வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா
Posted in இணையங்கள்

பலும்மஹாராவில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிதி மோசடி

பலும்மஹாராவில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிதி மோசடி

பலும்மஹாராவில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்தவர் கைது

போலீசார் கைது

போலி அடையாள அட்டை மற்றும் போலி ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, யக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட

பலும்மஹாரா பகுதியில் நேற்று இரவு (25) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பொய்யாக உறுதியளித்து பணம் மோசடி செய்த வழக்கில், மராவில நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட

திறந்த பிடியாணையின் பேரிலும் சந்தேக நபர் தேடப்பட்டு வருவது போலீசாரின் மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை யக்கல போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய வளர்ச்சி வங்கியில் (NDB) நிதி மோசடி பலர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தேசிய வளர்ச்சி வங்கியில் (NDB) நிதி மோசடி பலர் கைது

தேசிய வளர்ச்சி வங்கியில் (NDB) நிதி மோசடி பலர் கைது

தேசிய வளர்ச்சி வங்கியில் (NDB) நிதி மோசடி பலர் கைது ,உள் மோசடி வழக்கில் தேசிய வளர்ச்சி வங்கி மேலாளர் உட்பட பலர் கைது

தேசிய வளர்ச்சி வங்கியில் (NDB) நடந்த உள் நிதி மோசடி தொடர்பாக, அதன் மேலாளர் உட்பட பலரை காவல்துறை கைது செய்துள்ளது.

மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பேஸ்புக் ஊடாக நிதி மோசடி
Posted in இலங்கை செய்திகள்

பேஸ்புக் ஊடாக நிதி மோசடி

பேஸ்புக் ஊடாக நிதி மோசடி

பேஸ்புக் ஊடாக நிதி மோசடி ,மோசடியாக பேஸ்புக் கணக்கொன்றினுள் பிரவேசித்து உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து நிதிமோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (21) இந்நாட்டிற்கு வந்தபோது, ​​கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த சந்தேக நபர் உறவினர் போல் தன்னை காட்டிக் கொண்டு மோசடியாக பேஸ்புக் கணக்கின் ஊடாக, மூன்று சந்தர்ப்பங்களில் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 700,000 ரூபாயை வைப்பிலிடச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதியன்று கொழும்பு குற்றப்பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்தது. அதன் பின்னர் சம்பந்தப்பட்ட கணக்குகளை தணிக்கை செய்தபோது சந்தேக நபரை பொலிசார் அடையாளம் கண்டனர்.

சந்தேக நபர் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, அவர் கட்டாரில் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கு எதிராக குடிவரவுத் தடை பெறப்பட்டதுடன், நேற்று அவர் நாட்டிற்கு வந்தவுடன், கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொன்னேகுளம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இணையத்தள நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

இணையத்தள நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள்

இணையத்தள நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள்

இணையத்தள நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுதெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை நிதி மோசடிகள் தொடர்பில் 340 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.

“செப்டம்பர் மாதம் வரை, இணைத்தளங்கள் தொடர்பாக 7,210 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடகங்கள் தொடர்பானவையாகும்.

அதில் சுமார் 20% முறைப்பாடுகள் இணையத்தள மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வந்தவை.

இவற்றில், ஒன்லைன் வங்கியில் ஈடுபடும் பயனர்களைக் குறிவைத்து இணைய மோசடிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.

பெரும்பாலான நேரங்களில், ஒன்லைன் பேங்கிங் பயனர்கள் OTP எண்ணின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை, இது வங்கிக் கணக்கை அணுகுவதற்கு பயன்படுத்தப்படும் கடவுச்சொல் மற்றும் தற்காலிக கடவுச்சொல் ஆகும்.

ஒன்லைன் வங்கி மோசடிகள் தொடர்பாக கடந்த காலங்களில் 340 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

பலர் தமது வங்கி தொடர்பான இணையதளத்தை சரியாக அடையாளம் காணாததால் அடிக்கடி இந்த மோசடிகளில் சிக்கியுள்ளனர்” என்றார் .

நிதி மோசடி செய்தவர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள்
Posted in இலங்கை செய்திகள்

நிதி மோசடி செய்தவர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

நிதி மோசடி செய்தவர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் பிரமிட் நிதி நிறுவனமொன்றை நடத்தி 500 கோடி ரூபாவிற்கு மேல் மோசடி செய்த சந்தேகநபர்கள் தொடர்பில் மேலும் பல உண்மைகளை பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளனர்.

2021ஆம் ஆண்டு, குறித்த சந்தேகநபருக்கு, தென் மாகாணத்தில் உள்ள பிரதான விகாரை ஒன்றின் விகாராதிபதியுடன் இருந்த தனிப்பிட்ட தொடர்பால் பஸ்நாயக்க நிலமே பதவி வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

நிதி மோசடி செய்தவர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

2021 ஆம் ஆண்டு, நாரஹேன்பிட்டியில் காணி உறுதிப் பத்திரம் தொடர்பான சர்ச்சையைத் தீர்ப்பதற்காக குறித்த சந்தேக நபர், அந்த விகாராதிபதிக்கு160 இலட்சம் ரூபாவை கொடுத்துள்ளார்.

பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவருடன் தொடர்புள்ள அந்த விகாராதிபதி குறித்த காணியை விற்பனை செய்வதாக சந்தேகநபரிடம் கூறி, அவருக்கு 80 இலட்சம் ரூபா மாத்திரமே வழங்கியுள்ளார்.

எஞ்சிய பணத்தினை தீர்க்கும் வகையில் விகாரையின் பஸ்நாயக்க நிலமே பதவியை குறித்த விகாராதிபதி சந்தேகநபருக்கு வழங்க நடவடிக்கை எடுத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

நிதி நிறுவனம் ஊடாக 990 கோடி ரூபாய் நிதி மோசடி

நிதி நிறுவனம் ஊடாக 990 கோடி ரூபாய் நிதி மோசடி

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனமொன்றை நடத்தி 990 கோடி ரூபாய் நிதி மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (26) கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக நிதி முறைக்கேடு , நம்பிக்கை துரோகம் மற்றும் பண மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிதி நிறுவனம் ஊடாக 990 கோடி ரூபாய் நிதி மோசடி

சந்தேக நபர் நிதி நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பங்குதாரராகவும் பணியாற்றியுள்ளார்.

சந்தேக நபர் கண்டி – கெண்டி வியூகார்டன் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.

நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் கைது
Posted in இலங்கை செய்திகள்

நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் கைது

நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் கைது

வைத்தியர் போல் நடித்து வௌிநாடுகளுக்கு நபர்களை அனுப்புவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் பொரளை ரிட்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, கொழும்பு தேசிய வைத்தியசாலையினுள் வைத்தியர் போல் நடித்து, ஒருவரிடம் 70,000 ரூபாவை பெற்றுக் கொண்டமை தெரியவந்துள்ளது.

நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் கைது

சந்தேக நபர் பன்னல பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவர் எனவும் அவர் வத்துபிட்டியல பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (06) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சுக்களின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தைக் குறைக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வௌிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி

வௌிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 370,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக நேற்று முன்தினம் (11) பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று (12) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் லுனுகல பிரதேசத்தை சேர்ந்த 40 மற்றும் 42 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.