Category: வன்னி மைந்தன் கவிதைகள்
வன்னி மைந்தன் கவிதைகள் , காதல் கவிதைகள் வன்னி மைந்தன் ,மனித உணர்வின் பிரதியாக நடைமுறை வாழ்வியலில் ஒன்றாக கலந்துள்ளது .
நாளை அழுவாய்
நாளை அழுவாய்
அத்தை கருப்பையில
அவ தாரம் எடுத்தவளே
உன்னை நான் மணக்க
உரிமம் தந்து விடு
வெத்தலையா நீ சிவக்க
வேகி மனம் துடிக்க
ஒத்தையில தவிப்பவளே
உனை சுமக்க நான் வரவா?
உருகும் பனி மலையே
உதயத்தை துரத்திட வா ..?
அழகான மாரி மழை
அழைத்து வந்திட வா ..?
சக்கரையா நீ இருக்க
சமையலறை நான் தரவா ..?
உத்தரவு தந்து விடு
ஊற்றி டீ வைத்திட வா …?
கண்ணில் என்ன கலக்கமோ
கண்ணே என்ன தயக்கமோ ..?
ஏனோ இன்று உனக்கு
என்னை பிடிக்கலையோ ..?
தேடி தேடி வருகிறேன்
தேவை இன்றி போகிறாய்
நாளுமே ஏமாற்றம்
நாட்டி ஏனோ நடக்கிறாய் ..?
சொந்தம் என்று வந்தவனை
சோகத்தில வைத்தவளே
நான் மறந்து போகிறேனே
நாளை நீ அழுதிடுவாய் ….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம்-05-05-2021
எங்கள் தலைவிதி
எங்கள் தலைவிதி
இளம் காற்று பாடும் ஈழ கரையோரம்
இதயங்கள் நொறுங்கும் சோக துயரம்
எவர் செய்த சதியோ இத்துயர் கோலம்
எங்களின் வாழ்வில் ஏனோ இப் பாரம்
கரும்புகை ஏறி வானை மறைக்கும்
கந்த துகளில் மூச்சு உறையும்
வெடியோசை மண் கிளற வீழ்ந்தே இறந்தோம்
உடன் இருந்தார் விட்டே ஊர் ஏறி கடந்தோம்
வலியில் நெஞ்சு வாடி தவிக்க
வழி தெரியா நின்றோம்
உரிமை போரும் முடிவில் தவிக்க
உதவுவார் இன்றி ஏங்கி தவித்தோம்
தரணியில் நாங்கள் பிறந்தது கேடா
தமிழனாய் இங்கு வாழ்தல் பிழையா
சுதந்திரம் கேட்டோல் சூடு காடா
சுதந்திர தேசமே நீதி இல்லையா
மொத்த தமிழன் அழித்தான் உலகில் நடக்கிறான்
ஒட்டு துணி இல்லா தமிழன் தவிக்கிறான்
இத்துயரில் தினமும் எங்களின் தேசம்
இதயம் இல்லா நடக்கும் உலகம்..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 25-03-2021
நன்றி உனக்கு
நன்றி உனக்கு
நேற்றெந்தன் அகவையில
நேர் வந்த இளங்கிளியே
நீயுரைத்த வாழ்த்தொன்றால்
நிமிடங்கள் பேசுதடி
நாள் தோறும் அகவையில
நீ வந்து வாழ்த்திவிடு
நான் வாழ நீ தானே
நலமுடனே வாழ்த்து இடு
உன்போல உறவொன்றை
உயிரே நான் காணவில்லை
உள்ளத்தில் நீ இருக்க
ஊந்துகணை பயமில்லை
கரை பதிந்த அலை தடத்தை
காற்றே அழித்திடுமோ ..?
காயா நினைவலையை
கறையான் புற்று அரித்திடுமோ …?
ஓயாத அலை ஒன்றாய்
ஒலிக்கின்றாய் நெஞ்சுக்குள்
வரலாற்று சமரதுவாய்
வாழ்கின்றாய் நெஞ்சுக்குள்
குடாரப்பு தரையிறக்கம்
குழி தோண்டிய முற்றுகையாய்
வெறி கொண்ட வெற்றி ஒன்றாய்
வெளிச்சத்தை நீ தந்தாய் …!
- வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம்-11-03-2021 - வன்னி மைந்தன் கவிதைகள்
இறந்தால் உன்னை மறப்பேன் …!
இறந்தால் உன்னை மறப்பேன் …!
நினைத்து நினைத்து உருகிடத்தான்
நீ வந்து போகிறாய்- உன்
நினைவுகளை தந்து விட்டு
நிதம் ஏனோ மறைகின்றாய்..?
ஆழ் மனதில் நீயிருக்க
அன்பே உனை மறப்பேனா
அடியே உனை மறந்தால்
ஆவி உடல் தங்குமா ?
நீயெடுத்த முடிவொன்றால்
நிகழ் காலம் இதுவாச்சு
ஏதெடுத்து உனை மொழிவேன்
எப்படி உனை உமிழ்வேன்
காதோரம் செய்திகளை
காதலியே சொல்லிட வா— நான்
காணாமல் போகு முன்னே
கதை ஒண்ணு சொல்லிட வா
உருமாறும் அகவையில
உள்ளத்தை மாற்றிட வா
உனக்காக நான் வாழ்ந்தேன்- இந்த
உண்மையை ஏற்றிடவா
எதை உரைத்தும் இன்றென்ன
எனக்கில்லை நீதானே
எதை விதைத்தும் இன்றென்ன
எல்லாமே வீன்தானே
இருவருக்கும் இடையிலின்று
இடையே ஒர் வேலியிட்டாய்
இரு வேறாய் பிரிவதற்கா
இடையில் ஒரு பதி வைத்தாய்?
இதயத்தை சலவை செய்ய
இன்றென்னால் முடியாது
இறந்தால் உனை தொடரேன்
இதயமே வருந்தாதே …!
வன்னி மைந்தன்
ஆக்கம் -10-03-2021
தெரிந்து செய்
தெரிந்து செய்
ஆடி பறக்கும் பட்டத்திற்கு
ஆணவம் கூடாது
ஆடும் காற்று இல்லை என்றால்
அது வானில் ஏறாது
நூலை பிடித்தும் பயனில்லை
நுணுக்கங்கள் புரிந்து விடு
மேல் என நினைத்து ஆடி விடும்
மேன்மை குறைத்து விடு
குளிர்ச்சி பொழிவது மலைகள் தானே
குமரா புரிந்து விடு
குடி நீரை தருவது அவைதானே
குணத்தினை புரிந்து விடு
நிலமும் உயிரும் வாழ்ந்துவிட
நீரே மூலதனம் -இந்த
நிலைகள் அறிந்திடா வாழ்ந்து விடின்
நீயோர் மூடத்தனம்
உயரம் என்றே நினைத்து
உள்ளம் மகிழாதே – உன்
உண்மை தெரிந்தால்
ஊரே மிதிக்கும் நிலைகள் மறவாதே
வானை முட்டும் மரங்கள் அழிப்பின்
வாழ்வு வாடி விடும்
வாழும் போதே வாழ்ந்திட பழகு
வாழ்வு உயர்ந்து விடும்
வன்னி மைந்தன் – (ஜெகன்)
ஆக்கம் – 08-03-2021
வன்னி மைந்தன் கவிதைகள்

நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை …!
நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை …!
ஒத்தையில நீ தனித்து
ஒடிந்துருகி போனவளே
நித்தம் பல கோயில் ஏறி
நின்று வரம் பெற்றவளே
மூச்சடக்கி வீழ்ந்த துயர் – நீர்
மூழ்கி விழி போனதடி
அல்லும் பகல் வாயில் வந்து
அறம் பேசி நிற்பவளே
உந்தன் துயர் பாடும் நிலை
உயிர் விட்டு தந்ததென்ன
நெஞ்சுருகி நாம் கதறும்
நிலை இன்று வைத்த தென்ன
ஒத்த பிள்ளை பெற்றவளே
ஒத்தி ஒத்தி வளர்த்தவளே
பெற்றவளே உனையிழந்து
பேரன்பு கதறுதடி
அன்புருகி பேசி நிதம்
ஆறுதல் சொல்பவளே
நெஞ்சிளகி நாம் வாழ
நீ வந்து பேசாயோ ..?
முன் தினத்தில் கோழிக்கறி
முழு சமையல் செய்தவளே
அன்புருகும் பிள்ளாய்க்கு
ஆக்கி நன்றே தந்தவளே
இன்று அதை எண்ணி எண்ணி
இதயமுடைந்து அழுகிறானே
பெற்றவளே உனையிழந்து
பெரும் துயரில் தவிக்கிறானே
சோதனைகள் ஆயிரமாம்
சோடனையாய் தூவையிலும்
அவை எல்லாம் நெஞ்சடக்கி
அமைதியாய் நடந்தவளே
நீ வீழ்ந்த செய்தி இன்று
நெஞ்சில் துயர் தந்ததம்மா
இன்று வரை உன் இறப்பை
நெஞ்சு நம்ப மறுக்குதம்மா …!
மாரடைப்பால் -இன்று மல்லிகா அக்கா வீழ்ந்த ஆறா துயரில்…..
-வன்னி மைந்தன்-(ஜெகன் )
ஆக்கம் -03-03-2021

முடிந்தால் அடக்கு
முடிந்தால் அடக்கு …!
அடக்கு முறை இங்கு வெடிக்குதடா
அடக்க என்னை துடிக்குதுடா
மிதித்தால் எழுத்து அடங்குமோ ..?
மிதவாத கால் பணியுமோ ..?
பெண்ணுடன் ஒரு சிங்கமாம்
புனைந்ததால் ஒரு வம்சமாம்
ஆளுது அங்கொரு நாடடா
அதனால் தினம் தொல்லைடா
அஞ்சி பாதம் வீழ்வதோ
அடிமையாய் யான் மாய்வதோ
கெஞ்சி விழும் நிலையிலே
கேடு கெட்டு வாழ்வதோ
கொஞ்சி தமிழ் பேசிடும்
கொள்கை மண்ணில் வீழுமோ ..?
அஞ்சிடாத புலியவன்
ஆண்ட மண் பரம்பரை
செய்தவன் கொலை காலிலே
செந்தமிழ் இன்று வீழ்வதோ ..?
உண்மை மறைத்து உலகிலே
ஊடகத்தை ஆள்வதோ ..?
செவந்து குருதி ஓடலாம் – மண்ணில்
செத்தே இன்று வீழலாம்
கொத்து கொத்தாய் கொன்றவன்
கொலை காலிலே வீழ்ந்திடேன்
முகநூலை முடக்க துடிக்கிறாய்
,முடக்கு முடக்கு போகிறேன்
நேரம் கொஞ்சம் மிஞ்சிடும்
நேர்த்தி பொங்கி எழுந்திடும்
ஏதும் இல்லா காலத்தில்
எழுந்து நாம் நடந்தவர்
ஏது இங்கு வேணுமோ
எழுதினேன் இழுத்து முடக்கு
எதிரி எனக்கு இருக்கு
எதிரி யான் உனக்கு
எரியும் இனி விளக்கு
எழுதுறேன் இனி உழக்கு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 19-02-2021
முகநூலை நிரந்தரமாக முடக்குவதாக இப்போது செய்தி வந்த போது –
கண்ணீர் அஞ்சலி ….!
கண்ணீர் அஞ்சலி ….!
ஆறாத் துயரில் மீளா எம்மை
ஆற்றிட வருவாயா ..?
அறத்தை நாட்டி எழுந்த பூவே
ஆறுதல் கூறாயா …?
விடயம் அறிந்தே கதறும் விழிகள்
விழிகள் பாராயா ..?
விடலை உன்னை தின்ற கொரனோ
இன்று சாகாதா
ஒன்றாய் படித்த நாட்களது
ஓடுது விழியுள்ளே – நீ
ஒடித்து தந்த மாங்காய் துளிகள்
இனிக்குது நாவினிலே
நேற்று வீழ்ந்தாய் என்ற செய்தி
நெஞ்சை உடைத்ததுவே
நேசம் வைத்த மாணாக்கர்
நெஞ்சம் வேகிறதே
நாற்பத்தொன்று ஆகுமுன்னே
நரபலி எடுத்தானோ
நம்பி வணங்கும் ஆண்டவனும்
நலம் இன்றி போனானோ
ஊரும் கதற உறவும் கதற
உன் உடல் போகிறதே
ஊழி தீயும் உன் உடல் உண்ண
ஊர்வலம் நடக்கிறதே
எங்கள் தோழி உன்னை கொன்ற
எமனை சிறையிலிடு
எரியும் தணலில் அவனை தள்ளி
ஏ மனமே எரித்து விடு ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் 15-02-2021
எம்மோடு கல்வி கற்ற மாணவி ,கனடாவில் …..மரணத் துயர் அறிந்த பொழுது …!
என்னை ஏன் கைது செய்தாய் …?
என்னை ஏன் கைது செய்தாய் …?
அலை வீசும் கடலா நீ
அதில் ஓடும் மீனா நீ
எதுவென்று சொல்லாயோ
என் மனதை வெல்லாயோ …?
பாய் விரிக்கும் புல்வெளியில்
பனி துளியாய் வீழ்பவளே
உதயமாய் நான் விடிய
உருண்டோடி மறைவதெங்கே ..?
தெருவெல்லாம் பூவெய்தி
தேவதைகள் நடக்கையில
உனை மட்டும் என் விழிகள்
ஊர்வலமாய் தொடருதடி
கன்ன குழி பேரழகே
காவியத்தின் ஓரழகே
உள்ளத்தில் எனை மட்டும்
உயிரே சிறை வைக்காயோ ..?
உன் மூச்சு சுவாசத்தில்
உயர் மேகம் கருக்கட்டி
மழை வந்து கொட்டுதடி
மார்கழியாய் தாக்குதடி
இயற்கையே உன்னிடத்தில்
இன்று சரண் ஆகுதடி
நடமாடும் மனிதனடி
நான் காதல் செய்யேனோ …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 10-02-2021
உன்னால் தவிக்கிறேன்
உன்னால் தவிக்கிறேன்
சில்லறையா நீ குலுங்க
சிலிர்க்குதடி என் உடம்பு
சிந்தையில நீ நடக்க
சிதறுதடி என் குசும்பு
வம்பு பண்ண வந்தவளே
வாசலிலே நிற்பதுவோ ..?
வாலாட்டி நான் சுற்ற
வாய் விட்டு சிரிப்பதுவோ ..?
கோடையில ஆற்று நீரை
கொதிக்க வைக்கும் சூரியனே
வெப்பத்தை தூவி விட்டு
வெண்ணிலவு போவதெங்கே ..?
குழைத்து வைத்த மாவை போல
குமரி புள்ள நீ கிடக்க
அவித்து உன்னை தின்ன
ஆள் மனசு துடிக்காதோ ..?
என் தோப்பில் பூவாகி
எனக்கெனவே காய்த்தவளே
நான் மட்டும் ரசித்துவிடும்
நாள் ஒன்றை காட்டாயா …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 09-02-2021
இனி என்ன செய்வாய்
இனி என்ன செய்வாய்
பாயும் புலியாய் படை எடு
பகைவன் நடுங்க உருவெடு
அனலது கொதிப்பை நீ கொடு
அகிலம் வியக்க உயிர்ப்பெடு
பொத்துவில் முதல் பொலிகண்டி
பொங்கின தமிழ் தொடர்வண்டி
எவரடா கண்டார் இவ்வண்டி
எழுந்தே ஓடும் தொடர்வண்டி
சரிதம் எழுதிட எழுகிறார்
சரித்திரம் படித்தே வெடிக்கிறார்
வேரை அறுத்ததாய் நினைத்தவர்
வெகுயென எழுச்சியில் துடிக்கிறார்
குருதி குடித்தவன் ஆள்வதோ
குண்டு வெடித்தவன் சிரிப்பதோ
மாண்டவர் கனவு மாள்வதோ
மடையனாய் தமிழன் வாழ்வதோ
கொன்றவன் ஆட்சியில் விடுதலை
கொடி நாட்டு உலகில் முன்னிலை
இனமது அழித்தால் இதுவரும்
இனியெனும் உணரட்டும் சிங்களம்
வன்னி மைந்தன்
ஆக்கம் 08-02-2021
பொத்துவில் முதல் பொலிகண்டி
வரலாற்று பேர் எழுச்சி கண்டு
நீ வர வேண்டும் ….!
நீ வர வேண்டும் ….!
வான் எழுந்த வெண்ணிலவு
வாசலிலே வீழ்ந்தது
கோலம் உண்ட எறும்புகளும்
கூடி நின்று அழுதது
தேடி வந்த குயில்களும்
சேவை இன்றி கிடந்தது
தேகம் இழந்து தேசமொன்று
தெரு பிச்சை ஆனது
வாடியின்று விழிகள் எல்லாம்
வார்த்தை இன்றி கிடக்குது
வானமதில் உதயமதன்
வரவை இன்று தேடுது
நாளை ஒரு வேளையது
நாடு வந்திடாதோ …?
நாங்கள் வாழ ஒளிக்கீற்றை
நம்பி தந்தி டாதோ …?
கதவில்லா வீட்டுக்குள்ளும்
கண் உறங்க வேண்டுமே
கரிகாலா உன் எழுச்சி
களம் வர வேண்டுமே ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் 02-02-2021
நீ வர வேண்டும்
நீ வர வேண்டும்
வான் எழுந்த வெண்ணிலவு
வாசலிலே வீழ்ந்தது
கோலம் உண்ட எறும்புகளும்
கூடி நின்று அழுதது
தேடி வந்த குயில்களும்
சேவை இன்றி கிடந்தது
தேகம் இழந்து தேசமொன்று
தெரு பிச்சை ஆனது
வாடியின்று விழிகள் எல்லாம்
வார்த்தை இன்றி கிடக்குது
வானமதில் உதயமதன்
வரவை இன்று தேடுது
நாளை ஒரு வேளையது
நாடு வந்திடாதோ …?
நாங்கள் வாழ ஒளிக்கீற்றை
நம்பி தந்தி டாதோ …?
கதவில்லா வீட்டுக்குள்ளும்
கண் உறங்க வேண்டுமே
கரிகாலா உன் எழுச்சி
களம் வர வேண்டுமே ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் 02-02-2021
காதல் வந்தது எப்படி …?
காதல் வந்தது எப்படி …?
நான் நடந்த வீதியில
நீ வந்த வேளையில
நான் தொலைந்து போனேனே
நாயகியை நினைந்தேனே
நீ பேசும் போதெல்லாம்
நித்தம் நான் இரசிக்கிறேன்
நிகழ் காலம் உன் மடியில்
நீண்டுறங்க துடிக்கிறேன்
நாளை என்ற நாளதனை
நான் எண்ண மறுக்கிறேன்
நாடி வந்து உன்னடியில்
நான் கூட துடிக்கிறேன்
சிரிப்பாலே கதை பேசி
சிறை வைத்து போபவளே
என்ன உந்தன் மந்திரமோ
என்னை சுற்ற வைத்த தந்திரமோ …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 01-02-2021
இது எப்படி இருக்கு …?
இது எப்படி இருக்கு …?
வான் நிலவு வந்திருச்சு
வாசலில கைப்பிடிக்க
தேடி வந்த வெண்ணிலவே
தேற்றிடுவேன் முன்னிரவே
துள்ளி வரும் ஆசையை
துளிர் மீசை நறுக்கிவிடு
காலம் இதுவல்ல
காத்திரு நம்பிவிடு
என் மனதை புரியாம
ஏங் கிளியே போவதுவோ …?
முழுகாம நான் வரவோ
மூணு இலை வைத்திடவோ …?
தேதியை மறந்து இன்று
தேடி வந்த பாவப்புள்ள
நினைவில ஏது இருக்கு
நிஜமா சொல்லி விடு
சிக்கனமா நீ இருந்து
சில்லறையை கொட்டிவிடு
முழுப் போக அறுவடையில்
முழுதாக விற்றிடலாம் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 31-01-2021
இது எப்படி இருக்கு
இது எப்படி இருக்கு
வான் நிலவு வந்திருச்சு
வாசலில கைப்பிடிக்க
தேடி வந்த வெண்ணிலவே
தேற்றிடுவேன் முன்னிரவே
துள்ளி வரும் ஆசையை
துளிர் மீசை நறுக்கிவிடு
காலம் இதுவல்ல
காத்திரு நம்பிவிடு
என் மனதை புரியாம
ஏங் கிளியே போவதுவோ …?
முழுகாம நான் வரவோ
மூணு இலை வைத்திடவோ …?
தேதியை மறந்து இன்று
தேடி வந்த பாவப்புள்ள
நினைவில ஏது இருக்கு
நிஜமா சொல்லி விடு
சிக்கனமா நீ இருந்து
சில்லறையை கொட்டிவிடு
முழுப் போக அறுவடையில்
முழுதாக விற்றிடலாம் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 31-01-2021
நீயா வீழ்ந்தாய்
நீயா வீழ்ந்தாய்
எழுந்து நடந்த புயல் ஒன்று
வீழ்ந்துடைந்தது
எமன் வைத்த வஞ்சத்தில்
ஏணி ஒன்று சரிந்தது
பார் படித்த பேரறிவை
பாடையின்று சுமக்குது
பார் விழிகள் குளமாக
பகலொன்று உறங்குது
சிம்மா சனமொன்று
சிறகொடிந்து கிடக்குது
வேர் பதித்த மன குவியல்
வேகி வேகி கதறுது
மல்லிகையில் பூவெய்தி
மண மணக்க நடந்தவன்
மணி மணியாய் கவி சொல்லி
மனதுக்குள் நின்றவன்
காப்பெடுத்து முற்போக்கை
கை பிடித்து நடந்தவன்
நான்கு தோள்கள் சுமக்க
நடையிழந்து போகிறான்
தீராத பகையானான்
உயிர் தின்ற எமனவன்
சென்று வா பேரறிவே
செய்தி கொண்டுவா எம்முறவே …!
மல்லிகை இதழ் ஆசிரியர் டொமினிக் ஜீவா 28-01-2021மரணமான துயரில் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 29-01-2021
உன்னால் தவிக்கிறேன்
உன்னால் தவிக்கிறேன்
சாயம் பூசி இன்றெந்த
சண்டைக்களம் போகிறாய் …?
உன் உதட்டை காட்டியேன்
உலக யுத்தம் மூட்டிறாய் …?
பாரத போர் ஒன்றை
பாவை நீ மூட்டாதே
முன் பகலை இரவாக்க
முழுமதியே வைக்காதே
பேரழகே முன் வந்தால்
கார் மேகம் கூடாதோ …?
முன்னே இடி மின்னல்
முட்டி மோதாதோ ..?
கட்டி கை கட்டி
கண்ணே என்ன பார்க்கிறாய் ..?
தோள் சாயும் கூந்தலில
தொங்க விட்டேன் போகிறாய் …?
ஏக்க பார்வையிலே
என்னை தானே தேடுறாய் …?
உன்னழகை பருகிடவோ
உள்ளமே வாடுறாய் …?
விழிமேலே இமை வைத்து
விடயத்தை அளக்கிறாய்
உயிர்மேலே எனை வைத்து
உள்ளமே அழைக்கிறாய்
கொஞ்சும் உந்தன் பேரழகு – என்
உயிரை வாட்டுதடி
கரும் சட்டை காவியமே
கண்ணுறக்கம் தொலையுதடி …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 24-01-2021
மனிதன் மட்டும் மாறி விட்டான்
மனிதன் மட்டும் மாறி விட்டான்
சாதியில் இரண்டு ஊரடா -இறுதியில்
சனமது செத்த நிலமடா
இதனை செய்தவன் யாரடா
இந்த கேவலம் ஏனடா
சாதியில் என்ன சாதனையோ
சக மனிதற்கு இதனால் வேதனையே
ஆறாம் அறிவை முதல் தட்டு
அதனில் ஏறி அறம் நாட்டு
ஊர்வன பறப்பன மோதவில்லை
உலகை போரை மூட்டவில்லை
மனிதன் மட்டும் மாறி விட்டான் – அவன்
மண்டைக்குள் யாரோ புகுந்து விட்டான்
இறைவன் படைப்பில் முதல் யாதி
இவனே உலகில் முதல் யோதி
அன்பு செலுத்துதல் மறந்து விட்டு
அழித்தலை ஏனோ தொடர்ந்து விட்டான் …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 23-01-2021
கரையான் முள்ளிவாய்க்கால் –
வெள்ளாம் முள்ளிவாய்க்கால் –
ஈழம் மலரும் காத்திரு
ஈழம் மலரும் காத்திரு
இறந்தவர் கல்லறை உடைத்த கேவலன்
இவனா இலங்கா கோமகன் ..?
படைத்தவன் பிரம்மன் படைப்பினை அறிவான்
பலியுன்னை எடுக்க வருவான்
அறுக்கையில் தலைகளை
அழுதன குரல்கள்
அவை கண்ணீர் சாபம் விடுமா ..?- உன்
அரியணை இங்கு தொடருமா ..?
எரியும் நெஞ்சின்
எரிமலை பிழம்புகள்
எழுந்தே ஒரு நாள் ஆடும்
எங்களின் தேசம் மலரும்
விடுதலை என்றுமே சாகாது – அதன்
விதிகள் என்றுமே மாறாது
செய்தவன் பலியது தீர்க்காது
செந்தமிழ் என்றுமே உறங்காது
இனக்கொலை புரிந்த உன்னோடு
இணைந்து வாழ்தல் முறைகேடு
தனியது அரசை தமிழ் அமைக்கும்
தரணியில் இதற்கொரு இடம் கிடைக்கும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 22-01-2021






