Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை வேட்டையில் 581 பேர் கைது

காவல்துறை வேட்டையில் 581 பேர் கைது

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்

இதனால் மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து தடுக்க பட்டுள்ளதுடன் ,நடமாடும் சுதந்திரம் முடக்க பட்டுள்ளது

இந்த விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 581 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

    செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
    Posted in Uncategorized

    இறந்த பெண் சடலத்தை உறவினருக்கு மாற்றி கொடுத்த மருத்துவமனை

    இறந்த பெண் சடலத்தை உறவினருக்கு மாற்றி கொடுத்த மருத்துவமனை

    இலங்கை பணத்துறையில் இரண்டு பெண்கள் மரணித்துள்ளனர் ,இதில் ஒருவர் முசுலீம் .

    அதில் உறவினர்கள் தமது உறவினர் என நினைத்து வழங்க பட்ட சடலத்தை அடக்கம் செய்து விட்டனர்

    ஆனால் அந்த சடலத்தினை உரியவர்கள் சென்று மருத்துவமனையில் விசாரித்த பொழுது அது
    தவறாக வேறு ஒருவருக்கு வழங்க பட்டது தெரிய வந்துள்ளது

    மேற்படி சம்பவம் பெரும் அதிரவலைகளை கிளப்பியுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      திடீர் சுற்றிவளைப்பு : பல நெல் களஞ்சியங்கள் சீல் வைப்பு

      திடீர் சுற்றிவளைப்பு : பல நெல் களஞ்சியங்கள் சீல் வைப்பு

      மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான நெல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், ஒட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் உள்ள பதிவுசெய்யப்படாத நெல் களஞ்சியசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் திடீர் சுற்றிவளைப்பு கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்டது.

      இதன் போது பதிவு செய்யப்படாமல் நெல்லினை களஞ்சியப்படுத்தி பதுக்கி வைத்திருந்தமை தொடர்பாகவும், பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை களஞ்சியப்படுத்தியிருந்த களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

      நெல்லினை பதுக்கி வைத்திருந்த சில வியாபாரிகள் தானாக முன்வந்து தங்களுடைய நெல்களை அரசாங்க நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபைக்கு வழங்கவும் உடன்பட்டனர்.

      மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனுக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர் நுகர்வோர் அதிகார சபைக்கு வழங்கிய அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளதாவது.

      COVID 19 காரணமாக மக்கள் தனது வாழ்வாதாரத்தினை இழந்துள்ள நிலையில் மனிதாபிமானமின்றி ஒரு சில வியாபாரிகள் மக்களின் வாழ்வாதாரத்தையோ, அரசாங்கத்தின் நிர்வாக நடைமுறையையோ கண்டு கொள்ளாமல் தங்களது வியாபார தந்திரோபாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் அந் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட வரையறைக்குட்பட்டு இறுக்கமான நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் ஆர். எப். அன்வர் சதாத்துக்கு ஆலோசணை வழங்கியிருந்தார்.

      வியாபாரிகள் நுகர்வோரை சுரண்டுகின்ற மற்றும் அவர்களின் உரிமைகளை மீறுகின்ற எந்ந ஒரு செயற்பாட்டிலும் ஈடுபடுகின்ற வியாபாரிகளுக்கு எதிராக பாரபட்சம் பாராமல் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் மேலும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை பணிப்பாளர் ஆர். எப். அன்வர் சதாத் தெரிவித்தார்.

      பொருட்களினை விற்பனை செய்யும் போது நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது, மேலதிக கட்டணங்கள் அறவிடுவது, பொருட்களினை பதுக்கி வைப்பது தொடர்பாக பொது மக்களினால் நுகர்வோர் அதிகார சபைக்கும், அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருக்கும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து அரசாங்க அதிபரினால் கிழக்கு மாகாண உதவிப்பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத்துக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கும் பணிப்புரைக்கும் அமைவாக மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி தலைமையில் மாவட்டம் பூராகவும் குறித்த குழுவினரால் திடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

      வியாபார நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்தினை மீறிய வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், மேலும் ஒரு சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி அன்வர் சதாத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

      Posted in Uncategorized

      மகிந்தாவுக்கு கொரனோ

      மகிந்தாவுக்கு கொரனோ

      பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நோய் நிலமை காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக
      சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படம் மற்றும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

      அவர் வழமை போன்று தனது கடமைகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

      Posted in Uncategorized

      கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள 12,000 தொன் சீனி

      கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள 12,000 தொன் சீனி

      இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 600 சீனிக் கொள்கலன்கள் இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

      இவற்றில், 433 கொள்கலன்கள் ஒன்பது இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் சுமார் 12,000 மெற்றிக் தொன் சீனியைக் கொண்டுள்ளன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

      வணிக வங்கிகள் வழங்கிய கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி அனுமதிப்பத்திரங்களின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டனர்.

      இரண்டு மாதங்களாக 433 சீனிக் கொள்கலன்கள் வெளிவிடப்படாததால், இறக்குமதியாளர்கள் ஒரு கிலோ சீனிக்கு தாமதக் கட்டணமாக ரூ. 20 முதல் 25 வரை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

      இதேவேளை, மற்றொரு சீனி இறக்குமதியாளரால் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட மற்றொரு தொகுதி கொள்கலன்கள் இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

      இந்த இறக்குமதியாளரால் மியான்மாருக்கு அனுப்பப்பட்ட 130 சீனி கொள்கலன்கள் அந்த நாட்டின் பிரச்சனை காரணமாக கொழும்பு துறைமுகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

      இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் இந்த 130 கொள்கலன்களை நாட்டுக்குள் கொண்டு வர அனுமதிக்காததால், அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

      இந்த சீனி இருப்பு பற்றி விசாரித்த போது, லங்கா சதொச குறிப்பிட்ட சீனி இருப்பைக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளாக ​​துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறினார்.

      இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதாகவும், லங்கா சதொச நிறுவனத்திற்கு சீனியை வாங்கும் போது தாமதமான கட்டணத்திலிருந்து இறக்குமதியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர்பந்துல குணவர்தன தெரிவித்தார்.

      மேலும் சதொச மூலம் சலுகை விலையில் சீனி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்

      Posted in இலங்கை செய்திகள்

      கொரோனாவுக்கு நேற்றைய தினம் 192 பேர் மரணம்

      கொரோனாவுக்கு நேற்றைய தினம் 192 பேர் மரணம்

      இலங்கையில் நேற்றைய (28) தினம் மேலும் 192 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

      சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (29) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      Posted in Uncategorized

      யாழ் மக்களுக்கு அவசர கோரிக்கை – இதில் நீங்கள் உண்டா ..?

      யாழ் மக்களுக்கு அவசர கோரிக்கை – இதில் நீங்கள் உண்டா ..?


      யாழ் மாவட்டத்தில் மோதல்களினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமராத மக்கள் தங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டுமென வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

      யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் முப்படையினர் மற்றும் பொலிசாரின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் மீளக்குடியமராத குடும்பங்களின் விபரங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக கேட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

      பகுதியளவில் விடுவிக்கப்பட நகுலேஸ்வரம், காங்கேசன்துறை மேற்கு, காங்கேசன்துறை மத்தி, காங்கேசன்துறை தெற்கு, கட்டுவன், குரும்பசிட்டி இகுரும்பசிட்டி கிழக்கு, வசாவிளான் கிழக்கு, வசாவிளான் மேற்கு , மயிலிட்டித்துறை வடக்கு, தையிட்டி வடக்கு, தையிட்டி தெற்கு,பலாலி

      கிழக்கு,பலாலி தெற்கு,பலாலி வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளையும் முழுமையாக விடுவிக்கப்படாத பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு, மயிலிட்டித்துறை தெற்கு கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

      அவர் மேலும் தெரிவிக்கையில்,உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்து பல வருடங்களாக மீள்குடியேறாத குடும்பங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மாவட்ட செயலகங்கள் ஊடாக தற்போது இடம்பெற்று வருகின்றன.யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை வலிகாமம்

      வடக்கிலேயே அதிகளவில் மக்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக மீள் குடியேற்றப்படாமல் இருக்கின்றார்கள்.18 கிராம சேவகர் பிரிவுகள் பகுதியளவில் விடுவிக்கப்படாமலும் 3 கிராம

      சேவகர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்படாமலும் இருக்கிறது.7ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னமும் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளார்கள்.

      இந்த அடிப்படையில் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூலம் இந்த விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பிரதேச செயலகம்இ மாவட்ட செயலகம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையிலும் இந்த விண்ணப்பங்களை பெற்று உடனடியாக நிரப்பி

      வழங்கவேண்டும்.இதனை வழங்குவதன் மூலமே மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தி காணிகள் எவ்வளவு மக்களுடையது என்பதை அடையாளப்படுத்த முடியும்.

      உண்மையான தகவல்களை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது.ஏற்கனவே விபரங்களை வழங்கி இருந்தாலும் இந்த முறை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இந்த தகவல்கள் சரியாக பேணப்படாமையால் மீள்குடியேற்றம் தாமதமாகி வருகிறது.

        Posted in Uncategorized

        தமிழர்களுக்கு சீனா ஊசியை போட்டு தள்ளும் அரசு – அதிகரிக்கும் மரணம்

        உலக

        தமிழர்களுக்கு சீனா ஊசியை போட்டு தள்ளும் அரசு – அதிகரிக்கும் மரணம்

        இலங்கை வட கிழக்கு பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு ஆளும் அரசு சீனாவின் தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது

        இந்த ஊசியினை பெற்று கொண்ட பல மக்கள் பலியாகியுள்ளதாக மக்கள் மத்தியில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன ,

        மேலும் உடல் வீக்கம் ஏற்படுவதாக குற்ற சாட்டும் முன் வைக்க படுகிறது ,ஆனால் அரசோ இதனை ஏற்க மறுத்து ,இது வதந்தி என பரப்புரை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          கொரானாவுக்கு ஒரே நாளில் 202 பேர் பலி

          கொரானாவுக்கு ஒரே நாளில் 202 பேர் பலி

          கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 212 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

          109 ஆண்களும் 103 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 173 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 37 பேர் மரணித்துள்ளனர். 30 வயதுக்குட்பட்டோரில் 2 பேரும் மரணித்துள்ளனர்.

          அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 8,583 பேர் உயிரிழந்துள்ளனர்.

          நாட்டில் மேலும் 4,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 421,557 ஆக அதிகரித்துள்ளது.

          அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,203 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 355,394 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 57,580 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            16 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இடங்களைத் தேடிக்கண்டு பிடிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

            16 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இடங்களைத் தேடிக்கண்டு பிடிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

            16 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இடங்களைத் தேடிக்கண்டு பிடிக்கும் நடவடிக்கை மேல் மாகாணத்தில் இன்று முதல் (27) முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

            குறிப்பிட்ட வயதெல்லையை பூர்த்தியடைவதற்கு முன்னர் சிறுவர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தியுள்ள நபர்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோக நடவடிக்கைகளில்

            ஈடுபடுத்தியுள்ளவர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

            சமீபத்திய சம்பவங்கள் மூலம் குறிப்பிட்ட வயதெல்லையை பூர்திசெய்யாத சிறுவர்கள் வீட்டு வேலைகளில் அமர்த்தப்படுவதுடன் அவர்கள் துஷ்பிரயோக நடவடிக்கைகளில்

            ஈடுபடுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவ்வாறானவர்களை கண்டுபிடிப்பதற்காக இன்றைய தினம் கொழும்பு நகரம் மற்றும் மேல் மாகாணத்தில்

            சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படுகின்றன. இதில் பிரஜா பொலிசாரும் சிறுவர் மற்றும் மகளீர் பொலிசாரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

            சிறுவர்களை பணிக்கமர்த்துவதற்காக அழைத்துவரும் தரகர்களுக்கு எதிராகவும் சட்ட

            நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்

            Posted in Uncategorized

            ஆயுத தாரி வெறியாட்டம் – 14 பேர் சூட்டு கொலை

            ஆயுத தாரி வெறியாட்டம் – 14 பேர் சூட்டு கொலை

            மாலியில் அரச அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் மீது ஊந்துருளியில் பயணித்த ஆயுததாரி திடீரென தாக்குதலை நடத்தினார்

            இதில் சம்பவ இடத்தில 14 மக்கள் பலியாகினர்

            தாக்குதலை அடுத்து மேலதிக இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

              Posted in Uncategorized

              நள்ளிரவில் சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கை!

              நள்ளிரவில் சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கை!

              வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் பாரிய

              இன்னல்களை எதிர்நோக்கி இரவு, பகல் பராது செயற்பட்டு கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

              அந்த வகையில் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதியில்

              மூன்றுமுறிப்பு (வவுனியா வரவேற்பு வழைவுக்கு அருகே) பகுதியில் ஏ9 வீதியூடாக வாகனங்களில் பயணிப்போருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

              டெல்டா வைரஸ் தாக்கம் நாடளாவீய ரீதியில் அதிகரித்து வருகின்றமையினை அடுத்து அதனை எமது மாவட்டத்தில் கட்டுப்படுத்துவதற்காக வியாபார நோக்கம் , அலுலக தேவை

              போன்றவற்றிகாக வவுனியா மாவட்டத்தினுள் நுழையும் வாகனங்களில் பயணிப்போர் மற்றும்

              வவுனியா ஊடாக ஏனைய மாகாணங்களுக்கு செல்பவர்கள் என 300 க்கு மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது

                Posted in இலங்கை செய்திகள்

                பூநகரி – வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணை

                பூநகரி – வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணை

                கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள பூநகரி, வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல்

                கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி நக்டா தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதாகாரசபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

                இதேநேரம் பூநகரி, வலைப்பாடு கடற்றொழிலாளர்களுக்கான விண்ணப்பத்தின் அடிப்படையில், கடலட்டை பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக சென்ற

                அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சங்குப்பிட்டி பாலத்தின் ஓரத்தில் இறால் அறுவடை செய்யும் தொழிலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களது பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

                அத்துடன் பூநகரி, சங்குப்பிட்டி கடற்றொழிலாளர் இறங்குதுறைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

                கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

                  Posted in Uncategorized

                  கோட்டா ,மைத்திரி கட்சி திடீர் சந்திப்பு – பேச போவது என்ன ..?

                  கோட்டா ,மைத்திரி கட்சி திடீர் சந்திப்பு – பேச போவது என்ன ..?

                  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (26) காலை நடைபெறவுள்ளது.

                  இதனை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

                  கலந்துரையாடல் காலை 11.00 மணிக்கு நடைபெறும் என்றும், கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 14

                  பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலில் கலந்து கொள்ள வாய்ப்பு கோரியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

                  இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் காலை 9.00 மணிக்கு கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

                  கட்சியின் தலைவர், சிரேஷ்ட உப தலைவர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, பொருளாளர்

                  மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண ஆகியோருடன் தானும் இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    தொடரும் போலீஸ் வேட்டை – 151 பேர் கைது

                    தொடரும் போலீஸ் வேட்டை – 151 பேர் கைது

                    இலங்கையில் நிகழ்கால விதிகளை மீறிய குற்ற சாட்டின் பேரில் 151 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                    கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறினார் என்ற குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

                      Posted in Uncategorized

                      30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் -கொவிட் தடுப்பூசி

                      30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் -கொவிட் தடுப்பூசி

                      எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி

                      செலுத்தி முடிக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

                      புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

                      இவ்வாறு அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டதை அடுத்து நாட்டை முழுமையாக திறப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

                        Posted in Uncategorized

                        ஜெர்மனி வெள்ளத்தில் மீசாலை வாலிபர் மரணம்

                        ஜெர்மனி வெள்ளத்தில் மீசாலை வாலிபர் மரணம்

                        ஜெர்மனியில் இடம்,பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி இலங்கை மீசாலையை சேர்ந்த 37 வயதுடைய லக்கு என்ற தமிழ் வாலிபர் மரணமாகியுள்ளார்

                        இவரது மரண அறிவித்தல் துண்டு பிரசுரத்தில் இந்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது ,குறித்த

                        வாலிபரை இழந்து அவர் தம் குடும்ப உறவுகள் கண்ணீரில் தவித்து வருகின்றனர்

                        வரலாறு காணாத வெள்ளம் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை புரட்டி போட்டது இதில் 120-க்கு மேற்பட்டவர்கள் மரணமாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                        இவரது ஆறா துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது

                        நீர் குடித்து மூச்சடக்கி
                        நீ இறந்தாய்
                        நீங்காத வலி தந்து
                        நீ ஏன் மறைந்தாய்

                        நிருபர் – வன்னி மைந்தன் –

                        வாலிபர் மரணம்
                          Posted in இலங்கை செய்திகள்

                          ஹிஷாலினி தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி, தன் கடமையை செய்கிறது-மனோ கணேசன்

                          ஹிஷாலினி தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி, தன் கடமையை செய்கிறது-மனோ கணேசன்

                          ஹிஷாலினி தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி, தன் கடமையை செய்கிறது. எவருக்காகவும் இதை கைவிட மாட்டோம்.

                          ஹிஷாலினி பற்றி கூப்பாடு போடும் டிலான் பெரேரா இதை அறிய வேண்டும் என்கிறார் மனோ கணேசன்

                          மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலு குமார், உதயகுமார் ஆகிய எம்பீக்கள், சிறுமி ஹிஷாலினி தொடர்பில் வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள் என கூசாமல் பொய்

                          பேசும் ஸ்ரீல சுதந்திர கட்சி எம்பி டிலான் பெரேரா, பொதுஜன முன்னணி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச கட்சி எம்பி முஹமட் முசாம்பில் ஆகிய அரசாங்க கட்சி

                          அரசியல்வாதிகள், தங்கள் அரசாங்கம் தோட்ட தொழிலாளருக்கு இழைத்துள்ள அநீதியை கணக்கில் எடுக்க தவறுவதேன்?

                          சிறுமி ஹிஷாலினி தொடர்பாக நாம் என் கடமையை சிறப்பாக செய்துள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம்; (1)பொரளை நிலையை பொலிஸ் விசாரணை ஆய்வு (2)பொலிஸ் தலைமையக விசாரணை மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் ஆய்வு (3)பாராளுமன்றத்தில் உரை மற்றும்

                          நேரடியாக பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேள்வி (4)மலையகத்தில் நேரடி ஆர்ப்பாட்டங்கள் (5)சிங்கள மொழி ஊடக மாநாடுகள் (6)சிங்கள தொலைக்காட்சி விவாத

                          நிகழ்ச்சிகள் ஆகியவற்றை செய்த பின்னர்தான், “சிறுமி ஹிஷாலினி” விவகாரம் தேசிய அரங்கில் சூடு பிடித்தது என்பதை கூப்பாடு போடும் அரசாங்க அரசியல்வாதிகள் உணரவேண்டும்.

                          இது எமது கடமை. அதை தமிழ் முற்போக்கு கூட்டணி எவருக்காகவும் கைவிடாது. ஹிஷாலினி எமது இரத்தம். எமது மக்களுக்காக நாம் வாய் திறந்து பேசாவிட்டால், யார் பேசுவது? நாம்

                          போராடாவிட்டால், யார் போராடுவது? என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள், நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம், சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

                          இவ்விவகாரம் பற்றி தமுகூ தலைவர் மனோ எம்பி மேலும் கூறியதாவது,

                          இன்று தோட்டத்தொழிலாளர் வறுமையில் வாடுகின்றனர். அவர்களது வருமானம் எமது நல்லாட்சியின் 2019ம் ஆண்டை விட, இன்று வெகுவாக குறைந்து விட்டது. இதற்கு காரணம், ஒருபுறம், ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி தருகிறேன் என்று கூறிவிட்டு இந்த

                          அரசாங்கம், வேலை நாள் எண்ணிக்கை மற்றும் கொழுந்து நிறை ஆகியவற்றை தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை நிறுவனங்களுக்கு வழங்கி விட்டு, சும்மா இருக்கிறது. மறுபுறம், விலைவாசியோ பலமடங்கு உயர்ந்து விட்டது.

                          சிறுமி ஹிஷாலினி உட்பட, தோட்டத்தொழிலாளர்களின், பிள்ளைகள் நகரப்பகுதிகளுக்கு தொழில் தேடி வந்து ஆபத்தில் விழுவதற்கு பெருந்தோட்டத்துறையில் இன்று நிலவும் அதிமோச

                          வறுமைதான் காரணம். இந்த அதிமோச வறுமைக்கு காரணம் என்ன? இந்த அரசாங்கத்தின் தோட்டத்தொழிலாளர் தொடர்பான அக்கறையின்மை, அரசில் இருக்கின்ற இதொகாவின்

                          மௌனம் ஆகியவையே பிரதான காரணங்கள் என்பதை, இன்று சிறுமி ஹிஷாலினி பற்றி பொய்யாக கூப்பாடு போடும் எம்பி டிலான் பெரேரா, அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, எம்பி முஹமட் முசாம்பில் போன்றவர்கள் உணர வேண்டும்.

                          சிறுமி ஹிஷாலினி தொடர்பாக நாம் என் கடமையை சிறப்பாக செய்துள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம்; (1)பொரளை நிலையை பொலிஸ் விசாரணை ஆய்வு (2)பொலிஸ் தலைமையக விசாரணை மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் ஆய்வு (3)பாராளுமன்றத்தில் உரை மற்றும்

                          நேரடியாக பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேள்வி (4)மலையகத்தில் நேரடி ஆர்ப்பாட்டங்கள் (5)சிங்கள மொழி ஊடக மாநாடுகள் (6)சிங்கள தொலைக்காட்சி விவாத

                          நிகழ்ச்சிகள் ஆகியவற்றை செய்த பின்னர்தான், “சிறுமி ஹிஷாலினி” விவகாரம் தேசிய அரங்கில் சூடு பிடித்தது.

                          இது எமது கடமை. அதை தமிழ் முற்போக்கு கூட்டணி எவருக்காகவும் கைவிடாது. ஹிஷாலினி எமது இரத்தம். எமது மக்களுக்காக நாம் வாய் திறந்து பேசாவிட்டால், யார் பேசுவது? நாம்

                          போராடாவிட்டால், யார் போராடுவது? என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள், நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம், சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.

                          “இந்த பிரச்சினை தமிழ், முஸ்லிம், சிங்கள இனப்பிரச்சினை அல்ல. இது ஒரு சட்டம், ஒழுங்கு பிரச்சினை” என கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் இலங்கை பாராளுமன்றத்தில், மிக நிதானமாகவும், மிக பொறுப்புடனும் தெளிவாக பலமுறை எடுத்து கூறி விட்டேன்.

                          ஹிஷாலினி வீட்டுக்கு சென்று மௌன அஞ்சலி செலுத்தியதை தவிர, அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் இதொகா, இந்த பிரச்சினை பற்றி கூறும்படியாக இதுவரை ஒன்றும் செய்யவில்லை.

                          எதுவாயினும், இப்போது விசாரணை நடக்கின்றது. அதற்கு அனைவரும் கண்காணிப்புடன் கூடிய பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.

                          இந்நிலையில், எம்மை பற்றி கூசாமல் பொய் பேசி குறை கூறும், ஸ்ரீல சுதந்திர கட்சி எம்பி டிலான் பெரேரா, பொதுஜன முன்னணி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச கட்சி எம்பி

                          முஹமட் முசாம்பில் ஆகிய அரசாங்க அரசியல்வாதிகள், தங்கள் அரசாங்கம் தோட்ட தொழிலாளருக்கு இழைத்துள்ள அநீதியை கணக்கில் எடுக்க தவறுவதேன்?

                          நாம் எமது ஆட்சியில் துண்டு விழும் மேலதிக 50/= ரூபாவை தர தவறிவிட்டோம் என குற்றம் சாட்டிய இவர்கள் தோட்டத்தொழிலாளருக்கு இவர்களின் ஆட்சியில் இன்று என்ன செய்துள்ளார்கள்?

                          ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகிறோம், என்று கூறிவிட்டு, வேலை நாள் எண்ணிக்கை மற்றும் கொழுந்து நிறை ஆகியவற்றை தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை நிறுவனங்களுக்கு

                          வழங்கி விட்டு, இந்த அரசாங்கம் சும்மா இருக்கிறது. மறுபுறம், விலைவாசியோ பலமடங்கு உயர்ந்து விட்டது. ஆகவே பத்து நாள் வேலையும், குறைந்த வருமானமும் தோட்ட தொழிலாளரை வாட்டுகிறது. வறுமை பெருந்தோட்ட துறையில் தாண்டவமாடுகிறது.

                          இதுவே இன்று சிறுமி ஹிஷாலினி உட்பட கணிசமான பெருந்தோட்ட துறை பிள்ளைகள், பெண்கள், ஆண்கள் நகரப்பகுதிகளுக்கு தொழில் தேடி வர பிரதான காரணம்.

                          வறுமை எல்லோருக்கும் பொதுவானதுதான். அதனால்தான், இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் தொழில் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று சொல்லொணா

                          துன்பங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். இப்படிதான், மூதூரை சேர்ந்த ஏழை முஸ்லிம் சிறுமி றிசானா நபீக், சவுதி அராபியா சென்று அங்கே கொல்லபட்டார்.

                          ஆனால் பெருந்தோட்டதுறையில், இன்று ஏற்பட்டுள்ள நிலைமை, 70 களில் அன்றைய சிறிமாவோ பண்டார நாயக்க ஆட்சிக்கால நிலைமையை நெருங்கி கொண்டு இருக்கிறது என்பதை இந்த

                          அறிவு கெட்ட அமைச்சர்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். எதிரணியில் இருக்கும் எம்மை பொய்யாக குறை கூறுவதை விட்டு, இவர்கள் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையில் ஆவன செய்ய வேண்டும்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            வீதி விபத்தில் சிக்கி ஒரே நாளில் 8 பேர் மரணம்

                            வீதி விபத்தில் சிக்கி ஒரே நாளில் 8 பேர் மரணம்

                            இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி எட்டு பேர் பலியாகியுள்ளனர்

                            நாள் தோறும் வீதி விபத்துக்கள் அதிகரித்து செல்கின்ற பொழுதும் ,அதனை கட்டு படுத்த முடியாது

                            காவல்துறை தினறி வருகிறது

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கையில் நீரில் மூழ்கி 800 பேர் மரணம்

                              இலங்கையில் நீரில் மூழ்கி 800 பேர் மரணம்

                              இலங்கையில் ஆண்டு தோறும் நீர் நிலைகளில் மூழ்கி சுமார் 800 பேர் பலியாகி வருவதாக

                              இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                              இதனை தடுக்க பல்வேறு பட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த பட்ட பொழுதும் ,அவை கடந்து இந்த

                              மரணம் சம்பவிப்பதாக தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது