Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
ரசியா 7 கம்பெனிகள் , 170 பேர் மீது தடை விதித்த நியூஸுலாந்
ரசியா 7 கம்பெனிகள் , 170 பேர் மீது தடை விதித்த நியூஸுலாந்
உக்கிரேன் மீது ரசியா போரினை தொடர்ந்து வரும் நிலையால் அமெரிக்கா நேச நாடுகள்
ரசிய மீது பொருளாதர தடையினை விதித்த வண்ணம் உள்ளது
அந்த பட்டியலில் ரசியாவின் மிக பெரும் ஏழு நிறுவனங்கள் மற்றும் 170 பேர் மீது நியூஸுலாந் அதிரடி
தடையினை விதித்துள்ளது
இதனால் ரசியா மேலும் கொதிப்பில் உறைந்துள்ளது.
சேர்பியா நாட்டுக்கு மேலாக பறந்த ரசியா விமானங்கள்
சேர்பியா நாட்டுக்கு மேலாக பறந்த ரசியா விமானங்கள்
Azerbaijani நாட்டு எல்லைக்கு மேலாக ரசியா போர் விமானங்கள் பறந்துள்ளதால் நாடுகளுக்கு இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது
உக்கிரேன் மீது ரசிய தாக்குதலை மேற்கொண்ட
வாறு நகர்ந்து வரும் நிலையில் ரசியாவின் இந்த விமானங்கள் பறப்பில்
ஈடுபட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கற்புக்கரசி என நிரூபி – கற்பூரம் ஏற்றிய கணவரால் மனைவி கை கருகிய பரிதாபம்
கற்புக்கரசி என நிரூபி – கற்பூரம் ஏற்றிய கணவரால் மனைவி கை கருகிய பரிதாபம்
கர்நாடக மாநிலம் கோலார் அருகே கற்புக்கரசி என நிரூபிக்க மனைவின் கையில்
கற்பூரம் ஏற்றிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கற்புக்கரசி என நிரூபி – கற்பூரம் ஏற்றிய கணவரால் மனைவி கை கருகிய பரிதாபம்
மனைவி கையில் கற்பூரம் ஏற்றிய கணவர்
கர்நாடகத்தில் ஒரு பெண் தான் கற்புக்கரசி என நிரூபிக்க கையில் கற்பூரம் ஏற்றினார்
. ஆனால் அவரது கை கருகிய பரிதாப சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வேம்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு
முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தனது மனைவியின் நடத்தையில் ஆனந்த்திற்கு சந்தேகம் இருந்துள்ளது. இதுதொடர்பாக
அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஆனந்த் தனது மனைவியிடம் உனது நடத்தையின் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை போக்க கையில் கற்பூரம் ஏற்றி நீ கற்புக்கரசி என நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஆனந்தின் மனைவியும் தனது உள்ளங்களையில் கற்பூரத்தை ஏற்றி உள்ளார். அப்போது தீ அவரது கை முழுவதும் பரவி எரிந்தது. இதனால் அவரது கை
கருகிவிட்டது. ஆனாலும் ஆனந்த் தனது மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவில்லை என்று தெரிகிறது.
இதுபற்றி அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் ஆனந்தின் மனைவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சம்பவம் குறித்த புகாரின்பேரில் ஆனந்த் மீது வேம்கல் போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்
ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்
இந்த பாட்டில் விற்கப்பட்டவுடன் இதன் 25 சதவீத தொகை மேரி கியூரி தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்
உலகின் அதிகம் உயரவும் உடைய விஸ்கி பாட்டில்
உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் 25-ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது. மெக்கலன் நிறுவனத்தின் ஸ்காட்ச் விஸ்கி ரகத்தை சேர்ந்த இந்த பாட்டில் 5 அடி, 11 இன்ச் அளவையும், 311 லிட்டர் கொள்ளவை கொண்டுள்ளது. இந்த விஸ்கிக்கு ‘தி
இண்ட்ரிபிட்’ என பெயரிடப்பட்டுள்ளது. எய்டன்பெர்க்கில் உள்ள ல்யான் அண்ட் டார்பிள் என்ற ஏல விடுதியில் இந்த பாட்டில் ஏலத்திற்கு வருகிறது. இது சாதாரண 444 சாதாரண விஸ்கி பாட்டில்களுக்கு ஒப்பான மதுவை கொண்டுள்ளது.
இதுகுறித்து வேல்ஸ் ஆன்லைன் என்ற இணையதளம் கூறுகையில், இந்த பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் 14 கோடி விலையை கொண்டது. அதிக விலைக்கு விற்கப்படும்
விஸ்கி என்ற உலக சாதனையை இந்த பாட்டில் படைத்துள்ளது. கடந்த வருடம் கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இந்த பாட்டில் இடம்பிடித்தது. இந்த பாட்டில் விற்கப்பட்டவுடன்
இதன் 25 சதவீத தொகை மேரி கியூரி மருத்துவ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இம்ரான்கான் மீது வழக்கு பதிவு
இம்ரான்கான் மீது வழக்கு பதிவு
சவுதி அரேபியாவில் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து நடத்திய போராட்டத்தில் இம்ரான்கானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அவர் கைது செய்யப்படுவார் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது வழக்கு பதிவு
இம்ரான்கான்
பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார்.
இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியா சென்றிருந்தபோது, அங்கு இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை
கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஷபாஸ் ஷெரீப்பை ‘திருடர்’, ‘துரோகி’ என கூறி கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீசார் இம்ரான்கான் மற்றும் முன்னாள் மந்திரிகள் பலர் உள்பட 150 பேர் மீது
வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் இம்ரான்கானுக்கு தொடர்பு இருப்பதற்கான
ஆதாரங்கள் கிடைத்ததால் அவர் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தானின் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.
தரையிறங்கும்போது குலுங்கிய விமானம்- 13 பேர் காயம்
தரையிறங்கும்போது குலுங்கிய விமானம்- 13 பேர் காயம்
விமானம் குலுங்கிய போது கேபினில் வைக்கப்பட்டிருந்த பயணிகளின் பொருட்கள் அவர்களின் தலையிலேயே விழுந்தது.
தரையிறங்கும்போது குலுங்கிய விமானம்- 13 பேர் காயம்
ஸ்பைஸ் ஜெட் விமானம்
நேற்று மாலை மும்பையில் இருந்து மேற்குவங்கம் துர்காப்பூர் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்கும் நிலையில் இருந்தபோது திடீரென குலுங்கியது.
இதனால் ஏற்பட்ட பாதிப்பில் 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து
துர்காப்பூர் விமான நிலையத்தில் மருத்துவ ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விமானம் நடுவானில் இருந்தபோது மோசமான வானிலை காரணமாக காற்றில் ஏற்பட்ட மாற்றத்தால் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விமானத்தின் கேபினில் வைக்கப்பட்டிருந்த பயணிகளின் பொருட்கள் அவர்களின் தலையிலேயே விழுந்ததில் காயம் ஏற்பட்டது.
அதன்பின் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு பயணிகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் 16 ரவுடிகள் இராணுவத்தால் கைது
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் 16 ரவுடிகள் இராணுவத்தால் கைது
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் சுற்றி வளைப்பில்
காட்டுப் பகுதியில் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட
16 பேர் கைது செய்யப்பட்டு ஓமந்தைப் பொலிஸாரிடம் நேற்று (01) மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, ஓமந்தை, கோதாண்டர் நொச்சிக்குளம் காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு
கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதியில் விசேட அதிரடிப் படையினர் விசேட சோதனையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது அங்கு கத்தி, வாள் உ ள்ளிட்ட ஆயுதங்களுடன் பலர் ஒன்று கூடி அவ் ஆயுதங்களால்
கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இருந்த நிலையில் 16 பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து கத்தி, வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஓமந்தைப் பொலிஸாரிடம்
அவர்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யார் பிரதமராக வந்தாலும் – தமிழருக்கு பயனில்லை – சுமந்திரன் கூவல்
யார் பிரதமராக வந்தாலும் – தமிழருக்கு பயனில்லை – சுமந்திரன் கூவல்
இலங்கையில் யார் பிரதமராக வந்தாலும் ,அவர்களினால் தமிழர்களுக்கு தீர்வு ஏதும் கிட்டட்டது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்
ஊடக போராளிகளை சந்தித்து பேசியபோது இதனை அவர் தெரிவித்துள்ளார்
இவர் அரசியல் வியாபாரியாக செயல் பட்டு வருவதும் ,கோட்டா,மகிந்தாவுக்கு ஐடியா
கொடுக்கும் ஆசாமியாக உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
மோடி தமிழக கட்சி தலைவர் நல்லூரில் வழிபாடு
மோடி தமிழக கட்சி தலைவர் நல்லூரில் வழிபாடு
இந்தியாவின் ஆளும் நரேந்திர மோடியில் அங்கம் வகிக்கும் பாரதிஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை
இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்
இவ்விதம் பயணம் மேற்கொண்ட அவர் பல கட்சிகளுடன் பேச்சில் ஈடுபடுவார் என தெரிவிக்க படுவதுடன்
,இவரது இந்த பயணம் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளதாக கருத படுகிறது
லண்டனில் கோட்டாவுக்கு எதிராக முளைத்த வீடு
லண்டனில் கோட்டாவுக்கு எதிராக முளைத்த வீடு
பிரிட்டன் பாராளுமன்றம் முன்பாக உள்ள பகுதியில் கொட்ட கோ காமா என்ற பெயரை தாங்கிய படி சிங்களவர்களினால்
ஆளும் கொள்ளையர்கள் வீடு செல்ல வேண்டும் என கோரி போராட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது
இந்த போராட்டம் அங்கு தொடர்ச்சியாக இடம்,பெற்ற வண்ணம் உள்ளது
உலக நாடுகளின் முக்கிய நாடுகளில் இருந்து ஆரம்பிக்க பட்டுள்ள இந்த போராட்டம்
மகிந்த குடும்பத்திற்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது ,
ரசியாவுக்குள் நுழைந்து உக்கிரேன் விமானங்கள் தாக்குதல்
ரசியாவுக்குள் நுழைந்து உக்கிரேன் விமானங்கள் தாக்குதல்
ரசியாவின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த உக்கிரேன் விமானங்கள் அங்கு தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளன ,
இந்த தாக்குதலின் பொழுது ரசியாவின் Bryansk பகுதியில் பலத்த சேதமடைந்துள்ளது
ரசியா உக்கிரேன் பல பகுதிகளை ஆக்கிரமித்து தற்போது தலைநகர் கீவ் வீழ்ச்சியுற உள்ள நிலையில் இந்த
அதிரடி தாக்குதலில் உக்கிரேன் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
ஈராக் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் முக்கியத்துவம் வாய்ந்த US Ain al-Assad இராணுவ தளம் மீது ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது.
இந்த தாக்குதலின் பொழுது அந்த முகாமில் இருந்து பலத்த வெடி சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்க படுகிறது.
இதே இராணுவ தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் மூளை கலங்கிய நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது.
நடிகையின் சொத்துக்கள் முடக்கம்
நடிகையின் சொத்துக்கள் முடக்கம்
நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ.7 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பிரபல நடிகையின் சொத்துக்கள் முடக்கம்
ஜாக்குலின் பெர்னான்டஸ்
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள
சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஜாக்குலின் பெர்னான்டஸ்
ஜாக்குலின் பெர்னான்டஸ்
ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரிடம் மோசடி செய்த ரூ.200 கோடி ரூபாயில், 5.71 கோடி ரூபாயை சந்திரசேகர் ஜாக்குலினுக்கு பரிசாக கொடுத்ததாக
குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, ஜாக்குலின் வங்கிக்கணக்கில் வைத்திருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.7 கோடியை முடக்கியுள்ளது.
பண மோசடி வழக்கில் கைதாகி கடந்த 2019-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவிந்தர் சிங்கை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகக் கூறி,
சிவிந்தர் சிங் மனைவி ஆதிதி சிங்கிடம் சுகேஷ் சந்திரசேகர் சுமார் 200 கோடியை மோசடி செய்ததாக ஆதிதி சிங் குற்றம் சாட்டினார்.
சஜித்தை தூக்கும் முயற்சியில் ரணில் கோட்டா சதி
சஜித்தை தூக்கும் முயற்சியில் ரணில் கோட்டா சதி
எதிர்கட்சி தலைவராக உள்ள சஜித் பிரேமதாசாவை , அந்த தலைவர் பத்வியில் இருந்து ,அவரை துரத்தி புதியவரை நியமிக்கும் நகர்வில் ரணில்,கோட்டாபய ஈடுபட்டுள்ளனர்
இவர்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் பொழுது இந்த விடயம் பேசப்பட்டுள்ளது
இதனை அடுத்து தற்போது தனக்கு மிரட்டல் அழைப்புக்கள் விடுக்க பட்டுள்ளதாக சஜித் தெரிவித்துள்ளார்
ரணில் இதுவரை ஜனாதிபதியாக துடித்த பொழுதும் அது முடியவில்லை ,தனக்கு பின் ஆசனத்தில் இருந்தவர் நாட்டின் தலைவராக வருவதை ரணில் விரும்பவில்லை
அதனாலேயே அவரது வெற்றியை மகிந்தாவுடன் இணைந்து தடுத்து கோட்டாவை வெல்ல வைத்தார் ,
அதன் பின்னர் மற்றுமொரு சதியில் ரணில் ஈடுபட்டு வருவதாக உள்ளக கசிவுகள் இடித்து கூறுகின்றன
கோட்டா முக்கிய அமைச்சர்கள் ஊழல் 3ம் திகதி வெளியீடு பீதியில் அமைச்சர்கள்
கோட்டா முக்கிய அமைச்சர்கள் ஊழல் 3 திகதி வெளியீடு பீதியில் அமைச்சர்கள்
எதிர் வரும் மூன்றாம் திகதி இலங்கை ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்களின்
ஊழல் தொடர்பாக முக்கிய ஆவணங்களை தான் வெளியீடு செய்ய போவதாக அனுரா குமரா திசாநாயாக்க தெரிவித்துள்ளார்
இவரது இந்த அறிவிப்பு இலங்கையில் அமைச்சர்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது
கோபத்தில் உள்ள மக்களுக்கு இவர் மேலும் எண்ணெய் ஊற்றுவது போன்று இந்த தகவல் பரவும் என எதிர்
பார்க்க படுகிறது
வெடித்த குண்டு 50 பேர் மரணம் – சிதறிய உடல்கள்
வெடித்த குண்டு 50 பேர் மரணம் – சிதறிய உடல்கள்
ஆப்கான் தலைநகர் காபூல் பகுதியில் மசூதிக்குள் வெடித்த குண்டு ஒன்றில்
ஐம்பது பேர் சம்பவ இடத்தில பலியாகினர் மேலும் ,நாற்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்
இதில் காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவி ! தமிழக சட்டசபைத் தீர்மானத்தினை வரவேற்கின்றோம் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவி ! தமிழக சட்டசபைத் தீர்மானத்தினை வரவேற்கின்றோம் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை தமிழக
சட்டமன்றில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை வரவேற்கின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் ஆகியனவற்றை தமிழ்நாட்டில் இருந்து நேரடியாக இலங்கைத்தீவுக்கு அனுப்பி வைக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களினால் தனித்தீர்மானமாக இது முன்மொழியப்பட்டிருந்தது.
இச்சிறப்பு தீர்மானம் தொடர்பில் பேசிய முதல்வர் அவர்கள், ‘இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாடு அரசு உதவ தயாராக உள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு உணவு அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்க வேண்டும் இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரி தமிழ்நாடு
அரசு கடிதம் எழுதியும் மத்திய அரசிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கை சிங்களவர்களுக்கும் உதய தயார்’ என பேசியிருந்தார்.
பிரதான எதிர்கட்சியான அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தமது கருத்துக்களை வழங்கியிருந்ததோடு, குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேறியது சபாநாயகர் அறிவித்திருந்தார்.
அனைத்துக்கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ள இத்தீர்மானத்தினை நன்றியோடு வரவேற்பாதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழக
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைதாங்கி இந்த முயற்சியினை முன்னெடுப்பதனை நன்றியோடு வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஈழத்தமிழர் தேசத்தின் உண்மை நிலையையைக் கண்டறிவதற்கான குழு ஒன்றினை அங்கு உடன் அனுப்பி வைப்பதும் இம் முயற்சிக்கு
வலுச் சேர்க்கும் என்பதோடு, நேரடி உதவிப் பொறிமுறை ஊடாக ஈழத்தமிழ் மக்களுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பங்களிப்பை
வழங்கும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு முன்னராக அனுப்பியிருந்த கடிதமொன்றில் தெரிவித்தார்.
டுவிட்டர் 3 மாததில் 513 மில்லியன் இலாபம்
டுவிட்டர் 3 மாததில் 513 மில்லியன் இலாபம்
உலகின் முதல்தர யாம்பவான்கள் அதிகம் அங்கம் வகிக்கும் சமுக வலைத்தளமாக விளங்கி
வருவது டுவிட்டர் ஆகும், இதன் முதல் காலாண்டு ( குவாட்டர் ) பகுதியில் அதன் வருமானம் 513 மில்லியனாக உயர்ந்துள்ளது
இதற்கு கரணம் செல்வந்தர் Elon Musk இந்த குழுமத்தின் அதிக பங்குகளை வாங்கியமையே
தற்போது அவரே இந்த நிறுவனத்தின் உரிமையாளராக வரவுள்ளார் ,அதன் பின்னர் மேலும் இதன் பங்குகள்
அதிகம் உச்சத்தை தொடும் என் ஏதிர் பார்க்க படுகிறது
உக்கிரேன் தலைநகர் மீது அகோர குண்டு தாக்குதல்
உக்கிரேன் தலைநகர் மீது அகோர குண்டு தாக்குதல்
உக்கிரேன் தலைநகர் மீது ரசியா இராணுவம் அகோர குண்டு தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.
இந்த தாக்குதலில் உக்கிரேன் கீவ் நகரின் பல பகுதிகள் சுடுகாடாக காட்சியளிக்கின்றன.
வாகனங்கள் என்பனவும் பலத்த சேதமடைந்துள்ளது.
ரஷியா இராணுவத்தின் தொடர் ஏவுகணை ,மற்றும் ரொக்கட் தாக்குதலினால் குறித்த பகுதிகள் அதிர்ந்த வண்ணம் உள்ளது .
சில நாட்களுக்குள் கீவ் நகர் ரசியா இராணுவத்திடம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது.
அமெரிக்கா வாயில் மண்ணை தூவிய ரசியா – செக்மேட் நடவடிக்கை
அமெரிக்கா வாயில் மண்ணை தூவிய ரசியா – செக்மேட் நடவடிக்கை
தற்போது 23 ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் இருந்து எரிவாயுவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ரூபிளில் வர்த்தகம் செய்ய 10 ஐரோப்பிய நாடுகள் சம்மதம்- ரஷியா அறிவிப்பு
ரஷிய கேஸ்ப்ரோம் நிறுவனம்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
ரஷியா உக்ரைன் போர் 64-அது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷியா பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு
எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதித்தன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியா, நட்பற்ற நாடுகள் தங்களிடம் இருந்து பெறப்படும் எரிவாயுவிற்கான கட்டணத்தை அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபிளில்
மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவித்தது. ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகள் ரஷியாவிடம் இருந்தே எரிவாயு இறக்குமதி செய்வதால் இந்த அறிவிப்பு அந்நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் பல்கேரியா மற்றும் போலாந்து ஆகிய நாடுகள் அவ்வாறு ரூபிளில் பணத்தை வழங்குவதற்கு மற்றுப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த இரு
நாடுகளுக்கும் எரிபொருள் விநியோகத்தை வழங்குவதை ரஷியா நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இரு நாடுகளையும் பொறுத்தவரையில், போலந்து 53 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே இதுவரை இறக்குமதி செய்து வந்தது. பல்கேரியா 90 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே பெற்று வந்தது.
இந்நிலையில் 10 ஐரோப்பிய எரிவாயு நிறுவனங்கள் ரஷியாவிடம் இருந்து ரூபிளில் எரிவாயு வர்த்தகத்தை மேற்கொள்ள சம்மதித்துள்ளதாக ரஷிய எரிவாயு நிறுவனம்
கேஸ்ப்ரோம் தெரிவித்துள்ளது. இதில் 4 நிறுவனங்கள் ஏற்கனவே ரூபிளில் கட்டணத்தை செலுத்தி விட்டன. இவர்களுக்கு விரைவில் எரிவாயு விநியோகம்
செய்யப்படும். ரூபிள் வர்த்தகத்திற்கு சம்மதிக்காத நாடுகளுக்கு விற்பனை நிறுத்தப்படும் என கூறியுள்ளது.
தற்போது 23 ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் இருந்து எரிவாயுவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












