Posted in சினிமா

உண்மையை ஒப்புக்கொண்ட பிரபல நடிகை- விசாரணை தீவிரம்

உண்மையை ஒப்புக்கொண்ட பிரபல நடிகை- விசாரணை தீவிரம்

சுகேசிடம் இருந்து பரிசுப் பொருட்கள் பெற்றதை நடிகை ஜாக்குலின் விசாரணை குழுவிடம் ஒத்துக்கொண்டார்.

உண்மையை ஒப்புக்கொண்ட பிரபல நடிகை.. வழக்கு விசாரணை தீவிரம்
ஜாக்குலின் பெர்னான்டஸ்


பிரபல இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்ததாக

இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல தடவை தீவிர விசாரணை

நடத்தினார்கள். சுகேஷ் சந்திரசேகரின் பண பரிமாற்றங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் நடிகை ஜாக்குலினின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. ரூ.7 கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இந்த நிலையில் சுகேசின் மோசடிகள் குறித்து நடிகை ஜாக்குலின் பல்வேறு தகவல்களை விசாரணை குழுவிடம் கூறி இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு

ஜூன் மாதம் முதன் முதலாக சுகேசை சந்தித்ததாகவும், அதன் பிறகு அவர் தனக்கு நிறைய பரிசுகள் தந்ததையும் அவர் விபரமாக விசாரணை குழுவிடம் கூறியுள்ளார்.

நடிகை ஜாக்குலின் பயணம் செய்வதற்காக பல தடவை தனி விமானங்கள், ஹெலிகாப்டர்களை சுகேஷ் ஏற்பாடு செய்து கொடுத்தார். பல கோடி ரூபாய்

மதிப்புள்ள கார்கள், குதிரைகள் மற்றும் நகைகளை சுகேஷ் பரிசாக கொடுத்துள்ளார். இவை அனைத்தையும் ஜாக்குலின் விசாரணை குழுவிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இதன்மூலம் சுகேஷ் மீதான பணப்பரிமாற்ற பிடி இறுகி உள்ளது.

    Posted in Uncategorized

    நடிகையின் சொத்துக்கள் முடக்கம்

    நடிகையின் சொத்துக்கள் முடக்கம்

    நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ.7 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    பிரபல நடிகையின் சொத்துக்கள் முடக்கம்
    ஜாக்குலின் பெர்னான்டஸ்


    பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள

    சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    ஜாக்குலின் பெர்னான்டஸ்
    ஜாக்குலின் பெர்னான்டஸ்

    ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரிடம் மோசடி செய்த ரூ.200 கோடி ரூபாயில், 5.71 கோடி ரூபாயை சந்திரசேகர் ஜாக்குலினுக்கு பரிசாக கொடுத்ததாக

    குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, ஜாக்குலின் வங்கிக்கணக்கில் வைத்திருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.7 கோடியை முடக்கியுள்ளது.

    பண மோசடி வழக்கில் கைதாகி கடந்த 2019-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவிந்தர் சிங்கை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகக் கூறி,


    சிவிந்தர் சிங் மனைவி ஆதிதி சிங்கிடம் சுகேஷ் சந்திரசேகர் சுமார் 200 கோடியை மோசடி செய்ததாக ஆதிதி சிங் குற்றம் சாட்டினார்.