கண்டியில் விபத்து நால்வர் படுகாயம்
கண்டியில் இன்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கண்டி, கட்டுகஸ்தோட்டை வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில்
இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- மேற்குக் கரைத் தாக்குதல்களில் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட கைதிகளை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன

- ஏமனின் ஹூதிகள் சவூதி எரிசக்தி மற்றும் நிதி உள்கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தல்

- காசா இனப்படுகொலை நடந்தபோதிலும் இஸ்ரேலுடனான ஆயுத வர்த்தகத்தைத் தொடர இந்தியாவின் ராகுல் காந்தி ஆதரவு

- இலங்கையில் தங்க விலை ரூ. 7,000 சரிவு

- மாஸ்கெலியா பள்ளியில் மூச்சுத்திணறல் காரணமாக 36 மாணவர்கள் மருத்துவமனையில்









