில் 3,747 மற்றும் பிரிட்டனில் 1280 பேர் பலி

கொரனோ தணடவம் – அமெரிக்காவில் 3,747 மற்றும் பிரிட்டனில் 1280 பேர் பலி

இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி அமெரிக்காவில் ஒரே நாளில் அதாவது கடந்த 24 மணித்தியாலத்தில்

மட்டும் 3,747 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 245,162 பேர் பாதிக்க

பட்டுள்ளனர் தொடர்ந்து 28,937 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

அதே போல பிரிட்டனில் 1,280 பேர் பலியாகியும் 55,761 பேர் பாதிக்க

பட்டும் உள்ளனர் இவர்களுடன் 3,672 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

எதிர் வரும் இரு வாரங்களில் இதன் இறப்பு விகிதம் திடீரென

அதிகரிக்கும் என் ஏச்சரிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

கொரனோ தணடவம் - அமெரிக்காவில்
கொரனோ தணடவம் – அமெரிக்காவில்
Posted in உலக செய்திகள்

ஐஸ் கிறீம் சுவை இருந்தால் அது கொரனோ அறிகுறி -பீதியாகும் சீனா

ஐஸ் கிறீம் சுவை இருந்தால் அது கொரனோ அறிகுறி -பீதியாகும் சீனா

சீனாவில் தற்போது புதிய கொரனோ அறிகுறி ஒன்றை மருத்துவ

ஆரய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்

கொரனோ நோயானது தொற்றி கொண்டவர்கள் நாவால் ஐஸ் கிறீம்

சுவை தென்பட்டால், அது கொரனோ அறிகுறி என தெருவிக்க பட்டுள்ளது

புதிய வடிவில் கொரனோ நோயானது பரவி வருவதாகவும் ,அந்த

வடிவத்தின் ஒரு பிரிவின் பெரும் பகுதி இதுவாக சீனாவில் உள்ளதாக தெரிவிக்க படுகிது

மக்களே உசார் ,எதிர் வரும் இரண்டு வாரங்களுக்கு ஐரோப்பா

தழுவிய நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை பட்டு வருகிறது ,விழிப்பாக இருங்கள்

Ice cream tests
Ice cream tests
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

போதையில் வண்டி ஒட்டிய தாத்தா – துரத்தி பிடித்த பொலிஸ்

போதையில் வண்டி ஒட்டிய தாத்தா – துரத்தி பிடித்த பொலிஸ்

பிரிட்டன் A1 motorway near Newton Aycliffe in County Durham.

பகுதியில் அதிக போதையில் காரினை ஒட்டி சென்ற 65 வயது தாத்தாவை போலீசார் மடக்கி பிடித்தனர்

போதையில் ஐந்து வயது பேரப் பிள்ளைகளை ஏற்றிய வண்ணம் காரினை

ஒட்டி சென்றுள்ளார் ,அப்பொழுது ஓய்வில் இருந்த போலீஸ் ஊழியர் ஒருவர்

அதனை கண்ணுற்று அந்த காரை நிறுத்தி பொலிஸாருக்கு தெரிய ப்படுத்திய நிலையில்

பறந்து வந்த போலீசார் அவரை மடக்கி பிடித்ததனர்

மேலும் அவருக்கு ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டதுடன்

,இரு வருடங்களுக்கு வாகனம் ஓட்ட ,லைசன்ஸ் தடை செய்ய பட்டுள்ளது

தாத்தாவுக்கு ஏன் இந்த வேலை சொல்லுங்க ..?

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் நிரம்பி வழியும் நோயாளர்கள் – மேலதிக கட்டில்கள் வழங்க கோரிக்கை

பிரிட்டனில் நிரம்பி வழியும் நோயாளர்கள் – மேலதிக கட்டில்கள் வழங்க கோரிக்கை

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன

அதை விட எதிர் வரும் இரண்டு வாரங்களில் கடும் குளிர்காலம் இடம்பெற

உள்ளதால் மழை வெள்ளம் ,பனிமழை பொலிவு காரணமாக அதிக மக்கள்

பாதிக்க படுவார்கள் எனவும் இதற்காக மேலதிக கட்டில்கள் மற்றும் அவசர

சிகிச்சை மையங்களை தயார் செய்யுமாறு கோரிக்கை விடுக்க பட்டுள்ளது

Hospitals have been told to find as many beds as possible in preparation for an influx of Covid patients in the north of England and midlands.

நிபுணர்கள் எச்சரித்தது போலவே உயிர் பலிகள் வரும் நாட்களில்

மேலும் இரட்டிப்பாக அதிகரிக்க கூடிய அபாயம் உள்ளதாக அஞ்ச படுகிறது

Posted in உலக செய்திகள்

லண்டனில் இசை கச்சேரி வைத்தவருக்கு 10 ஆயிரம் தண்டம் வழங்கிய பொலிஸ்

லண்டனில் இசை கச்சேரி வைத்தவருக்கு 10 ஆயிரம் தண்டம் வழங்கிய பொலிஸ்

பிரிட்டன் Blanche Lane, South Mimms பகுதியில் கொரனோ விதிமுறைகளை

மீறி இசைக்கச்சரி வைத்து அங்கு கூடிய நூற்றி ஐம்பது பேரை கண்ணுற்ற

தகவல் அறிந்து விரைந்த வந்த போலீசார் நிகழ்வை தடை செய்து அனைவரையும் வெளியேறினர்

இதில் 12 பேருக்கு 200 பவுண்டுகள் தண்டமும் ,அந்த நிகழ்ச்சியை ஒழுங்கு

செய்த பெண்ணுக்கு பத்து ஆயிரம் பவுண்டுக்க்ள் தண்டம் அறவிட்டுள்ளனர்


மேலும் இவர்களுடான கை கலப்பில் போலீசார் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வெளியேறினார்

அவரை தாக்கிய நபர் கைது செய்ய பட்டு ,பிணையில் விடுவிக்க பட்டுள்ளார் ர் என தெரிவிக்க படுகிறது .