Posted in சினிமா

யாஷிகா ஆனந்த்தின் கிழிந்த ஜீன்ஸ்

யாஷிகா ஆனந்த்தின் கிழிந்த ஜீன்ஸ்

நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்தை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.

யாஷிகா ஆனந்த்தின் கிழிந்த ஜீன்ஸ் போட்டோ ஷூட்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்
யாஷிகா ஆனந்த்


கவலை வேண்டாம் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார்.

தற்போது கடமையை செய், ராஜபீமா, பாம்பாட்டம், சல்பர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

யாஷிகா ஆனந்த்,

இந்நிலையில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த உடையுடன் அவர் கொடுத்துள்ள சில வித்தியாசமான புகைப்படங்கள் ரசிகர்களை இன்ப

அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த புகைப்படத்தையும், வீடியோவையும் நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.

    Posted in Uncategorized

    தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது, இப்படத்தை சிவா இயக்கி உள்ளார்.

    சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி
    ரஜினிகாந்த்
    நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

    கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளாராம்

    ரஜினி. அவரது குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்களாம். இதற்காக மத்திய அரசுடன் பேசி நடிகர் ரஜினி, சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


    ரஜினிகாந்த

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள்

    எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் ரஜினி டப்பிங் பணிகளையும் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது. ‘அண்ணாத்த’ படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Posted in Uncategorized

    தொடரும் பயணத்தடை – மிரட்டும் கொரனோ

    தொடரும் பயணத்தடை – மிரட்டும் கொரனோ

    தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் இன்னும் சில காலத்துக்கு

    நீடிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளனவென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

    பயணத் தடையை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என்றார்.

    “பயணத் தடையின் காரணமாக கொரோனா மரணங்களும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும்

    குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தாலும், மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படவில்லை” என்றார்.

    ஆகவே, பயணத் தடையை மேலும் சில நாள்களுக்கு நீடிப்பது என்ற தீர்மானமே தற்போதைக்கு

    இருப்பதாகவும் தினமும் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர்

    சன்ன ஜயசுமன விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றார்.

      Posted in Uncategorized

      கர்ப்பிணி மனைவியை 22 கிலோ மீற்றர் தூக்கிச் சென்ற கணவன்

      கர்ப்பிணி மனைவியை 22 கிலோ மீற்றர் தூக்கிச் சென்ற கணவன்

      கர்ப்பிணியான தனது மனைவியை பல கிலோ மீற்றர் தூரம் தூக்கிச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்த கணவன் தொடர்பில் கடந்த தினம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வௌியிடப்பட்டிருந்தன.

      காலி மாவட்டத்தின் ஹினிதும பகுதியிலுள்ள கொடிகந்த என்ற கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் 28 வயதுடைய சுரேஷ் குமார்.

      சம்பவ தினமான கடந்த 04 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஆற்று பெருக்கத்தினால் வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கி காணப்பட்டன.

      இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான தனது மனைவியின் வயிற்றிலுள்ள சிசு இரண்டு நாட்களாக துடிக்காத காரணத்தால் குடும்ப நல அதிகாரிக்கு தொடர்பு கொண்ட போது உடனடியாக கர்ப்பிணித் தாயை ஹினிதும வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

      வௌ்ளப்பெருக்கு காரணமாக வாகனங்கள் செல்ல முடியாததால் மனைவியை அழைத்துக் கொண்டு நடை பயணமாக 4 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஹினிதும வைத்தியசாலைக்கு செல்ல ஆரம்பித்தார் குமார்.

      வௌ்ளப் பெருக்கு காரணமாக மனைவியை தூக்கிக் கொண்டு அவர் வைத்தியசாலை நோக்கி நடக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

      எனினும், ஹினிதும வைத்தியசாலையில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் 18 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள உடுகம வைத்தியசாலையை நோக்கி குமார் தனது பயணத்தை தொடர்ந்தார்.

      பின்னர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் உடுகம வைத்தியசாலையை தம்பதியினர் அடைந்தனர்.

      அங்கிருந்து நோயாளர் காவு வண்டி மூலம் அவர்கள் காலி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

      வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் குழந்தைக்கு மற்றும் மனைவிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

      சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க - சூப்பரான இட்லிரெடி
      Posted in Uncategorized

      யாழில் புயல் மழை – 55 பேர் பாதிப்பு

      யாழில் புயல் மழை – 55 பேர் பாதிப்பு

      யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென நிலவிய காற்றுடன் கூடிய மழையின் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

      இதுதொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணிமுதல் 10 மணி வரை கடும்

      காற்றுடன் கூடிய காலநிலை நிலவியது. இதன் தாக்கத்தினால் 17 வீடுகள் பகுதியளவில்

      சேதமடைந்துள்ளதோடு மூன்று சிறு தொழில் முயற்சியாளர்கள் குறித்த கடும் காற்று மழை தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

      குறித்த பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சகல பிரதேச செயலகங்கள் ஊடாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ

      பிரிவினரால் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

        Posted in இலங்கை செய்திகள்

        கிளிநொச்சியில் பசுமாட்டை கொன்று தின்ற திருடர்கள்

        கிளிநொச்சியில் பசுமாட்டை கொன்று தின்ற திருடர்கள்

        கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட கேப்பை இன பசு மாட்டை களவாடி இறைச்சியாக்கியுள்ளனர் என மாட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

        கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்வாதாரமாக வளர்க்கும் கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

        நேற்றைய தினமும் (13) உருத்திரபுரம் 10ம் வாய்க்கால் பகுதியில் வீட்டில் கட்டிவிடப்பட்ட பால் தருகின்ற உயர் ரக பசுமாட்டினை களவாடி உருத்திரபுரம் பொது மயானத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டிடத்திற்குள் இறைச்சியாக்கி விட்டு பசுமாட்டின் தலை தோல்களை விட்டு சென்றுள்ளனர்.

        சுமார் 80,000 ரூபா பெறுமதிக்கு மேலான குறித்த பசு மாடு பால் தற்சமயம் பால் தருகின்ற

        நிலையில் இறைச்சி ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் உரிமையாளர், அண்மைய நாட்களாக ஆடு, மாடு, கோழிகள் என்பன தொடர்ச்சியாக களவாடப்பட்டு வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளன

          Posted in Uncategorized

          இலங்கையில் 60 வயதானவர்கள் அதிக மரணம்

          இலங்கையில் 60 வயதானவர்கள் அதிக மரணம்

          கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரில் நூற்றுக்கு 70 சதவீதமானவர்கள் 60 வயதைக் கடந்தவர்கள்

          எனவும், உயிரிழப்போரில் எஞ்சிய 25 சதவீதமானோர், ஏனைய நோய்களைக்கொண்டவர்களெனவும் தெரியவந்துள்ளது.

          கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் 60 வயதைக் கடந்தவர்கள், பல்வேறு நோய்களைக் கொண்டவர்களும்

          அதிகளவில் உயிரிழந்தள்ளமை தொடர்பில் விசேட கவனஞ் செலுத்த வேண்டுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

            Posted in இலங்கை செய்திகள்

            இனவாத சிங்களவர்க்ள வாழும் கழுத்துறையில் அதிக கொரனோ நோயாளிகள்

            இனவாத சிங்களவர்க்ள வாழும் கழுத்துறையில் அதிக கொரனோ நோயாளிகள்

            இனவாத சிங்களவர்க்ள வாழும் கழுத்துறையில் அதிக கொரனோ நோயாளிகள்
            அடையாளம் காணப்பட்டுள்ளனர் , நேற்று மட்டும் சுமார்
            2,361 கொரனோ நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

            இதனால் அந்த பகுதி தனிமை படுத்த பட்டு போலீசார் இராணுவத்தினர் பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது

              Posted in Uncategorized

              பல, காவல்துறை அதிகாரிகளுக்கு கொரனோ

              பல, காவல்துறை அதிகாரிகளுக்கு கொரனோ

              இலங்கை காத்தான்குடி பகுதியில் மக்கள் பாதுகாப்பபு பணியில் ஈடுபட்டு வந்த சுமார் ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு கொரனோ தொற்று ஏற்பட்டுள்ளது

              இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

                Posted in இலங்கை செய்திகள்

                பறக்கும் படை வேட்டை -1,198 பேர் கைது

                பறக்கும் படை வேட்டை -1,198 பேர் கைது

                இலங்கையில் தொடர்ந்து பரவி வரும் நோயின் தாக்குதலை அடுத்து பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுஉள்ளனர்

                இவர்களின் இந்த கண்காணிப்பில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் கடந்த தினம் மட்டும் , சுமார் 1,198 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


                இவ்வாறு கைதானவர்களில் முகக்கவசம் அணிய மறுத்தமை ,மாகாண எல்லைகளை மீறிய குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

                இதுவரை முப்பத்தி இரண்டாயிரம் பேர் இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளனர்

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் இருந்து பகரைனுக்கு வேலைக்கு செல்ல தடை

                  இலங்கையில் இருந்து பகரைனுக்கு வேலைக்கு செல்ல தடை

                  இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து
                  பகரைனுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு தற்காலிக தடை விதிக்கபட்டுள்ளது

                  இவர்களுக்கு வேலை செய்திடும் அனுமதி சான்றிதழ்கள்இரத்து செய்ய பட்டுள்ளன

                  இந்த தடைகளினால் இலங்கை பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    ஒரு அமெரிக்கா டொலர் -300 ரூபாயை எட்டும் – எச்சரிக்கும் ரணில்

                    ஒரு அமெரிக்கா டொலர் -300 ரூபாயை எட்டும் – எச்சரிக்கும் ரணில்

                    ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, சில விவகாரங்கள் தொடர்பில் அரசியல் தலையீடுகள் இன்றி, அதிரடியான நடவக்கைகளை

                    எடுக்கவேண்டும் என்றும். மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பெரும் பொருளாதாரச் சுமைக்கு மேலும் சுமையை சேர்க்க வேண்டாம் என்றும் அதனூடாக நாட்டை அழிக்க வேண்டாம் என்றும் ​கேட்டுக்கொண்டுள்ளார்.

                    தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் விசேட செவ்வியிலே​யே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ரணில் விக்கிமசிங்க, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இழக்கப்படுமாயின் ரூபாவின்

                    விலை குறைவடைந்து, ஒரு டொலருக்கு 300 ரூபாய் செலுத்தவேண்டிய நிலைமை ஏற்படும். அத்துடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அறிவித்துள்ளார்.

                    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை 2017 ஆம் ஆண்டில் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எங்களுடைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

                    வரிவிதிப்பு இல்லாமல் ஐரோப்பாவிற்கு பொருடள்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி கிடைத்ததன் ஊடாக, ஆடை மற்றும் மீன்பிடித் தொழில்கள் ​மேம்படுவதற்கு வழிவகுத்தது.

                    ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கை மீதான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையால், இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரி சலுகை தொடர்பாக ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. இந்த சலுகையை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படலாமென எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

                    கொரோனா தொற்றுநோயால் நமது சுற்றுலாத் துறை ஆபத்தில் உள்ளது. கப்பலின் பிரச்சினையுடன், எங்கள் மீன்பிடித் தொழிலுக்கும் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

                    வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, நமது அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நிய செலாவணி வீழ்ச்சியால் ஏற்பட்ட

                    பொருளாதார நெருக்கடியால் இலங்கை பங்களாதேஷில் இருந்து 200 மில்லியன் டொலர் கடன் வாங்கியது. தற்போது, ​​நமது பொருளாதாரத்திற்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவர

                    தேயிலை மற்றும் ஆடைத் தொழில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அத்தகைய விஷயத்தில், ஜி.எஸ்.பி. பிளஸ் வரி நிவாரண சலுகையை இழந்தால், ரூபாய் மதிப்பு குறைந்துவிடும், மேலும் ஒரு டொலருக்கு சுமார் 300 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு ஆயிரக்கணக்கான வேலைகளும் இல்லாமற்போகும்.

                    இவ்வாறான ஆபத்தை எதிர்கொள்ளும்போது, ​​ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை ,இனிமேலும் அரசியல் மயமாக்கவேண்டாம். அத்துடன், ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

                      Posted in Uncategorized

                      வெள்ளவத்தை முடக்கம் – மக்கள் அவதி

                      வெள்ளவத்தை முடக்கம் – மக்கள் அவதி

                      கொழும்பு-காலி பிரதான வீதியில் வெள்ளவத்தை பகுதியானது, நாளை (14) காலை முதல் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                      ஆகையால், வாகன சாரதிகள், மெரின் ட்ரைவ் வீதியை மாற்று வழியாக பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

                      வௌ்ளவத்தையில் கழிவுநீர் குழாய்கள் பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                        Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                        இலங்கையில் சமஸ்டி தீர்வு வருகிறது – கஜேந்திரன் முழக்கம்

                        இலங்கையில் சமஸ்டி தீர்வு வருகிறது – கஜேந்திரன் முழக்கம்

                        ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும்.” என தமிழ் தேசியக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

                        பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பகுதிகளில் உள்ள சுமார் 600 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று (13) முன்னெடுத்திருந்தது.

                        இவ் நிவாரண பொருட்களை வழங்கி வைத்ததன் பின் சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

                        இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

                        ” பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தோம். அதேபோல மலையக மக்களுக்கான காணி மற்றும் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்போம்.

                        இந்நாட்டில் ஒற்றை ஆட்சி முறையை ஒழிக்கப்பட்டு சமஷ்டி முறையை உருவாக்கும் அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே போராடி வருகின்றோம். அவ்வாறு சமஷ்டி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். மலையக மக்களுடன் இணைந்து பயணிக்க நாம் தயார்.

                        கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு, சீனாவின் முகவர்களாக செயற்பட்டு நாட்டின் வளங்களை விற்கின்றது. பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு உயரும் வகையில் செயற்பட்டு வருகின்றது. மக்கள் நலன் பற்றி சிந்திப்பதில்லை. அவ்வாறு சிந்தித்திருந்தால் இவ்வாறு எரிபொருட்களின் விலை உயர்வடைந்திருக்காது.

                        செலன இணைந்த நிறுவன திட்டத்தின் ஊடாக கொழும்பிலுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை சீனாவுக்கு வழங்க ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தென்பகுதியை தாரை வார்ப்பது மட்டுமல்லாமல் வடக்கில் 7 ஏக்கர் காணியிலுள்ள ஜனாதிபதி மாளிகையும் குத்தகைக்கு வழங்க முயற்படுகின்றனர்.” – என்றார்.

                          Posted in Uncategorized

                          கிளிநொச்சி ,பளை ,விஸ்மடு பகுதியில் சிறிதரன் எம்பி நிவாரண உதவி photo

                          கிளிநொச்சி ,பளை ,விஸ்மடு பகுதியில் சிறிதரன் எம்பி நிவாரண உதவி photo

                          கிளிநொச்சியில் 750 குடும்பங்களுக்கு கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியம் உதவி!
                          நாட்டில் தற்பொழுது அமுலில் இருக்கும் பயணத்தடை காரணமாக வறிய மக்கள் கடும் சிரமத்தை

                          எதிர்நோக்கி உள்ளனர்.
                          பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டினியாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

                          மக்களின் வறுமையை போக்கும் விதமாக புலம்பெயர் உறவுகள் தனிப்பட்ட ரீதியாகவும், ஊர்சங்கங்களின் ஊடாகவும், நிறுவனங்களின் ஊடாகவும் பல விதமாக உதவி வருகின்றனர்.

                          அந்த ரீதியில், கனடாவில் பல காலமாக தமிழ் மக்களின் பெரும் ஆதரவுடன் இயங்கி வரும் மின்னல் செந்தில் குமரனின் நிவாரண அமைப்பு 11 லட்சம் பெறுமதியான உலர் உணவு பொருட்களை நிவாரணமாக கிளிநொச்சி மக்களுக்கு வழங்கி உள்ளது.

                          இதனை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னிலையில் DS அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்படுகிறது.

                          மேலும் பல மாவட்டங்களில் செந்தில் குமரனின் நிவாரன உதவி தொடர இருப்பதாக அறியப்படுகிறது…

                            Posted in சினிமா

                            உங்க வேலைய பாருங்க… ரசிகருக்கு பதிலடி கொடுத்த வனிதா

                            உங்க வேலைய பாருங்க… ரசிகருக்கு பதிலடி கொடுத்த வனிதா

                            தனக்கு அட்வைஸ் செய்த நெட்டிசன் ஒருவருக்கு நடிகை வனிதா விஜயகுமார் பதிலடி கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

                            நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’தான் இப்போது சிங்கிள் என்றும் ’அவைலபிள்’ என்றும் குறிப்பிட்டு தனது திருமணம் குறித்து வதந்திகளை யாரும்

                            நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர் ’அவைலபிள்’ என்ற வார்த்தை தேவையா? என்றும் உங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள்

                            இருக்கிறார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு இனிமேலாவது இதுபோன்ற அசிங்கத்தை நிறுத்தி விடுங்கள் என்று கமெண்ட் செய்திருந்தார்.

                            அதற்கு பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார் ’நாங்கள் அனைவரும் வளர்ந்து வருகிறோம், எங்கள் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள எங்களுக்கு தெரியும். எங்கள் கடமை என்ன என்பதும்

                            தெரியும். எங்களுக்கு தேவைப்படும் போது நீங்கள் வந்து உதவி செய்யப் போகிறீர்களா? உங்களுடைய வாழ்க்கை எதுவோ அதை நீங்கள் வாழ்ந்து கொள்ளுங்கள். நான் ஒரு நடிகை, என்

                            நடிப்பு பிடித்திருந்தால் என் படங்களை பாருங்கள், மற்றபடி உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

                              Posted in சினிமா

                              அந்த செய்தி உண்மையில்லை… மாதவன்

                              அந்த செய்தி உண்மையில்லை… மாதவன்

                              தமிழில் ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த

                              லிங்குசாமி, தற்போது தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார்.

                              இப்படத்தில், வலுவான வில்லன் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளாராம் லிங்குசாமி. அந்த கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.


                              லிங்குசாமி – மாதவன்

                              ஆனால், இவை எதுவும் உண்மையில்லை. “லிங்குசாமி படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

                              அவர் நல்ல மனிதரும் கூட. ஆனால், அவர் படத்தில் நான் நடிப்பதாக வரும் செய்தியில் உண்மையில்லை” என மாதவன் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

                                Posted in சினிமா

                                25 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் – மீனா

                                25 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் – மீனா

                                மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர்

                                . தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது.

                                இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர்.

                                கவுதமி, மீனா

                                தமிழிலும் ‘திரிஷ்யம் 2’ படம் பாபநாசம் 2-ம் பாகமாக உருவாக உள்ளதாகவும், இதில் நடிக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பேசப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக

                                நடித்த கவுதமி, இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக நடிகை மீனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

                                நடிகர் கமல்ஹாசனும், நடிகை மீனாவும் ஏற்கனவே கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘அவ்வை சண்முகி’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                                Posted in Uncategorized

                                நிர்வாணமாக நடித்து ஆச்சர்யப்பட வைத்த ஆண்ட்ரியா

                                நிர்வாணமாக நடித்து ஆச்சர்யப்பட வைத்த ஆண்ட்ரியா

                                தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார்

                                . மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

                                ஆண்ட்ரியா நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் பிசாசு 2. மிஷ்கின் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான பிசாசு படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

                                இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியா இந்த காட்சியை சிறப்பாக நடித்து

                                முடித்துகொடுத்தாராம். படத்திற்காக ஆண்ட்ரியாவின் இந்த ரிஸ்க் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அந்த குறிப்பிட்ட காட்சி எடுக்கப்படும்போது படப்பிடிப்பு தளத்தில் மிக குறைவான நபர்களே இருந்துள்ளனர்.

                                ஆண்ட்ரியா

                                தமிழில் 2019 ஆம் ஆண்டு ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார்.

                                Posted in Uncategorized

                                இலங்கை வான் படையில் மூன்று விமானங்கள் இணைப்பு

                                இலங்கை வான் படையில் மூன்று விமானங்கள் இணைப்பு

                                இலங்கை அரச இராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் முகமாக தற்போது மூன்று அண்டனோவ் விமானங்கள் இணைக்க பட்டுள்ளன


                                இந்த விமானங்கள் இணைப்பின் ஊடக இலங்கை இராணுவம் புதிய பலத்தை பெற்றுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது