Author: நிருபர் காவலன்
நயன்தாராவின் பெஸ்ட் குணம்… புகழாரம் சூட்டிய பிரபல தொகுப்பாளினி.
நயன்தாராவின் பெஸ்ட் குணம்… புகழாரம் சூட்டிய பிரபல தொகுப்பாளினி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் பெஸ்ட் குணம் பற்றி பிரபல தொகுப்பாளினி கூறியிருக்கிறார்.
நயன்தாராவின் பெஸ்ட் குணம்… புகழாரம் சூட்டிய பிரபல தொகுப்பாளினி
நயன்தாரா
நயன்தாரா தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சிறந்த நடிப்பையும் தாண்டி அவர்
படக்குழுவினர்களுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பு, சக மனிதர்களிடம் காட்டும் அன்பு, உண்மையாக நட்பை நேசிப்பது
ஆகியவையே அவர் இன்னும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கான காரணம் என்று கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.
நயன்தாரா, டிடி
இந்த நிலையில் நயன்தாராவின் பெஸ்ட் குணம் என்ற ஒன்றை பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி, ரசிகரின் கேள்வி
ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே கூறியுள்ளார். நயன்தாராவை பொருத்தவரை அவருக்கு யார் மீதாவது கோபம் என்றால் அந்த
கோபத்தை மனதில் வைத்துக்கொள்ள மாட்டார். உடனே சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசியில் அழைத்து, ‘இதெல்லாம்
எனக்கு பிடிக்கவில்லை என்று அவரது கோபத்தை சம்பந்தப்பட்டவரிடமே காட்டி விடுவார்.
எனக்கு தெரிந்து இது மிகவும் சிறந்த பெஸ்ட் குணம் என்று நினைக்கிறேன். டிடியின் இந்த பதிலால் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கணவருடன் விளையாடும் எமி ஜாக்சன்
கணவருடன் விளையாடும் எமி ஜாக்சன்
தமிழில் மிகவும் பிரபலமான எமி ஜாக்சன் குழந்தையை விட்டு கணவருடன் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
குழந்தையை விட்டு கணவருடன் விளையாடும் எமி ஜாக்சன்
கணவருடன் எமி ஜாக்சன்
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில்
நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.
ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பது குழந்தை பெற்றுக் கொண்டார். அவருக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்தனர்.
சமீப காலமாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு வந்தார் எமி ஜாக்சன். தற்போது கணவருடன்
விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்

பெண்களுக்கு உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய வேண்டுமா
பெண்களுக்கு உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய வேண்டுமா
பெண்கள் பிரா அணியும் இடங்களில் எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். உள்ளாடைகள் அணியும் இடத்தில் கருப்புக்கோடு வருவது இயல்புதான்.
பெண்களுக்கு உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய வேண்டுமா?
பெண்களுக்கு உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய வேண்டுமா?
பெண்கள் பிரா அணியும் இடங்களில் எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். உள்ளாடைகள் அணியும் இடத்தில்
கருப்புக்கோடு வருவது இயல்புதான். இருப்பினும் அது காண அத்தனை அழகாக இருக்காது. குறிப்பாக பெண்கள் பிரா அணியும்
இடங்களில் எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். இதை பெண்கள் விரும்ப மாட்டார்கள். இந்தக் கோடுகளை நீக்க சில வீட்டுக்குறிப்புகளை பின்பற்றலாம்.
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சில துளிகள் தேன் கலந்து கருப்பு கோடுகள் உள்ள இடங்களில் தடவ வேண்டும். அதை
- சருமம் உறிஞ்சும் வரை காய விடுங்கள். அதன் பின் நீரினால் கழுவிவிடுங்கள்.
- ஆரஞ்சு தோலை வெயிலில் காய வைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். அதில் பல அழகுக் குறிப்புகளுக்கு உதவும்.
- அந்த ஆரஞ்சுப் பொடியில் தேன் ஊற்றி அதை பேஸ்ட் போல் குழைத்துக்கொள்ளுங்கள். அதை கருப்புக் கோடு உள்ள
- இடத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
- 1 ஸ்பூன் கடலை மாவுடன் 10 மிலி எலுமிச்சை சாறு ஊற்றி
- பேஸ்ட் போல் குழைத்து தடவ சரியாகும். தேவையற்ற முடிகள் வளர்வதை தடுக்கவும் இந்த பேக்கை அப்ளை செய்யலாம்.
- முட்டையில் உள்ள வெள்ளையை மட்டும் எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து குழைத்து கோடுகள் உள்ள இடத்தில் தடவுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
- வெள்ளரி மற்றும் கற்றாழை இரண்டையும் பேஸ்ட் போல் குழைத்து தடவுங்கள்.
- பேக்கிங் சோடாவையும் தண்ணீரில் குழைத்து கோடுகள் உள்ள இடத்தில் தடவுங்கள்.
- கருப்புக் கோடுகள் உள்ள இடங்களில் ஆலிவ் எண்ணெய் தடவி மசால் செய்து இரவு தூங்கிவிடுங்கள். காலை எழுந்து
- கழுவிக்கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை செய்து வாருங்கள். பலன் கிடைக்கலாம்.
ஊரடங்கும் தேவை இல்லாதது – மன்சூரலிகான்
ஊரடங்கும் தேவை இல்லாதது – மன்சூரலிகான்
கொரோனா வைரஸ் பயமும், ஊரடங்கும் தேவை இல்லாதது என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.
பயமும், ஊரடங்கும் தேவை இல்லாதது – மன்சூரலிகான்
நடிகர் மன்சூரலிகான்
நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் விடுத்துள்ள அறிக்கையில், “தட்டம்மை, தடுப்பம்மை போன்றவற்றை குழந்தை
பருவத்திலேயே எதிர்கொண்டு நம் உடல் வலிமை பெற்று இருக்கிறது. மேலும், நமது உணவு பழக்கங்களால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையிலேயே அதிகமாக உள்ளது.
கொரோனாவை பார்த்து நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏன், தமிழகத்தில் கொரோனா ஒன்றுமே இல்லை, என்பது தான் என்
கணிப்பு. நம் மூதாதையரின் வைத்தியமே கொரோனாவை 100 சதவீதம் குணப்படுத்திவிடும். சலி, இருமல் போன்றவைகள்
வந்தால், சுக்கு, மிளகு, இஞ்சி போன்றவற்றை கொதிக்க வைத்து குடித்தால், இரண்டு நாட்களிலேயே சலி காணாமல்
போய்விடுகிறது. மேலும், தூதுவலை உள்ளிட்ட ஏகப்பட்ட இயற்கை மருத்துவம் நம் கையில் இருக்கிறது.
இப்படி சலி மற்றும் காய்ச்சலை வைத்து வரும் கொரோனாவையும், நம் உணவு பழக்கம் மூலம் நாம் எளிதாக எதிர்கொள்ள முடியும்.
ஆனால், நம் நாட்டு அரசு, மேலை நாட்டினரை பார்த்து பயந்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கே இங்கே
போட்டிருக்க கூடாது என்பது தான் என் கருத்து. இதனால், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரமும், வாழ்வும்
கேள்விக்குறியாகியிருப்பதோடு, நாடே மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருக்கிறது.
பல துறைகள் மீண்டும் பழையபடி செயல்பட உத்தரவு விட வேண்டும், என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை தாழ்மையோடு
கேட்டுக் கொள்கிறேன். அதேபோல், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் கோவில்களையும் திறக்க வேண்டும், என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் – லாவண்யா
நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் – லாவண்யா
நெருக்கமான காட்சிகளில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று நடிகை லாவண்யா திரிபாதி கூறியுள்ளார்.
நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் – லாவண்யா
லாவண்யா திரிபாதி
தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி.
தற்போது தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் இனிவரும் நாட்களில்
கதாநாயகர்களுடன் மிக நெருக்கமாக நடிக்க வேண்டிய காட்சிகளை தவிர்த்து விடுவேன் என கூறியுள்ளார்.
கொரோனா தாக்கம் முடிந்தபின்பு படப்பிடிப்புகள் துவங்கினாலும் நிச்சயம் பல மாற்றங்கள் அதில் காணப்படும் என கூறியுள்ள
லாவண்யா திரிபாதி, கட்டாயம் அரசு விதிக்கும் விதிமுறைகளை பின்பற்றித்தான் படப்பிடிப்பு நடக்கும் என கூறியுள்ளார்.
அதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்
நயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி
நயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி
நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி வரும் ஆர்.ஜே.பாலாஜி, அவருடைய சீக்ரெட் பற்றி சொல்லியிருக்கிறார்.
நயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி
ஆர் ஜே பாலாஜி – நயன்தாரா
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பங்கேற்ற கலந்துரையாடலில், அவரது அடுத்த படமான மூக்குத்தி அம்மன்
படம் குறித்து மனம்திறந்துள்ளார். அதில், மூக்குத்தி அம்மன் படம் திரையரங்கில் வெளியான பின்னரே ஓடிடி இணையதளத்தில்
வெளியாகும் என்று கூறியிருக்கிறார். கெரோனா ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறக்கும் பட்சத்தில் முதல் படமாக மூக்குத்தி
அம்மன் படத்தை ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.
நயன்தாரா பற்றிய கேள்விக்கு, தான் இதுவரை நடித்த நாயகிகளுள் மிகவும் ஒழுக்கமான நடிகை அவர், அதனாலேயே ஆண்களுக்கு
முக்கியத்துவம் உள்ள இந்த துறையில், அவர் தனித்து நிற்கிறார் என்று கூறியிருக்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜி கதை எழுதி நடிக்க, சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர். வேல்ஸ்
பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.
விபச்சாரத்தை விட்டிடு
விபச்சாரத்தை விட்டிடு
என் பணத்தை நீ பறிக்க
எனக்கென்ன வலை விரிப்போ …
உன் கணக்கில் நான் இலக்கோ ..?
உறவாட வரி விலக்கோ …?
தூங்காத கண் மணியே
துயிலுரிக்க முடியாதே ….
மயங்காத மனிடமே
மனதை நீ எறியதே ….
உருகாத மெழு கொன்றில்
உஷ்ணத்தை ஏற்றாதே …
கறையான் புற்றொன்றில்
கை கழுவ முடியாதே ….
ஏறி கின்ற தூண்டிலுக்குள்
ஏய் மனமே சிக்காதே ..
தப்பான கணக்கொன்றில்
தவறியது ஏன் தானோ ..?
முறையான கணக்கென்றால்
முன்னே நாம் வந்திடலாம் …
பிழையான கணக்கொன்றில்
பிள்ளைகள் யாம் வீழ்ந்திடவோ ..?
என் உடலை நான் காட்ட
எனக்கவன் முதலாளி …?
அவன் சொல்லில் நான் ஆடும்
அம்மண தொழிலாளி ….
இது தானோ உன் வாழ்வு ..?
இவ்வுலகில் நீ தாழ்வு ….
அறியாமல் அலைகின்றாய்
அவசரத்தில் விதைக்கின்றாய் …
உயிர் கொல்லி நோய் வாங்கி
உன் உடலை ஏன் அழித்தாய் ..?
இது போன்ற தொழில் ஒன்று
இனி வேண்டாம் விட்டிடுவாய் …?
வன்னி மைந்தன்
ஆக்கம் -26-05-2020

இந்த நிலையில் சுமனா கித்தூர் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது காதலனை கரம்பிடித்த
இந்த நிலையில் சுமனா கித்தூர் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது காதலனை கரம்பிடித்த
கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிரபல பெண் இயக்குனர் தன் காதலனை கரம்பிடித்து இருக்கிறார்.
ஊரடங்கு நேரத்தில் காதலனை கரம்பிடித்த பெண் இயக்குனர்
காதலருடன் இயக்குனர் சுமனா கித்தூர்
கன்னட திரைப்பட உலகில் பிரபல இயக்குனராக இருப்பவர், சுமனா கித்தூர். இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா கித்தூர் ஆகும். இவர்
சிவமொக்காவை சேர்ந்த என்ஜினீயரான சீனிவாசை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் வைத்து திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு இருவரும் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்றிருந்தனர். கொரோனா ஊரடங்கால் கர்நாடகம் திரும்ப முடியாமல் அவர்கள் அங்கேயே
சிக்கிக்கொண்டனர். இதனால் சுமனா கித்தூரும், சீனிவாசும் புதுச்சேரியில் வைத்து எளிமையாக திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில் சுமனா கித்தூர் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது காதலனை கரம்பிடித்த புகைப்படங்களை வெளியிட்டார். அதில் அவர், எங்களது திருமணம் புதுச்சேரியில் எளிமையாக நடந்தது.
இதில் இரு குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்டனர் என்று தெரிவித்துள்ளார். தற்போது சுமனா கித்தூர்- சீனிவாசின் திருமண
புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கன்னட திரைப்பட பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா
அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா
மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் நெற்றிக்கண் படத்தில் இடம்பெறும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடிகை நயன்தாரா டூப் போடாமல் நடித்துள்ளாராம்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா
நயன்தாரா
‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்.
அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார்.
இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார்.
மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்தபின் எஞ்சியுள்ள படப்பிடிப்புகளை நடத்த உள்ளனர்.
நெற்றிக்கண் படக்குழு
இந்நிலையில், இப்படத்தின் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் சமீபத்திய நேர்காணலில் கூறியதாவது: “நெற்றிக்கண் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவைக்கும் திரில்லர் படம்.
இப்படத்தில் வரும் சண்டை காட்சிகள் ரசிகர்களை நிச்சயம் கவரும். சண்டை காட்சிகளில் நயன்தாரா டூப் போடாமல் நடித்துள்ளார்.
இந்த படத்தில் வித்தியாசமான நயன்தாராவை ரசிகர்கள் பார்ப்பார்கள்” என அவர் கூறினார்

அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா
அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா
நடிகை ஜோதிகா, வடக்கிலிருந்து வந்தாலும் அதை கச்சிதமாக செய்துள்ளதாக நடிகை ராதிகா டுவிட்டரில் பாராட்டி உள்ளார்.
அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா புகழாரம்
ஜோதிகா, ராதிகா
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. நேர்மையான
வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஓர் அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’.
ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர், 2004-ம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி
என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை இது.
ராதிகாவின் டுவிட்டர் பதிவு
2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக
அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த, கொரோனா ஊரடங்கு என்பதால் வீடியோ கால் மூலமாக
பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோதிகா. இதில் முழுக்க தமிழில் பேசினார். இந்த வீடியோ வெளியானது.
ஜோதிகாவின் பேட்டி குறித்து ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “நம்பிக்கையுடன், தெளிவாக தமிழைப் பேசும் ஜோதிகாவின் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.
எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. வடக்கிலிருந்து இங்கு வந்து இதைக் கச்சிதமாகச் செய்த ஒரே நடிகை.
அவருக்குப் பாராட்டுகள்” இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின்
டிரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
பெண்கள் அந்த விஷயங்களை யாரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள்
பெண்கள் அந்த விஷயங்களை யாரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள்
ஆண்கள் ஒரு தகவலை தங்களது துணையிடம் விவாதித்து அது பற்றிய
விவரங்களை பரிமாறி கொள்வது வழக்கம். ஆனால் இந்த விசயத்தில் பெண்கள் அப்படியே வேறுபட்டு காணப்படுகின்றனர்.
பெண்கள் அந்தரங்க தகவலை யாரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் தெரியுமா?
பெண்கள் தனது அந்தரங்க உறவு குறித்த தகவல்களை தங்கள் கணவரை
விட அதிகமாக தன் தோழிகளிடமே பகிர்ந்து கொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொதுவாக ஆண்கள் ஒரு தகவலை தங்களது துணையிடம் விவாதித்து
அது பற்றிய விவரங்களை பரிமாறி கொள்வது வழக்கம். ஆனால் இந்த விசயத்தில் பெண்கள் அப்படியே வேறுபட்டு காணப்படுகின்றனர்.
இது பற்றிய ஒரு முடிவில், பெண்கள் தனது கணவரை விட அவர்களது தோழியிடம் தான் அதிகமாக தனது அந்தரங்க தகவல்
குறித்து பேசுகின்றனர். இதில் அவர்களது தோழிகளுடன் இரவில் வெளியே செல்லும் போது அதிகமான அந்தரங்கம் பற்றிய தகவல்களை ஆர்வமுடன் பேசுகின்றனர்.
35 சதவீதம் பெண்கள் இந்த மாதிரி பரிமாறி கொள்வதாக ஒரு ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது. ஆனால், 15 சதவீத பெண்கள்
தங்கள் கணவருடன் இரவு நேரத்தில் வெளியே செல்லும் போது அந்தரங்கம் தொடர்பான விசியங்களை பகிர்ந்து கொள்கின்றனர்
. அந்த வகையில் பார்த்தால், பெண்கள் அதிகமாக ஆண்களை பற்றியே பேசுகின்றனர். அதில் 64 சதவீதம் பேர் தங்களது கணவர்களை பற்றியே பேசுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அதில் சிலபேர் மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களை பற்றி ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
2 மாதங்களாக வெளிநாட்டில் தவிக்கும் நடிகை.
2 மாதங்களாக வெளிநாட்டில் தவிக்கும் நடிகை.
பிரபல இந்தி நடிகை மவுனிராய் 4 உடையுடன் 2 மாதங்களாக வெளிநாட்டில் சிக்கி தவித்து வருகிறார்.
4 உடையுடன் 2 மாதங்களாக வெளிநாட்டில் தவிக்கும்
பிரபல இந்தி நடிகை மவுனிராய். இவர் விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக அபுதாபி சென்று இருந்தார். படப்பிடிப்பு நடந்து
கொண்டிருந்தபோது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால்
மவுனிராயால் இந்தியா திரும்ப முடியவில்லை. கடந்த 2 மாதங்களாக அபுதாபியிலேயே சிக்கி தவிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
விளம்பர படப்பிடிப்பை சில நாட்களில் முடித்து விடலாம் என்று சொல்லி என்னை அழைத்து வந்தனர். இதனால் 4 நாட்களுக்கு
தேவையான உடைகளை மட்டுமே எடுத்து வந்தேன். ஊரடங்கினால் என்னால் இந்தியாவுக்கு திரும்ப முடியவில்லை. 4 நாள்
உடைகளோடு 2 மாதங்களாக அபுதாபியில் தவித்துக்கொண்டு இருக்கிறேன்.
இப்படி ஒரு கஷ்ட நிலைமை ஏற்படும் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை. ஒவ்வொரு நாளும் விமானம் எப்போது கிளம்பும்
என்பதை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். தெரிந்த சில நண்பர்கள் இருப்பதால் ஓரளவு நிம்மதியாக இருக்கிறேன்.
இந்தியா திரும்பும் நாளை ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கொரோனா ஊரடங்கு உலகம் முழுவதும்
அனைத்து மக்களுக்கும் நல்ல படிப்பினையை கொடுத்து இருக்கிறது.
இவ்வாறு மவுனிராய் கூறினார்.
வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த ஷெரின்
வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த ஷெரின்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷெரின் வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த பேசியிருக்கிறார்.
வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த ஷெரின்
ஷெரின்
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் ஷெரின். இதையடுத்து விசில், உற்சாகம் உள்ளிட்ட படங்களில்
நடித்தார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் ஷெரினிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு, ”திருமணம் செய்ய, நம் வாழ்வில் யாராவது ஒருவர் இருக்க
வேண்டும். அப்படியான ஒருவர் இப்போது என் வாழ்க்கையில் இல்லை. அதுவும் இல்லாம நாம இப்போ ஊரடங்குல இருக்கோம்,
நான் வீட்டுக்குள்ளே, வர போற என் இளவரசருக்காக காத்துட்டு இருக்கேன்” என்று கூறியுள்ளார்
இலியானாவின் நீச்சல் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்
இலியானாவின் நீச்சல் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை இலியானாவின் நீச்சல் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இலியானாவின் நீச்சல் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்
இலியானா
தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை இலியானா. விஜய்
நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு,
இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
நீருக்குள் நீச்சலடிக்கும் இலியானா
ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.
இந்நிலையில் நீருக்குள் நீச்சலடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இலியானா.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு பல லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.

சொந்த தயாரிப்பிலேயே நடிக்கிறேன் – ஜோதிகா
சொந்த தயாரிப்பிலேயே நடிக்கிறேன் – ஜோதிகா
சொந்த தயாரிப்பிலேயே தொடர்ந்து நடிக்க காரணம் என்ன என்று ஜோதிகாவிடம் கேட்டதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
அந்த காரணத்தால்தான் சொந்த தயாரிப்பிலேயே நடிக்கிறேன் –
ஜே.ஜே. பிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள்
வந்தாள்’ படம் வரும் 29-ந் தேதி அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் சொந்த தயாரிப்பிலேயே தொடர்ந்து நடிக்க காரணம் என்ன? என்று ஜோதிகாவிடம் கேட்டதற்கு, இது எனக்கு வசதியாக
இருக்கிறது. குடும்பம், குழந்தைகளையும் கவனிக்க வேண்டும் என்பதால் படப்பிடிப்புகளில் எனக்கு சில தளர்வுகள் வேண்டும்.
அதற்கு சொந்த தயாரிப்பு தானே வசதி? என்று பதில் அளித்துள்ளார்.
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்
நம்முடைய இயற்கைக்கு மீறிய செய்கையால், நமது சிறுநீரகம் சற்று செயலிழக்கும் நிலையில் முழித்துக்கொள்ளுங்கள். விழித்து
எழுந்து எளிமையான யோகாசனத்தின் மூலமும், உணவு உண்ணும் முறை மூலமும் மீண்டும் சிறப்பாக இயங்கச் செய்ய முடியும்.
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளும், முக்கிய காரணங்களும்
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளும், முக்கிய காரணங்களும்
மனித உடல் உறுப்புகள் அனைத்துமே மிக முக்கியமானவை. அதில் சிறுநீரகம் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்.
சிறுநீரகங்கள் வயிற்று பின்புறம் முதுகெலும்பின் இரு பக்கங்களிலும் 2 செ.மீ. நீளத்தில் 6 செ.மீ அகலத்தில் 3 செ.மீ. தடிமானத்தில் இருக்கின்றன.
சிறுநீரகத்தின் வேலை: ஒரு மில்லியன் சிறுநீரக முடிச்சுகள் (நெப்ரான்கள்) நமது உடலில் உள்ளன. இந்த நெப்ரான்கள்
இரத்தத்திலிருந்து சிறுநீரை வடிகட்டி சிறுநீர்ப்பைக்கு அனுப்பிக் கொண்டேயிருப்பது தான் இதன் வேலையாகும்.
பொதுவாக நாளை நாம் என்ன வேலை செய்யப் போகின்றோம் என்று திட்டமிட்டு அதன்படி செயல்படுவது வழக்கம். நாளை நமது
வேலை என்ன என்று குத்துமதிப்பாக நமக்கு தெரியும். ஆனால் சிறுநீரகத்திலுள்ள நெப்ரான்களுக்கு அன்று என்ன வேலை
வரப்போகின்றது என்று கூடத்தெரியாது. நாம் எப்படி சாப்பிடுகின்றோம்! அப்பா கேட்கவே வேண்டாம். காலை டிபன்
வயிறு முழுக்க, அது ஜீரணமாகுமுன் ஸநாக்ஸ் வேறு பின் மதியம் பின் நொறுக்குத் தீனி, மாலை வடை, பஜ்ஜி, டீ, இரவு முழுக்க கட்டு
கட்டி விடுகின்றோம். இவ்வாறு அதிகப்படியான உணவுகளைச் சாப்பிடுவதால் அதிக கழிவுகள் சேர்கின்றன. அவற்றை வெளியேற்ற நெப்ரான்கள் ஓவர் டைம் வேலை பார்க்கின்றது.
தாயின் வயிற்றில் கரு உண்டான மூன்றாவது மாதத்திலிருந்து அந்த மனிதன் வளர்ந்து சாகும் வரை நம் உடலில் ஓய்வின்றி வேலை
பார்ப்பது சிறுநீரகம். இந்த ஆரம்பநிலை சிறுநீர் நெப்ரான்களின் வழியே பொட்டாசியம், பாஸ்பேட், அமோனியா போன்ற தாதுப்
பொருட்கள் தண்ணீருடன் கலந்து சிறுநீர்ப் பையில் சேருகின்றன. இப்படிபட்ட சிறுநீரகம் செயல் இழதால் உடலில் கீழ்கண்ட அறிகுறிகள் தோன்றும்.
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்
- அடிக்கடி காய்ச்சல் வரும்.
- கை, கால் வீக்கம் ஏற்படும்.
- பசியின்மை, வயிறு உப்புசம்
- இருமல், சளி, மூச்சுத்திணறல்
- தோல் வியாதி
- வயிற்றுப் போக்கு
- மன சோர்வு
- பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி மாற்றங்கள்
- தசைப் பிடிப்பு
- இரத்த சோகை
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் உங்கள் உடலில் இருந்தால், சிறுநீரகம் ஒழுங்காக இயங்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சிறுநீரக செயலிழப்பிற்கு முக்கிய காரணங்கள்
- அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால்
- சிகரெட், பீடி, மது பழக்கத்தால், தவறான உணவு முறை,
- பசித்தால் மட்டும் புசிக்காமல் ருசிக்காக நேரம் தவறி உணவு உட்கொள்வதால்
- உயர்ந்த இரத்த அழுத்தம்
- மன உளைச்சல், மன அழுத்தம், கோபம்
- அளவுக்கு அதிகமாக போகத்தில் ஈடுபடுதல்
நம்முடைய இயற்கைக்கு மீறிய செய்கையால், நமது சிறுநீரகம் சற்று செயலிழக்கும் நிலையில் முழித்துக்கொள்ளுங்கள். விழித்து
எழுந்து எளிமையான யோகாசனத்தின் மூலமும், உணவு உண்ணும் முறை மூலமும் மீண்டும் சிறப்பாக இயங்கச் செய்ய முடியும்..
வைரலாகும் வேதிகாவின் வெறித்தனமான ஆட்டம்
வைரலாகும் வேதிகாவின் வெறித்தனமான ஆட்டம்
காளை, காஞ்சனா படங்களில் நடித்த வேதிகா, வெறித்தனமாக
ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வேதிகாவின் வெறித்தனமான ஆட்டம்
வேதிகா
சிம்புவுடன் காளை படத்தில் நடித்து பிரபலமானவர் வேதிகா. இப்படத்தை
தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். கடந்த வருடம் நடிகர் ராகவா
லாரன்ஸின் காஞ்சனா-3 படத்தில் நடித்தார். மேலும் தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை வேதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ்
ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வெறித்தனமாக ஆடும் வேதிகாவின்
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள்
பலரும் சிறப்பாக நடனம் ஆடுவதாக பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள்.
கமல் கொடுத்த அன்புப்பரிசு… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஹாலிவுட் நடிகை
கமல் கொடுத்த அன்புப்பரிசு… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஹாலிவுட் நடிகை
கமல்ஹாசன் குறித்து ஹாலிவுட் நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர்
தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
கமல் கொடுத்த அன்புப்பரிசு… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஹாலிவுட் நடிகை
மெக்கன்ஸி வெஸ்ட்மோர், கமல்ஹாசன்
ஹாலிவுட்
படங்களில் ஒப்பனையாளராக பணியாற்றிய வெஸ்ட்மோர், தசாவதாரம்,
அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசனுடன் பணியாற்றியுள்ளார்.
வெஸ்ட்மோரின் மகள் மெக்கன்ஸி வெஸ்ட்மோர் நடிகையாகவும், பாடகியாகவும்
வலம் வருகிறார். இவர் தனது டுவிட்டர் பதிவில், எனக்கு கமல்ஹாசனைத் தெரியுமா என்று பலர் கேட்கின்றனர்.
நான் சிறிய பெண்ணாக இருந்த போது கமல்ஹாசனின் பல கதாபாத்திரங்களுக்கு
என் தந்தை மேக்கப் செய்துள்ளார். கடைசியாக அவரை சந்தித்து சில வருடங்களாகிவிட்டன.
2வது புகைப்படத்தில் நானும் எனது அப்பாவும் கமல்ஹாசன் பரிசளித்த
இந்திய உடைகளை அணிந்துள்ளோம் என்று கூறியுள்ளார். கமல்ஹாசன்
பற்றிய மெக்கன்ஸியின் பதிவுக்கு கமல் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்
போருக்கு பின் இலங்கையில் நடப்பது என்ன ..?- வெளிவர காத்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்
போருக்கு பின் இலங்கையில் நடப்பது என்ன ..?- வெளிவர காத்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்
இலங்கையி, இறுதி போர் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்ற தன் பின்னர் ,இலங்கையில்
போருக்கு பிந்திய காலத்தில் என்ன நடக்கிறது என்பது தொடர்பான பல்வேறு
பட்ட விடயங்கள் அடங்கிய ஆவண பதிவுகளை ஐரோப்பிய முக்கிய வெள்ளையர் ஊடகங்கள் காட்சி படுத்தி வருகிறது
பத்து ஆண்டுகளில் தமிழர் பகுதிகளில் தமிழர்கள் சந்திக்கும் இன்னல்களை இது விவரிக்கிறது .
இதுவரை வெளிவராத பல திடுக்கிடும் தகவல்கள் ,
சிங்கள இராணுவ புலனாய்வாளர்களின் பல்வேறு பட்ட நாசகார தகவல்கள் சிங்கள இராணுவ அதிகாரிகள் மூலமே பெற பட்டு ஆவணமாக பட்டுள்ளதாம்
அப்படி என்றால் இந்த காட்சிகள் வெளிவந்தால் கண்டிப்பாக சிங்கள இராணுவத்தில் , இரட்டை உளவாளிகளாக விளங்கும் முக்கிய
சிங்கள இராணுவ தளபதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற படும் என அடித்து கூறலாம்
எப்படி எப்போது இந்த ஆதாரங்கங்கள் வெளிவரும் என்பதே இப்போதுள்ள கேள்வியாகும் ,
இது வெளிவந்தால் ஆளும் அரசாட்சி நிச்சமயமாக கவிழ்க்க படும் நிலையை இது ஏற்படுத்தும் ,
ஏன் எனில் தமிழர்கள் பட்டது போலவே சிங்களவர்கள் பட்ட இன்னல்களும் காட்சி படுத்த பட்டுள்ளனவாம்
விடயம் கொஞ்சம் வில்லங்கமானது ,தமிழர் அரசியல் தலைவர்கள் சிலரது தலையும் இதில் உருள போகிறது
இதனை ஆவண படுத்திய அந்த நல்ல உள்ளங்களுக்கு உலக மக்கள் நன்றிகளை கூற கடமை படுவார் என்பது காட்சிகள் வெளிவந்த முதல் தெரியவரும்
மீண்டும் சொல்கிறோம் சிங்கள அரசு தனக்கு தானே புதைகுழி வெட்டி கொள்கிறது ,
அவர்களுக்கு ஆலோசகராக இருக்கும் தமிழர்கள் மாற்றி யோசித்து விடயத்தை விளங்க படுத்தி தீர்வு நோக்கி வேகமாக நகர வேண்டும்
தவறின் மிக பெரும் அபாயத்தை இலங்கை மத்தி சந்திக்க போகிறது,சொலவ்து நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் ..ஆபத்து மிக அருகில் ….!
- மாறன் –
சுமந்திரனை தண்டிக்க மறுக்கும் சம்பந்தர்-கொதிக்கும் தமிழர்கள்
சுமந்திரனை தண்டிக்க மறுக்கும் சம்பந்தர்-கொதிக்கும் தமிழர்கள்
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளை கொச்சை படுத்தி பேசிய சுமந்திரனின் சர்ச்சை பேச்சுக்கள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின
அதனை அடுத்து எழுந்த மக்கள் கொந்தளிப்பபை தணிக்க சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பட்டு அவர் அந்த கட்சியில் இருந்து நீக்க படுவார் என எதிர் பார்க்க பட்டது
ஆனால் இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எவ்வித நகர்வையும் மேற்கொள்ளவில்லை
கடந்த பத்து ஆண்டுகளாக தமிழீழ விடுதலை போரை கொச்சை படுத்தி பேசி வரும் சுமந்திரன் மீது செருப்படி நடத்த பட்டது
ஆறாத வலியோடு பயணிக்கும் தமிழர்கள் மனதில் ஓங்கி அறை விட்டது போலவே சுமந்திரன் செயல் பாடுகள் அமைய பெற்றன
கோத்தபாயவின் ஜனாதிபதி சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரன் தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வை பெற்று தர போகின்றார் ..?
,புலிகள் ஆயுத போரை ஏற்று கொள்ள முடியாது என்பன போன்ற பல்வேறு பட்ட இழிநிலை பிரச்சாரங்களை சுமந்திரன் ,சம்பந்தரும் மேற்கொண்ட வண்ணமே உள்ளனர்
ஆனால் சுமந்திரன் விடும் தவறுகள் அனைத்திற்கும் ஆதரவு வழங்கிய படியே சம்பந்தர் பயணிக்கின்றார்
வரும் பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் ,சம்பந்தரை மக்கள் தோற்கடிக்க வேண்டும் ,
இவர்கள் பதவிகள் அகற்ற பட்டு புதிய தலைவர்கள் நியமிக்க பட்டு கட்சி மறுசீரமைப்புக்கு உள்ளாக்க பட வேண்டும்
இதனை செய்திட தவறினால் விக்கினேஸ்வரன் தலமையிலான அணியினரை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் ,
அவர்கள் முள்ளி வாய்க்கால் படுகொலையினை தமிழ் இன அழிப்பு என்றே கூறி வருகின்றனர்
,ஆனால் தமிழ் தேசிய் கூட்டமைப்பு சுமந்திரன் ,சம்பந்தன் ,அது ஒரு போர்க்குற்றம் என்ற முழங்கி செல்கின்றனர்
சுமந்திரன் புரியும் இழி செயல்களை இனியும் அனுமதிக்க முடியாது ,ஒன்று பட்டு மக்கள் எழுவதன் மூலமே
தமிழர் தேசிய அறவழி போரை முன்னெடுத்து செல்ல முடியும் என்பதே,சுமந்திரன் செயல் பாடுகள் உணர்த்தியுள்ளன
- வன்னி மைந்தன் –







