Posted in இலங்கை செய்திகள்

மலையக தமிழரின் அரசியல் அபிலாஷைகளை போராட்டக்காரர்கள் உள்வாங்க உதவிடுங்கள்.

மலையக தமிழரின் அரசியல் அபிலாஷைகளை போராட்டக்காரர்கள் உள்வாங்க உதவிடுங்கள்.

  • முன்னிலை சோஷலிச கட்சியிடம் மனோ கணேசன்
    இந்நாட்டில் வாழும் மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும் போராடும் சிங்கள இளைஞர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்மூலமே உண்மையான புதிய இலங்கையை கட்டி எழுப்ப முடியும்.

குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் உழைக்கும் மக்கள் சிறு தோட்ட நில உடைமையாளர்களாக மாற வேண்டும். வீடு கட்டி வாழ காணியும், உழைத்து வாழ விளை நிலமும் பெற்று அவர்களை வாழ வைக்க விரும்பும் எமது நோக்கங்களை

முன்னிலை சோஷலிச கட்சி ஆதரிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்த முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவினரிடம், கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, பிரதி தலைவர் திகாம்பரம் எம்பி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் இல்லத்தில், கூட்டணியினரை முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவின் சார்பில் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் புபுது ஜாகொட, சஞ்சீவ பண்டார ஆகியோர் சந்தித்தனர்.

முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவினருக்கு, மலையக அபிலாஷை ஆவணங்களை கையளித்த கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

இந்நாட்டு மலையக தமிழரின் ஜனத்தொகை சுமார் பதினைந்து இலட்சம். இதில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் இன்னமும் தோட்ட சிறைகளுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களாக

தோட்ட குடியிருப்புகளில் வாழ்கிறார்கள். இந்த தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை அரச பொது நிருவாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து, தேசிய நீரோட்டத்தில் உள்வாங்க வேண்டும்.

இதன் மூலம், நாட்டின் ஏனைய கிராமிய பிரதேசங்களில் நடைபெறுவதற்கு சமானமாக, தோட்ட பிரதேசங்களிலும் கிராம சேவகர் வலயங்கள், பிரதேச செயலக வலயங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வேண்டும். தோட்ட நிறுவனங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள

தொழிலாளர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, கிராமிய, பிரதேச, மாவட்ட மட்டங்களில் பரவலாக்கப்பட்ட அரச நிறுவனங்களின், நிருவாக மற்றும் நலவுரிமை சேவைகளை

பெருகின்ற முழுமையான குடிமக்களாக தோட்டங்களில் உழைக்கும் மக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

அதேவேளை இந்த தோட்ட சிறைகளுக்குள் வாழும் மலையக மக்களை உள்ளடக்கிய மலையக தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷகளை புரிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

இன்று நாட்டில் காலிமுக திடல் முதல், முழு நாட்டுக்குள்ளும் ஆங்காங்கே சிங்கள மக்கள் போராடுகிறார்கள். இந்த போராட்டக்காரர்கள் மத்தியில், முன்னிலை

சோஷலிச கட்சிக்கு ஒரளவு செல்வாக்கு உண்டு என எமக்கு தெரியும். ஆகவே எமது இந்த கருத்துகளை அங்கே கொண்டு செல்லுங்கள்.

காலிமுக திடலில் போராடும் வேறு பல அணியினரும், எம்முடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் இன்று சொல்லலும் “கோடா-கோ-ஹோம்” என்ற கோஷத்தை நாம் பத்தாண்டுகளுக்கு முன்னமே எழுப்பியவர்கள். நாம் ஒடுக்கப்பட்ட இனத்தை

பிரதிநிதித்துவம் செய்கிறோம். போராடும் சிங்கள குழுக்களிடம் இக்கருத்துகளை நாம் கூறியுள்ளோம். இந்நாட்டில் வாழும் மலையக தமிழர்களின் அரசியல்

அபிலாஷைகளையும் போராடும் சிங்கள இளைஞர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்மூலமே உண்மையான புதிய இலங்கையை கட்டி எழுப்ப முடியும்.

    Posted in இலங்கை செய்திகள்

    40 பெட்ரோல் நிலையங்களுக்கு அடித்து பூட்டு

    40 பெட்ரோல் நிலையங்களுக்கு அடித்து பூட்டு

    நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

    ஊழியர்களை மிரட்டி வாடிக்கையாளர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட

    நடவடிக்கை காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்தார்.

    அந்த நிரப்பு நிலையங்களுக்கு கோரப்பட்டுள்ள அனைத்து எரிபொருளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே இவ்வாறான அதிகளவான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

    எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரை 5 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    எரிபொருள் விநியோகத்தை முறையாக மேற்கொள்ள ஆதரவு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை

    அதிகரிக்கலாம் என பெற்றோலிய
    விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்துள்ளார்.

      இராணுவ முகாமிற்குள் குண்டு
      Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

      இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை

      இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை

      இலங்கையில் ஆளும் கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்

      ஐம்பது ஆண்டுகள் , ஆட்சியில் அமரலாம் என்ற நப்பாசையில் அரியணையில் குந்தியை கோட்டாவுக்கு மூன்று வருடத்தில் நெத்தியடி வீழ்ந்துள்ளது

      மேலும் கொட்டாவே வீட்டே போ என அதே சிங்கள மக்கள் தொடராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் ,இவ்வேளை தேர்தல் நடத்த பட்டால் தாம் தோற்று

      விடுவோம் என்பதும் , எதிரணியினர் பலத்த வெற்றி பெற்று விடுவார்கள் என்பதுவும் , அந்த வாக்குகள் புதிய அரசுக்கு இலங்கை வரலாற்றில் அதிக வாக்கு

      எண்ணைக்கையில் வென்றார்கள் என்ற விகிதத்தை தந்து விடும் ,

      போரை வென்ற கீரோ என புகழ்ந்த அதே சிங்கள மக்கள் ,இன்று அதே அரசை வீட்டே செல் என்கின்றனர் ,

      இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை

      போரின் வலி தெரியாது ,வீதி இறங்கிய சிங்கள மக்களை அச்சுறுத்த வேண்டிய தேவை கோட்டாவுக்கு ஏற்பட்டுள்ளது ,அவருக்கு மட்டும் அல்ல ஆட்சியில் அமர போகும்

      அத்தனை ஆட்சியாளர்களுக்கும் இது தேவையாக உள்ளது ,அப்படி என்றால் மீளவும் ஒரு ஆயுத போரட்டம் ,அல்லது குண்டு வெடிப்புக்கள் இடம்பெற வேண்டும்

      தானே தனது இராணுவ முகாமிற்குள் குண்டு வைத்து அதனை ஆயுத குழுக்கள் தலையில் கட்டிவிட தயராகும் கோட்டா படை

      அதனால் மீளவும் இலங்கையில் இல்லாத புலிகளின் பெயரால் குண்டு தாக்குதலை நடத்த சிங்கள கோட்டா அரசின் இரகசிய படை தயராகி வருகிறது

      வடக்கு பகுதியில் இராணுவத்தை குறைத்து அங்கு பெரும் குண்டு தாக்குதலை ,தனது

      இராணுவ முகாமில் தாமே நடத்தி பெரும் இராணுவத்தினரை கொன்று ,அதனை தனது வெற்றிக்கு காண்பிக்க கோட்டா முயல்கிறார்

      கொழும்பில் ஆயுத கூடங்கள் வெடித்து சிதறின ,தேவாயலயங்கள் மீது முஸ்லீம்களின்

      பெயரால் நடத்த பட்ட குண்டு தாக்குதலின் பின்புல சூத்திரதாரி கோட்டா என்பதே யாவரும் அறிந்ததே

      இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை

      அதே போன்றதொரு தொடர் குண்டு தாக்குதலை சம தடவையில் தமிழர் பகுதிகள் மற்றும் தனி சிங்கள இனவெறியர்கள் வாழும் பகுதியிலும் நடத்திடும் தாக்குதலாக இவை அரங்கேற போகிறது

      அதற்கான முன் நடவடிக்கைகள் உள்ளே கச்சிதமாக மேற்கொள்ள பட்டு வருகின்றன

      .குண்டு மழையினால் இலங்கை மீள அதிர போகிறது ,தமது கதிரைகளை காப்பாற்றிட அப்பாவிகள் கொலை செய்ய பட போகின்றனர் ,

      கோட்டா ஆரம்பிக்க போகும் இந்த குண்டு வேட்டை அவருக்கே தூக்கு கயிறாக மாற்றம் பெற போவதையும் காண போகின்றீர்கள்

      இலங்கையில் தலைகீழ் புரட்சி இடம்பெற்றது போல ,மீளவும் பிரிவினைவாத போர்

      என்ற வகையில் ,இன மோதல்களை உருவாக்கவும் ,அதனை வைத்து தமது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளவும் வேட்டை இடம்பெற போகிறது

      காத்திருந்து பாருங்கள் ,இலங்கை தேசம் குருதியில் குளிக்க போகிறது .

      இராணுவதின் முகாமிற்குள் குண்டுகள் வெடிக்க தயாராகின்றன,தலைகீழ் மாற்றங்கள் இலங்கையில் வெடிக்க போகிறது

      • வன்னி மைந்தன் –
      Posted in இலங்கை செய்திகள்

      ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

      ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம்

      ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம்

      இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம்

      நிறைவேற்றியுள்ளதோடு, நா.தமிழீழ அரசாங்கத்தின் கனேடிய உறுப்பினர் திரு.நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

      தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மனிதாபிமான நிவாரண உதவிகள், ஈழத்தமிழ் மக்களை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்

      என கோரியுள்ள இத்தீர்மானம், ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும் தமிழக அரசிடம் இருந்து ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்பதாக கோரியுள்ளது.

      சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக இருக்கின்ற இராணுவச் செலவீனங்களின் அடிப்படையில் தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து

      சிறிலங்கா இராணுவத்தினை வெளியேற்ற தமிழ்நாடு அரசு, இந்த வேளையில் வலியுறுத்த வேண்டும் என்பதனையும் எதிர்பார்ப்பதாக தீர்மானம் கோரியுள்ளது.

      கடந்த மே21-22 ஆகிய நாட்கள் இடம்பெற்றிருந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அசரவையில் உறுப்பினர் திரு நிமால் விநாயகமூர்த்தி அவர்களால முன்மொழியபட்டு, அரசவையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முழுவிபரம் :

      தமிழ்நாட்டுக்கும் ஈழத்தமிழர் தேசத்துக்குமான உறவு என்பது உணர்வுபூர்வமானது. அது தொப்புள்கொடி உறவு. நிலத்தால் வேறுபட்டிருந்தாலும், உணர்வால்,

      கலாசாரத்தால் பிரிக்கவியலாத ஒரு இனமாகும். ஈழத் தமிழர்களுக்கான நீதிக்கும் அரசியல் இறைமைக்கும் செயல்வடிவம் கொடுப்பதில் இந்திய அரசின் பங்களிப்பு

      முக்கியமானதொன்றாகும் தங்கியிருக்கின்றது. இதற்கான திறவுகோல் எப்போதும் தமிழ்நாடாகவே இருக்கின்றது. இது வரலாறு முழுவதும் நிருபிக்கப்பட்டுவரும் உண்மையாகும்.

      ஈழத்தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போதும், எமக்காக குரல் கொடுக்கும், எமக்குதவும் முதல் கரமாக, தமிழ்நாடே இருக்கின்றது. இந்த பின்புலத்தில்தான், மாண்புமிகு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு,

      இலங்கைதீவின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் ஈழத்தமிழர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதை, ஈழத்தமிழர்களாகிய நாம் வரவேற்று மகிழ்கின்றோம். இது தொடர்பில், ஏற்கனவே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்

      பிரதமர். உருத்திரகுமாரன் அவர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின், மனிதபிமான நிவாரண உதவி முயற்சியை வரவேற்றிருந்ததோடு,

      சிங்கள அரசாங்கங்கள் எவையும் தமிழ்மக்களை பாரபட்டசமின்றி நீதியாக நடத்தப் போவதில்லை. இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளிலும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவார்கள். இந்நிலையில் நேரடி

      உதவிப்பொறிமுறையொன்றினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே தலைமை தாங்கி உருவாக்குமாறும் கோரியிருந்ததர் என்பதனையும் இந்த சந்தர்பத்தில் மீ;ண்டுமொருமுறை சுட்டிக்காட்டுகின்றது.

      இதேவேளை ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும் நாம் இவ்வேளையில் எதிர்பார்கின்றது.

      தீர்மானம் :

      1. நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல் வெளி முழுமையாக இல்லாத நிலையிலும், புலம்பெயர் ஈழத்தழர்களுக்கான தேசக்கட்டுமானமாகவும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பினை
      2. இலங்கைத்தீவுக்கு வெளியே சர்வதேச அரசியல் வெளியில் வெளிப்படுத்தும் ஜனநாயக போராட்ட வடிவம் என்னும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் முன்னெடுக்கப்படும், நலிவுற்ற இலங்கை
      3. மக்களுக்கான, மனிதாபிமான நிவாரண உதவியை வரவேற்பதுடன், அதற்கான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் நாடுகடந்த தமிழீழ
      4. அரசாங்கம் தோழமையினை வெளிப்படுத்தும் வகையில் நிதியுதவியையும் வழங்கும்.
      5. தமிழ்நாட்டு அரசாங்கத்தின் இந்த மனிதாபிமான நிவாரண உதவிகள், தமிழர் தாயகத்தின் நலிவுற்ற எமது உறவுகளை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்பதனையும் வேண்டுகின்றது.
      6. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 1.4ம் சரத்தில் குறிப்பிட்டவாறு, இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம்
      7. என்பதனை உறுதிசெய்தே, சிறிலங்காவுக்கான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக இருக்கின்ற இராணுவச் செலவீனங்களின் அடிப்படையில் தமிழர்
      8. தாயகப்பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினை வெளியேற்ற தமிழ்நாடு அரசு, இந்த வேளையில் வலியுறுத்த வேண்டும் என்பதனையும் எதிர்பார்கின்றது.
      9. மேலும், உலகெங்கும் பரந்துவாழும் உலகத்தமிழ் உறவுகள், மாண்புமிகு,
      10. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் முன்னெடுக்கப்படும் இலங்கை மக்களுக்கான மனிதாபிமான நிவாரண திட்டத்திற்கு தாராளமாக உதவிகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றது என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
        Posted in இலங்கை செய்திகள்

        ரணில் நிதி அமைச்சர் -அடுத்து என்ன ..? கயானா காலியாகும் ..!

        ரணில் நிதி அமைச்சர் -அடுத்து என்ன ..? கயானா காலியாகும் ..!

        இலங்கையில் ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா


        எதிர் வரும் நிதி அமைச்சராக பதவி பிராமணம் செய்திட உள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன

        இவ்விதம் பதவி ஏற்கும் ரணிலினால் நெருக்கடியில் உள்ள நாட்டினை


        முன்னிறுத்தி செல்லுமா என்பதே கேள்வியாகும் ..!

          Posted in இலங்கை செய்திகள்

          23 அமைச்சர்களுக்கு 23 செயலர்கள் தெரிவு

          23 அமைச்சர்களுக்கு 23 செயலர்கள் தெரிவு

          இலங்கையில் கலப்பு ஆட்சியில் அங்கம் வகிக்கும் இருபத்தி மூன்று அமைச்சர்களுக்கு


          23 செயலர்கள் நியமிக்க பட்டுள்ளனர்

          நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் ,இந்த அமைச்சர்கள் தெரிவு என்பது


          நெருக்கடியை தனிக்குமா என்பதே இன்றைய கேள்வியாகும்

            Posted in இலங்கை செய்திகள்

            ஈழப் படு கொலை சுவடுகள் நூல் சீமானால் வெளியீடு video

            ஈழப் படு கொலை சுவடுகள் நூல் சீமானால் வெளியீடு video

            இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் முள்ளி வாய்க்கால் சிங்கள படு கொலையின் கோர தாண்டவம் ,தமிழ் இன


            அழிப்பு தொடர்பான ஈழ படுகொலை சுவடுகள் என்ற நூல் ஒன்று முள்ளிவாய்கால் தினத்தில் தமிழகத்தில் செந்தமிழன் சீமானால் வெளியிட பட்டுள்ளது

            தமிழர்களின் போரின் வலியையும் ,சிங்கள அரச பயங்கரவாததின் படுகொலை கோர

            வெறி காட்சிகளை இந்த நூல் அம்பல படுத்துகிறது ,தமிழர்களே வாங்கி படியுங்கள்
            ,என சீமான் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்

            click here video

            https://www.youtube.com/watch?v=L_xHvlBi1iY
            Posted in இலங்கை செய்திகள்

            ஆட்டோ ,பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு -திணறும் மக்கள்

            ஆட்டோ ,பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு -திணறும் மக்கள்

            இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட விலை அதிகரிப்பை அடுத்து பேரூந்து ,மற்றும் ஆட்டோ


            பயண செலவுகள் அதிகரிக்க பட்டுள்ளது ,ஆட்டோ ஒன்றின் முதலாவது கிலோ மீட்டருக்கு நூறு ரூபா
            அறவிட தீர்மானிக்க பட்டுள்ளது

            இந்த கடுகதி விலை உயர்வினால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வழங்கும் இந்தியா

              இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வழங்கும் இந்தியா

              இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்க

              இந்தியா தீர்மானித்துள்ளது குறித்த தொகை பணத்திற்கு எரிபொருள் வழங்க தீர்மானிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

              நாட்டின் தற்கால நெருக்கடியை தீர்க்க இந்தியாவில் கடனை வாங்கி குவிக்கும்

              இலங்கை ,அதனை மீள செலுத்திட முடியாத நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட போகிறது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை
              குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது

                வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது

                இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளி நாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற அறுபத்தி ஏழுபேர்
                கடற் படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                இவர்கள் திருகோணமலை சல்லிசம்பல் தீவு பகுதியில் குழுமியிருந்த வேளையே கைது செய்ய பட்டுள்ளனர்


                கைதானவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படுவர் என எதிர் பார்க்க படுகிறது

                  Posted in இலங்கை செய்திகள்

                  நாட்டில் எகிறிய எரிபொருள் விலை – கொதிப்பில் மக்கள்

                  நாட்டில் எகிறிய எரிபொருள் விலை – கொதிப்பில் மக்கள்

                  இலங்கையில் எரிபொருள் விலை 30 முதல் 50 ரூபாவினள மேலும் அதிகரிக்க பட்டுள்ளது
                  இந்த விலை உயர்வினால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

                  நாட்டில் நிலவி வரு பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க அத்தியாவசிய பொருட்களின் விலை
                  அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

                    Posted in இலங்கை செய்திகள்

                    ஜனாதிபதி பல்லு பிடுங்கும் -21 ஆவது திருத்தம் சமர்ப்பிப்பு

                    ஜனாதிபதி பல்லு பிடுங்கும் -21 ஆவது திருத்தம் சமர்ப்பிப்பு

                    நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும்

                    அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம், இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

                    பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் அவதானிப்புகளுக்காக திருத்தத்தின் பிரதிகளை விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது

                    இது தொடர்பில் வெள்ளிக்கிழமை (27) கலந்துரையாடப்படும் என்றும் இந்த திருத்தம் இறுதி அனுமதிக்காக அமைச்சரவைக்கு
                    அனுப்பி வைக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      ஆறு மைல் தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

                      ஆறு மைல் தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

                      இலங்கை மாத்தே கொட பகுதியில் இருந்து ஆறு மைல் தூரத்திற்கு மக்கள் எரிபொருள் கொள்வனவு
                      செய்திட வரிசையில் காத்துள்ள அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது

                      நாட்டில் நிலவும் பொருளாத நெருக்கடி நிலை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது

                      போராட்ட காலத்தில் தமிழர்கள் வன்னி யாழ் பகுதியெங்கும் மெழுகுவர்த்தியில்

                      வாழ்ந்த வரலாற்றை சிங்களவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பதே பாதிக்க பட்ட தமிழர்கள் விருப்பமாக உள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        பால்மா இன்றி இறந்த சிசு – கொதிப்பில் மக்கள்

                        இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

                        ஹல்தும்முல்லை பகுதியில் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு குறைந்து உடல் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியுள்ளது.

                        உடனடியாக வைத்தியசாலை கொண்டு செல்ல முயன்ற பெற்றோருக்கு, சரியான நேரத்தில் போக்குவரத்து வசதி கிடைக்காவில்லை.

                        குழந்தையை வைத்தியசாலை எடுத்துச் செல்ல ஆட்டோ ஒன்றைத் தேட ஒரு மணிநேரத்துக்கும் அதிகமான நேரம் கழிந்துவிட்டது. அவர்களின் வீட்டிலிருந்து

                        ஹல்தும்முல்லை வைத்தியசாலைக்கு செல்ல அரைமணிநேரம் தான் பயணிக்க வேண்டும். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று

                        குழந்தை அம்புலன்ஸ் ஊடாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

                        எனினும் இரத்தத்தில் சீனியின் அளவு கடுமையாக குறைவடைந்த காரணத்தினால் குழந்தை இறந்துவிட்டது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          வாலிபனை அடித்து இழுத்து சென்ற கொடூரம்

                          நாவலப்பிட்டி நகரிலுள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வருகைத் தந்த இளைஞர் ஒருவர், எரிபொருள் நிரப்பு நிலைய

                          உரிமையாளர், அவரது மகன் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று, நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளது.

                          இத்தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது ஓட்டோவுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த போது, குறித்த எரிபொருள்

                          நிரப்பு நிலைய உரிமையாளரின் நண்பர் ஒருவர் வரிசையில் நிற்காமல் எரிபொருளை பெற முயற்சித்துள்ளார்.

                          இதன்போது இந்த விடயம் தொடர்பில் குறித்த இளைஞன், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

                          இந்த நிலையிலேயே குறித்த இளைஞன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன், எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு நாவலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் வீசப்பட்டுள்ளான்.

                          இதனையடுத்து, 1990 அம்பியூலன்ஸ் ஊடாக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன், மேலதிக சிசிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

                          இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்,
                          குறித்த இளைஞனுக்கு எதிராக நாவலப்பிட்டி பொலிஸ்


                          நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், இச்சம்பவம் இடம்பெற்ற போது,
                          பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல்
                          அமைதியாக இருந்ததாக வரிசையில் நின்ற நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            வீடுகளை எரிச்சிட்டாங்க – எம்பிக்கள் முறைப்பாடு

                            வீடுகளை எரித்தமை உட்பட தமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

                            மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

                            இன்றும் ஆணைக்குழுவில் மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

                            இவ்வாறான முறைப்பாடுகள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

                            எவ்வாறாயினும், வீடுகளை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஜனநாயக நாடு என்ற வகையில் அனைத்து தரப்பினரும் கருத்து வேறுபாடுகளை மதிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

                            முறைப்பாடு செய்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள்,
                            அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என சுட்டிக்காட்டியுள்ளனர்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              10 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்பு

                              10 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்பு

                              இலங்கையில் இன்று மேலும் பத்து அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                              ஆளும் ஜனாதிபதி கோட்டா பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்

                              மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது கோட்டா பதவி விலக மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                                Posted in இலங்கை செய்திகள்

                                பளையில் வெடித்த குண்டு – சிறுமி காயம்

                                பளையில் வெடித்த குண்டு – சிறுமி காயம்

                                பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் வெடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

                                குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

                                கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றினை தாயாருடன் இணைந்து துப்புரவு செய்தபோதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

                                சம்பவத்தில் காயமடைந்த சிறுமிக்கு 16 வயது எனவும், நாளை சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவி எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

                                காயமடைந்த சிறுமி யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

                                குறித்த சம்பவம் தொடர்பில் பளைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  முன்னாள் TGTE சபாநாயகர் நாகலிங்கம் பாலசந்திரனுக்கு டாக்ட்டர் பட்டம்

                                  முன்னாள் TGTE சபாநாயகர் நாகலிங்கம் பாலசந்திரனுக்கு டாக்ட்டர் பட்டம்

                                  பிரான்சில் வசித்து வரும் தொழில் அதிபரும் ,சமூக சேவகருமாக விளங்கி வரும்

                                  நாகலிங்கம் பால சந்திரன் அவர்களுக்கு உலக தமிழர் பல்கலைக்கழகம் அமெரிக்காவினால்எதிர்வரும் 28 ஆம் திகதி ,முனைவர் எனும் டாக்ட்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க படுகிறார்

                                  முப்பது வருடங்களாக தமிழீழ போராட்டத்தின் பலமாக தன்னை அர்ப்பணித்து செயல்

                                  முன்னாள் TGTE சபாநாயகர்

                                  பட்டவரும் ,பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் செயல் பட்டு தனது பணியினை திறம்பட ஆற்றியவர்

                                  மேலும் தனி நபராக போராடி பல மக்களுக்கு உதவிகளை வழங்கி வருபவரும் ,நாடு

                                  கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயக்காராக விளங்கி அந்த அமைப்பை சிறந்த முறையில் வழிநடத்திய பெருமையும் இவரை சாரும்

                                  தன் இனம் ,தன் மக்கள் என தன்னை நாட்டுக்கு அர்ப்பணித்த பண்பாளன்,அளப்பெரும்

                                  சமூக சேவகனுக்கு உரிய கவுரவத்தை உலகத் தமிழர் பல்கலைக்கழகம் ,அமெரிக்கா வழங்கியுள்ளது பெருமை தருகிறது

                                  ஈழ மண்ணில் புலிகள் ஆளுகை காலத்தில் தமிழ் மண் வீரியம் பெறவும் ,அந்த போராட்டம் வெல்லவும் பல்வேறு பட்ட உதவிகளை ஒன்று திரட்டி வழங்கிய அளப்பெரும் சேவகர்

                                  தவிர பிரான்சில் கலைபண்பாடடு கழகம் உயிர்பெறவும் ,தமிழர் தேசத்தில்

                                  பொருண்மிய மேம்பாடு சிறக்கவும் தன் பங்களிப்பை ,தனது சக்திக்கு மீறிய வகையில் அளித்தவர்

                                  பல்வேறு பட்ட இராயத்தந்திர உறவுகளை பேணி அதன் மூலம் ஈழ பிரச்சனையை சர்வதேச அரங்கில் உரக்க ஒளிக்க வைத்தவர் ,இவ்வாறன பல்முக ஆற்றல் கொண்ட ஒருவருக்கு இந்த விருது கிடைப்பது மகிழ்வை தருகிறது

                                  இவருடன் மேலும் மூன்று தமிழர்களும் அடக்கம் பெறுகின்றனர்

                                  அவருக்கும் ,மேலும் இங்கே பட்டம் பெறும் அணைத்து உறவுகளுக்கும் எமது வாழ்த்துக்களையும்
                                  பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம்

                                  நாகலிங்கம் பால சந்திரன்
                                  நாகலிங்கம் பால சந்திரன்
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    தமிழ் நாட்டு உணவு கப்பல் – இலங்கை வந்தது

                                    இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள், கொழும்பு துறைமுகத்தை இன்று (22) வந்தடைந்தது.

                                    அவை, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இலங்கை பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

                                    இதில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பிரதமர் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

                                    9,000 மெற்றிக் தொன் அரிசி, 50 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 25 மெற்றிக் தொன் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் நிவாரண தொகையில் அடங்குகின்றன.

                                    கடந்த 18 ஆம் திகதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் குறித்த நிவாரணக் கப்பல் பச்சைக் கொடி அசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.

                                    40,000 மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால் மா மற்றும் மருந்துகள் உட்பட 5.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தமிழக அரசாங்கம் ஒப்புக்கொண்ட நிலையில், அதன் முதல் தொகுதி, நாட்டை வந்தடைந்தது.

                                    இந்தப் பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு விநியோகிக்கப்படும் என கொழும்பில் உள்ள
                                    இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.