Posted in சினிமா

மாப்பிள்ளை தேடும் நடிகை – தப்பி ஓடும் காதலர்கள்

மாப்பிள்ளை தேடும் நடிகை – தப்பி ஓடும் காதலர்கள்

என் திருமணம் எனக்கு ஏன் கடைசியாகத் தெரிகிறது என்று பிரபல நடிகை வரலட்சுமி கோபமாக பதிவு செய்திருக்கிறார்.

என் திருமணம் எனக்கு ஏன் கடைசியாகத் தெரிகிறது – வரலட்சுமி கோபம்
வரலட்சுமி


தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். தற்போது தமிழில்

‘காட்டேரி’, ‘பாம்பன்’, ‘சேஸிங்’, ‘டேனி’, ‘பிறந்தாள் பராசக்தி’ ஆகிய படங்களிலும்,

தெலுங்கில் ‘க்ராக்’ மற்றும் கன்னடத்தில் ‘ரணம்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் வரலட்சுமி.

வரலட்சுமிக்கு திருமணம் என்று பலமுறை வதந்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வரலட்சுமி, சந்தீப் என்ற

தொழிலதிபரை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இந்தச் செய்தி

தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“எனக்குத் திருமணம் என்ற விஷயம் ஏன் எனக்கு மட்டும் கடைசியாகத் தெரிகிறது? அதே முட்டாள்தனமான வதந்திகள்.

என் திருமணத்தில் ஏன் எல்லாரும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்குத்

திருமணம் என்றால் நான் அதை என் கூரை மீது ஏறி அறிவிப்பேன். எனக்குத்

திருமணம் இல்லை. நான் சினிமாவுக்கு முழுக்குப் போடவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

      Posted in மருத்துவம்

      குழந்தையை நன்றாக சாப்பிட வைக்க அருமையான வழி

      குழந்தையை நன்றாக சாப்பிட வைக்க அருமையான வழி

      குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.


      குழந்தைகளுக்கு உணவு சாப்பிட வைப்பது என்பது ஒரு சிறந்த கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து

      குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு

      நிறையும் வரையில் சமத்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு.சரியாகச் சாப்பிடாத குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது எனக் கவலையுடன் இருப்பவரா…?

      சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை

      அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

      • பொதுவாக எல்லா வகையான உணவுகளையும் குழந்தைகளுக்கு தினிப்பதை இன்றுடன் விட்டு விடுங்கள்.
      • குழந்தைக்கு சரியான இடைவேளையில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும். ஏன் என்றால் குழந்தைக்கு
      • உண்ணும் உணவு திகட்டாமல் இருக்க வேண்டும்.
      • மீறி குழந்தைகளுக்கு அதிக உணவை கொடுத்தால் சாப்பிடும்
      • போதே குழந்தைகள் வாந்தி எடுத்து விடுவாற்கள் எனவே குழந்தை சாப்பிடும் அளவிற்கு மட்டும் உணவு கொடுப்பது மிக
      • சிறந்த முறையாகும்.
      • குழந்தைக்கு பிடித்த உணவுகளை அதிகமாக செய்து கொடுக்க வேண்டும்.
      • குழந்தை இரண்டு வயது வந்த பிறகு உணவு ஊட்டுவதை தவிர்த்துக் கொள்ளவும். மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து
      • உணவருந்துவதை பழக்க வேண்டும். அப்போது தான் உங்கள் குழந்தை அதிக உணவை சாப்பிட பழகுவார்கள்.
      • குழந்தைகளுக்கு அதிகம் நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள், பருப்பு வகைகள் அதிகம் கொடுக்க
      • வேண்டும். ஏன் என்றால் இது குழந்தைகளுக்கு மலச்சிக்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
      • குழந்தைகளுக்கு நீர்ச்சத்து அதிகம் தேவை எனவே தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
      • தண்ணீர் குடிக்க அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மேர், மில்க் சேக், பழச்சாறு மற்றும் இளநீர் ஆகியவற்றை வாங்கி கொடுக்கலாம்.
      • காய்கறிகளை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சாண்ட்விச்சுகலாகவும், வெஜ் நூடுல்ஸாகவும், ஃப்ரைட் ரைஸாகவும் செய்து கொடுக்கலாம்.
      • காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது.
      • தோசை, இட்லி, சப்பாத்தி மற்றும் பூரி போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அதிகமாக செய்து கொடுக்கலாம்.

      நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை

      பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது. எனவே வீடுகளில் நாம்

      சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும்.

          Posted in சினிமா

          கொரோனா நிவாரணத்துக்காக உடைகளை ஏலம் விடும் நித்யாமேனன்

          கொரோனா நிவாரணத்துக்காக உடைகளை ஏலம் விடும் நித்யாமேனன்

          கொரோனா நிவாரணத்துக்காக தான் உடுத்திய உடைகளை ஏலம் விட்டு வருகிறார் நடிகை நித்யாமேனன்.

          கொரோனா நிவாரணத்துக்காக உடைகளை ஏலம் விடும்
          நித்யா மேனன்


          மெர்சல், 24 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நித்யா மேனன். சில மாதங்களுக்கு முன் நடந்த பே‌ஷன் நிகழ்ச்சியில் நித்யா மேனன்

          பங்கேற்றார். அதில் தான் அணிந்த உடையை அவர் முதல் கட்டமாக

          ஏலம் விடுகிறார். அதை தொடர்ந்து படங்களில் பயன்படுத்திய உடைகளை ஏலம் விட உள்ளார்.

          இது பற்றி நித்யா மேனன் கூறியது:- ‘நான் இந்த உடையை ஏலத்திற்காக கொடுக்கப் போகிறேன். அதில் வரும் பணத்தில் 100

          சதவீதமும் அப்பணம் டிரஸ்ட்டுக்கு செல்லும். அவர்கள் கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை

          மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். கொரோனாவால் முடங்கியுள்ள அவர்களுக்கு பண உதவி செய்து மீண்டும் அவர்கள்

          சொந்த காலிலேயே நிற்க வழி செய்யப்படுகிறது. இந்த உடையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது பல மாதங்கள் தயாரான

          டிசைனர் உடை. அது எனக்காகவே ஸ்பெ‌ஷலாக செய்யப்பட்டது. பே‌ஷன்

          நிகழ்ச்சியில் ரேம்ப் வாக் செய்வதற்காக தான் இந்த உடை டிசைன் செய்யப்பட்டது.

          இதன் புகைப்படத்தை முன்பே நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறேன்.

          நீங்கள் பார்த்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனது தோழியும் பிரபல

          டிசைனருமான காவேரி தான் இதை டிசைன் செய்தார். அவர் அழகான, இயற்கையாக தெரியும் உடைகளை தயாரிப்பவர் என்றார்.

              Posted in சினிமா

              ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா? நாங்க வாங்கக் கூடாதா? நடிகை குமுறல்

              ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா? நாங்க வாங்கக் கூடாதா? நடிகை குமுறல்

              ஹீரோக்களை போல் ஹீரோயின்களும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது என நடிகை தமன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

              ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா? நாங்க வாங்கக் கூடாதா? – தமன்னா கறார்
              தமன்னா


              தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார், தமன்னா. இவரை தெலுங்கில் ரவிதேஜா படத்தில்

              நடிக்க அணுகினர். ஆனால் அந்த படத்தில் நடிக்க அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க தயாரிப்பு

              நிறுவனம் மறுத்துவிட்டதால் தமன்னா அப்படத்திலிருந்து விலகியதாக செய்திகள் பரவின.

              இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமன்னா, என்னை பற்றி கற்பனையான தகவல்கள் பரவி உள்ளன. படத்தில் நடிப்பது குறித்து

              எனது மேலாளரிடம் படக்குழுவினர் பேசினர். ஆனால் கொரோனா பிரச்சினையால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. இப்போது எந்த

              பட நிறுவனமும் படப்பிடிப்புக்கு தயாராகவில்லை. ரவிதேஜாவுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது.

              தமன்னா

              எனவே அவரது படத்தை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. சம்பளம் என்பது நடிகர்களின் தனிப்பட்ட விஷயம். குறிப்பிட்ட

              சம்பளத்தை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று

              பேசுவது ஏற்புடையது அல்ல. ஒருதலைபட்சமானது. இதே கேள்வியை நடிகரிடம் கேட்பது இல்லை.

              நடிகைகள் குறிப்பிட்ட நிலையை அடைய கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். கதாநாயகனை போலவே கதாநாயகியும்

              படத்துக்கு தேவை. நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்க கூடாது? ஹீரோக்கள்

              மட்டும்தான் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா? இவ்வாறு தமன்னா கேள்வி எழுப்பி உள்ளார்.

                  Posted in சினிமா

                  விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்

                  விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்

                  விஜய்யை பார்த்து அஜித் பொறாமைப்பட்டார் என்று பிரபல பாடகி

                  சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

                  விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித் – பிரபல பாடகி
                  நடிகர்கள் அஜித், விஜய்


                  விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களாக,

                  வலம் வருகின்றனர். தங்களுக்குள் நல்ல நட்பைப் பகிர்ந்து

                  கொள்ளும் இருவரும் ‘ராஜாவின் பார்வையில்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

                  அதன் பின்னர் இரண்டு நடிகர்களும் தங்களது தனி பாதையில் பயணித்து,

                  தொழில்துறையில் புதிய உயரங்களை எட்டி வருகின்றனர்.பாடகி சுசித்ரா

                  தற்போது பிரபல பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்திய

                  ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்க்கு படங்கள்

                  மட்டும் அல்லாது படங்களில் இடம்பெறும் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை

                  பெறுவது வழக்கம். இதற்காக விஜய் மீது அஜித் பொறாமை கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

                      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                      உளவுத்துறை தலைமையகம் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் 9 பேர் பலி -40 பேர் காயம்

                      உளவுத்துறை தலைமையகம் மீது மனித வெடிகுண்டு தாக்கல் 9 பேர் பலி -40 பேர் காயம்

                      ஆப் கானிஸ்தான் Ghazni மாகாணத்தில் அரச இராணுவ உளவுத்துறை மையம் மீது கார் மனித வெடிகுண்டு
                      தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                      இந்த தாக்குதலில் அரச இராணுவ உளவுத்துறையை சேர்ந்த ஏழு பேர் பலியாகியுள்ளனர்

                      மேலும் நாப்பது பேர் படு காயமடைந்துள்ளனர் ,கடந்த மாதம் அரச இராணுவ

                      உளவுத்துறை தலைவர் படு கொலை செய்ய பட்டார் ,,அதனை அடுத்தும்

                      தற்பொழுது இன்று இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                      உயிர் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

                          Posted in மருத்துவம்

                          மலச்சிக்கலை குணமாக்க இதை சாப்பிடுங்க

                          மலச்சிக்கலை குணமாக்க இதை சாப்பிடுங்க

                          நீண்ட நாள்களாக உள்ள மலச்சிக்கல், ஆஸ்துமா, தூக்கமின்மை, நீரிழிவு, தாய்ப்பால் சுரப்புக் கோளாறு, இரத்த சோகை ஆகிய

                          வியாதிகளைக் குணமாக்குவதில் லெட்டூஸ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.

                          மலச்சிக்கலை குணமாக்கும் லெட்டூஸ் பொரியல்
                          லெட்டூஸ் பொரியல்


                          லெட்டூஸ் கீரையில் ஈரப்பதம் அதிகம் உள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், வைட்டமின் சி தயாமின்,

                          ரிபோஃப்ளோவின், நிக்கோடினிக் அமிலம் போன்றவை காணப்படுகிறது. வைட்டமின் ‘இ’ ‘கே’ போன்றவையும்

                          அடங்கியுள்ளன. இதில் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவையும் அடங்கியுள்ளன. நீண்ட நாள்களாக உள்ள

                          மலச்சிக்கல், ஆஸ்துமா, தூக்கமின்மை, நீரிழிவு, தாய்ப்பால் சுரப்புக் கோளாறு,

                          இரத்த சோகை ஆகிய வியாதிகளைக் குணமாக்குவதில் லெட்டூஸ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.

                          தேவையான பொருட்கள் :

                          லெட்டூஸ் இலை – 10
                          பெரிய வெங்காயம் – 2
                          தக்காளி – ஒன்று (பொடியாக


                          வேகவைத்த கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், (குழைய கூடாது)
                          இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
                          கடுகு – கால் டீஸ்பூன்,
                          தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,


                          காய்ந்த மிளகாய் – 2,
                          எலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன்,
                          மஞ்சள்தூள் – சிறிதளவு,
                          ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,
                          எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

                          லெட்டூஸ்

                          செய்முறை:

                          லெட்டூஸ் இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

                          தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

                          வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், கடுகு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்துநன்றாக வதக்கவும்.

                          வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

                          அடுத்து அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

                          அடுத்து அதனுடன் வேகவைத்த பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், வேர்க்கடலை சேர்த்துக் கிளறவும்.

                          பிறகு லெட்டூஸ் இலைகள் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

                          நன்றாக வெந்து சுருண்டு வரும்போது தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறவும்.

                          மேலே எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கவும்.

                              Posted in சினிமா

                              நடிகையின் காதல் முறிவுக்கு அவர் தான் காரணமா?

                              நடிகையின் காதல் முறிவுக்கு அவர் தான் காரணமா?

                              தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையின் காதல் முறிவுக்கு அவர்தான்

                              காரணம் என்றே பலரும் பேசி வருகிறார்களாம்.நடிகையின் காதல் முறிவுக்கு அவர் தான் காரணமா?



                              சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நடிகையும், இருக்கு ஆனா இல்லை

                              என்று சொல்லும் இயக்குனருக்கும் காதல் இருப்பதாக ஏற்கனவே அரசல்புரசலாக

                              பலரும் பேசி வந்தார்களாம். இதை இருவரும் கண்டு கொல்லாமல் இருந்தார்களாம்.

                              ஆனால் நடிகையை திடீரென்று கல்லூரி நண்பர் ஒருவரை காதலிப்பதாக

                              சொன்னாராம். தற்போது அந்த காதல் முடிந்துவிட்டதாம். இதற்கு காரணம்

                              அந்த இயக்குனர் தான் என்று கோடம்பாக்கத்தினர் பரவலாக பேசி வருகிறார்களாம்.

                                  Posted in சினிமா

                                  அனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்

                                  அனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்

                                  தமிழில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்தின்

                                  பியானோ வாசிப்புக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

                                  அனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்
                                  அனிருத்


                                  தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர்

                                  அனிருத். இவருடைய இசையில் தற்போது மாஸ்டர் திரைப்படம்

                                  உருவாகி உள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை லோகேஷ்

                                  கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம் ஊரடங்கு முடிந்த பிறகு வெளியாக இருக்கிறது.

                                  அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் அவ்வப்போது உரையாடுவார்.

                                  தற்போது பியானோவால் ‘நீயும் நானும்… ‘ என்ற பாடலையும், ஜெர்சி படத்தின்

                                  பின்னணி இசையையும் வாசித்து பதிவு செய்திருக்கிறார்.இந்தப் பதிவுக்கு

                                  ஏராளமான லைக்ஸ்கள் குவிந்துள்ளது. இசை பிரியர்கள் அனைவரும்

                                  இதை ரசித்து சிறப்பாக இருக்கிறது என்று வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள்.

                                  பியானோ
                                  பியானோ
                                      Posted in சினிமா

                                      துப்புரவு பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்

                                      துப்புரவு பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்

                                      துப்புரவு பணியாளர்கள் மத்தியில் தோன்றிய அமிதாப் பச்சன் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

                                      துப்புரவு பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்,அமிதாப் பச்சன்


                                      இந்தி திரையுலக மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மும்பை ஜூகுவில் உள்ள தனது ‘ஜல்சா’

                                      பங்களாவில் ரசிகர்களை சந்தித்து வந்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாராந்திர ரசிகர்கள் சந்திப்பை நிறுத்தினார்.

                                      இந்தநிலையில், ஜல்சா பங்களா வீட்டு முன் துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

                                      அப்போது துப்புரவு பணியாளர்கள் முன் அமிதாப் பச்சன் தோன்றி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

                                      இந்த சந்திப்பின் போது, தெருவை சுத்தம் செய்யும் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

                                          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                                          ஈராக்கில் -அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்

                                          ஈராக்கில் -அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஏவுகணை

                                          தாக்குதல்

                                          ஈராக் தலைநகர் பக்தாத் பகுதியில் உள்ள அமெரிக்கா கிரீன் சூன்

                                          பகுதி மீது திடீரென Katyusha rocket தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                                          இந்த ஏவுகணை தாக்குதலில் அந்த பகுதி பெரும் புகை மூட்டம் காணபடுகிறது


                                          ஆனால் ,வழமை போல தமக்கு எதுவித பாதிப்புக்களும்

                                          ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது

                                          ஈரான் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டு இருபத்தி

                                          நான்கு மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                                          மேலும் ஈரான் இராணுவ நிலைகள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என

                                          அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக அறிவித்த தன் பின்னர் மேற்கொள்ள பட்ட தாக்குதலாகவும் இதனை பார்க்க முடிகிறது

                                          அரேபிய நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக வெளியேற

                                          வேண்டும் என ஈரான் தொடராக கூறி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                                          ஈரான் ஆதரவு படைகள் இந்த தாக்குதலை

                                          மேற்கொண்டுள்ளளதாக தெரிவிக்க படுகிறது

                                          ஈராக்கில் -அமெரிக்கா
                                          ஈராக்கில் -அமெரிக்கா
                                              Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                                              ரசியா கடல் படையில் புதிய நான்கு – நாசகார ஏவுகணை கப்பல்கள் இணைப்பு

                                              ரசியா கடல் படையில் புதிய நான்கு – நாசகார ஏவுகணை கப்பல்கள் இணைப்பு

                                              உலக நாடுகளை மிரள வைத்து வரும் ஆயுத போட்டியின் உச்ச கட்டமாக

                                              ரசியா தற்போது கண்டு பிடித்துள்ள புதியவகை cruise missile, air defense ,

                                              வான் காப்பு ஏவுகணை திட்டம் அடங்கிய ஆயுத கப்பல்கள் நான்கு இணைக்க பட்டுள்ளது

                                              ரசியாவின் போர் கப்பல்களில் இவை மாறுபட்ட செயல் பாட்டையும் ,புதிய தொழில் நுட்பத்துடன் கொண்டவையாக உள்ளன

                                              முதல் கட்டமாக இந்த அனைத்து கப்பல்கள் இணைக்க பட்டுள்ளன ,
                                              எதிர்

                                              வரும் ஆண்டுகளில் மேலும் பல டசின் இது போன்ற கப்பல்களை இணைப்பதற்கு ரசியா முயன்று வருகிறது

                                              உலக வல்லரசுகளின் ஆயுத போட்டியின் உச்ச கட்டமாக இது பார்க்க படுகிறது

                                              ரசியா, கடல்,படையில்,
                                              ரசியா, கடல்,படையில்,
                                                    Posted in சினிமா

                                                    வைரலாகும் ஆண்ட்ரியாவின் லிப் லாக் காட்சி

                                                    வைரலாகும் ஆண்ட்ரியாவின் லிப் லாக் காட்சி

                                                    தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வரும்

                                                    ஆண்ட்ரியாவின் லிப் லாக் காட்சி வைரலாகி வருகிறது.

                                                    வைரலாகும் ஆண்ட்ரியாவின் லிப் லாக் காட்சி
                                                    ஆண்ட்ரியா


                                                    தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா.

                                                    கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் அனிருத் மற்றும்

                                                    ஆண்ட்ரியாவின் லிப் லாக் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

                                                    லிப் லாக் வீடியோ

                                                    இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆண்ட்ரியாவின் லிப் லாக் வீடியோ

                                                    ஒன்று சமூக வலை வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ

                                                    கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ’அவள்’ என்ற படத்தில் சித்தார்த்

                                                    மற்றும் ஆண்ட்ரியா இணைந்து நடித்த காட்சிகளில் ஒன்று என்று கூறப்படுகிறது.

                                                    பழைய வீடியோவை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறார்கள்.

                                                    வைரலாகும் ஆண்ட்ரியாவின்
                                                    வைரலாகும் ஆண்ட்ரியாவின்
                                                        Posted in சினிமா

                                                        விஜய்யை விடாமல் துரத்தும் ராஷ்மிகா

                                                        விஜய்யை விடாமல் துரத்தும் ராஷ்மிகா

                                                        தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா விஜய்யை விடாமல் துரத்துவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

                                                        விஜய்யை விடாமல் துரத்தும் ராஷ்மிகா
                                                        விஜய் – ராஷ்மிகா


                                                        தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து

                                                        வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

                                                        ராஷ்மிகாவுக்கு விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை. பேட்டி கொடுக்கும் போது எல்லாம் எனக்கு பிடித்த தமிழ் ஹீரோ தளபதி

                                                        விஜய் என்கிறார். மேலும் ட்விட்டரில் யாராவது உங்களுக்கு பிடித்த கோலிவுட் நடிகர் யார் என்று கேட்டால், விஜய் பெயரை சொல்லிவிடுகிறார்.

                                                        இந்நிலையில் லாக்டவுனால் வீட்டில் முடங்கியிருக்கும் ராஷ்மிகா ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

                                                        அப்பொழுது ஒருவர் நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம் எது என்று கேட்டார். உடனே ராஷ்மிகா விஜய்யின் கில்லி படம் என்றார்.

                                                        இதற்கு விஜய் ரசிகர்கள் சிலர் இது பொய். ராஷ்மிகாவுக்கு விஜய் படத்தில் நடிக்க வேண்டும். அதற்காக இப்படி பொய் சொல்கிறார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

                                                        விஜய்யை விடாமல் துரத்தும்
                                                        விஜய்யை விடாமல் துரத்தும்
                                                            Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                                                            சிரியா ,ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேற வேண்டும் – ஈரான் அதிரடி அறிவிப்பு

                                                            சிரியா ,ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேற வேண்டும் – ஈரான் அதிரடி அறிவிப்பு

                                                            ஈராக்,மற்றும் சிரியாவில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகள்

                                                            ,உடனோ அன்றி கட்டம் கட்டமாகவோ வெளியேற வேண்டும் ,அவ்வாறு

                                                            வெளியேற மறுத்தால் அவர்கள் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்

                                                            என ஈரான் அதிபர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

                                                            சிரியாவில் உள்ள ஈரான் இராணுவ தளங்கள் மீது அமெரிக்கா ,இஸ்ரேல்

                                                            கூட்டாக தாக்குதல் நடத்துவோம் என அறிவிப்பு விடுக்க பட்ட 48 மணித்தியாலத்தில் ஈரான் சுப்ரீம் லீடர் இந்த அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்

                                                            ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா இராணுவம் தமது மண்ணில் இருந்து

                                                            விலக வேண்டும் என்ற அறிவிப்பு பிரகடனம் செய்த நிலையில் ,அங்கிருந்து

                                                            விலக மறுத்து அமெரிக்கா தொடர்ந்து நிலை கொண்டுள்ள
                                                            நிலையில்

                                                            இவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, ஏதோ மிக பெரும் விடயத்தை ஈரான் நடத்த தயாராகி வருவதனை இது காண்பிக்கிறது

                                                            சிரியா ஈராக்கில் இருந்து
                                                            சிரியா ஈராக்கில் இருந்து
                                                                Posted in சினிமா

                                                                எனக்கு பாலியல் கொடுமை லட்சுமி ராமகிருஷ்ணன்

                                                                எனக்கு பாலியல் கொடுமை லட்சுமி ராமகிருஷ்ணன்

                                                                சிறு வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

                                                                சிறுவயதில் பாலியல் கொடுமை – லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட பகீர் தகவல்

                                                                திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சில படங்களை டைரக்டும் செய்துள்ளார்.

                                                                தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். சிறு வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை

                                                                அனுபவம் பற்றி அவர் கூறியதாவது: “எனக்கு சிறு வயதில் நடந்த ஒரு அனுபவத்தை இப்போது நினைக்கும்போதும் மனது வலிக்கிறது

                                                                . அப்பா வயதில் இருக்கும் ஒருவர் என் முன்னால் அந்தரங்கத்தை காட்டியபடி நின்றார். ஆரம்பத்தில் அது எனக்கு புரியவில்லை.

                                                                லட்சுமி ராமகிருஷ்ணன்

                                                                வளர வளர புரிய ஆரம்பித்ததும் எவ்வளவு கேவலமான செயல் என்று மனதில் ரணம் ஏற்பட்டது. பெண் குழந்தைகளுக்கு என்ன

                                                                பாதுகாப்பு இருக்கிறது என்று நினைத்து பாருங்கள். அதே மாதிரி எனது மகள் பள்ளியில் இருந்து வரும்போது லிப்டில் ஒருவன்

                                                                ஆபாசமாக நின்றுள்ளான். சி.சி.டி.வி. கேமராவில் தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. எனது நெருங்கிய நண்பர்கள்

                                                                குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு மோசமான தொடுதல் நடந்துள்ளது.

                                                                இப்படி பல பெண்களுக்கு கொடுமைகள் நடக்கிறது”. இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்

                                                                    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                                                                    ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா கடல் படை தாக்குதல்

                                                                    ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா கடல் படை தாக்குதல்

                                                                    Gulf of Aden கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஈரான் எண்ணெய் கப்பல் ஒன்றின்

                                                                    மீது நீரூந்து விசைப்படகுகளில் இடைமறித்த அமெரிக்கா இராணுவத்தினர் திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தினர்

                                                                    இவர்களின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக குறித்த கப்பலில் பாதுகாப்பு

                                                                    பணியில் ஈடுபட்டிருந்த ஆயுத காவலர்களும் திருப்பி தாக்கினர் .இதனால்

                                                                    அமெரிக்கா அகப்பல்கள் பின்வாங்கின .இதில் கப்பலில் பலத்த துப்பாக்கி குண்டுகள் பட்டு சேதமடைந்ததது

                                                                    இந்த தகவல் கடல்படைகளுக்கு வழங்க பட்ட நிலையில் பாதுகாப்பு பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்

                                                                    ஏமான் நாட்டுக்கு அருகில் உள்ள கடல்வழியாக நுழைந்த கடல் கொள்ளையர்கள்

                                                                    ஈரான் கப்பல் வெனிசுவிலோ நாட்டுக்கு பத்து மில்லியன் எண்ணெய்களை

                                                                    ஏற்றி சென்று கொண்டிருந்த பொழுதே அமெரிக்கா கடல் படைகள் சட்ட விரோத தாக்குதலை நடாத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது

                                                                    எனினும் வழங்கவில்லை

                                                                    பிரிட்டன் எண்ணெய்
                                                                    பிரிட்டன் எண்ணெய்
                                                                        Posted in சினிமா

                                                                        நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க புகார்

                                                                        நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க புகார்

                                                                        இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

                                                                        நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க புகார்
                                                                        விஜய்சேதுபதி


                                                                        ஈரோடு மாவட்டம் கோபி போலீஸ் நிலையத்துக்கு நேற்று கோபி பா.ஜ.க.

                                                                        நிர்வாகிகள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தில்

                                                                        ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள்

                                                                        கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் சேதுபதி ஒரு தனியார்

                                                                        தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

                                                                        அது மத ரீதியாகவும் தேசிய இறையாண்மைக்கு எதிராகவும், மத கலவரத்தை

                                                                        தூண்டும் வகையிலும் இருந்தது. விஜய் சேதுபதியின் இந்த பேச்சால் மனவேதனை

                                                                        அடைந்துள்ளோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு

                                                                        அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். அதன்பின்னர் பா.ஜ.க.வினர்

                                                                        அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இதனால் கோபி போலீஸ்

                                                                        நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

                                                                            Posted in சினிமா

                                                                            கண்ணடித்து பிரபலமான நடிகைக்கு என்னாச்சு? இப்படி பண்ணிட்டாரே

                                                                            கண்ணடித்து பிரபலமான நடிகைக்கு என்னாச்சு? இப்படி பண்ணிட்டாரே

                                                                            ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் கண்ணடித்து பிரபலமான நடிகை பிரியா வாரியாரின் திடீர் முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

                                                                            கண்ணடித்து பிரபலமான நடிகைக்கு என்னாச்சு?…. திடீரென இப்படி பண்ணிட்டாரே,பிரியா வாரியர்


                                                                            ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் புருவத்தை வளைத்து சுருக்கி முக பாவனை காட்டியதன் மூலம் உலகம் முழுவதும்

                                                                            பேசப்படும் நடிகையாக மாறினார் பிரியா வாரியர். பள்ளி மாணவியாக இருந்த பிரியா வாரியர், அடார் லவ் படத்தில் பள்ளி

                                                                            மாணவியாகவே நடித்தார். அவர் காட்டிய முக பாவனைகள், உலகம் முழுவதும், ஒரே நாளில் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை

                                                                            பெற்று தந்தது. அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது.

                                                                            பிரியா வாரியர்

                                                                            இந்நிலையில் திடீரென்று பிரியா வாரியார் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து விலகியுள்ளார். அதற்கான காரணம் பற்றி அவர்

                                                                            தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அதே சமயம் மற்ற சமூக வலைதள கணக்குகளில் தொடர்ந்து நீடிக்கிறார். லட்சக்கணக்கான

                                                                            பாலோவர்களை இன்ஸ்டாவில் வைத்திருக்கும் பிரியா வாரியர் மீது யார் கண்ணு

                                                                            பட்டுச்சோ இன்ஸ்டாவிலிருந்து விலகி விட்டாரே, என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

                                                                            பிரபலமான
                                                                            பிரபலமான
                                                                                Posted in சினிமா

                                                                                பைக்கில் ஊர் சுற்றிய சமந்தா

                                                                                பைக்கில் ஊர் சுற்றிய சமந்தா

                                                                                தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தனது கணவருடன் பைக்கில் ஊர் சுற்றி இருக்கிறார்.

                                                                                பைக்கில் ஊர் சுற்றிய சமந்தா
                                                                                நடிகை சமந்தா


                                                                                சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

                                                                                அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து

                                                                                அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

                                                                                கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வீட்டிலேயே முடங்கி இருந்த சமந்தா, அவரது

                                                                                கணவர் நாகசைதன்யாவுடன் பைக்கில் வெளியில் சென்றதை புகைப்படம்

                                                                                எடுத்து பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தை 15 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்திருப்பது ஆச்சரியம்.

                                                                                பைக்கில் ஊர் சுற்றிய ச
                                                                                பைக்கில் ஊர் சுற்றிய ச