முதன் முதலாக டென்மார்க்கில்
Posted in உலக செய்திகள்

முதன் முதலாக டென்மார்க்கில்

முதன் முதலாக டென்மார்க்கில்

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இன்று டென்மார்க்கில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை முதல் முறையாக ஆறு மில்லியனைத் தாண்டியுள்ளது.

டென்மார்க்கின் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை முதல் முறையாக ஆறு மில்லியனைத் தாண்டி ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது

என்று புள்ளிவிவரங்கள் டென்மார்க்கின் புதிய தரவு செவ்வாயன்று காட்டியது.

அந்த நிறுவனத்தின்படி, நோர்டிக் நாட்டில் இப்போது அதிகாரப்பூர்வமாக 6,001,008 பேர் வசிக்கின்றனர்.

நாங்கள் ஐந்து மில்லியன் மக்களை அடைந்த 1973 ஆம் ஆண்டிற்குச் செல்ல வேண்டும். இப்போது ஆறு மில்லியன் மக்கள் டென்மார்க்கில் வாழ்கிறார்கள் என்று

சொல்லப் பழக வேண்டும் என்று புள்ளி விவரங்கள் டென்மார்க் மக்கள்தொகை புள்ளி விவரங்களுக்கான இயக்குனர் ஜோனாஸ் ஷிட்ஸ் ஜூல் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

நாட்டில் மக்கள்தொகை வளர்ச்சி வரலாற்று ரீதியாக இறப்பு விகிதத்தை விட பிறப்பு விகிதத்தால் இயக்கப்படுகிறது என்றாலும், 1970 களில் இருந்து குடியேற்றம் ஒரு வளர்ந்து வரும் காரணியாக ஜூல் தெரிவித்துள்ளது.

குடியேற்றம் அதிகரித்த காலகட்டத்தில் டென்மார்க்கில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. அதாவது குடியேற்றம் முன்பை விட மக்கள்தொகை வளர்ச்சியில் அதிகரித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்

வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்

வடக்கில் பத்திற்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் காணப்படுவதாகவும் அவற்றையும் அகழ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,

செம்மணியில் மனிதப்புதைகுழு தோண்டப்பட்டபோது அதற்கு அண்மையில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டன என்று செய்திகள் வந்துள்ளன.

முன்னதாக, செம்மணிப்பகுதியில் கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறுதி தருணத்தில் தெரிவித்த விடயங்களின் அடிப்படையில் தான் செம்மணியில் அகழ்வுகள் செய்யப்பட்டன.

ஆனாலும் அந்த அகழ்வுப்பணிகள் நிறைவடைற்கு முன்னதாகவே அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதற்குப்பின்னராக பல்வேறு இடங்களில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் குறைந்தது 13 இடங்களில் மனிதப்புதைகுழிகள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னாரில் மனிதப்புதைகுழு கண்டறியப்பட்டு அகழப்பட்டபோதும் அது முன்னெடுக்கப்படவில்லை. பின்னர் கொக்குத்தொடுவாயில்

மனிதப்புதைகுழி கண்டறியப்பட்டு அகழப்பட்டபோதும் அப்பணிகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அவ்வாறான நிலையில் செம்மணிப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்படக்கூடாது. விசேடமாக அங்கு இளம்பிள்ளைகள், பெண்கள் அடித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

ஆகவே இதற்குப் பின்னால் என்ன நடைபெற்றுள்ளது, யார் இதற்கு காரணமானவர்கள், எந்தக்கால கட்டத்தில் நடைபெற்றது என்பதுள்ளிட்ட அனைத்து விடயங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே செம்மணி புதைகுழியின் அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதோடு பணமில்லையென்றோ வேறு காரணங்களைக் கூறியோ அப்பணிகள் இடை நிறுத்தப்படக்கூடாது.

அரசாங்கம் அகழ்வுப்பணிகளுக்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும். செம்மணி புதைகுழி மட்டுமல்ல ஏனைய புதைகுழிகளின் அகழ்வுப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும்.

உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு உண்மைகளை வெளிப்படுத்தி தாங்கள் சொல்வதைச் செய்பவர்கள் என்பதை அரசாங்கம் செயலில் காட்ட வேண்டும் என்றார்.

சீ.வி. சுமந்திரன் திடீர் சந்திப்பு நடந்தது என்ன
Posted in இலங்கை செய்திகள்

சீ.வி. சுமந்திரன் திடீர் சந்திப்பு நடந்தது என்ன

சீ.வி. சுமந்திரன் திடீர் சந்திப்பு நடந்தது என்ன

சீ விக்னேஸ்வரன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கிடையில் திடீரென சந்திப்பு ஒன்று நிகழ்ந்துள்ளதோடு சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவும் செய்யப்பட்டுள்ளது.

கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்
கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்

தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும்

ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு கட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் இன்றைய தினம் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளனர்.

கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்

கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்

கல்யாணத்தின் போது குங்குமம் வைக்கையில் கை நடுங்கியதால் உடனே நிறுத்தப்பட்ட திருமணத்தால் பரபரப்பாகியுள்ளது திருமண நிகழ்வு.

இந்தியா ,பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நடந்த ஒரு ஆச்சரியமான சம்பவத்தில்,

குங்குமம் வைக்கும் விழாவின் போது மணமகனின் கை நடுங்குவதை மணமகள் கவனித்ததால் திருமணம் ரத்து செய்யப்பட்டது.

மணமகன் மனநிலை சரியில்லாதவர் என்று கூறி, மணமகள் திருமணத்தை தொடர மறுத்துவிட்டார்.

இந்த சம்பவம் பபுவா பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கத்ரா கிராமத்தில் நடந்தது.

செனாரி பகுதியில் உள்ள பகதி கிராமத்தைச் சேர்ந்த ஷிவ்பச்சன் பிந்தின் மகன் ஹீரா குமார் என்ற மணமகன் தனது திருமண ஊர்வலத்துடன் வந்தார், மேலும் அனைத்து ஆரம்ப சடங்குகளும் நிறைவடைந்தன.

இருப்பினும், முக்கியமான குங்குமம் வைக்கும் சடங்கின் போது, ​​மணமகனின் கை நடுங்கியதாகவும், அவரால் குங்குமத்தை சரியாகப் பூச முடியவில்லை என்றும் மணமகள் கூறினார்.

மணமகள் உடனடியாக திருமணத்திலிருந்து பின்வாங்கி, மணமகன் “பைத்தியம்” போல் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் கூறினார்.

நிலைமை விரைவாக மோசமடைந்து உள்ளூர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு குடும்பத்தினரும் பபுவா பொலிஸ் நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இறுதியில், மணமகன் மணமகள் இல்லாமல் வீடு திரும்ப வேண்டியிருந்தது.

ஜேர்மனியை சென்றடைந்த அனுர
Posted in இலங்கை செய்திகள்

ஜேர்மனியை சென்றடைந்த அனுர

ஜேர்மனிக்கு உத்யோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி அனுர இன்றைய தினம் ஜேர்மனியை சென்றடைந்துள்ளார்.

ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

இன்று முற்பகல் (11) பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். 

ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) தலைமையில் இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெறும். 

இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில்

உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மின்சார கட்டணம் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மின்சார கட்டணம் அதிகரிப்பு

மின்சார கட்டணம் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மின் கட்டண திருத்தம் நாளை (12) முதல் அமுலுக்கு வருவதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சிறிய நுகர்வு மற்றும் 90 அலகுகளுக்கு குறைவான மதத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் இந்த முறை எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 30 அலகுகளுக்கு குறைவான வீட்டு பிரிவிற்கு 8% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.75 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் இன்று நள்ளிரவு முதல் ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

30 – 60 அலகு பிரிவின் ஒரு அலகுக்கு இதுவரை இருந்த விலை 2 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் ஒரு அலகின் புதிய விலை ரூ.8 ஆகும்.

அதன்படி, அந்த பிரிவின் மாதாந்திர கட்டணம் 10 ரூபாவால் அதிகரித்து ரூ.210 ஆக மாறியுள்ளது.

இதற்கிடையில், 61 – 90 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.240 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

91 – 120 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.360 ஆகும்.

121 – 150 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.600 ஆகும்.

121 – 180 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.840 ஆகவும், 180 அலகுகளுக்கு மேல் உள்ள பிரிவிற்கு ரூ.2020 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வீட்டு பிரிவில் மின்சாரக் கட்டணத் திருத்தம் ரூ.20 லிருந்து ரூ.2020 ஆகவும் அதிகரித்துள்ளது.

180 அலகுகளுக்கு மேல் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கான மாதாந்திர நிலையான கட்டணங்களில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்பதுடன், அலகுகளுக்கான கட்டணம் மட்டுமே அதிகரிக்கும்.

பெரிய தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ. 5,000 அப்படியே காணப்படுவதுடன், மாதாந்திர விண்ணப்பக் கட்டணம் மட்டும் ரூ. 100 அதிகரிக்கும்.

அதன்படி, மேற்கண்ட பிரிவில் ரூ.23 ஆக நிலவிய ஒரு அலகு கட்டணம் ரூ.28 ஆகவும், ரூ.13 ஆக நிலவிய ஒரு அலகின் கட்டணம் ரூ.15 ஆகவும், ரூ.11 ஆக நிலவிய ஒரு அலகு கட்டணம் ரூ.12 ஆகவும் அதிகரிக்கும்.

அதன்படி, கட்டண அதிகரிப்பு 50 சதம் முதல் ரூ.9 வரை அதிகரித்து, மாதாந்திர வீத அதிகரிப்பு ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து சென்ற கப்பலுக்கு நேர்ந்த கதி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையிலிருந்து சென்ற கப்பலுக்கு நேர்ந்த கதி

இலங்கையிலிருந்து சென்ற கப்பலுக்கு நேர்ந்த கதி

கொழும்பில் இருந்து மும்பை நோக்கி ‘எம்.வி. வான ஹை 503’ என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

கொழும்பில் இருந்து மும்பை நோக்கி ‘எம்.வி. வான ஹை 503’ என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது.

அந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று கப்பலின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

கப்பலில் இருந்த கொள்கலன்களுக்கும் தீ பரவியதால், அவற்றில் சில பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் சரக்கு கப்பலில் இருந்த கப்டன் உள்பட 22 பேர் உயிர் தப்பிக்க கடலில் குதித்தனர். இதனால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் அழிக்கல் துறைமுகத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு படையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விமானம் மூலமும் மீட்பு பணியை மேற்கொண்டனர்.

இந்த மீட்பு பணியில் இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். சூரத் ஈடுபட்டது. இதனைத்தொடர்ந்து நடுக்கடலில் தத்தளித்த 18 பேரையும் மீட்பு குழுவினர் மீட்டு

ஐ.என்.எஸ். சூரத் கப்பல் மூலம் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பனம்பூரில் உள்ள புதிய மங்களூரு கப்பல் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

மீட்கப்பட்டவர்களில் 6 பேர் காயம் அடைந்திருந்தனர். அவர்களில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது. இதையடுத்து அவர்கள் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 12 பேர் காயமின்றி தப்பினர்.

கடலில் மாயமான மீதமுள்ள 4 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணியில் டிரோன்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டவர்கள் சீனாவை சேர்ந்த 8 பேர், தைவானை சேர்ந்த 4 பேர், மியான்மரை சேர்ந்த 4 பேர், இந்தோனேசியாவை சேர்ந்த 2 பேர் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் கேரள கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தற்போது வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட இரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

கப்பலில் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை. இந்திய கடற்படையின் கப்பல்கள் மற்றும் கடலோர காவல்படையின் விமானங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.

ஒருவேளை வெடிப்பு ஏற்பட்டால், கேரளக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில், சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

முல்லையில் மாணவிக்கு நேர்ந்த கதி
Posted in இலங்கை செய்திகள்

முல்லையில் மாணவிக்கு நேர்ந்த கதி

முல்லையில் மாணவிக்கு நேர்ந்த கதி

பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இன்றைய தினம் (11) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரை, மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நோயாளர் காவு வண்டியின்றி வைத்தியசாலை நிர்வாகம் காணப்பட்டதால்

உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறையால் இதுபோன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு,

நோயாளர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மாணவியின் நிலை தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

இன்று காலை உடையார்கட்டில் உள்ள பாடசாலைக்குச் சென்ற இந்த மாணவி உடல்நலக் குறைவு ஏற்பட, உடனடியாக பாடசாலை நிர்வாகத்தினர் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதன் பின்னர் மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாணவியை கொண்டு செல்வதற்காக, நோயாளர் காவு வண்டியை எதிர்பார்த்து மாணவியும் பெற்றோரும் காத்திருந்துள்ளனர்.

அதன் பின் சுமார் 3 மணிநேரத்தின் பின் மாணவியின் தந்தை, அவ்வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியரிடம் சென்று, நோயாளர் காவு வண்டிக்காக தாம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு அந்த வைத்தியர், வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை காணப்படுவதாக கூறியதோடு, காத்திருக்க கடினமெனில்,

சுய விருப்பத்தின் பேரில், சொந்த செலவில் மாணவியை அழைத்துச் செல்லுமாறும் மாணவியின் தந்தையிடம் முரண்பாடாக பேசியுள்ளார்.

அதன் பின், மாணவியை அவரது தந்தை, தன் சொந்த செலவில் மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பார்த்தபோது,

மாஞ்சோலை வைத்தியசாலை வளாகத்தில் நோயாளர் காவு வாகனங்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், வசதியற்ற நோயாளர்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கண்டியில் விபத்து நால்வர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

கண்டியில் விபத்து நால்வர் படுகாயம்

கண்டியில் விபத்து நால்வர் படுகாயம்

கண்டியில் இன்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கண்டி, கட்டுகஸ்தோட்டை வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில்

இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திடீர் குழி கண்டியில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

திடீர் குழி கண்டியில் போக்குவரத்து பாதிப்பு

திடீர் குழி கண்டியில் போக்குவரத்து பாதிப்பு

திடீரென தண்டவாளத்தில் ஏற்பட்ட குழியினால் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பித்துள்ளது.

கண்டியில் ரயில் மார்க்கத்தில் திடீரென குழி ஒன்று ஏற்பட்டுள்ளமையினால் கண்டி மற்றும் பேராதனை நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கண்டி நோக்கிச் செல்லும் ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கண்டி நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும்

ரயில்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில் திணைக்கள கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இந்த திடீரென தோன்றிய குழியை உடனே கவனித்ததனால் எந்த பிரச்சினையும் இல்லை எனவும், இதனைக் கவனிக்காது விட்டிருக்கப்படுமாயின் விபத்துக்கள் ஏற்பட்டிருக்கும் என மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.

அந்தக் குழியை சீர்திருத்தி, மீண்டும் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்பட்டு வருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒஸ்ரியா பாடசாலைக்குள் 11பேர் சுட்டுக்கொலை
Posted in உலக செய்திகள்

ஒஸ்ரியா பாடசாலைக்குள் 11பேர் சுட்டுக்கொலை

ஒஸ்ரியா பாடசாலைக்குள் 11பேர் சுட்டுக்கொலை

ஒஸ்ரியா பாடசாலைக்குள் 11பேர் சுட்டுக்கொலை ,துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முன்னாள் மாணவர்

இன்னும் பெயர் குறிப்பிடப்படாத துப்பாக்கிச் சூடு நடத்தியவர், பள்ளியில் பட்டம் பெறாத முன்னாள் டிரேயர்ஷுட்ஸெங்காஸ் மாணவர் என்று கார்னர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கு குறித்து நிறைய ஊகங்கள் எழுந்துள்ளன, மேலும் விசாரணை செய்வது இப்போது குற்றவியல் அலுவலகத்தின் வேலை என்றும் கார்னர் குறிப்பிட்டார்.

அதே மாநாட்டில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் நோக்கம் இன்னும் விசாரணையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தாக்குதலுக்கு முன்பு போலீசாருக்குத் தெரியாது என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

தற்போதைய தகவல்கள், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும் சட்டப்பூர்வமாக வைத்திருந்தார் என்றும், அவருக்கு துப்பாக்கி உரிமம் இருந்தது என்றும் தெரிவிக்கின்றன என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்த ஒரு கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் தனியாகச் செயல்பட்ட பரந்த கிராஸ் பகுதியைச் சேர்ந்த ஆஸ்திரிய நபர் என்று போலீசார் தெரிவித்தனர்.

மூன்று நாட்கள் துக்கம்

ஆஸ்திரியாவில் மூன்று நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 10:00 மணிக்கு நாடு தழுவிய நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும்.

வியன்னாவில் உள்ள ஹாஃப்பர்க் அரண்மனையில், ஜனாதிபதி அலெக்சாண்டர் வான் டெர் பெல்லனின் அலுவலகம் அமைந்துள்ள கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

தாக்குதல் நடந்த பள்ளி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று ஆஸ்திரியாவின் கல்வி அமைச்சர் கிறிஸ்டோஃப் வைடர்கெர் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை “நமது நாட்டின் வரலாற்றில் ஒரு இருண்ட நாள்” என்று ஆஸ்திரிய அதிபர் கிறிஸ்டியன் ஸ்டாக்கர் கூறினார், மேலும் துப்பாக்கிச் சூட்டை “தேசிய சோகம்” என்று அறிவித்தார்.

“ஒரு பள்ளி என்பது கற்றுக்கொள்ள ஒரு இடம் மட்டுமல்ல – அது நம்பிக்கை, சௌகரியமாக உணருதல் மற்றும் எதிர்காலம் இருப்பதற்கான இடம்” என்று அவர் மாநாட்டில் கூறினார், இந்த பாதுகாப்பான இடம் “மீறப்பட்டது” என்று கூறினார்.

“இந்த கடினமான நேரங்களில், மனிதனாக இருப்பது நமது வலிமையான அம்சம்” என்று அவர் கூறினார்.

கொல்லப்பட்டவர்களில் ஏழு பேர் மாணவர்கள் என்று ஆஸ்திரியாவின் APA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் “நமது நாட்டை அதன் இதயத்தில் நேரடியாகத் தாக்குகிறது” என்று ஸ்டாக்கர் உடனடியாகத் தெரிவித்தார்.

“இவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் முன்னால் வைத்திருந்த இளைஞர்கள்.”

கொள்ளையைத் தடுக்க ஊரடங்கு
Posted in உலக செய்திகள்

கொள்ளையைத் தடுக்க ஊரடங்கு

கொள்ளையைத் தடுக்க ஊரடங்கு

கொள்ளையைத் தடுக்க ஊரடங்கு ,லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டங்கள்: ‘கொள்ளையைத் தடுக்க’ மேயர் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளார், போலீசார் 197 பேரை கைது செய்துள்ளனர்

“நாசவேலையைத் தடுத்து, கொள்ளையடிப்பதை நிறுத்த” அதிகாரிகள் முயற்சிப்பதால், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை நகரின் நகர மையப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் – மேலும் வரும் நாட்களில் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று கரேன் பாஸ் கூறுகிறார்.

திங்கட்கிழமை இரவு 23 வணிகங்கள் சூறையாடப்பட்டதால், “நாங்கள் ஒரு திருப்புமுனையை அடைந்துவிட்டோம்” என்று உள்ளூர் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.

போராட்டங்களின் விளைவாக சொத்துக்களுக்கு “குறிப்பிடத்தக்க சேதம்” ஏற்பட்டுள்ளதாக திருமதி பாஸ் கூறினார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையின் தலைவர் ஜிம் மெக்டோனல், கடந்த சில நாட்களாக “சட்டவிரோத மற்றும் ஆபத்தான நடத்தை” அதிகரித்து வருவதால், ஊரடங்கு உத்தரவை “உயிர்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கை” என்று விவரித்தார்.

செவ்வாய்க்கிழமை மட்டும், 197 பேர் கைது செய்யப்பட்டனர், மேலும் சரியான காரணமின்றி ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் எச்சரித்தார்.

குடியிருப்பாளர்கள், வீடற்றவர்கள், வேலைக்குச் சென்று வருபவர்கள், ஊடகங்கள் மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள் என அனைவருக்கும் ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று திரு. மெக்டோனல் கூறினார்.

வெள்ளிக்கிழமை முதல் போராட்டங்கள் நடந்த பகுதியை உள்ளடக்கிய LA நகர மையத்தின் ஒரு சதுர மைல் (2.59 சதுர கிலோமீட்டர்) பகுதியை ஊரடங்கு உத்தரவு உள்ளடக்கியது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் சுமார் 500 சதுர மைல்கள் (2,295 சதுர கிலோமீட்டர்) பரப்பளவைக் கொண்டுள்ளது.

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க நிறுவனம் (ICE) நடத்திய சோதனைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன.

கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் ஆட்சேபனைகளை மீறி, LA இல் சோதனைகளை மேற்கொள்ளும் ICE அதிகாரிகளைப் பாதுகாக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 4,000 தேசிய காவல்படை துருப்புக்களை –

கூட்டாட்சி ரிசர்வ் படையை – செயல்படுத்தியுள்ளார். அமெரிக்க வடக்கு கட்டளைப் பிரிவின்படி, புதன்கிழமை LA பகுதியில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் 700 கடற்படையினரையும் திரு. டிரம்ப் அனுப்பினார்.

அமெரிக்க தாக்குதலுக்கு சதிசெய்தார் கைது
Posted in உலக செய்திகள்

அமெரிக்க தாக்குதலுக்கு சதிசெய்தார் கைது

அமெரிக்க தாக்குதலுக்கு சதிசெய்தார் கைது

அமெரிக்க தாக்குதலுக்கு சதிசெய்தார் கைது அமெரிக்க தாக்குதலுக்கு சதி செய்ததாகக் கூறப்படும் பாகிஸ்தானிய நபர் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டார்.


நியூயார்க் நகரில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்படுவதற்காக, செவ்வாயன்று ஒரு பாகிஸ்தானிய நபர் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.

ஷாசேப் ஜாதூன் என்றும் அழைக்கப்படும் 20 வயதான முகமது ஷாசேப் கான், செப்டம்பரில் கனடாவில் கைது செய்யப்பட்டார்.

2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் அக்டோபர் 7 ஆம் தேதி புரூக்ளினில் உள்ள ஒரு யூத மையத்தில் இஸ்லாமிய அரசுக்கு (IS) ஆதரவாக ஒரு வெகுஜன துப்பாக்கிச் சூடு நடத்த கான் திட்டமிட்டிருந்ததாக ஒரு குற்றவியல் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எங்கள் யூத சமூகத்தில் முடிந்தவரை பல உறுப்பினர்களைக் கொல்ல தானியங்கி ஆயுதங்களைப் பயன்படுத்த அவர் திட்டமிட்டார், அனைவரும் IS க்கு ஆதரவாக,” என்று அமெரிக்க வழக்கறிஞர் ஜே கிளேட்டன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

உண்மையில் இரகசிய சட்ட அமலாக்க அதிகாரிகளாக இருந்த சதிகாரர்களுடனான உரையாடல்களில் கான் தனது திட்டங்களை வெளிப்படுத்தியதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க-கனடா எல்லையிலிருந்து சுமார் 12 மைல் (19 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஓர்ம்ஸ்டவுன் நகராட்சியில் கனேடிய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

கான் மீது ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு பொருள் ஆதரவு மற்றும் வளங்களை வழங்க முயற்சித்ததாகவும், பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

ரணில் இன்று சிஐடயில் ஆயர்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் இன்று சிஐடயில் ஆயர்

ரணில் இன்று சிஐடயில் ஆயர்

ரணில் இன்று சிஐடயில் ஆயர் ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிற்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

அளித்துள்ளதுடன், அதற்கமைய முந்தைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புக்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன

தமிழரசின் மேயர்தொடர்பில் வௌியான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தமிழரசின் மேயர்தொடர்பில் வௌியான அறிவிப்பு

தமிழரசின் மேயர்தொடர்பில் வௌியான அறிவிப்பு

தமிழரசின் மேயர்தொடர்பில் வௌியான அறிவிப்பு ,யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கட்சி மட்டத்தில் யாழ் மாநகர சபை மேயர் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரும் யாழ் மாநகர சபையின் துணை மேயர் பதவிக்கு இம்மானுவேல் தயாளனின் பெயரையும் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ் மாநகர சபைக்கான மேயர், துணை மேயர் தெரிவுகள் எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகன விபத்தில் 3பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் 3பேர் பலி

வாகன விபத்தில் 3பேர் பலி

வாகன விபத்தில் 3பேர் பலி ,நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துகளில் இளைஞர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மாங்குளம், அம்பன்பொல மற்றும் வரகாபொல பொலிஸ் பிரிவுகளில் நேற்று (10) இந்த விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

மாங்குளம் – முல்லைத்தீவு வீதியில் உள்ள ஒலுமடு பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, பாலத்தின் கொங்கிரீட் தூணில் மோதியதில், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பாலத்தின் அடியில் உள்ள ஆற்றில் விழுந்து இறந்தார்.

உயிரிழந்தவர் பரந்தன் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கமுவ-மொரகொல்லாகம வீதியில் உள்ள வலத்வெவ பகுதியில், மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வடிகானில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த செலுத்துனர், எஹெட்டுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர் அபோகமவைச் சேர்ந்த 65 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கொழும்பு-கண்டி வீதியில் உள்ள தொலங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டியொன்று மற்றொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது, ​​சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல், அது வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த ஒரு கெப் வண்டியில் மோதியது.

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயமடைந்து வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இறந்தவர் நெலும்தெனிய பகுதியைச் சேர்ந்த 39 வயதானவர் என தெரியவந்துள்ளது.

கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்

கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்

கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம் ,கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ஆராய்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கண்டி நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்போரா காரணமாக இந்த ரயில்கள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சீர் செய்யப்பட்ட பின்னர் வளமை போன்று ரயில்வே சேவைகள் ஆரம்பிக்கப்படும் என அந்த துணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த திடீர் சாலை தடைப்பட்டதனால் பயணிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்..

தமது தொழில் பற்றி வேகமாக ஈடுபட்டு வருவதாக விரைவில் இந்த சேவைகள் நிகழும் வழமைக்கு இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு கஞ்சி கடையில் இடம் பெற்று வருகின்ற ரயில் சேவை அதிகமான மக்கள் பயணித்து வருவதும் கண்டு கொழும்பு கடையிலான சேவைகளும் பலமான பாதிப்புக்கு உள்ளாக கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் அங்கு குளிர்ந்த பயணிகள் பெரும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவன்

மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவன்

மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவன் ,குடும்பத் தகராறு தீவிரமடைந்ததன் காரணமாக, கணவன் ஒருவர் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (09) ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டுபிடிய, உடவெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடவெலவத்த, ஹட்டுபிடிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்தவரின் உடல், நீதவான் பரிசோதனைக்காக பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான கணவனை கைது செய்வதற்காக ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கீதா கோபிநாத் இலங்கை விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

கீதா கோபிநாத் இலங்கை விஜயம்

கீதா கோபிநாத் இலங்கை விஜயம்

கீதா கோபிநாத் இலங்கை விஜயம் ,சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலைமைகள், IMF இன் நிதி உதவி திட்டங்கள், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான

சீர்திருத்தங்கள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்ள இந்த விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது, கீதா கோபிநாத் இலங்கை அரசாங்க அதிகாரிகள், மத்திய வங்கி ஆளுநர், மற்றும் பிற பங்குதாரர்களுடன் சந்திப்பு நடத்தி, IMF

இன் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (Extended Credit Facility) மற்றும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலாநிதி கீதா கோபிநாத், 2022 ஜனவரி 21 முதல் IMF இன் முதல் துணை நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

இதற்கு முன்னர், 2019 முதல் 2022 வரை IMF இன் தலைமை பொருளியலாளராக பணியாற்றினார்.

5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது
Posted in இலங்கை செய்திகள்

5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது

5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது

5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது ,இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஐந்து இலங்கையர்கள் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படகு மூலம் இந்தியாவின் ராமேஸ்வரம் கடற்கரையை அடைந்த இந்தக் குழுவினர், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் இரண்டு சிறு குழந்தைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக விசாரணை அதிகாரிகளிடம் அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்களையும் இலங்கை தமிழ் அகதிகளுக்காக நிறுவப்பட்ட மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.