பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கொள்கை நாட்டி நடந்தவன்
கொடி நாட்டி தேசம் ஆண்டவன்
வல்வை ஊரில் பிறந்தவன்
வையம் வியந்திட வைத்தவன்

பெரும் சமராடி வென்றவன்
பெரும் தலைவனாகி நின்றவன்
நஞ்சு உடல் தரித்தவன்
நய வஞ்சகத்தால் வீழ்ந்தவன்

ஈழம் கனவய் கொண்டவன்
ஈகம் தந்தே உயர்ந்தவன்
போரில் வெல்ல பயந்தவன்
பொறுக்கி ஒன்றால் வீழ்ந்தவன்

ஆளும் காலம் இல்லை தான்
ஆறா வலிகள் நெஞ்சில் தான்
அகவை உந்தன் நாளிலே
அண்ணா உன்னை வாழ்த்துகிறோம் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-11-2023

வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் பலர் காயம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் பலர் காயம்

வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் பலர் காயம்

இலகுரக பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் பலர் காயமடைந்துள்ளனர்

Upper Austria பகுதியில் பறந்து கொண்டிருந்த ஒற்றை இயந்திரத்தை கொண்ட Rockwell Commander 112B aircraft
விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது

இந்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் .
விமானம் பலத்த சேதமாய்ந்துள்ளது .

வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் பலர் காயம்

இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்க பட்டுள்ளது .

காயமடைந்தவர்கள் மீட்க பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

குறித்த விபத்து தொடர்ப்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

video

ரஷ்யா விமானங்கள் ஒன்பது சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா விமானங்கள் ஒன்பது சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் ஒன்பது சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து
தாக்குதல் நடத்திட பறந்து வந்த ஒன்பது ரஷ்யா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது .

கடந்த இரவு உக்ரைன் முக்கிய நிலைகள் மேலாக தாக்குதல் நடத்த பறந்து வந்த தற்கொலை தாக்குதல்
விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .

ரஷ்யா விமானங்கள் ஒன்பது சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் வான்காப்பு படைகள் குறித்த விமானங்களை கண்ணுற்ற நிலையில் அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர் .

இதனால் மிக பெரும் பேரழிவு தடுக்க பட்டுள்ளதாக,
உக்கிரேன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்

ரஷ்ய உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரில் ,
உக்ரைன் பலத்த சேதங்களை சந்தித்துள்ளமை குறிப்பிட தக்கது .

video

இரு நாளில் 78 பலஸ்தீனர் 42 இஸ்ரேலியர் விடுதலை
Posted in உலக செய்திகள்

இரு நாளில் 78 பலஸ்தீனர் 42 இஸ்ரேலியர் விடுதலை

இரு நாளில் 78 பலஸ்தீனர் 42 இஸ்ரேலியர் விடுதலை

இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் இடம் பெற்று வரும் நான்கு நாள் யுத்த நிறுத்த நடவடிக்கையின் பொழுது கடந்த இரு நாளில் 42 இஸ்ரேலியர்கள் 78 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .


மேலும் வரும் நாட்களில் விடுதலை செய்திட தயாராகி வருகின்றனர் .

இவ்வாறு விடுதலை செய்ய பட்டவர்களில் 13 இராணுவத்தினரும் உள்ளடங்கும் என தெரிவிக்க படுகிறது

இந்த யுத்த நிறுத்தம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என மக்கள் வேண்டுதல் விடுத்தது வருகின்றனர்.


ஆனால் நெதன்யாகு பொருள் தீவிர கவனம் செலுத்தி வருவதால் சந்தேகம் நிலவுகிறது

video

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, கட்டுகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

vdeo

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

திடீர் சுற்றிவளைப்பில் 40 பேர் கைது

திடீர் சுற்றிவளைப்பில் 40 பேர் கைது

இன்று (26) அதிகாலை வெல்லம்பிட்டி, சிங்கபுர பிரதேசத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 04 பெண்கள் உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள், அதிகரித்த குற்றங்கள் மற்றும் போதைப்பொருள்கள் உள்ளிட்ட காரணங்கால் 138 பொலிஸ்

அதிகாரிகள் மற்றும் 200 இராணுவ அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

தேஷ்பந்து தென்னகோன், மேல் மாகாணம் தெற்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பன, மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவின்

திடீர் சுற்றிவளைப்பில் 40 பேர் கைது

பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் லித் அபேசேகர ஆகியோரின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கையின் கீழ், 61 வீடுகள் மற்றும் 196 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர்.

இதன்போது ஹெரோயின், ஐஸ், சட்டவிரோத மதுபானம், வாள்கள், மன்னா, தடைசெய்யப்பட்ட கத்திகள் மற்றும் 12 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையில் 40 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் வாள்வெட்டுத் தாக்குதல்

பருத்தித்துறையில் வாள்வெட்டுத் தாக்குதல்

பருத்தித்துறையில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவத்தில் கந்தவுடையார் ஒழுங்கை, பருத்தித்துறையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் டிலக்சன் (வயது 23) என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.

வீதியால் சென்ற இளைஞரை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாளால் வெட்டியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

video

பிரதமர் மோடி
Posted in உலக செய்திகள்

போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி

போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி

இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை (25) பயணம் செய்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் நிறுவனத்தின் சார்பில் ‘தேஜஸ்’ இலகு ரகு போர் விமானங்கள், இன்ஜின், உதிரி பாகங்கள் ஆகியவை தயாரிக்கும் பணிகள்

போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி

தொடங்கப்பட்டன. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் விமானங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

இந்நிலையில் எச்.ஏ.எல் நிறுவனம் அண்மையில் 2 இருக்கைகள் கொண்ட இலகு ரக தேஜஸ் போர் விமானத்தை தயாரித்தது. இந்த விமானம் ஒலியை விட 1.6 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது.

பெங்களூருவில் நேற்று காலை பிரதமர் மோடி அந்த விமானத்தை பார்வையிட்டார்.

பின்னர் பாதுகாப்பு உடை, பறப்பதற்கான தலைக்கவசம் ஆகியவை அணிந்து, இலகு ரக தேஜஸ் போர் விமானத்தில் விமானப்படை விமானிகளுடன்

பயணித்தார். நடுவானில் பறக்கும் போது கைகளை உற்சாகமாக அசைத்தவாறு, வெற்றி சின்னத்தையும் அவர் காட்டினார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தேஜஸ் போர் விமானத்தில் வெற்றிகரமாக பயணித்தேன். இதில் பயணித்த

அனுபவம் நமது உள்நாட்டு உற்பத்தி திறன்கள் மீதான எனது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. நமது சுயசார்பு திறன் எனக்கு பெருமிதத்தையும் புதிய நம்பிக்கையையும் அளிக்கிற‌து என பதிவிட்டுள்ளார்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

குளியலறையில் இருந்து பழைய சடலம் மீட்பு

குளியலறையில் இருந்து பழைய சடலம் மீட்பு

இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியிலுள்ள குளியலறையில் மூன்று நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும்

நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பன்னிபிட்டிய, மலபல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஹோமாகம டென்சில் கொப்பேகடுவ

மாவத்தையைச் சேர்ந்த சுதத் சிந்தனை ரூபசிங்க (39), என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தனியார் வங்கியொன்றின் நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றுகின்றார்.

குளியலறையில் இருந்து பழைய சடலம் மீட்பு

குறித்த நபர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மேற்படி முகவரியில் தனது தாயாருடன் வசித்து வந்ததாகவும், பின்னர் தனது தாய் பாதிரியார் ஆனதன் காரணமாக இந்த இடத்தில் தனியாக வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இவர் வசித்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் 119 என்ற அவசர இலக்கத்திற்கு வழங்கிய

தகவலின் பேரில் பொலிஸார் வந்து அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குறித்த நபரின் சடலம் கிடப்பதை கண்டுள்ளனர்.

video

கட்டுநாயக்கவில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

விமான நிலையத்தில் சலசலப்பு

விமான நிலையத்தில் சலசலப்பு

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பு இன்று (26) மதியம் முதல் செயலிழந்துள்ளதையடுத்து வெளிநாடுகளுக்குச் செல்ல வந்த ஆயிரக்கணக்கான விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோபமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பு பல தனியார் நிறுவனங்களால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும், சரியான பராமரிப்பு இல்லாததால், இது ஒரு மாதத்திற்கு பல முறை இதுபோன்று செயலிழந்து வருவதாகவும் குடிவரவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் சலசலப்பு

        மேலும், இந்த கணினி அமைப்பு சர்வதேச இன்டர்போல் பொலிஸுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், அதன் வேகம் குறைவதால் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்களத்தின் கணினி அமைப்பு பலவீனமடையும் என்று பேச்சாளர் கூறினார்.

          11/26 நண்பகல் 12.20 மணியளவில் கணினி அமைப்பு படிப்படியாக மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், விமான நிலையத்தில் அதிக பயணிகள் போக்குவரத்து சிறிது தளர்த்தப்படுவதாகவும் பேச்சாளர் மேலும் கூறினார்.

           11/26 பிற்பகல், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பல விமானங்களும் அவ்வாறான இடங்களிலிருந்து விமான நிலையத்திற்கு வரும் பல விமானங்களும் இதனால் பாதிக்கப்படலாம் என்றும் பேச்சாளர் எச்சரித்தார்.

இஸ்ரேலை தாக்கும் ஈரான் புதிய ஏவுகணை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கும் ஈரான் புதிய ஏவுகணை

இஸ்ரேலை தாக்கும் ஈரான் புதிய ஏவுகணை

இஸ்ரேலை தாக்கும் ஈரான் புதிய ஏவுகணை
சோதனை ,இஸ்ரேல் விமானங்களை வீழ்த்தும்
இந்த ஏவுகணையால் இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்து .

புதிய உற்பத்தியில் அதிரடி பாய்ச்சலை நடத்தும் ஈரான் .

ஈரான் இந்த இஸ்ரேல் தப்புமா பெரும்,

video

யானை தாக்கி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளக்கல்மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர்

உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மற்றுமொருவர் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சனிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் இலுப்படிச்சேனை, வேப்பவெட்டுவான் வீதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய கந்தையா கீர்த்திகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார். .

யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

மாடு மேய்க்கச் சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வேளையில் காட்டு யானை வழிமறித்துத்தாக்கியுள்ளதாகவும்

ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றய நபர் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு தீடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம் நஸீர் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்

மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

video

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்தவன்
காலத்தினால் எமக்காக
பரிசளிக்கப்பட்டவன்
காலத்தினையே வென்ற
கரிகாலன் அவன் – பாரில்
காண்போர் எல்லோரும் போற்றும் எங்கள் தலைவன் அவன்!

ஈழத் தாயவளின் மானக் காத்த
தானைத் தலைவன் – உய(யி)ர்
ஈகத்திலே பாரியையும் விஞ்சிய
வள்ளல் அவன்
ஈழ மண் மீதுள்ள பாசத்தினால்
ஈகத்துக்கே உதாரணமானவன்
ஈனர்கள் கண்டு அரண்டோடும் வேங்கைப் புலியும் அவன்!

கடாரம் வென்ற சோழனின் வழி வந்தவன்
காட்டாற்று வெள்ளம் போல
எதிரியைக் கலங்கடித்தவன் – தமிழர் உள்ளத்திலே
கங்கை சூடிய பெருமானுக்கு
நிகரானவன்
கலங்கா நெஞ்சம் கொண்ட எங்கள் அண்ணன் அவன்!

உள்ளத்தில் என்றும் குழந்தையைப் போலானவன்
உயர் உள்ளத்தினால் உலகத்தையே வியக்க வைத்தவன்
உறுதியே உகந்து வந்து அவன் உளத்திலே
உறைய வைத்தவன் -உலகின்
உன்னத மொழி தமிழ் என்பதை உலகிற்கே புரிய வைத்தவன் அவன் !

-நிலாதமிழ்
26.11.2023

இஸ்ரேல் கப்பல்களை பிடிப்போம் கவுதிகள்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war| ETHIRI NEWS
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கப்பல்களை பிடிப்போம் கவுதிகள்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war| ETHIRI NEWS

இஸ்ரேல் கப்பல்களை பிடிப்போம் கவுதிகள்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war| ETHIRI NEWS

இஸ்ரேல் கப்பல்களை சிறை பிடிப்போம்
ஏமன் கவுதிகள் கடும் எச்சரிக்கை .
சிக்கலில் செங்கடல் இஸ்ரேல் கப்பல் பயணம்

video

இஸ்ரேல் இராணுவம் விடுதலை |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் விடுதலை |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் இராணுவம் விடுதலை |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினரால் விடுதலை .யுத்த களத்தில் இடம்பெற்ற சற்றும் எதிர்பாராத திருப்பம்.

video

பிலிப்பைன்ஸில் தீ விபத்து 6 பேர் பலி 2 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் தீ விபத்து 6 பேர் பலி 2 பேர் காயம்

பிலிப்பைன்ஸில் தீ விபத்து 6 பேர் பலி 2 பேர் காயம்

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆறு பேர் பலியாகியும் இருவர்
காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

video

சுனாமி பேரழிவு நினைவு நாள்
Posted in இலங்கை செய்திகள்

சுனாமியால் இலங்கைத் தீவே காணாமல் போகும் நடிகர் ஆரூடம்

சுனாமியால் இலங்கைத் தீவே காணாமல் போகும் நடிகர் ஆரூடம்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்றும் இலங்கை எனும் தீவே காணாமல் போய்விடும் என்றும் நடிகர் அனுமோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் அனுமோகன் கோவையைச் சேர்ந்தவர். இவர் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துள்ளார். இவர் 1980களில் இயக்குநராக அறிமுகமானார். இவர் இது ஒரு தொடர் கதை, நினைவு சின்னம், மேட்டுப்பட்டி மிராசு, அண்ணன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிக் கொண்டே பல படங்களில் நடிக்கவும் செய்தார். கொங்கு தமிழில் இவர் பேசும் வசனங்கள் அருமையாக இருக்கும். அர்ச்சனை பூக்கள், விஐபி, மூவேந்தர், நட்புக்காக. மன்னவரு சின்னவரு, படையப்பா, சுயம்வரம், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சுனாமியால் இலங்கைத் தீவே காணாமல் போகும் நடிகர் ஆரூடம்

இவர் அண்மைக்காலமாக சித்தர் ஏட்டுக்குறிப்புகளை கொண்டு சில விஷயங்களை கூறி வருகிறார்.

அந்த வகையில் அவருக்கு படவாய்ப்பு கிடைத்தது எப்படி என கூறியுள்ளார். அதில் எனக்கு 2, 3 ஆண்டுகளுக்கு பட வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

என் மனைவி சென்னை பனகல் பார்க்கில் உள்ள முப்பாத்தம்மன் வேண்டிக் கொண்டு 9 வாரங்களுக்கு பாம்பு புற்றுக்கு பால் ஊற்றியதால் படையப்பா படத்தில் வாய்ப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அது போல் அவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்தும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அதில் இந்தியா உலக கோப்பையை வெல்லும். இப்போது 10 ஆவது உலக கோப்பை. இனி 25 க்கு பிறகு தொடர்ச்சியாக இந்தியா ஜெயித்துக் கொண்டே இருக்கும். 30 போட்டிகள் வரை தொடர்ந்து வெல்வார்கள் என்றார்.

ஆனால் உலக கோப்பையில் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது. இதையடுத்து அவரை நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகிறார்கள்.

அது போல் அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் 31.12.2024 க்குள் ஒரு பெரிய அழிவு வரும். இலங்கை எனும் தீவு சுனாமியால் காணாமல் போகும். இது சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் இருக்கிறது.

ஏற்கெனவே இலங்கை சுனாமி வந்ததால்தான் தமிழ்நாட்டை விட்டு பிரிந்து தனித்து தீவாக காணப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு சுனாமி வரும் என சொன்னோம். அதை யாரும் நம்பவில்லை. எனவே இலங்கை சுனாமியால் இந்த முறை அழியும்.

மேலும்,
சுனாமி காரணமாக, சென்னை தேனாம்பேட்டை வரை கடலாக மாறிவிடும் என்றும் பீதியூட்டும்வகையில் தெரிவித்துள்ளார்

video

பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ்மா அதிபர் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

பொலிஸ்மா அதிபர் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

தான் இன்று (25) முதல் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்காவது முறையாக அவருக்கு வழங்கப்பட்ட சேவை நீட்டிப்பு நிறைவடைந்ததை கவனத்தில் கொண்டு அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

நான்காவது பணி நீட்டிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் பொலிஸ் மா அதிபர் பதவி காலியாக உள்ளது.

பொலிஸ்மா அதிபர் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

இவ்வாறானதொரு பின்னணியில் தான் பதவியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா

அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலியாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அடுத்த சில நாட்களில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன

video

இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஈரான் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஈரான் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஈரான் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் சரக்கு கப்பலை ஈரான் விமானம் துரத்தி தாக்குதல் .
இஸ்ரேல் கப்பல் போக்குவரத்து

video

இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்
Posted in இலங்கை செய்திகள்

இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்

இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்

இலங்கை நீதித்துறை வரலாற்றில் இள வயதில் நீதிபதியாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பதவியேற்கின்றார்.

வவுனியாவைச் சேர்ந்த மதுஞ்சளா அமிர்தலிங்கம் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இவர் எதிர்வரும் முதலாம் திகதி நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 33வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்

இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்

மதுஞ்சளா அமிர்தலிங்கம் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டி பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வவுனியாவில் இருந்து தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 31 வயது மாதுரி நிரோசன் தெரிவாகியுள்ள நிலையில் வவுனியாவில் இருந்து 33 வயது மதுஞ்சளா அமிர்தலிங்கம் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழ் நீதிபதிகள் உருவாகுவது எட்டாக் கனியாகவே உள்ள நிலையில்,
இளவயதில் தெரிவாகிய இருவருக்கும் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

video