கார்த்திகை மலர்களும் கண்ணீர் பூக்களும்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

கார்த்திகை மலர்களும் கண்ணீர் பூக்களும்

கார்த்திகை மலர்களும் கண்ணீர் பூக்களும்

கார்த்திகை மலர்களும் கண்ணீர் பூக்களும்| maaveerar New song |maaveerar New paadal 257|Ai Tamil Song
தெறிக்கவிட்ட பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

இன்றைய நாளில் மாவீரர் தினம்

பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .

இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

பூக்களை எடுத்து கல்லறை மேனியர்

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

click here video

கார்த்திகையில் பூத்திருக்கும் பூக்களுக்கு | மாவீரர் பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

கார்த்திகையில் பூத்திருக்கும் பூக்களுக்கு | மாவீரர் பாடல்

கார்த்திகையில் பூத்திருக்கும் பூக்களுக்கு | மாவீரர் பாடல்

கார்த்திகையில் பூத்திருக்கும் பூக்களுக்கு | மாவீரர்பாடல் | தமிழ் பாடல் 246|Ai Tamil Song தெறிக்கவிட்ட பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

இன்றைய நாளில் மாவீரர் தினம்

பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .

இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

பூக்களை எடுத்து கல்லறை மேனியர்

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

click here video

மாவீரர் நினைவு நாள் கண்ணீரில் நனையும் கார்த்திகை
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் நினைவு நாள் கண்ணீரில் நனையும் கார்த்திகை

மாவீரர் நினைவு நாள் கண்ணீரில் நனையும் கார்த்திகை

மாவீரர் நினைவு நாள் கண்ணீரில் நனையும் கார்த்திகை மாதம் .தமிழர் தேசம் விடியல் பெற வேண்டும் என கனவுகளை தாங்கி தாய் மண்ணை அபகரிக்க முற்பட்ட எதிரிகளை விரட்டியடித்த வேங்கைகள் நினைவு கூறும் மாதம் .

வரலாற்றில் மிக பெரும் வலிகளை தாங்கி எங்கள் தேசம் நடை பயிலும் இவ்வேளையில் உலக தமிழர்கள் மாவீரர்களை நினைவு கூர்ந்து பயணிக்கின்றனர் .

எங்கள் மண்ணை காத்த தெய்வங்கள்

இந்த நாள் எங்கள் மண்ணை காத்த தெய்வங்கள் உறக்கமிடும் நாள் .
உறங்க மாவீரம் உறுமி எழும் மாதம் .

இந்த நாளில் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக இந்த மதம் 14 க்கு மேற்பட்ட மாவீரர் பாடல்கள் இந்த செய்தி பகிரும் வரை இந்த மாதம் வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது.

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள்

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.

முடிந்தால்
என் கவிதைகளையும்
இன்று இணைத்துக் கொள்ளுங்கள்
மிக்க நன்றி
அருள்நிலா வாசன் 🙏
தூண்டா மணிவிளக்காய்
ஆண்டாண்டு தோறும்
எரிகின்ற தீபத்தின் முன்
அண்ணாவின் குரல் ஒலிக்கும்

இன்று
வேண்டாத துயரை
விலத்தியே வைத்து நாம்
வீட்டிற்குள் வணங்குகின்றோம்

வரிக்குள் அடங்காத வலிகளை நாம்
வார்த்தைக்குள் ஒழித்து வைப்போம்

அடிமைகளா நாம் என்று மனம் அடிக்கடி எம்மைக்கேட்டாலும்
துடிக்கின்ற இதயத்தில்
வழிகின்ற குருதியும்
உடல் முழுவதும்
அண்ணாவின் பெயர்
எழுதும்

சிலிர்த்திடும் வேங்கையின் சிந்தனையில் சிக்குண்டு தவிப்பவர் நெஞ்சங்களில்
தீக்குச்சியாய் என்றும்
நீர் இருப்பீர்

வணங்கா மண்ணுக்காய்
அன்று கடலோரக் கவிதைகளாய்
காத்துக் கிடந்து
காய்ந்த
மக்களின் கண்ணீரை
இன்று
பிரபா கரத்தால்
நீர் துடைப்பீர்

காயாத விழிகளில்
கரையோரக் காட்சியாய்
நீர் அங்கு தோன்றினால்
உலகமே வியக்கும்
சிலருக்கு வியர்க்கும்

பாதையெல்லாம்
பூமலராய்
கார்த்திகை தந்த
செம்மலராய்
பூங்கதவே நீ
தாழ் திறவாய்

எழுவது இன்று
மேதகு என்று
தொழுவது நன்று

அகவை ஒன்று
நகர்ந்தது என்று
ஆர்பரிக்கின்றது
மக்கள் கூட்டம்
கடலாய் நின்று

பிறந்த நாள் வாழ்த்துகள்
26/11/2024

கார்த்திகை கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

கார்த்திகை கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு

கார்த்திகை கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு

கார்த்திகை கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூ செடியின் கிழங்கை உட்கொண்ட நிலையில் , சுகவீனம் அடைந்துள்ளார், அதனையடுத்து அவரை வீட்டார்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீடியோ

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்தவன்
காலத்தினால் எமக்காக
பரிசளிக்கப்பட்டவன்
காலத்தினையே வென்ற
கரிகாலன் அவன் – பாரில்
காண்போர் எல்லோரும் போற்றும் எங்கள் தலைவன் அவன்!

ஈழத் தாயவளின் மானக் காத்த
தானைத் தலைவன் – உய(யி)ர்
ஈகத்திலே பாரியையும் விஞ்சிய
வள்ளல் அவன்
ஈழ மண் மீதுள்ள பாசத்தினால்
ஈகத்துக்கே உதாரணமானவன்
ஈனர்கள் கண்டு அரண்டோடும் வேங்கைப் புலியும் அவன்!

கடாரம் வென்ற சோழனின் வழி வந்தவன்
காட்டாற்று வெள்ளம் போல
எதிரியைக் கலங்கடித்தவன் – தமிழர் உள்ளத்திலே
கங்கை சூடிய பெருமானுக்கு
நிகரானவன்
கலங்கா நெஞ்சம் கொண்ட எங்கள் அண்ணன் அவன்!

உள்ளத்தில் என்றும் குழந்தையைப் போலானவன்
உயர் உள்ளத்தினால் உலகத்தையே வியக்க வைத்தவன்
உறுதியே உகந்து வந்து அவன் உளத்திலே
உறைய வைத்தவன் -உலகின்
உன்னத மொழி தமிழ் என்பதை உலகிற்கே புரிய வைத்தவன் அவன் !

-நிலாதமிழ்
26.11.2023