Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு அவசர எச்சரிக்கை

மக்களுக்கு அவசர எச்சரிக்கை

வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அனர்த்தங்கள் நிகழுமாயின் அதுபற்றி துரித தொலை பேசி இலக்கத்தின் ஊடாக நிலையத்திற்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

துரித தொலைபேசி இலக்கம் 117 என்பதாகும்.

10 மாவட்டங்களைச் சேரந்;த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக .
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

    மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல் மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் காண்பிக்கப்படும் மேதகு திரைப்படக் காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ளது. இதற்கான முழுமையான ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். "Methagu" is a Biopic of Tamil National Leader and his leadership for the legitimate struggle of Eelam Tamils against chauvinistic oppression. The movie is based on the available source of evidence. தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம்பெற்ற தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத் தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து "மேதகு" என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்து கடந்த வருடம் (OTT) தளத்தில் (25.05.2021) வெளியாகியாகியது. அதே நேரத்தில் தமிழ்நாடு திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய ஆளுமைகளும், தமிழ் உணர்வாளர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் ”மேதகு" திரைப்படத்திற்கு தமது வாழ்த்துகளையும் நல்லத்தரவினையும் வழங்கி சிறப்பித்திருந்தனர். இவ்வேளையில் அத்திரைக்காவியத்தின் பாகம் 2 எதிர்வரும் 19ம் திகதி முதல் உலகம் முழுவதும் வெளியாகின்றது. உங்களுக்கு தெரிந்தவர்களுடன், தெரிந்த குழுமங்களில் பகிர்ந்து பல தடைகளைத் தாண்டி வரும் மேதகு 2 போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்குவோம். The movie METHAGU, which is set to be the starting point of Theera's history, was released on June 25 last year. Methagu-2 will be released on wide screens, worldwide from August 19th onwards. Congratulations and love to the crew. You can hide the story but You can't hide the history. எதிர்வரும் ஓகஸ்ட் 19, 20, 21ஆம் திகதிகளில் ஒஸ்ரேலிய நகரங்களில் மேதகு 2 திரைப்படம் திரையிடப்படவுள்ளது. முற்கூட்டிய ஆசன பதிவுகளுக்கு www.eventboss.com என்ற இணைய தளம் ஊடாக உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம். இணையதளம் ஊடாக பதிவு செய்யமுடியாதவர்கள், செயற்பாட்டாளர்களை தொடர்புகொண்டு ரிக்கற்றுக்களை பெற்றுக்கொள்ளலாம். மெல்பேர்ன் காட்சிகள் Dandenong - VIC 20 Aug 2022 Saturday 6.45pm -- Epping - VIC 21 Aug 2022 Sunday 6pm Contact: 0433 002 619, 0414 185 348, 0406 429 107 Sunshine நகர திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும் Tickets: Adult $20, Kid (under 12) $10 எனைய ஒஸ்ரேலிய நகரங்களின் மேதகு 2 திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணையத்தளம் ஊடாக அறிந்துகொள்ளவும் https://www.tccau.com/2022/08/Methagu-2.html
    Posted in இலங்கை செய்திகள்

    மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல்

    மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல்

    அவுஸ்ரேலியா ; மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் காண்பிக்கப்படும் மேதகு திரைப்படக் காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ளது. இதற்கான

    முழுமையான ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
    “Methagu” is a Biopic of Tamil National Leader and his leadership for the legitimate struggle of

    Eelam Tamils against chauvinistic oppression. The movie is based on the available source of evidence.

    தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம்பெற்ற தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத்

    தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து “மேதகு” என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்து கடந்த வருடம் (OTT) தளத்தில் (25.05.2021)

    மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல்

    வெளியாகியாகியது. அதே நேரத்தில் தமிழ்நாடு திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய ஆளுமைகளும், தமிழ் உணர்வாளர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் ”மேதகு” திரைப்படத்திற்கு தமது வாழ்த்துகளையும்

    நல்லத்தரவினையும் வழங்கி சிறப்பித்திருந்தனர். இவ்வேளையில் அத்திரைக்காவியத்தின் பாகம் 2 எதிர்வரும் 19ம் திகதி முதல் உலகம் முழுவதும் வெளியாகின்றது.


    உங்களுக்கு தெரிந்தவர்களுடன், தெரிந்த குழுமங்களில் பகிர்ந்து பல தடைகளைத் தாண்டி வரும் மேதகு 2 போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.


    The movie METHAGU, which is set to be the starting point of Theera’s history, was released on June 25 last year. Methagu-2 will be released on wide screens, worldwide from August 19th onwards. Congratulations and love to the crew. You can hide the story but You can’t hide the history.

    எதிர்வரும் ஓகஸ்ட் 19, 20, 21ஆம் திகதிகளில் ஒஸ்ரேலிய நகரங்களில் மேதகு 2 திரைப்படம் திரையிடப்படவுள்ளது. முற்கூட்டிய ஆசன பதிவுகளுக்கு

    www.eventboss.com என்ற இணைய தளம் ஊடாக உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம். இணையதளம் ஊடாக பதிவு செய்யமுடியாதவர்கள்,

    செயற்பாட்டாளர்களை தொடர்புகொண்டு ரிக்கற்றுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

    மெல்பேர்ன் காட்சிகள்
    Dandenong – VIC

    20 Aug 2022 Saturday 6.45pm

    Epping – VIC
    21 Aug 2022 Sunday 6pm
    Contact: 0433 002 619, 0414 185 348, 0406 429 107
    Sunshine நகர திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்

    Tickets: Adult $20, Kid (under 12) $10
    எனைய ஒஸ்ரேலிய நகரங்களின் மேதகு 2 திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணையத்தளம் ஊடாக அறிந்துகொள்ளவும்
    https://www.tccau.com/2022/08/Methagu-2.html

      Posted in இலங்கை செய்திகள்

      ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்

      ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்

      ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

      நாம் இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள், அந்தப்

      பொருளாதாரப் போராட்டத்தின் வெற்றிக்கு போராட்டக் களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

      இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.

      அதற்கு இளைஞர்களின் அர்ப்பணிப்பு அவசியம்.

      ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பல தரப்பினருக்கும் இடையில் இன்று (05) ஜனாதிபதி

      அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

      ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்

      ஜனநாயக விரோத அரசியலையும் வன்முறையையும் தாம் எதிர்ப்பதாகவும், ஒடுக்குமுறைக்காகவே செயற்படுபவர்கள், பல்கலைக்கழக செயற்பாட்டின்

      ஊடாக பகிடிவதையை நிறுத்தி சிறந்த சமூக ஜனநாயகத்துக்காக முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

      இன்று நமது பல்கலைக்கழகக் கட்டமைப்பு சீர்குலைந்து இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பகிடிவதை ஆகும். வேலைநிறுத்தங்கள் எல்லா காலத்திலும் தொடர்ந்தன.

      வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும், பேச்சுவார்த்தை மூலம் மத்தியஸ்த நிலைக்கு வந்து

      கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதைப் போன்று, நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

      அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்குமாறு கூறிய ஜனாதிபதி அவர்கள், அக்குழுவிற்கு

      அனைத்து மதங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது எனவும் குறிப்பிட்டார்.

      இளைஞர்களின் தேவைகளுக்காக அரச அனுசரணையுடன் செயற்படுத்துவதற்கு, கொழும்பு கோட்டை மிதக்கும் சந்தை மற்றும் பல்வேறு இடங்களை முன்மொழிய தான் விரும்புவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில்

      விக்கிரமசிங்க அவர்கள், அது தொடர்பில் முறையான ஆலோசனைகளை பெரும்பான்மையான ஆர்ப்பாட்டக்காரர்களின் பங்களிப்புடன் தயாரித்து கையளிக்குமாறும் தெரிவித்தார்.

      அந்தச் செயற்பாட்டில், கல்விக்கான நூலகங்கள், அரசியல் கல்விக்கான வசதிகள், இசை, கலை, நாடகம் போன்ற இளைஞர்களின் திறன்கள் மற்றும்

      தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு மத்திய நிலையமாக அது உருவாக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

      ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்

      அவசரகால நிலையை முடிந்தவரை விரைவில் நீக்குவது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கு முக்கியமாக

      இருப்பதைப்போன்று, தற்போதுள்ள நிலைமைகள் காரணமாக நாட்டின் நிர்வாகத்திலும் அதன் தாக்கம் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

      தற்போது LGBT சமூகம் தொடர்பில் அவசரகாலச் சட்டம் காரணமாக பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமக்கு

      தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை நீக்குவதற்கு தேவையான சட்டப் பின்னணியை தயார் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

      மேலும், பொதுமக்கள் சபைகளை ஸ்தாபிப்பது தொடர்பில் ஏற்கனவே பல தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகள் தமக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக

      சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அடுத்த வாரம் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

      ஆர்ப்பாட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்தவர்களின் கோரிக்கையானது, அமைதியான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள

      ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சட்ட விரோதமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ கைது செய்வதைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதாகும்.

      தற்போது எந்த தவறும் செய்யாது தளத்தில் இருக்கின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்படுவதால் அங்கிருந்து வெளியே செல்ல பயப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

      இப்போராட்டத்தின் மிகவும் கடினமான பகுதி தற்போது ஆரம்பமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் சிந்தனைகளிலும் புரட்சி ஏற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

      இளம் தலைமுறையினர் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், அரசியலமைப்பு ரீதியில் சாதகமான பலனைப் பெறுவதே தமது எதிர்பார்ப்பு

      எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் உட்பட நாட்டை முறையான மற்றும் ஸ்திரமான நிலைக்கு

      கொண்டு வர விரைவான சீர்திருத்த செயல்முறையை நிறுவ வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.

      நாட்டின் முன்னேற்றத்தை விரும்புவோரின் ஆர்ப்பாட்டத்தின் முன்னேற்றம் கலந்துரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் செய்துகொள்ளப்படுகின்ற இணக்கப்பாடுகளில் அடங்கியுள்ளதாகவும், அதற்காக ஜனநாயக

      நடவடிக்கைகள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

      போராட்டத்தின் மூலம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பல பெரிய வெற்றிகளை இளைஞர்கள் பெற்றுத் தந்தது தங்களது தலைமுறையின்

      தனிச்சிறப்பு என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் ஜனநாயகத்தைப் போற்றும் மக்களால் இந்தப் போராட்டம் மதிக்கப்படுதாகவும்,


      அதன் காரணமாகவே நமது நாடு உலகின் கவனத்தைப் பெற்றதாகவும் அவர்கள் கூறினர்.

        கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா
        Posted in இலங்கை செய்திகள்

        கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா

        கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா

        கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா நேற்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

        கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த எஸ்.நவநீதன் மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக பணிப்பாளராக


        கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு (திருமதி) எஸ்.சரணியா நியமிக்கப்பட்டுள்ளார்.

        இவர், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பதில் உதவிப் பணிப்பாளராகவும்,


        கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மேலதிக


        ஆணையாளராகவும் கடமையாற்றி வந்த நிலையிலேயே ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

        பைஷல் இஸ்மாயில் –

          அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் 46 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பல்
          Posted in இலங்கை செய்திகள்

          அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் 46 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பல்

          அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் 46 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பல்

          இலங்கையில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் மீள இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

          அவுஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரி ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆசை படும் இலங்கையர்கள் அந்த நாட்டில் விசா பெறும் விதிகளை தெரிந்து கொள்ள மறந்து விடுகின்றனர்.

          அவுஸ்ரேலியா சென்றால் உடனே வேலை செய்திடலாம் என இலங்கையர்கள் எண்ணுகின்றனர் .

          வேலை செய்ய வேண்டுமெனின் அங்கு விசா வேண்டும் விசா இலலது எப்படி வேலை செய்ய முடியும் ..?

          இவ்வாறான கேள்விகளுக்கு விடையை தெரிந்து கொண்டவர்கள் வெளிநாட்டு வாழ்க்கையை வேண்டாம் என ஒதுங்கி விடுகின்றனர் .

          ஆனால் இலங்கையில் இருந்து வெளி நாட்டு வாழ்க்கையில் மோகம் கொண்டுள்ளவர்கள் பல லட்சங்களை செலுத்தி அவுஸ்ரேலியா வந்தும் மீள் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டு விடுகின்றனர்.

          வெளிநாடுகளில் வாள்பவர்கள் பலர் சோற்றுக்கு வழியில்லாமல் திண்டாடிய வண்ணம் உள்ளனர் .

          அவ்வாறான நிகழ்வுகளை தெரிந்து கொள்ளாது வெளிநாட்டு மோகத்தில் ஆபத்தான கடல்வழியாக இலங்கை செல்லும் மக்களுக்கு அவுஸ்ரேலியா சாட்டை அடி வழங்கியுள்ளது.

          இவ்வாறு தொடர்ந்து இலங்கைக்கு மக்களை நாடுகடத்த வருகின்ற பொழுதும் சிலரது போலியான ஆசை வார்த்தைகளை நம்பி இவ்விதம் மக்கள் சென்று வருவது கவலை தருகிறது.

            Posted in இலங்கை செய்திகள்

            யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது

            யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது

            யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட

            குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கைது நேற்று (04) ஊர்காவற்துறை பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர்.

            புங்குடுதீவு 09 ஆம் வட்டாரத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி

            ஒன்றினால் துண்டித்து, நாயின் முகத்தினை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து கைக்கோடாரியால் கொத்தி முகத்தை சிதைத்து படுகொலை செய்துள்ளனர்.

            தமது கொடூரமான செயலினை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.

            யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது

            இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

            அதன் அடிப்படையில் சம்பவத்தை காணொளி எடுத்தவர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் எனும் குற்றத்தில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

            அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் ,


            அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

              இலங்கை பிரிட்டன் இராணுவ தளபதிகள் சந்திப்பு
              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கை பிரிட்டன் இராணுவ தளபதிகள் சந்திப்பு

              இலங்கை பிரிட்டன் இராணுவ தளபதிகள் சந்திப்பு

              கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான பிரித்தானிய இராணுவத்தின் கேணல் போல் கிளேட்டன் (3)

              பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

              இச்சந்திப்பின் போது லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் ஆகிய இருவரும் இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையில் நிலவும்

              நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

              இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சித் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வெவ்வேறு பரிமாற்ற

              நிகழ்ச்சிகளில் இரு நாட்டு ஆயுதப்படைகளின் பங்கேற்பு குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

              இந்சந்திப்பின் இறுதியில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தும் வகையில்

              பிரித்தானிய பாதுகாப்பு இணைப்பாளருக்கு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

              இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஸ்வர்ண போதோட்ட அவர்களும் அன்றைய சந்திப்பில் கலந்துகொண்டார்.
              இலங்கை இராணுவம்

                காலிமுகத்திடல் மக்களை மிரட்டும் ரணில்
                Posted in இலங்கை செய்திகள்

                காலிமுகத்திடல் மக்களை மிரட்டும் ரணில்

                காலிமுகத்திடல் மக்களை மிரட்டும் ரணில்

                காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் உள்ள அனுமதியற்ற நிர்மாணங்கள் மற்றும் பயிர் செய்கை முதலானவற்றை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று மாலை 05.00 மணியுடன் நிறைவடைகிறது.

                கோட்டைப் பொலிசார் நேற்றுமுன்தினமும் நேற்றிரவும் இந்த பகுதிக்கு சென்று இவற்றை பார்வையிட்டதுடன் போராட்டக்காரர்களுக்கு இது குறித்து அறிவித்தனர்.

                அத்துடன், நாட்டில் தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு அமைவாகவும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையிலும் செயற்பட வேண்டும் எனவும் கோட்டை பொலிஸார் மேலும் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

                இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                கொழும்பு ரயில் சேவைகள் இரத்து
                Posted in இலங்கை செய்திகள்

                கொழும்பு ரயில் சேவைகள் இரத்து

                கொழும்பு ரயில் சேவைகள் இரத்து

                மலையக ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இடம்பெறவிருந்த பல ரயில் சேவைகள் இன்று(05) இரத்து செய்யப்பட்டுள்ளன.

                நாவலப்பிட்டி மற்றும் ஹட்டனுக்குமிடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவே இதற்கு காரணம்.

                இதற்கமைவாக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு காலை 5.55மணி, 8.30மணி மற்றும் 9.45 மணிக்குக்கு சேவையில் ஈடுபடவிருந்த ரயில்களும்,

                பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு காலை 5.45மணி,
                8.30மணி மற்றும் 10.15மணிக்கு புறப்படவிருந்த ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

                  கவிழ்ந்த பஸ் 12 பேர் காயம் கதறிய பயணிகள்
                  Posted in இலங்கை செய்திகள்

                  கவிழ்ந்த பஸ் 12 பேர் காயம் கதறிய பயணிகள்

                  கவிழ்ந்த பஸ் 12 பேர் காயம் கதறிய பயணிகள்

                  பூண்டுலோயாவிலிருந்து கம்பளை நகரை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பூண்டுலோயா – கொத்மலை பிரதான வீதியில் மல்லாவ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

                  பூண்டுலோயா பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கம்பளை பகுதிக்கு சென்ற குறித்த பஸ் இன்று மாலை 4 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

                  இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 14 பேரில் ஒருவர் உயிரிழந்ததுடன், 12 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

                  வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதன் காரணமாக பஸ் சாரதிக்கு பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

                  கவிழ்ந்த பஸ் 12 பேர் காயம் கதறிய பயணிகள்

                  இவ்விபத்தில் காயமடைந்த 12 பேரும், கொத்மலை வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின் இதில் சிலர் மேலதிக

                  சிகிச்சைக்காக கம்பளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

                  விபத்தில் உயிரிழந்தவர் புஸ்ஸலாவ நவகடதொர பகுதியை சேர்ந்த தம்மிக்க ஹேமந்த யாப்பா (வயது 56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                  இவ்வாறு காயமடைந்தவர்களில் மூன்று பெண்கள் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

                  இவ்விபத்து தொடர்பில் பூண்டுலோயா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் இருவர் சுட்டு கொலை

                    இலங்கையில் இருவர் சுட்டு கொலை

                    தென் இலங்கை பகுதியில் இருவர் மர்ம ஆயுத தரிகளினால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .

                    துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்ட சடலங்கள் உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது.

                    சமீப காலங்களாக இவ்வாறான துப்பாக்கி சூட்டு படுகொலைகள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கைக்கு உதவுவோம் இந்தியா உறுதி

                      இலங்கைக்கு உதவுவோம் இந்தியா உறுதி

                      இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவும் என இந்தியா வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார் .

                      கம்போடியாவில் இரு நாடுகளும் இடையில் இடம்பெற்ற சந்தின்பொழுது இந்த விடயம் உறுதிப்படுத்த பட்டு தெரிவிக்க பட்டுள்ளது.

                      இலங்கை தமது நண்பன் என இந்தியா தெரிவித்துள்ளது .பலத்த நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்த பொழுது உணவு மற்றும் எரிபொருள்

                      மருத்துவ உதவிகளை இந்தியா முன்னின்று வழங்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

                        Posted in இலங்கை செய்திகள்

                        ரணிலுக்கு வாக்களித்த கூட்டமைப்பில் சிலர் ரகசியம் அம்பலம்

                        ரணிலுக்கு வாக்களித்த கூட்டமைப்பில் சிலர் ரகசியம் அம்பலம்

                        கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

                        இதன்போது, குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் அமைதி காத்ததாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

                        தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது.

                        ரணிலுக்கு வாக்களித்த கூட்டமைப்பில் சிலர் ரகசியம் அம்பலம்

                        ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

                        இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

                        அத்துடன், ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதனை

                        தீர்மானிக்க முடியும் என கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் பேரூந்து கட்டணங்கள் திடிரென குறைப்பு

                          இலங்கையில் பேரூந்து கட்டணங்கள் திடிரென குறைப்பு

                          இலங்கையில் இன்று நள்ளிர முதல் பேரூந்து கட்டணங்கள் குறைக்க படுவதாக அறிவிக்க பட்டுள்ளது.

                          மக்கள் எழுச்சியை தடுக்க இவ்விதமான விலை குறைப்பு நடவடிக்கையில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார்.

                          எரிபொருள் விலையினால் பேரூந்து கட்டணங்களை விலை அதிகரித்தது.

                          ஆனால் தபோது அதே பேரூந்து விலை கட்டணங்கள் இன்று நாளிரவு குறைக்க படும் என அறிவிக்க பட்டுள்ளது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            காலிமுக திடல் போராட்ட கூடாரங்களை அகற்ற பொலிஸ் நடவடிக்கை பதட்டம் அதிகரிப்பு

                            காலிமுக திடல் போராட்ட கூடாரங்களை அகற்ற பொலிஸ் நடவடிக்கை பதட்டம் அதிகரிப்பு

                            இலங்கை காலிமுக திடல் பகுதியில் உள்ள கோட்டா கோ காம போராட்ட காரர்கள் அமைத்துள்ள கூடாரங்களை அகற்ற போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

                            ஆனால் அது கடந்து போட காரர்கள் அங்கு உள்ளதால் மக்கள் பொலிசாருக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.

                            ரணில் போராட்டத்தை நசுக்கும் முயசியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது.

                            காலிமுக திடல் போராட்ட கூடாரங்களை அகற்ற பொலிஸ் நடவடிக்கை பதட்டம் அதிகரிப்பு.

                            இலங்கை காலிமுக திடல் பகுதியில் உள்ள கோட்டா கோ காம போராட்ட காரர்கள் அமைத்துள்ள கூடாரங்களை அகற்ற போலீசார் உத்தரவிட்டுள்ளனர்

                            ஆனால் அது கடந்து போட காரர்கள் அங்கு உள்ளதால் மக்கள் பொலிஸாருக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது

                            ரணில் போராடடத்தை நசுக்கும் முயசியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது.

                            இலங்கை காலிமுக திடல்பகுதியில் உள்ள கோட்டா கோ காம போராட்ட காரர்கள் அமைத்துள்ள கூடாரங்களை அகற்ற போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

                            ஆனால் அது கடந்து போட காரர்கள் அங்கு உள்ளதால் மக்கள் பொலிசாருக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.

                            ரணில் போராட்டத்தை நசுக்கும் முயசியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              ஜனாதிபதியை தமிழ் முற்போக்கு கூட்டணி 11ம் திகதி சந்திக்கும் மனோ கணேசன்

                              ஜனாதிபதியை தமிழ் முற்போக்கு கூட்டணி 11ம் திகதி சந்திக்கும். நாளை ஐமகூ-ஜனாதிபதி சந்திப்பிலும் இடம்பெறும்
                              – தமுகூ தலைவர் மனோ கணேசன்

                              தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆகஸ்ட் 11ம் திகதி நேரடியாக சந்தித்து மலையக தமிழ் இலங்கையர்களின் அபிலாசைகள் தொடர்பில் குறிப்பாகவும்,

                              தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவாகவும் கலந்துரையாடும். “பொருளாதார மற்றும் சமூக

                              ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான தேசிய சர்வகட்சி வேலைத்திட்டம் ஒன்றினை செயல்படுத்துதல்” தொடர்பில், ஜனாதிபதி தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு விடுத்துள்ள அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெறும்.

                              அதேவேளை, நாளை ஆகஸ்ட் 5ம் திகதி ஐக்கிய மக்கள் கூட்டணியின்
                              தூதுக்குழுவிலும் இடம்பெற்று பொதுவான தேசிய பிரச்சினைகள்


                              தொடர்பிலும் கலந்துரையாடுவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

                                மன்னாரில் 14 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா மீட்பு
                                Posted in இலங்கை செய்திகள்

                                மன்னாரில் 14 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா மீட்பு

                                மன்னாரில் 14 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா மீட்பு

                                மன்னார் வெலிபர பகுதியில் கடத்தல்காரர்களால் புதைக்கப்பட்ட சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

                                வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான தம்மென்னா மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்

                                போதே குறித்த கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

                                இருபது பொட்டலங்களில் கவனமாக பொதி செய்யப்பட்டு கடத்தல்காரர்களால் புதைக்கப்பட்டிருந்த 49 கிலோ 380 கிராம் கேரள கஞ்சா கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

                                குறித்த கேரள கஞ்சா கையிருப்பு தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  யானை தாக்கி ஒருவர் மரணம்

                                  யானை தாக்கி ஒருவர் மரணம்

                                  மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தளவாய் காட்டுப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                                  இந்த சம்பவத்தில் பட்டிப்பளை பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட அருள்நேசபுரம் கடுக்காமுனை கிராமத்தில் வசிக்கும் 57 வயதுடைய

                                  ராசசிங்கம் மோசிகவாகனம் என்பவரே காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

                                  கடுக்காமுனை பகுதியில் இருந்து விறகு எடுப்பதற்காக 3 பேர் திக்கோடை தளவாய் காட்டுப்பகுதிக்கு சென்ற போது மறைந்திருந்த காட்டு யானை துரத்தியுள்ளது.

                                  யானை தாக்கி ஒருவர் மரணம்

                                  இதன்போது ஏனைய இருவரும் ஓடி தப்பியுள்ள நிலையில் ஒருவர் காட்டு யானை தாக்குதலினால் உயிரிழந்துள்ளார்.

                                  சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

                                  காட்டு யானைகளின் தாக்குதல்கள் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ச்சியான மரணங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் டக்கிளஸ் அந்தர் பெல்ட்டி

                                    தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் டக்கிளஸ் அந்தர் பெல்ட்டி

                                    தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் சர்வ கட்சி அரசொன்றிற்கான பொது வேலைத்திட்டத்தில்

                                    உள்வாங்கப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


                                    சர்வகட்சி அரசொன்றை அமைப்பதற்கான பொது வேலைத்திட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பங்களிப்பை கோரிக்கையாக விடுத்து,

                                    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்திற்கு பதிலளித்து தமிழ் மக்களின் சார்பில் பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து எழுதிய பதில் கடிதத்திலேயே இவ்வாவாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

                                    நாட்டில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தீர்க்கவுமான சவாலான பணியை முன்னெடுக்க

                                    அனைத்து அரசியல் கட்சிகள், நிபுணர்கள், சிவில் சமூகங்கள் போன்றவற்றின் பங்கேற்புடன் ஒரு பொது வேலைத்திட்டத்தை செயல்படுத்தும் தங்களின் கடுமையான முயற்சியை பாராட்டுகிறேன்,

                                    தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் டக்கிளஸ் அந்தர் பெல்ட்டி

                                    நாம் 19ஆவது திருத்தம் மற்றும் பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவை மீள அறிமுகப்படுத்துவதற்கும் மேலதிகமாக ஒரு பரந்த உரையாடலுக்காக

                                    முயற்சிப்பதையிட்டு எமது பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் பின்வரும் 10 அம்சக் கோரிக்கைகளையும் உங்கள் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்ளுமாறு முன்மொழிகிறேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

                                    அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்மொழியப்பட்டுள்ள பத்து அம்சக் கோரிக்கைகள் பின்வருமாறு:

                                    1. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டமியற்றுதல்.
                                    2. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் அரசியலமைப்பு விதிகளை முழுமையாக அமுல்படுத்துவதை மேற்பார்வையிடும் ஒரு குழுவை அமைப்பது.
                                    3. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதை உறுதி செய்வதற்குத் தேவையான நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை இந்தக் குழு பரிந்துரைக்க வேண்டும்.
                                    4. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது குற்றம் சாட்டப்பட்டு நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்.
                                    5. வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவித்தல்.
                                    6. வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புகள், சாகுபடி செய்யக்கூடிய, மீன்வளர்ப்பு விவசாயத்திற்குப் பயன்படுத்தக்கூடிய
                                    7. மற்றும் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் நிலங்களை வன காப்பகங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக நாடளாவிய ரீதியில் பல புகார்கள் உள்ளன.

                                    இது வடக்கில் பயிர்ச்செய்கையையும், நன்னீர் மீன்வளர்ப்பையும் தடுத்து சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே இவ்விவகாரங்கள் தொடர்பாக 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

                                    1. தொல்லியல் திணைக்களம், தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி, தொல்பொருள் நினைவுச் சின்னங்களாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்புகள்
                                    2. எதுவும் வெளியிடப்படாமல், வடக்கு மற்றும் கிழக்கில் தொல்லியல் பெறுமதிமிக்க இடங்களாக ஒதுக்கியுள்ளதாக பல முறைப்பாடுகள் உள்ளன. தொல்பொருள் இடங்களாக முறையாக அறிவிக்கப்படாத போதிலும், அந்த இடங்களுக்குள் மக்கள் நுழைவதை திணைக்களம் தடுக்கிறது.

                                    தொல்லியல் மற்றும் தொல்பொருள் இடங்களின் நினைவுச்சின்னங்களை அடையாளம் காணும் திணைக்கள அதிகாரிகளின் எந்தவொரு முயற்சியிலும் வடக்கு மற்றும்

                                    கிழக்கில் தொல்பொருள் மதிப்புமிக்க இடங்களாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்னர், அப்பகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதிகாரிகள் இடம்பெறுவதுடன், குறிப்பாக தொடர்புடைய இனக்குழுக்களின் ஆலோசனையையும் பெற வேண்டும்.

                                    1. பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலிஸ் சேவை ஆகியவற்றில் நாட்டின் இன விகிதாசாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்வதற்கான திட்டத்தை உருவாக்குதல்.
                                    2. அரச விழாக்களில் இரு மொழிகளிலும் (சிங்களம் மற்றும் தமிழ்) தேசிய கீதத்தைப் பாடுவது.
                                    3. தனிநபர்கள், புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மீதான தடையை நீக்குதல்.
                                    4. 18 வயதை அடைந்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வசிப்பவர்கள் மற்றும் வேலைக்காக வெளிநாட்டில் இருப்பவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருதல்.

                                    5. போன்ற கோரிக்கைகளை முன்மொழிந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதானது உங்களது பொது வேலைத்திட்ட
                                      முயற்சிக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவும் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      வெள்ளவத்தையில் சிறுமியை காணவில்லை

                                      வெள்ளவத்தையில் சிறுமியை காணவில்லை

                                      வெள்ளவத்தை– டபிள்யு.ஏ.டி. சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                                      குறித்த சிறுதி நேற்று (2)அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், 3 நாள்களுக்கு முன்னரே ரன்முத்துகல சிறுவர் காப்பகத்திலிருந்து வெள்ளவத்தை சிறுவர்

                                      காப்பகத்துக்கு அழைத்து வரப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                      குறித்த 15 வயதான குறித்த சிறுமி, தியகடுவ, மஹகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ள
                                      வெள்ளவத்தை பொலிஸார் சிறுமியைத் தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.