Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தலைமைத்துவம் சார்ந்த பிரச்சனைகளை கச்சிதமாக தீர்ப்பதற்கு பாடசாலைகளே உதவுகின்றன: வவுனியா அரச அதிபர்
நாளைய சமூகத்தில் எழுகின்ற தலைமைத்துவம் சார்ந்த பிரச்சனைகளை கச்சிதமாக தீர்ப்பதற்கு பாடசாலைகளே உதவுகின்றன: வவுனியா அரச அதிபர்
மாணவர்கள் நளைய சமூகத்தில் தம்மை இணைத்து அதன் பங்காளிகளாக மாறுகின்றார்கள். அப்போது அங்கு எழுகின்ற தலைமைத்துவம் சார்ந்த பிரச்சனைகளை
கச்சிதமாக தீர்ப்பதற்கு பாடசாலைகளே உதவுகின்றன என வவுனியா மாவட்ட அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன தெரிவித்துள்ளார்.
வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் அதன் அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் நடைபெற்ற
மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் இந்த மாவட்டத்தின் அரச அதிபராக பொறுப்பேற்ற பின்னர் முதலாவது பொது கூட்டம் ஒன்றில் அதுவும் மாணவர்களுடன் சில மணித்தியாலங்களை கழிப்பதை
இட்டு மகிழ்சியடைகிறேன். மாணவர்களாகிய நீங்கள் இந்தப் பிரதேசத்தில் சிறந்த கல்விமான்களாக வரவேண்டும் என்பதே உங்களது அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்களின்
எதிர்பார்ப்பாகும். அத்துடன் சிறந்த தேக ஆரோக்கியத்துடனும் நீங்கள் இருக்க வேண்டும். அதற்கு இவ்வாறான விளையாட்டுக்கள் அவசியம் என்பதையும்
நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே நீங்கள் வினைத்திறன் மிக்க, நல்ல சிந்தனையுடைய, நல்ல ஆரோக்கியமான மாணவர்களாக வரவேண்டும்.
பொறுமை என்பது எல்லோருக்கும் அத்தியாவசியமான விடயம். விளையாட்டின் போது இரண்டு விடயங்களை பின்பற்றுகிறீர்கள். விளையாட்டின் போது வெற்றி, தோல்வி
வருகின்றது. வெற்றி வந்த போது அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வதுடன் அதனை மட்டுப்படுத்தக் கூடிய மனப்பாங்கை ஏற்றுக் கொள்ளவும், தோல்வி ஏற்படுகின்ற
போது அதனை சகித்துக் கொள்ளக் கூடிய மனப்பான்மையையும் கற்றுத் தருகின்றது. ஆகவே எதிர்கால வாழ்வில் எழுகின்ற பல்pவேறு பிரச்சனைகளை
தீர்த்துக் கொண்டு உங்களை சுதாகரித்து கொண்டு உங்களது வாழ்வை வளம்படுத்தக் கூடிய நிலையை இந்த
பொறுமை ஏற்படுத்துகிறது. விளையாட்டின் மூலம் குருதிச் சுற்றோட்டம் சிறப்பாக இருப்பதால் சிந்தனை வளர்ச்சி ஏற்படுகிறது.
பாடசாலை என்பது தனியே பாடப்புத்தகங்களுடன் கூடிய கற்றல் செயற்பாடுகளை மாத்திரம் மாணவர்களுக்கு வழங்கவில்லை. அவர்களுக்கு தேவையான புறவிருத்திச்
செயற்பாடுகளையும் வழங்குகின்றது. அதன் மூலமே இந்த மாணவர்கள் நளைய சமூகத்தில் தம்மை இணைத்து அதன் பங்காளிகளாக மாறுகின்றார்கள். அப்போது அங்கு
எழுகின்ற தலைமைத்துவம் சார்ந்த பிரச்சனைகளை கச்சிதமாக தீர்ப்பதற்கு பாடசாலைகளே உதவுகின்றன எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.எல்.பி.சந்திரசேகர, வவுனியா தெற்கு வலயப் பிரதிநிதி ஏ.எம்.சுபைர், அயல் பாடசாலை
அதிபர்கள், பாடசாலை பிரதி அதிபர், பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்,
வளர்பிறை இளைஞர் கழகத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


புகையிலை பாவனை வாய்ப்புற்று நோயைஉருவாக்க வழி வகுக்கும்.
புகையிலை பாவனை வாய்ப்புற்று நோயை
உருவாக்க வழி வகுக்கும்.
தொற்றா நோய்களில் ஒன்றாக புற்றுநோய்கள் காணப்படுகின்றது, அதில் வாய்ப்புற்று நோயின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது இதுபற்றிய கருத்து என்ன?
உடம்பில் பல விதமான புற்று நோய்கள் காணப்படுகின்றது. அந்தப் புற்று நோய்களில் ஒன்றுதான் வாய்ப்புற்று நோயாகும். இந்த வாய்ப்புற்று நோய் உலகில் எல்லா
நாடுகளிலும் காணப்பட்டாலும் இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ், சீனா, வியட்னாம், மலேசியா போன்ற
நாடுகளில் இது அதிகமாக காணப்படுகின்றது. இந்த நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கின்றது.
கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இந்த வாய்ப்புற்று நோய் இலங்கையில் மூன்றாமிடத்தில் இருந்து வந்தது, இப்போது முதலாமிடத்துக்கு வந்துள்ளது. ஏனென்றால் இந்த நோய்த்
தாக்கத்தினால் வருடம் ஒன்றுக்கு சுமார் 2500 – 3000 பேர் வரை பாதிப்புக்குள்ளாகி வருகின்ற அதேவேளை 1500 – 2000
பேர் வரை பலியாகியும் வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்படுபவர்களில் நகர்ப்புற சமூகத்தினரை
காட்டிலும் கிராமப்புற மக்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
எமது நாட்டில் இந்த வாய்ப்புற்று நோய் தாக்கம் இவ்வாறு கூடிக்கொண்டே செல்லுமாக இருந்தால் இன்னும் சில
வருடங்களின் பின்னர் உலக தர வரிசையில் எமது நாடு வாய்ப்புற்று நோயில் முதலாமிடம் வகிக்கும் சாத்தியமே மிக அதிகமாகவுள்ளது.
கடந்த பல வருடங்களுக்கு முன்னர் இந்த வாய்ப்புற்று நோய் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் இருந்து வந்தது. உதாரணமாக ஆயிரத்தில் ஒன்று என்ற ரீதியில் சுமார் 30 – 40
வயதுக்குற்பட்ட ஒரு இளம் வயதினர்தான் இந்த நோய்த் தாக்கத்துக்குள்ளாகி காணப்பட்டு வந்தனர். இப்போது இந்த
நிலை மாறி மிக அதிகமாக இளம் வயதினர் பாதிப்புக்குள்ளாகி வருவதை காணக்கூடியதாகவுள்ளது.
இளம் வயதினர் இந்த நோய்த் தாக்கத்துக்குள்ளாகக் காரணம் என்ன?
இலங்கையில் வயதான பிரிவினரிடையே புகையற்ற புகையிலை பாவனை தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக கிராமப்புற
மக்கள் மத்தியில் வெற்றிலை, பாக்கு, புகையிலை, புகைத்தல், மதுபானம் போன்றவற்றை ஒரு பொழுது போக்கான விடயமாகக் கருதி இதை பாவித்து வருகின்றனர்.
இதற்குக் காரணம் கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் வாய்ப்புற்று நோய் தொடர்பில் எவ்வித விழிப்புணர்வும் இல்லை என்பதேயாகும்.
அதுமாத்திரமல்லாமல், இன்றைய இளைஞர்கள் புகையிலையை வேறு வடிவில் பகடிக்கு உபயோகிப்பதாக என்னிக்கொண்டு செய்யும் செயற்பாடுகளுடன் மதுபானம்,
சிகரெட், பீடி மற்றும் பக்கற்றுகளில் அடைக்கப்பட்ட பாக்கு வகைகளையும், சுண்ணாம்பு கலந்த வெற்றிலையுடன் புகையிலையையும் பாவித்து வருகின்றனர்.
இவ்வாறு இளம் சமூகத்தினர் ஒரு பொழுது போக்காக நினைத்து செய்கின்ற இந்த செயற்பாடுகள் யாவும் அதற்கு
அடிமையாக வைத்து விடுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இந்த பழக்கவழக்கங்கள் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு நிச்சயம் 100
சதவீதம் வாய்ப்புற்று நோய் ஏற்பட்டுவிடும். இதுவேதான் அவர்கள் வாய்ப்புற்று நோய்க்கு ஆளாகக் காரணமாக அமைந்து விடுகின்றது.
இந்த வாய்ப்புற்று நோய் வருவதற்கான காரணம் என்ன?
மனிதர்கள் இயற்கையை விட்டு விழகிச் செல்வதன் காரணத்தால்தான் இந்த வாய்ப்புற்று நோய் அதிகரிக்கக் பிரதான காரணமாக அமைவதுடன் வெற்றிலை, பாக்கு,
சுன்னாம்பு, புகையிலை, மதுபானம், சூரிய ஒளி போன்ற காரணங்களினால் இந்த வாய்ப்புற்று நோய் வருவதற்கு மிக முக்கியமான காரணங்களாக காணப்படுகின்றது.
இதில் புகையிலை பாவனையின் மூலம்தான் இத்தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. இந்தப் புகையிலைப் பாவனையை ஒவ்வொருவரும் விதவிதமான முறையில்
பாவித்து வருகின்றனர். வெற்றிலை சாப்பிடுகின்றவர்கள் ஒரு புகையிலைத் துண்டை வைத்து அதனுடன் சேர்த்து சாப்பிடுவது, தனிப் புகையிலையை சாப்பிடுவது, சிலர்
புகை பிடிப்பதன் மூலமாக பாவிப்பது, சிலர் புகையிலைத் தூளை மூக்கினூடக அதை உறுஞ்சுவது போன்ற பாவனையில் ஈடுபடுவதன் மூலம் இப்புற்று நோய்
ஏற்படுகின்றது. இந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் அதனை எவ்வாறு பாவித்தாலும் அதன் தாக்கம் வாயில்
எப்பகுதியிலாவது வாய்ப்புற்று நோயை ஏற்படுத்திவிட காரணமாக அமைந்துவிடுகின்றது.
புகைத்தல் பாவிப்பவர்களுக்கு இன்னுமோர் விடயத்தை சொல்லவேண்டும், புகை பிடிப்பதன் மூலம் வாய்ப்புற்று நோய் மட்டுமல்ல நுரையீரல் மற்றும் தொன்டைப் பகுதியில்
அவர்களுக்கு புற்றுநோய் உண்டாகும் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்கின்றேன்.
வெற்றிலை, பாக்கு, புகையிலை மற்றும் புகைத்தல்
போன்றவற்றுள் இதில் ஏதாவது ஒன்றை பாவித்துக்கொண்டு மதுபானத்தையும் அதனுடன் சேர்த்து எடுப்பார்களாக
இருந்தால், சாதாரண வாய்ப்புற்று நோய்த் தாக்கத்தை விட 15 அல்லது 20 மடங்கு அதிக தாக்கத்தை மதுபானம் அதிகரிக்கச் செய்து விடுகின்றது.
என்ன காரணம் என்றால், மதுபானத்தில் இருக்கின்ற இரசாயணம் புகையிலையிலுள்ள இரசாயணத்தை மிக இலகுவாக கரைத்துவிடுகின்ற
தன்மையைக்கொண்டுள்ளது. அதனால் வாயிலுள்ள தோல் பகுதியை மிக வேகமாக தாக்கக்கூடிய சக்தி மதுபானத்துக்குள்ளது. அதனாலேயேதான் இத்தாக்கம் அதிகரிக்கக் காரணமாக அமைந்து விடுகின்றது.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற வல்லரசு நாடுகளிலுள்ள பெண்கள் மது அருந்துதல், புகைத்தல், போன்றவற்றால் இந்த வாய்ப்புற்று நோய்க்கு
ஆளாகின்றனர். ஆனால் எமது நாட்டிலுள்ள பெண்கள் வாய்ப்புற்று நோயினால் அதிகளவு பாதிக்கப்படாத போதிலும் புகையற்ற புகையிலை பாவனையாலும் மூக்குப் பொடி, பாவனையாலும், பாக்கு பாவனையாலும் இந்த வாய்ப்புற்றுக்கு ஆளாகின்றனர்.
உலகளாவிய ரீதியில் 80 சதவீதமானவர்கள் வெற்றிலை, பாக்கு, புகையிலை பாவனை மற்றும் மதுபானம் போன்ற
செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு இந்த வாய்ப்புற்றுத் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.
அதுமாத்திரமல்லாமல், மிக அதிக நேரம் சூரிய ஒளியில் வயல் வேலை செய்கின்ற விவசாயிகளுக்கு இந்த வாய்ப்புற்று நோய் ஏற்படுகின்றது. சூரிய ஒளியில் இருந்து
வருகின்ற சில கதிர் வீச்சின் தாக்கம் அவர்களை நேரடியாக தாக்குவதன் மூலமாக இது ஏற்படுகின்றது. அதன் தாக்கம் அவர்களின் கீழ் உதட்டை தாக்குகின்றது.
இப்போது HPV என்ற வைரஸ் தாக்கத்தின் மூலமாக இந்த வாய்ப்புற்று நோய் வருவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த HPV என்ற வைரஸ் இளம் வயதினரை மிக அதிகமாக
தாக்குகின்றது. இதன் தாக்கம் எவ்வாறு காணப்படும் என்றால் வாயின் பின் பகுதியில் அதாவது நாக்குக்கு கீழ் பகுதியில் ஏற்படுகின்றது. இதன் மூலமாக ஒருவர் HPV என்ற
வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி இருக்கின்றார் என்பதை இலகுவில் அடையாளம் கண்டுகொள்ளலாம்.
இது எதனால் ஏற்படுகின்றது என்றால், ஒருவர் பலரிடம் வாய் மூலமான பாலியல் தொடர்புகளை (Oral Sex) வைத்திருப்பவர்களுக்கே இந்த HPV வைரஸ் தாக்கம்
ஏற்படுகின்றது. இந்த HPV என்ற வைரஸ் தாக்கத்தின் மூலம் பாதிக்கப்படுகின்ற வாய்ப்புற்று நோயளர்களுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய ஒரு தேவையில்லை. இந்த
வாய்ப்புற்று நோயினை ரெடியோ தெரப்பி (Radiotherapy) மற்றும் ஹிமோ தெரப்பி (Hemotherapy) ஆகியவை மூலமாக இதை குனப்படுத்தலாம்.
எனது அனுபவத்தில் HPV என்ற வைரஸ் தாக்கத்துக்கு இதுவரை 06 இளம் பெண் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மட்டக்களப்பு
மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகும். HPV என்ற வைரஸ் பரிசோதனையை இங்கு எந்த வைத்தியசாலைகளிலும் மேற்கொள்ள முடியாது.
இப்பரிசோதனையை கொழும்பு பல்கலைக் கழகத்தினூடாத்தான் மேற்கொண்டு கண்டுபிடித்தேன்.
இவைகள் இல்லாமலும் இந்த வாய்ப்புற்று நோய் வரலாம். இது ஆயிரத்தில் ஒருவருக்கே வரும். ஏனென்றால்
அவர்களின் பரம்பரையில் இருந்து வருகின்ற விடயங்களில் ஒன்றாக இருக்கின்றபடியினால் இது வருவதற்கு சாத்தியமுள்ளது.
அதுமாத்திரமின்றி ஒரு மனிதன் பிறக்கும்போது இதற்குரிய மூலசாதனம் அவர்களின் உடம்பிலேயே இருக்கின்றது. அது
எமது செயற்பாடுகளுக்கு ஏற்ப இந்த வாய்ப்புற்றின் தாக்கம் எமக்கு ஏற்படுகின்றது என்பதையும் நான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
ஒருவருக்கு வாய்ப்புற்று நோய் இருக்கின்றதா? இல்லையா? என்பதை எவ்வாறு அடையாளங் காண்டுகொள்வது,
எமது வாய்க்குள் இருக்கின்ற தோல் பகுதிகள் யாவும் மிக மென்மையாகவும், ரோஸ் கலருடன் ஒரு வலு வலுப்பான
தன்மையுடனும் காணப்படும். இந்தத் தன்மையில் ஒரு மாற்றம் ஏற்பட தொடங்கிவிடும்.
அதாவது நாக்கிலும், கண்ணத்திலும் மாறாத ஒரே இடத்தில் இருக்கும் சிவப்புப் படலம், வெண்படலம் (Leukoplakia), ஆறாத காயங்கள், முகத்திலும் தாடையிலும் வருகின்ற
வேதனைகள், உதடு, நாக்கு, தொண்டை, வாயின் கீழ் தளம், மேல் தளம் போன்ற பகுதியில் கடினமான தன்மை உண்டாகும், ஒரு வறன்ட தன்மையை உணரக்கூடியதாக
இருக்கும், சாப்பிடும்போது ஒரு எரிவுத் தன்மை உண்டாகும், பால் கறி சாப்பிட முடியாதளவு இருக்கும், சுடு நீர் குடிக்கும்போது எரிவுத்தன்மை உண்டாகும், வாய் திறக்க
கடினமாக இருக்கும், நாக்கை வெளியில் நீட்டுவதற்கு முடியாதளவு இருக்கும், ஈறுகளில் இரத்தம் வடிதல், பல் ஆட்டம் காணுதல், உணவு உட்கொள்வதில் சிரமம், காது வலி
, கன்னத்தில் விரைப்புத்தன்மை, கழுத்தில் கட்டி போன்றவைகள் அதன் அடையாளங்களாக காணப்படும்.
இந்த அடையாளங்கள் இருக்குமாக இருந்தால் எந்த சந்தேகங்களுமின்ற வாய், முகம், தாடை (OMF Surgeon) என்ற வைத்திய நிபுணர்களை உடனடியாக சந்தித்து இதற்குரிய
வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு அதற்குரிய சிகிச்சைகளையும் தாமதியாமல் மேற்கொள்ள
வேண்டும். தவறும் பட்சத்தில் அது பாரிய ஆபத்தை எமக்கு விளைவித்துவிடும் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்.
இந்த வாய்ப்புற்று நோயை அடியோடு இல்லாமல் செய்து விடலாமா?
எவ்வித உடல் நோவின்றி ஏற்படக்கூடிய இந்த வாய்ப்புற்று நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைகளை மேற்கொள்வதனூடாக பாதிக்கப்பட்ட
தரப்பினரை அத்தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். வெற்றிலை, பாக்கு, புகையிலை, புகைத்தல், மதுபானம் மற்றும் போதைப் பொருள் பாவனை
உள்ளிட்ட தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவதன் ஊடாக வாய்ப்புற்று நோயிலிருந்து முற்றாக விடுபட முடியும்.
எமது நாட்டில் அதி நவீன கருவிகள் இப்போது இருக்கின்றது. அதன் மூலமாக ஒருவருக்கு வாய்ப்புற்று நோய் இருக்கின்றதா? இல்லையா? என்பதை மிகத் துள்ளியமான
முறையில், அதன் அளவுகளையும் கண்டுபிடிப்பதற்கான வசதி வாய்ப்புக்கல் இருக்கின்றது. அதற்காக முதலில் (BIOPSY TEST) என்ற பரிசோதனையை மேற்கொண்டு அதில்
கிடைக்கின்ற தகவலின் அடிப்படையில் சீ.ரி.சி ஸ்கேனிங் (CTC SCANNING), எம்.ஆர்.ஐ ஸ்கேனிங் (MRI SCANNING), பெட்
ஸ்கேனிங் (PET SCANNING) போன்ற பரிசோதனைகள் மூலமாக கண்டுபிடித்து இதனை இல்லாமல் செய்துவிடலாம்.
எமது நாட்டில் இப்போது இருக்கின்ற பெட் ஸ்கேனிங் (PET SCANNING) என்ற கருவி அதி நவீன கருவியாகும். இதன் மூலமாக ஒருவர் பெட் ஸ்கேனிங் (PET SCANNING)
செய்துபார்ப்பதன் மூலம் எமக்குள் இருக்கின்ற வாய்ப்புற்று நோயின் அளவை மிகத் துள்ளியமாக அறிந்துகொண்டு அதற்கான பாதுகாப்பை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் நோய் முற்றிய நிலையிலேயேதான் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த நிலைமை முதலில்
மாறவேண்டும். அப்போதுதான் அவர்களை அதிலிருந்து முற்றாக பாதுகாக்கலாம். மேலும், வாய்ப்புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை
கிராமப்புறங்களிலும், நகர்ப் பறங்களிலும் அதிகதிகமாக நடாத்தி அம்மக்களுக்கு விழிப்பூட்டுவதன் மூலம் அவர்களை விழிப்படையச் செய்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
இவ்வாறான விடயங்களை மையமாக வைத்துக்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல கிராமப் புறங்களில் வாழ்கின்ற மக்களை விழிப்படையச் செய்யும் நோக்கில்
எனது தலைமையின் கீழ் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கொண்ட குழுவினர் நேரடியாகச் சென்று அம்மக்களுக்கான
விழிப்புணர்வு நிகழ்வுகளையும், அவர்களுக்கு தேவையான இலவச வைத்திய நடமாடும் சேவையுடன்
சிகிச்சைகளையும் செய்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளோம்.
இவ்வறான நிலைமைகளை எமது உடலில் நாம் அவதானித்தால் அல்லது ஏதும் சந்தேகங்கள் இருந்தால் அதுதொடர்பான ஆலோசனைகளை 0773792225 என்ற
அலைபேசிக்கோ அல்லது maxfacanu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்களை முற்றிலும் இலவசமாக உடனுக்குடன்
கேட்டறிந்து அறிந்துகொள்ள முடியும். அவ்வாறு இல்லாமல் நோய் முற்றிய பின்னர் வைத்தியரின் உதவியை நாடிச் சென்று அதனை குனப்படுத்த முடியாமல் தங்களின்
அன்றாட வாழ்வியல் முறையை மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கி தவிப்பதை நான் காண்கின்றேன். இதிலிந்து எமது நாட்டையும், எமது மக்களையும்
பாதுகாப்பதே எமது சேவையாக நான் கருதுகின்றேன்.
இந்த வாய்ப்புற்று நோயை குனப்படுத்தலாம் அதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் குறிப்பிட்ட விடயங்களில் கவனமாகவும், அதன் ஆலோசனைகளையும் நாம்
செய்வோமாக இருந்தால் எதிர்வரும் 05 வருட காலப்பகுதியில் எமது நாட்டில் எந்தவொரு வாய்ப்புற்று
நோயாளர்களும் இல்லாமல் செய்யலாம் என்பதில் நான் உறுதி கூறுகின்றேன்.
தப்பி ஓடிய 396 கடற்படை சிப்பாய்கள் கடற்படை முகாம்களில் தஞ்சம்
தப்பி ஓடிய 396 கடற்படை சிப்பாய்கள் கடற்படை முகாம்களில் தஞ்சம்
பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்தி இதுவரை 396 கடற்படை உறுப்பினர்கள் கடற்படை முகாம்களில் சரணடைந்துள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த பொது மன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய இதுவரை கடமைக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்கள் சட்டரீதியாக இராணுவத்தில்
இருந்து வெளியேறவும் அதேபோல் மீண்டும் சேவையில் இணைந்து கொள்வதற்குமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்ட விரோதமாக கடமையை விட்டுச் சென்ற 396 கடற்படை உறுப்பினர்கள் இன்று வரையும் கடற்படை முகாம்களில் ஆஜராகியுள்ளனர்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அமுலில் உள்ளது.
எனவே இந்த காலப்பகுதியை பயன்படுத்தி சட்டவிரோதமாக கடமையில் இருந்து விலகிய கடற்படையினர் மீண்டும் சேவைக்கு திரும்ப முடியும்
என்பதோடு அவர்களிடம் உள்ள உறுதி பத்திரம் மற்றும் எந்தவித ஆவணங்களும் அற்ற சட்டவிரோத துப்பாக்கிகளையும் மீள கையளிக்க முடியும்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டுக்காக சேவையாற்றியிருந்த போதிலும் உரிய நடைமுறைகளை பின்பற்றாது சேவையை கைவிட்டு சென்ற முப்படை
உறுப்பினர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கில் ஜனாதிபதியால் இந்த பொது மன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

15,000 ற்கும் அதிகமான பொருட்களின் விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை
15,000 ற்கும் அதிகமான பொருட்களின் விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை
அரசின் வரி நிவாரண நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் சுமார் 15,000 ற்கும்
அதிகமான பொருட்களுக்கான விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பு சம்பந்தமாக பொருட்களை தயாரிக்கும் அதேபோல் இறக்குமதி செய்யும் நூற்றுக்கும்
அதிகமான நிறுவனங்கள் அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளன.
அதற்கமைய குறித்த பொருட்களின் பெயர்கள் மற்றும் விலைகள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட பகுப்பாய்வு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
ஆகவே குறித்த பொருட்களின் பெயர்கள் மற்றும் விலைகள் தொடர்பில் வெகு விரைவில் நுகர்வோருக்கு
பத்திரிகையூடாக தெரியப்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை சம்பந்தப்பட்ட நிறுவனங்களை கேட்டுள்ளது.
கட்டுமானப் பொருட்கள், உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு
பொருட்களின் விலைகள் அரசின் வரி நிவாரண கொள்கைக்கமைய குறைக்கப்படவுள்ளன.
இதற்கு முன்னர் பால்மா மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான விலை குறைப்பை மேற்கொள்ள
நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்திருந்தது.
அதேபோல் கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் வெட் வரியை 8 வீதமான குறைத்தமை, தேசிய நிர்மாண வரியை நீக்கியமை ஆகியவற்றின் ஊடக கிடைத்த
நன்மைகள் நுகர்வேரை சென்றடைந்துள்ளனவா எனபதை ஆராயவும் நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மகிந்த ராஜபக்சேவுடன் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு
மகிந்த ராஜபக்சேவுடன் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்தனர்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்த ராகுல் காந்தி, மன்மோகன் சிங்
புதுடெல்லி:
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 4 நாள் பயணமாக இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையம் வந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை
மத்திய மந்திரி சஞ்சய் டோத்ரே கைகுலுக்கி வரவேற்றார். அவருடன் தூதரக அதிகாரிகளும் வந்திருந்தனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசும் ராஜபக்சே, இருநாட்டு
உறவுகளை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்நிலையில், இந்தியா வந்தடைந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சந்தித்தனர்.
வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தின் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி photo
வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தின் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி photo
மாவட்ட அரச அதிபரின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்ற வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தின் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி
வவுனியா மாவட்ட அரச அதிபரின் பங்கேற்புடன் அல் இக்பால் மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலையின் மைதானத்தில் நேற்று மாலை அதிபர் ஏ.கே.உபைத் அவர்களின் தலைமையில் குறித்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நடைபெற்றது.
முன்னதாக அதிதிகள் மைதான பிரதான வாயிலில் இருந்து பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து தேசிய கொடி,
பாடசாலை கொடி, இல்லக் கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டதுடன், அரச அதிபர் அவர்களால் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை பயன்படுத்தி விறுவிறுப்பாக போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றியதுடன் உடற் கல்வி கண்காட்சியும் இடம்பெற்றது. தொடர்ந்து
விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும், குழு நிகழ்வு மற்றும்
தனிநபர் சாதனை மாணவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
இல்ல திறனாய்வுப் போட்டியில் ஹிலால் இல்லம் மூன்றாம் இடத்தையும், சிராஜ் இல்லம் இரண்டாம் இடத்தையும்
பெற்றுக் கொண்டதுடன் பாடசாலையின் 5 வருட வரலாற்றை மாற்றி நீண்ட இடைவெளிக்கு பின் தாரிக்
இல்லாம் முதல் நிலை வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.
குறித்த நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன, உளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.எல்.பி.சந்திரசேகர, வவுனியா தெற்கு
வலயப் பிரதிநிதி ஏ.எம்.சுபைர், அயல் பாடசாலை அதிபர்கள், பாடசாலை பிரதி அதிபர், பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்,
வளர்பிறை இளைஞர் கழகத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, வவுனியா மாவட்ட அரச அதிபர் புதிதாக பதவியேற்ற பின்னர் முதன் முதலாக பங்கு பநற்றிய வெளி சமூக நிகழ்வு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.




இந்தியா போர் கப்பல் கொழும்பு துறை முகத்தில் தரிப்பு
இந்தியா போர் கப்பல் கொழும்பு துறை முகத்தில் தரிப்பு
இந்தியா இராணுவத்துக்கு சொந்தமான யமுனா என்ற போர் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது
இரு நாடுகளுக்கு இடையிலான கடல் போர் பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் இந்த கப்பல் வருகை தந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

முல்லைத்தீவில் தமிழர் சுட்டுக்கொலை
முல்லைத்தீவில் தமிழர் சுட்டுக்கொலை
இலங்கைக்கு வடக்கு முல்லைத்தீவு பகுதியில் வயலுக்கு நெல் அறுவடைக்கு சென்ற தமிழ் குடும்பஸ்தர்
ஒருவருக்கும் ,அங்கு நின்ற சிலருக்கும் இடையில் வாய் தாக்கம் ஏற்பட்டுள்ளது ,இதன் பொழுது அங்கு நின்ற
நபர்கள் இவரை சரமாரியாக சுட்டு விடுதி தப்பி சென்றுள்ளார்
சடலமாக மீட்க பட்ட அவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
துப்பாக்கி சூட்டை நடத்திய நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

ஆயுதங்களை ஒப்படைக்க புதிய கால அவகாசம்
ஆயுதங்களை ஒப்படைக்க புதிய கால அவகாசம்
இலங்கையில் அரசின் அனுமதி இன்றி சட்ட ரோதமாக ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்களை உடனடியாக
அரசிடம் ஒப்படைக்கும் படியும் அவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் என ஆளும் அரசு அறிவித்துள்ளது
இவ்வாறு ஆயுதங்கள் சட்டவிரோதமாக வைத்திருந்தால் அவர்களுக்கு இருபது வருடம் சிறை தண்டனை என தெரிவிக்க பட்டுளள்து குறிப்பிட தக்கது

மகிந்தா -பாகிஸ்தான் விமான படை தளபதிக்கு இடையில் சந்திப்பு
மகிந்தா -பாகிஸ்தான் விமான படை தளபதிக்கு இடையில் சந்திப்பு
இலங்கை அளவும் பிரதமர் மகிந்த ராஜ[பக்ஸ்சா மற்றும் பாகிஸ்தான் விமான படை தளபதிக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது
இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பபு தொடர்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இறுதி போரின் பொழுது இலங்கைக்கு பாகிஸ்தான் பாரிய இராணுவ உதவிகளை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது
பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை – அம்மணி சாள்ஸ் உத்தரவு
பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை – அம்மணி சாள்ஸ் உத்தரவு
இலங்கை வடக்கு ஆளுநராக பதவி ஏற்று கொறட்டை விட்டு வந்த அம்மணி சாள்ஸ் அவர்கள் தற்பொழுது நித்திரையால் எழுந்துள்ளார் .
கல்வி நிலையங்களில் மேற்கொள்ள படும் பகிடி வதைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுளளார் .
போரால் பாதிக்க பட்டு வறுமைக்குள் சிக்கி தவிக்கும் மக்களுக்கும் ,வீடுகளற்று அநாதரவாக தவிக்கும் மக்களுக்கும் இவர் உதவிகள் எதனையும் வழங்க வில்லை
ஆளுநராக இருந்து அதன் ஊடாக மக்களுக்கு உரிய சேவைகளை வழங்கலாம் ,ஆனால் ,அதனை செய்யாது
தட்டி கழித்து சிங்கள மத்திக்கு காவடி எடுத்து வருவதை இவரது செயல் பாடுகள் கோடிட்டு காட்டுகின்றன என மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்
ஜனநாயக நாட்டில் மக்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அரசியல் பிரதிநித்துவம் அவசியம்
ஜனநாயக நாட்டில் மக்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அரசியல் பிரதிநித்துவம் அவசியம்
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுபபினர் வே.இராதாகிருஸ்ணன்
ஜனநாயக நாட்டில் மக்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அரசியல் பிரதிநித்துவம் அவசியம் அரசியல் பிரதிநிதித்துவம் இருந்தாலே எதனையும்
மக்களுக்காக செய்ய முடியும். மக்களும் தங்களுக்கு தேவையானதை அரசியல் பிரதிநிதிகளிடம் சென்று செய்துக் கொள்வார்கள் இதுவே உண்மையானது.
இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான ஒரு அரசியல் பிரதி நிதிநிதியை தெரிவு செய்துக் கொள்ள வேண்டும். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். தற்போது நாட்டில்
நடக்கும் ஆட்சி மக்கள் ஆட்சி முன்னைய காலங்களிலும் இதிகாசங்களிலும் காணப்படுவது போல் மன்னராட்சி நடைபெறவில்லை என்று கூறுகின்றார் நுவரெலியா
மாவட்ட பாராளுமன்ற உறுபபினரும் முன்னால் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் (06.02.2020)
நுவரெலியா மாவட்டம் இராகலை புரூக்சைட் செல்வகந்த தோட்டம் சில்வர்கண்டி பிரிவில் மக்கள் பாவனைக்காக பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன்
அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கபட்ட கொங்ரீட் பாதைகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்விற்கு அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு
உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இந் நிகழ்வில் இம்முறை வெளிவந்த உயர்தர பெறுபேற்றின்
அடிப்படையில் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களும் கௌரவிக்கபட்டனர்
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்
தற்போது இந்த நாட்டில் நடக்கும் ஆட்சி மக்கள் ஆட்சி முன்னைய காலங்களிலும் இதிகாசங்களிலும் காணப்படுவது போல் மன்னராட்சி நடைபெறவில்லை.
மக்கள் தங்கள் பிரச்சனைகளை; அரசியல் பிரதிநிதிகளிடம் சென்று கூறி அதற்கான திர்வினை பெற்றுக் கொள்ளலாம். அதற்கு அவர்கள் அவர்கள் சார்பான ஒருவரை பிரதேச
சபைக்கோ மாகாண சபைக்கோ பாராளுமன்றத்திற்கோ தெரிவு செய்துக் கொள்ள வேண்டும். அரசாட்சியில் அரசேனே மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து
சேவை செய்வான். தற்போது அந்த அரசாட்சி இல்லை. மக்கள் ஆட்சியே இருககின்றது. மக்கள் ஆட்சியை
மக்களளே செய்ய வேண்டும். அதற்காக மக்கள அனைவரும் பாராளுமன்றம் செல்ல முடியாது. அவர்
கள் சார்பாக ஒருவரை ஜனநாயக ரீதியில் தெரிவு செய்ய வேண்டும். ஜனநாயக ஆட்சியில் ஜனாதிபதி பிரதமர் பாராளுமன்றம் மாகாண சபைகள் உள்ளுராட்சி சபைகள்
ஆகிய காணப்படுகின்றன. இவற்றுக்கு மக்கள் சார்பாகவே பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றன. அதற்து மக்கள தங்களின் வாக்குரிமையை பயன்படுத்தி வருகின்றனர்.
இனி வரும் காலங்களில் பொது மக்கள் தங்களின் வாக்குரிமையை சரியாக பயன்படுத்தி உங்களுக்கு என்று
ஒரு அரசியல் பிரதிநிதியை பெற்றுக் கொள்ளுங்கள். என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.


ஆலயத்திற்கான சமையல் பாத்திரங்கள் வழங்கிய – மு அமைச்சர்
ஆலயத்திற்கான சமையல் பாத்திரங்கள் வழங்கிய – மு அமைச்சர்
நுவரெலியா மாவட்டம் ராகலை பிரதேசத்திற்கு உட்பட்ட ஐபோரஸ்ட் தோட்டம் இலக்கம் இரண்டு ஆலய நிர்வாக
சபையின் வேண்டுகோலுக்கு அமைய முன்னால்
அமைச்சரும் தற்போதைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள்
முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் நிதி ஓதுக்கீட்டின் மூலம்
ஆலயத்திற்கான சமையல் பாத்திரங்கள் ஆலய பரிபாலன சபையிடம் கையளிக்கப்பட்டது


பிறந்த பிள்ளைக்கு கொரனோ வைரஸ்
பிறந்த பிள்ளைக்கு கொரனோ வைரஸ்
சீனாவில் பிறந்த பிள்ளைக்கு கொரனஸ் வைரஸ் தாக்கியுள்ளது அம்பலமாகியுள்ளது
சீனாவின் குவான் மாகாணத்தில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு பிறந்த சிசுவிற்கே இந்த நோய் தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதுவரை 563 பேர் பலியாகியும் சுமார் 28018 பேர் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர்
மேலும் இதன் நோய் பரவல் தீவிரமாக பரவி வருகிறது .
இந்த நோயினால் பாதிக்க பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மேலும் ஐந்து மருத்துவ மனைகளை அமைக்கும் பணியில் சீனா அரசு ஈடுபட்டுள்ளது
மேலும் இந்த நோயினை கண்டு பிடித்த மருத்துவருக்கும் இந்த நோய் தாக்கி அவரும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
இந்தியா செல்லும் மகிந்தா -போராட்டம் நடத்த தமிழர் தயார்
இந்தியா செல்லும் மகிந்தா -போராட்டம் நடத்த தமிழர் தயார்
இந்தியவனுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு இலங்கை ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ்சா செல்கின்றார் ,
இவரது இந்த பயணத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தயராகி வருகின்றனர்
இலங்கை தமிழர்கள் பல்லாயிரம் பேர் படுகொலை செய்துள்ள இவரை கைது செய்ய வேண்டும் என கோரியே
மேற்படி போராட்டம் நடத்திட தமிழர்கள் முனைந்து வருவதாக தெரிவிக்க படுகிறது
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் தமிழ் பொலிஸ் சடலமாக மீட்பு
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் தமிழ் பொலிஸ் சடலமாக மீட்பு
இலங்கை மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் தமிழ் போலீசார் ஒருவர் அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்
இவரது இந்த படுகொலைக்கு காண காரணம் உடனடியாக தெரியவரவில்லை .போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பயணிகள் பேரூந்து நேரெதிர் மோதல் 20 பேர் காயம்
பயணிகள் பேரூந்து நேரெதிர் மோதல் 20 பேர் காயம்
திருகோணமலை, தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 2 பயணிகள் பஸ் மோதி
விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 20 மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (06) அதிகாலை தம்பலாகாமம் 99 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சடலம் தம்பலாகாமம் வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பிலிருந்து சென்ற தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுமே
இவ்வாறு மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ்ஸில் தனியார் பஸ் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

14 பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்
14 பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்
இலங்கையில் பதின் நான்கு காவல்துரை அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் இடம்பெற்றுள்ளது .
பதவி உயர்வு பெற்று கொண்ட இவர்களே இவ்விதம் இடமாற்றம் செய்ய பட்டுள்ளனர்
என இலங்கை போலீஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
சுதந்திர தினத்தின் பின் இடம்பெற்ற முதலாவது இடமாற்றம் இதுவாகும் என்பது குறிப்பிட தக்கது
சிறையில் இருந்து ஐந்து இராணுவத்தினர் விடுதலை
சிறையில் இருந்து ஐந்து இராணுவத்தினர் விடுதலை
இலங்கை சிறைகளில் குற்றநபிகளின் அடிப்படையில் தடுத்து வைக்க பட்டிருந்த கைதிகளில் சுமார் ஐந்து பேர் விடுதலை செய்ய பட்டுள்ளனர்
ஆளும் ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்ய பட்டுள்ளனர்
யாழ் நெல்லியடியில் விபத்து ஒருவர் பலி
யாழ் நெல்லியடியில் விபத்து ஒருவர் பலி
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்தில் சிக்கியதால்
பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார் ,21 வயது வாலிபர் ப்டுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார் .
அதிவேகமாக மோட்டார் சைக்கிள் பயணித்ததே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது







