பகிடிவதைக்கு அதிரடி நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

பகிடிவதைக்கு அதிரடி நடவடிக்கை

பகிடிவதைக்கு அதிரடி நடவடிக்கை

பகிடிவதைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை ஒன்றை பிரதமர் அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பதிவாகும் பகிடிவதைகளுக்கு எதிராக செயலணி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

1978/16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் நாட்டில் அமைந்துள்ள 17 பல்கலைக்கழகங்களில் எந்த பல்கலைக்கழத்திலும் பகிடிவதைகள் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 5 வருடங்களில் எவ்வித வழக்கும் தொடரப்படவில்லை.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள பகிடிவதைகள் மற்றும் ஆண், பெண் சமத்துவம் தொடர்பான துன்புறுத்தல்கள் சம்பந்தமாக சுற்றுநி ரூபத்தை முழுமையாக மறுசீரமைப்புக்கு உள்ளாக்கி

அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் முறைப்பாட்டு செயற்பாட்டு பொறிமுறையை மிகவும் பலப்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன.

இப்போதுள்ள துரித தொலைபேசி இலக்கத்தை 24 மணிநேரமும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன் சகல பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறும் பகிடிவதைகளுக்கு எதிரான செயலணியை அமைத்து ஆண், பெண் சமூக சமத்துவ குழுவின் கீழான இணைக்குழுக்களின் ஊடாக வலையமைப்புகளை உருவாக்கி

எந்தவொரு பகிடிவதை தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கும் பொறிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றை செயற்படுத்துவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விசேட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

டக்ளஸ் க்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள்
Posted in இலங்கை செய்திகள்

டக்ளஸ் க்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள்

டக்ளஸ் க்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள்

யாழ் மாவட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஏனைய கட்சிகள் ஆதரவு கொடுக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சங்கு, சைக்கிள் கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில்

ஆதரவு கோரியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நண்பர் தர்மலிங்கம் சித்தார்த்தன் என்னை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தொடர்பாக கலந்துரையாடினார்.

அரசியல்வாதியாக இல்லாமல் நட்பு ரீதியாக அந்த சந்திப்பு நடைபெறும்.

உள்ளூராட்சி சபைகளை ஆளுவது தொடர்பாக அண்ணன் சி.வீ.கே.சிவஞானமும். குறுஞ்செய்தியை அனுப்பி சந்திப்பதற்கு கோரியிருந்தார். இருவரையும் சந்திக்க தீர்மானித்துள்ளேன்.

எங்களுடைய கட்சியினுடைய நிலைப்பாடு பக்கம் சாராது மக்கள் நலன் சார்ந்து இருக்கும். எந்த இடத்திலும் ஆட்சியை பொறுப்பெடுப்பதற்கோ ஆட்சியில் பங்கெடுப்பதற்கோ நாங்கள் தயாராக இல்லை.

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உள்ளோம்.

உத்தியோகபூர்வமாக எந்த கட்சிகளும் இதுவரை என்னோடு கதைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் எங்களுடைய கட்சி முக்கியஸ்தர்களிடம் தங்கள் ஆதரவை கோரியுள்ளனர்.

கடந்த கால கசப்புகளை கருத்திற்கொண்டு எதுவுமே உத்தியோகபூர்வமாக இருந்தாலே அது நல்லது என்பது என்னுடைய அனுபவம் – என்றார்.

சிரியாவிலிருந்து இராணுவத்தை விலக்கமாட்டோம் துருக்கி
Posted in உலக செய்திகள்

சிரியாவிலிருந்து இராணுவத்தை விலக்கமாட்டோம் துருக்கி

சிரியாவிலிருந்து இராணுவத்தை விலக்கமாட்டோம் துருக்கி

சிரியாவிலிருந்து இராணுவத்தை விலக்கமாட்டோம் துருக்கி ,சிரியாவிலிருந்து ராணுவம் விலக்கப்பட மாட்டாது என துருக்கி நாட்டு அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர் .

சிரியாவை சுற்றி வளைத்து துருக்கிய நாட்டின் உடைய படைகள் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன.

இங்கே குவிக்கப்பட்டுள்ள துருக்கியா ராணுவத்தினர், அங்கிருந்து விலக்கப்பட்ட மாட்டார்கள் என துருக்கி அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளது.

துருக்கிய படைகளுக்கும் சிரியா படைகளுக்கும் இடையில் ,மோதல்

துருக்கிய படைகளுக்கும் சிரியா படைகளுக்கும் இடையில் ,மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

அதேபோல அந்த பகுதியில் குருதிஸ்தான் மீதும் தாக்குதலை நடத்தி வருகிறது.

இவ்வாறான காலப்பகுதியில் துருக்கிய படைகள் அங்கிருந்து விலக்கப்பட மாட்டாது என அறிவிக்க பட்டுள்ளது .

இந்த விடயம் என்பது சிரியா மற்றும் துருக்கிய படைகளுக்கு எதிரான முறுகல் உச்சத்தை அடைத்துள்ளது. குருதிஸ்தான் போராளிகள் அமைப்புக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நீண்ட நெடுங்காலமாக பாலஸ்தீனத்தை இஸ்ரேல் அழிப்பது போன்று, சிரியாவில் உள்ள குரிஸ்தான். போராளிகள் மக்களையும் துருக்கியப்படைகள் கொன்று குவித்து வருகிறது.

தொடரும் இந்த போரிலிருந்து குருதிஸ் போர்படைகள் தப்ப வைக்கப்பட வேண்டுமாக இருந்தால், அவர்கள் புதிய மாறுதலை நோக்கி பயணிக்க வேண்டிய தேவையும் கடப்பாடும் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

இலங்கையில் கொரோனா தொற்று ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்று ஒருவர் பலி

இலங்கையில் கொரோனா தொற்று ஒருவர் பலி

இலங்கையில் அதிகமாக கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்த சுகாதார அமைச்சு இன்று கொரோனாவினால் ஒருவர் பலி என உறுதிசெய்துள்ளது.

மே மாதத்தில் அநுராதபுரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாகவும்

தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தேஜனா சோமதிலக இன்று தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் நோயாளிகள் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், அநுராதபுரம், சாலியவத்தையைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வைத்தியர் தேஜனா சோமதிலக தெரிவித்துள்ளார்.

ஆசியாவிலேயே தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வேங்கை தமிழா எழுந்து வா பாடல்
Posted in பாடல்கள்

வேங்கை தமிழா எழுந்துவா பாடல்

வேங்கை தமிழா எழுந்துவா பாடல்

வேங்கை தமிழா எழுந்துவா பாடல் |இளங்கோ செல்லப்பா |பாவேந்தன் | காரை சேனாதி லண்டன் |new tamil songs

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்

இசை – இளங்கோ செல்லப்பா

பாடல்வரிகள் – காரை சேனாதி

-தயாரிப்பு – காரை சேனாதி

வெளியீடு – எதிரி இணையம்

வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் 4வது பாடலாசிரியர் காரை சேனாதி

வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்திய 4வது பாடலாசிரியர் .இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

|இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுரக்குரலோன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .

வேங்கை தமிழா எழுந்து வா வீறு கொண்டவன் வெளியில் வா

வேட்கை தானிக்கக் எழுந்து வா.

லண்டனை சேர்ந்த காரை சேனாதி

லண்டனை சேர்ந்த காரை சேனாதி அவர்கள் நான்காவது பாடலாசிரியராக வன்னிமைந்தன் டிக் தளத்தின் ஊடாக அறிமுகப்படுத்த பட்டார் .

அன்றில் இருந்து இன்றுவரை அவர் எழுதிய மூன்றாவது பாடலாக இந்த வேங்கை தமிழா என்கின்ற புதிய ஈழ தேச பாடல் காணப்படுகிறது குறிப்பிட .தக்கது

கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை
Posted in உலக செய்திகள்

கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை

கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை

கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை, செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தெரிவித்துள்ளனர்.இதற்க்கு பதிலடி தாக்குதல் வழங்கப்படும் என அந்த படைகள் இஸ்ரேலை எச்சரித்துள்ளது .

இவரது இழப்பிற்கு யூத படைகள் அதற்கு பிளவுகளை சந்திப்பார்கள் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கிடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தின் பொழுது ,இவரது தலைமையில் பாரிய வெற்றி தாக்குதல்கள் நடைபெற்று இருந்தன.

மிகப் பெரிய வெற்றி தாக்குதலை நடத்திய தளபதி

அவ்வாறான மிகப் பெரிய வெற்றி தாக்குதலை நடத்தி .அந்த மண்ணுக்கும் மக்களுக்குமாக. விடுதலை கொடுத்த அந்த வீர தளபதியை அந்த மண் இழந்து தவிக்கிறது.

உலகில் முதலாவது உளவுத்துறையாக விளங்கிவரும் மொசாட் .அனைத்து இடங்களுக்கு ஊடுருவி இவ்வாறான தளபதிகள் வாழும் வாழ்விடங்களை கண்டறிந்து தாக்குதல் நடத்தி படுகொலை செய்து வருகிறது.

லெபனானுக்குள் அந்த மக்களுக்கு எதிராக கருப்பாடுகளும் காட்டிக் கொடுப்பவர்களும் ஈடுபடுவதாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொலைபேசிகள் இணையதளங்கள் கமராக்கள் கைக்

குறித்த படைகள் பயன்படுத்தும் தொலைபேசிகள் இணையதளங்கள் கமராக்கள் என்பனவற்றை கைக் செய்யப்பட்டு ,இவர்களது நடமாட்டங்களை கண்காணித்து அதனூடாகவும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

செய்மதிகள் ஊடாகவும் இதை கண்டறிந்து அதனூடாகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு ,பல முக்கியமான தலைகள் அழிக்கப்பட்டு வருகின்றமை, அந்த அமைப்பினருக்கு மிகப்பெரும் நெருக்கடியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா விமானம் அழிப்பு பெருமிழப்பு
Posted in உலக செய்திகள்

விமானம் அழிப்பு ரஷ்யாவுக்கு பெருமிழப்பு

விமானம் அழிப்பு ரஷ்யாவுக்கு பெருமிழப்பு

விமானம் அழிப்பு ரஷ்யாவுக்கு பெருமிழப்பு ,ரஷ்ய விமானம் அளிப்பு பெரு முளைப்பு என ரஷ்யாவை மேற்கொள்காட்டி உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு வருடங்களுக்கு மேலாக உக்ககிரைன் ரஷ்யாவுக்கு இடையில் மிகக் கொடூரமான யுத்தம் இடம்பெற்று வருகிறது.

இவ்வாறான காலப்பகுதியில் ரஷ்யாவுக்கு நுழைந்து ,40 மிகப்பெரும் விமானங்களை, ஒரே தடவையில் அழித்தது.

இதுவே ரஷ்யாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்படுத்தி இருக்கிறது.

அதனை அடுத்து தற்பொழுது பதிலடி தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராகிக் கொண்டிருக்கின்றது.

விரைவில் இவ்வாறான தாக்குதல் ரஷ்யாவுக்குள்

விரைவில் இவ்வாறான தாக்குதல் ரஷ்யாவுக்குள் நடத்த எதிரிகள் திட்டமிட்டு வருவதாகவும், அதனை எப்படி முறியடிப்பது என்பதில் ரஷ்யா கவலம் செலுத்தி வருகிறது.

தமது பான்பரப்புக்குள் அத்துமறி நுழையும் இவ்வாராணா விமானங்களை எவ்வாறு தடுக்கப்பட வேண்டும் என்பதில் ,புதிய விடயங்களை கையாள வேண்டிய நிலையில் ரஷ்யா காணப்படுகிறது.

ஆகவே இதே போன்ற ஒரு தாக்குதலை உக்கிரனுடைய விமானப் படைத்தளங்களுக்கும் .நேற்று படைகள் விமானத்தளங்களுக்கும்ரஸ்யா நடத்தினால் என்னவாகும் என்பதை இப்பொழுது கேள்வியாக இருக்கிறது.

ராசிய பதிலடி தாக்குதல் நடத்தும்

இந்த தாக்குதலுக்கு நிச்சயம் ராசிய பதிலடி தாக்குதல் நடத்தும் எனவும், அது எங்கு எப்படி எவ்வாறு நடத்தப் போகிறது என்பதை கேள்வியாக இருக்கிறது.

தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்கிரேனுக்கு இடையில் பதட்டம் தொடர்ந்து நிலவுகிறது .

எவ்வளையும் எதிர்பாராத தாக்குதலை ரஸ்யா நடத்தக்கூடும் என்பதாலே இந்த பதட்டம் நிலவுகிறது .

அரசுக்குள் குழப்பம் ஏற்படுத்தும் எதிராளிகள்
Posted in இலங்கை செய்திகள்

அரசுக்குள் குழப்பம் ஏற்படுத்தும் எதிராளிகள்

அரசுக்குள் குழப்பம் ஏற்படுத்தும் எதிராளிகள்

அரசுக்குள் குழப்பம் ஏற்படுத்தும் எதிராளிகள் ,அரசுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இவ் அரசு மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.

“மக்களின் அமோக ஆணையால் உருவாக்கப்பட்ட இந்த அரசுக்குள் குழப்பத்தை ஏற்பட்டுத்துவதற்காக எதிராளிகளால் திட்டமிட்டுப் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன.

ஆனால், அந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. அதேவேளை, பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணமும் இல்லை.” –

அமைச்சரவைப் பேச்சாளர்

என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படவிருப்பதாகவும் அமைச்சரவையில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையாகும்.

அமைச்சரவை மறுசீரமைப்பு

அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பிலோ – அமைச்சர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பிலோ இதுவரை எந்தவொரு கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை.

அரசுக்கு எதிரானவர்களால் திட்டமிட்டு இந்தச் செய்தி பரப்பப்பட்டுள்ளது. அவதானத்தைத் திசை திருப்புவதற்காகவும், அரசுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலும் இவ்வாறான செய்திகள் திட்டமிட்டு வெளியிடப்படுகின்றன.

எந்தவகையிலும் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது. பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணமும் இல்லை.” – என்றார்.

திருகோணமலையில் கடற்படையினர் துப்பாக்கி சூடு
Posted in இலங்கை செய்திகள்

திருகோணமலையில் கடற்படையினர் துப்பாக்கி சூடு

திருகோணமலையில் கடற்படையினர் துப்பாக்கி சூடு

திருகோணமலையில் கடற்படையினர் துப்பாக்கி சூடு ,திருகோணமலையில் கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

கடற்படையினரின் துப்பாக்கிச்சூடு

திருகோணமலை குச்சவெளி கடற்பகுதியில் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் செவ்வாய்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் குச்சவெளி ஜாயாநகர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

குச்சவெளி கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவேளை சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் சிலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன்

படகு மற்றும் சுருக்கு வலைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மீன்பிடிக்கக்கூடிய சட்டம்

சுருக்கு வலையை பயன்படுத்தி சுமார் 7 கிலோ மீற்றருக்கு அப்பால் மீன்பிடிக்கக்கூடிய சட்டம் இருப்பதாகவும் அதை மீறி மீன்பிடித்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

வட மாகாணத்திற்கு ஜனாதிபதி நிதியம்
Posted in இலங்கை செய்திகள்

வட மாகாணத்திற்கு ஜனாதிபதி நிதியம்

வட மாகாணத்திற்கு ஜனாதிபதி நிதியம்

ஜனாதிபதி நிதியம் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம்,

அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான(Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு

தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியமாகியுள்ளது.

அதன் ஒரு அங்கமாக, வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியாமாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும்

ஜனாதிபதி நிதியம் தொடர்பாக செயலாற்றும் அதிகாரிகளுக்கு 2025.06.21 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம், வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதி நிதியின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உயர்தர சேவையை வழங்கவும்,

நவீன மயமாக்கப்பட்ட  ஆன்லைன் அமைப்புகளை அறிமுகப்படுத்தவும்,மேலும் சேவைகளை விரைவாக வழங்கவும்எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அளவிலானவர்களுக்கு மட்டும் நன்மைகளை வழங்கிய ஜனாதிபதி நிதியத்தை,

நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு நன்மைகளை வழங்கும் மக்கள் நிதியமாக செயல்படுத்துவதே தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான பணிக்குழுவின் முதன்மையான நோக்கமாகும்.

அந்த நோக்கத்தை அடைய,எதிர்காலத்தில் இது போன்ற பயிற்சித் திட்டங்கள் ஏனைய மாகாணங்களிலும் செயல்படுத்தப்படும்.

சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் போதை
Posted in இலங்கை செய்திகள்

சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் போதை

சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் போதை

வடக்கு மாகாணத்தில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் போதை சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் அகப்பட்ட போதை.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இளைஞர்கள் இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது இளைஞனின் உடைமையில் இருந்து 2 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளை, வீதியில் பயணித்த இளைஞன் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போது இளைஞனின் உடைமையில் இருந்து 20 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

அதனையடுத்து போதை மாத்திரைகளுடன் கைதான இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி போதை

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட மூன்று பார்சல் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இராணுவ புலனாவுத் துறையினரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கஅமைய கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு பொலிஸ்மா அதிபரின் கீழ் உள்ள சிறப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன் மூன்று பார்சல் கஞ்சாவை மீட்டுள்ளனர்.

இருப்பினும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பல இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்
Posted in இலங்கை செய்திகள்

பல இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்

பல இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்

யாழில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயத்திலே இந்த ஏலம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் நாளான நேற்று மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த மாம்பழத்திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.

இதன் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த அடியவர்கள்குறித்த மாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாம்பழத்தின் விலையும் உயர்ந்து கொண்டு சென்றது. இவ்வாறு பல இலட்சங்களையும் தாண்டி மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது.

இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அ.அகிலன் எனும் அடியவர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்திருந்தார்.

இதன் போது ஆலய நிர்வாக சபையினரால் ஏனைய சில பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டிருந்த நிலையில் அதனையும் அடியவர்கள் ஏலத்தில் வாங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த ஆலயத்தின் 15 நாள் திருவிழாவின் தொடராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும் திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும்

மறுநாள் செவ்வாய்க்கிழமை பூங்காவனத் திருவிழாவும் புதன்கிழமை வைரவர் உற்சவமும் இடம்பெற்று திருவிழா நிறைவடையவுள்ளது.

ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்

ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்

ஜனாதிபதி அனுரவுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் அனுப்பியுள்ளார்.

வடக்கு, கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் எமது கடல் வளத்தையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துப் பேரழிவைத் தடுக்குமாறு கோரி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டியதும், சட்டவிரோதமானதுமான இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் தொழில் செயற்பாடுகள் காரணமாக

எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும், கடல் வளமும் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இத்தகைய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாமும் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தும், அவை முழுமை பெறவில்லை.

தற்போது மீனினங்களின் இனப்பெருக்கக் காலம் என்பதால் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் தொழில் நிமித்தம் வருவதில்லை.

இது ஒவ்வொரு வருடமும் நிகழ்வதாகும். அந்தவகையில் இந்த வருடம் இக்காலகட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கி எதிர்வரும் 15ஆம் திகதி முடிவடைகின்றது.

இந்தக் காலகட்டம் முடிவடைந்த நிலையில் – அதாவது எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர் ஆயிரக்கணக்கிலான இந்திய இழுவை மடி வலைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நிச்சமயாக வரும்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் தங்களது அவதானத்தைச் செலுத்தி, ஒரு பக்கத்தில் இது தொடர்பான இராஜதந்திர ரீதியிலான பேச்சுகளை இந்திய அரசுடன் மேற்கொண்டும்,

மறு பக்கத்தில் இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டும், இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் இலங்கைக் கடற்பரப்புக்குள்ளான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

புல்மோட்டையில் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

புல்மோட்டையில் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

புல்மோட்டையில் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

புல்மோட்டையில் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு ,புல் மூட்டை பகுதியில் மீனவர்கள் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் மற்றும் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை புல் மொட்டையிலிருந்து மீன் பிடிக்கச் சென்றபோது உன் மீது கடல் பயணம் மேற்கொண்ட திடீர் துப்பாக்கி பிரயோகித்த நிலையில் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடற்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கண மீனவர் தீவிர சத்திர சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய இலங்கை கடற்படையினர் அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்துவதற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கடத்தல் அல்லது கொள்ளைக்காரர்கள் நினைத்து அப்பாவி மீனவர்கள் மீது இவர்கள் துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்தியதாக தெரிய வருகிறது.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த குடும்பத்தினருக்கு இழப்புகளை ஆளும் அனுரா அரசு வழங்குமாய் எதிர்பார்க்கத் தெரியவில்லை

அர்ச்சனா போன்று லஞ்ச பெருச்சாளிகளை அருகில் வைத்துக்கொண்டு அவர்களை வளர்த்துக் கொண்டிருக்கும் அனுராஅரசு அப்பாவி மக்களை எப்படித்தான் காணப் போகிறார் என்பதுதான் மக்களுடைய கேள்வியாக இருக்கிறது .

செம்மணியில் மேலும் எலும்பு கூடுகள்மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் மேலும் எலும்பு கூடுகள்மீட்பு

செம்மணியில் மேலும் எலும்பு கூடுகள்மீட்பு

செம்மணியில் மேலும் எலும்பு கூடுகள்மீட்பு , செத்துப் பார்த்து இந்த மயானத்தில் கடந்த தினம் இடம்பெற்ற அகழ்வின் பொழுது எலும்புக்கூடு ஒன்று முழுமையானதாகவும், மற்றொன்று பகுதியழகன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் .

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அகழ்வில் ஏழு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன .

ஒன்பது எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன

அதனைத் தொடர்ந்து இப்பொழுது இரண்டு மொத்தமாக ஒன்பது எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இங்கு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இந்த நபர்கள் யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கையிலும் சில விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள ஆக்கிரமிப்பு இனவாத பயங்கர ராணுவத்தால் தமிழர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதான சம்பவமே இதுவாக காணப்படுகிறது.

இது ஒரு மனிதப் புதைகுழி என மக்கள் மன்றம் தெரிவித்து வருகிறது.

மக்களை படுகொலை செய்த அரச இராணுவம்

ஆகவே மக்களை படுகொலை செய்த அந்த அரச ராணுவத்தினையும் அந்த ஆட்சியாளர்களையும் யார் கைது செய்து விசாரிப்பது என மக்கள் கேள்விகளை கேட்க ஆரம்பித்துள்ளனர்.

தமிழர் சடலங்களாக இருந்தால் அது ஒரு கடதாசி ,சிங்களவராக இருந்தால் அதுதான் மனித உயிர்கள் என பார்க்கின்றது .

இவ்வாறு தான் பாகப்பிரிவினை இலங்கையில் காணப்படுகிறது .

அடக்கப்படுகிற ஒரு இனமாகவும் ,அடக்கி ஆளுக ஒரு இனவாகும் தமிழர்கள் காணப்படுகின்றனர் .

அதனால் தான் என்னவோ தங்களுடைய குரல்கள் சர்வதேசத்தில் ஓங்கி ஒழிக்கவில்லை என்பதாக மக்கள் மன்றம் கண்ணீரோடு தெரிவித்து வருகிறது.

தொழிற்துறையை மேம்படுத்த மூலோபாயத் திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

தொழிற்துறையை மேம்படுத்த மூலோபாயத் திட்டம்

தொழிற்துறையை மேம்படுத்த மூலோபாயத் திட்டம்

தொழிற்துறையை மேம்படுத்த மூலோபாயத் திட்டம்,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (03) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை

உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றை

வினைத்திறன் மற்றும் செயல்திறனுள்ள வர்த்தகங்களாக உருவாக்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

செலவினங்களைக் குறைத்து தற்போதுள்ள வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதன் மூலம் சந்தையை மையமாகக் கொண்ட வினைத்திறன்

மற்றும் செயல்திறன் வாய்ந்த வர்த்தகமாக உள்நாட்டு பால்தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு வலியுறுத்தினார்.

மில்கோ நிறுவனத்தின் உற்பத்தி

கடந்த வருடத்தை விட இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மில்கோ நிறுவனத்தின் உற்பத்தித் திறனில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மில்கோ அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால் காந்த, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் பாலிகா பெர்னாண்டோ, மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஜி.வி.எச். கோட்டாபய, தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் வைத்தியர் பீ.சி.எஸ். பெரேரா

மற்றும் கமத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிலியந்தலையில் பற்றி எரிந்த வீடு
Posted in இலங்கை செய்திகள்

பிலியந்தலையில் பற்றி எரிந்த வீடு

பிலியந்தலையில் பற்றி எரிந்த வீடு

பிலியந்தலையில் பற்றி எரிந்த வீடு ,கட்டடம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் அந்த வீடு முற்று முழுதாக செய்த மருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தக நிலையத்தில் உள்ள கட்டடம் வர்த்தக நிலையமாக இயங்கி வந்தது அதிலேயே தீப்பிடித்து குறித்த வர்த்தக நிலையம் நாசமாகி உள்ளது.

தீயணைப்பதற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள்

தீயணைப்பதற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்ட பொழுதும் அதற்குள்ளாக அந்த கடையில் முற்று முழுதாக எரிந்து நாசமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

இவை மின்சார ஒழுக்க காரணமாக இடம் பெற்றதா ,அல்லது வேறு ஏதாவது காரணங்களால் தீ பரவிக் கொண்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பல் பொருள் அங்காடி

மிகப்பெரும் பல் பொருள் அங்காடியாக விளங்கி வந்த இந்த வர்த்தக நிலையத்தில் தீ பிடித்தது எப்படி என்பது தொடர்பிலையே அங்கு பணியாற்றிய ஊழியர்கள்,

மற்றும் வாடிக்கையாளர்கள் அச்சத்தையும் கேள்வியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது .

இது திட்டமிடப்பட்ட ரீதியில் தீ வைக்கப்பட்டதா அல்லது ,மின்சார ஒழுக்கின் காரணமாக மற்றும் ஏனைய காரணங்களினால் இந்த தீப்பற்றி கொண்டதா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை குற்ற புலனாய்வுத்துறை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ அணைத்ததினால் பல மில்லியன் ரூபாய் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

UK பாதுகாப்புச் செலவு 3.5% ஆக உயரும்
Posted in இலங்கை செய்திகள்

UK பாதுகாப்புச் செலவு 3.5% ஆக உயரும்

UK பாதுகாப்புச் செலவு 3.5% ஆக உயரும்

UK இந்த மாதம் 3.5% தேசிய வருமானத்தை பாதுகாப்புக்காக செலவழிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என நிச்சயமாக உள்ளதாக UK செய்திகள் தெரிவிக்கிறது.

இது NATO கூட்டமைப்பின் ஆயுதத் தயாரிப்புப் போக்கின் ஒரு பகுதியாகவும், அமெரிக்காவை உறுதியாகச் சேர்த்துக்கொள்ளும் முயற்சியுடனும் இணைந்துள்ளது.

இந்த முக்கிய அரசியல் மாற்றம் உறுதியாக இருப்பதால், பாதுகாப்பு துறை (MoD) அதிகாரிகள், முன்னதாக 2030களுக்குள் 3% இலக்கை நோக்கம் எனவா

அல்லது “உறுதி” எனவா குறிப்பிடுவது குறித்து தொழில்நுட்ப சிக்கல்களாக பதற்றப்படுவதைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளனர்.

பிரதமரான சர் கீர் ஸ்டார்மர் பாதுகாப்பு செலவுகளை அதிகரிப்பது மற்றும் சமூக நல திட்டங்களை மேற்கொள்வது ஆகிய இரண்டுக்கும் இடையில் சமநிலையை தேட வேண்டிய

அரசியல் சிக்கலின் மத்தியில் உள்ளார். அவர் இன்று உடனடியாகவே இந்த செலவுக் குறிக்கோளை தீர்மானிக்க வாய்ப்பு உள்ளது.

2035க்குள் பாதுகாப்பு செலவினை 3.5% ஆக உயர்த்துவதுடன், பாதுகாப்பு தொடர்பான இரகசிய உளவுத்துறைகள், தளவமைப்புகள் போன்றவற்றுக்காக கூடுதல் 1.5% செலவினையும் உறுதி செய்ய வேண்டியிருக்கும்.

இதன் மூலம் மொத்தப் பாதுகாப்பு செலவு 5% ஆக உயரும், இது இந்த மாதம் நெதர்லாந்தில் நடைபெறும் முக்கிய NATO மாநாட்டில் ஒட்டுமொத்த உறுப்பினர்களிடமும் எதிர்பார்க்கப்படும்

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசு வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசு வீடுகள்

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசு வீடுகள்

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசு வீடுகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளாக நிலவிய போர் காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்குரிய பெருமளவான வீடுகள் சேதமடைந்தன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2009 ஆண்டிலிருந்து இதுவரை 274,728 குடும்பங்களைச் சேர்ந்த 914,722 நபர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

2024 ஆண்டின் இறுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 08 மாவட்டங்களில் 150,488 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை அரசு, இந்திய அரசு, அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட பிற அமைப்புகள் மூலம் நிதி வழங்கப்படுகிறது.

2009 ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு (Core families) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 08 மாவட்டங்களில் மேலும் 16,759 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் ஆரம்பத்தில் 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட கிரயம் ரூபா 1,100,000 மற்றும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு ரூபா 650,000 எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், கட்டிட நிர்மாண மூலப்பொருட்களின் தற்போதைய விலைகளுக்கு அமைய 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட கிரயம்

ரூபா 1,600,000 மற்றும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு ரூபா 950,000 எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2025 ஆண்டிலிருந்து அமுலாகும் வகையில் நிரந்தர வீடமைப்பு திட்ட பயனாளி நிர்மாணிக்கும் அடிப்படையில் அரசினால் வழங்கப்படும் உதவிப் பணத்தை பின்வரும் வகையில் அதிகரிப்பதற்கு

நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. 

ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன்
Posted in உலக செய்திகள்

ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன்

ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன்

ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன் ராணுவ திடீர் தாக்குதல் அதிர்ச்சியில் ரஷ்யா குறைந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது ,பதிலடி கொடுக்க ரஷியா இராணுவம் தயராகி வருகிறது .

ரஷ்யா நாட்டுக்குள் ஆள ஊடுருவி விமானத்தளத்தில் நுழைந்து 40 விமானங்களை இல்லாத அழித்து சாதனை படைத்திருந்த உக்கிரேன் இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .

கிருமியா பாலத்தை உடைத்த உக்கிரேன்

அதனை அடுத்து சமகாலத்தில் உக்ரேன் ரஷ்யாவுக்கு இடையிலான ,கிருமியா பாலத்தை கடலடி உளவு தற்கொலை படகுகள் மூலம் உடைத்து தாக்கி அழித்துள்ளது.

இதனால் கடல் வழியாக அமைக்கப்பட்டுள்ள, இந்த பாலம் மீளவும் சேதத்துக்கு உள்ளான நிலையில் இப்பொழுது காணப்படுகிறது.

தொடர்ந்தும் குறித்த பாலத்தை இலக்கு வைத்து, உக்கிரைன் படைகள் மேற்குலக நாடு ஆதரவுடன் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

இதனால் ரஷ்யாவுக்கும் கிரிமியாவுக்கும் இடையிலான தரைவழிப்பாதைகளை, முற்றாக தூண்டிக்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் யுக்ரேன் மேற்கொண்டு வருவதால் ,ரசியா அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.

ரயில் வழி ஊடாக இதனால் பயணிக்கும் சரக்கு போக்குவரத்தை நிறுத்திவிட்டால், கிருமியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ,தொடர்புகள் தூண்டிக்கப்பட்டு விடும் என்பது அவர் நிலைப்பாடாகிறது.

உளவு விமான மூலமாக தற்கொலை தாக்குதல்

கடலடி நீரூந்து விசைப் படகுகள், ரோந்து கடல் உளவு விமான மூலமாக இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

48 மணித்தியாலத்தில் ரஷ்யாவுக்கு பெரும் அதிர்ச்சி வைத்தியத்தை யுக்கிறேன் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து ,உக்கிரன் மீது வெகு விரைவில் ரஷ்யா திடீர் தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.