Tag: தாக்கல்
22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல்
22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல்
22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேலும் இரண்டு மனுக்கள் சபாநாயகரால் பெறப்பட்டன
அரசியலமைப்புத் திருத்த மசோதா
22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேலும் இரண்டு மனுக்களின் நகல்கள் சபாநாயகரால் பெறப்பட்டுள்ளன.
இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபாநாயகர் டி.ஆர். ஜகத் விக்ரமரத்ன, கடந்த இரண்டு நாட்களில், அதாவது ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய
தேதிகளில் பெறப்பட்ட ஏழு மனுக்களுக்குக் கூடுதலாக இந்த இரண்டு மனுக்களும் பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.
சபாநாயகரால் பெறப்பட்டன
அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிரான மூன்று மனுக்களின் நகல்கள் ஆகஸ்ட் 19 அன்று சபாநாயகரால் பெறப்பட்டன, அதேசமயம் கூடுதலாக நான்கு மனுக்களின் நகல்கள் நேற்று (20) பெறப்பட்டன.
அதன்படி, 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் ஒன்பது மனுக்களின் நகல்கள் இன்றுவரை சபாநாயகரால் பெறப்பட்டுள்ளன.
22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்
22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்
22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது
அரசியலமைப்புத் திருத்த மசோதா
22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் நீதித்துறை (திருத்த) மசோதா ஆகியவை இன்று (18) நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
ஹர்ஷனா நனயக்காரவால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
எதிர்ப்புகள் இருந்தபோதிலும், முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை அரசாங்கம் ஆகஸ்ட் 7 அன்று வர்த்தமானியில் வெளியிட்டது.
பாராளுமன்ற நடைமுறையின்படி, ஒரு மசோதா வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அதன் முதல் வாசிப்பிற்காக தாக்கல்
செய்யப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அந்த மசோதாவை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் உள்ளது.
அத்தகைய மனுக்களைப் பரிசீலித்த பிறகு, மூன்று முதல் 21 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை சபாநாயகருக்குத் தெரிவிக்க வேண்டும்.
அரசியலமைப்பின் 22வது திருத்தம் இயற்றப்பட்டால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆண்டுகளில் இருந்து 67
நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு
ஆண்டுகளாகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 63 ஆண்டுகளில் இருந்து 65 ஆண்டுகளாகவும் உயர்த்தப்படும்.
இதற்கிடையில், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் ஓய்வு பெறும்
வயதை 62 ஆண்டுகளாக உயர்த்துவதற்கு நீதித்துறை (திருத்த) மசோதா முன்மொழிகிறது.
கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் ,தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று (26) கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
குற்றப் பத்திரிகை
தொடர்புடைய குற்றப்பத்திரிகையில் 13 குற்றச்சாட்டுகள் உள்ளன.
2022 ஆம் ஆண்டில், நாட்டில் பொருளாதார நெருக்கடி என்ற போர்வையில், சுகாதாரத் துறையின் ஏற்கனவே இருந்த கொள்முதல் நடைமுறைகளை
மாற்றி, மருந்துகளுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்து புதிய மருந்துகளை கொள்வனவு செய்தது.
இவ்வாறு கொள்வனவு செய்த மருந்துகளில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் காணப்பட்டதோடு, அதனை செலுத்திக்கொண்ட கண்டி,
மாத்தளை மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த நோயாளர்கள் மூவர் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாகக் கிடைத்த இரண்டு முறைப்பாடுகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்தது.
நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு
பின்னர், அந்த விசாரணை தொடர்பாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, அதில் 12 நபர்கள் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டனர்.
தரமற்ற தடுப்பூசிகளை விநியோகித்த சுதத் ஜனக பெர்னாண்டோ, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின்
முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திர குப்தா மற்றும் சுகாதாரத் துறையில் உயர் அதிகாரிகள் குழு ஆகியோர் இதில் அடங்குவர்.
இந்த வழக்கில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், தரமற்ற
தடுப்பூசிகளை விநியோகம் செய்த முதல் சந்தேக நபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 19 ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு இறுதியாக விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிக்கையிட்டு தெரிவிக்கையில், தரமற்ற தடுப்பூசி சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத்
திணைக்களம் ஒரு வருடம், 8 மாதங்கள் மற்றும் 6 நாட்களாக நடத்திய விசாரணைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம தெரிவித்தார்.
அதன்படி, இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன், முன்னாள் சுகாதார
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளான மஹேன் வீரமன், அமாலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகையின்படி, 350 சாட்சிகளும் சுமார் 300 ஆவணங்களும் விசாரணைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அர்ச்சுனா மீது அவதூறு வழக்குத் தாக்கல்
அர்ச்சுனா மீது அவதூறு வழக்குத் தாக்கல்
அர்ச்சுனா மீது அவதூறு வழக்குத் தாக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக அவதூறு வழக்கொன்றை யாழ்.மாவட்ட நீதிமன்றில் புதன்கிழமை (18) தாக்கல் செய்த யாழ்.போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரியுள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பான கட்டாணை வழங்குவது தொடர்பாக யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் மேலதிக மாவட்ட நீதிபதி அ.அ.ஆனந்தராஜா முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.
இதன் போது வழக்காளி சார்பில் சட்டத்தரணி த.தினேசன் அனுசரனையுடன், சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் ஏற்பாடாகியிருந்தது.
வழக்காளியான வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி தடுப்புக் காவலில் இருந்த போது அங்கு அவருக்கு நிகழ்ந்த விடயங்கள் தொடர்பில் அவருக்கு ஆவதூறாக எதிராளி வைத்தியர் இராமநாதன் அசர்ச்சுனாவினால் சொல்லப்பட்ட
விடயங்கள் மற்றும் 09.12.2024 அன்று இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்தியநிபுணர் சத்தியமூர்த்தியுடன் சில வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு, அவருடன் பிணக்கிற்கு உட்பட்ட
விடயங்கள் தொடர்பிலும், அன்றைய தினத்தில் இராமநாதன் அர்ச்சுனா தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி ஊடாக அவதூறு பரப்பப்பட்டதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ஏதிராளியான இராமநாதன் அர்ச்சுனா, வைத்திய நிபுணர் சத்தியமூர்த்திக்கு எதிராக, அவருடைய மாண்பு மற்றும் கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவிப்பதாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.
அவரால் கூறப்படும் கருத்துக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதோடு அடிப்படை அறமற்ற நபர் ஒருவருடைய கருத்தாகும் என்று வழக்காளி சத்தியமூர்த்தி தனது சத்தியக்கூற்றிலே தெரிவித்திருந்தமை
தொடர்பில் சட்டத்தையும், நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி நீண்ட சமர்ப்பணம் வழக்காளி தரப்பில் மன்றில் முன்வைக்கப்பட்டது.
மேலும் வழக்காளியானவர் தனது சத்தியக் கூற்றிலேயே தனது நோக்கம் எதிராளியான இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலே, குடிமகன் என்ற வகையிலே அல்லது பொது நிறுவனங்களை
பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்ற நியாயமாக செயல்படும் இடத்து, அவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் பொய்யான வகையிலும், அவதூறான
வகையிலும் அவரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பாக கட்டளை ஆக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
குறித்த விடயங்களை செவிமடுத்த நீதிபதி வழக்காளியால் கோரப்பட்டவாறு, அவருக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் எதையும் தெரிவிக்க கூடாது என
எதிராளி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது ஒரு முகமாக வழக்காளி தரப்பை மட்டும் கேட்டு வழங்கப்படும் கட்டாணை என்பதால், இது தொடர்பான அறிவித்தல் எதிராளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கட்டாணை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வலிதாக இருக்கும். அன்றைய தினம் அதனை நீடிப்பதா இல்லையா? என்பது தொடர்பான தீர்மானத்தை நீதிபதி எடுப்பார்.
இது தொடர்பில் எதிராளி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கட்டளையின் பிரதியையும், அறிவித்தலையும் வழங்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.
05 மாவட்டங்களில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
05 மாவட்டங்களில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
05 மாவட்டங்களில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை ,இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக இதுவரை சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்களாக 33 குழுக்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யதுள்ளன.
நேற்றைய (08) தினம் வரை 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளில் நேற்று வரை எந்த அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை நிறைவடையவுள்ளது.
இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நேற்று நள்ளிரவுடன் முடிவடைய இருந்தது.
- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பு வேலியில் கார் மோதியது

- கண்டி எசல பேராஹெரா

- தாய்லாந்துக்கு இலவச விசா

- அதிக வெப்பம் குளங்கள் வெறுமை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்

33 கட்சிகள் வேட்புமனு தாக்கல்
33 கட்சிகள் வேட்புமனு தாக்கல்
33 கட்சிகள் வேட்புமனு தாக்கல் ,இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என மொத்தம் 33 கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.
நேற்றைய (08) தினம் வ 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளுக்கு நேற்று இறுதி வரை
எந்த அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரயில் நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் -சிதறிய 50 உடல்கள்
ரயில் நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் -சிதறிய 50 உடல்கள்
கிழக்கு உக்கிரேன் Kramatorsk பகுதி ரயில்வே நிலையம் மீது ரசிய இராணுவம்
நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி ஐம்பது மக்கள் பலியாகினர்
மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இருந்து ரசியா நீக்க பட்ட 24
மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது



















