Author: நலன் விரும்பி
மாடியில் இருந்து குதித்து வயோதிபர் தற்கொலை
சென்னை எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம்
நடந்து ஒரு மணி நேரம் தாண்டியும் பிணத்தை மீட்க போலீசார் வராததால் பயணிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.
எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் கீழே குதித்து தற்கொலை
எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் குதித்து தற்கொலை
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் அமைந்திருக்கும் கட்டிடம் நேற்று வழக்கமான பரபரப்புடன் இயங்கியது. பயணிகள் நடமாட்டமும் வழக்கம்போலவே இருந்தது.
இந்தநிலையில் முதியவர் ஒருவர், அந்த கட்டிடத்தின் மாடி படிக்கட்டுகளில் வேகமாக ஏறிக்கொண்டிருந்தார். “எங்கே
செல்கிறீர்கள்?”, என சில பயணிகள் கேட்டும், அவர் அதை காதில் வாங்காமல் சென்று கொண்டிருந்தார்.
ஒருகட்டத்தில் கட்டிடத்தின் உச்சிக்கு சென்ற அவர், அங்கே அமர்ந்துகொண்டு தரையை வெறித்து பார்த்தபடி இருந்தார். ஏதோ விபரீதம் நடக்கப்போவதை அறிந்த பயணிகள் அவரை கீழே
இறங்குமாறு கூச்சலிட்டனர். சிலர் ரெயில்வே போலீசுக்கு தொடர்புகொண்டு விஷயத்தை தெரியப்படுத்தி கொண்டிருந்தனர்
. அதேவேளை அங்கு வந்த ரெயில்வே போலீசாரும் இதை கண்டும் காணாதது போல சென்றனர்.
இதற்கிடையில் யாரும் எதிர்பாராதநிலையில் திடீரென அந்த முதியவர் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தார். தரையில் மோதிய வேகத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த
வெள்ளத்தில் துடிதுடித்தபடி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் மீண்டும் ரெயில்வே போலீசுக்கு தொடர்புகொண்டனர்.
சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் ஆகியும் போலீசார் அங்கே வரவில்லை. இதற்கிடையில் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் வந்தனர். அவர்கள் அந்த முதியவர் இறந்துவிட்டதாகவும், உடலை கைப்பற்ற ரெயில்வே போலீசார் வருவார்கள் என்றும் கூறி சென்றுவிட்டனர்.
இதனால் ரத்தவெள்ளத்தில் அந்த முதியவரின் உடல் நீண்டநேரம் அங்கேயே கிடந்தது. இதனால் பயணிகள் ஆதங்கம் அடைந்தனர். சிலர் ஆவேசமாக எழும்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு சென்று போலீசாரிடம் நடந்ததை தெரிவித்தனர்.
இதையடுத்து ரெயில்வே போலீசார், தற்கொலை செய்த முதியவரின் உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரெயில்வே கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து உயிரை விட்ட முதியவர் யார்? ஏன் இந்த முடிவை எடுத்தார்? என்பது குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழும்பூர் ரெயில்வே போலீசாரின் தாமதமான நடவடிக்கையால் வேதனைக்குள்ளான பயணிகள் சிலர் கூறுகையில், “முதியவர் கட்டிடத்தில் ஏறும்போதே போலீசுக்கு தகவல் கொடுத்தோம். அப்போதே வந்திருந்தால் ஒரு உயிரை காப்பாற்றியிருக்கலாம். அந்த முதியவர் உயிருக்கு போராடியபோதும் போலீஸ் வரவில்லை. போலீசாரின் இந்த அஜாக்கிரதை கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துக்கே எட்டி பார்க்காத போலீசாரை இனியும் நம்பக்கூடாது. நமது பாதுகாப்பை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்போல…”, என்றனர்
கொரனோ பரவல் -இரண்டு பாடசாலைகளுக்கு பூட்டு
கொரனோ பரவல் -இரண்டு பாடசாலைகளுக்கு பூட்டு
அநுராதபுரம் கல்விவலயத்துக்கு உட்பட்ட நிராவிய பகுதியில் உள்ள இரண்டு
பாடசாலைகள் காலவரையறையின்றி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிராவிய கிராமத்தில் 09 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக
இனங்காணப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இளம் தொழில் முயற்சியாளர்கள் 79,590 பேர் அரச காணிக்கு விண்ணப்பிப்பு
மட்டக்களப்பில் இளம் தொழில் முயற்சியாளர்கள் 79,590 பேர் அரச காணிக்கு விண்ணப்பிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஷவின் சுபிட்சத்தினை நோக்கிய நாடு என்ற கருப்பொருளில் இளைஞர்களை தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை
மேம்படுத்தும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு அரச காணிகளை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையிலே காணிகளை பகிர்ந்து அளிப்பதற்கு விண்ணப்பங்கள்
கோரப்பட்டு அவர்களின் தொழில் முயற்சிக்கான திட்ட முன்மொழிவுகளும் கோரப்பட்டு இருந்தது.
இதன் இடிப்படையில் காணி பாவணை திட்டமிடல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் கிஷhந்தி கலந்து கொண்டு காணி பெறுவோருக்கான நேர்முக தேர்வுக்கான திகதியினை
விரைவாக பிரதேச செயலாளர்கள் முன்வைக்கின்ற பட்சத்தில் காணி கோரி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முக பரீட்சைகள் விரைவாக எதிர்காலத்தில் நடாத்தப்படும் என குறிப்பிட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் 79,590 நபர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில்
70,769 விண்ணப்பதாரிகள் மாத்திரமே காணி பெறுவதற்கு தகுதி உடையவர்களாக உள்ளனர்.
அந்த வகையிலே கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 8438 பேரும், மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 12860 பேரும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகப்பிரிவில் 4652 பேரும், மண்முனை பற்று பிரதேச செயலகப்பிரிவில் 2714 பேரும், கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 4239 பேரும், கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப்பிரிவில் 4007 பேரும், கோரளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 3044 பேரும், கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் 3516 பேரும், மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 2168 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் 2349 பேரும், போரதீவுபற்று பிரதேச செயலகப்பிரிவில் 4631பேரும், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவில் 6585 பேரும,; மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 3090 பேர்களுடைய விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
காணி பயன்பாட்டு திட்டமிடல் கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் காணி திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் பிரதேச செயலாளர்கள் காணி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை
பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை
அவுஸ்ரேலியா தலைநகர் அருகில் உள்ள விக்ட்டோரியா பகுதியில்
துப்பாக்கியுடன் நுழைந்த நபர் ஒருவரை சுற்றிவளைத்த போலீசார் சுட்டு கொன்றனர்
மேற்படி நபருக்கு எவ்விதம் இந்த ஆயுதங்கள் கிடைத்தன என்பது தொடர்பிலும் ,
இவரது பின்புலம் என்ன என்பது தொடர்பான விசாரணைகளை போலீசார் தீவிர படுத்தியுள்ளனர்
இது ஒரு தீவிரவாத செயலுடன் தொடர்புடையதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை
நெதர்லாந்தில் ஊரடங்கு சட்டம் – மீறி சென்றால் தண்டம்
நெதர்லாந்தில் ஊரடங்கு சட்டம் – மீறி சென்றால் தண்டம்
நெதர்லாந்தில் மீள் அவேக்மாக கொரனோ நோயானது பரவி வருவதால்
எதிர்வரும் வர விடுமுறையில் இருந்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க படவுள்ளது என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது
அதன் படி இரவு 8.30 pm மணி முதல் ,அதிகாலை to 4.30 am, மணிவரையில்
மக்கள் வெளியில் நடமாட தடை செய்ய பட்டுள்ளது ,அவ்விதம் மீறி செல்வோர்
மீது விதிக்க பட்டுள்ள விதிகளின் படி சட்டம் பாயும் என்பது நிலையாக உள்ளது மக்களே உசார்
உடைந்து வீழ்ந்த கட்டிடம் – உடல் நசுங்கி நால்வர் மரணம்
உடைந்து வீழ்ந்த கட்டிடம் – உடல் நசுங்கி நால்வர் மரணம்
ஸ்பெயின் தலைநகர் Madrid பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று
திடீரென இடிந்து வீழ்ந்ததில் அவ்வேளை அதற்குள் இருந்த நால்வர்
உடல் நசுங்கி பலியாகினர்
இந்த வெடிப்பு சமபவம் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பு
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பு
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் அவர்கள் பதிவி ஏற்றுலாளர்
டிரம்ப் பெயரம் நெருக்கடியை கொடுத்து வெள்ளை மாளிகையை விட்டு
வெளியேற மறுப்பார் என நிலை நிலவிய நிலையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது ,ஆனல் அவை சுமுகமாக முடிவுற்று பதவி ஏற்றுக்கொண்டார்
மேலும் எதிரிகளையும் னைத்து அறத்தை நாட்டுவேன் என சூளுரைத்தார் ,
மக்களின் வாழ்வாதரம் ,பொருளாதரம் உள்ளிட்டவையில் அதிக கவனாம் செலுத்த பட்டு நாட்டை முன்னோக்கி நகர்த்தி செல்வேன் என அவர் சபதம் எடுத்தார்
அதேபோலவே அமெரிக்காவின் முதல் கறுப்பின பிரதி ஜனாதி பதியாக கமலா கரீஸ் தெரிவு செய்ய பட்டுள்ளார்
ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் பண்பாட்டு இனவழிப்பு
ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் பண்பாட்டு இனவழிப்பு
ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு எதிராக சர்வதேச பாதுகாப்பு
பொறிமுறையொன்றின் அவசியத்தினை ஆதி ஐயனார் ஆலய சூலம் அழிக்கப்பட்ட சம்பவம் மீளவும் வெளிப்படுத்தியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களால் தொன்றுதொட்டு வழிபட்டு வரப்பட்ட முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியப்பட்டு, அங்கு பௌத்த விகாரையின்
சிதைவுகள் இருந்ததாக குறிப்பிட்டு ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணையுடன் சிறிலங்காவின் தொல்லியல் துறை அப்பகுதியினை
அபகரித்துள்ளமையானது தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனவழிப்பாக (Cultural genocide) காணப்படுகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் தெரிவிக்கையில், சிறிலங்கா அரசு தனது அரசாங்க திணைக்களங்கள் ஊடாக பல்வேறு பெயர்களிலும், தமிழ் மக்களின்
நிலங்களை அபகரித்துக் கொள்வதும், சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதும் மட்டுமல்லாது, தமிழ்மக்களின் பண்பாட்டு
அடையாளங்கள் மீதான பண்பாட்டு இனவழிப்பினையும் (Cultural genocide)தொடர்ந்து தனது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் ஒரு பகுதியாக செய்து வருகின்றது.
தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணையுடன் தமிழர் தேசத்தின் மீதான சிங்களமயமாக்கல், பௌத்த மயமாக்கலை சிங்கள்
பேரினவாத அரசு தீவிரப்படுத்தியுள்ள இவ்வேளையில் தமிழர் தேசத்தில் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்றின் அவசியத்தினை மீள நாம் வலியுறுத்துகின்றோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம்ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைப்பு
மாணவர்களுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம்ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைப்பு
அக்கரைப்பற்று லீடர் அஷ்ரப் கனிஷ்ட பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா
பெறுமதியான 50 கதிரைகளை தேசிய அரச சார்பற்ற நிர்வனத்தினால் இன்று (16) வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ஐ.நைஸர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று வலய கல்வி பிரதிப் பணிப்பாளர் ஏ.ஜி.பஸ்மீல் மற்றும் தேசிய அரச சார்பற்ற நிர்வனத்தின்
தவிசாளரும், குறித்த பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளருமாகிய எஸ்.எம்.லாபீர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
லீடர் அஷ்ரப் கனிஷ்ட வித்தியாலயத்தை கொண்டு வருவதற்காக பல போராட்டங்களைச் செய்யவேண்டி இருந்தது. அந்தப்
போராட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற இந்தப் பாடசாலை பல சாதனைகளை அடைந்து செல்கிறது. இது எம் பிரதேசத்திலுள்ள பெற்றோர்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று தேசிய அரச
சார்பற்ற நிர்வனத்தின் தவிசாளரும், குறித்த பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளருமாகிய எஸ்.எம்.லாபீர்தெரிவித்தார்.
பாடசாலையை முன்னெற்றுவதும், பின்னடையச் செய்வதும் அந்தப் பிரதேசத்திலுள்ள
பெற்றோர்களின் கைகளில்தான் தங்கியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்பாடசாலை ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை தரம் 1, 2, 3, 4 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கற்றல்
உபகரணங்களை குறித்த நிர்வனத்தின் தவிசாளரினால் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில்
பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்



மாணவர்களுக்கு
சென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !
சென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !
இலங்கைத்தீவில் இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான வெளி தமிழ்மக்களுக்கு இல்லாத நிலையில், சென்னை மெரினா
கடற்கரையிலோ அல்லது சென்னையின் வேறு பகுதியிலோ முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் ஒன்றினை தமிழ்நாட்டு அரசு
நிறுவ வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை தொடர்பில் இடம்பெற்றிருந்த
கவனயீர்ப்பு கண்டன கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே இக்கோரிக்கையினை அவர் விடுத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கான அரசியல்வெளி இல்லாத நிலையில்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தது.
தற்போது நினைவுகூர்வதற்கான வெளிiயும் தமிழ்மக்களுக்கு அங்கில்லாத நிலையில், அதற்கான வெளியினை
இலங்கைத்தீவுக்கு வெளியே உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
உலகின் தலைநகரங்களில் முள்ளிவாய்க்கால் அடையாளச்சின்னங்களை உருவாக்கும் வகையில், அதற்கு முன்மாதிரியாக தமிழகத்தின் சென்னை மெரீனா கடற்கரையிலோ
அல்லது சென்னையின் வேறு பகுதியிலோ முள்ளிவாய்க்கால் அடையாளச்சின்னத்தை தமிழ்நாட்டு அரசு உருவாக்க வேண்டும்
என கோருகின்றோம். இதற்கு தமிழ்நாட்டின் கட்சிகள், அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் ஆதரவு வழங்க வேண்டுகிறோம்.
இதுமட்டுமல்லாது மே-18 முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாளினை உலகெங்கும் வாழும் தமிழர்களை அடையாளப்படுத்தும் விதமாக
‘உலகத்தமிழர் தேசிய துக்க நாளாக’ மே-18ஐ தமிழ்நாட்டு அரசு பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
சசிகலாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல்
சசிகலாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அவருடைய 4 ஆண்டு சிறை தண்டனை வரும் 27-ம் தேதி நிறைவுபெறுகிறது.
பெங்களூரு சிறையில் இருந்து 27-ம் தேதியன்று சசிகலா விடுதலையாக இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கடந்த இரு நாட்களாக லேசான காய்ச்சல், இருமல்
இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறைச்சாலை
வளாகத்திலுள்ள மருத்துவர்கள் சசிகலாவின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர்.
அதன்பின், பெங்களூருவில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்றனர். அங்கு அவரது உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெங்களூரு மருத்துவமனையில் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவுக்கு நள்ளிரவில் மீண்டும்
மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
35100 லட்சத்தை சிகரட் வாங்கிட கடன் வழங்கும் கோட்டா அரசு
35100 லட்சத்தை சிகரட் வாங்கிட கடன் வழங்கும் கோட்டா அரசு
இலங்கையில் மகா கொள்ளையர்களாக விளங்கி வரும் சிவப்பு சால்வை
சகோதரர்களான மகிந்த ,கோட்டா கூட்டாட்சியில் தனியார் நிறுவன
முதலாளி ஒருவருக்கு சுமார் 35100 லட்சம் ரூபாய்களை கடனாக வழங்க வாங்கி ஒன்று முன் வந்துள்ளது
மக்கள் அபிவிருத்தி ,வாழ்வாதாரத்தை மேம்படுத்த ,மறுத்து தனியார்
முதலாளிகள் ஊடாக பல கோடிகளை இலாபமாக ஈட்டி வருகிறார் ,ஆளும்
வியாபாரியான கோட்டா மேற்படி விடயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன
பிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் – கோட்டா முழக்கம்
பிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் – கோட்டா முழக்கம்
விடுதலை புலிகளின் தலைவர் பிரகாரனை கொன்று கட்டி இழுத்து வந்தேன்
என ஆளும் இலங்கை ஜனாதிபதியும் தமிழ் இன கொலையாளியுமான கோட்டா தெரிவித்துள்ளார்
நாட்டில் அனைத்து சமூகங்களும் இணைந்து வாழும் நல்லாட்சி அரசு
அரசாள்கிறது என கோட்டா தெரிவித்து வரும் நிலையில் சிங்கள பவுத்த
பேரினவாத மக்கள் மத்தியில் புலி இனவாதத்தை கக்கி ,மீளவும் தனி
பெரும்பாண்மை வாக்குகளுடன் வென்றிட வேண்டும் என்ற நிலையில் கோட்டா துடிக்கிறார் .
இவ்வாறு பேசிய இவரை அமெரிக்கா உள்ளிட்டவை கருத்தில் கொண்டு
அதனை வாய்மூல சாட்சியாக ஏற்று தண்டனை வழங்க வேண்டும் என பாராளுமன்றங் உறுப்பினர் ஸ்ரீதரன் கேட்டுள்ளார்
வடக்கில் இருந்து தமிழர்களை விரட்ட அரசாங்கம் சதி
வடக்கில் இருந்து தமிழர்களை விரட்ட அரசாங்கம் சதி
ஒரு நாடு, ஒரு சட்டம்” என ஜனாதிபதி தெரிவிக்கின்றபோதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஒரு சட்டமும் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொள்ளும்
பெரும்பான்மையினத்தினருக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பகுதியில், மேய்ச்சல் தரை காணிகளை ஊர்காவல் படையினருக்கு முந்திரிகை செய்கைக்கு
வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று (19) மாலை நேரில் சென்று ஆராய்ந்த போதே, அவர் மேற்படி தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்
என்.புஸ்பலிங்கம், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி, பிரதேச சபை உறுப்பினர்களும் அப்பகுதிக்குச் சென்று
, அங்குள்ள நிலைமைகள் குறித்து கால்நடை பண்ணையாளர்களுடன் கலந்துரையாடினார்கள்.
கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தமல்லி தோட்டம், வெட்டிப்போட்டசேனை போன்ற பல பகுதிகளில், தமது முதாதையர்கள் முதல் நீண்டகாலமாக தாங்கள் கால்நடைகளை
மேய்த்துவருவதாகவும் ஆனால் தற்போது தமது
சுமார் 1,500 மேய்ச்சல் தரை காணிகளை சுற்றி முந்திரிகை வளர்ப்பு
எனக் கூறி, வேலியமைக்கப்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.
இதனையத்து கருத்துத் தெரிவித்த கோவிந்தன் கருணாகரம் எம்.பி, “அரசாங்கம், தமிழர்களை நசுக்குவது மாத்திரமல்லாமல், இந்த நாட்டில் இருந்து தமிழர்களை விரட்டியடிப்பதற்காக கங்கணம்
கட்டிக்கொண்டிருக்கின்றார்கள். மேய்ச்சல் தரைகள், சேனைப்பயிர்ச்செய்கை இடங்களாக மாற்றப்படுகின்றன. இது
பெரும்பான்மையினத்தின் குடியேற்றங்களாகவும் மாறிவருகின்றன.
“கால்நடை பண்ணையாளர்கள் தங்களது வாடிகளில் ஒரு தீப்பெட்டி வைத்திருக்கமுடியாது. பாதுகாப்புக்காக ஒரு கத்தி வைத்திருக்க முடியாது. கால்நடைகளை வைத்திருப்பவர்கள் ஒரு கம்புகூட
வெட்டமுடியாத நிலையிலும் அவ்வாறு வெட்டினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு, பெருமளவான பணம் தண்டப்பணமாக அறவிடப்படுகின்றது.
“பயன்தரும் பல மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு, அந்த மரங்களைக் கொண்டே பல தசாப்தங்களாக மேய்ச்சல் தரையாக வரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வேலிகள்
அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்தும் முள்கம்பிகளைக்கொண்டு வேலிகள்
அமைக்கப்படுகின்றன. அந்த வேலியில் மாடுகள் படும்போது ஏற்படும் காயங்கள் இலகுவில் மாறாது என பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
“இந்த பகுதி மட்டுமல்ல, மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திவுலானையில் இருந்து பட்டிப்பளையில் மணலேற்றம்,
காத்தார்சேனை, விச்சுக்குளம், வவுணதீவில் வெட்டிப்போட்டசேனை, செங்கலடியில் கார்மலை, மயிலத்தமடு, மாதவனை போன்ற பகுதிகள் கபளிகரம் செய்யப்படுகின்றன.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தியென்ற மாயைக்குள் தள்ளி, வெறும் கொங்கிறிட் பாதைகளையும் சிறிய அபிவிருத்திகளையும் மேற்கொண்டு, தமிழ் மக்களின்
அடிவயிற்றில் அடிக்கும் இவ்வாறான பொருளாதார அழிவுகளை பார்த்துக்கொண்டு, ஓர் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் தங்களுக்குள்ளேயே அடிபடுகின்றார்கள்.
“எமது மாவட்டத்தை உண்மையில் நேசிப்பவர்களாக இருந்தால், அவர்கள் இந்தப் பகுதிக்கு வரவேண்டும். வெறுமனே மாவட்ட
செயலகத்தில் அதிகாரிகளை கூட்டி கூட்டங்களை நடத்தாமல், இங்கு வந்து இந்த மக்களின் கண்ணீரை துடைக்கவேண்டும்.
“இவ்வாறான கபளீகரம் செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டுமானால், காணி உரிமையுடன் கூடிய அதிகார
பரவலாக்கல் எங்களுக்கு கிடைக்கவேண்டும். அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்துவருகின்றோம்” என்றார்.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு – டக்கிளஸ் கூவல்
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு – டக்கிளஸ் கூவல்
அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்கள் வழமைபோன்று எதுவித தடைகளும் இன்றி தமது கடற் தொழில் நடவடிக்கைகளை
முன்னெடுக்க முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முன்னர் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ஒருவர் அண்மையில் இந்திய கடலோர காவற்படையால் கைதுசெய்யப்பட்டதை அடுத்து
இப்பகுதியின் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக யுத்த காலங்களில் நடைமுறையில் இருந்த பாஸ் நடைமுறை
பின்பற்றப்பட வேண்டும் என அப்பிரதேச கடற்படை அதிகாரியால் தொழிலாளர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கப்பட்டுவந்ததாகவும்
தெரிவித்து குறித்த பகுதி தொழிலாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
இந்நிலையில் கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானத்தில் கொண்ட அமைச்சர் குறித்த பிரதேச கடற்படை
அதிகாரிகளுடன் விடயம் தொடர்பில் ஆராய்ந்ததுடன் அவ்வாறான நடைமுறைகளை உடனடியாக இல்லாது செய்து அல்லைப்பிட்டி
கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
தமிழர் பகுதிகளில் பரவும் மரம் நோய் – இறக்கும் ஆடு,மாடுகள்
தமிழர் பகுதிகளில் பரவும் மரம் நோய் – இறக்கும் ஆடு,மாடுகள்
தமிழர் வடக்கு பகுதியில் முதன்மையாக வைத்து புதியவகை மர்ம நோய்
ஒன்று பரவி வருகிறது ,இதன்மேல் ஆடுகள் ,மாடுகள் என்பன இறந்து வருகின்றன
கடந்த மூன்று மாத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கால்நடைகள் இருந்துள்ளன
அம்மை நோய் போன்று இது உள்ளதாக பாதிக்க பட்ட கால்நடையின்
உரிமையாளர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர் ,தமிழர் பகுதியில்
மட்டும் இந்த நோயானது முதன்மையாக எவ்வாறு பரவி வருகிறது என்ற கேள்வி முன் வைக்க படுகிறது
ஐஸ் எஸ் நிலைகள் மீது ரசியா விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்
ஐஸ் எஸ் நிலைகள் மீது ரசியா விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்
சிரியாவின் வடக்கு அப்பலோ பகுதியில் நிலை எடுத்து போராடி வரும்
ஐ எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது ரசியா சண்டை விமானங்கள் அகோர தாக்குதலை நடத்தின
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40 தடவை தாக்குதலை நடத்தின ,
இதில் குறித்த அமைப்பின் முக்கிய பதுங்கு குழிகள் ,ஆயுத களஞ்சியங்கள்
மற்றும் முக்கிய இரசாயன இராணுவ தளங்கள் மீதே துல்லியமான
தாக்குத்தல் நடத்த பட்டதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது
சுட்டு வீழ்த்த பட்ட அமெரிக்கா உலங்குவானூர்தி
சுட்டு வீழ்த்த பட்ட அமெரிக்கா உலங்குவானூர்தி
சிரியாவின் வடகிழக்கு கசாக்கா பகுதிக்கு மேலாக பறப்பில் ஈடுபட்டு
கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் முன்னணி தாக்குதல் உலங்குவானூர்தியாக
விளங்கும் A Boeing AH-64 Apache attack helicopter என்ற வானூர்தி சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது
இதில் பயணித்த அணைவரும் பலியாகியுள்ளதாக சிரியா
இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன
ஆனால் அமெரிக்கா இராணுவமோ , இயந்திர கோளாறு
காரணமாக வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
20 குருதீஸ்தான் போராளிகள் -துருக்கிய இராணுவத்தால் கைது
20 குருதீஸ்தான் போராளிகள் -துருக்கிய இராணுவத்தால் கைது
தனி நாடு கோரி போராடி வரும் குருதீஸ்தான் போராளிகள்
இருபது பேரை துருக்கிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்
இவ்விதம் கைதான அனைவரும் குறித்த போராளிகள் அமைப்புடன் தொடர்பில்
உள்ளவர்கள் எனவும் பயிற்சி பெற்றவர்கள் எனவும் துருக்கிய இராணுவம் தெரிவிக்கிறது
தொடர்ந்து குறித்த அமைப்பிற்கு எதிராக போர் தொடர்ந்த
வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு – எகிற காத்திருக்கும் பங்கு சந்தை
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு – எகிற காத்திருக்கும் பங்கு சந்தை
நாளை இருபதாம் திகதி அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாகி ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார் ,இவரது ஆட்சியின் பொழுது
வேலைவாய்ப்பு ,பொருளாதரம் ,மக்கள் வாழ்வாதாரம் செழிக்கும்
என்ற நிலையில் உலக பங்கு சந்தை அதிக உச்சத்தை தொடும் என எதிர் பார்க்க படுகிறது
டிரம்ப் பதிவோ விலகி சென்றுள்ளார் என்ற தகவல் ஒருபுறம்
கசிகிறது, மறுபுறமோ நாளை அவரும் விலகுவார் என்கிறது
மறு செய்தியோ இரு நாளுக்கு முன்னரே அவர் விலகி சென்று
விட்டுட்டார் எனவும் ,மிகவும் கவலை தோய்ந்த நிலையில் சென்றுள்ளார் என குறிப்பிடுகிறது
மேலும் பதவி விலகினாலும் இவர் புரிந்த செயல்பாடுகளுக்கு தண்டனை
கிடைக்க பெற்று சிறைகளில் அடைக்க படலாம் என்ற நிலை ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்க படுகிறது







