Posted in Uncategorized

சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்

சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்

சீனாவில் பாரிய கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதற்குள் வசித்த 53 மக்கள் பலியாகினர்

இதுவரை பத்து சடலங்கள் மீட்க பட்டுள்ளன

இந்த விபத்துக்கு காரணமாக விளங்கிய ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,


தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Posted in Uncategorized

    போலீஸ் காவலரணில் யட்டிகளை காயபோட்டு மக்கள் போராட்டம்

    போலீஸ் காவலரணில் யட்டிகளை காயபோட்டு மக்கள் போராட்டம்

    இலங்கை பாரளுமன்றம் அருகில் அமைக்க பட்டுள்ள போலீஸ் வீதி தடைகள் மேல்

    பட்டிகள் ,யங்கிகள்,பிரசியர் உள்ளிட்டவை காய போட்டு போராட்டக் காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

    இந்த வினோத போராட்டம் மூலம் அரசுக்கு எதிராக தாம் கடும் கோபத்தில் உள்ளதை மக்கள் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்

    நாடு தழுவிய ரீதியில் கரத்தால் இடம்பெற்று வருகிறது ,


    இதுவரை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதவி


    விலக கோட்டபாய மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      கோட்டா பாதுகாப்பு இறுக்கம் – புதிய அதிகாரிகள் நியமனம்

      கோட்டா பாதுகாப்பு இறுக்கம் – புதிய அதிகாரிகள் நியமனம்

      இலங்கையில் ஆளும் அதிபர் கோட்டபாயாவின் பாதுகாப்பில் திடீர் மாற்றம் இடம்பெற்றுள்ளது ,

      அதன்படி, ஜனாதிபதி பாதுபாப்பு படையணியின் உதவிக்காக பிரதி பொலிஸ் மா

      அதிபர் ஒருவரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.


      ஜனாதிபதி பாதுகாப்பு படையணிக்கு பொறுப்பாக புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.


      இதேவேளை, ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக புலனாய்வு மற்றும் கண்காணிப்புக்கு

      பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.டி.ஜயலத் உட்பட 100 பொலிஸ்

      புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக
      இன்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

        Posted in Uncategorized

        நாடெங்கும் அரசுக்கு எதிராக போரட்டம் – வீதிகள் அடித்து பூட்டு

        நாடெங்கும் அரசுக்கு எதிராக போரட்டம் – வீதிகள் அடித்து பூட்டு

        இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்


        இவர்கள் போராட்டத்தினால் நாட்டின் இயல்பு வாழ்வு முடக்க பட்டுள்ளது

        வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளும் தமிழர்கள் கடையடைப்பு மற்றும் வீதி


        மறுப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்

          Posted in Uncategorized

          84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்

          84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்

          நூறு வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றும் வால்டர், பணியை விரும்பி செய்தால், ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என்கிறார்..

          84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்


          84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்

          தனியார் துறையை பொறுத்தவரை இன்றைய நவீன காலத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவது அரிதான ஒன்றாக உள்ளது. இந்த சூழலில் பிரேசிலில் நூறு

          வயதை கடந்த முதியவர் ஒருவர் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்திருக்கிறார். இதற்காக அவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

          பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கடை நிலை ஊழியராக தொடக்கத்தில் பணியாற்றி வந்த வால்டர் ஆர்த்மன் என்பவர், படிப்படியாக

          முன்னேற்றம் அடைந்து விற்பனை மேலாளராக உயர்ந்தார். நூறு வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றும் வால்டர், பணியை விரும்பி செய்தால், ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என்கிறார்..

          நிறுவனத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது போல, ஆரோக்கியத்திலும் முறையான கவனம் செலுத்துவது அவசியம் என கூறுகிறார். தினசரி

          உடற்பயிற்சியிலும் ஈடுபட்டுகிறார். தனது அன்றாட பணியை திறம்பட மேற்கொள்ளும் ஒருவரும் கின்னஸ்
          உலக சாதனை படைக்க முடியும் என நிரூபித்துள்ளார் வால்டர்.

            Posted in Uncategorized

            போலீசார் மக்கள் மோதல் – காவலரண் தீக்கிரை – 12 பேர் காயம்

            போலீசார் மக்கள் மோதல் – காவலரண் தீக்கிரை – 12 பேர் காயம்

            அம்பாறை அக்கரைப்பற்று பால முனை பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த


            போலீசாருக்கும் மக்களுக்கும் இடையில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்ற்றுள்ளது

            ஊந்துருளி ஒன்றை காவலரண் தடை வழியாக செல்ல போலீசார் அனுமதித்துள்ளனர்

            ,எனினும் அந்த வண்டி விபத்தில் சிக்கியது ,இதனை அறிந்த ஊர் மக்கள் திரண்டு வந்து அங்கு கடமையில் இருந்த போலீசாரை தாக்கினர்

            இதில் அதிகாரிகள் உள்ளிட்ட பண்ணிரெண்டு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்

            போலீசார் நடத்திய துப்பாககி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார் ,தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது

              Posted in Uncategorized

              பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து 2 மாணவிகளின் ஆடைகளை கழற்றி பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்

              பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து 2 மாணவிகளின் ஆடைகளை கழற்றி பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்–

              இந்த வழக்கு தொடர்பாக பள்ளி முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

              பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து 2 மாணவிகளின் ஆடைகளை கழற்றி பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்- டெல்லியில் பரபரப்பு
              பள்ளி மாணவிகள்
              புது டெல்லி:

              டெல்லியில் மாநகராட்சி பள்ளியில், வகுப்பறையில் வைத்து மாணவிகள் 2 பேரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

              அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக அங்கு இருந்த இரண்டு பள்ளி மாணவிகளின் ஆடையை கழட்டியுள்ளார். மேலும் அந்த நபரும் தன் ஆடையை அவிழ்த்து வகுப்பறையின் முன் சிறுநீர் கழித்துள்ளார். இந்த சம்பவம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

              இந்த சம்பவம் குறித்து மாணவிகள் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் தங்கள் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டு விடும் என இருவரும் அமைதியாக இருந்துள்ளனர். மேலும் பள்ளி மாணவிகளிடமும் இந்த சம்பவத்தை மறந்துவிடும் படி கூறியுள்ளனர்.

              இந்த சம்பவம் குறித்து தற்போது டெல்லி பெண்கள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெண்கள் ஆணையம் டெல்லி போலீஸ் மற்றும் கிழக்கு முனிசிபில் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளி மீதும், அதை மறைத்த பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

              மேலும் பள்ளி முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

              இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷ்னர் சஞ்சய் ஜெயின் கூறியதாவது:-

              இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
              இது மாநகராட்சி பள்ளி என்பதால் சிசிடிவி கேமராக்கள் இல்லை.
              அதனால் குற்றவாளி குறித்த தகவல் தெரியவில்லை.
              இருப்பினும் இதற்காக தனிப்படை அமைத்து அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வருகிறோம்.
              அதேபோல பள்ளி மாணவிகளிடம் குற்றவாளி குறித்த தகவல்களை பெற்று அவர்கள் தந்த அடையாளத்தின் அடிப்படையில் தேடி வருகிறோம்.

                Posted in Uncategorized

                ரஷிய வீரர்களை கொல்ல உக்ரைனுக்கு உதவும் அமெரிக்க உளவுத்துறை

                ரஷிய வீரர்களைஉக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 பொதுமக்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

                லைவ் அப்டேட்ஸ்: ரஷிய வீரர்களை கொல்ல உக்ரைனுக்கு உதவும் அமெரிக்க உளவுத்துறை
                அமெரிக்கா- உக்ரைன்

                05.05.2022

                9.40: போரில், ரஷிய வீரர்களை கொல்வதற்கு உக்ரைனியப் படைகளுக்கு அமெரிக்க உளவுத்துறை உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது.

                ரஷியாவின் எதிர்பார்க்கப்படும் துருப்பு நினைவுகள், இருப்பிடம், ரஷியாவின் நடமாடும் ராணுவ தலைமையகம் உள்பட பிற விவரங்கள் குறித்து உக்ரைனுக்கு அமெரிக்க உளவுத்துறை உதவியதாக கூறப்படுகிறது.

                06.40: உக்ரைனில் உள்ள 6 ரயில் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், உக்ரைன் படைகளுக்கு வெளிநாட்டு ஆயுதங்களை வழங்க இந்த ரயில் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

                இதனிடையே, மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றத்தை அனுமதிக்க ரஷியா போர் நிறுத்தத்தை அறிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

                05.20: ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்ட தென்கிழக்கு நகரமான மரியுபோல் உள்பட நான்கு நகரங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட உக்ரைன் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐநா மனிதாபிமான அமைப்பின் தலைவர் ஓஸ்னாட் லுப்ரானி தெரிவித்துள்ளார்.

                மரியுபோல், மன்ஹுஷ், பெர்டியன்ஸ்க், டோக்மாக் மற்றும் வாசிலிவ்காவைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் தாங்கள் அணிந்திருந்த ஆடைகளைத் தவிர வேறெதுவும் இல்லாமல் வெளியேறியதாக அவர் கூறியுள்ளார்.

                03.50: மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை அமைந்துள்ள பகுதியில் ரஷிய படையினருக்கும், உக்ரைன் ராணுவ வீரர்களுக்கும் இடையே 2வது நாளாக கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக உக்ரைன் ராணுவ தளபதி டெனிஸ் புரோகோபென்கோ தெரிவித்துள்ளார்.

                எதிரிகளின் முன்னேற்றத்தை கட்டுப்படுத்த ரத்தம் சிந்தும் இந்த சண்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தமது வீரர்களை நினைத்து பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                02.40: மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை பகுதியில் காயமடைந்த நிலையில் பதுங்கியிருக்கும் உக்ரைன் மக்களை காப்பாற்ற உதவுமாறு, ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

                குட்டரெஸ் உடன் தொலைபேசி மூலம் பேசிய அவர், ஆபத்தில் உள்ள எங்களது மக்களின் உயிர்கள் எங்களுக்கு முக்கியம் என்றும், அவர்களை காப்பாற்ற உதவுமாறு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

                மேலும் உருக்கு ஆலை பகுதியில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களை பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றதற்காக ஐ.நா. மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளுக்கும் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

                01.30: உக்ரைனில் ராணுவம் அல்லாத இலக்குகள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

                உக்ரைனை கைப்பற்றும் ரஷியாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் மற்றும் போக்குவரத்து மையங்கள் உள்ளிட்ட ராணுவம் அல்லாத இலக்குகளை குறி வைத்து ரஷிய படைகள் வெடி குண்டு மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

                12.20: உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அந்த பிராந்திய போலீசார் தெரிவித்துள்ளனர்.

                இதன் மூலம் அந்த பகுதியில் இதுவரை மீட்கப்பட்டுள்ள மொத்த உடல்களின் எண்ணிக்கை 1,235 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் ரஷிய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும்,
                இன்னும் 282 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர் கொல்ல உக்ரைனுக்கு உதவும் அமெரிக்க உளவுத்துறை

                  Posted in Uncategorized

                  பிச்சைக்கரா வேடமிட்டு வீடுகளில் கொள்ளை – மடக்கிய போலீஸ்

                  பிச்சைக்கரா வேடமிட்டு வீடுகளில் கொள்ளை – மடக்கிய போலீஸ்

                  இலங்கை பாணந்துறை பகுதியில் தனியாக வசிக்கும் பெண்களை இலக்கு வைத்து நடத்த பட்ட கொள்ளை அம்பலமாகியுள்ளது

                  பகலில் இவர்கள் வீடுகளுக்குள் பிச்சைக்கார வேடத்தில் செல்லும் நபர்கள் அவர்களை அங்கு நோட்டமிட்டு


                  இரவில் கூரிய ஆயுதங்களை தாங்கிய வண்ணம் வீட்டு கதவுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளமை அம்பலமாகியுள்ளது

                  கைதானவர்களிடம் இருந்து நகைகள்,மற்றும் பணம் என்பன மீட்க பட்டுள்ளன ,

                  தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .மக்களே உசார் ,கொள்ளையர்கள் உங்கள் அருகில்,

                    Posted in Uncategorized

                    அலிசப்ரி வாகனத்தில் மோதுண்டு ஒருவர் மரணம்

                    அலிசப்ரி வாகனத்தில் மோதுண்டு ஒருவர் மரணம்

                    அலிசப்ரி எம்பியின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார்

                    இந்த விபத்து கடந்த இரவு இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

                    குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                      Posted in Uncategorized

                      இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

                      இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

                      இலங்கைக்கு இந்தியா தொடரந்து அவசர உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளது

                      ,கொழும்பு துறைமுகத்திற்கு 440,000 மெட்ரிக் தொன் எடையுள்ள எண்ணெய்களை

                      தாங்கிய வண்ணம் இந்த கப்பல் வந்தடைந்துள்ளது

                      சமீப காலங்களாக இலங்கைக்கு இந்தியா அவசர வசர உதவிகளை வழங்கியவண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized

                        இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனோ கணேசன் நன்றி தெரிவித்து உரை

                        இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனோ கணேசன் நன்றி தெரிவித்து உரை

                        பொருளாதார நெருக்கடி எங்களுக்கு புதிதல்ல. வடகிழக்கில் யுத்தம் காரணமாகவும், மலைநாட்டு தோட்டங்களில் யுத்தமில்லாமலும் பல்லாண்டுகளாக இந்த “உணவில்லை, மருந்தில்லை” என்ற பொருளாதார நெருக்கடி விடயங்கள் நிலவின. ஆகவே அவை

                        எமக்கு புதிதல்ல. ஆனால், இந்நாட்டின் ஒட்டு மொத்த மக்களுக்கு இன்றைய நெருக்கடி புதிது. ஆகவேதான் நாடு முழுக்க போராட்டங்கள் நிகழ்கின்றன.

                        இந்த பின்னணியில், தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இலங்கையருக்கும் உதவ தீர்மானித்து, அதற்காக இந்திய ஒன்றிய அரசின் அனுமதியையும், இலங்கை அரசின் ஒப்புதலையும் பெற்றதன் மூலம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்

                        வாழ்ந்த, எங்கள் தமிழறிஞர் கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே; யாவரும் கேளீர்” என்ற கூற்றுக்கு மெய்யான சமகால அர்த்தத்ததை வெளிப்படுத்தி உள்ளீர்கள் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை விளித்து இன்று இலங்கை நாடாளுமன்றத்தில்

                        உரை நிகழ்த்திய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், இலங்கை தலைநகர கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

                        தமுகூ தலைவர் மனோ கணேசன் பா.உ. தனது உரையில் மேலும் கூறியுள்ளதாவது,

                        இலங்கை ஒருபோதும் இல்லாத விதத்தில் நெருக்கடியை சந்தித்த இவ்வேளையில், இதற்கு எவர் பொறுப்பு கூற வேண்டும் என இச்சபையில் சண்டை இடும்

                        இவ்வேளையில், இருண்ட குகைக்குள் ஒரு ஒளிக்கீற்றாக நிகழ்ந்த ஒரு நிகழ்வை இந்த மாமன்றத்தின் கவனத்துக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், தலைநகர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறைகளில் கொண்டு வர விரும்புகிறேன்.

                        இந்தியாவின் தமிழ் மாநில தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழக முதல்வர் கெளரவ மு.க. ஸ்டாலின், கண்ணீரால் சூழ்ந்துள்ள இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் நிவாரண உதவிகளாக அரிசி, பால்மா, மருந்து ஆகியவற்றை வழங்க உள்ளதாக

                        அறிவித்துள்ளார். அதற்கான ஒன்றைய அரசின் அனுமதியையும், இலங்கை அரசின் ஒப்புதலையும் அவர் பெற்றுள்ளார்.

                        ஆரம்பத்தில் இலங்கையில் வாழும் தொப்புள் கொடி உறவுகளான தமிழருக்கு மாத்திரம் உதவ போகின்றோம் என முதல்வர் கூறிய போது, இலங்கை வாழ் தமிழக வம்சாவளி மலையக தமிழர் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக

                        நானும், வடகிழக்கில் வாழும் இலங்கை வம்சாவளி ஈழத்தமிழர் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக நண்பர் சுமந்திரனும், ஒரு செய்தியை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமாகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பினோம்.

                        “முதல்வர் அவர்களே, இலங்கையில் இன்று நாம் அனைவரும் நெருக்கடியில் இருக்கின்றோம். நாம் அனைவரும் போராடுகிறோம். சிங்களவர், தமிழர், முஸ்லிம்,

                        பெளத்தர், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர் என்ற பேதங்களை மறக்க ஆரம்பித்துள்ளோம். ஆகவே உங்கள் உதவிகள் எமது நாட்டின் அனைவருக்குமாக அனுப்பி வையுங்கள்” என கோரினோம்.

                        முதல்வர் இதை சடுதியாக புரிந்துக்கொண்டு, மனதை உருக்கும் விதத்தில் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தினார். ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் உதவிடுவதாக கூறினார். அது தம் கடமை என்றார். இலங்கை நாட்டையோ, இலங்கை

                        மக்களையோ, பிற நாட்டவராக பார்க்க தோன்றவில்லை என்றார். எங்கள் கண்கள் கலங்க அவரது உரையை நாம் செவி மடுத்தோம்.

                        இலங்கை மக்களின் பசியை போக்கும் அதேவேளை, பால்குடி பாலகர்களின் அழுகையை போக்கும் அதேவேளை, நோய் நொடிகளை போக்கும் அதேவேளை, தமிழ்

                        , சிங்கள மக்களுக்கும், தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையில் வரலாற்றுரீதியாக நிலவிய சந்தேகங்கள், அச்சங்கள், ஆகியவற்றையும் போக்கும் பாதையில் இது முதலடியாக அமைந்துள்ளது.

                        தெற்கிலும், வட-கிழக்கிலும் வாழும் தமிழ் மக்களின் எதிர்காலம், சிங்கள மக்களுடனும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுடனும் பின்னி பிணைந்துள்ளது. இதுதான் இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படை. இதை இன்று தமிழக முதல்வர்

                        புரிந்துக்கொண்டுள்ளார் என நம்புகிறேன். தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.

                        Posted in Uncategorized

                        உக்கிரேனுக்குஆயுதம் வழங்குவதை நிறுத்துக – பிரான்சுக்கு ரசிய ஏச்சரிக்கை

                        உக்கிரேனுக்குஆயுதம் வழங்குவதை நிறுத்துக – பிரான்சுக்கு ரசிய ஏச்சரிக்கை

                        உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்துள்ள வேளை மேற்கு நாடுகள் ஆயுதங்களை அள்ளி


                        வழங்கி வருகின்றன ,இவ்வேளை பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய

                        புட்டீன் உக்கிரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்த்துளளார் ,


                        அவ்வாறு வழங்கினாள் விளைவுகளை சநதிப்பீர்கள் என அவர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized

                          குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்

                          குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்

                          உக்கிரேன் கீவ் நகரை அண்மித்து ரசியா இராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இந்த ஏவுகணைகள் மக்கள் வாழ்விடங்களை இலக்கு.

                          வைத்து நடத்தப்படுகிறது என பாதிக்க பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்

                          இந்த குண்டு தாக்குதல்களில் சிக்கி பல, நூறு மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.

                          இவர்கள் உயிரை காப்பாற்ற ஐநா உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ,அடிபணிய மறுக்கும் உக்கிரேன் .

                          அதிபரை சிறை பிடிக்கும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டுள்ளது .


                          கிட்டத்தட்ட பெரும் முற்றுகையில் உக்கிரேன் சிக்கியுள்ளது ,தொடர்ந்து ரசியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளது.

                            Posted in Uncategorized

                            உடல் எடையால் ஐரோப்பாவில் 12 லட்சம் மக்கள் மரணம் – அதிர்ச்சி தகவல்

                            உடல் எடையால் ஐரோப்பாவில் 12 லட்சம் மக்கள் மரணம் – அதிர்ச்சி தகவல்

                            ஐரோப்பாவில் அதிக உடல் எடை கொண்ட நாடாக பிரிட்டன் இடம் பிடித்துள்ளது ,இந்த

                            உடை எடை அதிகரிப்பால் ,அவர்கள் தம் அவயவங்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

                            மேலும் இந்த உடல் எடையால் ஆண்டு தோறும் பண்ணி ரெண்டு லட்சம் மக்கள் பலியாகி வருகின்ற அதிர்ச்சிக்கர
                            தகவல் வெளியாகியுள்ளது.

                            இதற்கு கரணம் ,அதிக உணவு உட் கொள்ளுதல் ,சொகுகாச வாழ்தல் ,மற்றும் உடல் பயிற்சி இன்மை ,போன்ற காரணங்களும் முதன்மை இடம் வகிக்கின்றன.

                              Posted in Uncategorized

                              உக்கிரேனில்-இரு கால்களை இழந்த மனைவியை -சுமந்து நடனம் ஆடிய கணவன்

                              உக்கிரேனில்-இரு கால்களை இழந்த மனைவியை -சுமந்து நடனம் ஆடிய கணவன்

                              உக்கிரேன் மீது ரசியா இராணுவ நடவடிக்கை மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,இந்த

                              இராணுவ மோதலின் பொழுது தனது இரு கால்கள் ,மற்றும் நான்கு கை விரல்களை

                              இழந்த நிலையில் பெண் ஒருவர் Lviv மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

                              இங்கு இவரை கண்ணுற்ற ஒருவர் இவரை திருமணம் முடித்துள்ளார் ,அந்த கணவனே

                              இவரை தூக்கியவாறு அதே மருத்துவ மனையில் நடனம் ஆடிய காட்சிகள் வைரலாகி

                              வருவதுடன் ,குறித்த பெண்ணுக்கு உலகளாவிய நிலையில் இருந்து உதவிட பலரும் முன்வந்துள்ளனர்

                              ரசியா இராணுவத்தின் தாக்குதல் அகோரத்தை இந்த பெண் உடல் இழப்பு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது ,

                                Posted in Uncategorized

                                ரசியாவுக்கு கார் பாகங்களை ஏற்றுமதி செய்யும் ஈரான்

                                ரசியாவுக்கு கார் பாகங்களை ஏற்றுமதி செய்யும் ஈரான்

                                ரசியா மீது பல நாடுகள் பொருளாதார தடையினை விதித்துள்ள நிலையில் தற்போது ரசியாவுக்கு கார் உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்திட ஈரானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது

                                இதனை அடுத்து ஈரான் தனது உற்பத்தியில் தயாரான கார் உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்கிறது

                                இதனால் ஈரான் புதிய வர்த்தகத்தின் மூலம் பல மில்லியன் டொலர் வருவாய் ஈட்டும் என எதிர் பார்க்க படுகிறது

                                Posted in Uncategorized

                                இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு

                                இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு

                                இந்தியா ராஜஸ்தான் மாநிலத்தில் இந்து முஸ்லீம்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு


                                ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது ,மேலும் இணையம்,தொலைத் தொடர்புகள் துண்டிக்க பட்டுள்ளன

                                இரு மதங்களுக்கு இடையில் ஏற்படுத்த பட்ட மதவாத போர் திட்டமிட்ட அரசியல்

                                நடவடிக்கை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்

                                இந்த மத மோதலினால் ஜோடபூர் பகுதி இயல்பு வாழ்வு முடங்கியுள்ளது

                                  தீ குளித்த
                                  Posted in Uncategorized

                                  யாழில் தீயில் எரிந்த வீடு – இளம் பெண் உடல் கருகி மரணம்

                                  யாழில் தீயில் எரிந்த வீடு – இளம் பெண் உடல் கருகி மரணம்

                                  யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் சிக்கி

                                  பதினேழு வயது இளம் பெண் ஒருவர் பலியாகியுளளார்

                                  பலத்த தி ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில்

                                  அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்

                                  குறித்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                                    Posted in Uncategorized

                                    அரசியல் வாதிகளின் லஞ்ச ஊழல் மோசடி அமபலம் – ஜேவி அதிரடி

                                    அரசியல் வாதிகளின் லஞ்ச ஊழல் மோசடி அமபலம் – ஜேவி அதிரடி

                                    இலங்கையில் ஆளும் அரசு உள்ளிட்ட அமைச்சர்கள் புரிந்த லஞ்ச ஊழல் மோசடி தொடர்பிலான


                                    ஆவணங்களை வெளியிடும் ஜேவிபியின் கூட்டம் தற்போது இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                    இந்த பொது கூட்டத்தில் அனுரா பேசியவண்ணம் உள்ளார்

                                    இதில் யார் யார் பெயர்கள் வெளியிட பட போகிறது, அவர்கள் அடித்த கொள்ளை எத்தனை ஆயிரம் கோடி என்பதை


                                    அறிய மக்கள் ஆவலாக உள்ளனர் ,சில மணித்தியாலங்களில் இவை தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது