வெளிநாட்டு மொடலில் அமைக்க பட்டுள்ள புதிய பாலம்

Spread the love

வெளிநாட்டு மொடலில் அமைக்க பட்டுள்ள புதிய பாலம்

இலங்கையில் அதிநவீன கேபிள்களை கொண்டு நிர்மாணிக்கப்பட்ட புதிய களனி பாலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை திறந்து வைக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இதில் கலந்துகொள்வார்.

இலங்கையில் முதற்தடவையாக அதிதொழில்நுட்பம் வாய்ந்த கேபிள் மீது அமைக்கப்பட்ட இந்தப் பாலம், கல்யாணி தங்க நுழைவாயில் என பெயரிடப்பட்டிருக்கிறது.

அதிகளவான வாகனங்கள் கொழும்பு மாநகருக்குள் நுழைவதனால், தற்போதைய களனி

பாலத்தில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷ,

ஜனாதிபதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக கடமையாற்றிய 2014ஆம் ஆண்டு

காலப்பகுதியில், புதிய களனிப் பாலத்தை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக பாதையின் முடிவில் இருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம்

வரை ஆறு வழிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலம் அந்த இடத்தில்

இருந்து ஒறுகொடவத்த வரையும் இங்குறுகடே சந்தி வரையும் துறைமுக நுழைவாயில் வரையும் நான்கு வழிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

களனி கங்கைக்கு குறுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலம் 380 மீற்றர் நீளம்

கொண்டதாகும். 41 ஆயிரத்து 432 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பாலம்

நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    Leave a Reply