Tag: தெல்லிப்பழை
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – வள்ளிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருமே நேற்று (06) கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவினரே மூவரையும் கிளிநொச்சியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்தனர்.
தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஹயஸ் வாகனம் மற்றும் இரண்டு வாள்களும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன என்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (04) தெல்லிப்பழையில் ஹயஸ் வாகனம் ஒன்றில் வந்த கும்பல் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியது. அதில் ஒருவர் காயமடைந்தார்.
தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றவர்களைத் துரத்திச் சென்று பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதும், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.மேனனின் கீழ் உள்ள உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கிளிநொச்சிப் பகுதியில் வைத்து நேற்று கைது செய்தனர்.
6 மாதங்களுக்கு முன்னர் தெல்லிப்பழை பகுதியில் வைத்து ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்குடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹையஸ் வாகனத்தின் ரயர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் அந்த ரயர் மாற்றப்பட்டதுடன் சூடு பட்ட அடையாளங்களை மறைக்க ஏனைய பாகங்களை மாற்றவும் முயன்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
தலைமறைவாகியுள்ள மூவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், கைது செய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்கான நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்
- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது
- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது
- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்
- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு
- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி
- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி
- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்
- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது
- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன
- ஞானசார தேரருக்கு மீதமுள்ள சிறைத் தண்டனையை அமல்படுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
- இந்திய மீனவர்கள் 9 பேர் கைது
யாழில் பெண்மீது வாள்வெட்டு – திருடர்கள் கொலைவெறி தாக்குதல்
யாழில் பெண்மீது வாள்வெட்டு – திருடர்கள் கொலைவெறி தாக்குதல்
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்மணி ஒருவர்
வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்துள்ளனர்.
இவர்களை கண்ணுற்ற அவர்கள் பெண்மணியை வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
தப்பி ஓடிய திருடர்ளை கண்டு பிடிக்கும் நகர்வில் ல் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .




















