Author: நலன் விரும்பி
நயன்தாராவுடன் தனி விமானத்தில் பறந்த விக்னேஷ் சிவன்
நயன்தாராவுடன் தனி விமானத்தில் பறந்த விக்னேஷ் சிவன்
நயன்தாராவுடன் விமான பயணத்தின் போது எடுத்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நயன்தாராவுடன் தனி விமானத்தில் பறந்த விக்னேஷ் சிவன்
நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக
கூறப்படுகிறது. இவர்கள் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் ஆகியவற்றின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா, கேரளாவிற்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். விமான பயணத்தின் போது எடுத்த வீடியோவையும்,
புகைப்படத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
படப்பிடிப்பில் அடிவாங்கும் விஷால்
படப்பிடிப்பில் அடிவாங்கும் விஷால்
தன்னுடைய 31 வது படத்தில் நடித்து வரும் நடிகர் விஷால், ஐதராபாத் படப்பிடிப்பில் ரவுடிகளிடம் அடிவாங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
படப்பிடிப்பில் அடிவாங்கும் விஷால்… வைரலாகும் வீடியோ
விஷால்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவருடைய 31வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இவர் எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தை இயக்கி பல விருதுகளை பெற்றார்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் திரைப்பட
படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அங்கு விஷால் 31 படத்தின் படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார்கள்.
அங்கு நடைபெற்ற சண்டைக்காட்சியின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நடிகர் விஷால் ரவுடிகளிடம் அடிவாங்குவது போல் காட்சி எடுத்திருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நண்பருடன் பீச் குளியல்… வைரலாகும் நடிகையின் புகைப்படங்கள்
நண்பருடன் பீச் குளியல்… வைரலாகும் நடிகையின் புகைப்படங்கள்
பிரபல பாலிவுட் நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளுமான ஜான்வி கபூரின் புகைப் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆண் நண்பருடன் பீச் குளியல்… வைரலாகும் நடிகையின் புகைப்படங்கள்
நண்பருடன் ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்.
இன்று ஜான்வி, கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, அந்த ஆண்
நண்பர் யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வவுனியாவில் கிணற்றில் இருந்து நபர் சடலமாக மீட்பு
வவுனியாவில் கிணற்றில் இருந்து நபர் சடலமாக மீட்பு
வவுனியா கற்குழி பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட நபர் இன்று (16) காலை பொது கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் உட்பட அவரின் உறவினர்கள் சுகாதார பிரிவினரினால் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டனர்.
இந்நிலையில் நேற்று (15) இரவு வீட்டிலிருந்து கணேசன் இளங்குமரன் (வயது-51) என்ற நபர் வெளியே சென்றுள்ள நிலையில் அவரை உறவினர்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று (16) காலை கற்குழி பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை வீதியிலுள்ள பொது கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்
பயண கட்டுப்பாடு எப்பொழுது நீக்க படும் – அரசு இப்படி சொல்கிறது
பயண கட்டுப்பாடு எப்பொழுது நீக்க படும் – அரசு இப்படி சொல்கிறது
தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீக்கி நாட்டை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக நாடு திறக்கப்படுமா?
என்பது தற்போதைய நிலைகளை ஆய்வுசெய்து ஜூன் மாதம் 19 அல்லது 20 ஆம்திகதியளவிலேயே
தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை
அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் உயிர் குடிக்கும் கொரனோ -55 பேர் மரணம்
இலங்கையில் உயிர் குடிக்கும் கொரனோ -55 பேர் மரணம்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த தினம் மட்டும் ஐம்பத்தி ஐந்து பேர் மரணமாகியுள்ளனர்
பலத்த கட்டுப்பாடுகள் ,பயண முடக்கம் ஏற்படுத்த பட்ட பொழுதும் மக்கள் இழப்பை தடுக்க முடியாது இலங்கை திணறி வருகிரது
முல்லைத்தீவில் ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்
முல்லைத்தீவில் ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்
வணக்கத்துக்குறிய கல்கமுவ சாந்தபோதி தேரர் மற்றும் பிலியந்தல அமிதகொஸா தேரர் ஆகியோரின் நிதியுதவியின் மூலம், முல்லைத்தீவு மன்னங்கடல் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு வறிய
குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பவுள்ள புதிய வீட்டிற்கான தொழில்நுட்ப நிபுணத்துவ மற்றும் மனித வள வசதிகள், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 வது
படைப் பிரிவின் 641 வது பிரிகேடின் கீழ் உள்ள 14 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டமானது பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதியின் எண்ணகருவிற்கமைய அந்தந்த பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை
உயர்த்துவதற்கும், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொது மக்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த வீட்டை நிர்மாணிப்பதற்காக பிக்குகள் மற்றும் 64 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன ஆகியோரால் சனிக்கிழமை (12) ஆம் திகதி அடிகல் நாட்டப்பட்டது.
இந்த திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஜ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 14 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை
அதிகாரி லெப்டினன் கேணல் சி.டி.அதுல்தொல்ஆராச்சி அவர்களின் ஒருங்கிணைப்பில் மேற் கொள்ளப்பட்டது.
சீனாவின் ஆதரவுடன் நாம் முன்னேற முடிந்தது – மகிந்த திமிர் பேச்சு – இந்தியா கொதிப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தின் ஆதரவு காரணமாக ஒரு அணிசேரா
நாடாக சுதந்திர உலகில் முன்னேற முடிந்தது என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (15) பிற்பகல் அலரி மாளிகையில் தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில், காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் இச்சந்தர்ப்பத்தில் எமது அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறோம். அக்கட்சியின் நூறாவது ஆண்டு விழா
கொண்டாடப்படும் இவ்வருடம் ஆசியாவிலுள்ள நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானதாகும் என்பது எனது நம்பிக்கையாகும்.
சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி இடம்பெறும் என்பது எம் அனைவரதும் நம்பிக்கையாகும். அந்த வரலாற்று வெற்றியை சீனாவிற்கு
பெற்றுக் கொடுத்தது இத்தால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1921ஆம் ஆண்டு பன்னிரெண்டு பேர் ஒன்றிணைந்து உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூலமாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அதனாலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆசியாவிற்கே மிகப்பெரியதும், முக்கியமானதுமான கட்சி என்று நான் கூறினேன்.
சீனா என்பது நாடு மட்டுமல்ல. சீனா என்பது மாபெரும் நாகரிகம். சீனா பல்வேறு நாடுகளால் படையெடுப்பிற்கு உட்படுத்தப்பட்ட தவிர சீனா ஒருபோதும் பிற நாடுகள் மீது
படையெடுக்கவில்லை. அத்துடன் உலகின் பெரும் தொகையான மக்கள் ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை நம்பியுள்ள நாடு இதுவாகும்.
அது மட்டுமல்லாமல், விவசாயத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதன் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட நாடாக சீனா பார்க்கப்படுகிறது. அதனால் தான் சீனாவை ஒரு சிறந்த நாகரிகம் என்று நான் கூறினேன்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி அந்த நாகரிகத்தின் அடையாளத்தை இனங்கண்டு பணியாற்றியமையாலேயே இன்று சீனாவை உலகின் சக்தியாக வளர்ச்சி பெறச்செய்ய முடிந்துள்ளது.
சீனாவிற்கும் எங்களுக்கும் இடையே வரலாற்று ஒற்றுமைகள் உள்ளன. சீனாவின் பெரிய சுவரை சீனா கட்டும் போது, நமது மன்னர் தேவநம்பியதிஸ்ஸ மன்னன் அனுராதபுர மஹமேவனா உயனவினை நிறுவுகிறார். எங்கள் வரலாற்று ஒற்றுமைகள் மற்றும் நட்பு மிகவும் சக்திவாய்ந்தவை.
ஒரு சக்திவாய்ந்த நாடாக சீனா நமது சுயாதீனத்தை பாதுகாக்க பெரிதும் உதவியது. இது பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய எங்களுக்கு உதவியது.
சீன அரிசி இரப்பர் ஒப்பந்தம் இலங்கையர்களுக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கையின் சுதந்திரத்திற்காக சீனா செய்த சேவையை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.
எமது வரலாற்று ரீதியான நண்பர் என்றே நான் எப்போதும் சீனாவிற்கு கூறினேன். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிதான் சீன கம்யூனிஸ்ட் கட்சியை எங்களுக்கு மிக நெருக்கமாக்கியது.
கடந்த காலத்தில், பௌத்தமே சீனா மற்றும் இலங்கையை இணைத்தது. சுதந்திரத்திற்குப் பின்னர், எங்களிடையே உறவை முதலில் கட்டியெழுப்பியது கம்யூனிஸ்ட் கட்சிதான். சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இலங்கை நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட பல விடயங்களை மதிக்கிறது.
தேசிய பொருளாதாரம், சுயாதீன நாடு, விவசாயம் உள்ளிட்ட உள்ளூர் தொழில்துறை முறையை நம்பியுள்ள ஒரு சுதந்திர நாடு.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மறைந்த எஸ்.ஏ.விக்ரமசிங்க விவசாயத்தின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் முன்வைத்த நில்வலா கங்கை திட்டம், இடதுசாரி தலைவர் ஒருவர் விவசாயம் குறித்து முன்வைத்த மிக முக்கியமான திட்டமாகும். இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி காரணமாக, சீனாவுடனான நமது கடந்தகால உறவை மேலும் வலுப்படுத்த முடிந்தது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றிய திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் காலத்தில், சீனாவுடனான எங்கள் உறவுகள் மிகச் சிறந்தவை. சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எங்கள் இடதுசாரி இயக்கத்தின் ஆதரவே ஒரு அணிசேரா நாடாக உலகில் சுதந்திரமாக முன்னேற எங்களுக்கு உதவியது என்று நான் கூற வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றிய அரசாங்கத்தின் கீழ் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நாங்கள் முடிவுக்கு கொண்டுவந்தோம். யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் நமது சுதந்திரத்திற்காக சீன அரசாங்கம் செய்த தியாகங்களை நாங்கள் எப்போதும் பாராட்டுகிறோம். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் ஆசிய நாடொன்றின் சுதந்திரத்திற்கு இது மாபெரும் பங்களிப்பாகும்.
இந்நேரத்தில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எங்களுக்கும் இடையிலான பிணைப்பை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு இப்போது 78 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.
கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடித் தலைவர் டாக்டர் திரு. எஸ்.ஏ.விக்ரமசிங்க தெற்கிலிருந்து வந்தவர். டாக்டர் எஸ்.ஏ. விக்ரமசிங்கவுடன் எனது பெரிய தந்தை டி.எம்.ராஜபக்ஷ மற்றும் எனது தந்தை டி.ஏ.ராஜபக்ஷ ஆகியோர் மிக நெருக்கமான அரசியல் உறவை கொண்டிருந்தவர்களாவர். அதேபோன்று நானும் எனது பெரிய தந்தை, தந்தை போன்றே திரு.எஸ்.ஏ.விக்ரமசிங்கவின் அரசியல் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட ஒருவர் என்பதை இந்நேரத்தில் நான் கூற வேண்டும்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் திரு. விக்ரமசிங்க என் வாழ்க்கையில் ஒரு முன்மாதிரி என்றும் சொல்ல வேண்டும். பீட்டர் கேதமன், ராஜா கொள்ளுரே சரத் முத்தெட்டுவேகம, இன்று தலைமை வகிக்கும் வீரசிங்க அவர்கள் எமக்கு நெருக்கமான அரசியல் களத்தில் இருந்தவர்கள்.
உலகம் மாறியுள்ளது. எமது நாடும் மாறியுள்ளது. தொழில்துறை புரட்சி மற்றும் தொழில்நுட்ப புரட்சிக்குப் பின்னர், இன்று இணைய யுகத்தில் இளம் தலைமுறையினர் உள்ளனர்.
இன்று நம்மிடம் இருப்பது அப்போது இருந்த அரசியல் கருத்துக்கள் அல்ல. ஆனால் இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க, கடந்த கால முற்போக்கான அரசியல் சக்திகளின் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற இடதுசாரி இயக்கங்கள் கடுமையாக போராடின என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலகம் எவ்வளவு மாறினாலும் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் சமத்துவத்திற்காக முன்னின்றது.
சமத்துவம் என்ற கருத்து இன்றும் உலகில் செல்லுபடியாகும்.அதற்காக மிகப்பெரிய தியாகம் செய்த சீன கம்யூனிஸ்ட் கட்சி உலக சமத்துவத்திற்காக எதிர்காலத்திலும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என நம்புகின்றேன் என கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமர் ஊடக பிரிவு
பாயும் பறக்கும் படை -1,411 பேர் கைது
பாயும் பறக்கும் படை -1,411 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் சட்டங்களை மீறிய குற்ற சாட்டில் கடந்த தினம் மட்டும் சுமார்
1,411 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,இவர்கள முககவசம் மற்றும் மாகாண எல்லைகளை
கடந்தனர் பேன்ற குற்ற சாட்டுக்கள் சுமத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
எல்லாம் போலி.. மகன், மகள் பற்றி விஜய் தரப்பில் விளக்கம்
எல்லாம் போலி.. மகன், மகள் பற்றி விஜய் தரப்பில் விளக்கம்
மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகியோர் சமூக வலைத்தள பக்கத்தில் இல்லை என்று முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் போலியானவை… மகன், மகள் பற்றி விஜய் தரப்பில் விளக்கம்
விஜய் குடும்பத்தினர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். மாஸ்டர் படத்திற்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களாக
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகியோர் பற்றிய செய்திகள்
மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இவர்கள் சமூக வலைத்தளத்தில் இருப்பதை அறிந்து விஜய் ரசிகர்கள் உட்பட பலர் பின் தொடர ஆரம்பித்தார்கள்.
மகன் மகளுடன் விஜய்
ஆனால், உண்மையில் ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா இருவரும் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் இல்லை என்ற தகவல் தற்போது
வெளியாகி உள்ளது. இதை விஜய் தரப்பில் உறுதி செய்து இருக்கிறார்கள். இவர்கள் பெயரை கொண்ட சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தும் போலியானவை என்றும் கூறி இருக்கிறார்கள்.
190 நாடுகள்… 17 மொழி… ஒரே சுருளி – ஜகமே தந்திரம்
190 நாடுகள்… 17 மொழி… ஒரே சுருளி – ஜகமே தந்திரம் படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்
ஜகமே தந்திரம் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அதன்மூலம் முக்கிய அப்டேட்டையும் கொடுத்துள்ளது.
190 நாடுகள்… 17 மொழி… ஒரே சுருளி – ஜகமே தந்திரம் படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்
தனுஷ்
பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி
மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன்
இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அதன்மூலம் முக்கிய அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் 190 நாடுகளில் ஓடிடி-யில் வெளியாக உள்ளதாம்.
மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், பொலிஷ், போர்ச்சுகீஸ், பிரேசிலியன், ஸ்பேனிஸ் கேஸ்டிலியன், ஸ்பேனிஸ்
நியூட்ரல், தாய், இந்தோனேசியன், வியட்நாமீஸ் போன்ற 17 மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாக அப்போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் இத்தனை மொழிகளில் வெளியாவது இதுவே முதன்முறை.
சிந்திக்குமா கல்வித்துறை ..???மாணவர்களது எதிர்காலம் என்ன ..வீடியோ
சிந்திக்குமா கல்வித்துறை ..???மாணவர்களது எதிர்காலம் என்ன ..வீடியோ
எமது தமிழ் சமுகத்தின் இருப்பின் மிக முக்கியாமான பொக்கிசம் கல்வி அதனை எவ்வாறு நவீன
முறையில் இலகுவாக கொண்டு செல்ல முடியும் என்ற வகையில் இந்த கலந்தாய்வு இடம்பெறுகிறது
சிந்திக்குமா கல்வித்துறை ..??? – YouTube
சவேந்திர சில்வா வர தடை போடு- பிரிட்டன் பிரதமர் இல்லம் முன்பாக போராட்டம் photo video
சவேந்திர சில்வா வர தடை போடு- பிரிட்டன் பிரதமர் இல்லம் முன்பாக போராட்டம் photo video photo video
பிரிட்டன் பிரதமர் இல்லம் முன்பாக தமிழர்கள் இன்று மதியம் ஒரு மணியளவில் ஒன்று கூடி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
,இதில் தமிழர்களை இறுதி போரின் பொழுது கொன்று குவித்த சவேந்திர சில்வாவை பிரிட்டனுக்கள் நுழைய தடை விதிக்க கோரி இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது ,மேலும் மகயரும் கையளிக்க பட்டுள்ளது
அன்றைய படையணி தளபதியாக இருந்தவர் ,இன்று முப்படை தளபதியாக தெரிவு செய்ய பட்டுள்ளார்
இன்றைய இராணுவ தளபதியாக விளங்கி வரும் இவரால் ,பல்வேறு பட தமிழர்கள் கைது செய்ய பட்டு காணாமல் போகின்றமை தொடர்கிறது ,புலிகள் என்ற போர்வையில் கைதுகள் ,வதைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தொடர்ந்து இலங்கை மீது அழுத்தம் கொடுக்க கோரி இடம்பெற்றுள்ள இந்த போராட்டம் பெரும் வெற்றி என தமிழருக்கான சுதந்திர வேட்டை காரர்கள் என்ற அமைப்பினர் தெரிவித்துள்ளனர்
தொடர்ந்து இந்த அமைப்பினால் பல் வேறு போராட்டங்கள் முன்னெடுக்க பட்டு வருகின்றமை ,சிங்கள அரசுக்கு பெரும் நெருக்கடியை வழங்கியுள்ளது குறிப்பிட தக்கது








முல்லையில் வலையில் சிக்கிய புலிகளின் குண்டு
முல்லையில் வலையில் சிக்கிய புலிகளின் குண்டு
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால்
கடற்கரை பகுதியில் விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட பாரிய வெடிபொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதி மீனவர்கள் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில் மீனவர்களின் வலையில் சிக்குண்டு குறித்த வெடிபொருள் கரைக்கு வந்துள்ளது.
இவ்வாறு கரைக்கு வந்த பொருள் வெடிபொருள் என மீனவர்களினால் அடையாளம் காணப்பட்டு சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வெடிப்பொருளை அகற்றுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பச்சையாக மீன்களை உண்ணும் மீன் வியாபாரிகள்
பச்சையாக மீன்களை உண்ணும் மீன் வியாபாரிகள்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்கு உள்ளான காரணத்தால் கடல் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு
ஏற்பட்ட பாதிப்பினை தொடர்ந்து இந்நாட்டு மீன் வியாபாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பேலியகொடை மீன் சந்தை வியாபாரிகள் கடுமையான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
´நாம் தினம் தோறும் பச்சையாக மீன்களை சாப்பிட்டு காட்டுகிறோம். எனினும் மீன் வியாபாரம் குறைவடைகிறது.
குறித்த ஆமைகள் இன்று நேற்று உயிரிழக்கும் விலங்குகள் இல்லை. பல வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்து தற்போது கரையொதுங்கி வருகின்றன. என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவில் மக்கள் விபரங்களை சேகரிக்கும் இராணுவம் – அச்சத்தில் மக்கள்
முல்லைத்தீவில் மக்கள் விபரங்களை சேகரிக்கும் இராணுவம் – அச்சத்தில் மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில், குடியிருப்பாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யும்
நடவடிக்கையில், பொலிஸார், நேற்று (14) ஈடுபட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர், பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட
குடியிருப்பாளர்கள், தங்கியிருப்பவர்களின் விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான படிவம்
வழங்கப்பட்டுள்ளது.
இவற்றைப் பூரணப்படுத்தி, ஒரு மணிநேரத்தில் வழங்குமாறும், பொலிஸாரால்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.1865ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்தின்
76ஆவது பிரிவுக்கு அமைவாகச் செய்யப்படும் ஆணைஎன, அந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் வேட்டை -1,356 பேர் கைது
பொலிசார் வேட்டை -1,356 பேர் கைது
இலங்கையில் தனிமை பாடுதல் சட்டத்தை மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் சுமார் 1,356 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதான அனைவரும் முககவசம் இன்றி உலாவியதும் ,மாகாண எல்லைகளை கடந்த குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்
பேக்கரி பொருட்களின்விலைகள் திடீர் அதிகரிப்பு
பேக்கரி பொருட்களின் விலைகள் திடீர் அதிகரிப்பு
இலங்கையில் கொரனோ நோயினால் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில் பேக்கரி
பொருட்களின் விலை திடீரென அதிகரிக்க பட்டுள்ளது ,பாண் தவிர்ந்த அனைத்து பொருள்களும் விலை உயர்த்த பட்டுள்ளன
இலங்கையில் ஒரே நாளில் 57 பேர் மரணம்
இலங்கையில் ஒரே நாளில் 57 பேர் மரணம்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரு கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் 57 பேர் பலியாகியுள்ளனர்
நோயின் தாக்குதல் அதிகரித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா
சமுர்த்தி பெறுநர்களுக்கு மேலதிகமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையில் உள்ள சிக்கல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரிசி விலையை கட்டுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்













