Posted in Uncategorized

கூடுதலான கட்டணங்களை அறவிடும் பஸ்கள்: எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

கூடுதலான கட்டணங்களை அறவிடும் பஸ்கள்: எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் கூடுதலான கட்டணங்களை அறவிடும் பஸ்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.

இந்த பஸ்களின் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களும் ரத்து செய்ய்பபடவிருக்கின்றன. உரிய கட்டணத்தை விட கூடுதலான கட்டணங்களை அறவிடும் பஸ்கள் பற்றி தொலைபேசி மூலம்

முறைப்பாடு செய்யவும் பயணிகளுக்கு தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் இலக்கம் 0112 860 860 என்பதாகும்.

புறக்கோட்டை – பஸ்தியன் மாவத்தை, கம்பஹா, கடவத்த, பியஹம, கட்டுநாயக்க, கடுவெல, நிட்டம்புவ, களுத்துறை, அளுத்கம, மத்துகம, ஹொரணை, பாணந்துறை, ஹோமாகம, நாவின்ன,

பிலியந்தல ஆகிய பஸ்தரிப்பு நிலையங்களிலிருந்து தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் இடம்பெறவிருக்கின்றன. உரிய முறையில் பஸ் போக்குவரத்து இல்லாத பகுதிகள் பற்றி

தொலைபேசி மூலம் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம். தொலைபேசி இலக்கம் 0112 860 860 என்பதாகும்

Posted in Uncategorized

படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகைகளுக்கு கொரோனா

படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகைகளுக்கு கொரோனா

இந்தி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான நடிகைகள் அல்பனா புச், நிதி ஷா, தஸ்னிம் சேக் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை தஸ்னிம் சேக்குக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அவருடன் தொடர்ந்து சில நாட்களாக நெருக்கமாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட அல்பனா புச்சும் நிதி ஷாவும் பரிசோதனை செய்து கொண்டதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அல்பனா புச், நிதி ஷா

படப்பிடிப்பில் பங்கேற்ற 3 நடிகைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Posted in Uncategorized

    லண்டன் தமிழர்களுக்கு அவசர எச்சரிக்கை – இவர்கள் சிங்கள கூலிகள்

    லண்டன் தமிழர்களுக்கு அவசர எச்சரிக்கை – இவர்கள் சிங்கள கூலிகள்

    தமிழர் இன அழிப்பை மேற்கொண்ட சிங்கள பவுத்த பேரினவாத அரசு ,தமது போர் குற்ற ,தமிழர் இனஅழிப்பை மறைப்பதற்கு ,

    சர்வதேச நீதிமன்றில் இருந்து தப்புவதற்கு ,பிரிட்டனை மையமாக வைத்து தமிழர்கள் அகதி அந்தஸ்து கோரிக்கையை

    பொய்யென கூறி ,தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சில விலைபோன சட்டத்தரணிகள் ,

    மற்றும் முன்னாள் போராளிகளை வைத்து காய்களை நகர்த்தி வருகிறது
    இவ்விதம் விலைபோன

    சில சட்டத்தரணிகள் என கருத படுபவர்கள் அல்லது சந்தேகிக்க படுபவர்கள் மீது அவர்கள் துறை சார் மேல் அவை பகுதியில்,முறையீடுகளை மேற்கொள்ள தமிழர் தேசம் தயாராகி வருகிறது

    மக்களே இவர்களிடம் எச்சரிக்கை .உடனே இந்த செய்திகளை பரப்புங்கள்,நெருப்பு இல்லாது தீபங்கள் ,ஜெனனமாக புகையாது என்பது வெளிப்படை

      Posted in Uncategorized

      முதலாம் நூற்றாண்டில் காணாமல் போன சிலை பெல்ஜியத்தில் மீட்பு

      முதலாம் நூற்றாண்டில் காணாமல் போன சிலை பெல்ஜியத்தில் மீட்பு

      இத்தாலிய ரொமேனியா காலத்தில் உருவாக்க பட்ட சிலை ஒன்று ,இத்தாலிய அருங்காட்சியம் ஒன்றில் இருந்து காணாமல் பி[போனது

      2011 ஆம் ஆணு காணாமல் போன இந்த சிலை தற்போது பெல்ஜியம் நாட்டில் உள்ள கடை ஒன்றில் இருந்து இத்தாலிய காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்

      இந்த சிலையின் இன்றைய மதிப்பு €100,000 ($156,000) யூரோ என தெரிவிக்க பட்டுள்ளது ,மேற்படி

      சிலை இவ்வாறு இங்கு எடுத்துவரப்பட்டது என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகிறது

      இந்த சிலை கடத்தலின் பின்புலத்தில் உள்ள இத்தாலிய வர்த்தகர் ஒருவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

      சிலை
      சிலை
        Posted in Uncategorized

        அகதிகள் கப்பல் கவிழ்ந்து 34 பேர் மரணம் – கடலில்,நடந்த துயரம்

        அகதிகள் கப்பல் கவிழ்ந்து 34 பேர் மரணம் – கடலில்,நடந்த துயரம்

        ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்று கடல்வழியாக பயணத்தை மேற்கொண்ட அகதிகள் கப்பல்

        ஒன்று கடலில் திடீரென கவிழ்ந்ததில் அதில் பயணித்த முப்பத்தி நான்கு பேர் மரணமாகியுள்ளனர்

        மேலும் கடலில் மூழ்கிய பலர் காப்பாற்ற பட்டுள்ளனர்

        தொடர்ந்து சட்டவிரோத குடியேற்ற வாசிகள் ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக படை

        எடுத்துவருகின்றமை குறிப்பிட தக்கது

        உலக
        உலக
          Posted in Uncategorized

          இலங்கைக்கு 500 மில்லியன் கடன் வழங்கும் சீனா -முற்றுகையில் சிக்கும் நாடு

          இலங்கைக்கு 500 மில்லியன் கடன் வழங்கும் சீனா -முற்றுகையில் சிக்கும் நாடு

          இலங்கை அரசுக்கு சீனா அபிவிருத்தி வங்கி 500 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்குகிறது ,

          இலங்கையில் மேற்கொள்ள படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்த நிதி செலவிட படவுள்ளதாக இலங்கை அரசு தெரிவிக்கிறது

          கடன் மேல் கடனை வாங்கி இலங்கையை சீனாவுக்கு அடகு வைக்கும் நிலைக்கு இலங்கை

          செல்கின்றமை மிக ஆபத்தான ஒன்று என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            நயாழில் நள்ளிரவு வீடு புகுந்து கொள்ளை

            நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

            இந்தச் சம்பவம் தென்மராட்சி அல்லாரையில் நேற்று (12) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

            சம்பவத்தில் சிவராசா (வயது-72) என்ற வயோதிபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

            வயோதிபத் தம்பதி வசிக்கும் வீட்டுக்குள் நள்ளிரவு வேளை வீடு புகுந்த மூவர் கொண்ட கொள்ளைக்

            கும்பல் அவர்கள் இருவரையும் கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளது. அதில் வயோதிபரின் கழுத்தை நெரித்ததில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

            அத்துடன், வீட்டிலிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையிட்டு கும்பல் தப்பித்துள்ளது.

            சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

              Posted in Uncategorized

              சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்

              சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்

              இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயமொன்றை

              மேற்கொண்டுள்ளார்.

              யாழின் பாதுகாப்பு மற்றும் கொவிட் நிலவரம் குறித்து ஆராய அவர் இந்த விஜயத்தை

              மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

              சவேந்திர சில்வா
              சவேந்திர சில்வா
              Posted in Uncategorized

              கொரனோவால் பாதிக்க பட்ட 104 வயது மூதாட்டி நலம் பெற்று வீடு திரும்பினார்

              கொரனோவால் பாதிக்க பட்ட 104 வயது மூதாட்டி நலம் பெற்று வீடு திரும்பினார்

              கொரனோ நோயினால் பாதிக்க பட்டு மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த 104

              வயது மூதாட்டி ஒருவர் அந்த நோயிலோ இருந்து நலம் பெற்று தற்போது தனது வீடு திரும்பினார்

              இவருக்கு அங்குள்ள மருத்துவர்கள் தாதிமார் பலத்த கரகோஷம் எழுப்பி அவரை வாழ்த்தி

              வழியனுப்பி வைத்தனர்

              கொரனோ
              கொரனோ
                Posted in Uncategorized

                ஈரானில் அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து

                ஈரானில் அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து

                ஈரானில் யுரேனியம் செறிவூட்டல் நடைபெறும் அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து நேரிட்டது.

                ஈரானில் அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து
                ஈரான்

                அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

                தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கி கொள்ளவும் இரு தரப்பிலும் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

                இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்த நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்து கொள்ளலாம், எந்த அளவுக்கு அதை செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

                அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது கையெழுத்தான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி வந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார்.

                அதுமட்டும் இன்றி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதும் ஈரான் மீது மீண்டும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார்.

                அதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக புறக்கணித்தது. அதன்படி தடை விதிக்கப்பட்ட போர்டோ நகர நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கியது.

                மேலும் இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் யுரேனியம் செறிவூட்டும் புதிய ஆலையை ஈரான் கட்டியது. ஈரான் இந்தப் புதிய ஆலையை கட்டுவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

                இதனிடையே அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

                இது தொடர்பாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இரு நாடுகளுக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

                ஆனாலும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் வரம்புகளுக்கு திரும்பாமல் யுரேனியம் செறிவூட்டலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

                அதன் ஒரு பகுதியாக நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்டும் புதிய மேம்பட்ட ஐ.ஆர்.6 ரக மையவிலக்குகளை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ஈரான் நேற்று முன்தினம் அறிவித்தது‌.

                இந்தநிலையில் நேற்று நாதன்ஸ் நகரின் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் பயங்கர வெடி விபத்து நேரிட்டது.‌ இந்த விபத்து காரணமாக ஆலையின் ஒரு பகுதி தீ பிடித்து எரிந்தது. மேலும் இந்த வெடி விபத்தால் ஆலையில் மின் வினியோகம் தடைபட்டது.‌

                எனினும் இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரானின் சிவிலியன் அணுசக்தி திட்டத்தின் செய்தி தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமல்வெண்டி கூறினார்.

                மேலும் ஆலையில் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

                வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பெஹ்ரூஸ் கமல்வெண்டி கூறினார்.

                அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளிடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் இந்த விபத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

                கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த ஆலையில் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்தபோது பயங்கர தீ விபத்து நேரிட்டதும், இதில் பல லட்சம் மதிப்புள்ள நவீன எந்திரங்கள் எரிந்து நாசமானதும், இது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என ஈரான் குற்றம் சாட்டியதும் நினைவு கூரத்தக்கது.

                உலக
                உலக
                  Posted in Uncategorized

                  தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா

                  தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா

                  விமான பயணத்தின் போது எடுத்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

                  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

                  இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் ஆகியவற்றின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

                  அந்தவகையில், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா, கேரளாவிற்கு தனி விமானத்தில் சென்றுள்ளார்.

                  விமான பயணத்தின் போது எடுத்த வீடியோவையும், புகைப்படத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

                  நயன்தாரா, விக்னேஷ் சிவன்

                  கேரளாவில் வருகிற ஏப்ரல் 14ம் தேதி மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது.

                  அதற்காக தான் அவர்கள் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு ஓணம் பண்டிகையை கொண்டாட இருவரும், இதேபோல் தனி விமானத்தில் கேரளா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

                  நடிகை நயன்தாரா, தற்போது ரஜினி – சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார்.

                  இதுதவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடித்து வருகிறார்.

                  நயன்தாரா, விக்னேஷ் சிவன்
                  நயன்தாரா, விக்னேஷ் சிவன்
                  Posted in Uncategorized

                  திருமண வீட்டுக்கு சென்றவர்களுக்கு நடந்த துயரம் – வயலுக்குள் கவிழ்ந்த வான்

                  திருமண வீட்டுக்கு சென்றவர்களுக்கு நடந்த துயரம் – வயலுக்குள் கவிழ்ந்த வான்

                  கொழும்பில் இருந்து சம்மாந்துறையில் உள்ள திருமண நிகழ்வு ஒன்றுக்கு கலந்து கொள்ளும்

                  முகமாக வான் ஒன்றில் பயணித்த இருவருக்கு எதிர்பாராத விடயம் இடம்பெற்றுள்ளது

                  கொழும்பு பிரதான வீதி வழியாக பயணித்து கொண்டிருந்த பொழுது கடவத்த பகுதியில் வானின் டயர் வெடித்து சிதறியுள்ளது

                  இவ்வேளை சாரதியின் கட்டு பாட்டை இழந்த வான் வயல் ஒன்றுக்குள் கவிழ்ந்தது ,இதில் ஒருவர்

                  பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள்ளார் ,வான் பலத்த சேதமடைந்துள்ளது

                  கவிழ்ந்த வான்
                  கவிழ்ந்த வான்
                    Posted in Uncategorized

                    மகிந்தா மைத்திரி திடீர் சந்திப்பு – பேசியது என்ன ..?

                    மகிந்தா மைத்திரி திடீர் சந்திப்பு – பேசியது என்ன ..?

                    முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மகிந்தாவுக்கு இடையில் அலரிமாளிகையில் திடீர் சந்திப்பு ஒன்று

                    இடம்பெற்றுள்ளது ,இதன் போது இன்றைய சமகால நிகழ்வுகள் மற்றும் முக்கிய விடயங்கள்

                    தொடர்பாக பேச பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                    காட்டி கொடுத்து ஆட்சியை பிடித்து அதிகாரத்தில் சுற்றி திரிந்த இவர் இன்று இவ்விதம்

                    கூட்டிணைந்து செயல்படுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது

                      Posted in Uncategorized

                      காரில் இருந்து சடலம் மீட்பு – விசாரணையில் பொலிஸ்

                      காரில் இருந்து சடலம் மீட்பு – விசாரணையில் பொலிஸ்

                      வாதுவ பிரதேச பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார்

                      .இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் 57 வயதுடைய நபர் எனவும் ,இவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது

                      என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

                        Posted in Uncategorized

                        செல்பி எடுக்க வந்த ரசிகரை விரட்டிய நடிகை

                        செல்பி எடுக்க வந்த ரசிகரை விரட்டிய நடிகை

                        பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க வந்த போது அவரை கண்டித்து அனுப்பி இருக்கிறார்.

                        செல்பி எடுக்க வந்த ரசிகரை விரட்டிய நடிகை
                        ராக்கி சாவந்த்


                        பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குகிறார். ஏற்கனவே மல்யுத்த

                        வீராங்கனையுடன் மோதி காயம் அடைந்தார். இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஶ்ரீ தத்தாவை கண்டித்தார். சமீபத்தில் லண்டன் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டதாகவும் அறிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் பிரபலமானார்.

                        ராக்கி சாவந்த்

                        இந்த நிலையில் மும்பையில் ராக்கி சாவந்தை பார்த்த ரசிகர் ஒருவர் ஓடிச்சென்று அவருடன் செல்பி எடுக்க முயன்றார்.

                        அந்த ரசிகர் முக கவசம் அணியாததால் தன்னுடன் புகைப்படம் எடுக்க ராக்கி சாவந்த் மறுத்ததுடன் அவரை

                        கடுமையாக கண்டித்து விரட்டவும் செய்தார். அந்த ரசிகரை பார்த்து முக கவசம் அணியாமல் என்னுடன் செல்பி எடுக்க முடியாது.

                        முக கவசம் அணியுங்கள். உங்களை போன்றவர்களால்தான் மும்பையில் கொரோனா பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முக கவசம் அணியாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.

                        நடிகை,சினிமா,
                        நடிகை,சினிமா,
                          Posted in Uncategorized

                          மனைவியை கொன்று சாக்கில் கட்டி சென்ற கணவன் – இலங்கையில் நடந்த பயங்கரம்

                          மனைவியை கொன்று சாக்கில் கட்டி சென்ற கணவன் – இலங்கையில் நடந்த பயங்கரம்

                          மனைவியை அடித்து கொன்று கட்டிலுக்குள் மறைத்து வைத்திருந்த கணவன் கைது செய்யப் பட்டுளளார் ,

                          இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தை அடுத்து கணவன் மனைவியை அடித்து

                          கொன்று தாம் உறங்கிய கட்டிலுக்கு கீழே மறைத்து வைத்திருந்துள்ளார்

                          அதன் பின்னர் சாக்கு ஒன்றில் உடலை கட்டி புறநகர் பகுதியில் வீசி விட்டு வருவதற்கு தயாராகி

                          கொண்டிருந்த வேளையில் அவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

                          இவ்வாறு கொலை செய்ய பட்ட மனைவி 29 வயதுடையவர் எனவும் கணவனுக்கு 35 வயது எனவும் தெரிவிக்க பட்டுள்ளது ,மேற்படி விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                            Posted in Uncategorized

                            மனைவியை குத்திக்கொன்று கணவன் தற்கொலை-அமெரிக்காவில் இந்தியர் கொலை வெறி செயல்

                            மனைவியை குத்திக்கொன்று கணவன் தற்கொலை-அமெரிக்காவில் இந்தியர் கொலை வெறி செயல்

                            மராட்டிய மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகையை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார் (வயது 32). இவர் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆரத்தி (வயது 30). குடும்பத்தலைவி.

                            இந்த தம்பதியருக்கு 2014-ம் ஆண்டு டிசம்பரில் திருமணமானது. அதைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு நியூஜெர்சி மாகாணத்தில் நார்த் ஆர்லிங்டனில்

                            உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ஆரத்தி மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.

                            இந்த நிலையில் கடந்த புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு பாலாஜி, ஆரத்தி தம்பதியரின் மகள் வீட்டின் பால்கனியில் நின்று அழுதுகொண்டு இருந்திருக்கிறாள்.

                            இதைக்கண்டதும் அக்கம்பக்கத்தினர் என்னவோ ஏதோ என பதறிப்போய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, பாலாஜியும், ஆரத்தியும் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர்.

                            போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

                            கணவன், மனைவி இருவருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் ஆரத்தியை, பாலாஜி கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, அதே கத்தியால் தானும் குத்திக்கொண்டு தற்கொலை செய்துள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

                            இதுபற்றி அம்பாஜோகையில் உள்ள பாலாஜியின் தந்தையும், தொழில் அதிபருமான பரத் ருத்ரவாருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

                            இதுகுறித்து பரத் ருத்ரவார் கூறியதாவது:-

                            உள்ளூர் போலீசார் நடந்த துயர சம்பவம் குறித்து எனக்கு தெரிவித்தனர். என்ன நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னர் அது பற்றிய தகவல்களை தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

                            என் மருமகள் 7 மாத கர்ப்பிணி. நாங்கள் அமெரிக்கா சென்று அவர்களுடன் இருந்து விட்டு வந்தோம். மீண்டும் அமெரிக்காவுக்கு அவர்களை பார்க்கச்செல்ல திட்டமிட்டிருந்தோம்.

                            இந்த நிலையில்தான் இப்படி ஒரு துயரம் நடந்து விட்டது. இதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் மகிழ்ச்சியான தம்பதியராகத்தான் இருந்து வந்தார்கள்.

                            எல்லா சட்டநடைமுறைகளும் முடிந்து அவர்களது உடல்களை எடுத்து வர 10 நாட்கள் வரை ஆகலாம். எனது பேத்தி, எனது மகனின் நண்பர் வீட்டில் இருக்கிறாள். என் மகனுக்கு அங்கு நிறைய இந்திய நண்பர்கள் உள்ளனர்.

                            அமெரிக்காவில் இந்தியர் கொலை வெறி செயல்
                            அமெரிக்காவில் இந்தியர் கொலை வெறி செயல்
                              Posted in Uncategorized

                              இஸ்ரேல் எவ்வேளையும் தாக்கலாம் – உசார் நிலையில் ஈரான் இராணுவம்

                              இஸ்ரேல் எவ்வேளையும் தாக்கலாம் – உசார் நிலையில் ஈரான் இராணுவம்

                              ஈரான் எல்லை வழியாக எதிரிகள் நுழைந்து விடலாம் என்ற நிலையில் முப்படைகளும் தமது கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளன

                              தரை,வான்,மற்றும் கடல் பகுதிகள் உஷார் நிலையில் வைக்க பட்டுள்ளன
                              ஈரான் அணு

                              உலைகள் மீது இஸ்ரேல்,திடீர் தாக்குதலை நடத்த கூடும் என்பதால் ,எல்லை பகுதிகளில் ஏவுகணைகள்

                              தயார் நிலையில்,வைக்க பட்டுள்ளதுடன் ,விமானங்கள் மற்றும் கப்பல் படையின் விசேட அணிகளும் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன

                              இந்த அதி உயர் உச்ச கட்ட விழிப்பில் ஈரான் இராணுவம் வைக்க பட்டுள்ளது எனின் ,உளவுத்துறைக்கு

                              இஸ்ரேல் பெரும் தாக்குதல் ஒன்றுக்கு தயராகி வருகிறது என்கின்ற உளவு தகவல் கிடைத்துள்ளதால் இந்த பிரகடனத்தை அது செய்து வருகின்றது எனலாம்

                              ஈரான் இராணுவம்
                              ஈரான் இராணுவம்

                                Posted in Uncategorized

                                வீழ்ந்து நொறுங்கிய துருக்கி இராணுவ விமானம் – விமானிகள் தப்பினர்

                                வீழ்ந்து நொறுங்கிய துருக்கி இராணுவ விமானம் – விமானிகள் தப்பினர்

                                துருக்கி நாட்டுக்கு சொந்தமான இராணுவ விமானம் ஒன்று Aegean கடல் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது


                                இதன் பொழுது அதில் பயணித்த இரு விமானிகளும் காப்பாற்ற பட்டுள்ளனர்

                                மேற்படி விபத்து தொடர்பில் முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,விமானம் சுட்டு

                                வீழ்த்த பட்டதா அல்லது இயந்திர கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியதா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

                                Turkish military aircraft crashes
                                Turkish military aircraft crashes
                                  Posted in Uncategorized

                                  நெதர்லாந்தில் AstraZeneca ஊசி பாவனைக்கு தடை – அரசு அதிரடி அறிவிப்பு

                                  நெதர்லாந்தில் AstraZeneca ஊசி பாவனைக்கு தடை – அரசு அதிரடி அறிவிப்பு

                                  உலைகளில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த புதிய தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்க பட்டன

                                  இவற்றில் மக்களுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்ற தடுப்பூசிகளில் AstraZeneca முன்னிலை பிடித்துள்ளது

                                  இந்த ஊசியினை செலுத்தி கொண்டவர்களில் பலருக்கு இரத்த உறைதல் ,ஏற்பட்டுள்ளது ,அதனால் கால் ,கைகள்,வீங்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மக்கள் இறந்துள்ளனர்

                                  இதுவரை உத்தியோக பூர்வமாக 12 பேர் இவ்விதம் இரத்த உறைவால் இறந்துள்ளதாக தெரிவிக்க

                                  படுகிறது ,அப்படி என்றால் உத்தியோக பூர்வமற்ற நிலையில் எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என்பதே மக்கள் பேசு பொருளாக இடம்பெறுகிறது

                                  மேலும் சில மாதங்கள் கழிந்து செல்ல மேலும் தாக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது

                                  ,அதனால் நெதர்லாந்தில் அறுபது வயதுக்கு கீழானவர்களு இந்த ஊசி செலுத்திட சுகாதர அமைச்சு தடை விதித்துள்ளது