Tag: யாழில்
யாழில் மிதக்கும் சர்வதேச விளையாட்டு மைதானம் அனுரா பொய்அம்பலம்
யாழில் மிதக்கும் சர்வதேச விளையாட்டு மைதானம் அனுரா பொய் அம்பலம்
யாழில் மிதக்கும் சர்வதேச விளையாட்டு மைதானம் அனுரா பொய் அம்பலம் .அனுரவிற்கு நன்றாக தெரியும் இந்த தாழ் நிலப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க முடியாது என்று.
யாழ்ப்பாண மக்களை முட்டாளாக்க
அமைக்க விரும்பாததாலேயே இப்படியான திட்டத்தை விளம்பரத்திற்காக யாழ்ப்பாண மக்களை முட்டாளாக்க
செய்தார் என்பதற்கு இன்று இங்கு சூழ்ந்து இருக்கும் வெள்ளம் ஒரு சாட்சியமாகிறது .
ஆக தமிழர்களை எவ்வாறு எல்லாம் அனுராவின் அரசு ஏமாற்றி பிழைக்கிறது என்பதற்கு இந்த விடயம் மிக முக்கிய ஒன்றாக மற்றம் பெற்றுள்ளது .
தமிழ் மக்களை ஏமாற்றி நாட்களை கழிக்கும் ஜேவிபி
தமிழ் மக்களை ஏமாற்றி நாட்களை கழிக்கும் ஜேவிபியின் பயங்கரவாத சிந்தனை இதன் ஊடாக அம்பல பட்டுள்ளது நன்றாக தெரிகிறது அல்லவா மக்களே .
சிங்கள பேரினவாத பூதம் எமக்கு எதுவும் செய்து விடாது என்பதே இதன் ஊடக நிரூபிக்க படுகிறது .

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- வெடிக்காத குண்டுகளை மீட்கும் ஈரான்

யாழில் அலையெனத் திரண்டு வந்த மக்கள்
யாழில் அலையெனத் திரண்டு வந்த மக்கள் ,யாழில் அலையெனத் திரண்டு வந்த மக்கள், மாவீரர் நாள் | Maaveerar Naal in Jaffna
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- வெடிக்காத குண்டுகளை மீட்கும் ஈரான்

யாழில் தலைவர் பிறந்த நாள் வெடிகொளுத்தி கொண்டாட்டம்
யாழில் தலைவர் பிறந்த நாள் வெடிகொளுத்தி கொண்டாட்டம்
யாழில் தலைவர் பிறந்த நாள் வெடிகொளுத்தி கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது .
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் ஒன்று கூடிய மக்கள் கேக் வெட்டி தலைவர் 71 வது பிறந்த நாள் நிகழ்வை கொண்டாடியுள்ளனர் .
அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்ட யாழ்ப்பாணத்தில் இந்த பிறந்த நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது மிக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.



யாழில் வாள்வெட்டு வாலிபன் காயம்
யாழில் வாள்வெட்டு வாலிபன் காயம்
யாழில் வாள்வெட்டு வாலிபன் காயம் அடைந்துள்ளதா யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.Youth injured in sword attack in Jaffna
திடீரென மார்ம நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் Suddenly, a sword attack by religious people
மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த இளைஞன் மீது திடீரென மார்ம
நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயம் அடைந்த வாலிபன் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 35 வயது உடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த வாள்வெட்டு காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வாள்வெட்டிற்கான காரணம் இருதரப்புக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடே காரணமென போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனவே வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் எங்கும் போலீசார் ராணுவம் Police and military everywhere in Jaffna
யாழ்ப்பாணம் எங்கும் போலீசார் ராணுவம் குறிக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் வந்து மக்களுக்கு முன்பாக இந்த வாள்வெட்டுதாக்குதலை நடத்த பட்டுள்ளது .
அது வரை காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
எனவே இந்த வாழ்வட்டு தாக்குதலின் பின்புலத்தில் அரசியல் மறைந்திருப்பதும் அரசியல்வாதிகள் ஆதரவு இருப்பதும் அப்பட்டமாக தெரிகிறது.
அனுரா அரசில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை
யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை
யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை ,யாழில் தீவூட்டி மூதாட்டி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உறக்க இன்மை காரணமாக அவதியுற்று வந்த மூதாட்டி
உறக்க இன்மை காரணமாக அவதியுற்று வந்த மூதாட்டி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது தற்கொலை செய்துள்ளார் .
மூதாட்டி தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை
வீட்டில் வசித்து வந்த 75 வயது மதிக்க தக்க மூதாட்டிய தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் மன அழுத்தம் மற்றும் வாழ்வியல் புறச் சூழல்கள் என்பன, ஒரு மனிதனை பாடா படுத்துகிறது என்பதை இந்த மூதாட்டி உடைய மரணம் எடுத்துக்காட்டுகிறது.
மேற்படி மூதாட்டியின் தற்கொலை சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்புத்தையும் ஏற்படுத்தி உள்ளதுடன் ,இவ்வாறான நிலவரங்கள்
எழுவதற்கான காரணம் என்ன என்பதை அதற்கான தீர்வு என்ன என்பதை இப்பொழுது கேள்வியாக எழுப்பி நிற்கிறது .
யாழில் கோரவிபத்தில் ஒருவர் பலி
யாழில் கோரவிபத்தில் ஒருவர் பலி
யாழில் கோரவிபத்தில் ஒருவர் பலி யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மிருசுவில் பகுதியில் நேற்று (10) இரவு நான்கு
வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி
வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
கிளிநொச்சி திசையிலிருந்து யாழ் திசை நோக்கி பயணித்த காரும் – யாழ் திசையிலிருந்து கிளிநொச்சி திசை நோக்கிப் பயணித்த டிப்பர், கூலர்
வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் 35 வயதான நபரொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான வாகனங்கள்
விபத்துக்குள்ளான வாகனங்கள் கடுமையாக சேதமடைந்ததுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு, அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் கத்திகுத்து ஒருவர் பலி
யாழில் கத்திகுத்து ஒருவர் பலி
யாழில் கத்திகுத்து ஒருவர் பலி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
புங்குடுதீவு முதலாம் வட்டாம்
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 46 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர்
காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
யாழில் துண்டான பெண்ணின் கால்
யாழில் துண்டான பெண்ணின் கால்
யாழில் துண்டான பெண்ணின் கால் ,யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இன்று (07) யுவதி ஒருவர் ரயிலில் சிக்கி ஒரு காலை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த யுவதி தாமதமாக வந்ததால், புறப்படத் தொடங்கிய ரயிலில் ஏற முயன்றபோது கால் தடுமாறி விழுந்தார்.
இதனால், அவரது ஒரு கால் ரயிலில் சிக்கி துண்டானதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த யுவதி உடனடியாக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம்
யாழில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம்
யாழில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம் ,யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (07) மாலை கரையொதுங்கியுள்ளது.
உயிரிழந்தவர் காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று
சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் பெண் போராளி தற்கொலை
யாழில் பெண் போராளி தற்கொலை
யாழில் பெண் போராளி தற்கொலை ,யாழில் திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டி
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவர் தனது சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மன விரக்தியில் இன்று மதியம்
உணவருந்திய பின்னர் தனக்குத்தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டி உயிர்மாய்த்துள்ளார்.
திடீர் மரண விசாரணை அதிகாரி
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழில் 3519 வேட்பாளர்கள் போட்டி
யாழில் 3519 வேட்பாளர்கள் போட்டி
யாழில் 3519 வேட்பாளர்கள் போட்டி யிட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ் மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக, 3519 வேட்பாளர்கள் போட்டியிட்டதாக தெரிய வருகிறது.
இதற்காக யாழ்ப்பாணத்தில் 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன .
இந்த தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நான்கு லட்சத்தி 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று இடம்பெற்ற இந்த தேர்தலில் பல கட்சியைச் சேர்ந்தவர் போட்டியிட்டார்கள் .
243 சுயாட்சி குழு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3519 பேர் களத்தில் இறங்கியதே மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இத்தனை ஆயிரம் பேர் வேட்ப்பாளராக இம்முறை களமிறங்கிய போதும் , இவர்கள் எங்கு இருந்தார்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி மட்டும் இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.
ஆக அரசியல் களம் ஒரு சாக்கடையாக மாறி உள்ளது. இந்த வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பு காண்பிப்பதே இவை எடுத்துக்காட்டுகிறது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

யாழில் விபச்சார விடுதி நால்வர் சிக்கினர்
யாழில் விபச்சார விடுதி நால்வர் சிக்கினர்
யாழில் விபச்சார விடுதி நால்வர் சிக்கினர் ,யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று, பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றே இவ்வாறு புதன்கிழமை (09) அன்று யாழ். மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.
இதன்போது குறித்த வீட்டின் உரிமையாளரான 68 வயதுடைய நபர் மற்றும் அளவெட்டி, குருநகர், கொடிகாமம் போன்ற பிரதேசங்களை சேர்ந்த 40, 42, 53 வயதுடைய மூன்று பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் கைதான நால்வரையும் சாவகச்சேரி பொலிஸார் ஊடாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழில் சிறுமியை கட்டி வைத்து கொடூரம்
யாழில் சிறுமியை கட்டி வைத்து கொடூரம்
யாழில் சிறுமியை கட்டி வைத்து கொடூரம் ,வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர், நேற்று முன்தினம் (23) மாலை, அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார்.
இதன்போது, இனிப்பு வகையை கையாடியதாகக் கூறி, கடையின் உரிமையாளரான ஒரு பெண், சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உடல் காயங்களுக்கு உள்ளான சிறுமி, அன்று இரவே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்து, தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, வைத்தியசாலையில் உள்ள பருத்தித்துறை பொலிஸார் மூலம் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மருதங்கேணி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றபோது, அவர் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தாக்கியதாகக் கூறப்படும் பெண்ணின் வீட்டிற்கு பொலிஸார் சென்றபோது, வீடு பூட்டியிருந்ததால், தொலைபேசி மூலம் அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பு ஒன்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் தொலைபேசி வழியாக முறையிட்டுள்ளது
யாழில் வேட்பு மனுக்களின் முழு விவரம்
யாழில் வேட்பு மனுக்களின் முழு விவரம்
யாழில் வேட்பு மனுக்களின் முழு விவரம் ,யாழ். மாவட்டத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான முழுமையான விபரத்தை யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை தேர்தலுக்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சைக் குழுக்களுமாக கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.
இதில் 136 கட்சிகளும் 23 சுயேட்சைக் குழுக்களும் நியமனம் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தன.
136 கட்சிகளுடைய நியமன பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனம் பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, 22 கட்சிகளுடைய நியமனம் பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனம் பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யாழ் மாநகர சபைக்கான வேட்புமனுவில் தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஆகிய கட்சிகளுடைய வேட்புமனுக்களும், ஞானப்பிரகாசம் சுலக்சன், நரேந்திரன் கௌசல்யா ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை நகர சபைக்கான வேட்புமனுவில் ராமச்சந்திரன் சுரேன், யோகேஸ்வரி அருளானந்தம் ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை நகர சபைக்கான வேட்புமனுவில் அனைத்து வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
சாவகச்சேரி நகர சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கட்சியினுடைய வேட்புமனுவும், மகாலிங்கம் சதீஸ், பெரியான் சிவகுருநாதன் ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
காரைநகர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வேலணைப் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கட்சியினுடைய வேட்புமனுவும், துரைராஜா சுஜிந்தன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், சவரிமுத்து ஸ்டாலின் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஸ்ரீ இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், மக்கள் போராட்ட முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும், தவம் தவனிலாவின் தாசன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் அல்பிரட் ரெஜி ராஜேஸ்வரன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரி பிரதேச சபைக்கான வேட்புமனுவில், வைத்தியலிங்கம் ஜெகதாஸ் என்பவர் தலைமையிலான சுயேச்சை குழுவும் குணரட்ணம் குகானந்தன் என்பவர் தலைமையிலான சுயேட்சை குழுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
நல்லூர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் திலீப் தீபாரஞ்சன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி
யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி
யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி ,தமிழர் பகுதியில் சிங்கள இனவாத அரசு தமிழருக்கு எதிரான நய வஞ்ச தாக்குதலை நடத்தி வருகிறது .
அதன் ஒரு எதிரொலியாக இந்த சம்பவம் பார்க்க படுகிறது .
ஆளுகின்ற அனுரா ஆட்சியில் தமிழர்கள் மீது வன்மம் கொண்டு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன .
யாழ்ப்பாணத்தில் போலீசாரை தாக்கிய அந்த வீர தமிழ் மகன் தற்போது தலை மறைவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி காட்சி தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது .
பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் அனுரா ஆட்சியின் வண்டவாளம் தமிழர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ,அனுராவுக்கு எதிரான கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன்
யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன்
யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் ,யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் திங்கட்கிழமை (17) நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது
வழக்கு ஒன்றை இல்லாது செய்வதாக கூறி, யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரின் மகன் ஒருவர்
20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுள்ளார். இந்நிலையில் இலஞ்சம் வழங்கியவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த வகையில் குறித்த பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் இலஞ்சம் பெற்ற நபரை கைது செய்யுமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர், சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (17) முன்னிலையாகினர்.
இதன்போது குறித்த சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
யாழில் மாணவர்களுக்கு மாவா விற்பனை
யாழில் மாணவர்களுக்கு மாவா விற்பனை
யாழில் மாணவர்களுக்கு மாவா விற்பனை ,யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா போதைப்பொருள் கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்
வண்ணார் பண்ணை பகுதியில் வீடொன்றில் வைத்து, மாணவர்களை இலக்கு வைத்து மாவா பாக்கினை இளைஞன் ஒருவர் விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்
அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , குறித்த வீட்டில் இருந்து, கஞ்சா கலந்த 4 kg 250g மாவா பாக்கு, பீடித்தூள் 12 kg 500g, மற்றும் வாசனை திரவியம் 24 ரின்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.
அதனை அடுத்து மாவா பாக்கினை தயாரித்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டில் இளைஞனை கைது செய்த பொலிஸார் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள்
யாழில் மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள்
யாழில் மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் ,யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப் பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக அரசாங்கம் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என யாழ்.
மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அரியாலை சித்துப் பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் நீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சித்துப் பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசாங்கம் நீதியான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்து தொடர்பில் அமைச்சரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மயானத்தில் தகன மேடை அமைப்பதற்காகக் குழி தோண்டப்பட்ட போது மனித எச்சங்கள் வெளிவந்தன. குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்திய நிலையில் குறித்த இடத்தை நீதிபதி மற்றும் சட்ட வைத்திய அதிகாரி சென்ற பார்வையிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது, மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நீதிபதி கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராய உள்ளதாக அறிந்தேன்.
ஆகவே கடந்த காலங்களைப் போன்று நீதிமன்ற விவகாரத்தில் நாங்கள் தலையிடப் போவதில்லை அரசாங்கம் என்ற வகையில் நீதித்துறையின் செயல்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்
யாழில் ஐவர் கைது
யாழில் ஐவர் கைது
யாழில் ஐவர் கைது ,40,000 போதை மாத்திரைகளை கைவசம் வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்
யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்
யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல் ,யாழ்ப்பாணம் கோப்பாய் போலீஸ் காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நபர் ஒருவருக்கு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
பேக்கரி ஒன்று வந்த ஒருவர் கீழே இருந்த தங்கத்தை வெதுப்பக ஊழியரிடம் வழங்கி இருக்கிறார் இது என்னை எடுத்து தினமும் வந்து அந்த நகை கூறி அவரிடம் வழங்கினார்கள் என கேட்டுள்ளார் .
இதனால் ஆதரவு பெற்று அவர்கள் அவரைக் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வீதியில் அனாதரவாக கிடந்த நகை ஒன்றை எடுத்து உயிருடன் வழங்கி விடுங்கள் என சொன்னதற்காக அவர் மீது இந்த கும்பல் கோரமாக தாக்கியிருக்கிறது.
இதனை அடுத்து சம்பவத்துக்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்து தற்பொழுது தீவிர விசாரணைக்கு உள்ளாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தமிழ் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளியான நிலையில் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்லது செய்த நபர் ஒருவரை இவ்வாறு கட்டிவைத்து தாக்கியது மிகவும் கோரமானது எனவும் இது திருடர்களின் செயலிலும் மக்கள் இப்போது பேசிக் கொள்கிறார்கள்.







































