கிளிநொச்சியைச் சென்றடைந்த பேரணி
கிளிநொச்சியைச் சென்றடைந்த பேரணி
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரிலிருந்து
வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகர் வந்தடைந்து மாங்குளம்
ஊடாக முறிகண்டி வந்தடைந்து இன்று மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது.
இப்பேரணியானது இரவு கிளிநொச்சியில் தங்கி நாளை காலை 8.00 மணியளவில்
கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணம்
சென்றடையவுள்ளது.
முகப்பரு தழும்புகளை போக்க இதை பண்ணுங்க
முகப்பரு தழும்புகளை போக்க இதை பண்ணுங்க
முகப்பருக்கள் வந்தாலே முகத்தின் அழகு பொலிவிழந்து போய்விடும். சிலருக்கு பருக்கள் இருந்த இடங்களில் தழும்புகள்,
புள்ளிகள் மறையாமல் இருக்கும். சில சமயங்களில் வலி, வேதனைகளை ஏற்படுத்தும். முக அழகை கெடுக்கும் முகப்பரு
தழும்புகளை எளிய வீட்டு வைத்தியங்கள் கொண்டே போக்கிவிடலாம்.
- எலுமிச்சை சாறை பஞ்சுவில் ஒற்றி தழும்பு இருக்கும் இடத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம்
- . மேலும் எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பால், பாதாம் எண்ணெய், தேன் கலந்து குழைத்து முகப்பரு தழும்புகள் இருக்கும் இடத்தில்
- தினமும் தடவி வந்தால் ஒரு வாரத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.
- வெந்தயத்தையும் முகப்பரு தழும்பை போக்க உபயோகிக்கலாம். சிறிதளவு வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த
- நீரை பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள்
- விரைவில் மறைந்துவிடும்.
- சந்தனமும் தழும்புகளை போக்கும் தன்மை கொண்டது.
- முகப்பரு தழும்புகளை போக்க இதை பண்ணுங்க
- சந்தனக்கட்டையை இரவில் நீரில் ஊறவைத்துவிட்டு காலையில் நன்றாக உரசி, பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில்
- தடவ வேண்டும். தினமும் இருமுறை செய்து வந்தால் ஒருவாரத்தில் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.
- சந்தன கட்டையில் ரோஸ் வாட்டர் ஊற்றி தேய்த்து அந்த விழுதை இரவில் தூங்க செல்லும் முன்பு தழும்புகள் இருக்கும் இடத்தில்
- தடவிவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவிவிடலாம். தினமும் இவ்வாறு செய்துவந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.
- ஆப்பிள் சிடேர் வினிகரையும் உபயோகிக்கலாம். சிறிதளவு ஆப்பிள் சிடேர் வினிகருடன் அதே அளவு நீர் கலந்து பஞ்சுவில்
- முக்கி தழும்புகளில் தடவி வரலாம்.
- கற்றாழை ஜெல்லையும் தழும்புகள் இருக்கும் இடத்தில்
- தடவிவிட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.
- தொடர்ந்து கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வந்தால் தழும்புகள் விரைவாகவே மறைந்துவிடும்.
ரசிகர்களை சந்தித்த விஜய்
ரசிகர்களை சந்தித்த விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில்
தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை
பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில், சென்னை அருகே பனையூரில் இருக்கும் விஜய் மக்கள்
இயக்கத்தின் தலைமை செயலகத்திற்கு விஜய் சென்றிருக்கிறார். விஜய் மக்கள்
இயக்க நிர்வாகிகள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருக்கும் நிலையில்,
நடிகர் விஜய் திடீரென இந்த கூட்டத்துக்கு வருகை தந்தார்.
விஜய்
விஜய்யின் திடீர் வருகையை எதிர்பாராத ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இது தொடர்பான போட்டோக்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில்
பதிவிட்டு வருகின்றனர். எதற்காக பனையூரில் கூட்டம் நடைபெற்றது? என்ற தகவல் வெளியாகவில்லை.
நடிகர் தூக்கிட்டு தற்கொலை
நடிகர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீவஸ்தவ் கவுதம் மேனன் இயக்கத்தில்
வெளியான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மூலம் சினிமாவில்
அறிமுகமானார். அதை தொடர்ந்து யூ-டியூப்பில் ஒளிப்பரப்பாகி
வரும் ‘வல்லமை தாரோயா’ என்கிற வலை தொடரிலும் நடித்து வந்தார்.
கடந்த புதன்கிழமை படப்பிடிப்புக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட அவர்,
அன்றைய நாள் முழுவதும் வீடு திரும்பவில்லை. ஷூட்டிங்கில் இருந்தால்
ஸ்ரீவதஸ்வ் தனது போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிடுவது வழக்கம். இதனால்
அவருடைய குடும்பத்தார் மகன் படப்பிடிப்பில் இருப்பதாக நினைத்துக்கொண்டனர்.
இந்நிலையில் ஸ்ரீவதஸ்வ் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் மற்றொரு
வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதனால் அவருடைய குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த சில
நாட்களாகவே அவருக்கு மனநிலை சரியில்லை என்று கூறப்படுகிறது.
லண்டனில் துப்பாக்கி சூடு இருவர் படுகாயம்
லண்டனில் துப்பாக்கி சூடு இருவர் படுகாயம்
இங்கிலாந்து Rinmore Drive area of Derry பகுதியில் நேற்று சனிக்கிழமை
துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது ,இதில் இருவர் பலத்த காயமடைந்த
நிலையில் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இந்த சம்பவம் ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பில் போலீசார் எதனையும்
தெரிவிக்கவில்லை ,தொடர்ந்து புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
குறித்த தாக்குதல் தொடர்பாக அந்த பகுதி பாராளுமன்ற
உறுப்பினர் கடும் கண்டம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது
சினோவில் மிதக்கும் பிரிட்டனின் ஒரு பகுதி – மஞ்சள் எச்சரிக்கை
சினோவில் மிதக்கும் பிரிட்டனின் ஒரு பகுதி – மஞ்சள் எச்சரிக்கை
பிரிட்டனின் ஒரு பகுதியான மத்திய Scotland’s பகுதியில் 20 cm அளவுக்கு
பனிமழை கொட்டியுள்ளது ,
தொடர்ந்து பனிமழை பொழிவு நாடு தழுவிய ரீதியில் அதிகம்
பாதிப்பு இருக்கும் எனவும் ,இதனால் தற்போது மஞ்சள் எச்சரிக்கை
விடுக்க பட்டுள்ளது
பனிமழை பொழிவுடன் கடும் மழையும் இடம் பெறும் எனவும் தெரிவிக்க படுகிறது
நச்சுக் குண்டில் கருகிய 18 மாத சிசு – தொடரும் இன அழிப்பு -படுகொலை
நச்சுக் குண்டில் கருகிய 18 மாத சிசு – தொடரும் இன அழிப்பு -படுகொலை
சிரியாவின் வடக்கு இட்லிப் பகுதியில் எதிரி இராணுவம் நடத்திய நச்சு
குண்டு தாக்குதலில் சிக்கி 18 மத சிசு ஒன்று பலத்த
எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளது
இதே தினத்தில் இது போல பலநூறு மக்கள் படுகாயமடைந்து இறந்துள்ளனர்
இதுவரை சிரியாவில் இடம்பெற்று வரும் பல் நாட்டு படைகளின் ஒருங்கிணைத்த
தாக்குதல் காரணமாக சுமார் பாத்து மில்லியனுக்கு மேற்பட்டாட்ட மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்
தொடரும் இனப் படு கொலைகள் ,அகதிகள் அவலம் என்பனவற்றுக்கும்
என்று முற்று புள்ளி வைக்க படும் என்பதே மக்களின் ஏக்கமாக உளள்து ,
ஆனால் சிரியாவோ சர்வதேச இராணுவ போர்க்களமாக மாற்றம் பெற்றுய் வருகின்றமை குறிப்பிட தக்கது
லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு ஒருவர் பலி -10 பேர் காயம்
லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு ஒருவர் பலி -10 பேர் காயம்
தெற்கு லண்டன் குறைடன் பகுதியில் நடந்த பரவலான பல்வேறு பட்ட
கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியும் பாத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்
இதில் இருவர் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம்
உள்ளனர் ,மேற்படி குற்ற சம்பவத்தை புரிந்த எவரும் இதுவரை கைது
செய்யப்படவில்லை ,என்னும் தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது
இந்த தொடர் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவில்
போலீசார் கைது செய்து விடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது
சாப்பாட்டை குப்பை வாளிக்குள் வீசிய டிலிவரி டிரைவர்-காட்டி கொடுத்த கமரா
சாப்பாட்டை குப்பை வாளிக்குள் வீசிய டிலிவரி டிரைவர்-காட்டி கொடுத்த கமரா
Gousto customer பெண் ஒருவர் ஐம்பது பவுண்டுகள் பெறுமதியான உணவை
ஆதார் செய்துள்ளார் ,குறிப்பிட்ட நிமிடங்கள் கழித்து அவரது கைபேசிக்கு
உணவு வினியோகிக்க பட்டுள்ளது என குறும் செய்தி சென்றுள்ளது ,
அதனை பார்த்து அதிர்ந்து போன பெண் , அவர் வாசலை பார்த்துள்ளார் ,
அங்கு உணவை காணவில்லை ,வீட்டு வாசலுக்கு வந்த சாரதி தமது வீட்டு
கதவையே அன்றி அயல் வீட்டு கதவை அல்லது அயல் வீட்டு வாசலிலோ உணவை வைக்கவில்லை .
இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண்மணி அயலவர் வீட்டில்
உள்ள கமராவை சோதனை செய்து பார்க்கும் படி தெரிவித்துள்ளார்
அப்பொழுது அதிர்ச்சி காத்திருந்தது ,சாரதியாக வந்த டிலிவரி பெண்மணி
ஐம்பது பவுண்டுகள் பெறுமதியான உணவை அங்குள்ள குப்பை தொட்டில் வீசும் நிலையை கண்டுள்ளனர்
குறித்த விடயத்தை குறித்த உணவு வினியோக நிறுவனத்திற்கு தெறிவித்துள்ளனர் ,
அவர்கள் வாடிக்கையாள பெண்மணி பொய் கூறுவது என எண்ணியுள்ளனர் .
காணொளி ஆதார விடயம் மற்றும் அதனை வழங்கிய நிலையில்; குறித்த
நிறுவனம் விசாரணையில் இறங்கியுள்ளது ,மேற்படி விடயம்
முக்கிய ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்த குற்ற செயலை புரிந்த சாரதி பெண்மணி நீதிமன்றில் நிறுத்த படும் நிலை
உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இப்படியும் டிலிவரி சாரதிகள் இருக்கத்தான் செய்கின்றனர்
லண்டனில் இரகசிய பாட்டி – மடக்கிய போலிஸ் – 34 ஆயிரம் தண்டம்
லண்டனில் இரகசிய பாட்டி – மடக்கிய போலிஸ் – 34 ஆயிரம் தண்டம்
லண்டனில் நிகழ்கால நோயின் பரவலை அடுத்து மக்கள் ஒன்று கூடுதலுக்கு
பலத்த தடை விதிக்க பட்டுள்ளது ,ஆனால் லண்டன் புறநகர் பகுதியான
யோர்க்ஷிரே yorkshireபகுதியில் , இரகசிய இடம் ஒன்றில் ,ஒன்று
கூடிய நூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் இணைந்து பட்டி ஒன்றை வைத்துள்ளனர்
இதனை முகர்ந்து பிடித்த போலீசார் திடீரென சுற்றிவளைத்தனர்
அதில் அங்கு கலந்து கொண்ட அணைவருக்கும் தண்டம் அறவிட பட்டது ,.
இதன் மொத்த தொகை முப்பத்தி நான்காயிரம் பவுண்டுகளுக்கு
மேல் என தெரிவிக்க படுகிறது
முல்லைத்தீவில் துறைமுகம் அமைக்க சீனா முஸ்தீபு
முல்லைத்தீவில் துறைமுகம் அமைக்க சீனா முஸ்தீபு
முல்லைதீவு பகுதியில் பெரும் கோட்டை துறைமுகம் ஒன்றை இஸ்தாபிக்க
சீனாவுடன் இலங்கை இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது .திருமலை
,காங்கேசன்துறையை போன்று இந்த துறைமுகத்தை வரலாற்று கேந்திர
முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைக்க திட்டம் இடப்பட்டு வருகிறது
மேற்படி சீனாவின் இந்த திட்டத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவிக்கும்
என எதிர்பார்க்கலாம் , ,அதையும் மீறி சீனாவுடன் இலங்கை
இணைந்து இதனை உருவாக்கும் என்றே உட் கசிவுகள் தெரிவிக்கின்றன
இந்தியா எங்கள் நண்பன் – மகிந்தா குத்துக்கரணம்
இந்தியா எங்கள் நண்பன் – மகிந்தா குத்துக்கரணம்
இந்தியா எங்கள் உற்ற நண்பன் என ஆளும் இலங்கை பிரதமர் மகிந்த
தெரிவித்துள்ளார் ,சீனாவுடன் மிக நெருக்கமாக உலாவி வரும் இலங்கையின்
இந்த அரசியல் பந்து வீச்சில் சிக்கி இந்தியா மண்டையை பிய்த்து கொண்டுள்ள
நிலையில் ,தற்போது மோடியின் நெஞ்சுக்கு பால்வாக்கும் நிலைக்கு மகிந்த
சென்றுள்ளது மிக பெரும் ஆப்பு இந்தியாவுக்கு வைக்க இவர்கள் திட்டமிட்டுள்ளதாக குசும்பர்கள் பேசி வருகின்றனர்
பாடலாசிரியரை நெகிழ வைத்த விஷால்
பாடலாசிரியரை நெகிழ வைத்த விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், சக்ரா படத்தின் பாடலாசிரியரை நெகிழ வைத்து இருக்கிறார்.
பாடலாசிரியரை நெகிழ வைத்த விஷால்
விஷால்
தமிழில் வெளியான பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் பாடலாசிரியர்
கருணாகரன். இவர் விஷால் நடித்து முடித்துள்ள சக்ரா என்ற திரைப்படத்திற்கும் பாடல் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் பாடலாசிரியர் கருணாகரன் இன்று தனது பிறந்த நாளை
கொண்டாடினார். சக்ரா படக்குழுவினர் அவர் தனது பிறந்த நாளை
கொண்டாடியதோடு அவர்கள் முன் பிறந்தநாள் கேக்கையும் வெட்டினார்.
விஷால்
இதனையடுத்து அடுத்து இயக்குனர் எம்.எஸ். ஆனந்தன் மற்றும் நடிகர்
விஷால் ஆகிய இருவரும் கருணாகரனுக்கு கேக் ஊட்டினர். இது
குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல்
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் ‘என்னோட பாஷா’ என்கிற பாடல். இது ‘தேவதாஸ் பார்வதி’ என்கிற
படத்திற்காகப் பாடப்பட்டது. இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன்.
இந்த ‘தேவதாஸ் பார்வதி’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. எஸ்.பி.பி ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி
இருந்தாலும் அவரது கடைசிப் பாடல் இடம் பெற்றது என்கிற
வகையில் இந்தப் படத்தில் வரும் அந்தப் பாடல் உலகின் கவனம் பெற்றுள்ளது.
தேவதாஸ் பார்வதி
‘தேவதாஸ் பார்வதி’ ஒரு ஆந்தாலஜி படமாகும். அதன் கதை பிடித்துப்போய் தான் எஸ்பிபி இப்படத்திற்காகப் பாடினார்.
அந்தப் பாடலை 2020 ஜூலை இறுதியில் பாடிக் கொடுத்தார். ஆகஸ்டில் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
ஒரு உலக மகா இசைக்கலைஞனின் இறுதிப்பாடல் தன் படத்தில் இடம்
பெற்றதற்காகப் பெருமையும் துயரமும் கலந்த உணர்வு கொந்தளிப்பில் இருக்கிறார் இயக்குனர் ஆர்ஜிகே.
இந்தப்படத்தில் ராஜ் எம்.ஆர்.கே நாயகனாகவும் ஸ்மிருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் தவிர பாரதாநாயுடு, பூர்ணிமா ரவி, ராகுல் தாத்தா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை மலேசியா சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். வினோத் ராஜேந்திரன், மனீஷ் மூர்த்தி ஆகியோர் ஒளிப்பதிவு
செய்திருக்கிறார்கள். தமிழ்க்குமரன் படத்தொகுப்பு செய்துள்ளார். என்.வி.அருண் இசையமைத்துள்ளா
இலங்கையில் கொரனோவால் 343 பேர் மரணம்
இலங்கையில் கொரனோவால் 343 பேர் மரணம்
இலங்கையில் அதிகரித்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி இதுவரை 343 பேர் பலியாகியுள்ளனர்
அதே தினம் மேலும் பாதிக்க பட்ட நிலையில் நானூருக்கு
மேற்பட்டவர்கள் அடையாளம் காண பட்டுள்ளனர்
இலங்கையில் இடம் பெறும் இந்த நோயின் மரணங்களை ஆளும்
கோட்டா அரசு மூடி மறைத்து வருவதான குற்ற சட்டு வலுத்து
வருகின்றமை குறிப்பிட தக்கது
அடக்குமுறை அரசு, போராட்டத்தை நோக்கி தமிழ் பேசும் மக்களை தள்ளுகிறது-மனோ கணேசன்
அடக்குமுறை அரசு, போராட்டத்தை நோக்கி தமிழ் பேசும் மக்களை தள்ளுகிறது
பொத்துவில்-பொலிகண்டி போராட்டம் தொடர்பில் மனோ கணேசன்
தமிழ் பேசும் இலங்கையர்களின் தேசிய இருப்பை அழித்தொழிக்கும், ஒடுக்குமுறை ராஜபக்ச அரசு, தமிழ் மொழியை
பேசுகின்ற, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை கடைபிடிக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை ஜனநாயக
போராட்டங்களை நோக்கி தள்ளி விட்டுள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி
தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள்,
சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,
நடப்பு ராஜபக்ச அரசின் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற என்ற கூச்சல் நடைமுறையில், “ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம்”
என்பதில் வந்து நிற்கிறது. இதை நாம் இன்று தெளிவாக புரிந்துக்கொண்டுள்ளோம். இந்த ஏகபோக கொள்கையை நாம்
ஒருபோதும் ஏற்க முடியாது. இதை இந்நாட்டு அரசும், உலகமும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
உண்மையில் ஒளிவு மறைவு இல்லாமல் இதை இந்த அரசு செய்வதை எண்ணி நாம் மகிழத்தான் வேண்டும். உள்ளொன்று
வைத்து புறமொன்று செய்யவில்லையே, இவர்கள்..! இந்நிலையில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டி இந்த
அடக்குமுறைகளுக்கு எதிராக, இந்நாட்டில் எமது இருப்பை உறுதி செய்துக்கொள்ள நாம் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
நீண்டகாலமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய ஜனநாயக போராட்டம் இப்போது ஆரம்பித்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.
இந்த இலங்கை திருநாடு, “பன்மொழி, பன்மத, பல்லின” அடிப்படையை கொண்ட பன்மைத்துவ நாடு என்ற இலக்கு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை இந்த போராட்டம் தொடர வேண்டும்.
இந்நாட்டின் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பங்கும், இன்றைய இலங்கை நாட்டின் ஆட்சியுரிமை, இறைமை
ஆகியவற்றில் தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கின்ற மறுக்கப்பட முடியாத உரிமையும் உறுதிப்படுத்தப்படும்வரை இப்போராட்டம் தொடர வேண்டும்.
தமிழ் பேசும் மக்களையும் உள்ளடக்கியதே இலங்கை நாடு என்ற அடிப்படை உண்மையை சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்கள் ஏற்றுக்கொண்டு கண் திறக்கும்வரை இப்போராட்டம் தொடர வேண்டும்.
இதுவே ராஜபக்ச ஆட்சியின் “ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி” என்ற கொள்கைக்கு உரிய தர்க்கரீதியான அரசியல் பதிலாகும்.
இந்த ஜனநாயக போராட்டத்துக்கு எமது ஆதரவை நல்குகிறோம். ஜனநாயக போராட்ட களத்தில் நிச்சயமாக நாம் கரம் கோர்ப்போம்
.
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் தமிழ் பெண் சடலமாக மீட்பு
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் தமிழ் பெண் சடலமாக மீட்பு
வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட எருக்கலம்
கல் பகுதியில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் இன்று வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில்
சடலமாக கிடந்துள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண்ணின்
கணவர் சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கும், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினார்.
குறித்த பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் சடலத்தினை
மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் எருக்கலம்கல் பகுதியை சேர்ந்த சிவகுமார் சித்திரகலா
என்ற 36 வயதான பெண்ணே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது தலைப்பகுதியில் பலத்த காயம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளது
காஜலுக்கு நடுவில் கணவர்…. வைரலாகும் புகைப்படம்
காஜலுக்கு நடுவில் கணவர்…. வைரலாகும் புகைப்படம்
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மும்பை
தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் மாலத்தீவுக்கு தேனிலவு
சென்றார்கள். அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
இந்த நிலையில் காஜல் அகர்வால் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த புகைப்படத்தில்
இருபக்கமும் காஜல் அகர்வால் நடுவில் அவரது கணவர் இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
காஜல் அகர்வால்
சிங்கப்பூரில் இருக்கும் மேடம் டுசாட்ஸ் என்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை பார்க்க
சமீபத்தில் காஜல் தனது கணவருடன் சென்றிருந்தார். ஒரு பக்கம் காஜல்
அகர்வாலும் இன்னொரு பக்கம் மெழுகுச் சிலையுடன் உள்ள காஜலுடனும் இணைந்து கெளதம் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யார் உண்மையான காஜல் அகர்வால்?
என்று கருத்து தெரிவித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தற்கொலை படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா அகோர வான் தாக்குதல்
தற்கொலை படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா அகோர வான் தாக்குதல்
வடகிழக்கு சிரியாவில் நிலைகொண்டு அரச இராணுவத்திற்கு எதிராக
தாக்குதல் நடத்தி வரும் ஜிகாத் படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா
தாக்குதல் விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தின ,அதில் அந்த
முகாம்
முற்றாக அழிக்க பட்டுள்ளதுடன் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த
அனைவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்து உக்கிர தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
நாறிய சாப்பாட்டை அகதிகளுக்கு வழங்கிய கொடூரம் – லண்டனில் நடந்த பயங்கரம்
நாறிய சாப்பாட்டை அகதிகளுக்கு வழங்கிய கொடூரம் – லண்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் அகதிகள் தங்க வைக்க பட்டுள்ள ,அகதிகள் கொட்டலில்
பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அங்குள்ள அகதிகளுக்கு சாப்பாடு வழங்கியுள்ளார் ,
அதில் நாறிப்போன,பழுதடைந்த , அடையாளம் காணமுடியாத சாப்பாடுகள் வழங்க பட்டுள்ளன
இவர்கள் வழங்குவதை தட்டி கழிக்க முடியாது அகதிகளும் வாங்கி உண்டு
வருகின்றனர் ,ஆனால் இங்கே வழங்க பட்டுள்ள இந்த சாப்பாடு என்ன என்றே தெரியாது மர்மமாக உள்ளது
மேற்படி சம்பவம் முக்கிய ஊடகங்களில்வெளியான நிலையில் இது தொடர்பான
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இது இனவெறியுடன் செயல்
படுத்த பட்ட ஒன்றா என்றா நிலையில் மக்கள் பாரவைகள் திரும்பியுள்ளன







