Tag: இலங்கை
எங்கள் வீரம் பிரபாகரன் – வருவாண்டா
எங்கள் வீரம் பிரபாகரன் வருவாண்டா ,,,எங்கள் ஈழ பெற்று தருவண்டா
தமிழர் தேசிய தலைவன் ,தமிழுக்காய் வாழ்ந்த முதல்வன் ,இவன் போல யார் வருவார் ..?
இவன் தாண்டா தமிழர் தலைவன்
யாழில் தலைவர் 67 வது பிறந்தநாள் கொண்டாட்டம்
யாழில் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழீழத்தின் கலாச்சார பட்டினமாக விளங்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தலைவர் பிரபாகரனின் 67 பிறந்த தினம் கேக்கு வெட்டி
கொண்டாட பட்டுள்ளது
அதுபோலவே புலம் பெயர் நாடுகளில் தமிழர் கடைகள் ,படசலைகள் மற்றும் பொது இடங்களிலும் இந்த நிகழ்வும் இடம்பெற்றுள்ளது
சில தமிழர் வீடுகளிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது
கார்களில் பலூன் மற்றும் தலைவர் படம் ,மற்றும் கொடிகள் கட்ட பட்டு கார்கள் செல்லும்
காட்சிகள் சிலது சமுக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
இலங்கைக்கு ஸ்கொட்லாந்து பொலிஸ் பயிற்சிவழங்கப்படாது – அதிரடி அறிவிப்பு
இலங்கைக்கு ஸ்கொட்லாந்து பொலிஸ் பயிற்சிவழங்கப்படாது – அதிரடி அறிவிப்பு
இலங்கை பொலிஸாருக்கு Scotland Police பயிற்சிகள் வழங்கி வந்தது ,தற்போது அது வழங்கா படா
து என பிரிட்டன் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது
இலங்கையில் இடம் பெறும் மனித உரிமை மீறல்களை அடுத்து மேற்படி பயிற்சிகள் ,ஒத்துழைப்பு
புதுப்பிக்கப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளது கோட்டா அரசுக்கு பெரும் நெருக்கடியை
ஏற்படுத்தியுள்ளது
மைத்திரி மகிந்தா பாராளுமன்றில் மோதல்
மைத்திரி மகிந்தா பாராளுமன்றில் மோதல்
இலங்கை பாராளுமன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மற்றும் விவசாய அமைச்சர்
மகினாண்ட அழுத்துகமாவுக்கு இடையில் வாய் போர் இடம்பெற்றது
இது டக்கிளஸ் ,ஸ்ரீதரன் எம்பிக்கு இடையில் இடம்பெற்றது போல அமைய பெற்றது
இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பபு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,அதிகமழை
காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் இடம் பெறலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்க
பட்டுள்ளது
அத்துடன் கடலுக்கு மீனவர்களை செல்லவேண்டாம் என வலியுறுக பட்டுள்ளது
குளங்கள் நிரம்பி வழிவதால் அதன் வான்கதவுகளும் திறந்து விட பட்டுள்ளன
மக்களே விழிப்பாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர்-பீரிஸ் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர்-பீரிஸ் சந்திப்பு
தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. வின் அரசியல், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கான உதவிச் செயலாளர் திரு. காலித்
கியாரி வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021 நவம்பர் 23ஆந் திகதி, செவ்வாய்க் கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, தொற்றுநோய்க்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் மற்றும் இலங்கையில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள
முன்னேற்றம் உள்ளிட்ட இலங்கையின் கோவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் கலந்துரையாடினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உட்பட, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக உள்நாட்டு செயன்முறைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய
முன்னேற்றத்தை சுட்டிக் காட்டிய வெளிநாட்டு அமைச்சர், உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்தினார்.
இலங்கை தாமாக முன்வந்து ஏற்றுக்கொண்ட சர்வதேசக் கடமைகளுக்கு அமைவாக, நிலையான சமாதானத்தையும்
அபிவிருத்தியையும் அடைந்து கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என வெளிநாட்டு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உதவிச் செயலாளர் நாயகம் கியாரியுடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி ஹனா சிங்கர் ஹம்டி மற்றும் ஏனைய ஐ.நா. அதிகாரிகள்
இணைந்திருந்தனர். வெளியுறவுச் செயலாளர் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 76ஆவது கூட்டத் தொடரின் பக்க அம்சமாக இடம்பெற்ற அதிமேதகு ஜனாதிபதி மற்றும் ஐ.நா. பொதுச்
செயலாளருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பின் தொடர்ச்சியாக, இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உதவிச் செயலாளர் நாயகம் கியாரி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இலங்கையில் ஐந்துக்கு ஒரு பெண் கற்பழிப்பு
இலங்கையில் ஐந்துக்கு ஒரு பெண் கற்பழிப்பு
இலங்கையில் ஐந்துக்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த படுவதாக புதிய புள்ளி
விபரம் ஒன்று தெரிவித்துள்ளது
நாட்டில் அதிகரித்து செல்லும் போதைப்பொருள் ,மட்டும் அயலவர்கள் ,உறவினர்களினால் இந்த
சம்பவங்கள் அதிகரித்து செல்வதாக அதில் சுட்டி காட்ட பட்டுள்ளது
போதை பொருள் நாடக இலங்கை மாற்றம் அடைந்து செல்வதும் அதனால இளம் தலைமுறை
தவறான வழிகளில் சென்று கொண்டுள்ளதும் நாளாந்த நிகழ்வுகளில் நிகழ்ச்சிகள் கோடிட்டு காட்டுகின்றன
அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லும் இலங்கை இனவாத அரசு photo
அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லும் இலங்கை இனவாத அரசு photo
இன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால், மதியம் 12 :30 மணியளவில்
,தமிழருக்கான சுதந்திர வேட்டைகாரர்களால் போராட்டம் ஒன்று நடத்த பட்டது
இவை நிகழ்கால கொரனோ விதிகளுக்கமையவும் , பிரித்தானிய சட்ட திட்டங்களை பின்பற்றியும் அமைதியான முறையில் அர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த போராட்டத்தின் பொழுது மறைந்து இருந்து குண்டு வெடிப்பு தாக்குதல்களை
மேற்கொள்ளும் இலங்கை இனவாத அரசின் முகதிரையை ஆர்ப்பாட்ட காரர்கள் கோஷமிட்டு கிழித்தெறிந்தனர்
.அதனை உயர்ஸ்தாணிகத்திற்குள் உள்ளே இருந்த வண்ணம் சிங்கள கூலிகள் அவதானித்துக்கொண்டிருத்தனர் ,
மறைந்திருந்து முழு ஆர்ப் பாட்ட நிகழ்வையும் காணொளி ,மற்றும் புகைப்படங்கள்
பிடித்து கொண்டிருந்ததை பங்கு பற்றியவர்கள் கண்கொண்டு பார்க்க கூடியதாக இருந்தது .
மேலும் இவ் ஆர்ப்பாட்ட பேரணியில்
ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்களில் குண்டுவைத்து தீவிரவாத தாக்குதல் என்ற
போர்வைக்குள் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் கொலைக்கு இன்னும் ஏன் நீதி வழங்கப்படவில்லை என இலங்கை இனவாத அரசை பொங்கியெழுந்து கேட்டனர் .
இந்த பேரணியில் கீழே வரும் கோஷங்கள் முழங்கின ,
“போர்க்குற்றவாளி இலங்கஅதிபர்”
“ஈஸ்ரர் குண்டு தாக்குதலுக்கு விசாரணை முடிவு என்ன”
“அப்பாவி மக்களை மறந்து இருந்து குண்டு வைத்து கொல்லாதே”
“இலங்கையை விட்டு ஏன் சிங்களவர் வெளியேறுகிறார்கள் “
என்ற கேள்வி கோஷங்களை எழுப்பினர் …
இணையில் தொடபாற் மனித உரிமை மீறல் மற்றும் தமிழர் அடக்குமுறை என்பன தலைவிரித்தாடி வரும் நிலையில், மர்ம படுகொலைகள் ,கடத்தல்கள் ,அச்சறுத்தல்கள் ,என்பன
தொடர்ந்த வண்ணம் உள்ளது ஐநா மனித உரிமை மையம் சுட்டி காட்டி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது








பிக்பாஸ் ஆரவ் – ராஹி தம்பதிக்கு குழந்தை பிறந்தது
பிக்பாஸ் ஆரவ் – ராஹி தம்பதிக்கு குழந்தை பிறந்தது
பிக்பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வான ஆரவ் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் ஆரவ் – ராஹி தம்பதிக்கு குழந்தை பிறந்தது
ஆரவ் – ராஹி
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி,
சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார்.
ஆரவ்வும், நடிகை ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து
பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்களது திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி
நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
ஆரவ்
திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில், தற்போது இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை
பிறந்துள்ளது. இதையடுத்து ஆரவ்வுக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
புலிகளின் தற்கொலை அங்கி,குண்டுகள் மீட்பு
புலிகளின் தற்கொலை அங்கி,குண்டுகள் மீட்பு
புலிகள் பயன்படுத்து வந்த தற்கொலை அங்கிகள் ,மற்றும் தாங்கி எதிர்ப்பு குண்டுகள்
என்பனவற்றை தாம் மீட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
யாழ்ப்பாணம் மாந்துவில் பகுதியில் இந்த வெடிகுண்டுகள் மீட்க பட்டுள்ளன ,மாவீரர் நாளினை
முன்னிட்டு ஆண்டு தோறும் இலங்கை இராணுவம் இவ்வாறான சம்பவங்களை உருவாக்கி
வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
இலங்கையில் மனித உரிமை மீறல் அதிகரித்து செல்கிறது – பிரிட்டன் கவலை
இலங்கையில் மனித உரிமை மீறல் அதிகரித்து செல்கிறது – பிரிட்டன் கவலை
இலங்கையில் ஆளும் கோத்தபாயாவின் ஆட்சி காலத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள்
அதிகரித்து செல்வதாக பிரிட்டன் கவலை தெரிவித்துள்ளது
இது போன்ற கருது ஐநாவும் தெரிவித்துள்ள நிலையில் அதனை செவி சாய்க்காது மிதவாத
போக்கால் ஆளும்
அரசு செயல் பட்டு வருகிறது
மேற்படி விடயங்கள் நீடித்து செல்லுமாகின் அடகு இலங்கைக்கு பெரும் பின்னடைவை
ஏற்படுத்தும் என எதிர்பார்க்க படுகிறது
புலிகளின் கார்த்திகை மலரை அணிந்த இந்தியா இராணுவ தளபதி
புலிகளின் கார்த்திகை மலரை அணிந்த இந்தியா இராணுவ தளபதி
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கிட்டு நிகழ்வில் இந்தியாவின் முக்கியஸ்தரும் ஜெனரல் ராகேஷ்
நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கலந்து கொண்டார் , இவ்வாறு கலந்து கொண்ட இவர் விடுதலை புலிகள்
பயன்படுத்திய கார்திகை மலரை அணிந்து மகிழ்ந்தார்
புலிகளை அழிக்க உதவிய இந்தியா இப்பொழுது புலிகளை தேடி செல்லும் பாதையில் நடந்து
செல்வதை இத்தகைய நிகழ்வுகள்
கோடிட்டு காட்டுகின்றன
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2021 நவம்பர்24ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
இலங்கைக்கு தென்கிழக்காக தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த சில மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு அல்லது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
வெளிநாட்டு மொடலில் அமைக்க பட்டுள்ள புதிய பாலம்
வெளிநாட்டு மொடலில் அமைக்க பட்டுள்ள புதிய பாலம்
இலங்கையில் அதிநவீன கேபிள்களை கொண்டு நிர்மாணிக்கப்பட்ட புதிய களனி பாலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை திறந்து வைக்கப்படவுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இதில் கலந்துகொள்வார்.
இலங்கையில் முதற்தடவையாக அதிதொழில்நுட்பம் வாய்ந்த கேபிள் மீது அமைக்கப்பட்ட இந்தப் பாலம், கல்யாணி தங்க நுழைவாயில் என பெயரிடப்பட்டிருக்கிறது.
அதிகளவான வாகனங்கள் கொழும்பு மாநகருக்குள் நுழைவதனால், தற்போதைய களனி
பாலத்தில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக கடமையாற்றிய 2014ஆம் ஆண்டு
காலப்பகுதியில், புதிய களனிப் பாலத்தை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக பாதையின் முடிவில் இருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம்
வரை ஆறு வழிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலம் அந்த இடத்தில்
இருந்து ஒறுகொடவத்த வரையும் இங்குறுகடே சந்தி வரையும் துறைமுக நுழைவாயில் வரையும் நான்கு வழிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
களனி கங்கைக்கு குறுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலம் 380 மீற்றர் நீளம்
கொண்டதாகும். 41 ஆயிரத்து 432 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பாலம்
நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரபாகரன் கஞ்சா கடத்தினார் – கண்டு பிடித்தார் டக்கிளஸ் video
பிரபாகரன் கஞ்சா கடத்தினார் – கண்டு பிடித்தார் டக்கிளஸ்
இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்
கஞ்சா கடத்தினார் என தமிழ் மொழியை பேசியவாறு ஆளும் சிங்களவர்களை அண்டி பிழைத்து
,மேலாக நக்கி பிழைக்கும் டக்கிளஸ் தேவனாந்த தெரிவித்துள்ளார்
சிறிதரன் எம்பி பாராளுமன்றில் பேசிக்கொண்டிருந்த பொழுது குறுக்கிட்ட டக்கிலஸ் இவ்விதம்
தெரிவித்துள்ளார்
இவரது இந்த பேச்சு மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் மக்கள் போற்றும் ஒரு “தலைவனை” பற்றி பேசுவதற்கு அரசாங்கத்தின் கைக்கூலிகள் அருகதை அற்றவர்கள்!
இவர்களின் ஆதாரமற்ற அறிவிலித்தனமான கருத்துக்களை மக்கள் நன்கறிவார்கள்.
ஒழுக்கத்திலும் கொள்கையிலும் உயர்ந்தவர்கள் என்பதால் தான் விடுதலைப்புலிகள் மற்றையவர்களை விட இன்றும் தமிழ் மக்களிடத்தே உயர்ந்த இடத்தில் நிலைத்திருக்கிறார்கள்.
காணொளி முழுமையாக பார்க்க இதில் அழுத்துங்கள்
இலங்கையில் கொரனோவில் சிக்கி 24 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவில் சிக்கி 24 பேர் மரணம்
இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இருபத்தி
நான்கு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 522 பேருக்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து வேகமாக இந்த நோயானது பரவி வருவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க
பட்டுள்ளது
முஸ்லீம் எம்பி வீடு அடித்து நொறுக்கு – திருமலையில் தொடரும் பதட்டம்
முஸ்லீம் எம்பி வீடு அடித்து நொறுக்கு – திருமலையில் தொடரும் பதட்டம்
திருமலை கினியா பகுதியில் படகு சேவை தடம் புரண்டதில் ஏழுபேருக்கு மேல் பலியாகினர்
,மேற்படி சம்பவத்தை அடுத்து அந்த பகுதி எம்பியாக விளங்கும் முசுலீம் எம்பி வீடு மீது கூடிய குழு
ஒன்று திடீர் தாக்குதலை நடத்தியது
இதில் அவரது ஆடம்பர வீடு பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளது ,தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக பதட்டம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக பதட்டம்
யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக, இன்று (23), துப்புரவுப்
பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், இராணுவத்தினரும் பொலிஸாரும் நடந்து கொண்டுள்ளனர்.
கோப்பாய் துயிலும் இல்லத்தை, இராணுவத்தினர் இடித்தழித்து, பாரிய இராணுவ முகாமை
அமைத்து, நிலைகொண்டுள்ளனர். அதனால் துயிலும் இல்லத்துக்கு முன்பாக உள்ள தனியார் காணியில், மாவீரர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபடுவது வழமையாகும்.
தற்போது மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், அக்காணியின் முன்பக்கமாக வீதியின்
இருமருங்கினையும் துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது , கோப்பாய் பொலிஸார் மற்றும் பெருமளவான இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் சிலர், தாமும் துப்புரவுப் பணியில் ஈடுபடுவதாக கூறி,
துப்புரவுப் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.
இதேவேளை, இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களும் அங்கிருந்த ஊடகவியலாளர்கள்
உள்ளிட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படம் எடுத்ததுடன் வாகன இலக்கங்களையும் பதிவு செய்தனர்
மாவீரர் நாளினை மதிக்காத வரை – இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது-சிறிதரன்
மாவீரர் நாளினை மதிக்காத வரை – இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது
இலங்கையில் இறந்த மாவீரர்களை நினைவு கூற இலங்கை ஆளும் அரசுகள் தடை விதித்து
வருகின்றன இவ்வாறு இவர்கள் செல்வார்கள் ஆயின் நாட்டில் எவ்வாறு நல்லிணக்கத்தை
ஏற்படுத்த முடியும் என
சிறிதரன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார் .
இழுவைப் படகு விபத்து – சிலர் உயிரிழப்பு
இழுவைப் படகு விபத்து – சிலர் உயிரிழப்பு
கிண்ணிய நகரசபை மற்றும் பிரதேச சபையை இணைக்கும் குறிஞ்சாகேணி பாலத்தின் நிர்மாண
பணிகளில் தற்காலிகமாக சேவையில் ஈடுப்பட்டிருந்த மோட்டார் இழுவைப் படகு இன்று நீரில் மூழ்கியுள்ளது.
இன்று (23) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில்
பயணம் செய்துள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்
தெரிவித்துள்ளார்.thumbnail yyஉயிரிழந்தவர்களின் சடங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் கடற்படை மற்றும் பொலிசார் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸ்
ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்






