இலங்கைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்

இலங்கைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்

இலங்கைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம் ,இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான A/HRC/57/L.1 வரைபு தீர்மானம் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய

நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வின் போது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

இது ஆளும் அனுரா அரசுக்கு ஆதரவாக மாற்றம் பெறும் நிலையாக காணப்படுகிறது .

கடந்த கால அரசுகளுக்கு பல தீர்மானங்கள் வாக்குறுதிகள் வழங்க பட்ட நிலையில் ,தற்போது அவை தட்டி கழிக்க பட்ட நிலையில் ,அனுரா குமார திசாநாயாக்கவுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

விமல் வீரவன்ச பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை
Posted in இலங்கை செய்திகள்

விமல் வீரவன்ச பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை

விமல் வீரவன்ச பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை

விமல் வீரவன்ச பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை ,முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.

“ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில், மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றுப் பாரம்பரியத்தை மதிக்கும் மற்றும் உரிமையுள்ள ஒரு இயக்கம் என்ற

வகையில், ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த ஆணையைப் பாதுகாப்பதற்கும் அந்த ஆணையை வழங்கிய மக்களின், எதிர்பார்ப்புகளுக்கு

ஆதரவாக நிற்பதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என வீரவன்ச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதை உறுதிசெய்வதை

இலக்காகக் கொண்டு, பெரும்பான்மையை அடையாத பட்சத்தில் முடிவுகளைப் பாதிக்கக்கூடிய ஏனைய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்காமல் ஆட்சியமைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்சியின் அனைத்து மட்டத்தினருடனும் கலந்தாலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த வீரவன்ச, எதிர்வரும் பொதுத் தேர்தல்கள்

தொடர்பான கொள்கைப் பிரகடனத்தை அடுத்த சில நாட்களில் கட்சி வெளியிடும் என்றும் கூறினார்.

ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவை “இரண்டாம் கோட்டாபய” ஆக்குவதற்கான ஏகாதிபத்திய சதியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும்,

அவ்வாறான முயற்சிகளுக்கு தேசிய சுதந்திர முன்னணி அதில் ஒரு கட்சியாக இருக்காது எனவும் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்க கடற்படை அட்மிரல் இன்று இலங்கை வருகை
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்க கடற்படை அட்மிரல் இன்று இலங்கை வருகை

அமெரிக்க கடற்படை அட்மிரல் இன்று இலங்கை வருகை

அமெரிக்க கடற்படை அட்மிரல் இன்று இலங்கை வருகை ,ஐக்கிய அமெரிக்க பசுபிக் படையணியின் கட்டளை அதிகாரியும் கடற்படை தளபதியுமான அத்மிரால் ஸ்டீவ் கெய்லர் இன்றைய தினம் (10) இலங்கை வரவுள்ளார்.

2021 ஆம் ஆண்டின் பின்னர், இலங்கைக்கு வருகை தரும் உயர்மட்ட இராணுவ அதிகாரியாக இவர் கருதப்படுகிறார்.

வலுவான, நிலையான, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான

பங்காளித்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அவரது விஜயம் அமைந்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது ,நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகஹவத்த பகுதியில் நேற்று பிற்பகல் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பம்பரகஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 42 வயதானவர் என தெரியவந்துள்ளது.

கைதான சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு

இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு

இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன.

75 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10) குறித்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும், 1,273 இதர நிலைகளில் உள்ளவர்களும் அவர்களின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றவுள்ளனர்.

திடீரென தீப்பிடித்து எரிந்த பஸ்
Posted in இலங்கை செய்திகள்

திடீரென தீப்பிடித்து எரிந்த பஸ்

திடீரென தீப்பிடித்து எரிந்த பஸ்

திடீரென தீப்பிடித்து எரிந்த பஸ் ,கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று மாதம்பே-கவுடுவாவ பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இன்று (10) காலை கொழும்பில் இருந்து புறப்பட்ட பஸ்ஸில் சம்பவம் இடம்பெற்ற போது சுமார் 50 பயணிகள் அமர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் பஸ் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அனுராவுக்கு பெருகும் ஆதரவு பதறும் எதிரிகள்
Posted in இலங்கை செய்திகள்

அனுராவுக்கு பெருகும் ஆதரவு பதறும் எதிரிகள்

அனுராவுக்கு பெருகும் ஆதரவு பதறும் எதிரிகள்

அனுராவுக்கு பெருகும் ஆதரவு பதறும் எதிரிகள் ,இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரா குமரா திசாநாயக்க ஆட்சி செயல் நகர்வு கண்டு எதிர்க்கட்சிகள் பெரும் கலக்கத்தில் உறைந்துள்ளது .

புதிய அரசியல் மாற்றத்தையும் ,அடக்குமுறை உடைத்தெறிந்து ,மக்கள் விடுதலைக்கு குரல் கொடுக்கும் ஒருவராக அனுரா குமார திசாநாயக்க காணப்படுகிறார் .

மக்கள் பெரும் ஆதரவு தற்போது அவருக்கு அதிகரித்து .செல்கிறது ,தமிழர்களும் அவரை ஆதரிக்கின்றனர் .

புதிய கொள்கை மாற்றத்துடனும் திறந்த வெளியில் ,திறந்த மனதோடு பேசும் ஆற்றல் கொண்ட ஒருவராகவும் ,சாதாரண எளிமையுடன் அவர் காணப்படுவதே அனுரா குமார திஸாநாயக்கவை மக்கள் அதிகரிக்க நேசிக்க காரணமாக மாறியுள்ளது .

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனதிபதியாக பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை ,தமிழ் சிங்கள மக்களுக்கு மிக பெரும் விடயத்தை அனுரா குமார திசாநாயைக்கா ஆற்றிட ஆரம்பித்துள்ளார் .

அதுவே அவர் மீதான நம்பிக்கையும் ,ஆற்றைலையும் வெளிப்படுத்தி நிற்கிறது .

விடுதலையின் கனவு சுமந்தும் ,நின்மதியான வாழ்வு தேடி ஏங்கி தவிக்கின்ற தமிழ் மக்களுக்கும் அனுரகுமார திசாநாயக்க நல்லது செய்வார் என தமிழர் சமூகம் எதிர்பார்க்கிறது .

ஆகவே பாரளுமன்ற தேர்தலில் அர்ச்சுனாவி முன் நிறுத்தி அதன் ஊடாக பெரும் ஆதரவை அனுரகுமார திஸாநாயக்கவிற்கு நாம் ஆற்ற வேண்டும் என்பதே தமிழர் எதிர்பார்க்கவும் , உள்ளது .

இத்னால் தான் தமிழ் அரசியல் வாதிகள் இப்பொழுது அலற ஆரம்பித்துள்ளனர் .

அர்ச்சுனா சற்றுமுன் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா சற்றுமுன் விடுதலை

வைத்தியர் அர்ச்சுனா சற்றுமுன் விடுதலை

அர்ச்சுனா சற்றுமுன் விடுதலையாகி வந்துள்ளார் .தற்போது தனது தேர்தல் அரசியல் தொடர்பாக அணிகளை தயார்படுத்திய வண்ணம் இருக்கிறார் என்பதாக நம்ப படுகிறது .

ஆடுகளத்தை திறந்து தற்போது தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அர்ச்சுனா இராமநாதன் ,வெள்ளை வேட்டிகளை ஓட வைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார் .

சிறையில் அடைத்து சாதிகள் செய்த கும்பல் தற்போது விடுதலை பெற முடியாது மிரண்டு போயுள்ளனர் .

காலம் ஒருபோதும் அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவாக பயணிக்காது என்பதற்கு ,அர்ச்சுனா வரவு தெளிவாக எடுத்துரைத்துள்ளது .

வீரமும் ,விவேகமும் எவ்விதமான நகர்வு கட்டியம் இட்டுள்ளது என்பதை இப்பொழுது மக்கள் மன்றம் புரிந்துள்ளது .

இந்த புரிதல் ஏமாற்று கார்களையும் வெள்ளை வேட்டிகளையும் அலற வைத்துள்ளது எனலாம் .

வீடியோ

https://www.youtube.com/watch?v=qgZhFtjMUQs
லெபனான் காஸாவைப் போன்று அழிவை சந்திக்க நேரிடும் நெதன்யாகு
Posted in இலங்கை செய்திகள்

லெபனான் காஸாவைப் போன்று அழிவை சந்திக்க நேரிடும் நெதன்யாகு

லெபனான் காஸாவைப் போன்று அழிவை சந்திக்க நேரிடும் நெதன்யாகு

லெபனான் காஸாவைப் போன்று அழிவை சந்திக்க நேரிடும் என இஸ்ரேலின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

கொல்லப்பட்ட ஹெஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாஹ்வின் வாரிசுகளை, குழு ஹைஃபாவை தாக்கியதால், இராணுவம் ‘வெளியேற்றப்பட்டது’ என்று இஸ்ரேலிய பிரதமரின் கருத்துக்கள் கூறுகின்றன.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, லெபனான் “காசாவைப் போல” அழிவை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்ததோடு, கொல்லப்பட்ட ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றுவிட்டதாகக் கூறினார்.

செவ்வாயன்று லெபனான் குடிமக்களுக்கு உரையாற்றிய வீடியோ செய்தியில் நெதன்யாகுவின் கருத்துக்கள் வந்தன,

அதில் அவர் ஹெஸ்பொல்லா “பல ஆண்டுகளாக இருந்ததை விட பலவீனமானவர்” என்று கூறினார்.

கடந்த வாரம் பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் நஸ்ரல்லாவின் வாரிசாக வரவிருந்த உயர்மட்ட ஹெஸ்பொல்லா தளபதி ஹஷேம் சஃபிதீனை

குறிவைத்ததாக இஸ்ரேலிய இராணுவம் முன்பு கூறியது, ஆனால் அவரது கதி இதுவரை தெரியவில்லை.

நெதன்யாகுவின் சமீபத்திய கருத்துக்கள் குறித்து லெபனான் ஆயுதக் குழுவிடமிருந்து இதுவரை எந்தக் கருத்தும் இல்லை.

“காசாவில் நாம் பார்ப்பது போல் அழிவு மற்றும் துன்பத்திற்கு வழிவகுக்கும் ஒரு நீண்ட போரின் படுகுழியில் விழுவதற்கு முன்பு லெபனானைக் காப்பாற்ற உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது” என்று நெதன்யாகு தனது உரையில்,

முற்றுகையிடப்பட்ட என்கிலேவைக் குறிப்பிட்டு இடைவிடாமல் மற்றும் ஒரு வருடமாக இரத்தக்களரி இஸ்ரேலிய குண்டுவீச்சு பிரச்சாரம்.

இணையத்தள நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

இணையத்தள நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள்

இணையத்தள நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள்

இணையத்தள நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுதெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை நிதி மோசடிகள் தொடர்பில் 340 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.

“செப்டம்பர் மாதம் வரை, இணைத்தளங்கள் தொடர்பாக 7,210 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடகங்கள் தொடர்பானவையாகும்.

அதில் சுமார் 20% முறைப்பாடுகள் இணையத்தள மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வந்தவை.

இவற்றில், ஒன்லைன் வங்கியில் ஈடுபடும் பயனர்களைக் குறிவைத்து இணைய மோசடிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.

பெரும்பாலான நேரங்களில், ஒன்லைன் பேங்கிங் பயனர்கள் OTP எண்ணின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை, இது வங்கிக் கணக்கை அணுகுவதற்கு பயன்படுத்தப்படும் கடவுச்சொல் மற்றும் தற்காலிக கடவுச்சொல் ஆகும்.

ஒன்லைன் வங்கி மோசடிகள் தொடர்பாக கடந்த காலங்களில் 340 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

பலர் தமது வங்கி தொடர்பான இணையதளத்தை சரியாக அடையாளம் காணாததால் அடிக்கடி இந்த மோசடிகளில் சிக்கியுள்ளனர்” என்றார் .

05 மாவட்டங்களில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
Posted in இலங்கை செய்திகள்

05 மாவட்டங்களில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

05 மாவட்டங்களில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

05 மாவட்டங்களில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை ,இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக இதுவரை சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்களாக 33 குழுக்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யதுள்ளன.

நேற்றைய (08) தினம் வரை 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளில் நேற்று வரை எந்த அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை நிறைவடையவுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நேற்று நள்ளிரவுடன் முடிவடைய இருந்தது.

கைது 20 சீனர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கைது 20 சீனர்கள்

கைது 20 சீனர்கள்

கைது 20 சீனர்கள் ,மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை, கோரக்கான பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த 20 சீன பிரஜைகள் பாணந்துறை வடக்கு பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 5 மடிக்கணினிகள், 437 கையடக்கத் தொலைபேசிகள், தராசுகள், 332 USB கேபிள்கள், 133 கையடக்க

தொலைபேசி சார்ஜர்கள், 21 USB வயர் கோட், 17 ரவுட்டர்கள், 2 ஐபோன்கள் உள்ளிட்ட பல சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் வௌியில் இருந்து உணவுகளை எடுத்து வந்ததாகவும், இலட்சம் மாத வாடகை அடிப்படையில் அந்த விடுதியில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் இன்று (09) பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நிதிக்குற்றத்தை அவர்கள் செய்துள்ளார்களா? என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயுதங்கள் தேடும் இராணுவம்
Posted in இலங்கை செய்திகள்

ஆயுதங்கள் தேடும் இராணுவம்

புலிகளின் ஆயுதங்கள் தேடும் இராணுவம்

ஆயுதங்கள் தேடும் இராணுவம் ,முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம்

ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து தற்போது அந்த இடத்திலே அகழ்வு பணி இடம்பெற்று வருகிறது.

கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப்பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தேர்தல் நெருங்கும் கால பகுதியில் புலிகள் மீள் உருவாக்கம் செய்ய படுகிறார்கள் என்கின்ற விடயத்தை முன்னோடியாக வைத்து இந்த பரப்புரை இடம்பெறுவதாகவே பார்க்க மூடுகிறது .

33 கட்சிகள் வேட்புமனு தாக்கல்
Posted in இலங்கை செய்திகள்

33 கட்சிகள் வேட்புமனு தாக்கல்

33 கட்சிகள் வேட்புமனு தாக்கல்

33 கட்சிகள் வேட்புமனு தாக்கல் ,இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என மொத்தம் 33 கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.

நேற்றைய (08) தினம் வ 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளுக்கு நேற்று இறுதி வரை

எந்த அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா விடுதலை மகிழ்ச்சியில் மக்கள்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

அர்ச்சுனா விடுதலை மகிழ்ச்சியில் மக்கள்

அர்ச்சுனா விடுதலை மகிழ்ச்சியில் மக்கள் |தேர்தலில் களம் குதிப்பு |Dr Achchuna News

வீடியோ

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு
Posted in இலங்கை செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத், புதன்கிழமை (08) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில் அவர் கூறுகையில், விசாரணைகளின் முடிவுகள் விரைவில் வெளியாகும்.

அந்த பக்கங்கள் எவ்வாறு காணாமல் போயின என்பதும், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அனைத்து பக்கங்களும் அப்படியே உள்ளதா என்பதும் விசாரணைகளின் மூலம் கண்டறியப்படும் என்றார்.

மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல்
Posted in இலங்கை செய்திகள்

மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல்

மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல்

மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் நவம்பவர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

அதன்படி, மாவட்டத்தில் முதலாவது அரசியல் கட்சி நேற்று நண்பகல் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியே இவ்வாறு வேட்புமனுத் தாக்கல் செய்தது .

இதேவேளை நேற்றைய தினம் வி. லவக்குமார் தலைமையிலான சுயேட்சை குழுவொன்றும் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரி ஜேஜே முரளிதரன் தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த மாணவி
Posted in இலங்கை செய்திகள்

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த மாணவி

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த மாணவி

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த மாணவி ,நேற்று (07) மாலை மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாமரை கோபுரத்தின் 29 ஆவது மாடியில் இருந்து 03 ஆவது மாடிக்கு குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி குறித்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் குறித்த பாடசாலை மாணவி கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் படித்து வருவதும், பாடசாலை முடிந்து

தாமரை கோபுரத்திற்கு சென்று 29 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை

செய்து கொண்ட பாடசாலை மாணவன் மற்றும் மாணவியின் தோழியான இவர், குறித்த சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அவரது தந்தை பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சடலம் திடீர் மரண பரிசோதனை செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வி அமைச்சு பொய்யான செய்தி
Posted in இலங்கை செய்திகள்

கல்வி அமைச்சு பொய்யான செய்தி

கல்வி அமைச்சு பொய்யான செய்தி

கல்வி அமைச்சு பொய்யான செய்தி ,அரச பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்களுக்கான மதிய உணவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானது எனவும் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.

அடுத்த வருடம் வரை அதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரச பாடசாலைகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை,இந்த ஆண்டு இறுதிக்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் வரித் தொகையை வசூலிக்க அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரி செலுத்தத் தவறியவர்கள்

இருந்தால், அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிகாரம் உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, உள்நாட்டு இறைவரி திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் என். எம். என். எஸ். பி. திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வரி வசூலிக்க வரும் அதிகாரிகளின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், நிலுவைத் தொகையை காசோலையாகவோ,

பணமாகவோ வழங்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.