Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஆட்டோ வான் நேரெதிர் மோதல் ஒருவர் பலி
ஆட்டோ வான் நேரெதிர் மோதல் ஒருவர் பலி
மாத்தறை ரி பிரதான வீதியில் ஆட்டோ மற்றும் வான் ஒன்று நேரெதிர் மோதி விபத்தில் சிக்கியதில் ஆட்டோ சாரதி சம்பவ இடத்தில பலியானார் .
கதிர்காமம் நோக்கி பயணித்து கொண்டிருந்த வானே ஆட்டோவுடன் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

ஆயுதங்களை மீட்ட இராணுவம்
ஆயுதங்களை மீட்ட இராணுவம்
அரலகங்வில பகுதியில் ரி56 ரக துப்பாக்கி ரவைகள் மெகசின் ரக துப்பாக்கிகள் மற்றும் மேலும் பல வெடி
பொருட்களை பொலன்னறுவை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று (09) பிற்பகல் 12.30 அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது..
நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறையை சார்ந்த 34 பேருக்கு இடமாற்றம்
நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறையை சார்ந்த 34 பேருக்கு இடமாற்றம்
வருடாந்த இடமாற்றங்களுக்கு அமைய மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறையை சார்ந்த 34 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் காணப்படும் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க குறித்து விசாரித்து அவர் தொடர்பின் தீர்ப்பை
வழங்கியுள்ள நுகேகொட நீதவான் நீதிமன்ற நீதிபதி வசந்த குமாரவும் இந்த இடமாற்றத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்
வட கிழக்கு -மலையக கட்சிகள் ஒன்றாக செயற்பட வேண்டிய நேரம் இது -இராதா
வட கிழக்கு -மலையக கட்சிகள் ஒன்றாக செயற்பட வேண்டிய நேரம் இது -இராதா
வடக்கு கிழக்கு மற்றும் மலையக கட்சிகள் ஒன்றினைந்து தமிழர்களாக செயற்பட வேண்டிய இக் காலகட்டத்தில் வடக்கில் பிரிந்து செயற்படுவது வருத்ததிற்குரியது
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன்
வடக்கு கிழக்கு மற்றும் மலையக கட்சிகள் ஒன்றினைந்து தமிழர்களாக செயற்பட வேண்டிய இக் காலகட்டத்தில் வடக்கில் பிரிந்து செயற்படுவது வருத்ததிற்குரியது என்று
கூறுகின்றார் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுபபினரும் முன்னால் அமைச்சரும் மலையக மக்கள்
முன்னணியின் தலைவமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்
நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட மிகவும் பிரச்சனைக்கும் சர்ச்சைக்கும் பல உயிர்கள் காவு கொள்ளபட்ட தற்போதும் இந்த பிரச்சனைகளை
அனுபவித்து வரும் புஸ்ஸல்லாவயில் இருந்கு பெரட்டாசி தோட்டத்திற்கு செல்லும் 22 கிலோமீற்றர் பிரதான பாதையில் ஒரு பகுதி இரண்டு கிலோமீற்றர் தூர பாதை
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் மூன்று கோடி 33 இலட்சம் ரூபா செலவில் காபட் பாதையாக
செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்விற்கு அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்
இன்று நாட்டில் ஏதோ ஒரு வகையில் இனத்துவம் தலை விரித்து ஆடுகின்றது. ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகள் அதனை நமக்கு கோடிட்டு காட்டியுள்ளது. இவ்வாறான
நிலையில் தமிழ் மக்கள உட்பட சிறுபான்மை மக்களாகிய நாங்கள் ஒன்றுனைந்து செயற்பட வேண்டும். இந்நிலையல் வடக்கின் முன்னால் முதல் அமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்
அவர்கள் புதிய கட்சியாக தமிழ் தேசிய அமைப்பாக உறுவாக்கி இருக்கின்றார். இது வடக்கில் தமிழ் மக்களிடையே பிரச்சனையை ஏற்படுத்தும். தற்போது வட
கிழக்கில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகும் நிலை உள்ள நிலையில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
அதற்கான கால அவகாசமும் உண்டு. தமிழர்களின் ஒற்றுமை ஒங்கி நிற்க வேண்டும் என்று மேலும் அவர் கருத்து தெரிவித்தார்.

நான் கட்சி மாறுவதாக வெளியான கருத்து உன்மைக்கு புறம்பானது -இராதாகிருஸ்ணன்
நான் கட்சி மாறுவதாக வெளியான கருத்து உன்மைக்கு புறம்பானது -இராதாகிருஸ்ணன்
நான் கட்சி மாறுவதாக வெளியான கருத்து உன்மைக்கு புறம்பானது
எனது மீது பலருக்கு காதல் ஆனால் நான் யாரை காதல் பன்னுரேன்னு
எனக்கு மட்டும் தான் தெரியும்
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுபபினர் வே.இராதாகிருஸ்ணன்
வருகின்ற பொது தேர்தலில் நான் மொட்டு கட்சியில் வாக்கு கேட்க போவதாக இந்த கட்சியின் இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க அவர்கள் கொத்மலை பிரதேசத்தில்
நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியுடனே தேர்தலில் போட்டியிடுவோம்.
இவ்வாறன நிலையில் இவ்வாறு தெரிவித்த இந்த கருத்து உன்மைக்கு புறம்பானது. இதனை நான் முற்றிலும் மறுக்pன்றேன். எனது மீது பலருக்கு காதல் ஆனால் நான்
யாரை காதல் பன்னுரேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும் என்று கூறுகின்றார் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற
உறுபபினரும் முன்னால் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் (10.02.2020)
நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட மிகவும் பிரச்சனைக்கும் சர்ச்சைக்கும் பல உயிர்கள் காவு கொள்ளபட்ட தற்போதும் இந்த பிரச்சனைகளை
அனுபவித்து வரும் புஸ்ஸல்லாவயில் இருந்கு பெரட்டாசி தோட்டத்திற்கு செல்லும் 22 கிலோமீற்றர் பிரதான பாதையில் ஒரு பகுதி இரண்டு கிலோமீற்றர் தூர பாதை
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் மூன்று கோடி 33
இலட்சம் ரூபா செலவில் காபட் பாதையாக செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும்
நிகழ்விற்கு அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்
மலையத்தில் அடிக்கடி என்மீது நான் கட்சி மாறப்போவதாக பலர் பலவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இது
வழமையாக போய்விட்டது நான் ஒன்றும் கட்சிமாறவில்லை நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியாக ஐ.தே.கட்சியின்
கூட்டணியாகவே தேர்தலில் போட்டியிடுவோம். இதற்காக யாரும் அவசரமாக எதையும் சொல்லாதீர்கள் நான்
தற்போதும் இருக்கும் கட்சியிலும் கூட்ணியிலுமே இருக்கின்றேன் என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.



தமிழ் பேசுகின்ற சமூகம் இந்தக் காலத்தில் எமது ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்: றிசாட்
தமிழ் பேசுகின்ற சமூகம் இந்தக் காலத்தில் எமது ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்: றிசாட்
தமிழ் பேசுகின்ற சமூகம் இந்தக் காலத்தில் எமது ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என
முன்னாள் அமைச்சரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மதீனா நகர், அல் மதீனா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிள்ளைகளுக்கு மார்க்க கல்வியையும் கற்றுக் கொடுங்கள். மார்க்க வழியில் சரியான பாதையில் பயணிக்க பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒழுக்கத்துடன்
கற்கப்படுகின்ற கல்வி தான் அவர்களை நல்ல மனிதர்களாக, தலைவர்களாக, கல்விமான்களாக,
வர்த்தகர்களாக, ஆலிம்மாக மாற்றுகின்றது. ஆகவே ஒழுக்க விடயத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
அத்துடன், ஒற்றுமையாக வாழ்ந்து கொள்ளுங்கள். தமிழ் முஸ்லிம் உறவை பலப்படுத்துவதாக இந்தக் கிராமம் வளர்ந்து வருகின்றது. இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களுடைய
குறைகளை, தேவைகளை, வீடில்லா பிரச்சனையை, தொழில்வாய்ப்பு பிரச்சனையை இங்கு வாழ்கின்ற நமது கட்சியினுடைய முக்கியஸ்தர்கள், ஊரவர்கள், பள்ளி
நிர்வாகிகள் என்னிடத்தில் வந்து பேசுவார்கள். இங்கு வாழ்கின்ற மக்களின் வறுமையை போக்குகின்ற திட்டங்களை வகுத்து செயற்படுமாறு சொல்லுவார்கள்.
இவ்வாறு ஒற்றுமையாக வாழும் இந்த நிலை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நிலையை கட்டிக் காக்க வேண்டிய தார்மீக கடமை எல்லோருக்கும் இருக்கிறது.
எனவே தமிழ் பேசுகின்ற சமூகம் இந்தக் காலத்தில் எமது ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரினவாத சக்திகள் இந்த சிறுபான்மை சமூகத்தினுடைய
உரிமைகளில் கைவைப்பதை நாங்கள் பார்க்கின்றோம். சிறுபான்மை சமூகத்தை அடக்கி ஆள எத்தனிக்கின்ற பல விடயங்களை நாங்கள் பார்க்கின்றோம். பெரும்பான்மை
மக்கள் மத்தியில் சிறுபான்மை தலைவர்கள் பற்றி இல்லாத, பொல்லாத அபாண்டங்களைச் சொல்லி பெரும்பான்மை மக்களிடத்தில் எதிரிகளாக சிறுபான்மை தலைமைகளை
காட்டுகின்ற அசிங்கமான அரசியல் அண்மைக்காலமாக நமது நாட்டில் நடந்து வருகின்றது.
சிறுபான்மையாக வாழுகின்ற நமது மக்கள் தென்பகுதியில் வாழுகின்ற பிரதேசங்களில் சிறு சிறு பிரச்சனைகள் வருகின்ற போது அங்கு வாழுகின்ற எல்லா மக்களையும்
தாக்குகின்ற அசிங்கமான செயற்பாடுகளை நாங்கள் காண்கின்றோம். எனவே கடந்தகால வரலாறுகள் எங்டகளுடைய தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பல
பிளவுகளை ஏற்படுத்தியிருந்தது. எதிர்காலத்தில் நாங்கள் மிக நிதானமாக சிந்தித்து ஒற்றுமையாக ஊரின் உடைய நலனுக்காக, மக்களினுடைய நலனுக்காக, எமது
பிரதேசத்தினுடைய நலனுக்காக, அபிவிருத்திக்காக, எமது மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக எமது
இருப்புக்காக நாம்ட ஒற்றுமையாக வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
இருவருக்கு இடையில் பிரச்சனைகள் வந்தால் அந்த இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சனையாக பார்க்க வேண்டுமே தவிர, இரண்டு பேரும் வேறு வேறு
சமூகத்தை சார்ந்தவாராக இருந்தால் அதை சமூகப்பிரச்சனையாக அல்லது இனப்பிரச்சனையாக பார்த்து இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்பத்டுத்தும்
அசிங்கமான வேலைகளை செய்யக் கூடாது. கடந்த காலங்களில் எமது ஒற்றுமையால் தான் பாடசாலைகள், பள்ளிவாசல்கள், வீடுகள், வீதிகள் எல்லாவற்றையும் ஓரளவு
அடைந்து கொண்டோம். எதிர்காலத்திலும் எங்களுடைய தேவைகளை அடைந்து கொள்ள வேண்டுமாக இருந்தால்
அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட சமூகமாக இருந்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.



பிரிட்டனில் புயல் மக்கள் தவிப்பு video
பிரிட்டனில் புயல் மக்கள் தவிப்பு video
பிரிட்டனில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது , கடும் மழை மற்றும் புயல் காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் .
பல்லாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி குளிரில் தவித்து வருகின்றனர் .
இந்த புயல் காரணமாக இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது ,மீட்பு பணிகள் துரிதமாக இடம் பெற்ற வண்ணம் உள்ளது
மேலும் வெள்ள பெருக்கு ஏற்படலாம் என தெரிவிக்க படுகிறது காணொளியில் முழுமையான விபரம்
வவுனியா வைத்தியசாலையில் பாலியல் லஞ்சம் PHOTO
வவுனியா வைத்தியசாலையில் பாலியல் லஞ்சம் PHOTO
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு பாலியல் லஞ்சம்
தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இன்று இடம்பெற்றது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் தலைமையில் டிரான்ஸ் பேரன்சி இன்டநெசனல் சிறிலங்கா நிறுவனத்தின் வவுனியா கிளையின் ஏற்பாட்டில்
நடைபெற்ற குறித்த செயலமர்வில் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் சுஜீத் மற்றும் மங்களா சங்கர் அவர்களும் வளவாளராக கலந்து கொண்டு பாலியல் லஞ்சம்
தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அதற்கான சட்ட ஏற்புகள் தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டது.
இதன்போது பாலியல் லஞ்சம் மற்றும் லஞ்ச ஊழலை கட்டுப்படுத்தல் மற்றும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை
எடுத்தல் என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. இதில் 50க்கு மேற்பட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.



வவுனியாவில் கூடிய புலிகள் மக்கள் பேரவை; உள்ளே நடந்தது இது தான் photo
வவுனியாவில் கூடிய புலிகள் மக்கள் பேரவை; உள்ளே நடந்தது இது தான் photo
விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பாளர்களையும் இணைப்பாளர்களையும்
தெரிவு செய்யும் கூட்டம் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.
அதன் பின்னர் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த பேரவையின் தலைவர் த.இ.மலரவன்,
விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் அரசியல் வேலைத்திட்டங்களும் அரசியல் நகர்வுகளும் மக்களை உள்ளடக்கி மக்களுடைய அலோசணைகளை பெற்றுத்தான்
பயணித்துக்கொண்டிருக்கின்றோம். ஆகையினால் எதிர்காலத்தில் நாங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை மக்கள் தீர்மாணிப்பார்கள் .
இது வரை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நாங்கள இணைந்து செயற்பட எவ்வித விருப்பத்தினையும் தெரிவிக்கவில்லை அவர்களும் எமக்கு எவ்வித
அழைப்புக்களும் விடுக்கவில்லை . எதிர்வரும் காலங்களில் போராளிகள் யாவரும் ஒர் அணியாக பணிப்போம் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது என தெரிவித்தார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மகளிர் அணி தலைவி பாவு கஜேந்தினி,
நாங்கள் போராளியாக இருக்கின்ற சமயத்தில் எங்களுக்கு தனித்துவமான ஒர் மரியாதை காணப்பட்டது. ஆனால் தற்போது அது காணப்படுவதில்லை அதன் காரணமாவே
பெண்களுக்கான உரிமையினை வென்றேடுப்பதற்காகவே விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையுடன் இணைந்துள்ளோம்.
பெண் தலமைத்துவ குடும்பங்களை எந்தவோரு அரசியல்வாதிகளோ யாருமே கவனத்தில் கொள்வது இல்லை விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையுடன்
எதிர்காலத்தில் பெண் தலமைத்துவ குடும்பங்களை சமூகத்தில் முதன்நிலைக்கு கொண்டு வருவதற்கு பாடுபடுவோம் என தெரிவித்தார்.




விசமிகளினால் தீயில் எரிந்த 30 ஏக்கர் காடு
விசமிகளினால் தீயில் எரிந்த 30 ஏக்கர் காடு
இலங்கை – கடன் பகுதியில் உள்ள வனப்பகுதி திடீரென தீ பிடித்து எரிந்தது ,இதில் சுமார் 30 ஏக்கர் காடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன
இந்த தீ பரவலால் திட்டமிடப்பட்டு சில விஷமிகளினால் மேற்கொள்ள பட்டுள்ளதாக ,தெரிவிக்க படுகிறது ,
மகிந்த ஆட்சியின் பொழுது இவ்வாறு காடுகள் தீப்பற்றி எரிவது வழமையான ஒன்றாக மாற்றம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
தப்பி ஓடிய 4299 இராணுவத்தினர் மீளவும் இராணுவத்தில் இணைவு
தப்பி ஓடிய 4299 இராணுவத்தினர் மீளவும் இராணுவத்தில் இணைவு
இலங்கையில் விடுதலை புலிகளுடன் மேற்கொள்ள பட்ட யுத்தத்தின் பொழுது உயிர் அச்சம் கருதி இராணுவத்தில்
இருந்து தப்பி ஓடிய சுமார் 4299 இராணுவத்தினர் மீளவும் இணைந்துள்ளதாகக் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது
இவ்வாறு தப்பி ஓடியவர்களுக்கு வழங்க பட்ட பொது மன்னிப்பின் கீழ் இந்த இராணுவ சிப்பாய்கள் மீளவும் இராணுவத்தில் இணைந்துள்ளமை குறிப்பிட தக்கது
குழியில் விழுந்த யானை – மீட்பு பணிகள் தீவிரம்
குழியில் விழுந்த யானை – மீட்பு பணிகள் தீவிரம்
இலங்கை – கொக்கிராவ் பகுதியில் யானை குட்டி ஒன்று குழியில் வீழ்ந்துள்ளது ,இவ்விரு குழியில் வீழ்ந்த யானை
குட்டியை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
தாய் யானை மக்களை தகக்கிட முற்பட்ட பொழுது வெடிகள் எறிந்து விரட்ட பட்டு பின்னர் குட்டி மீட்க பட்டுள்ளது

தீயில் எரிந்த எண்ணெய் கம்பெனி – பலகோடி இழப்பு
தீயில் எரிந்த எண்ணெய் கம்பெனி – பலகோடி இழப்பு
இலங்கை கம்பஹா பகுதியில் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று திடீரென தீப்பற்றி கொண்டது
.இதில் அந்த நிறுவனத்திற்கு பலகோடி இழப்பு என தெரிவிக்க பட்டுள்ளது
இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி
விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி
முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணியான “தமிழ்
மக்கள் தேசிய கூட்டணி” யின் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (09) ரில்கோ விருந்தினர் விடுதியில் கைச்சாத்திடப்பட்டது.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு முன்னாள் முதலமைச்சருமான விக்னேஸ்வரன்
தலைமையில் புதிய அணியொன்று உருவாக்கும் முயற்சிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தது.
ஆயினும் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட இழுபறி நிலைமைகளால் அது குறித்தான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டிருந்த
நிலையில் தற்போது அந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
கைச்சாத்திடப்பட்டு உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் இன்று வெளியிடப்பட்டது.
காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலான சுப நேரத்திலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
திடீரென விபீதியில் ஏற்பட்ட குழி
திடீரென விபீதியில் ஏற்பட்ட குழி
பதுளை பொது வைத்தியசாலையில் முன் அமைந்துள்ள பகுதியொன்று தாழிறங்கியுள்ளது.
நிலக்கீழ் நீர்க்குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இவ்வாறு தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வழியால் பயணிக்கும் மக்களை விழிப்பாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது
ஓமந்தை சோதனை சாவடியில் இராணுவத்தினருடன் இணைந்து ஈபிடிபி: காரணம் வெளியானது photo
ஓமந்தை சோதனை சாவடியில் இராணுவத்தினருடன் இணைந்து ஈபிடிபி: காரணம் வெளியானது photo
இராணுவ சோதனை சாவடி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு
அமைவாக இன்று அவரது குழுவினர் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடிக்கு சென்று இராணுவத்தினருடன் கலந்துரையாடியிருந்தனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஈபிடிபி கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர்
கு.திலீபன், கட்சியின் ஓமந்தை பிரதேச அமைப்பாளர் ச.வாகீசன் உள்ளடங்கலான குழுவொன்று ஓமந்தை சோதனைச் சாவடிக்கு விஜயம் செய்திருந்தது.
இதன்போது கட்வசியின் மாவட்ட நிர்வாக செயலாளர் தெரிவிக்கையில், இராணுவத்துடன் உரையாடிய போது நாங்கள் பேரூந்தை நிறுத்தி பொதிகளை சோதனை
செய்கிறோம். பல தடவை போதை பொருட்கள் பிடிபடுகின்றது. அதனை கொண்டு வருபவர்களையும் பொலிசாரின் உதவியோடு கண்டு பிடிக்கிறோம்.
பெண்கள் கொண்டுவரும் பொதிகளை பெண் இராணுவத்தினரே சோதனை செய்கின்றனர். பொலிசாரும் உடன் இருக்கின்றனர். வேகமாக சோதனை செய்துவிட்டு
பேரூந்திலே ஏற்றி விடுகிறோம். பேரூந்தை தூர நிறுத்துவது கூட இல்லை. நீங்களே பார்வையிடுங்கள். போதை பொருள் பயன்பாட்டையும், கடத்தலையும் தடுப்பதற்கே
இந்நடவடிக்கை. இது நீண்ட காலத்திற்கு இல்லை என இராணுவத்த்pனர் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.
அப்போது நான், பயணிகளுக்கு இடையூறுகள் இல்லாமலும், இறங்கியேற சிரமப்படும் பயணிகளை இறக்க வேண்டாமென்றும், பேரூந்தை நிறுத்துமிடத்திலேயே
பொதிகள் சோதனை முடிந்தவுடன் ஏற்றவேண்டுமென்றும் அங்குள்ள இராணுவத்தினரிடம் கேட்டுக்கொண்டேன். அத்துடன் போதைப்பொருள் விடயத்தை கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வருவதோடு, அமைச்சரின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்று விரைவில்
சோதனைச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக இதன்போது தெரிவித்தார்.



நிந்தவூர் கமு/கமு/ அல் – அஷ்ரக் தேசிய பாடசாலையின் இவ்வருடத்திற்கான இல்ல விளையாட்டு விழா
நிந்தவூர் கமு/கமு/ அல் – அஷ்ரக் தேசிய பாடசாலையின் இவ்வருடத்திற்கான இல்ல விளையாட்டு விழா நாளை
ஞாயிற்றுக்கிழமை (09) பிற்பகல் 02.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கல்லூரி அதிபர் ஏ. அப்துல் கபூர் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள்
சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச இராஜாங்க அமைச்சருமான எம்.சீ பைஸால் காசிம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எம்.ரீ. நிஸாம், நிந்தவூர் பிரதேசசபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் ஆகியோர் கௌரவ
அதிதிகளாகவும், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், நிந்தவூர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம். சரீப்டீன், நிந்தவூர் பிரதேச சபையின்
பிரதித்தவிசாளர் வை.எல். சுலைமாலெப்பை ஆகியோர் விசேட அதிதியாகவும், முன்னாள் சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச இராஜாங்க அமைச்சர் எம்.ரீ. ஹஸன் அலி,
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கல்லூரி அபிவிருத்திக் குழுவினர், பழைய மாணவர் சங்கம், சக ஊழியர்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில், பாரம்பரிய
விளையாட்டுக்களும் அன்றைய தினம் இடம்பெறவுள்ளதோடு, சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்படவுள்ளன.
27 காவல்துறை அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்
27 காவல்துறை அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்
இலங்கையில் 27 பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவைத் தேவையின் அடிப்படையில் குறித்த இடமாற்றம்
வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
இலங்கை காவல்துறைக்கும் அடுத்ததுது இடம்பெறும் பதவிபி உயர்வுகளுமிடமாற்றங்களும் காவலதுறை அதிகாரிகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது

மோடியுடன் மகிந்தா பேச்சு
வவுனியா போக்குவரத்து பொலிசாரிடம் மாட்டிய 48 சாரதிகள்: photo in
வவுனியா போக்குவரத்து பொலிசாரிடம் மாட்டிய 48 சாரதிகள்: photo in
வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் விசேட நடவடிக்கையால் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் ஓட்டிய பல சாரதிகளிற்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (07.02) மாலை 5 மணி தொடக்கம் 7 மணிவரை இரு மணித்தியாலயமாக வவுனியா, மன்னார் வீதி,
பட்டாணிச்சூர் பகுதியில் இந்த திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியாவில் அண்மைகாலமாக அதிகரித்துள்ள விபத்துக்களை கருத்தில் கொண்டு வவுனியா
போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையிலான பொலிஸ்குழுவினராலே இவ் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இவ் விஷேட நடவடிக்கையால் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் ஓட்டிய 44 சாரதிகளிற்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், 4 பேருக்கு எதிராக நீதிமன்ற
வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றிவாகனம் செலுத்தியமை, குடிபோதையில் வாகனம் செலுத்தியமை,
வாகனமோட்டும் போது தொலைபேசி பயன்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக சாரதிகளுக்கு எதிராக
தண்டம் விதிக்கப்பட்டதுடன், வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













