மசூதி மீதான தாக்குதலில் 21 பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மசூதி மீதான தாக்குதலில் 21 பேர் பலி

மசூதி மீதான தாக்குதலில் 21 பேர் பலி

மசூதி மீதான தாக்குதலில் 21 பேர் பலி ,பெய்ரூட் மீது இஸ்ரேல் குண்டுவீசி, காசா மசூதி மீதான தாக்குதலில் 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

பெய்ரூட் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களின் மற்றொரு இரவு இது, ஆனால் அது வேகம், தீவிரம் மற்றும் எடை ஆகியவற்றின்

அடிப்படையில் வேறுபட்டது. ஒவ்வொரு முறையும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் தரையைத் தாக்கும் போது வானம் ஒளிர்கிறது.

பெய்ரூட்டில் உள்ள ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையம் வான்வழித் தாக்குதல்களால் முற்றுகையிடப்பட்டது –

விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் இரண்டு தாக்குதல்கள், விமான நிலையத்தின் சுவர் மீது தாக்குதல். இருப்பினும் விமானங்கள் நிற்கவில்லை, இந்த வேலைநிறுத்த அலைகளின் போது ஒரு விமானம் தரையிறங்கியது.

மற்ற இஸ்ரேலிய தாக்குதல்கள் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியேவில் பல சுற்றுப்புறங்களைத் தாக்கின.

இந்த தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, இஸ்ரேலிய தாக்குதல்கள் தாக்கும் விதம் மற்றும் இஸ்ரேலியர்கள் செயல்படும் விதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பெய்ரூட் மற்றொரு காஸாவாக மாறிவிடும் என்ற அச்சம் உள்ளது.

இந்த தாக்குதல்கள் முக்கியமாக இரவில் நடைபெறுகின்றன, ஆனால் பிரத்தியேகமாக இல்லை. நேற்று பகலில் பல வேலைநிறுத்தங்கள் நடந்தன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை இரவில் குவிந்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு தலைவர் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு தலைவர் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு தலைவர் ரணில்


ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு தலைவர் ரணில் ,ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

தற்போது புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் பலவும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன.

எனினும், பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடிய போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த நிபந்தனைகளால் பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின
Posted in இலங்கை செய்திகள்

122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின ,2024ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுக்காக 122 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் மாத்திரம் 36 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே அதிகளவான சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

குறித்த இரண்டு மாவட்டங்களிலும், 15 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வரியை செலுத்தாமல் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய ஜீப்
Posted in இலங்கை செய்திகள்

வரியை செலுத்தாமல் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய ஜீப்

வரியை செலுத்தாமல் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய ஜீப்

வரியை செலுத்தாமல் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய ஜீப் ,சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் நஷ்டத்தை ஏற்படுத்திய ஜீப் வண்டியொன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஜீப் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேற்படி ஆணைக்குழுவின் இரகசிய மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி கடந்த 18ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஜீப் வண்டியை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு தொழிலதிபருக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் அந்த உத்தரவுகளை மீறியதன் காரணமாக பதுளை நெலும்கம பிரதேசத்தில் உள்ள தொழிலதிபருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையிலேயே, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இரகசிய புலனாய்வுப் பிரிவினர் ஜீப்பை கைப்பற்றியுள்ளனர்.

11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை
Posted in இலங்கை செய்திகள்

11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை

11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை

11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை ,மூன்று முதல் பதினைந்து வயது வரையான பதினொரு பிள்ளைகளின் தந்தை (41 வயது) மனைவியின் சகோதரனால் அடித்துக் கொல்லப்பட்டதாக றக்வான பொலிஸார் தெரிவித்தனர்.

றக்வான ரங்வலதென்ன தோட்டத்தில் வசித்து வந்த செல்லப்பன் பாலகிருஷ்ணன் என்ற தோட்ட தொழிலாளியே கடந்த 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கு இரண்டு மனைவிகளும், ஒரு மனைவிக்கு ஏழு பிள்ளைகளும், மற்றைய மனைவிக்கு நான்கு பிள்ளைகளும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் குடிபோதையில் தகராறு செய்த போது, ​​இறந்தவர் மனைவியின் சகோதரர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கானவர் சுமார் ஒன்றரை மணிநேரம் இரத்தம் கசிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் உள்ளூர்வாசிகள் பலர் காயமடைந்த நபரை றக்வான மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து கஹவத்தை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 4ஆம் திகதியன்று அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய மின்சார கம்பிகள் அகற்றம்
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய மின்சார கம்பிகள் அகற்றம்

மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய மின்சார கம்பிகள் அகற்றம்

மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய மின்சார கம்பிகள் அகற்றம் ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்திய வீரகெட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு மின்சாரம் வழங்கிய மின் கம்பிகள் மின்சார சபை ஊழியர்களினால் அகற்றப்பட்டன.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகளை அகற்றும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன் அடிப்படையில், வீரகட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு மின்சாரம் வழங்கிய இரண்டு மின் கம்பிகள் அகற்றப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் வலஸ்முல்ல பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கார்ல்டன் தோட்டத்தில் 03 மும்முனை மின்கம்பிகள் போடப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டு அகற்றப்படும் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்
Posted in இலங்கை செய்திகள்

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர் ,இலங்கையில் விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் 100,000 இற்கும் அதிகமானோர் தமது

வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டில் விவசாய துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளால் விவசாய வேலைகளை விட்டு மக்கள் வெளியேறுவதுடன் நாட்டிற்கு தேவையான விவசாய பொருட்களின் உற்பத்தியும் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

இந்நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா சாதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா சதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள்

இந்தியா சதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள் இன்றாகும் .

இந்தியா சதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள் ,இதே நாளில் 1987 ,ஆண்டு 10,-05 ஆம் திகதி கடலில் பயணித்து கொண்டிருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளை இந்தியா சதியில் வீரமரணம் எய்தினர் .

இந்தியா சிப்பாய்களிடம் சிறையில் அடைத்து வதைபட்டு விடுதலை போராட்ட வரலாற்றை காட்டி கொடுத்துவிட கூடாது என்பதற்காக ,சயனைட் உட்க்கொண்டு அந்த வீரர்கள் சாவடைந்தனர் .

இந்திய தமிழீழ விடுதலைக்கு பாரிய துரோக செயலை புரிந்ததை ,இறுதி முள்ளிவாய்க்கால் நாள் வரை மக்கள் அறிந்திருப்பார் .

இந்தியா தமிழ் மக்களுக்கு எவ்வித உரிமையும் பெற்றுத்தராது என்பதற்கு ,இந்த வீரமிகு தளபதிகள் வீரமரணம் எடுத்துரைத்தது .

இந்திய சதியில் பலியான வீரர்கள் நினைவு நாளை உலக தமிழினம் இன்றும் நினைவு கூர்ந்து வருகிறது .

காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா
Posted in இலங்கை செய்திகள்

காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா

காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா

காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா குமார திஸாநாயக்காவின் ஆட்கை பீடம் என்பதே இன்றைய அரசியல் நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகிறது .

எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் ,அனுரகுமார திசாநாயக்க காணப்படுகின்றார் .

ஆகவே தமிழ் ,முஸ்லீம் ,சிங்கள வாக்குகள் இவருக்கு இந்த பாரளுமன்ற தேர்தலில் முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது .

ஆனால் அனுரகுமார திஸாநாயக்கவின் வடக்கு மாகாண உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் பலத்த முரண்பாடுகள் காணப்படுகின்றன .

மக்கள் ஆதரவு அற்றவர்களாக தற்பொழுது அனுரா குமார திசாநாயக்க வடக்கு மாகாண உறுப்பினர்கள் காணப்படுகின்றனர் .

நாம் பேசியதன் அடிப்படையில் மக்கள் மனங்களை தொட்டு முக்ரந்து அவர்களது உளவியலை அறிந்ததன் அடிப்படையில் ,அனுரகுமார திஸாநாயக்காவின் வடக்கு மாகாண உறுப்பினர்களை தமிழ் மக்கள் ஏற்று கொள்ளாத நிலை காணப்படுகிறது .

இவர்கள் சிலர் மாற்று குழுவில் இருந்து பதவிகளுக்காக ஒட்டியுள்ளனர் எனவும் ,மகிந்தவின் ஆட்கள் எனவும் மக்கள் மன்றம் பேசி கொள்கிறது .

இவ்வாறன குழப்பான நிலை மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பொழுது ,எவ்விதம் வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் அனுரா வெல்வார் என்கின்ற நிலை .காணப்படுகிறது .

இவர்கள் வடக்கு மாகாணத்தில் வெல்ல வேண்டுமாக இருந்தால் ஒரே தீர்வு அர்ச்சுனா இராமநாதனை ஆதரித்து அவரை அனுசரித்து செல்வதுடன் .

அதன் ஊடக அவர் பெரும் ஆசனங்களை தனது கட்சிக்கு மாற்றீடு செய்து அனுரா செல்ல முடியும் ,ஆனால் அதனை அவர் மேற்கோளாவரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும் .

கண்மூடித்தனமாக அர்ச்சுனா இராமநாதனை பழிவாங்கும் வங்குரோத்து அரசியல் நிலையையோ அனுரா குமார திசாநாயக்க கடை பிடித்தால் ,இப்போதே அடித்து சொல்கிறோம் அனுரகுமார திசாநாயக்க தமிழர் பகுதியில் வெறுக்க படும் ஒருவராக காணப்படுவார் .

இவ்வாறான மிக ஆபத்தான அரசியல் பயணத்தை புரிந்து கொண்டு அனுரகுமார திசாநாயக்க செயல்பட்டால் மட்டுமே, மிக பெரும் வெற்றியை தனதாக்கி கொள்ள முடியும் ,அவ்விதம் இல்லாவிட்டால் அனுரகுமார திசாநாயக்க காணாமல் போகும் நிலை ஏற்படும் .

ஆகவே அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் கால பகுதியில் திறந்து விடவேண்டும் ,அது சிறையில் அடைத்தால் மக்கள் எதிர்ப்பு அனுராவுக்கு எதிராக மாறி ,அந்த வாக்குகள் எதிராணிக்கோ அல்லது மக்கள் தேர்தலை புறக்கணிக்கும் நிலைக்கு செல்ல கூடிய அபாயம் உள்ளது .

மரண பொறிக்குள் அனுரா குமார திசை நாயக்க ,சிக்கியுள்ளார் வெல்ல வேண்டுமா தோற்க வேண்டுமா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும் ,இப்பொழுது அவரது காலில் பந்து .

  • வன்னி மைந்தன் –
வெள்ளை வேட்டிகள் அலறல் ஊழல் வெளியானது
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளை வேட்டிகள் அலறல் ஊழல் வெளியானது

வெள்ளை வேட்டிகள் அலறல் ஊழல் வெளியானது

வெள்ளை வேட்டிகள் அலறல் ஊழல் வெளியானது ,தமது பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி ஆடம்பர வாகனங்களை வெளி நாட்டில் இருந்து இறக்கி ,அதற்கு வரி செலுத்தாது கோடி பணம் சம்பாதித்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது .

இவ்விதம் தமிழ் தேசிய கூட்டமைப்பே சேர்ந்த பல அரசியல் தலைகள் புரிந்த வாகன வரி ஏய்ப்பு மோசடி அம்பலமாகியுள்ளது .

ஒருவர் மூன்று கோடிக்கு மேல் லஞ்ச ஊழல் மோசடி செய்துள்ள விடயம் ஆதாரமாக வெளியாகியுள்ள சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தமிழ் தேசிய அரசியல் வாதிகளாக காணப்படும் இவர்களின் இந்த நரித்தந்திர ஊழல் மோசடி சம்பவம் வெளியான நிலையில் ,தமிழ் மக்கள் இவர்களுக்கு எதிராக கொதித்து கிளம்பியுள்ளனர் .

இந்த வெள்ளை வேட்டிகள் ,இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தோற்கடித்து ,வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கின்ற நிலை காணப்படுகிறது .

வேட்டைக்கு ஆரம்பம் சைக்கிள் கட்சி
Posted in இலங்கை செய்திகள்

வேட்டைக்கு ஆரம்பம் சைக்கிள் கட்சி

வேட்டைக்கு ஆரம்பம் சைக்கிள் கட்சி என அந்த கடைசி பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் பத்திரத்தில் ஒப்பம் இடுதல் ஊடாக அறிவித்துள்ளது .

தெரிவு செய்ய பட்ட பகுதிகள் யாவிலும் சைக்கிள் சின்னத்தில் ,சைக்கிள் கட்சி போட்டியிடவுள்ளது என்பது இந்த தேர்தல் வேட்பு மனு பதிவின் ஊடாக அறிவிக்க பட்டுள்ளது .

மக்கள் தாயக கொள்கை கோட்பாட்டை மறந்து பெட்டிக்கு போட்டியிட்ட இந்த கட்சிகள் ,தற்போது பாராளுமன்றம் செல்ல தயாராகி வருகின்றனர் .

சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல மறந்த கயேந்திரன் குமார் அணியினர் இந்த தேர்தலில் மக்கள் அதிக வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்வர்களாக என்பதே கேள்வியோ குறியாக உள்ளது .

எது எப்படியோ தற்போது வேட்டைக்கு சைக்கிள் கட்சி தயாராகி விட்டதை இந்த தேர்தல் வேட்பு மனு தாக்கல் கெயோப்பம் இடுதலுடன் அறிவித்துள்ளது .

சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம்
Posted in இலங்கை செய்திகள்

சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம்

சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம்


சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம், இந்த இவ்வாறான செய்தியானது வெளியாகி வரும் நிலையில் ,உலக தமிழ் மக்கள் அழுகையோடு காணப்படுகின்றனர் .

எங்கள் மகன் அர்ச்சுனா ஏன் இவ்வாறு ,உளளார் அவர் உடல் நலத்துடன் வெளியிலே வரவேண்டும் , என்கின்ற விடயம் கூறப்பட்டுள்ளது .

ஆகவே எதிர்வரும் பத்தாம் திகதி அர்ச்சுனவுக்கு என்ன நடக்கும் என்ற ஏக்கத்துடன் மக்கள் கொதிப்புடன் காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான செய்திகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது ,

ஹமாஸின் கட்டளை மையம் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஹமாஸின் கட்டளை மையம் தாக்குதல்

ஹமாஸின் கட்டளை மையம் தாக்குதல்

ஹமாஸின் கட்டளை மையம் தாக்குதல் ,ஹமாஸின் ‘கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை’ தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.


அதன் சமீபத்திய போர் புதுப்பிப்பில், இஸ்ரேலிய இராணுவம் மையத்தைத் தாக்கியதாகக் கூறுகிறது, இது மத்திய காசாவில் உள்ள ஒரு பள்ளிக்குள் “உட்பொதிக்கப்பட்டதாக” கூறுகிறது.

காசாவில் உள்ள கிட்டத்தட்ட 80 சதவீத பள்ளிகள் இஸ்ரேலியப் படைகளால் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. கடைசியாக எஞ்சியிருந்த பல்கலைக்கழகம் ஜனவரியில் இஸ்ரேலிய இராணுவத்தால் இடிக்கப்பட்டது.

மக்களை வெளியேற இஸ்ரேல் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

மக்களை வெளியேற இஸ்ரேல் அறிவிப்பு

மக்களை வெளியேற இஸ்ரேல் அறிவிப்பு

மக்களை வெளியேற இஸ்ரேல் அறிவிப்பு ,இஸ்ரேலிய இராணுவம் பெய்ரூட்டில் புதிய வெளியேற்ற உத்தரவை வெளியிட்டது.


பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போர்ஜ் எல்-பராஜ்னே பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு இராணுவம் குறிப்பாக அழைப்பு விடுத்தது.

லெபனான் தலைநகர் மீதான வன்முறை வான்வழித் தாக்குதல்களுக்கு சற்று முன்னதாகவே இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து கிட்டத்தட்ட இரவு நேர நிகழ்வாக மாறியுள்ள இந்த வெளியேற்ற உத்தரவுகள் வெளியிடப்பட்டன.

குண்டுவெடிப்பு பெய்ரூட்டில்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

குண்டுவெடிப்பு பெய்ரூட்டில்

குண்டுவெடிப்பு பெய்ரூட்டில்

குண்டுவெடிப்பு பெய்ரூட்டில் ,இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவுக்குப் பிறகு தெற்கு பெய்ரூட்டில் குண்டுவெடிப்பு கேட்டது.


பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டது மற்றும் புகை எழும்புவதை நேரில் பார்த்தவர்கள் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் புதிய எச்சரிக்கை விடுத்த சிறிது நேரத்திலேயே இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லெபனோவில் உள்ள எங்கள் ஊழியர்களிடமிருந்து நாங்கள் பெறும்போது கூடுதல் தகவல்களை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருவோம்.

பாதுகாப்பு படை பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாதுகாப்பு படை பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

பாதுகாப்பு படை பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

பாதுகாப்பு படை பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு ,புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு

படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் முப்படைத் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர்.

அதன்படி பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத்

தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து சினேகபூர்வமாக கலந்துரையாடினர்.

இதன்போது நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

ஐ நா பிரதிநிதியுடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஐ நா பிரதிநிதியுடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு

ஐ நா பிரதிநிதியுடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு

ஐ நா பிரதிநிதியுடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு ,ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்குள் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக

முன்னெடுத்துச் செல்வது மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது தீர்க்கமாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இலங்கையின் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆர்வம் தொடர்பிலும் வதிவிடப்

பிரதிநிதி இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கு தெளிவுபடுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சு

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சு

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சு ,இலங்கையின் உத்தியோகப்பூர்வ கடன்வழங்குநர் குழு மற்றும் சர்வதேச நாணய

நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக நிதியமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஜூன் மாதம் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனும் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியுடனும் இணக்கம் காணப்பட்ட விடயங்களும், உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்பு தொடர்பான

உடன்படிக்கையில் அடங்கியுள்ள விடயங்களும், சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளுக்கு அமைவானது என்பதனை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ள திட்டங்களுடன் தொடர்புடைய கடன் இலக்குகள், இணக்கப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள்

என்பன ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கு அமைவாக, சர்வதேச இறையாண்மை முறிகளை மறுசீரமைப்பதற்கும் அனுமதி கிடைத்துள்ளதாக நிதியமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் ஐநா சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியுடன் ஐநா சந்திப்பு

ஜனாதிபதியுடன் ஐநா சந்திப்பு

ஜனாதிபதியுடன் ஐநா சந்திப்பு ,ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ் நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டாரஸின் வாழ்த்துச் செய்தியை ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பண்பான தன்மைக்கும் வாழ்த்து தெரிவித்த இணைப்பாளர் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வரவேற்றார்.

மக்கள் எதிர்பார்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதால் எதிர்வரும் காலம் சவாலானதாக அமையுமென சுட்டிக்காட்டிய ஐ.நா.இணைப்பாளர் சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் வேலைத்திட்டம் மற்றும் வறுமை ஒழிப்பு முயற்சிகளுக்கு ஐ.நா ஒத்துழைப்பு வழங்குமெனவும் உறுதியளித்தார்.

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊழல் ஒழிப்புத் திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்த மார்க் அண்ட்ரூ, அந்த முயற்சிகளுக்கு ஐ.நா தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குமெனவும் உறுதியளித்தார்.

அதேபோல் சமூகத்தில் தேசிய சமாதானத்துக்கான புதிய அரசாங்கத்தின் பூர்வாங்க முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த வதிவிட இணைப்பாளர், ஒவ்வொரு தரப்பினருக்கு மத்தியிலும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கும் பாராட்டு தெரிவித்தார்.

அதேபோல் நாட்டுக்கு நிலையான சமாதானத்தை உருவாக்குவதற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமெனவும் அவர் உறுதியளித்தார்.

துப்பாக்கிகளை கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிகளை கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு

துப்பாக்கிகளை கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு

துப்பாக்கிகளை கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு ,பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மீண்டும் கைப்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்பட

வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவை என்ன என்பதை ஆராய்ந்த பின்னர் மீண்டும் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது..