தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா
விமான பயணத்தின் போது எடுத்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.
இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் ஆகியவற்றின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா, கேரளாவிற்கு தனி விமானத்தில் சென்றுள்ளார்.
விமான பயணத்தின் போது எடுத்த வீடியோவையும், புகைப்படத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன்
கேரளாவில் வருகிற ஏப்ரல் 14ம் தேதி மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதற்காக தான் அவர்கள் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு ஓணம் பண்டிகையை கொண்டாட இருவரும், இதேபோல் தனி விமானத்தில் கேரளா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாரா, தற்போது ரஜினி – சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார்.
இதுதவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடித்து வருகிறார்.

- சின்ஹராஜ வனக் காப்பகத்திற்குள் பூச்சி மற்றும் ஊர்வன பிடித்த 4 சீனர்கள் கைது

- ஹட்டனில் சுமார் 30 வீடுகளை வெள்ள நீரும் சேறும் சூழ்ந்தது

- கொழும்பில் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் அமைதிப் போராட்டம்

- பிள்ளையன் மற்றும் இரண்டு இராணுவப் புலனாய்வுத் தகவல் அளிப்பாளர்கள் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- கண்டியில் புதிய ரயில் பாலம் மற்றும் புறநகர் ரயில் மேம்பாட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல்

- சரண குணவர்தனவின் விடுதலைக்கு எதிரான இலஞ்ச ஆணைக்குழுவின் மேல்முறையீட்டிற்கான விசாரணை

- ராம்பேவா பேருந்து மோதலில் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்வு, 50க்கும் மேற்பட்டோர் காயம்

- ஹூதி ஏவுகணைத் தளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது








