கண்ணீர் அஞ்சலி
Posted in கவிதைகள் முக்கிய செய்திகள்

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

அன்பினாலே எங்களை அரவணைத்தவன்
அன்றாடம் எமக்கு உதவி நின்றவன்
உடன் பிறந்தார் போலெம்மை அரவணைத்தவன்
உதட்டினிலே பொய்யில்லா பேசிநின்றவன்

வயல் விதைக்க வந்து நின்று
வளம் தந்தவன்
வாலிபத்தில் எங்களுக்கு
துணை நின்றவன்

அறத்தினாலே எங்களை ஆர்ப்பரித்தவன்
அந்தோபார் இன்றெம்மை அழவைத்தவன்
வீதியிலே போகையில வீழ்ந்து போனவன்
விபத்தினிலே விதியிடை மாண்டுபோனவன்

காலையிலே வந்த சேதி
கண்ணீர் தந்தது
கை தொழுதேன் கண்ணீர் மல்க
கண்ணீர் அஞ்சலி

முரசுமோட்டையை சேர்ந்த சேற்றுக்கண்டி
தோழர் ரூபன் அவர்கள் 14-11-2023 கனடாவில் விபத்தில் மரணமான செய்தியறிந்த பொழுது …

இவரது விபத்து செய்திகள் ,வீடியோ பார்க்க இதில் அழுத்துக

கண்ணீர் அஞ்சலி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

நெஞ்சுக்குள் நிற்கின்ற பேரொளி – இவன்
நேயத்தில் வீசிடும் கதிரொளி
அன்பிலே கலங்கிடும் கண்விழி
அஞ்சா பேசிடும் தமிழ் மொழி

கொடை கொட்டியே பொழிந்திடும் பெருமழை
கொடி நாட்டியே எழுந்திட்ட பெருமலை
தடை தாண்டியே ஓடிய பெரும் அலை
தானத்தில் இவனே பெரும் தலை

வானத்தில் ஓடிய பெரும் முகில்
வாடியே வீழ்ந்தான் ஏன் துயில்
ஆழ் மனம் மறக்க மறுக்கிறதே – உன்
அன்பில் நொடிகளும் துடிக்கிறதே

இத்தனை வேகத்தில் ஏன் மறைந்தாய்
இந்த விழிகளில் நீர் ஏன் வைத்தாய்
உச்சத்தில் ஆடிய பெரும் முகில் – இன்று
உருகுதே பார் ஐயா உடல் தீயில்

கத்தியே அழுகிறோம் கண் திறவாய்
கண்ணீரை வந்து நீ துடைப்பாய்
என்றுன்னை இனி நாம் காண்போம்
ஏனோ இறைவா நீ பறித்தாய் ..

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-10-2023
காந்தி மாமா பிரிவின் துயரில் கண்ணீர் சமர்ப்பணம்
( திருவையாறு இரத்தினபுரம்)

Posted in சினிமா

காதல் தோல்வியின் வேதனையை தாங்கி கொள்வது கஷ்டம் – நடிகை

காதல் தோல்வியின் வேதனையை தாங்கி கொள்வது கஷ்டம் – நடிகை

அங்காடி தெரு’ படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து

மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

அவர் காதல் தோல்வியில் இருந்து மீண்டது குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: நான் காதலில் விழுந்தேன் என்றும், எனக்கு குழந்தைகள் இருக்கிறது என்றும் தகவல்

பரவி உள்ளது. காதலில் விழவே இல்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன். ஒருவரோடு காதலில் இருந்தேன். அது நிறைவேறவில்லை. அது நடந்து இருந்தால் நானே பெருமையாக எல்லோருக்கும் சொல்லி இருப்பேன்.

அஞ்சலி

நடிகை மட்டுமன்றி எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் காதல் தோல்வியானால் அந்த வேதனையை தாங்கி கொள்வது கஷ்டம்தான். பெண்கள் இதயம் கல் இல்லை.

ஆனால் அந்த வேதனையில் இருந்து நான் கொஞ்சம் சீக்கிரமாகவே வெளியே வந்து விட்டேன். அதற்கு எனது அம்மாதான் காரணம்.

அவர் வலிமையான பெண். அம்மா கொடுத்த தைரியத்தில்தான் இன்னும் சினிமாவில் நீடிக்கிறேன்”. இவ்வாறு அவர் கூறினார்.

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

கண்ணீர் அஞ்சலி ….!

கண்ணீர் அஞ்சலி ….!

ஆறாத் துயரில் மீளா எம்மை
ஆற்றிட வருவாயா ..?
அறத்தை நாட்டி எழுந்த பூவே
ஆறுதல் கூறாயா …?

விடயம் அறிந்தே கதறும் விழிகள்
விழிகள் பாராயா ..?
விடலை உன்னை தின்ற கொரனோ
இன்று சாகாதா

ஒன்றாய் படித்த நாட்களது
ஓடுது விழியுள்ளே – நீ
ஒடித்து தந்த மாங்காய் துளிகள்
இனிக்குது நாவினிலே

நேற்று வீழ்ந்தாய் என்ற செய்தி
நெஞ்சை உடைத்ததுவே
நேசம் வைத்த மாணாக்கர்
நெஞ்சம் வேகிறதே

நாற்பத்தொன்று ஆகுமுன்னே
நரபலி எடுத்தானோ
நம்பி வணங்கும் ஆண்டவனும்
நலம் இன்றி போனானோ

ஊரும் கதற உறவும் கதற
உன் உடல் போகிறதே
ஊழி தீயும் உன் உடல் உண்ண
ஊர்வலம் நடக்கிறதே

எங்கள் தோழி உன்னை கொன்ற
எமனை சிறையிலிடு
எரியும் தணலில் அவனை தள்ளி
ஏ மனமே எரித்து விடு ….!

வன்னி மைந்தன்
ஆக்கம் 15-02-2021
எம்மோடு கல்வி கற்ற மாணவி ,கனடாவில் …..மரணத் துயர் அறிந்த பொழுது …!

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

கண்ணீர் அஞ்சலி ….!

கண்ணீர் அஞ்சலி ….!

ஓடி வரும் காற்றடித்து
ஒடிந்து விழும் இலைபோல
மனமுடைந்து போனதையா – விழி
மாரி மழை ஆனதையா ….

கால் ஊன்றி நடைபயின்ற
காலமதில் அருகிருந்து …
நேசம் தந்து நின்றவரே
நெஞ்சமது வெம்புதையா ….

கட்டி முத்தம் தந்து அன்று
கதைகள் பல சொல்லி நன்று
வாங்கி தந்த மிட்டாய்கள்
வாயிலின்றும் சுவைக்குதையா ….

கைபேசி மணியடிக்க
கலகலத்து பேசி நின்றாய்
இன்றும் உந்தன் சிரிப்பொலிகள்
இரு செவியில் ஒலிக்குதையா ….

பேரன்பு கொண்டவரே
பெரும் துயரை தந்து இன்று
எம்மை விட்டு போனதென்ன
ஏங்கவைத்து சென்றதென்ன …?

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -16/08/2019( 00447536707793)
18-08-2019 அன்று தாத்தாவின் மரண துயரில் …..அவர் பாதம் ..என் கண்ணீர் சமர்ப்பணம்

கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி